Loading

 

அத்தியாயம் 37

 

விருந்தினர்கள் யாவரும் கிளம்பிச் சென்றிருக்க, நெருங்கிய உறவினர்கள் மட்டுமாய் அரங்கின் ஒரு பக்கமாய் அமர்ந்து இருந்தனர்.

 

மணமக்கள் கிளம்பிய பின்னர்தான், குடும்பத்தார் புறப்பட இயலும். ஆனால் விழாவின் நாயகன் தான், இன்னும் பணிகளைக் கவனித்துக் கொண்டு இருந்தான்.

 

சமையல்காரரிடம் பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்தவன்.. மீதி இருந்த உணவையையும் அவரிடமே தந்து, “நீங்க பார்த்து, யாருக்கும் கொடுத்திடுங்க ஐயா!” என்று விட்டான்.

 

அவனைப் பார்த்தபடி இருந்த மௌனியைக் கவனித்த தோழியானவள், “ஹேய் படி!” எனக் காதோரம் குரல் தாழ்த்தி அழைத்திட, “என்ன ரஞ்சு?” என்றபடித் திரும்பினாள்.

 

“என்ன, எங்க அண்ணனை சைட் அடிக்கிறியா.?’

 

“இப்ப, அவர் எனக்கு என்டைட்டில்ட் ஹஸ்பெண்ட். நான் எதுக்கு சைட் அடிக்கப் போறேன்? உரிமையோட பார்க்கிறேன்!”

 

“அதுசரி! இவங்கக்கிட்ட எல்லாம் பேசணுமா அப்படினு நினைக்கிற என்னோட ஃப்ரெண்ட் மௌனியா இது.?”

 

“சரண் அந்த கேட்டகிரி இல்லையே? ஃபர்ஸ்ட் டைம் நான் அவரை மீட் பண்ணும் போதே, பேசித்தான் ஆகணும்கிற சுச்சுவேஷன். சோ, இப்பவரை அவருக்கிட்ட பேசுறதுக்காக நான் யோசிச்சதே இல்ல.”

 

“ம்ம்.. படி, உனக்கு அண்ணனைப் பிடிச்சிருக்கு தான?”

 

“பிடிக்காம, எப்படி ரஞ்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்?”

 

“ஏய்.. நான் அந்த பிடித்தத்தைச் சொல்லல?”

 

தோழியின் சொற்கள் அவளுள் குழப்பத்தை விளைவிக்க, புரிந்து கொள்ள முடியாது திரும்பிப் பார்த்தாள்.

 

ரஞ்சனி புன்னகைத்து, “என்ன இப்படிப் பார்க்கிற?”

 

“நீ சொன்னதுக்கு என்ன மீனிங் படி?”

 

“சரண் அண்ணாவை உனக்குப் பிடிச்சிருக்கு.”

 

“எஸ்.. அதை நானே ஒத்துக்கிட்டேனே?”

 

“ஆனா, அதுக்குக் காரணம் உங்களுக்கு நடுவுல நடந்த எங்கேஜ்மெண்ட் இல்ல.”

 

“யா. எனக்கு அவரைப் பிடிக்க அது காரணம் இல்ல.”

 

“அப்ப, வேற என்ன காரணம்?”

 

“ஐ திங்க், இட்ஸ் தி கேர் ஹீ ஷோஸ் ஃபார் மீ.”

 

“ஆர் யூ ஸுயர்?”

 

“என்ன படி இப்படிக் கேட்கிற?”

 

“உன்மேல கேர் எடுத்துக்கலேனா, அவரைப் பிடிக்காதா?”

 

“ஹேய்.. நான் அப்படிச் சொல்லல.”

 

“வேற எப்படி.?”

 

“சரண், என்கிட்ட இவ்வளவு கன்சர்னா நடந்துக்கலேனா கூட ஓகே தான்!”

 

“ஏன்?”

 

“ஏன்னா? என்ன சொல்லுறது?”

 

“உன்னைக் கண்டுக்காம இருக்கிற ஒரு ஆளைப் பிடிக்குமா.?”

 

மௌனி சட்டென்று சிரித்திட, “பதில் சொல்லு படி!”

 

“இப்ப எதுக்கு நீ இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்க?”

 

“உனக்கு சில விஷயங்களை புரிய வைக்கணும், அதுக்காக தான்!”

 

“அதை நேராவே சொல்லலாம்ல?”

 

“நீ தனியாவே இருந்தவ படி. சொன்னா உன்னால புரிஞ்சுக்க முடியுமானு தெரியல. அதை உள்ளுக்குள்ள நீ பீல் பண்ணணும். அதுக்காக தான் இவ்வளவு கொஸ்டின்.”

 

“ஓ.. ஓகே.. கேளு! ரஞ்சுவுக்கு என்ன தெரிஞ்சிக்கணும்?”

 

“அண்ணாவை பத்தி உன்னோட தாட் என்ன.?”

 

“ம்ம்.. ஓகே. என்னைப் பொறுத்த வரை, குட் பர்சன். அவருக்கூட இருக்கும் போது ஐ ஃபீல் சேஃப்.” என்றவளின் கண்கள் அனிச்சையாய் கணவன் இருந்த திசைக்குத் திரும்பியது.

 

“இப்ப, அவரு உனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செஞ்சிருந்தா, ஏத்துப்பியா நீ?”

 

“அது, அந்த விஷயத்தைப் பொறுத்து.”

 

“அப்படினா, எந்தெந்த லெவலுக்கு எந்த மாதிரி இருக்கும் உன்னோட ரியாக்ஷன்?”

 

“புரியல.”

 

“தெரிஞ்சே தப்பு செஞ்சா?”

 

“எதுவா இருந்தாலும் சரி, சுச்சுவேஷனைத்தான் முதல்ல பார்ப்பேன். மத்தது எல்லாம் அப்புறம் தான். தப்பு செஞ்சிருந்தா, சோ வாட்.? அவரோட உண்மையான இண்டென்ஸன் என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அது நியாயமா இருந்தா, நான் அக்செப்ட் பண்ணிப்பேன்!”

 

“ஒருவேளை, அவரே உன்மேல கோபப்பட்டா? ரெண்டு பேரும் பிரியிற நிலைமை வந்தா?”

 

“ரஞ்சு, ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைண்ட்? இப்பதான் மேரேஜ் ஆகி இருக்கு எங்களுக்கு. ஃபேமிலி மெம்மர்ஸ் யார் காதுலயும் விழுந்தா என்ன நினைப்பாங்க?”

 

“அவங்க நினைக்கிறதை விடு. உன்னோட பதில் என்ன.?”

 

“இல்ல, அப்படி ஒரு சுச்சுவேஷன் வராது. வந்தாலும் நான் அந்த முடிவுக்குப் போக மாட்டேன்.”

 

“ஏன்.?”

 

“மேரேஜ் பண்ணுறதே சேர்ந்து வாழுறதுக்காக தான.?”

 

“நோ படி!”

 

“அப்புறம்?”

 

“மேரேஜை உங்க உறவுக்குப் போடுற முடிச்சா பார்க்காத! அந்த முடிச்சு இல்லாமலும், உனக்கு அண்ணா வேணுமானு யோசி!”

 

மெலிதாய்ப் புன்னகைத்து, “அது எப்படி வேணாம்னு சொல்லுவேன்? சரண் வேணும் தான். யூ நோ, திஸ் ஃபீல் இஸ் சம்திங் ஸ்பெஷல். ஐ லைக் இட் டூ..” என்ற மௌனியின் வதனம் நாணத்தால் சிவந்து இருந்தது.

 

“தட்ஸ் இட்! யூ ஆர் இன் லவ் வித் ஹிம்!”

 

அதிர்ச்சியுடன் தோழியை நோக்கியவள், “வாட் யூ மீன்?”

 

“ஐ மீன்? நீ உனது கணவனைக் காதலிக்கிறாய் பெண்ணே!” எனச் செவிக்கு அருகே வந்து, அவளிற்கு மட்டும் கேட்கும்படியாய் உரைத்தாள்.

 

மணப்பெண்ணானவள் சிலைபோல் அமர்ந்து இருக்க, “அது உனக்கே தெரியல. அதைப் பத்தி யோசிக்கவும் மாட்டிற. இந்த கல்யாணம் ஆச்சிக்காகனு உன் மனசுல ஒரு எண்ணம் இருக்குல? அதை முதல்ல தூக்கிப் போடு. மேரேஜை நீ உனக்காக செஞ்சு இருக்க, இப்ப. அவ்வளவு தான். அப்படினாதான், உன்னால அவர்கிட்ட நேச்சுரலா பழக முடியும். இல்லேனா உன்னோட கேரக்டருக்கு, எப்பவும் விலகியே தான் இருப்ப.

 

சென்னைக்கு வந்திருந்தப்ப, ‘அவ ஏன் சந்துரு விஷயத்தை என்கிட்ட சொல்லல’னு கேட்டாரு. அதுக்கு இதுதான் காரணம். நீ அண்ணாவை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைக்கிற! ஆனா, நமக்கான தேவைகளை லைஃப் பார்ட்னர்கிட்ட ஷேர் பண்ணிக்கும் போது, அது எப்படி தொந்தரவு செய்யிறதா ஆகும்?

 

இது, உன்னோட உரிமை படி. அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் டிஸ்டர்ப் பண்ணுறது தான் கல்யாணமே! நீ உன் பாட்டுக்கு இரு, நானும் என்னோட வேலையை பார்க்கிறேனு இருக்கிறதுக்கு அவங்க கணவன் மனைவியா இருக்க வேண்டிய அவசியம் என்ன?

 

உனக்காக அவ்வளவு வேலைக்கு இடையிலயும் ஒருநாளை முழுசா ஒதுக்கி, சென்னைக்கு வந்துட்டுப் போயிருக்காரு. இத்தனைக்கும் அப்ப அவருக்குச் சந்துரு விஷயம் கூட தெரியாது. உன்னைப் பார்க்கிறதுக்காக மட்டும் தான், அந்த டிரிப்.

 

சந்துரு விஷயத்துல தலையிட்டா என்ன பிரச்சனை வரும். அவன் யாரு என்னனு எல்லாம் யோசிக்கவே இல்ல. தெரிஞ்சதுமே, பின்விளைவை சாமாளிச்சுக்கலாம்னு சட்டுனு அதுல இறங்கிட்டாரு.

 

என்னைக் கேட்டா.. நீ அன்னைக்கு நைட் ஒரு கால் பண்ணி இருந்தா, உடனே கிளம்பி விடியிறதுக்கு முன்னாடியே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருப்பாருனு தான் சொல்லுவேன். இதெல்லாம் உனக்குமே தெரியும் தான.?”

 

மௌனி தோழியை இமை சிமிட்டாமல் பார்க்க, “என்ன? தெரியுமா தெரியாதா?”

 

“தெரியும். ஐ ஃபீல் தட்.”

 

“எப்ப ஃபீல் பண்ண?”

 

“இப்ப நீ சொல்லவும் தான் தோணுது.”

 

“சரி விடு! அன்னைக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ணனு ஞாபகம் இருக்கா?”

 

அவள் மறுமொழி உரைக்காது அமர்ந்திருக்க, “சைலண்டா இருந்த. அவ்வளவு தான் உன்னோட ரியாக்ஷன். ஏதாவது பிரச்சனைகளுக்கோ, தப்பு எதுவும் நடந்திடுமோனு பயப்படலாம். ஆனா, தன்மேல காட்டப்படுற அன்புக்கும் அக்கறைக்கும் பயப்படலாமா படி? நீ அப்படித்தான் நடந்துக்கிற!”

 

“உனக்கே தெரியும். எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல ரஞ்சு.”

 

“பழகிக்கோ! ஏன்னா, இப்ப உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. அதுவும் இல்லாம, நீங்க லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஸிப்பை மெயிண்டெயின் பண்ண முடிவு செஞ்சிருக்கீங்க. இதை எல்லாம் வெளிப்படையா பேசாம, எப்படி உங்களுக்கு இடையிலான உறவு ஹெல்தியா இருக்கும்.?

 

இதெல்லாம் உனக்கே தெரியும் தான். ஆனா, புரிஞ்சிக்க லேட் ஆகலாம். அதுக்கு இடையில உங்களுக்கு நடுவுல ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் வந்துட்டா, அதை சால்வ் பண்ணுறது ரொம்ப கஷ்டம் ஆகிடும். அங்க ஈகோ கிளாஸ் ஆக வாய்ப்பு இருக்கு!

 

ரிலேஷன்ஸிப்புக்குள்ள காலடி எடுத்து வைக்கும் போதே, காதலோட ஸ்ட்ராங்கான மைண்ட் செட்ல நுழைஞ்சா, பின்னாடி வர்ற பிரச்சனைகள் எல்லாம் சட்டுனு சரியாகிடும்.”

 

“தேங்க்ஸ் படி, உன்னோட அட்வைஸுக்கு! பட், இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.?” என அவள் ஆராய்ச்சி பார்வைப் பார்க்க, “எல்லாம் கண்முன்னாடி பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டது தான். அதோட எனக்கு எக்ஸ்பீரியன்ஸும் உண்டு.” என்று மெலிதான பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு உரைத்தாள் ரஞ்சனி.

 

மௌனி திடுக்கிட்டு, “ஹேய் படி, என்ன சொல்லுற?”

 

“விடு! அதெல்லாம் முடிஞ்சு போன கதை!” என அவள் சிரித்து சமாளிக்க, “உங்க ஃபேமிலில லவ் மேரேஜ் பண்ண ஒத்துக்க மாட்டாங்கனு சொன்னியே ரஞ்சு?”

 

“இண்டர்கேஸ்ட் மேரேஜுக்கு தான் சம்மதிக்க மாட்டாங்க. ஒரே கேஸ்டா இருந்தா பிரச்சனை இல்ல. நல்ல கொள்கை இல்ல?”

 

தோழியின் பேச்சில் புன்னகை அரும்ப, “என்னோட பேக் ஸ்டோரியைப் பத்தி இன்னொரு நாள் பேசுவோம். இன்னைக்காக ஹீரோயின் நீதான். சோ, உன்னைப் பத்தி மட்டும் யோசி!”

 

“ம்ம். உனக்கு என்ன தோணுது, அவருக்கும் என்மேல லவ் இருக்கா?”

 

“இதை நீ அண்ணாக்கிட்ட தான் கேட்கணும்.”

 

“ஹேய்.. என்னைப் பத்தி இவ்வளவு சொன்ன? அவரைப் பத்தி கேட்டா, இப்படிப் பதில் சொல்லுற?”

 

“நான் உன்னோட ஃப்ரெண்ட் படி. அதுவும் இல்லாம ஒரு பொண்ணோட மனசு, இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்!”

 

“இந்த சினிமா டையலாக் உனக்கு செட்டாகல படி!” என மௌனி சிரிக்க, “ஒருவேளை ஆம்பளையோட மனசு ஆம்பளைக்குத் தெரிஞ்சிருக்லாம்!” என்ற ரஞ்சனி அதை தெரிந்து கொள்வதற்காகன ஆணைக் கண்களால் தேடினாள்.

 

“ஏய் யாரைப் பார்க்குற?”

 

“அருணை! அவரைப் பிடிச்சா, உன்னோட ஆளைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்ல?”

 

“அச்சச்சோ! அந்த அண்ணாக்கிட்ட இதை எல்லாம் கேட்பியா?”

 

“ஏன், கேட்டா என்ன?”

 

“படி! உன்னால மட்டும் எப்படி எல்லார்க்கூடவும் நார்மலா பேச முடியிது?”

 

“அது, காட் கிஃப்ட் படி. அதைத்தான் உனக்கும் கொஞ்சம் கொடுக்க டிரை பண்ணீட்டு இருக்கேன்! ஆளைக் காணோம படி! எங்கனு தெரியல.” எனப் பார்வையை அரங்கத்திற்குள் சுழற்றி உரைத்தாள்.

 

“ஏதாவது வேலையா வெளிய போயிருப்பாரு!”

 

“ம்ம்.. என்கிட்ட இப்படி உட்கார்ந்து கதை பேசுறதுக்குப் பதிலா, உன்னோட ஆளுக்கிட்ட போகலாம்ல.?”

 

“சரண் வேலையா இருக்காரு ரஞ்சு.”

 

“சோ வாட்.? போனா என்ன, கடிச்சிடுவாரா.? கடிச்சா பரவாயில்ல, நீ பதிலுக்குக் கிஸ் அடிச்சிரு!”

 

“நீ ரொம்ப கெட்ட பொண்ணாகிட்ட படி. வர வர என்னென்னமோ பேசுற!”

 

“அட ராமா! கிஸ் பண்ணுறது, கெட்டப் பழக்கமா? இன்னைக்கு நைட் அதைச் செய்யாம, வேற என்ன செய்யிறதா இருக்க?” என உரைத்து, தோழியை அனுப்பி வைத்தாள் ரஞ்சனி.

 

பிடிமானத்திற்காக அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்ட மௌனிகாவின் நெஞ்சுக்குள்ளே இதுவரை கல்யாண விழாவாக இருந்த இருவரின் உறவும், காதல் விழாவாக மாற்றம் அடைந்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்