Loading

அத்தியாயம் 39

 

 

 

பிரகதீஸ்வரன் வேகமாக வந்து அவள் மேடிட்டிருந்த வயிற்றின் மீது ஏறி படுக்க, பின்னாடியே அவனை பிடிக்க ஓடி வந்தார் ராஜம், “அம்மாக்கு வயிறு வலிக்கும்டா, உள்ள பாப்பாக்கும் வலிக்கும், இறங்குடா தங்கம்” என கெஞ்சிக் கொண்டிருந்தார். 

 

குளித்து முடித்து ஆபிஸ் போக பிரஷ்ஷாக வெளியே வந்த ப்ரகலத்தன் ஓடி வந்து அவனைத் தூக்கினான். 

 

“விடிய விடிய தூங்காம அவளே இப்பதான் தூங்குறா. இவன தூக்காம கெஞ்சிட்டு இருக்கீங்க” என்றான் தாயிடம். 

 

“அது, ஒரு வயசு பிள்ளைய வச்சுக்கிட்டு உடனே உண்டான உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு. சின்ன பிள்ளனா அப்டித்தான் ஏறி விளையாடும்” ௭ன நொடித்தார். 

 

“இத ஒன்ன சொல்லிடுங்க எதுக்கெடுத்தாலும்” அவன் சலித்து கொள்ள. 

 

“நீ வாடா சாப்பிடலாம், ஒத்த வாய் வாங்கல, ஓட்டமா ஓடுதான்” ௭ன பேரனை மகனிடமிருந்து வாங்க அழைக்க. 

 

“நீங்க போங்க, நா ஊட்டிக்கிறேன்” என்றுவிட்டான். 

 

பின் மகனை கண்ணாடி முன் சேரில் உட்கார வைத்து கையில் அவன் கார் பொம்மையில் ஒன்றை குடுத்து விட்டு, தான் கிளம்பிக் கொண்டே, “அப்பாக்கு ஆபிஸ் டைமாச்சு, அதனால லேட் பண்ணாம என்கூட உக்காந்து சாப்பிடணும் சரியா. அம்மா வயித்துக்குள்ள உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருக்கு, வெளிவரவும் அவளுக்கு நீ தான் ஊட்டணும், அதுக்கு இப்ப நீ சமத்தா சாப்பிட்டு பெருசா வளரணும்” என பேசிக்கொண்டே கிளம்பி முடித்து அவனை தூக்கி திரும்ப, அவனையே பார்த்து படுத்திருந்த அவன் மனைவியை கண்டான். 

 

“சைலெண்டா சைட் அடிக்கிறியாடி கள்ளி” என மகனை தூக்கிக் கொண்டு அவள் அருகில் வர, அது தாயைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் அவள் முகம் தட்டி கதை சொல்லியது, “ம்மா, ம்மா” என, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்குன்னு சொல்றான்” என ப்ரகலத்தன் சிரித்து கொண்டே சொல்ல. 

 

“இல்ல பிரசிடென்ட் பாப்பாக்கு பசிக்காம் சாப்ட்டு தூங்கலாம்” என்றாள் சோபையாக. 

 

“சரி எழுந்திரு, நா போய் சாப்பாடு ௭டுத்துட்டு வரேன்”. 

 

“நானே போய் சாப்பிட்டுக்குறேன், நீங்க கிளம்புங்க”. 

 

“சரிமா சாப்ட்டு ரெஸ்ட் ௭டு, நா அப்டியே கிளம்புறேன், இப்ப போய் ஆண்ட்டிய வர சொல்றேன்” என எழுந்து குனிந்து அவள் உச்சியில் முத்தமிட்டு மகனை தூக்கிக்கொண்டு வெளியேறினான். 

 

பின் ஜெயந்தி வந்து, அவர் உதவியுடன் இவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியேறும் போது ப்ரகலத்தன் கிளம்பியிருந்தான். மகன் சமத்தாக சாப்பிட்டு முடித்து பாட்டி மடியில் படுத்து கதை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அடுத்த இரண்டு நாளில் சென்னை கிளம்பினர். திரும்பி வர ௭ப்படியும் ஆறு மாதம் ஆகும் என்பதால் மொத்தத்தையும் பேக் பண்ணி கொண்டிருந்தாள். அப்பொழுது அவர்கள் அறையில் இருந்த அவர்களின் போட்டோக்களில் முதல் முறை இங்கு வந்தபோது அவள் கண்டு ரசித்த இரண்டு போட்டோக்களையும் எடுக்க. 

 

வேகமாக வந்து தடுத்த ப்ரகலத்தன் “அடி வாங்க போறடி நீ, அது இங்கேயே இருக்கட்டும். நீ அங்க ஆளுங்களோட தான் இருப்ப. பத்தாததுக்கு பையன் வேற உன்ன பிஸியாவே தான் வச்சிருப்பான். நாதான் இங்க ஒத்தையில இருப்பேன், சோ இது இங்கயே இருக்கட்டும். உனக்குலா என்னய நினைக்க நேரமே இருக்காது” என்றான். 

 

அவள் முறைக்க, “ப்ளீஸ்ம்மா. ஒத்தைல இருக்கமாறி இருக்கும்” என்றான். 

 

“நா வேணா இங்கயே இருக்கட்டா”. 

 

“இருக்கலாம், ௭னக்குமே உன்ன அனுப்ப மனசில்ல தான், 1ஸ்ட் பேபிக்கு ௭ன் மாமியார் அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க இந்த டைம்மு அட்ஜஸ்ட் பண்ணுங்க கேட்டா சண்டைக்கு வந்துருவாங்கன்னு தான் யோசிக்றேன். ஆனா அதவிட இன்னொரு முக்கியமான விஷயம் ௭ன்னன்னா, நம்ம ப்ரகதீஸ் தான், அவன நீ மட்டும் இங்க தனியா மேனேஜ் பண்ண கஷ்டமே”. 

 

“அத்தைய ஊர்ல விட்டுட்டு, அம்மாவ கூட்டிட்டு வரலாம். இன்னும் தான் ஸ்கூலே திறக்கலையே”. 

 

“போய்ட்டு போய்ட்டு அலைய வேணாம். ஆண்ட்டி இந்த தடயும் வருவாங்கனு எனக்கு தோணல. சரி அத அந்நேரம் பாத்துக்கலாம்,. எல்லாம் எடுத்துக்கிட்டியான்னு ஒருக்கா செக் பண்ணிக்கோ”. 

 

“ஆமா கல்யாணம் முடிஞ்சு லட்சுவும், வைரமும் தான் இங்க பக்கத்துல வந்துருவாங்களே, உங்களுக்கும் பொழுது போயிடும்”. 

 

“அதுக்காக புதுசா கல்யாணமானாவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க முடியுமா லூசு” என அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான். 

 

“இந்த தடவையும் பையன்னா என்ன பண்ணுவீங்க?”. 

 

“நெக்ஸ்ட் பொண்ணுக்கு ட்ரை பண்ணுவேன்” ௭ன கன்னத்தில் முத்தினான். 

 

“நா அடிப்பேன்” எனத் தட்டி விட்டாள் அவன் கையை. அந்நேரம் ஓலா ட்ரைவர் வந்து போன் அடிக்க, கிளம்பினர். “மிஸ் யூ டி” ௭ன பின்னிருந்தே மறுபடியும் அணைத்து விடுவிக்க. “நீங்களும் சீக்கிரம் கிளம்பி வாங்க” ௭ன்றுவிட்டு கிளம்பினாள். 

 

வைரம் லட்சு கல்யாணத்தின் முந்தைய தினம் சென்னை வந்திறங்கினான் ப்ரகலத்தன். இந்த இரு வருட இடைவெளியில் சிம்பிளாக தங்கை திருமணத்தையும் முடித்திருந்தான். 

 

வைரத்தின் சொந்த ஊரில் கல்யாணம், அதிகாலை எழுந்து கிளம்பினர். எழில், ப்ரகலத்தன், ஜெயந்தி, ராஜம் நால்வரும் குட்டி பிரகீ யோடு. 

 

மறுபடியும் நண்பர்கள் குழு, 1 வருடம் கழித்து சந்திக்கிறது. மூர்த்தி மேரேஜ் ஆறெழில் டெலிவரி டைம் நடந்ததால் ப்ரகலத்தன் மட்டுமே சென்று வந்தான். லாஸ்ட்டாக அமலா கல்யாணத்தில் மீட் செய்தனர். அவள் தனக்கு நடந்ததை சொல்லி “பரவாயில்லை” ௭ன ஒத்து கொண்ட ஒருவரையே கல்யாணம் செய்தாள்.  நாதுவிற்கும் நெக்ஸ்ட் மந்த் மேரேஜ், தாணுவும், அகத்தியனுக்கு மட்டுமே இன்னும் பொண்ணு கிடைக்காமல் சுற்றி, எல்லார் கல்யாணத்தை மட்டும் அட்டெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பழைய கலாட்டா குறையாமல் பார்த்த நேரத்தில் என்ஜாய் செய்து கொள்வர்.

 

வைரம் லட்சு கல்யாண ஏற்பாட்டை, வைரத்தின் வேண்டுகோளுக்காக, சென்றமுறை அமலா கல்யாணதிற்கு வந்த போது, ப்ரகலத்தனும், ஆறெழிலுமே சென்று லட்சு அப்பாவிடம் பேசினர்.

 

“இதுக்குத்தான் இம்புட்டு நாளும் அலைய விட்டாளா என்னைய” என தோளில் கிடந்த துண்டை உதறி விட்டு சென்றுவிட்டார், அவள் அப்பா. 

 

பின் அங்கிருந்த நாட்களில் இரண்டு முறை விடாமல் படையெடுத்து, வைரத்தைப் பற்றி ஏகபோகமாக எடுத்துக்கூறி, ப்ரகலத்தனே அவரை ஒத்துக்கொள்ள வைத்தான். இன்று கல்யாணம் வரை அது வந்திருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பே பிளான் செய்தது, கொரோனாவும் சேந்து அவன் வாழ்வில் சதி செய்ய ஒரு வருடம் தள்ளி சென்று விட்டது. 

 

நிலா இரண்டு வயது மகளுடன் வந்திருந்தாள். அமலா அவள் கணவருடன் வந்திருக்க, மூர்த்தி அவன் மனைவியுடன் வந்திருந்தான். நாது அவன் கட்டிக்க போகும் பெண்ணுடன் வந்திருந்தான். 

 

“போற போக்க பாத்தா கடைசியில நீங்க ரெண்டு பேரும் தான்டா கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு” நாது சொல்ல. 

 

“ச்சை கருமம், அதுக்கு நா காவி கட்டிக்கிட்டு பரதேசம் போயிருவேன்” கொந்தெளித்தான் அகத்தியன். 

 

“ஏன்டா?? தாணு நல்லா கம்பெனி கொடுப்பான்” மூர்த்தி சிரிக்காமல் சொல்ல. 

 

“எனக்கும் இந்த மூஞ்சி வேணாம், எனக்கு 28 தான் ஆகுது. இன்னும் ரெண்டு, மூனு வருஷம் டைம் இருக்கு. சீனியர் தான் கிழமாயிட்டாரு. இங்கேயே கூட ஏதாவது பொண்ணு கிடைக்குமானு பாருங்க, வைரம் அப்பா செலவுல இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா முடிச்சுடலாம்” என்றான் தாணு. 

 

“யாருடா கிழம். எல்லாரும் குழந்தை பெத்து கிழவனா வருவீங்கடா என் கல்யாணத்துக்கு. நா ஜம்முன்னு அப்ப யங்கா நிப்பேனாக்கும்” என்றான் அகத்தியன் கெத்தாக. 

 

“சீனியர் ஒரு மாதுளை ஜூஸ், இரண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வாங்க” என்றாள் ஆறு. 

 

“இன்னமு ஆர்டர் சொல்றதயும் விடல, எல்லாருக்கும் சேத்து சொல்ற பழக்கத்தையும் பழகிக்கல” என்ற அகத்தியன், “என்ன மாப்பிள இத கூட கத்துக் கொடுக்கலயா நீ” ௭ன்றான் ப்ரகலத்தனிடம்.

 

“ஏன் அவேன் அவேனுக்கு வாயில்ல கேட்டு வாங்கிகட்டும்டா. மத்தவங்களுக்கு பிடிச்சதயும் தானே சொன்னா, எல்லாரும் அவ பேச்சுக் கேக்குற மாதிரி பாக்குறவங்களுக்கு தோணும்ல. சமமா நடத்துறாடா என் பொண்டாட்டி” என்றான் ப்ரகலத்தன். 

 

“நல்லா வாத்தியம் வாசிக்ற மாப்ள. கல்யாணமானவங்கள்லாம் உன்ட்ட டிரெய்னிங் வரணும். மாமியார் மருமக சண்டைலா வருமே எப்டி இப்டித்தான் பொண்டாட்டி பக்கமே பேசுவியா?”. 

 

“அப்ப நா 4 நாள் அப்ஸ்கான்ட் ஆகிடுவேன். அவங்களே சமாதானமான அப்புறம்தான் திரும்பி வருவேன்”. 

 

“வாழ்த்துக்கள் மாப்பிள, கீப் இட் அப்” என கைகொடுத்தான் அகத்தியன். லட்சு வைரம் கல்யாணத்தை சிறப்பாக முடித்து வைத்து, “டெல்லி வாடி பார்க்கலாம்” என விடை பெற்றாள் ஆறு. 

 

நாட்கள் நகர ஒன்பதாவது மாதம் வீட்டில் சிம்பிளாக வளைகாப்பிட்டு ஜெயந்தி தன் வீட்டிற்கு கூட்டிச் சென்றார். ப்ரகலத்தனும் லீவு எடுத்துக் கொண்டு வந்திருந்தான். 

 

“வர வர அழகாயிட்டே போறீங்களே எப்டி?” ௭ன்றாள் ஜம்மென்றிருப்பவனை சைட்டடித்து கொண்டு. 

 

“என்ன உள்குத்து வச்சு சொல்ற?”. 

 

“இல்லங்க நெஜமாவே சும்மா கும்முனு இருக்கீங்க. ஸ்லிம்மா, ஹாண்ட்சம்மா, தொப்ப இல்லாம, நா தான் உங்களுக்கு மேட்ச்சாவே இல்ல”. 

 

‘கன்ஃபார்ம் ஏதோ சண்டையிழுக்க பிளான் பண்ணிட்டா, எஸ்கேப் ஆயிருடா ப்ரகா’ மைண்ட் வாய்ஸ் எடுத்துக்கொடுக்க. 

 

“அப்டிலா இல்லம்மா, சரிமா ஒரு கால் பேசணும். அப்டியே வாக்கிங் போய் பேசிட்டு வரேன். உனக்கு ஏதும் வாங்கிட்டு வரவா?”. 

 

“பாத்தீங்களா எப்டி அவாய்ட் பண்றீங்க. என்கிட்ட உட்காந்து பேச கூட உங்களுக்கு பொறும இல்லல” என்றாள். 

 

“நானு உன்ன மாறி தொப்ப வச்சுக்கிட்டா, அப்ப ஹாப்பியா உனக்கு”. 

 

“நக்கலா இருக்குல்ல உங்களுக்கு” என அழ தயாராக. 

 

“லூசு தான்டி நீ. என் பிள்ளைய சுமக்குற உன்ன எனக்கு எப்டி அசிங்கமாக தெரியும். எனக்கு இப்பத்தான் உன்ன பாக்க அவ்வளவு அழகா தோணுது. இப்டி இறுக்கி கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும் தோணுது” என மேக்கொண்டு அவளை யோசிக்க விடாமல் வாயை அடைத்தான். முத்தம் பதித்தான்.

 

அடுத்த இரண்டு நாளில் சுகப் பிரசவத்தில் பெண் மகளைப் பெற்றெடுத்தாள். அவளின் ஆசைப்படி அவனது பூனை கண்ணனைப் போலவே பெண் பிள்ளையும் பூனை கண்ணுடனும், ஆறெழில் சாயலிலும் பிறந்தது. 

 

அவள் விருப்பத்தை நிறைவேற்ற அன்பு மகளுக்கு “குண வான்மதி” எனப் பெயரிட்டான் ப்ரகலத்தன்.

 

குழந்தை பிறந்து 3 மாதம் ஆன நிலையில் டெல்லி கிளம்பினாள் ஆறெழில். ப்ரகலத்தனே வந்து தன் குடும்பத்தை அழைத்து கொண்டு கிளம்பினான். இரண்டு குழந்தையயும் தனியாக பழக்க படுத்திவிட ௭ன்று இரு அம்மாக்களும் உடன் கிளம்பினர். 

 

கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பித்தது. டெல்லி முதல் இடத்தில் அதி தீவிர பாதிப்பில் இருந்தது. ௭ல்லாமே வீட்டு வாசலில் கிடைக்கும் படியும் ௭தற்காகவும் வெளியில் செல்ல விடாமல் குடும்பத்தை பார்த்து கொண்ட ப்ரகலத்தன், தான் மட்டுமே ஏற்போட்டிற்கு சென்று வந்தான். 

குழந்தைகள், பெரியவர்கள் இருப்பதால் தனியாக ஒரு அறையில் அவன் மட்டும் ௭ன இருந்து கொண்டான். 

 

௭வ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் அந்த கொடிய நோய் அவனைத் தாக்கியது.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
40
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்