
அத்தியாயம் 35
அந்த பெரியத் திருமண மண்டபமே களைக் கட்டி இருந்தது.
இளம்பரிதி vs நிரஞ்சனா மற்றும் இனியன் vs வைஷ்ணவி என்று மண்டபத்தின் வாசலில் பெயர் பலகை வைக்கப்பட்டு, திருமணத்திற்கு வருபவரை வரவேற்றுக் கொண்டிருந்தது.
மண்டபத்தின் நடுவில் இருக்கும் மேடையில், ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.
“பொண்ணு மாப்பிள்ளையை கூப்பிடுங்கோ..” என்று ஐயர் கூற,
மல்லிகா மற்றும் உறவினர் இரு மணப்பெண்களையும் அழைத்து வந்தனர்.
நிரஞ்சனா, பரிதி தேர்வு செய்த மாம்பழ நிறப் பட்டையும், வைஷு இனியன் தேர்வு செய்த ராமர் பச்சை நிறப் பட்டையும் அணிந்து, அழகு சாதன பெண்களின் உபயத்தால் மேலும் மெருகேறி தேவதைப் போல இரு பெண்களும் வர, அதற்கு நிகராக இரு ஆண் மகன்களும் கம்பீரமாய் வந்து அமர்ந்தனர்.
என்னதான் கம்பீரமாய் இருந்தாலும் அவர்களின் தேவதைகளைப் பார்த்து சொக்கித் தான் போயினர்.
மணப் பெண்கள் இருவரும் அவர் அவர் துணைகளின் அருகில் வந்து உட்கார்ந்து, வந்திருக்கும் பெரியோர்களுக்கு வணக்கத்தை இருவருமாக சேர்ந்து கூறினர்.
மணமக்களை சடங்கு சம்பிராதாயம் என, அனைத்தையும் முடித்து விட்டு, ஐயர் “கெட்டி மேளம் கெட்டி மேளம்..” என்று முழக்கமிட,
பரிதி, நிரஞ்சனாவின் கழுத்திலும், இனியன் வைஷ்ணவியின் கழுத்திலுக்கு மங்கள நாணை அணிவித்து மூன்று முடிச்சு இட்டனர்.
இரு மாப்பிள்ளைகளும் தங்களது துணைவியாருக்கு நெற்றி வகிட்டிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் வைத்து விட்டு, பின் அக்னியை வலம் வந்தனர்.
பின்னர் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தங்களது இனிய அழகான தருணத்தை புகைப்படமாக எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மணமக்களை வீட்டிற்கு அழைத்து வர, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்து பூஜை அறையில் இரு பெண்களையும் விளக்கேற்றச் சொல்லி விட்டு, மணமகன்கள் மற்றும் மணப் பெண்களை தனித் தனியாக ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தனர்.
காலையில் வெகு சீக்கிரம் எழுந்ததால், சோர்வாக இருக்க நால்வரும் சிறிது நேரம் கண் அயர்ந்தனர்.
மாலை போல எழுந்து மணமக்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, சாதாரண உடையில் அறையில் இருந்து வந்தனர்.
பரிதி நிரஞ்சனாவைப் பார்த்து தலை அசைத்து அருகினில் வாவென அழைக்க, அவளும் அவனின் அருகில் சென்று அவன் கைகளுக்குள் தன் கையை நுழைத்துக் கொண்டாள்.
முன்னால் சென்ற வைஷு, பின்னால் வந்த அக்காவை எங்கே என்று தேட, அவளோ தன் மாமனுடன் கை கோர்த்து இருப்பதைப் பார்த்து, “அடிப்பாவி..” என்று வாயில் கையை வைத்துக்கொண்டாள்.
அவளை பின்னிருந்து தோளோடு அணைத்த இனியன், “நீ ஏன்டி வாயில கையை வைக்கிற.. அவங்க புருஷன் பொண்டாட்டி சேந்து போகட்டும். நம்ம போவோம்..” என்று சொல்லியபடி அவளோடு சேர்ந்து கீழே செல்ல, பெரியவர்கள் பார்க்கும் போது அவளது தோளில் இருந்து கையை எடுத்துக் கொண்டான் இனியன்.
நிரஞ்சனாவும் பரிதியை விட்டு சற்று தள்ளி வர, ஆனால் பரிதி விடவில்லை. அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
மாலை சிற்றுண்டி எடுத்து விட்டு, சிறிது நேரம் அங்கு அமர்ந்து பேசியவரகள் பின் மல்லிகா, “வைஷு நிரஞ்சனா ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க ம்மா..” என்றார்.
போகும் இரு பெண்களையும் ஆடவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.
இனியன் மற்றும் பரிதியின் அறையில், முதல் இரவுக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
சிறிது நேரம் கீழ் இருந்து பேசிய இனியனும் பரிதியும், வேறு அறைக்குச் சென்று அங்கு அவர்கள் குளித்து ரெடி ஆக ஆரம்பித்தனர்.
அதற்கு முன் பரிதி, அவனது அறைக்குச் சென்று அவளுக்கு ஏற்கனவே அவன் எடுத்து வைத்து இருந்த மெரூன் நிற மெல்லிய புடவையை எடுத்துக் கொண்டு அவளது அறை நோக்கிச் சென்றான்.
கதவை தட்டி விட்டு வெளியில் காத்துக் கொண்டு இருக்க, வைஷு தான் கதவை திறந்தாள்.
பரிதி நிற்பதைப் பார்த்து, “என்ன மாமா.. அதுக்குள்ள அவசரம்.. இங்கயே வந்துடீங்க..”என்று கிண்டல் அடிக்க,
அவனோ, ஒரு புன்னகையுடன், “இந்த புடவையை நிரஞ்சனா கிட்ட கொடு..” என்று அவளிடம் கொடுக்க, அவளோ, “ஆஹான்.. இதுக்குன்னு தனியா செலக்ட் பண்ணி இருக்கீங்க போல.. ம்ம்ம் ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க..” என்று அவள் கூற,
அவனோ ஒரு புன்னகையுடன் தலையைக் கோதியபடி அங்கிருந்து நகர்ந்தான்.
வைஷு அந்த புடவையை நிரஞ்சனாவிடம் சென்று கொடுக்க, அவளும் சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.
அவளும் வெளியில் இருவரது சம்பாசனைகளை கேட்டுக் கொண்டு தானே இருந்தாள். அது தான் தங்கையிடம் எதுவும் கேட்காமல் வாங்கிக் கொண்டாள்.
பெண்கள் இருவரும் தயாராகி இருந்தனர்.
வைஷு, நிரஞ்சனாவிடம், “அக்கா.. இந்த சாரீல செமயா இருக்க. அதுனால தான் மாமா உனக்கு செலக்ட் பண்ணி இருக்காரு. இப்போ மட்டும் உன்ன பார்த்தாரு அப்படியே தூக்கிட்டு போய்டுவாரு..” என்று தமக்கையை கிண்டல் அடித்து பேசிக் கொண்டிருந்தாள்.
“ச்சி. போடி..சும்மா இரு.. நீ மட்டும் என்னவாம். இந்த சந்தன நிற புடவைல தேவதை போல இருக்க..” என்றாள் நிரஞ்சனா..
“அது சரி.. நீ சொல்லி என்ன பண்ண.. அது என் புருஷன் சொல்லணுமே…” என்று சலித்த படி அவள் கூறினாள்.
“அது எல்லாம் சொல்லுவாரு.. சொல்றதோட மட்டும் நிப்பாட்ட மாட்டாரு. அதுக்கு மேலயும் பண்ணுவாரு..” என்று நிரஞ்சனா தங்கை அவளுக்கு கூற,
பெண்ணவளோ, ” ச்சி.. போக்கா.. ” என்று வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.
சகோதரிகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மல்லிகா அங்கே வந்தார்.
பெண்கள் இருவரையும் பார்த்த அவர், “அடடா.. என் பிள்ளைங்க எவ்ளோ அழகா இருக்கீங்க.. சுத்திப் போடணும் உங்களுக்கு. என் கண்ணே பட்டுடும்..” என்று கூறி விட்டு,”வாங்க கீழ போலாம். அண்ணி வரச் சொன்னாங்க.. ” என்று கூறியவர், அவர்களை கையோடு அழைத்துச் சென்றார்.
கீழே பூஜை அறையின் முன் மங்களம் விநாயகம் பரிதி மற்றும் இனியன் இருக்க, இப்பொழுது இவர்கள் மூவரும் வந்து அவர்களோடு நின்று கொண்டனர்.
இரு ஜோடிகளுக்கும், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொண்டு, பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
“பசங்களா.. நீங்க உங்க ரூம்முக்கு போங்க.. பொண்ணுங்களை அனுப்பி வைக்கிறேன்..” என்று மங்களம் தன் மகன்களிடம் கூற, அவர்களும் அங்கிருந்து நகன்று அவர் அவர் அறைகளுக்குச் சென்றனர்.
பெண்கள் இருவரிடமும், “உங்களுக்கு நான் எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்லை. உங்களுக்கே எல்லாம் தெரியும். சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிங்க..”என்று மங்களம் அவரிடம் கூற, மல்லிகா பால் நிரம்பிய சொம்பை இருவரிடமும் கொடுத்தார்.
அக்கா தங்கை இருவரும் ஒருவருக்கு ஒருவர்,”ஆல் தி பெஸ்ட்..” என்று புன்னகையுடன் கூறிக்கொண்டனர்.
நிரஞ்சனா பரிதியின் அறைக்குச் செல்ல, வைஷு இனியனின் அறைக்குச் சென்றாள்.
நிரஞ்சனா, பரிதியின் அறைக்குள் நுழையும் முன்னே, அங்கே குழல் விளக்குகள் அனைக்கப்பட்டு மெல்லிய மஞ்சள் நிற விளக்குகள் போடப்பட்டு இருந்தன.
அதுவும் இல்லாமல் ஆங்காங்கு வாசனை மெழுகுவர்த்திகள் வேறு தன்னை உருக்கி, வெளிச்சத்தையும் நறுமணத்தையும் அந்த அறை முழுதும் பரப்பிக் கொண்டு இருந்தது.
இது எல்லாம் பரிதியின் வேலை என்று நன்றாக புரிந்தது அவளுக்கு.
“ரசனைகாரர் தான் போலயே..” என்று தனக்குள் பேசியவள், அவனைத் தேட, அவன் அப்பொழுது தான் பால்கனி பக்கம் இருந்து அறைக்குள் வந்து கொண்டிருந்தான்.
அவளை பார்வையாலேயே விழுங்கியவாரு அவளின் அருகில் வர, அவளோ அவனைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
பால் சொம்பை அவளின் கையில் இருந்து வாங்கி, அருகில் இருந்த டேபிளின் மீது வைத்தவன் அவளின் மோவாயை நிமிர்த்தி அவனை பார்க்கச் செய்தான்.
இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று கலக்க, அவளின் கன்னத்தை பிடித்து, “நீ கனவுல கண்டது எல்லாம் இப்போ நிஜமா ஆரம்பிக்கலாமா பொண்டாட்டி..” என்று கேட்டிட,
அவளோ வெட்கத்தில் அவனுக்கு.
முதுகு காட்டி நின்றிட, அவனோ அவள் கூந்தலை விலக்கி, அவள் முதுகினில் தன் இதழ்களை பதித்தான்.
பூவையவளின் மெல்லிய உடல் அவனது முத்தத்தில் சிலிர்த்து அடங்கியது.
முதுகில் இருந்து மேலேறி அவளது பின் கழுத்தில் முத்தமிட்டு அவளை மேலும் வதைத்தான் ஆடவன்.
மெல்ல அவளைத் திருப்பி, “ஆரம்பிக்கலாமா பொண்டாட்டி.. ” என்று அவளின் சம்மதத்தை நாட, அவளோ அவன் மார்பினில் சாய்ந்து அவள் சம்மதத்தை தெரிவித்தாள்.
சொல்ல வேண்டுமா அடுத்து ஆடவனுக்கு.
பெண்ணவளை பூ போல அள்ளி அவனின் கைகளில் ஏந்தியவன் மஞ்சத்தில் கிடத்திட, அவளின் மேல் கிடந்தான் காளையவன்.
அவளின் பிறை நெற்றியில் முத்தம் இட்டு, கீழ் இறங்கி அவளின் நாசி வழியாக இதழ்களை அடைந்து, அங்கு அவனது அச்சராத்தை பதித்து விட்டு, அவளது சங்கு கழுத்தினில் அவனது முகம் புதைத்தான்.
உணர்ச்சிப் பெருக்கில் இருவரும் திளைக்க, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆடையாய் மாறிட, அவரது உடைகளோ ஆதரவின்றி அனாதையாய் கிடந்தன.
அவனுடைய இதழ்கள் அவளது உடலை அங்குலம் அங்குலமாக அளந்து, அவனது ஆண்மையை அவளுக்குள் நிலை நாட்டினான் ஆடவன்.
பிறகு என்ன, அவர்களின் இல்லற வாழ்க்கை இனிதே ஆரம்பம் ஆனது.
இங்கு இவர்கள் காமலோகத்தில் திளைத்து கொண்டிருக்க,
அங்கே வைஷு, இனியனின் அறைக்குள் நுழைந்து கதவை தாழ்ப்பாள் போட்டுத் திரும்ப, அவனோ தூங்கிக் கொண்டிருந்தான்.
“அடப்பாவி மாமா இப்படி தூங்கிட்டியேடா.. ச்ச.. நான் என்ன என்ன நெனச்சிட்டு வந்தேன். இவன் என்னடானா படுத்துட்டு இருக்கான். அப்போ இன்னைக்கு போச்சா..” என்று வாய் விட்டு புலம்பியவள், அவனது அருகில் வந்துப் பார்க்க,
அவனோ சீராக மூச்சு விடுவதில், அவன் உறங்கி விட்டான் என்று தெரிந்தது.
சிறிது நேரம் அவனைப் பார்த்தவள், “முதல்லேயே தூங்க போறேன்னு சொல்லி இருந்தா இப்படி எல்லாம் அலங்காரம் பண்ணிட்டு வந்து இருக்க மாட்டேன்.” என்று உறங்கிக் கொண்டிருக்கும் இனியனைப் பார்த்து கூறியவள், அவனது தலை முடியை கோதி விட்டு, அவனது நெற்றியில் முத்தம் இட்டு, பால் சொம்பை ஓரத்தில் இருக்கும் டேபிளின் மீது வைத்தவள், குழல் விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை போட்டு விட்டு வந்து அவனின் அருகில் படுத்துக் கொண்டாள்.
அவளுக்கு தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டிருக்க, அவளது வயிற்றில் ஏதோ மெல்ல மெல்ல ஊர்வது போல இருக்க, என்னவென்று பார்க்கலாம் என்று கண்களை திறக்க, அவள் சுதாரிக்கும் முன்னே, அவளை அப்படியே தன்னோடு சேர்த்து நெருக்கி கொண்டான்.
“ஹே.. நீ இன்னும் தூங்கலையாடா..” என்று இனியனைப் பார்த்து கேட்டாள்.
அவனோ, “ஹுஹும்.. இல்லை. நீ என்ன பண்றேன்னு பாக்கத்தான் சும்மா தூங்குன மாதிரி நடிச்சேன்..” என்றான்.
“ம்ம்ம். என்ன பண்ணிருப்பேன். நீ தூங்குறதை பார்த்துட்டே இருந்து கொஞ்ச நேரத்துல நானும் படுத்து இருப்பேன்..” என்றாள் அவள்.
“ஏன் என்னை எழுப்பணும்னு உனக்கு தோணலையா..” என்று அவன் ஒரு மாதிரி குரலில் கேட்டான்.
அவளோ, “தோணல. தூங்கட்டும்னு தான் விட்டுட்டேன். இன்னைக்கு இல்லனா நாளைக்கு. இதுனால என்ன ஆகிறப் போகுது. ” என்று அவனின் மார்பில் நன்றாக சாய்ந்தவாரு கூற,
“ஆனால் நான் நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ண மாட்டேன்.” என்று மோகத்துடன் கூறியவன், அவளின் ஆடைகளுக்கு ஒவ்வொன்றாக விடுதலை கொடுக்க ஆரம்பித்தான்.
அவளோ கூச்சத்தில் கைகளை கொண்டு உடலை மறைக்க,
அவனே அவளுக்கு ஆடையாகிப் போனான்.
ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கண்டு உணர்ந்து, தீராத ஆசையை தீர்த்துக் கொண்டிருந்தனர்.
இரவு முழுவதும் இரு ஜோடிகளும் இல்லறப் பாடத்தில் அடுத்தடுத்த நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இது இன்றோடு முடிவதில்லை. தினம் தினம் தொடரும் முடிவில்லாத தொடர்கதை.
சில வருடங்களுக்குப் பிறகு…
“ஏங்க.. பையனை குளிப்பாட்டியாச்சா.. பாப்பா என்ன பண்ணுறா.. அவ எந்திரிச்சிட்டானா அவளையும் குளிப்பாட்டி விடுங்க..” என்று சாப்பிட்டுக் கொண்டே தன் கணவன் இனியனுக்கு வேலைகளை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“அது எல்லாம் முடியாது. அவ எந்திரிக்கிற வரைக்கும் எனக்கு டைம் இல்லை. நான் ஆபீஸ் போகணும்..” என்றான் அவன்.
“எதுக்கு உங்க செல்லமக உங்களைத் தான் தேடுவா. நீங்க இல்லனா அவ்ளோதான்.” என்று வயிற்றில் கருவை வைத்துக்கொண்டு அவனிடம் கூறிக்கொண்டு இருந்தாள்.
ஆம் முதலில் இரட்டைப் பிள்ளைகள். ஆண் ஒன்று. பெண் ஒன்று என ஒரே பிரசவத்தில் இரு குழந்தைகள்.
அதோடு போதும் என சொல்லியவளுக்கு இதோ அடுத்து ஒரு குட்டியை கொடுத்து விட்டான் கள்வன்.
“வைஷு.. இங்க பாரு. எனக்கு இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நீ பாப்பா எந்திரிச்சா அவளை அவ பெரியம்மாகிட்ட அனுப்பி வச்சிரு. அவங்க பார்த்துப்பாங்க..” என்று கூறியவன், “சரி பார்த்து இரு.. நான் போய்ட்டு சீக்கிரம். வந்துருறேன். ஈவினிங் செக்கப் போலாம். லவ் யூ டி..” என்று கூறி விட்டு அங்கிருந்து அலுவலகம் நோக்கி கிளம்பினான்.
இங்கே இப்படி என்றால், “அம்மு.. என் வாட்ச் எங்க.. என் டை எங்க இருக்கு.. என் போன் எடுத்துக் கொடு..” என்று அனைத்திற்க்கும் அவளை நாட, பாவம் பெண்ணவள் தான் திண்டாடிப் போனாள்.
“ஏங்க.. இங்க தானே இருக்கு. இதை நீங்களே எடுத்துக்க கூடாதா.. காலைல எந்திரிச்சி குளிப்பாட்டி விடுறதுல இருந்து நீங்க நைட் தூங்குற வரைக்கும் இப்படி எல்லாத்துக்கும் என்னையே கூப்பிடுறீங்க. உங்களுக்கே இது ஓவரா இல்லையா..
அங்க பாருங்க.. பசங்க ரெண்டு பேரும் அவனுங்க கூட அவங்க வேலையை அவங்களா பார்த்துகிறாங்க. நீங்க ஏங்க இப்படி..” என்று தன் கணவன் பரிதியிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.
அவர்களின் இரு புதல்வர்களும், “அப்பா.. அம்மா பாவம் ப்பா.. எதுக்கு எல்லாத்துக்கும் அம்மாவையே கூப்பிடுறீங்க. நாங்க கூட எங்க வேலைய நாங்களே பார்த்துகிறோம். நீங்க எவ்ளோ பிக் கா இருக்கீங்க எங்கள விட. அப்போ நீங்க பார்த்துக்க வேண்டியது தானே.. நீங்க ரொம்ப மோசம். இருங்க நான் போய் பாட்டிகிட்ட உங்கள பத்தி சொல்றேன்.” என்று இரு வாண்டுகள் மழலை மொழியில் தன் தந்தையிடம் முறையிட்டு விட்டு அங்கிருந்து ஓடின,
அதனைப் பார்த்து சிரித்த பரிதியோ, தான் மனயாளின் கையைப் பிடித்து அருகில் இழுத்து மடியில் அமர வைத்தவன், ‘சரி அவங்களுக்கு எதுவும் தெரியாது. உனக்குமா தெரியாது நான் எதுக்கு இப்படி இருக்கேனு.. ” என்று அவன் கேட்க,
“ஏங்க.. இருந்தாலும் நீங்க பண்றது கொஞ்சம் ஓவர் தான்” என்றாள் அவனின் மார்பில் சாய்ந்தவாரு.”
“அது எல்லாம் இல்லை. ஒவ்வொரு நித்தமும் நீ எனக்கு வேணும் டி. இப்போ மட்டும் இல்லை. எனக்கு வயசான கிழவன் ஆனால் கூட, அப்பவும் நான் உன்னைத்தான் தேடுவேன்.
ஒவ்வொரு நித்தமும் நீ எனக்கு வேணும்னு தான் ஆசைப்பட்டேன். அது தான் நடந்துட்டு இருக்கு.
“அது சரி.. ஆனால் கொஞ்ச நாளைக்கு அதை அடக்கி வைங்க..” என்றாள் நிரஞ்சனா.
“ஏன் என்ன ஆச்சு..” என்று கேட்டான்.
“நீங்க மக வேணும்னு ஆசைப்பட்டீங்களே.. அது நடந்துருச்சு..” என்று அவள் வெட்கத்துடன் கூற,
“வாவ்…” என்று உற்சாகத்தில் கத்தியவன் அவளை தட்டாமலைச் சுற்றினான்.
“அட.. தலை சுத்துது மாமா.. இறக்கி விடுங்க..” என்றிட, மெல்ல கீழே இறக்கி விட்டவன், “சரி வா.. இந்த விஷயத்தை மத்தவங்ககிட்ட சொல்லிட்டு, அப்படியே ஹாஸ்பிடல் போய்ட்டு செக்கப்க்குப் போய்ட்டு வரலாம்..” என்று அழைத்துச் சென்றான்.
இன்று மட்டும் அல்ல. என்றும் அவர்கள் வளமுடமும் நலமுடனும் வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன்.
நன்றி 🙏🙏🙏🙏
நித்தமும் வருவாள் என்றும்..
சுபம்.. 💐💐💐
