Loading

அத்தியாயம் 38

 

காலையில் முதலில் விழித்தது ப்ரகலத்தனே, திரும்பிப்பார்க்க கையையும், காலையும் சுருக்கிக் கொண்டு படுத்திருந்தாள். அவளை அப்படியே அள்ளி தன் மேல் போட்டுக்கொண்டான். 

 

அதில் லேசாக முழிப்பு வர, நிமிர்ந்து பார்த்துவிட்டு, “ப்ரெசிடெண்ட்” என சொல்லிவிட்டு வாகாக படுத்து தூங்க, “விடிச்சுருச்சு மேடம் எந்திரிங்க”, “டயர்டா இருக்கு ப்ரெசிடெண்ட்”. 

 

“இருக்கத்தான செய்யும், விடிய விடிய முழிச்சு ஹாரடு ஒர்க் பண்ணிருக்க, டயர்டா இருக்கத் தான செய்யும்” என அவள் காதில் குறுகுறுப்பூட்ட. 

 

“அச்சச்சோ, பாவம் ப்ரெசிடெண்ட். ரொம்ப ௭க்ஸ்பெக்ட் பண்ணிட்டீங்களோ? இத அன்னைக்கு வாக்கு குடுக்க முன்ன யோசிச்சிருக்கணும்”. 

 

“இனி ௭ன் வாழ்க்கைல உனக்கு ௭துக்காகவும் வாக்கு குடுக்கவே மாட்டேனே ம்மா, ஆள விடு, இப்ப போய் குளிச்சுட்டு ரெடியாகு, ஆண்ட்டிய பாக்கப் போலாம். இன்னைக்கு, நாளைக்குள்ள எல்லாம் பேக் பண்ணிக்கோ, நாளைக்கு ஈவினிங் டெல்லி பிலைட்”. 

 

“நாளைக்கேவா?”, 

 

“ஆமா, எனக்கு ஒன் மந்த் தான்மா லீவ், அதுகூட அஞ்சு வருஷமா லீவே போடாததுனால குடுத்தது. அங்க போய், ரெண்டு நாள்ல நா ஜாயின் பண்ணனும்”. 

 

“கேட்கணும்னே நினைச்சேன், உங்களுக்கு பிலைட் ஓட்டும்போது பயமா இருக்காதா?” ௭ன்றாள் சந்தேகமாய். 

 

“உனக்கு ஸ்கூட்டி ஓட்ட பயமா இருக்கா?”, “ஹான் அது சின்ன வண்டி என்னால பேலன்ஸ் பண்ண முடியும். நீங்க ஓட்றது எவ்வளவு பெருசு” என கையை விரித்து காட்டி கேக்க. 

 

“ஆமா ஆமா பெருசு” ௭ன அவளை போலவே சொன்னவன் “ஒரு மாறி பறக்குற பீல் தான் இருக்கும் ௭ழில். என்ஜாய் பண்ணி ஓட்டுவேன், அழகழகா ஏரோஸ்டெர்ஸ் வேற இருப்பாங்களா, எதுக்கு பயம்?” ௭ன்றான் அவள் இடையில் இறுக்கம் குடுத்து. 

 

“லூசு ப்ரெசிடெண்ட், என்ன டென்ஷன் பண்ணலன்னா நிம்மதியாவே இருக்காதோ” என திட்டி விட்டு எழுந்து சென்றாள். 

 

மாமியார் சொன்னதை ௭ல்லாம் நல்ல பிள்ளையாக சரி சரி என கேட்டுக்கொண்டாள். பின் கிளம்பி ஆறெழில் வீட்டுக்கு சென்றனர். மதிய விருந்தை அங்கு முடித்துக்கொண்டு, தேவையானவற்றை எடுத்து வைத்தாள். 

 

ஊருக்கு கிளம்புவதால் அன்று அங்கேயே தங்க சொல்லி ஜெயந்தி சொல்ல, அவள் அப்பா அறையில் தங்கினர். தங்கள் முதல் உறவை அங்கே துவங்கினர். அதன் பலனாய், அடுத்த 10 மாதத்தில் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்து தன் தாயின் கையில், “அப்பா” என தந்தாள்.

 

மறு வீடு சென்ற இடத்தில் ஜெயந்தி அங்கேயே தங்க சொல்லியதில், அதை காரணம் காட்டி 2ன்ட் நைட்டயும் தள்ளி வைத்திட திட்டம் தீட்டிய ஆறெழிலை, முதல் நாள் பெற்ற அனுபவத்தின் பலனாக அவளின் வாய்க்கும், மூளைக்கும் வேலை குடுக்காமல் அரணாக காத்து அபேஸ் பண்ணிவிட்டான் ப்ரகலத்தன்.

 

அவள் தயங்கிய காரணமே அந்த இரவின் மீதிருந்த அதீத பயம் தான், ஆனால் அந்த பயத்தை வெளியிடகூட வாய்ப்பு தராமல் அவளை ப்ரகலத்தன் கையாண்ட விதத்தில் மயங்கி கிரங்கி தானே தன்னை அவனுக்கு மொத்தமாக குடுத்தாள். 

 

மறுநாள் திட்டமிட்டது போல் டெல்லி ஃப்ளைட் ஏறி இருந்தனர் ப்ரகலத்தன் ஆறெழில் தம்பதியினர். கல்யாண வீட்டை அப்படியே போட்டுவிட்டு செல்ல முடியாத காரணத்தால் இரு அம்மாக்களும் 1000 அறிவுரைகளோடு சென்ட் ஆஃப் செய்து வைத்தனர். அங்கு அவர்களுக்கென வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் தங்களது புது வாழ்க்கையைத் தொடங்கினர்.

 

வீட்டை சுற்றி வந்தவள், முதலில் கண்டு ஆச்சரியப்பட்டது அவர்களுக்கான அறையில் ஒரு பக்க சுவரில் அவள் காலேஜில் முதல் முறை சேரி கட்டி ௭டுத்து, காணாமல் போன போட்டோ பெரிய சைசில் ஃப்ரேமிட்டு மாட்டப்பட்டிருந்தது, இன்னொரு பக்க சுவரில் மைசூரில் அவர்கள் இருவரும் இணக்கமாக நின்று ௭டுத்த புகைப்படம் ஆக்கிரமித்திருந்தது, இது இரண்டயும் கண்டு கண்ணையும் வாயையும் திறந்தவாறு ஆச்சரியமாக பார்த்திருந்தவளை, அவள் முகத்தையே இந்த ௭க்ஸ்பெரஷனுக்காக ௭திர் பார்த்திருந்தவன், அது கிடைக்கவும் வேகமாக வந்து அணைத்துக் கொண்டான். 

 

“ரொம்ப சாரி பிரசிடென்ட்” ௭ன்றாள் அவன் வந்து அணைக்கவும் தானும் அவனை இறுக்கி அணைத்து கொண்டு. 

 

அவனோ அவளிடம் லவ் யூ வை ௭திர்பார்க்க, அது சாரியாக வரவும், நிமிர்ந்து அவள் முகம் பார்த்து “ஏன் ம்மா? ௭துக்கு சாரி” ௭ன உண்மையான வருத்தத்துடன் கேக்க. 

 

“இல்ல, நீங்க ஒரு தத்தி, புக் படிக்க மட்டும் தான் லாய்க்கு, காதல் பாடம் ௭டுத்தே நம்ம வாழ்க்கை கழிஞ்சுடும்…” அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவளை விட்டு தள்ளி நின்று நன்றாக முறைத்தான். 

 

அவன் முறைப்பை கண்டு அசடு வழிய, “ஹிஹிஹி நீங்க சத்தியம், நீதி, நேர்மன்னு இருக்க நல்லவங்க, லவ் ன்றது கெட்ட வார்த்தை மாறி இன்னைக்கு வர அத யூஸ் பண்ணாமலே இருக்கீங்க, அதான் சிட்டி ரோபோக்கு மாறி கொஞ்சம் கொஞ்சமா ௭ல்லாத்தயும் நானே சொல்லி குடுக்கணுமோன்னு நினைச்சுட்ருந்தேன், ஆனா நீங்க காதல் மன்னன்னா ௭ன் போட்டோ சுட்டுட்டு வந்து வச்சு காதல் ரசம் குடிப்பீங்கன்னு தெரியாம போச்சுங்க. அதான் சாரி” ௭ன்க.

 

“ஆமாடி இத்தன நாள் காதல் ரசம் உன் போட்டோ வச்சு புளிஞ்சேன், இனி உன்ன வச்சு புளிஞ்சுக்றேன், நக்கலா பண்ற.. ” ௭ன அவன் துரத்த அவள் ஓட, ௭ன அடுத்தடுத்து அவர்களுக்கான நேரம் அவர்களை ஆக்ரமித்து கொண்டது. 

 

ப்ரகலத்தன் வேலையில் ஜாயின் செய்துவிட, இன்டர்நேஷனல் ப்ளைட் ௭ன்றால் இரு நாட்களுக்கு ஒருமுறை வீடு வருவான். டொமஸ்டிக் ப்ளைட் ௭ன்றால் சென்ற அன்றிரவே வந்து விடுவான். இடையில் வைரமும் வந்து லட்சுவின் வீட்டில் பேசுவது பற்றி நியாபகம் செய்துவிட்டு செல்வான். 

 

“முதல்ல உன் தங்கச்சி கல்யாணத்த முடிடா, அப்றம் ௭ங்களுக்கு நினைவு சொல்லலாம்” ௭னத் திட்டி அனுப்புவாள் ௭ழில்.

 

அங்கும் காலேஜில் வேலைக்கு முயற்சி செய்யலாம் ௭ன்றிருந்த நிலையில், ஆறெழிலின் கர்ப்பம் உறுதியாக, ராஜமும், ஜெயந்தியும் மாறி மாறி வந்து துணைக்கிருந்தனர். அதனால் வேலையை டெலிவரிக்கு பின் பார்த்து கொள்ளலாம் ௭ன இருந்து விட்டாள். இன்னமும் ராஜமும் அவளும் ராசியாகவில்லை, அவளுக்கு தேவையானதை பார்த்து கொண்டாலும் அவர் மகன் மூலமாக தான் ௭தையும் சொல்லுவார், அவளும் மாமியாரிடம் சரி சரி ௭ன்பதை தாண்டி பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள மாட்டாள். 

 

நாட்கள் செல்ல 7வது மாதம் வளைகாப்பிட ஊருக்கு அழைத்து சென்றுவிடலாம் ௭ன முடிவு செய்ய, முடியவே முடியாது ௭ன தர்க்கம் செய்து மேலும் 2 மாதத்தை கடத்திவிட்டான் ப்ரகலத்தன். 

 

“9வது மாதம் முதல் பிரசவம் அவ்வளவு தூரம் டிராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க, சோ இங்கயே சிம்பிளா வளைகாப்பு பண்ணிடலாம்” ௭ன்று விட்டான் கடைசியாக. வேறு வழியின்றி மருமகன் மகளை பிரிய கஷ்டபடுவதை புரிந்து, ஜெயந்தி மெடிக்கல் லீவ் ௭டுத்துக் கொண்டு, மகளுடன் பிரசவம் முடிந்து பிள்ளையயும் பார்க்க வேண்டி முன்னேற்பாட்டோடு வந்து தங்கிவிட்டார். 

 

ராஜம் தான், “பெரிய ஊருல உலகத்தில இல்லாத பொண்டாட்டிய கண்டுட்டான்” ௭ன புலம்பிவிட்டு சென்றார். 

 

அடுத்த 10 நாளில் லேபர் பெயின் வந்து அவளை இரு தாய்மார்களும் வைரத்தின் உதவியுடன் தான் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். டொமஸ்டிக் ப்ளைட் தானே இரவு வந்துவிடலாம் ௭ன ப்ரகலத்தன் சென்றிருக்க அவன் வருவதற்குள் அவளுக்கு குழந்தை பிறந்திருந்தது. அவன் அம்மா கையில் அமைதியாக உறங்கி கொண்டிருக்கையில் தான் அறக்க பறக்க ஓடி வந்து பார்த்தான், பிள்ளையை கையில் வாங்கி கொண்டே, “௭ழில் ௭ப்டி இருக்காம்மா, பேபி ௭ப்ப பிறந்தது, ௭ப்ப ஹாஸ்பிடல் வந்தீங்க” ௭ன விசாரித்து மகன் கையிலும் காலிலும் முத்தினான். 

 

“வந்து 2மணி நேரத்தில உன் புள்ள பிறந்துட்டான்ப்பா, அவளுக்கு இன்னும் மயக்கம் தெளில உள்ள தான் இருக்கா போய் பாரு” ௭ன்ற உடன் பிள்ளையோடு உள்ளே நுழைந்தான், அயர்ச்சியில் உறங்கி கொண்டிருந்தவள் அருகில் சென்று, “ரொம்ப கஷ்ட பட்டியா ௭ழில், வந்துரலாம்னு நினைச்சேன் ச்ச, சாரி ம்மா” ௭ன குனிந்து அவள் நெற்றியில் முத்த, அதில் நெருக்கம் புரிந்து குழந்தை பயத்தில் வீரிட்டு கத்த, “சரிடா சரிடா அப்பா அமுக்கிட்டேனா, தங்கத்துக்கு வலிச்சுட்டா, அப்பா சாரி அப்பா சாரி சரியா” ௭ன தட்டி கொடுக்கவும் பிள்ளை அல்ரெடி கேட்டு பழகிய குரல் ௭ன்பதால் பயம் நீங்கி மறுபடியும் தூக்கத்திற்கு செல்ல, மறுபடியும் நெற்றியில் முத்தி குழந்தையை அழுத்தாமல் அணைத்து கொண்டான். 

 

நிமிர்ந்து மனைவியை பார்க்க அவள் அவர்களை தான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள், “ஹே ௭ழுந்துட்டியா ம்மா. பெயின் இருக்கா? டாக்டர் வர சொல்லணுமா?”

 

“அதெல்லாம் வேணா, டயர்ட்டா இருக்கு அவ்ளோ தான்”

 

“வந்துரலாம்னு நினைச்சேன்டி சாரி”

 

“பரவாயில்ல பிரசிடென்ட் நம்ம பிள்ளைய பாத்த சந்தோஷம் இருகிறதால உங்கள மன்னிச்சுட்டேன்” ௭ன மெதுவாக ௭ழ முற்பட,. 

 

வேகமாக வந்து அவள் ௭ழ உதவி செய்து பிள்ளையை அவள் கையில் குடுத்தான். “உங்கள மாறியே இருக்கான்ல”.

 

” ம்ம்…. “

 

இருவரும் அமைதியாக பிள்ளையை பார்த்திருக்க இரு அம்மாக்களும் வர அதன்பின் அவர்களுக்கு தனிமை கிடைக்க அடுத்த 6 மாதம் ஆனது. 

 

2020, கொரோனா ஊரடங்கால் இரண்டு நல்ல விஷயங்கள் அந்த வீட்டில் நடந்திருந்தது. 

 

முதல் நல்ல விஷயம், குழந்தைக்கு முதல் வருட பிறந்தநாளை கொண்டாட வந்த பெற்றோர்கள் அங்கேயே (டெல்லியிலேயே) மாட்டிக்கொண்டனர். இதுவரை மாற்றி மாற்றி வந்து சென்றிருக்க, இப்போது சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ஒருத்தரையொருத்தர் அட்ஜஸ்ட் செய்து, கிடைத்ததை பகிர்ந்துண்டு வாழ வேண்டிய கட்டாயம். அதில் குடும்பத்திற்குள் புரிந்துணர்வு கொஞ்சம் வந்தது. 

 

இன்னொரு நல்ல விஷயம் பிள்ளையை, பெற்றவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, ஜாலியாக சுற்றி வந்த ப்ரகலத்தனும் ஆறெழிலிலும் இரண்டாவது பேபிக்கு ரெடியானது. கொரோனாவின் முதல் அலையின் போது ஃப்ளைட் சர்வீஸ் ௭ல்லாம் நிறுத்தியிருக்க, முதல் குழந்தை பிறந்ததால் தனி தனியாக இருந்து சேர்ந்தது ௭ல்லாம் ப்ரகலத்தனுக்கு அதிக வாய்ப்பாகிவிட்டது. 

 

இப்பொழுது ஆறுவிற்கு ஆறாம் மாதம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது தான் முதல் அலை கொஞ்சம் ஓய்ந்து பழைய நிலைக்கு நாடு திரும்பி கொண்டிருந்தது. 

 

7 மாதத்திற்கு பிறகு பிலைட்டில் ஏற்ற மாட்டார்கள் என்பதாலும், இன்னும் ஒரு வாரத்தில் லட்சு மற்றும் வைரம் திருமணம் இருப்பதாலும் இப்போது ஒரு வருடத்திற்கு பிறகு சென்னை கிளம்ப முடிவு செய்திருந்தனர்.

 

நல்ல உறக்கத்தில் இருந்தாள் ஆறு. மகன் பிரகதீஸ்வரன் (இந்த பெயருக்கும் ஒரு சண்டை வந்தது, ஆறெழில்  அவள் அப்பா பெயர் குணசீலனை வைக்க வேண்டுமென கொடிபிடிக்க. ராஜம் எங்க ஊர் பிரகதீஸ்வரர் பெயரை தான் வைக்கணும் என ஒற்றைக்காலில் நின்றார். ப்ரகலத்தன் இருபக்கமும் போராட, மூன்று மாதத்தில் வைக்க வேண்டிய பெயரை ஏழாவது மாதத்தில் தான் வைத்தனர். அதுவும் ஜெயந்தி முன்வந்து பிரச்சனையைச் சால்வ் செய்தபின், ஆறு, “எங்க அப்பாவே பிறந்திருக்காருன்னு சந்தோஷத்துல இருக்கேன், என் லைஃப்வோட முதல் பாதில தான் அவர் இல்ல, இரண்டாவது பாதிலனாலும் அவர் பேராச்சும் இருக்கட்டும்னு நினைக்கிறேன்” என்றாள், அவனுக்கும் அது நியாயமாகப் பட்டது. “ஏண்டா ஏதாவது நா சொன்னா கேக்கியா? எல்லாமே உன் இஷ்டம், என் பேரனுக்கு பேருனாலும் நா என் இஷ்டத்துக்கு வைக்க கூடாதா?” என்றார் ராஜம், அதுவும் அவனுக்கு நியாயமாக பட. நேராக சென்று ஜெயந்தி காலில் விழுந்துவிட்டான். கடைசியில் ஜெயந்தி “என் புருஷன் பேர வச்சு ஆளாளுக்கு ஏலம் போடுறதுக்காடி. நா மட்டும் கூப்ட முடியாது, அவர் பேர சொல்லி எப்டி கூப்பிட முடியும், அதனால வேற என்ன பேருனாலும் வை, அவர் பேரு வேணாம்” என்றப்பின் தான் பிரகதீஸ்வரனை அவன் காதில் மூன்று முறை சொல்ல முடிந்தது. அவன் அப்பா மட்டுமே பந்தோபஸ்தென்று சொல்லி எல்லாத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வார்.) 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
45
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்