
பிறை -37
மூச்சை முட்டும் நெருக்கத்தில் இருக்கும் கணவனை விலகவும் மனம் வராமல், அவனை ஒன்றவும் மனம் வராமல், திக்கு முக்காடிப் போனாள் பிறை.
” ஞாபகம் வந்திருச்சா என்ன ?”
” அது… அது வந்து.. கொஞ்சம் .. தள்ளிப் போங்க” அவனது முகத்தை பார்க்க முடியாத அவஸ்த்தையில் , அவனது மார்பின் மீது பார்வையை பதித்த வண்ணம் பேசினாள் பிறை.
அகண்ட மார்பில், கருகருவென வளர்ந்து நின்ற சுருள் முடியை கண் இமைக்காமல் பார்த்தவளுக்கு, அந்த நெஞ்சத்தின் மீது தஞ்சம் புக அத்தனை தூரம் பேராவல் எழுந்தது.
” உனக்கு ஓகேன்னா … இப்படி இருந்துக்கோ ” என அவளை மேலும் இறுக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ள.. கணவனது நெருக்கத்தில் மொத்தமாக தன்னிலை இழந்தாள் பிறை.
” ஊருக்கு போறது முக்கியம் இல்ல பிறை.. அங்க போனதும் எனக்கு போன் பண்ணு.. தினமும் உன்கிட்ட நான் பேசிட்டு தான் இருப்பேன். அப்பறம் காலேஜ் போய் உன்னோட படிப்பை முடிச்சிடு.. தென் ரொம்ப முக்கியமான விஷயம் கவனமா இருக்கனும். எந்த பிரச்சனையா இருந்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுடி.. ” என அணைத்த வாக்கில் அவளிடம் அறிவுரை கூற.. அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை..
அவனது நெருக்கத்தில் முற்றிலுமாக கரைந்து போனாள் பிறைநிலா. மனைவியிடம் இருந்து எந்த ஒரு விதமான பதிலும் வராது போனதில்.. கீழே குனிந்து மனைவியை பார்க்க.. அவளோ கண்களை மூடிக் கொண்டு அவனது நெஞ்சு சூட்டில் ஆழமாக புதைந்து இருந்தாள்.
மனைவியின் நிலையை பார்த்தவனின் இதழ்கள் அழகாக விரிந்தது. மனம் நிறைந்து போனது. அவனது கதகதப்பை வேண்டி, அவனுக்காக ஒருவள் அவனது மார்பில் சாய்ந்திருந்த இந்த தருணத்தை பொக்கிஷமாக சேமித்து வைத்தான் ஆதி.
மெல்ல குனிந்து மனைவியின் உச்சந்தலையில் இதழ்களை பதித்தவனுக்கு.. அவளது நெருக்கம் அவனை கிறுகிறுக்க வைத்தது.
‘ பேசி ஊருக்கு அனுப்பலாம்னு வந்தவனுக்கு இவ்வளவு சோதனையா ‘ என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்.. இப்படியே இருந்தால் சரியாக வராது என மனைவியை விலக்க முயன்றான்.
” இப்படியே இருந்தா ஊருக்கு போக முடியாது.. நேரா உனக்கு வளைகாப்பு போட்டு தான் போகனும் மூன்… பரவாயில்லையா.. ” காதில் ரகசியம் பேசிய கணவனது பேச்சில் குப்பென்று சிவந்த முகத்தை மறைக்க முடியாமல், தன்னிலை அடைந்து அவனை விட்டு விலகி இருந்தாள் பிறை.
ஏனோ அவனது முகத்தை பார்க்க முடியவில்லை. அவனாக அவளை நெருங்கி இருந்தாலும்.. அந்த நெருக்கத்தில் மயங்கி நின்ற தன்னிலையை எண்ணி சிவந்து போனாள்.
” என்ன மேடம் பேச்சையே காணோம்.. ” ஒற்றை புருவம் ஏற்றி கணவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போனாள் மங்கை.
” இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பனும் பிறை. உன் திங்க்ஸ் எடுத்து வச்சுக்கோ ”
” எனக்கு எங்க அம்மா வீட்லயே எல்லாம் இருக்கு.. நான் இங்க தானே திரும்பி வரப் போறேன்.. இருக்கட்டும் ” என்றவளுக்கு தற்போது மூக்கு சிவந்து கோபம் வந்து விட்டது.
அவனுக்கும் அவளது நிலை புரிந்தது தான். அவளை விட்டுருக்க அவனது மனமும் இடம் கொடுக்கவில்லை தான். ஆனால் அவளுக்காக காத்திருக்கும் ஆபத்தில் இருந்து அவளை காப்பாற்ற வேண்டி அவளை அனுப்பி வைத்தே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறான் ஆதி.
” கண்டிப்பா அப்போ அப்போ வந்து உன்ன பார்க்குறேன் பிறை ”
” எப்போ திரும்பி நான் இங்க வருவேன்..”
” பிரச்சனை எல்லாம் முடியவும்..”
” எப்போ பிரச்சனை எல்லா முடியும் ”
” ஆதியை பிடிச்சுட்டா பிரச்சனை முடிஞ்சுடும் ”
” எப்போ ஆதியை பிடிப்பீங்க ” என்றவளை இடுப்பில் கை வைத்து முறைத்தவன்..
” என்ன டி உனக்கு பிரச்சனை.. அதான் நான் வரேன்னு சொல்லுறேன்ல.. ”
” ரொம்ப நாள் எல்லாம் நான் அங்க இருக்க முடியாது.. வந்து என்னைய கூட்டிட்டு போயிடுங்க ” மனைவியின் பேச்சில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தவன்..
” எல்லாரும் அம்மா வீட்டுக்கு போனா சந்தோஷமா தானே இருப்பாங்க.. நீ என்ன இப்படி சொல்லுற ”
” என் ஊர் அப்படி.. கல்யாணம் ஆகி நீங்க இல்லாம நான் ஊருக்கு போறேன்.. அதுனால தான் சொல்லுறேன் ”
” இதுதான் உன் பிரச்சனையா.. சீக்கிரம் வந்து உன்ன கூட்டிட்டு போறேன் பிறை .. வா வந்து திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை ” என அவளை திசை திருப்பியவன்.. மறக்காமல் அவளுக்கான இன்டென்ஷிப் சர்டிபிகேட்டை வாங்கி வந்து கொடுத்தான்.
” உன் காலேஜ்லயும் பேசிருக்கேன்.. இன்டென்ஷிப் சர்டிபிகேட் வச்சு பிராஜெக்ட்டை முடிச்சிடு.. உனக்கு தேவையான காசை உன் அக்கவுண்ட்ல போட்டிருக்கேன்… இன்னும் தேவைன்னா எனக்கு கால் பண்ணு ..”
” அதான் அப்பா இருக்காரே.. எனக்கு என்ன செலவு வரப் போகுது ”
” இனிமே உன்னோட முழுப் பொறுப்பும் நான் தான் மூன்.. எதுனாலும் என்கிட்ட கேளு ” ஏனோ இந்த வார்த்தைகளும் அவளுக்கு பிடித்து தான் இருந்தது. உரிமை கலந்த வார்த்தை. அவளது தந்தைக்கு அடுத்து, அவளிடம் உரிமை எடுத்துக் கொண்டவன் அல்லவா!
” ம்ம்.. போன் பண்ணுறேன் ” என வேலையை கவனிக்க செல்ல.. அவனும் அவனுக்கான வேலையை முடிக்க சென்றான்.
இரவு உணவிற்கு அனைவரும் டேபிளில் அமர்ந்து விட்டனர். ” ஆதி முதல் முதல்ல மருமகளை அனுப்பி வைக்கிறோம்.. அவங்களை மட்டும் அனுப்பி வச்சா நல்லாவா இருக்கும் சொல்லு.. அதுனால நானும் அப்பாவும் கூடப் போய் விட்டுட்டு வரட்டுமா பா.. ” மீனாட்சிக்கு ஏனோ இவர்களை இப்படி அனுப்புவதில் இஷ்டம் இல்லை.
” ஓகே உங்களுக்கும் சேர்த்தே டிக்கெட் போடுறேன்.. நீங்களும் போயிட்டு வாங்க ” என சாப்பிட்டு கொண்டே பதிலளித்தான்.
பிறை கண்ணெடுக்காமல் கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு நாட்களில் அவனை விட்டு போக போகிறோம்.. அதற்குள் எவ்வளவு தூரம் அவனை கண்களில் நிரப்பிக் கொள்ள முடியுமோ.. அதுவரை நிரப்பிக் கொள்ள விரும்பி, பார்த்துக் கொண்டே இருக்க.. மீனாட்சி கேட்ட கேள்வி அவளது காதை எட்டாது போனது தான் பரிதாபம்.
” இன்னொரு தோசை வச்சு சட்டினி வைக்கவா பிறை மா ” என மீனாட்சி கேட்டுக் கொண்டே இருக்க.. அவளோ அவளது வேலையை கனக்கட்சிதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனைவியின் செயலில் அவனுக்குமே தொண்டையில் உணவு இறங்காமல் சதி செய்தது. ” என் மகனை பார்த்தது போதும். சாப்பிட்டு போய் நல்லாப் பாரு.. இப்போ தோசை வேணுமா ” மீனாட்சி நக்கல் செய்ய.. ஆதி எழுந்து சென்றிருந்தான்.
” அது.. போதும் அத்தை ” சிவந்த முகத்தோடு வேகமாக எழுந்து கையை கழுவிக் கொண்டு அறைக்குள் சென்றிருந்தாள் பிறை.
சிவகாமிக்கும் அவரது கணவருக்கும் மனம் நிறைந்து போனது. மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்ற ஒரு விஷயம் போதாதா..
” ஓஹோ .. இதுக்கு பேர் தான் ரொமான்ஸா டா.. என் அண்ணனுக்கு கூட வரும் போலயே” என பார்வதி மனதிற்குள் குதுகளித்துக் கொண்டாள்.
அப்போது மேஜை மீதிருந்த அவளது அலைபேசி ஒலியெழுப்ப.. வாட்ஸப்பில் அவளுக்காக அர்ஜுனிடம் இருந்த வந்திருந்த தகவலை திறந்து பார்த்தாள்.
” நாளைக்கு நம்ம கண்டிப்பா மீட் பண்ணியே ஆகனும்.. ஸ்பாட் நீ செலக்ட் பண்ணிட்டு சொல்லு ” என அனுப்பி இருந்தான்.
” எனி ப்ராப்ளம்? ” என அவள் ரிப்ளை அனுப்ப..
” சில விஷயம் பேசி கிளியர் பண்ணனும் கவி.. டோண்ட் பர்கட் டூ கம் ” என அனுப்பி இருந்த செய்தியை பார்த்து சற்றே குழம்பிப் போனவள்.. ஓகே என பதில் அளித்தவள், அறைக்கு சென்றிருந்தாள்.
கைகளை கழுவிக் கொண்டு அறைக்கு வந்த பிறையோ பயத்தில் இருந்தாள். கீழே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை அவமானம் செய்து விட்டோமோ என்ற எண்ணத்தில் அவள் தயங்கி கொண்டே உள்ளே வந்து பார்க்க.. போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ்.
மெல்ல நடையிட்டு அவனை நெருங்கியவள்.. ” அது.. வந்து சாரிங்க.. நான் ஏதோ ஞாபகத்துல அப்படி … ” என அடுத்த வார்த்தையை கோர்க்க தெரியாமல் தடுமாற..
தடுமாறிய மனைவியை சட்டென இழுத்து மடியில் போட்டுக் கொண்டவன்.. அவளது அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே அவளது இதழோடு இதழ் சேர்க்க.. அதிர்ந்த கண்களும் மேல் விரிவடைந்தது.
கீழே மனைவி பார்த்த பார்வையில் உஷ்ணம் ஏறி போனவன்.. வேகமாக அறைக்கு வந்து விட்டான். மேலே வந்தும் அவனது உஷ்ணம் தீராமல் தவித்துக் கொண்டிருந்தவனை சோதிக்க வென்றே மேலே வந்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி.
ஆழ்ந்து கொடுத்த இதழ் முத்தத்தில் அவளது கண்கள் மெல்ல சொருக ஆரம்பித்தது. அவளது விழிகள் மூடுவதை கண் இமைக்காது பார்த்தவன்.. சற்றே மனம்மிறங்கி மெல்ல அவளது கீழ் இதழை கொய்ய.. மொத்தமாக கிறங்கி போனாள் பிறை.
அரை நொடி இடைவெளியில்… ” தேவ்…. ” என மெல்ல முனங்க… மனைவியின் புது விதமான அழைப்பில்.. மீண்டும் அவளது இதழ்களை முற்றுகையிட்டான். தேவ் என்ற வார்த்தை அவனுள் மின்சாரத்தை கடத்தி இருக்க.. அதை மொத்தத்தையும் அவளுள் கடத்தும் பேராவல் எழுந்து .. அவளது இதழை கடித்து ருசித்தான் ஆடவன்.
மெல்ல அவளை விட்டு விலகி அமர்ந்தவனுக்கு.. பெரிய பெரிய மூச்சுக்களை விடும் மனைவியை பார்த்து சற்றே பாவமாகிப் போனது.
” ரொம்ப படுத்திட்டேனா மூன் ”
பதில் கூற முடியாமல் தலையை இடவலமாக ஆட்டினாள்.
” இதுக்கே இப்படி மூச்சு விட்டா .. அப்போ மத்துக்கு என்ன டி பண்ணுறது ” சட்டென முன்னே வந்து கணவனது வாயை கரங்களால் மூடி இருந்தாள்.
” போதுங்க … ”
அவளது கரங்களை விலக்கியவன்.. ” என்னனு கூப்பிட்ட ” என்றதும்..
நாக்கை கடித்துக் கொண்டவள்.. ” அது தப்பு தான்.. என் அம்மா கிட்ட சொல்லிடாதீங்க பிளீஸ் ” என கெஞ்சும் மனைவியை தாறுமாறாக ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.
” இன்னைக்கு நைட்டு நீ ஏன் கீழ இருக்கிற ரூம்ல தூங்க கூடாது.. ” சட்டென அவன் கேட்டதும் அவளது முகமே வாடிப் போனது.
” ஹே அது இல்ல டி மூன்.. எனக்கென்னமோ.. இன்னைக்கு இங்க இருந்தா ஏதாவது நடந்துடுமோன்னு பயமா இருக்கு ”
” கமிஷனர் பயப்படலாமா ”
” அதுசரி சின்ன பொண்ணுன்னு உன்ன தப்பா நினைச்சுட்டேன் மூன்.. ” கணவனது பேச்சில் சிவந்து போனாள் பிறை.
இதே நெருக்கம் அடுத்
து வரும் நாட்கள் தொடருமா.. ?
பார்வதியை அர்ஜுன் சந்திக்க காரணம் என்ன ?
ஆதி பிறையை தேடி கிராமத்திற்கு செல்வானா ?
சனா💖

