Loading

பிறை -40

 

வழக்கத்திற்கு மாறாக இன்று அவனுக்கு வேலைகள் கழுத்தை நெரித்தது. அவனால் இம்மியும் நகர முடியாத நிலை. ஒரு பக்கம் மனைவியை நினைத்து மனம் மருகியது. மற்றொரு பக்கம் அவன் உயிராய் நினைக்கும் வேலை அவனை தடுத்து நிறுத்தியது. என்ன செய்வது?

 

” ஆதி இங்க பக்கத்துல தான் எங்கயோ இருக்கான்.. தகவல் வந்திருக்கு ”

 

” பக்கத்துலனா எங்க ”

 

” திருநெல்வேலி பக்கம் காட்டுது”

 

” வாட் …. ” என இருக்கையில் இருந்து எழுந்தவன் பதறிப் போனான்.

 

” அங்க என்ன பண்ணுறான்.. ” அலைபேசி அதிர கத்தினான் ஆதி.

 

” அடுத்து எந்த பொண்ணை தூக்க போறான்னு தெரியல .. ”

 

” இவனோட கேஸ் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு சரண்.. நம்ம இடத்துக்கு போவோம் ” என சரணை வரக் கூறி கொண்டு பழைய வீட்டிற்கு சென்றனர் இருவரும்.

 

வழக்கமாக பெரிய பெரிய விசாரணைகள் எல்லாம் இங்கு தான் நடைபெறும்.. இங்கு தான் சரணும் அவனும் சந்தித்து கொள்வார்கள்.. இன்றும் அதே தான் நடக்கிறது. சரண் அவனும் சிபிஐ . இருவருமே ஒன்றாக படித்தவர்கள் தான். சிறு வயதில் இருந்து நண்பர்கள்.

 

” வா சரண்.. ”

 

” என்ன கேஸ் இது.. வித்தியாசமா இருக்கு ” சரண் அவனை கட்டிக் கொண்டு இருவரும் பேச்சு வார்த்தையில் அமர்ந்து விட்டனர்.

 

” அதான் எனக்கும் புரியல.. இவன் எதுக்காக இப்படி பொண்ணுங்களை கடத்துறான்.. ”

 

” இவனை பத்தி வந்த டீடெயில் எல்லாம் சம்திங் ஃபிசி”

 

” பொண்ணுங்களை கடத்துறான்.. ஆனால் ரேப் பண்ணுறது இல்ல.. செக்சுவல் அபியூஷ் பண்ணல.. அவங்க உடம்புல இருக்குற எந்த பார்ட்ஸ் எதையும் எடுக்கல.. ஆனால் போன பொண்ணுங்க எல்லாம் ஏதோ ஒரு நாட்ல வெளிய விட்டுட்டாங்க.. என்ன தான் நடக்குதுன்னு ஒன்னும் புரியல ” ஆதிதேவ் தலையை பிடித்துக் கொண்டான்.

 

” இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது.. அவன் இதை விட ஏதோ பயங்கரமாக வேலை பார்ப்பான் போலன்னு தோணுது. ”

 

” எனக்கும் அதே தான் தோணுது.. ஆனால் என்னவா இருக்கும்”

 

” அவங்க கடத்துன எல்லா பொண்ணுங்களும் வெளிய வந்துட்டாங்களா என்ன ?” சரண் கேட்டது…

 

” இல்ல சரண்.. இதுவரைக்கும் 666 பொண்ணுங்களை கடத்தி இருக்கான்.. அதுல ஐம்பது பேர் மட்டும் காணோம்.. மிச்சம் எல்லாரும் வெளிய ஏதோ ஒரு ஊர்ல தான் இருக்காங்க.. ஆனால் அந்த ஐம்பது பொண்ணுங்களுக்கு என்ன ஆச்சு என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியல.. ”

 

” அவன் எந்த ஊருல வச்சு இதெல்லாம் பண்ணுறான் ”

 

” மும்பை ”

 

” சரியா போச்சு.. என்ன பண்ணலாம் இப்போ ”

 

” இப்போ ட்ராப் பண்ணுற பொண்ணு.. என் பொண்டாட்டி ” என ஆதிதேவ் கூறியதும்.. அதிர்ந்து போனான் சரண்.

 

” வாட்.. உனக்கு எப்போ டா கல்யாணம் ஆச்சு ” அபிசியலாக பேசும் பொழுது மட்டுமே மரியாதை எல்லாம்.. மற்ற நேரங்களில் நண்பர்களாக தான் இருவரும் பழகுவார்கள்.

 

” அந்த பிளாஷ்பேக் சொல்ல எல்லாம் நேரம் இல்ல டா.. திடீர்னு ஒன் வீக்ல முடிவு பண்ணி ஆகிடுச்சு ”

 

” பொண்ணு யாரு ”

 

” என் கூட நியூஸ்ல வந்தாளே அவ தான் பொண்ணு ”

 

” அந்த பொண்ணா.. சின்ன பொண்ணா இருந்தா ” என்ற நண்பனை ஏற இறங்க பார்த்தவன்..

 

” இப்போ திருநெல்வேலில தான் அவ இருக்கா ”

 

” வாட்.. நம்ம பேசுற விக்டிம் கூட அங்க தான் இருக்கான் டா ”

 

” அதான் டா எனக்கும் யோசனையா இருக்கு.. ”

 

” அப்போ நம்ம ரெண்டு பேரும் திருநெல்வேலி போகலாம் ”

 

” ம்ம் கிளம்பனும்.. ஆனால் ”

 

” என்ன டா ஆனால்…போன் பண்ணி தங்கச்சியை அலர்ட் பண்ணு ”

 

” போனை எடுக்க மாட்டிரா டா ”

 

” ஏன் டா ”

 

” என் மேல கோபத்துல இருக்கா ”

 

” கல்யாணம் எப்போ ஆச்சு ”

 

” 1 வீக் இருக்கும் ”

 

” அதுக்குள்ள சண்டையா ” என தலையில் அடித்துக் கொண்ட சரண்.. ” இதுக்கு தான் நான் கல்யாணம் பண்ணாம இருக்கேன் .. அப்போ உன் மாமனார் மாமியார் கிட்ட பேசி, காண்டக்ட் பண்ண பாரு ”

 

” அம்மா அப்பாவே அங்க தான் இருக்காங்க ”

 

” அப்போ உடனே அவங்க கிட்ட பேசு ”

 

” ம்ம் ” என்றவன் தாய்க்கு அழைத்து.. பிறையை நான் வரும் வரையில் எங்கும் வெளியே விட வேண்டாம் என கூறி இருந்தான்.

 

” அடுத்து என்ன பண்ணலாம்..”

 

” காரை எடுத்துட்டு கிளம்ப வேண்டியதான்… அவனை பிடிச்சா தான் எல்லாம் விஷயமும் வெளிய வரும் ”

 

” சரி.. நான் ஆபிஸ் போயிட்டு வந்துடுறேன்.. நீயும் வந்திடு ” என இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர்.

 

ஒரு மணி நேரத்தில் அவர்களது வேலையை முடித்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு திருநெல்வேலியை நோக்கி பயணத்தை தொடர்ந்தனர்.

 

**

 

பொறுத்து பொறுத்து பார்த்த மீனாட்சி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றிருந்தார். மெத்தையில் கண் மூடி அமர்ந்திருந்தாள் பிறை.

 

” பிறை.. ”

 

” ஹான் அத்தை… ” சட்டென நிமிர்ந்தவளின் கண்கள் கோவை பழமாக சிவந்து இருந்தது.

 

” புரியுது கஷ்டம் தான்.. அதுக்காக இப்படியே ரூம் குள்ள இருந்தா எப்படி.. உங்க அப்பத்தா வெளிய தான் இருக்காங்க.. அவங்க பொண்ணு அப்படியே வாசல்லையே விட்டுட்டு போயிட்டாங்க. இங்க வந்தும் யார் கூடவும் பேசாம அமைதியா இருக்காங்க. என்ன இருந்தாலும் வீட்டுக்கு பெரியவங்க.. நீ வந்து அவங்க கிட்ட பேசு.. பெரியவங்க மனசுல எதுவும் இருக்கக் கூடாது.. இப்படியே இங்க இருந்து என்ன பண்ண போற ”

 

” அது வந்து அத்தை.. வெளிய வந்தா அப்பத்தா ஏதாவது பேசும் ”

 

” என்ன பேசுவாங்க என் மருமகளை.. இல்ல நாங்கதான் பேச விட்டிடுவோமா.. உன் மாமா இருக்காரு.. நான் இருக்கேன் .. தைரியமா வந்து பேசு ” என மருமகளை அழைத்து கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தார் மீனாட்சி.

 

” அட வா மா பிறை.. நாங்க இப்போதான் முதல் முறையா இங்க வந்திருக்கோம். நீ எங்களை கவனிக்கிறதா விட்டுட்டு ரூமுக்குள்ள இருந்தா எப்படி ” திவாகர் கேட்டதும்.. பதறிப் போனவள்..

 

” ஐயோ அப்படியெல்லாம் இல்ல மாமா… மன்னிச்சிடுங்க ” என வேகமாக வந்தவளை பார்த்து சிரித்தவர்..

 

” அட சும்மா சொன்னேன் மா.. நீ வந்து இங்க உட்காரு.. ரூம் குள்ள என்ன பண்ணுற.. நான் வேணா ஆதிக்கு போன் பண்ணி வர சொல்லவா ” என்றதும் அவசரமாக மறுத்தவள்..

 

” ஐயோ அவங்க வேலையை கெடுக்க வேண்டாம் மாமா.. அவங்க வேலையை பார்க்கட்டும்.. வரும் போது வரட்டும் ” என வாய் கூறினாலும், மனம் கேட்கவில்லை.

 

வந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் மனதிற்குள் இல்லாமல் இல்லை. ஆனால் அவனாக அவளை தேடி வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

 

” எனக்கு என்னமோ ஆதி வந்தா பிறை சரி ஆகிடுவான்னு தோணுது.. ” மீனாட்சி கூறவும் பிறை அமைதியாகி போனாள்.

 

” அண்ணே உங்களுக்கு இளநி சீவி கொண்டு வந்திருக்கேன்.. வாங்க எல்லாரும் குடிக்கலாம் ” என அனைவருக்கும் ஒரு இளநியை கொடுக்க.. அகிலாண்டேஸ்வரி நடப்பதை எல்லாம் ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அவர் ஒதுங்கி இருப்பதை பார்த்த பிறை.. அவருக்கு ஒரு இளநியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்தவருக்கு முன்னே இளநீரை நீட்ட.. அதை வாங்கிக் கொண்டவரும்.. அமைதியாக குடிக்க ஆரம்பித்தார்.

 

எங்கே குடும்ம் முழுவதும் தன்னை ஒதுக்கி விடுமோ என்ற பயத்தில் இருந்தவருக்கு.. பேத்தியின் செயல் சற்று ஆறுதலாக இருந்தது.

 

பெரியவர்களும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். பெரியவர்களோடு இருந்து விட்டு அமைதியாக மீண்டும் அறைக்குள் சென்று விட்டாள் பிறை.

 

அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு, புலனம் முழுவதும் அவனது செய்தி தான்.

 

” மூன் ஏன் டி போன் அட்டெண்ட் பண்ணல.. ”

 

” என்ன தான் டி உன் பிரச்சனை ”

 

” மனுஷனை சாவடிக்கிற ”

 

“வேலையே ஓடல.. எப்படி கேஸ் விஷயத்தை கவனிப்பேன் ”

 

” உன் ஞாபகமா இருக்கு ”

 

” என்ன பத்தி தெரியாம இருக்க டி… வந்தேனா உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது ”

 

” போனை எடு டி ”

 

புலனத்தில் கேஸ் விஷயமான போட்டோக்களை தவிர மற்றவை எதையும் பகிராதவனுக்கு.. இப்படியான செய்திகளை அனுப்புவது எல்லாம் புதிது தான்.

 

ஏனோ அவனது எண்ணத்தில் முழுவதும் ஆட்கொண்டு விட்டாள் பிறை.

 

அலைபேசியை மூடி வைத்தவளுக்கு , வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை தவிர்க்க முடியவில்லை. இதுவரையில் இப்படி ஒரு உணர்வுகளை எல்லாம் பழகிடாதவளுக்கு.. திடீரென புதிதான விஷயங்களால், புதிய புதிய ஹார்மோன்கள் எல்லாம் உருவாகி சேட்டை செய்ய.. அனைத்தையும் சமாளிக்க முடியாமல் போர்வைக்குள் சுருண்டு கொண்டாள் பிறை.

 

திருநெல்வேலியை அடைந்திருந்தான் ஆதி. அவனது அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டவன்.. ” ம்ம் ரீச் ஆகிட்டேன் ”

 

” நீ தப்பான நேரத்துல விளையாடுர ஆதி.. அவன் மட்டும் உன்ன கண்டு பிடிச்சான்.. நம்ம எல்லாரும் மொத்தமா மாட்டுவோம்.. இதுவரைக்கும் நம்ம பண்ண எல்லாமே வீணா போகிடும்.. ” அப்பக்கம் உள்ளவர் பேச்சை அவன் சிறிதும் கேட்கவில்லை.

 

” இல்ல .. அவனோட பொண்டாட்டி தான் இப்போ என்னோட டார்கெட். அன்னைக்கே அவளை நம்ம இடத்துக்கு கொண்டு வந்திருப்பேன். ஆனால் அதுக்குள்ள என்னமோ ஆகிடுச்சு ”

 

” அவன் நம்மளை நெருங்கிற மாதிரி தோணுது.. இந்த ஒரு பொண்ணு இல்லைன்னா என்ன.. மத்த பொண்ணுங்களை பார்த்துக்கலாம் ”

 

” இல்ல எனக்கு அந்த நிலா தான் வேணும் ”

 

” அதுனால நம்ம பெரிய இழப்புகளை எல்லாம் சந்திக்கனும்.. ஏன் நம்ம உயிரே போனாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல ”

 

” நீங்க யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரியுதா… ஆதி… ஆதி கிட்ட ”

 

” ஆதி…. நான் சொல்லுறது ” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே போனை கட் செய்திருந்தான் ஆதி.

 

ஆதிக்கு அவன் நினைத்ததை முடித்து தான் பழக்கம்.. ஆனால் ஆதிதேவ்விற்கு???

 

ஆதியா? ஆதிதேவ்வா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

சனா 💖

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
29
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்