Loading

அத்தியாயம் 36

 

 

“அதுக்கு நீயா டிஸைட் பண்ணி சுஷைட் அட்டன் பண்ணுவியா? லூசா நீ? நேர்ல கேட்டுட்டுல நீ ௭துவும் முடிவு பண்ணிருக்கனும் ” ஆறு திட்ட.

 

“கேட்டேன் ஆறு, சும்மா தான் பழகுனானாம், டைம் பாஸூக்குன்னு சொல்லிட்டு போய்ட்டான்”.

 

“அட ௭றும அப்டி பட்டவனுக்காக நீயும் ஒப்பாரி வச்சு உனக்கு ௭ல்லாரயும் ஒப்பாரி வைக்க வேற ட்ரை பண்ணிருக்க” லட்சு முறைக்க. 

 

“அதான!!! சரி நீ உண்மையா லவ் பண்ணிருக்க அதான் இவ்வளவு ஃபீல் பண்ற ஓ.கே ஆனா அதுக்கு அவே வொர்த்தானவனா இல்லயே, ஃப்ரீயா விட்டுட்டு அடுத்த வேலைய பாருடி” ஆறு அவளை தேத்த.

 

அவள் மேலும் அழ ஆரம்பிக்க, “ஹே விட்டுட்டு போனவனுக்காக இவ்வளவு ஃபீல் தேவையே இல்ல, நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல, அழாதடி” ௭ன இருவரும் சமாதானம் செய்ய.

 

“நா தப்பு பண்ணிட்டேன்டி, அவன நம்பி அவன் கூட வெளில போனப்போ ௭ன்னத்த குடுத்தான்னு தெரில, அற மயக்கத்துல அவன் இழுத்து இழுப்புக்குலா போயிட்டேன். அப்பகூட ‘நமக்கு நடுவுல நடக்க வேண்டியது தானம்மா’ன்னு ஆறுதலா பேசி கூட்டிட்டு வந்துட்டான், ஆனா நா அதுக்கப்புறம் அவன் கூட வெளிலயே வரலன்னு அடம் புடிச்சுருவேன் அதுல தான் சண்ட வர ஆரம்பிச்சது, அப்றம் விலக ஆரம்பிச்சான், காலேஜ் முடிச்சு மொத்தமா காணாம போயிட்டான், அவன தேடி திரிஞ்சு அவன் பிரண்டு மூலமா அவன பிடிச்சு கேட்டேன், சும்மா தான் பழகுனேன், நீ சரி பட்டு வரல ஒதுங்கிட்டேன், நா ஜாக்ரதையா தான் உன்ன தொட்டேன், நானும் நீயும் சொல்லாம அது வெளில தெரியாது, சோ ஃப்ரீயா விடு ன்னு சொல்லிட்டு போய்ட்டான், ௭னக்கு ௭ன்ன பண்ணனே தெரிலடி”.

 

இருவரும் திகைத்து நின்றுவிட அவள் அழுகை நடப்பிற்கு இழுத்து வந்தது. “அமல் நீ இதுல செய்றதுக்கு ஒன்னுமில்ல, நீ நம்புன அவேன் ஏமாத்திட்டான், அதுக்கு நீ ௭ந்த வகைலயும் பொறுப்பாக முடியாது அதுல இருந்து வெளில வர டைம் ௭டுக்கும், ஆனா உன்னால கண்டிப்பா வெளில வர முடியும். ரிலாக்ஸா இரு ஜாப்க்கு போய்ட்டு வா, மைண்ட்ட வேற ௭துலயும் செலுத்து, அவேன் தொட்டதுனால உன் புனிதம் ௭ங்கயும் போயிடல, தெரியாம சாணில கால வச்சுட்டதா நினச்சுக்கோ, கால கழுவிட்டு அடுத்து மூவ் ஆன், பத்தலயா அத மறக்கணும்னு நினச்சிட்டு ஒருக்கா தலையோடி குளிச்சிரு மொத்த அழுக்கும் போயிடும். ௭ப்பனாலும் ௭ங்களுக்கு கால் பண்ணு கஷ்டத்த ஷேர் பண்ணு, நீயா டிஸைட் பண்ணாத” ௭ன நீலமாக ஆறு பேசி நிறுத்த. 

 

“இப்ப ஃபீல் பெட்டர், யார்டயும் சொல்ல முடியாம தவிச்சிட்ருந்தேன், இப்ப வெளில சொல்லவும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. நா உன்னயும் சீனியரயும் தான் நினப்பேன் தெரியுமா, நம்ம செகண்ட் இயர் படிக்கும் போதே நீ சீனியர் கூப்ட்டாஙகன்னு ௭வ்வளவு நம்பிக்கையா வெளில போயிட்டு வந்த, அப்றமு காலேஜ் முடிச்சு பேசாம இருந்துட்டாங்களே அப்பவும் வெயிட் பண்ணியே, அதுமாறி தான் நமக்கும் நடக்கு, நாமளும் நம்ம லவ் பண்றவன நண்பனும்னு நம்பி போனே, அது தப்பா ஆறு” ௭ன அமலா நிறுத்த.

 

ஆறெழிலுக்கு கஷ்டமாக இருந்தது தப்பான உதாரணமாக இருந்து விட்டோமோ ௭ன்று. 

 

“லூசு நம்ம சீனியரும் அவனும் ஒன்னாடி, அவங்க ஜெம் பெர்சனாலிட்டி, அவங்க செய்றது ௭ல்லாத்லயும் ஆறுக்கான நல்லது தான் நிறைஞ்சு இருக்கும். வீடு வரைக்கும் போய் ஆண்ட்டி கிட்ட வாக்கு குடுத்தவங்க, அந்த தைரியத்துல தான் இரண்டு பேரும் ஊர சுத்துனாங்க அதுகூட இவ்வளவு பெரிய பிரிவ தாங்கனுமேன்ற ப்ரீ பிளானோட. அதயும் இதயும் சேக்ற நீ. லூசு நீ பண்ணதுலா லவ்வே இல்ல அப்டி ஒருத்தன பாத்ததயே மறக்க பாரு சொல்லிட்டேன். மேரேஜ் க்கு கண்டிப்பா முந்தின நாளே வர்ற, ௭க்கு தப்பா ௭தாது யோசிச்சுட்ருந்த நானே உனக்கு ௭லி மருந்து வச்சு குடுத்துருவேன்” லட்சுவின் பேச்சில் இருவர் முகத்திலும் சிரிப்பு வர, கட்டி கொண்டு சிறிது நேரம் வேறு வேறு பேசி அமலாவை சிரிக்க வைத்து வெளி வந்தனர். 

 

அவளுக்கு அக்கா இருப்பதால், அவருக்கு இப்போது தான் கல்யாணம் முடித்திருந்தனர். ஒரு வருஷம் கழிச்சு தான் இவளுக்கு முடிக்கணும் என்றார் அவள் அம்மா, ஃப்ரீயா அதுவரை சுற்றி வருவாள் அவள்.

 

“2 நாளுக்கு லீவ் எடுத்துட்டு வந்து சேரு” என்ற மிரட்டலுடன் விடைபெற்றனர்.

 

அன்றைய தினம் அங்கேயே கழிந்துவிட, வீட்டிற்கு திரும்ப முடிவெடுத்து லட்சு வீடு சென்று அவளை விட்டுவிட்டு ஸ்கூட்டியை ௭டுத்து கிளம்பினர் தாயும் மகளும்.

 

அடுத்த நாள், நிலா வீட்டிற்கு வைக்கும் முடிவில், அவளை முன்தினமே கிளம்பி அம்மா வீட்டுக்கு வர சொல்லிவிட்டே, கிளம்பி சென்றாள். அடுத்து அங்கிருந்தே அவளையும் அழைத்துக் கொண்டே, அவள் மாமியார் வீட்டுக்கும் சென்று வைத்தாள். நிலா கணவரிடமும், அவளும் அவரும் முன்தினம் பெர்மிஷனாக வர சொல்லிக் கேக்க, “கண்டிப்பா முந்தின நாளே அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

 

“இல்ல நீங்களும் வாங்க, நல்லா என்ஜாய் பண்ணலாம்” என அவரையும் அழைத்து கிளம்பினாள் ஆறு.

 

பின் வைரம், தாணு பேரெண்ட்ஸ் எல்லாம் வேறு வேறு ஊரில் இருப்பதால் ப்ரகலத்தனை வைக்கச் சொல்லிவிட்டு, அவளும், அம்மாவும் போனில் அழைத்தனர். மூர்த்தி, அகத்தியன், நாது வீட்டிற்கு சென்று வைத்துவிட்டனர்.

 

நாட்கள் செல்ல கல்யாணத்துக்கு முந்தின நாள் எல்லாம் கூடி விட்டனர். பல நாள் கழித்து கூடிய நட்பு அதிக சந்தோஷத்தை கொடுத்தது. வேலைக்கு நடுவில் மைண்ட் ரிலாக்ஸா உணர்ந்தனர். வைரம், லட்சுவை வால் பிடித்து சுத்தி வந்தான் கிடைத்த வாய்ப்பை விட முடியாமல்.

 

ஓவர் குஷியில், “சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்” என பாட்டு வேற அவள் அப்பா முன் பாட, “எங்கப்பாட்ட இருந்து செருப்பு வரும்” என பதில் கொடுத்து முறைத்தாள் லட்சு.

 

“லட்சு இப்டி சிம்பாலிக்கா தான் தெரியப்படுத்த முடியும். நீயும் சொல்ல மாட்டேங்குற, அவனையும் சிக்னல் காட்ட விட மாட்டேங்குற” என்றான் மூர்த்தி.

 

இவர்கள் சுற்றி நின்று இப்படி கொட்டம் அடிக்க, நடுவில் ஆறெழிலும், ப்ரகலத்தனும் நிச்சயத்திற்கு ரெடியாகி வந்தமர்ந்திருந்தனர். நலங்கு ஒரு பக்கம் நடக்க, மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டு இடத்தை கலகலப்பாக வைத்திருந்தனர்.

 

ஐந்து வருடத்திற்கு முன், மைசூரில் எடுத்த புடவையையே இரு அம்மாக்களும் ஒன்னுபோல் கட்டியிருந்தனர். கட்ட வைத்தனர், ஆறுவும், ப்ரகலத்தனும். அதில் வந்தவர்கள் எல்லாம் என்ன சம்பந்திமார் ரெண்டு பேரும் ஒன்னு போல கட்டியிருக்கீங்க, அவ்வளவு ஒத்துமையா, ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு என புகழ்ந்ததில், இனி ஒதுங்கி ஒதுங்கி நின்றால் நல்லா இருக்காது என சேர்ந்து எல்லாவற்றையும் செய்தனர்.

 

மணமக்கள் இருவரும் காதல் கைகூடிய சந்தோசத்தில் பரவசத்தில் இருந்தனர். அன்று ஈவினிங், அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ்ஸில் கிளம்பினர். ஜெயந்தியின் பக்கம் கொஞ்ச சொந்தங்களும், அவர் அம்மா அப்பாவும் தான் என்பதால் ஒரே பஸ்ஸில் கிளம்பினர். 

 

வானரங்கள் எல்லாம் ஒன்றுகூடி அந்தாக்ஷரி, தம்ஷரத் என விளையாடிக் கொண்டு வந்தனர். இரவில் அங்கு சென்று சேர 9 மணியை கடந்து விட்டிருந்தது.

 

அங்கு 2, 3 வீடுகளை தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர் ப்ரகலத்தனின் பெற்றோர். அதில் ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்துதான் தங்குவோம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய, “பொண்ணும், மாப்பிள்ளையும் ஒரே வீட்டுலயா” என வாயில் கை வைத்தனர் அந்த ஊர்க்காரர்கள்.

 

“முடியவே முடியாது” என சொந்தங்கள் மறுக்க, “சரி ஒரு ரெண்டு மணி நேரம் அப்டியே என்ஜாய் பண்ணிட்டு பொண்ணுங்க எல்லாம் அங்க வந்துடுறோம்” என்றது நண்பர்கள் குழு.

 

அதற்கும் “காலையில கல்யாணத்த வச்சுக்கிட்டு எதுக்கு இந்நேரம் முழிச்சுகிட்டு, வந்த அலுப்பு இருக்கும்ல” என்றனர்.

 

“ரொம்ப நாள் கழிச்சு சேந்திருக்கோம், நாளைக்கு ஒரு நாள் தான், அப்றம் வேல, ஃபேமிலின்னு  ஓடணும். கிடச்ச இன்னைக்கு நேரத்த கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கிறோமே” நாது ரொம்ப பீலிங்காக சொல்ல.

 

“சரி கொஞ்ச நேரம் இருந்துட்டு போட்டும், நாம காலைல கல்யாணத்துக்கு ஆகுற வேலைய பாப்போம். பெரிய புள்ளைக தான, அதுகளுக்குத் தெரியாததா” என பெரியவர் ஒருவர் சொன்ன பின்பு தான் இவர்களை விட்டு கிளம்பினர்.

 

அதன் பின்பு நாதுவை எல்லாம் தூக்கி சுற்றி ஒரு ஆட்டம் ஆடி, சுற்றி உட்கார்ந்து பல கதைகள் பேசி, லேசாக தூக்கம் வருகையில், “ஹே டான்ஸ் ஆடலாம் அப்போ தூக்கம் வராது” என வைரம் சொல்ல, “ஆமா ஆமா நீயும் லட்சும் ஆடுங்க, நாங்க பாக்குறோம்” என அகத்தியன் சொல்ல, “ஒய் நாட்? வா லட்சு” என்க.

 

அவள் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலை தூக்கி அவன்மீது வீசினாள். “ஹே சும்மா ஆடுடி, ரொம்ப வெட்கப்படாத” என ஆறு சொல்ல.

 

“ஃபஸ்ட் நீயும் உன் ஆத்துக்காரரும் ஆடுங்க, அப்புறம் நா ஆடுறேன்” என்றாள் லட்சு அவள் ஆட மாட்டாள் என்ற தைரியத்தில்.

 

“சேலைய கட்டிட்டு எப்டி ஆடுறது?” ஆறு ௭ஸ்கேப் ஆக ட்ரை பண்ண.

 

“என்ன பாஸ் கிடைச்ச சான்ஸ மிஸ் பண்றீங்க?” என வைரம் ப்ரகலத்தனை ஏத்தி விட, “வா எழில் நா புடிச்சுக்குறேன். நாம ஆடிட்டு இதுகள ஆட வைப்போம்” என எழ.

 

“என்ன இப்டி பொசுக்குன்னு எழுந்துட்டாங்க” என்றுதான் பார்த்தாள் ஆறு. எல்லோரும் “ஹோ” என கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, இருவரும், “திரும்பத் திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி” பாட்டுக்கு ஒருவாறு மேனேஜ் செய்து ஆடினர்.

 

அழகாக பொருத்தமாக, நளினமாக ஆடினர். மறுபடியும் கைதட்டி, கத்தி பாராட்டினர் அவர்கள் கெமிஸ்ட்ரியை.

 

பின்னர் நிலாவை ஆட சொல்ல, அவள் கணவர் முடியவே முடியாது என மறுத்துவிட, அடுத்ததாக லட்சுவையும், வைரத்தையும் வற்புறுத்தி ஆட வைத்தனர். அவள் ஆடியதை விட அவனை அவள் அடித்ததே அதிகம்.

 

“பாத்துக்க இன்னுமு உனக்கு வாய்ப்பிருக்கு தப்பிச்சுக்க, இல்லனா இப்டிதான் வாழ்க்க பூராவும் அடி வாங்க வேண்டியிருக்கும்” என்றான் முன்னெச்சரிக்கையாக நாது. 

 

“விடுங்க சீனியர் காதலுக்காக எந்த அடியையும் தாங்குவோம்” என்றான் வைரம்.

 

“விதி யார விட்டது” என்ற மூர்த்தி, “பொண்ணுங்க எல்லாம் ரொம்ப சீன் போடுறீங்க ஆடுறதுக்கு. நாங்க பசங்க எப்டி ஆடுறோம்ன்னு பாத்துக் கத்துக்கோங்க” என்றான் சேர்த்து.

 

ஆரவாரமாக எல்லாம் எழுந்தது. பாட்டை தேடினர். பின் ஒரு முடிவாக, ‘நெருப்பு கூத்தடிக்குது காத்தும் சேத்தடிக்குது’ பாட்டிற்கு ஆட, பாதி பாட்டில் பெண்களும் சேர்ந்து கொண்டனர்.

 

உன் கண்ணில் ஈரம் கண்டேன் 

என் மனதில் எங்கோ வலிக்குது 

முகம் சாய விழி மூட

இந்த நண்பன் தோழ்கள் இருக்குது 

இந்த வானம் அது விண்ணில் 

அடி வேடிக்கைகள் காட்டுது 

சொத்து பத்து சேர்த்தவனும்

பொகையா தான் வாழுறான் 

வாழ்க்கையில் வரைமுறை எதடி 

அட வாழ்க்கை தான் கட்டி வச்சது யாரடி 

 

 

நெருப்பு கூத்தடிக்குது ….

 

நிலா ஹஸ்பண்டையும் ஆட வைத்துவிட்டிருந்தனர். 

 

அதிகாலை 3 மணி வரை ஆடி விட்டு, அந்த டயர்டில் தான் அங்கங்கு படுத்து உறங்கினர். தலைக்கு தலையணையும் இல்லை, விரிக்க போர்வையும் இல்லை, அது வீட்டின் முன்னறை பல சாமான்கள் கடந்தது, மனது நிறைய இருந்த சந்தோஷம், போட்ட ஆட்டம், இடம், பொருள், ஏவல் இன்றி தூங்க வைத்தது.

 

காலை 6:00 மணி ஜெயந்தி வந்து இவர்கள் கடந்ததை பார்த்துவிட்டு தலையிலடித்துக்கொண்டார்.

 

‘யாராவது வந்து பார்த்து, ஏதும்  பேசும் முன்ன எழுப்பி விடணும்’ என நினைத்தவர், “எந்திரிங்க பிள்ளைகளா, ஒவ்வொருத்தரா குளிச்சு கிளம்பணும்ல சீக்கிரம். எந்நேரம் வர ஆட்டம் போட்டீங்க, ஆளுதான் வளந்துருக்குதுகளே தவிர, பொறுப்பு இன்னும் வரல” என திட்டிக்கொண்டே எல்லோரையும் அடித்து எழுப்பினார்.

 

“ரொம்ப டயர்டா இருக்கும்மா, நா இன்னைக்கு காலேஜ் போல” என திரும்பி படுத்தாள் எழில்.

 

பக்கத்தில் படுத்திருந்த லட்சு, “அப்ப சீனியர்க்கு வேற பொண்ணா பாத்து கட்டி வச்சிடலாம் ஆண்ட்டி, அவ தூங்கட்டும்” என்க.

 

தனக்கு இன்னைக்கு கல்யாணம் என்பது மூளைக்கு உறைக்க, வேகமாக எழுந்தமர்ந்தாள். திரும்பி ப்ரகலத்தனை பார்க்க அவனும் சற்று தள்ளி தான் படுத்திருந்தான். ஒரு சைடாக படுத்து தலையை தாங்கி அவளை பார்த்திருந்தான், அவள் திரும்பவும் ஒரு கண்ணை சிமிட்டி வாய் குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்ப, வேகமாக திரும்பி கொண்டாள்.

 

எல்லோரும் சிரிக்க, “மாப்பிளைக்கு அந்தக் கொடுப்பனலா இந்த ஜென்மத்துல கிடைக்காது” அகத்தியன் சொல்ல, பிரசங்கம் ஆரம்பமானது.

 

“சரி சரி போதும், கிளம்புங்க யாருக்கெல்லாம் வெண்ணி வேணும், மொதல்ல எழில் போய் குளி சேல கட்டி மேக்கப் போட லேட்டாகும்” என்க, எழுந்து அவள் தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு கிளம்ப, மற்ற எல்லாம் அரட்டையோடு பிரெஷைத் தேட ஆரம்பித்தது.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 47

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
46
+1
5
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்