
பிறை -41
கிராமத்தில் காலை பொழுது நன்றாக புலர்ந்தது. அந்த ரம்மியமான காட்சியை பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது என்ற தான் சொல்ல வேண்டும். பச்சை பசேலென்று வயலுக்கு நடுவில், செந்நிறத்தை கொண்டிருந்த வானத்தை பிளந்து கொண்டு சூரியன் காட்சி கொடுத்த தருணத்தை தம்பதிகளாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
” நம்மாளும் இங்க ஒரு வீடு வாங்கிட்டா என்ன மீனு.. எனக்கு இந்த இடம், இந்த காட்சி, இதோட உன் கையை பிடிச்சுட்டு ரசிக்கிறது இதெல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு ” என்ற கணவரை காதலோடு பார்த்தவர்..
” அதுக்கு என்னங்க.. சம்மந்தி கிட்ட சொன்னா நமக்கு அழகான ஒரு வீட்டை பார்த்து தருவாரு.. அப்படி இல்லைன்னா நம்மளே இடம் வாங்கி கட்டுவோம்..”
” ம்ம் எனக்கும் அதான் யோசனையா இருக்கு மீனு. வயசான காலத்துல இங்க வந்து எந்த வித அழுத்தமும் இல்லாத கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கனும்.. பாருவுக்கு ஒரு நல்ல வரன் வந்துட்டா.. நம்ம கடமை முடிஞ்சது. அதுக்கு அப்பறம் அவங்க ரெண்டு பேரோட பிள்ளைகளை எடுத்து வளர்க்கிறது தான் நம்ம வேலை.. என்ன சொல்லுற ”
” கண்டிப்பா நம்ம வளர்க்காமலா.. எனக்கும் இங்க இருக்கவே ரொம்ப பிடிச்சு போச்சு ” என இருவருமாக நேரத்தை ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.
” குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்திடலாம் .. எனக்கு என்னமோ கோவிலுக்கு போயிட்டு வந்தா எல்லாம் சரி ஆகும்னு தோணுதுங்க ” சிவகாமி கேட்டதும் மறுக்க தோன்றாமல் பச்சை கொடியை காட்டினார் சிவானந்தம்.
” ஆனால் மாப்பிள்ளை இல்லாமல் எப்படி மா ”
” அட நீங்க வேற மாப்பிள்ளை கிளம்பி வந்துட்டு இருக்காராம்.. இந்நேரம் பக்கம் வந்திருப்பாரு.. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்தே கூட்டிட்டு போவோம் ”
” என்ன டி சொல்லுற நேத்து தானே நம்மளே வந்தோம்.. இதுக்கு நம்ம கூடவே வந்திருக்கலாமே..”
” அதை உங்க மாப்பிள்ளை வரவும் நீங்களே கேளுங்க ”
” அதுசரி என் மக இல்லாம இருக்க முடியலையோ ” முனங்கிக் கொண்டே சிரித்தார் சிவானந்தம்.
” எல்லாரும் உங்களை போல இருக்க மாட்டாங்க ” என உதட்டை சுழித்தவர் வீட்டிற்குள் சென்று விட்டார் சிவகாமி.
அப்போது தான் இளம் வயதில் மனைவியின் இப்படியான ஆசைகளை கூட பூர்த்தி செய்யவில்லை என்ற எண்ணமே வந்தது.
இங்கு அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என்ற முடிவோடு தயாராகிக் கொண்டிருந்தனர். ஆதிதேவ் வருவதை யாரும் பிறையிடம் கூறவில்லை.
மனதை அழுத்திய சோகத்துடன் கடமைக்கே என ஒரு புடவையை எடுத்து கட்டுக் கொண்டு , மெல்லிய அலங்காரத்துடன் கிளம்பி இருந்தாள் பிறைநிலா.
பெயரை போலவே முகமும் அத்தனை பிரகாசமாக இருந்தது. கண்களில் மட்டும் அவளவனுக்கான தேடல். அதை கொண்டவன் வந்தால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
இங்கு திருநெல்வேலியை நெருங்கிக் கொண்டிருந்தனர் ஆதியும், சரணும்.
” சீக்கிரமே வந்துட்டோம் .. இப்போ எங்க போறது..”
” எனக்கு அவ வீடு தெரியாது.. எல்லாரும் கோவிலுக்கு போறதா இருக்காங்களாம்.. அதுனால நம்ம நேரா கோவிலுக்கே போவோம். ” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தான் சரண்.
அவனது பார்வையை உணர்ந்தவன் போல.. ” சென்னைல இருந்து கிளம்பும் போது இந்த மூஞ்சிய பார்க்க முடியல.. ஆனால் திருநெல்வேலி குள்ள வந்ததுல இருந்து இந்த முகத்துல ஏதோ ஒன்னு தெரியுதே ” தாடியை தடவிக் கொண்டே சந்தேகமாக கேட்டான் சரண்.
” அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ வண்டியை நேரா பார்த்து ஓட்டு” பேசிவிட்டு ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டான் ஆதிதேவ்.
” காதல் வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன்……… ” என சரண் பாடியதும்.. இறுகிய இதழும் மெதுவாக விரிந்தது.
” ரொம்ப திரும்பிக்காத டா கழுத்து சுழிக்கிட போகுது. அதான் மூஞ்சில அப்பட்டமா தெரியுதே ” என்றதும் சரண் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்.. பின் ரோட்டில் பார்வையை பதித்து..
” என்னமோ அவளை நினைச்சா மட்டும் மனசுல உள்ள எல்லா கஷ்டமும் தானா பறந்துடுது .. சச் அ அமேசிங் ஃபீல் ” ஆதிதேவ் கூறியதை கேட்டவனுக்கு, நண்பனை பார்த்து மகிழ்சியாக இருந்தது.
” நீ போலீஸ் வேலையை எந்த அளவுக்கு விரும்பினன்னு எனக்கு தெரியும் ஆதி.. ஆனால் அதுக்காக கல்யாணம் பண்ணிக்காம போயிடுவியோன்னு எனக்கு பயமா இருந்துச்சு. வேலை வேலைன்னு இருக்காத ஆதி.. பொண்டாட்டி கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணு. நைட்டு சிக்கிரம் வீட்டுக்கு போ ” என்ற நண்பனை ஆழ்ந்து பார்த்தவன் அமைதியாகி போனான்.
அவனது தாய் தந்தைக்கு பிறகு அவன் மேல் அக்கறை கொண்டிருக்கும் ஒரு ஜீவன் சரண் தான்.
ஏனோ சரண் கூறியது போல பிறையோடு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க கொள்ளை ஆசை பிறந்தது.
” இன்னும் அந்த கோவிலுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும் சரண் ” என்றதும் நண்பனை நக்கலாக பார்த்தவன்.. ” நான் சொன்னதை எல்லாம் இனிமே லைப் முழுக்க செஞ்சுக்கலாம் டா.. இப்போவே பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. அவசரமும் இல்ல ” என்றதும் நண்பனை முறைத்து விட்டு ஜன்னல் பக்கமாக திரும்பியவனின் முகத்தை குளிர் காற்று தழுவி சென்றது.
குளிர் காற்று முகத்தோடு சேர்த்து அவனது அகத்தையும் தழுவிச் செல்ல.. மனம் நிறைந்து போனது.
பிறையை பார்க்க போகிறோம் என்ற எண்ணமே அவனுக்கு தேனாய் இனித்தது. அந்த இனிப்பை சுவைத்து பார்க்க தூண்டிய மனதை அடக்கிக் கொண்டு கோவிலை நோக்கி சென்றான் ஆதிதேவ்.
வீட்டில் இருந்து அனைவருமே கிளம்பி கோவிலுக்கு வந்து விட்டனர். பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டிருந்தார் சிவகாமி.
” என்ன அண்ணி பொங்கல் வைக்க போறீங்களா என்ன ” மீனாட்சி கேட்டதும்..
” ஆமாங்க அண்ணி.. புதுசா கல்யாணம் பண்ணிகிட்ட எல்லாரும் பொங்கல் வச்சு சாமி கும்பிடுறது இங்க பழக்கம்.. அதான் கையோட வச்சிட்டு போயிடலாம்னு எடுத்துட்டு வந்துட்டேன்.. பிறை குடத்தை எடுத்துட்டு போய் தண்ணி கொண்டு வா ” என மீனாட்சியிடம் பேசிக் கொண்டிருந்தவர், மகளிடமும் வேலையை பகிர்ந்து கொண்டார்.
வேகமாக குடத்தை எடுத்து கொண்டு தண்ணீர் இருக்கும் கிணறு பக்கம் சென்று.. குடத்தை கீழே வைத்தவள்.. முந்தாங்கியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு கயிற்றை பிடித்து இழுத்து தண்ணீரை இழுக்க.. கிராமத்தில் வளர்த்த கைகளோ வேகமாக அந்த வேலையை செய்தது.
ஆனால் அதே நேரம் யாரோ அவளை கண்காணிப்பது போல இருக்க.. ஒரு நிமிடம் வேலையை நிறுத்தி விட்டு சுற்றி எங்கிலும் தன் பார்வையை சுழல விட.. அவளது கண்களுக்கு ஒன்றும் தெளிவாகவில்லை.
ஆனால் மனம் அடித்து சொல்லியது.. யாரோ இங்கு இருக்கிறார்கள் என்று. வேகமாக தண்ணீரை நிரப்பி குடத்தை தூக்கி இடுப்பு வைத்து திரும்பியவளை, இடுப்போடு இழுத்திருந்தான் ஆதிதேவ்.
கணவனை கண்டதும் மகிழ்ச்சி ஒரு பக்கமும், கோபம் ஒரு பக்கமும் போட்டி போட்டு கொண்டு வந்தது.
முதலில் இது கணவன் தானா என உள் மனம் எச்சரிக்க .. அவனையே ஆழ்ந்து பார்த்தவளை நோக்கி.. ” என்ன மூன்.. ஒரு நாள் தானே பார்க்கலை.. ரொம்ப மிஸ் பண்ணிட்டியோ.. ” என்றதும்.. அவனது பிரத்தியேகமாக அழைப்பில் மனம் தெளிவுற்றது.
” கையை எடுங்க.. யாராவது பார்த்திட போறாங்க..” சுற்றி எங்கிலும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பிறை.
” யாரு பார்க்க போறா ”
” ஐயோ இங்க தண்ணி எடுக்க ஆள் வருவாங்க.. விடுங்க ”
” ஏன் டி என் போன் எடுக்கல ” அவன் கேட்ட கேள்வியில் சட்டென்று அமைதியாகி போனாள் பிறை.
” என்ன டி பேச்சையே காணோம்.. போன் அட்டெண்ட் பண்ணாம மனுஷனை கிறுக்கா ஆக்கிட்டு இருக்க.. நான் பல வேலையா போறவன்.. போன் எடுக்களைனா என்னனு நினைக்கிறது ”
” என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க.. எனக்கு கவலை இல்ல.. வழிய விடுங்க நான் போகனும்”
” உனக்காக வேலையை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு மைல் கடந்து வந்திருக்கேன்.. இப்படித்தான் போக சொல்லுவியா ”
” நேத்து வராதவரு இன்னைக்கு எதுக்கு வந்தீங்க “..
” என் வேலை உனக்கு தெரியாதா.. கேஸ் முடியுற வரைக்கும் இப்படித்தான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டி ”
” நேத்து என்னைய எல்லாரும்.. ”
” நிறுத்து .. எல்லாமே கேள்விப்பட்டேன்.. அதான் வந்துட்டேன்ல நான் பாத்துக்கிறேன் ” என்றதும் தான் சற்றே நிம்மதியானது அவளது கனம்.
” ஆனால் எனக்கு இங்க யாரோ என்னைய பார்க்கிற மாதிரியே ஒரு ஃபீல்.. யாரா இருக்கும்.. அந்த ஆதி எதுவும் மறுபடியும் இங்க வந்திட்டாரா என்ன ”
” இந்த நேரத்துல அவனை பத்தி எதுக்கு பேசிட்டு… ” என்றவன்.. அவளது உடலில் இருந்து வந்த வாசனையில் சொக்கிப் போனான் .
” என்ன சென்ட் டி யூஸ் பண்ணுற ” கழுத்தில் வளைவில் வாசல் பிடித்துக் கொண்டே கேட்டவனை அதிர்ந்து பார்த்தாள் பிறை.
ஏனோ அவன் அருகில் வந்தாலே மற்றவைகள் எல்லாம் மறந்து போகிறது. இது என்ன புது விதமான நோய் என்பது தான் அவளுக்கு விளங்கவில்லை. ஆதி காலத்திலேயே இதற்கு காதல் என்று பெயர் சூட்டி விட்டார்கள்.
இன்னும் காதலை தான் இருவரும் அறியவில்லை. தற்போது இருப்பது பிடித்தம். அப்படித்தான் பெயர் வைத்துக் கொண்டார்கள். காதலை அறியும் நேரம் இருவரது நிலை என்னவோ ?
மூச்சடைக்க வைத்தவனை விட்டு நகர முடியாமல் அவனது செயலில் இடுப்பில் இருந்த குடம் தவறி கீழே விழுந்து விட.. அந்த சட்டத்தில் தான் இருவருமே தன்னிலை அடைந்தனர்.
கோவிலுக்கு பின்புறம் நின்று கொண்டு இவர்கள் காதல் லீலை புரிய.. தண்ணீருக்காக அங்கே மொத்த குடும்பமும் காத்துக் கொண்டிருந்தது.
” போச்சு போச்சு எல்லா தண்ணியும் போச்சு.. எல்லாம் உங்களால தான் ” பிறை குற்றம் சாட்ட.. உடனே குடத்தை எடுத்து அதில் தண்ணீரை நிரப்பி அவளிடம் கொடுத்திருந்தான் ஆதிதேவ். வேகமாக தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி இருந்தாள் பிறை.
அவள் சென்றதும் சுற்றிலும் பார்வையை பதித்தவன்.. பின் யோசனையாக அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான்.
இவர்கள் அடிக்கும் கூத்தை எல்லாம் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. யாரிவன்?
சனா💖

