
பிறை -34
மாலை கருமேகங்கள் கூடி .. இடி மின்னலுடன் மழை வெளுக்க தொடங்கியது. மாலை அவனோடு வெளியே செல்வதற்கு பார்த்து பார்த்து தயாராகிய அவளுக்கு சற்று ஏமாற்றமாக தான் இருந்தது.
அவன் சேலை அணிய வேண்டாம் என கூறியதாலேயே, வேண்டுமென்று அழகான ஒரு புடவையை அணிந்திருந்தாள் பிறை. ஏனோ அவனை வெறுப்பேற்றி பார்ப்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.
மீனாட்சியின் துணையோடு அழகாக புடவை அணிந்து தயாராகி இருந்தாள் பிறை. பலத்த மழையில் அவனும் வீடு வருவது கடினம்.. இவளும் வெளியேறுவது கடினம் என்ற நிலையில் அமைதியாக ஹாலில் அமர்ந்து விட்டாள்.
” அதுசரி உங்க மகன் கூட்டிட்டு போறேன்னு சொன்னதே அதிசயம்.. அதுனால தான் வானத்துக்கே பொறுக்காம பொத்துக்கிட்டு ஊத்துது போல ” மீனாட்சி மகனை வார.. பேப்பரில் இருந்து தலையை நீட்டிய திவாகர்.. ” உன்னோட கணிப்பு எல்லாமே தப்பு மீனு.. அவன் அப்படியே என்ன மாதிரி” திவாகர் கூறியதும்.. சட்டென தனது மாமனாரை நிமிர்ந்து பார்த்தாள் பிறை.
மருமகளின் பார்வையை உணர்ந்தவர்.. ” நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல மா.. நீ என்ன நினைக்குறன்னு எனக்கு தெரியல.. நீ பார்க்கிறதா பார்த்தா அந்த பய ஏதோ வில்லங்கம் பண்ணிருக்கான் போல.. ” சரியாக கணித்த மாமனாரை வியந்து பார்த்தவள்.. சிரிப்புடன் தலையை குனிந்து கொண்டாள்.
” நேரம் ஆச்சுங்க.. நீங்க அவனுக்கு போன் பண்ணி கேளுங்க.. ” மீனாட்சி கூற..
” இருக்கட்டும் சம்மந்தி.. வேலையை முடிச்சுட்டு வரட்டுமே.. எதுக்கு தொந்தரவு பண்ணனும்.. மழை வேற அதிகமா இருக்கு.. பார்த்து பத்திரமா வரட்டும் ” சிவானந்தம் கூறவும்.. திவாகர் அமைதியாகி போனார்.
” இன்னைக்கு தான் கல்யாணம் ஆகியிருக்கு போகாதன்னு சொன்னா கேட்டானா.. நல்ல நேரம் வேற குறிச்சி வாங்கிருக்கு.. இந்த பையன் இப்படி பண்ணிட்டு இருக்கான் ” மீனாட்சி புலம்பினார்.
” விடு மீனாட்சி.. எல்லாமே நல்ல நேரம் தான். நைட்டுக்கு என்ன டின்னர் ”
” இட்லி தாங்க.. ரெடியா தான் இருக்கு.. ”
” சரி அப்போ எல்லாருமே சாப்பிடலாம்.. சீக்கிரம் தூங்குனா.. நாளைக்கு வேலைக்கு போக சரியா இருக்கும் ” என திவாகர் எழ.. அவரோடு சேர்ந்து அனைவருமே எழுந்தனர்.
” நான் கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடவா அத்தை ” பிறை தயங்க..
” அவன் கூட சேர்ந்து சாப்பிட போறியா ”
திரு திருவென முழித்தவள்.. ” ஹான்.. பசியில்ல அதான்.. ”
” சரி மா ” என அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறி விட்டு, சிவகாமியும், மீனாட்சியும் சாப்பிட ஆரம்பித்தனர்.
வாசலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பிறை. கொட்டும் மழையில் பார்கவி எப்படி வரப் போகிறாள் என்ற சித்தனையும் இருந்தது.
அவளது சிந்தனையை கலைக்கும் வண்ணமாக வீடு வந்து சேர்ந்தாள் பார்கவி.
தொப்பலாக நனைந்து வந்த மகளை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அதிர.. ” நீ ஏன் இந்த மழையில வந்த பாரு. நான்தான் கால் பண்ணி மழை விட்டதும் அண்ணனை வர சொல்லுறேன்னு சொன்னேன்ல ” மீனாட்சி மகளை கடிய..
” மழையில நனையல மா.. லேசா ஓடி வரும் போது நனைஞ்சிட்டேன் ” என சாக்கு சொல்லி விட்டு.. ” அண்ணி வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் ” என அவளையும் அழைத்து கொண்டு மாடிக்கு ஓடி விட்டாள் பார்கவி.
” நீ போ பிறை.. அவ தலையை நல்லா துவட்ட மாட்டா.. காய்ச்சல் வந்திட போகுது.. போய் உதவி செய் மா ” என மீனாட்சி அனுப்பி வைக்க.. அவளது அறைக்கு சென்றாள் பிறைநிலா.
” வாங்க அண்ணி.. வெல்கம் மை ரூம் ” என வரவேற்க.. ” அதெல்லாம் இருக்கட்டும் மேடம்.. முதல்ல போய் டிரஸ் மாத்து.. தலையை காய வைக்கனும்” என்றதும்.. கப்போர்டில் இருந்த மாற்று உடையை எடுத்து கொண்டு பத்தே நிமிடத்தில் மாத்தி விட்டு வெளியே வந்தாள்.
வந்தவளை அழைத்து தலையை நன்றாக துவட்டி விட்டாள் பிறை. ” நல்ல முடி உனக்கு.. சீக்கிரம் காயாது போல.. நைட்டு நேரம் வேற.. நல்ல ஃபேன்ன கூட வச்சு தலையை காய வை ” என துண்டை காய வைத்தாள் பிறை.
” அண்ணி அதெல்லாம் இருக்கட்டும்.. உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன் ” என வேகமாக தனது கைப்பையை எடுத்து வந்து அவளருகில் அமர்ந்தவள்.. ” இந்தாங்க.. உங்களுக்கு தான் ” என அழகான ஒரு ஜிமிக்கி தோடு ஒன்றை எடுத்து கொடுத்தாள் பார்கவி.
கையில் வாங்கியவள்.. ” ரொம்ப அழகா இருக்கு பாரு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ”
” ஆமா கோல்ட் சைனிங் இருக்கிறதுனால எல்லா டிரஸ்க்கும் மேக்சிமம் சூட் ஆகும்.. ”
” எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ”
” இன்னொன்னு இருக்கு.. ” என அவள் கேட்ட பானி பூரியை கையில் கொடுத்தாள் பிறை.
” இந்த மழையில எங்க போய் வாங்குன.. ”
” மழை வந்தா என்ன.. அதெல்லாம் வாங்கிடுவேன்.. முதல் முறையா என்கிட்ட ஒரு விஷயம் கேட்டு செய்யாமல் இருப்பேனா.. ம்ம் சீக்கிரம் சாப்பிடுங்க.. மழைக்கு நல்லா இருக்கும்” என அவசரப் படுத்த.. சிரிப்போடு அதை பிரித்து ஆளுக்கு ஒரு பூரியை எடுத்து வாய்க்குள் அமுக்கினர்.
” இதுவும் நல்லா தான் இருக்கு ”
” எது அண்ணி ”
” இந்த மாதிரி யாருக்கும் தெரியாம சாப்பிடுறது ” என பிறை சிரிக்க.. அவளோடு சேர்ந்து பார்கவியும் சிரித்தாள்.
” இந்த நேரத்துல ஏன் கிளம்பி வந்த பாரு.. எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது.. அதுவும் நைட்டு நேரம்.. இப்படியா.. ”
” ஐயோ அண்ணி பழக்கமான ஊர் தானே.. அதெல்லாம் நான் வந்துடுவேன்..”
” இனிமே லேட் ஆச்சுனா உன் அண்ணனை தான் நான் அனுப்புவேன். அவரோட தான் நீ வரனும் ” என்றதும்..
” அண்ணனை ஸ்ட்ரிக்ட் பண்ண சொன்னா.. நீங்க என்னைய பண்ணுறீங்களே அண்ணி ” பாவமாக முகத்தை வைத்தாள் பார்கவி.
” அட உன்னோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பார்கவி. இனிமே தனியா வராத.. ”
” சரி ஓகே அண்ணி . இனிமே வந்தா ஹிட்லர் கூட வரேன் ” என தலை அசைத்தாள் பார்கவி.
ஹிட்லர் என்றதும் அவளை பார்த்து செல்லமாக முறைத்தாள் பிறை. ” அட எங்க அண்ணனை சொல்லவும் கோபம் வேற வருதாக்கும் ” என சிரித்து கொண்டிருக்க.. கீழே இருந்து இருவரையும் அழைத்தார் மீனாட்சி.
” தலையை நல்லா காய வச்சியா பாரு ” என மகளின் தலை முடியை பார்த்தவர்.. அதை உலர்த்த தொடங்கிக் கொண்டே.. ” பிறை நீ சாப்பிட்டு போ மா.. அவன் வர பத்து மணிக்கு மேல் ஆகும் போல மா.. நீ உன் ரூம்ல இரு.. அவன் வந்தா நான் சொல்லுறேன். அப்பறம் ஏதோ புடவை வாங்கினேனு சொன்னியே.. அதை கட்டிக்கோ ” என்றதுமே அவளது முகம் சிவந்து போனது.
” ஹான் போறேன் அத்தை ” என சாப்பிட்டு விட்டு.. யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டாள்.
” மாப்பிள்ளை வந்தா கூப்பிடுங்க சம்மந்தி ” என சிவானந்தம் கூற..
” அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அண்ணே.. நீங்க போய் தூங்குங்க.. அவன் வந்ததும் எல்லாத்தையும் நான் ரெடி பண்ணுறேன் ” என்றதும் சிவகாமி தயங்கி நிற்க..
” அட போங்க அண்ணி.. ” என்றதும்.. தலையசைத்து கொண்டு பிறை அறைக்கு சென்றவர்.. அங்கு பிறை கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்து.. ” என்ன மா துணி மாத்தாம உட்கார்ந்திருக்க.. ”
” இந்த புடவையே நல்லா தானே மா இருக்கு ” என கேட்ட மகளை பார்த்து சிரித்தவர்.. ” இதுவும் நல்லா தான் இருக்கு . ஆனால் புதுசு கட்டிக்கிறது தான் வழக்கம்.. நீ கட்டிக்கோ.. சமத்தா நடந்துகோ.. நீ இன்னும் சின்ன பிள்ளை இல்ல சரியா ” என்றதும் தலையை ஆட்டி வைத்தாள் பிறை.
” மாப்பிள்ளை ரொம்ப தங்கமான குணம்.. அதைவிட உன் மாமனார், மாமியார், நாத்தனார் எல்லாம் உனக்கு நல்லதாவே அமைஞ்சுட்டாங்க..இந்த குடும்பத்துல நீயும் சந்தோஷமா இருக்கனும் மா.. ” என மகளை மனதார வாழ்த்தியவர்.. கையோடு கொண்டு வந்த மல்லிகை சரத்தை எடுத்து தலையில் சூடி இருந்தார் சிவகாமி.
பின் அனைவரையும் படுக்க சொல்லி விட்டு.. மீனாட்சி மட்டும் மகனுக்காக காத்திருந்தார்.
நல்ல மழையோடு வீடு வந்து சேர்ந்தான் ஆதி.
” என்ன பா இவ்வளவு நேரம் ஆகிடுச்சு.. சரி போ பிறை உனக்காக தான் காத்துட்டு இருக்கா.. ” என மீனாட்சி கூறியதும்.. அவன் அப்படியே நிற்க..
” கீழே அவ ரூம்ல தான் இருக்கா ” என அறை பக்கம் கையை காட்டியதும்.. வேகமாக அறைக்குள் சென்றிருந்தான் ஆதி.
கொட்டிய மழையை சாரளத்தில் வழியே ரசித்துக் கொண்டிருந்தாள் பிறை. இவன் வந்தது கூட தெரியாமல் அவள் மழையை ரசிக்க.. பின்னால் வந்தவனோ, சேலையில் இருந்த பிறையை அணு அணுவாக ரசிக்க தொடங்கினான்.
அவளது நிறத்திற்கு அந்த மாந்துளிர் பச்சை வண்ண புடவை அவளை அத்தனை அழகாக காட்டியது. மனதை மயக்கும் மல்லிகை சரம் மேலும் போதையூட்ட.. கைகள் குலுங்க கண்ணாடி வளையல்கள்.. காதில் பெரிய ஜிமிக்கி.. கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் தாலி ஜொலிக்க.. அதோடு ஒரு சின்ன சங்கிலியும் அணிந்திருந்தாள் பிறை.
பார்வை என்னவோ மழையில் இருந்தாலும்.. அவளது எண்ணம் வேறெங்கோ இருந்தது.
பூனை போல அறைக்குள் வந்து, அவளை நெருங்கியவனுக்கு மல்லிகையின் வாசனை அவனை பித்தாக்க… சட்டென பின்னால் இருந்து அவளது இடுப்பை வளைத்திருந்தான் ஆதி.
ஜில்லென்ற ஸ்பரிசத்திலும், திடீரென்ற தொடுகையிலும் பயந்து போனவள்.. கத்துவதற்கு வாயை திறக்க.. அவளது வாயை மூடி இருந்தான் ஆதி.
” ஹே கத்தாத டி.. நான் தான் நிலா ” என்றதும் சற்றே தணிந்தவள்..
” இப்படியா பின்னாடி வந்து பயம் காட்டுறது.. நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா.. ” என பெரிய மூச்சுகளை எடுத்தவளை ரசனையுடன் பார்த்தவன்..
” ரொம்ப லேட் பண்ணிட்டேனோ… ஸ்டார்ட் பண்ணலாமா ” என ஆதி கேட்டதும்.. விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. என்ன பேசுவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.
அவளை இழுத்து சென்று மெத்தையில் விட்டவன்… ” இந்த மாதிரி சேலை கட்டு நிலா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ” என்றதும்.. சிவந்து போனவள்.. அடுத்த நொடி சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
” என்ன சொன்னீங்க… சேலை கட்டவா.. போகும் போது நீங்க தானே சேலை கட்ட வேண்டாம்னு சொன்னீங்க ”
” இப்போ பிடிச்சிருக்கே நிலா ” என்றதும்.. அவனையே கூர்ந்து பார்த்தவள்.. மெதுவாக மெத்தையில் இருந்து எழுந்து கதவு நோக்கி ஓடப் போக.. அவளை ஒரே எட்டில் பிடித்திருந்தான் ஆதி..
” ஆதி…… ” என ஆக்ரோஷமாக கத்தி இருந்தாள் பிறை.
” ஸ்மார்ட்… ” என்றவன் அவளை அள்ளி தோளில் போட்டு கொண்டு மெத்தையை நோக்கி நகர..
” விடு டா ” என அவனை அடித்திருந்தாள் பிறை.
” விடுறதுக்கா இவ்வளவு ரிஸ்க் எடுத்து இங்க வந்தேன்.. வந்த வேலையை முடிக்க வேண்டாம்.. ” என கோணல் சிரிப்பு சிரித்தவனை பார்த்து பயந்து போனாள் பிறை.
இவனை இந்த வீட்டில்.. இந்த அறையில் சத்தியமாக அவள் எதிர்பார்க்கவில்லை என அவளது முகத்திலேயே தெரிந்தது.
அதே நேரம் காரை வந்து வீட்டிற்குள் நிறுத்தி விட்டு பெல் அடிக்க.. அப்போது தான் படுக்க சென்ற மீனாட்சி வந்து கதவை திறந்தார்.
வாசலில் நின்ற மகனை பார்த்து அதிர்ந்து போனார். தாயின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தவன்… ” என்னாச்சு மா.. ” என்றவனுக்கும் அவனது போலீஸ் மூளை வேலை செய்ய..
” நீ இங்க இருக்கேன்னா.. அப்போ பிறை ரூம் குள்ள போனது யாரு பா ” மீனாட்சி கேட்ட கேள்வியில் அவனுக்கு சர்வமும் அடங்கியது.
ஆதி ??
சனா💖
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Na moon solama nila solum pothae nenache