Loading

பிறை -33

 

காலை உணவு அனைவருக்கும் வந்து விட்டது.. ஒன்றாக அமர்ந்து அனைவரும் உணவை உட்கொள்ள.. ” பிறை நீ எல்லாருக்கும் பரிமாறு மா” சிவகாமி மகளை வேலை செய்ய கூற..

 

” அட என்னங்க அண்ணி.. எல்லாமே பக்கத்துல தானே இருக்கு. நம்ம போட்டு சாப்டுக்க மாட்டோமா , நீயும் உட்காரு மா.. ” என மகனோடு அவளை அமர சொல்ல.. எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு, அவனருகில் அமர்ந்தாள் பிறை.

 

அனைவருக்கும் இலையில் பரிமாறி விட்டு, சிவகாமியும், மீனாட்சியும் கூடவே அமர்ந்து விட்டனர்.

 

பிறைக்கு தான் அவனருகில் அமர்ந்திருக்கவே அத்தனை அவஸ்தையாகி போனது. முதல் ஐந்து நிமிடம் நன்றாக தான் சென்றது..

 

டைனிங் டேபிள் கீழே உள்ள அவளது கால்களை மெதுவாக உரசினான் ஆதி. அதை உணர்ந்த பிறை சட்டென்று காலை நகர்த்தி கொள்ள.. விழிகளை உருட்டி அவனை முறைத்து பார்த்தவளை கண்டு கொள்ளாமல்.. எதுவும் தெரியாதவன் போல உண்டு கொண்டிருந்தான் ஆதி.

 

அடுத்த இட்லியை உண்ண தொடங்கும் போது.. மெதுவாக கைகளை எடுத்து அவளது தொடையில் வைத்து அழுத்த.. அரண்டு போனவளுக்கு.. பயத்தில் புறைக்கு ஏறி விட்டது.

 

இருமிக் கொண்டிருந்தவளை பார்த்து மெதுவாக தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுக்க.. அதை வாங்கி வேகமாக பருகியவள்.. சற்றே ஆசுவாசமானாள்.

 

” என்ன மா பார்த்து சாப்பிட வேணாமா.. பாரு கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு … மெதுவா சாப்பிடு ” திவாகர் கூறியதும் தலையை அசைத்து கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 

இரண்டே இட்லியோடு முடித்து கொண்டு எழுந்தவளை பார்த்த மீனாட்சி.. ” என்ன போதுமா.. உட்காரு முதல்ல.. காலைல நாலு மணிக்கு கோவிலுக்கு போனோம்.. வெறும் வயிறா இருக்கும்.. இன்னும் ரெண்டு எடுத்து வைக்கிறேன் சாப்பிடு ” கட்டளை தோரணையில் கூறவும்.. அமைதியாக அமர்ந்து கொண்டாள் பிறை.

 

மொத்த சிரிப்பையும் உதட்டிற்குள் அடக்கிக் கொண்டான் ஆதி. காதலில் கள்வன் ஆகிப் போனான்.

 

மீனாட்சி வைத்த இரு இட்லியை சாப்பிட்டு விட்டே அவளை எழ வைத்தார்.

 

” மதியத்துக்கு வீட்லயே சமைச்சிட்லாம் அண்ணி.. வேற வேலை இல்லைல நமக்கு.. ” சிவகாமி கூறவும் ..மீனாட்சியும் ஒப்புக் கொண்டார்.

 

” நான் இன்னிக்கு ஸ்டேஷன் போயிட்டு சிக்கிரம் வந்துடுறேன்.. ” என ஆதி கிளம்பி காக்கி உடையில் தயாராகி வர.. மருமகனை மெச்சும் பார்வை பார்த்து வைத்தார் சிவானந்தம்.

 

”  இன்னைக்கே போகனுமா மாப்பிள்ளை.. ”

 

” ம்ம் நம்ம கேஸ் விஷயமா தான்.. சீக்கிரம் முடிச்சா தான் நம்ம ரிலீவ் ஆக முடியும் ”

 

” சரி மாப்பிள்ளை போயிட்டு வாங்க ” என்றதும்.. மாமியாரிடமும் தலையசைத்து விட்டு வாசலை நோக்கி சென்ற மகனை நிறுத்தி இருந்தார் திவாகர்.

 

” ஆதி.. ” என்றவரது அழைப்பிற்கு நடையை நிறுத்தி அவரை திரும்பி பார்த்தான் ஆதிதேவ்.

 

” இதுவரைக்கும் எப்படியோ போகட்டும்.. இனிமே உனக்கு இந்த வீட்ல பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கா.. போகும் போது சொல்லிட்டு தான் போகனும்.. லேட் ஆனா அவங்களுக்கு சொல்லனும்.. பொறுப்புகள் இனிமே தான் அதிகம்.. பார்த்துக்கோ ” தந்தையாக மகனுக்கு அறிவுரை கூற.. தலை அசைத்தவன்..

 

” பிறை ரூம்க்கு வா ” என அவளிருந்த அறைக்குள் அவன் சென்று விட.. மாமனாரை திட்டக் கூட முடியாமல் , ஒரு வித நடுக்கத்துடன் அந்த அறைக்குள் சென்றிருந்தாள் பிறை.

 

” பாருங்க.. நம்ம முன்னாடி சொல்லிட்டு போக அவனுக்கு வெட்கம்.. உள்ள போய் போயிட்டு வரேன்னு சொல்ல போறான் நம்ம மகன் ” என மீனாட்சி சிரிக்க.. அப்பாவியாக இருக்கும் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டார் திவாகர் .

 

” மா நான் இன்னைக்கு முக்கியமான ஒரு வேலையா வெளிய போறேன் மா ” பார்கவி கூறியதை கேட்ட மீனாட்சி..

 

” என்ன டி நீயும் உன் அண்ணன் மாதிரி ஆரம்பிச்சிட்ட ”

 

” மா.. என் பிரெண்ட் ஜெனி இருக்கா தானே.. அவங்க அம்மாக்கு ஆஞ்சியோ பண்ணிருக்கு..  ஹாஸ்பிடல்ல இருக்காங்க. நான் போய் பார்த்துட்டு வரேன் மா.. அவ மட்டும் தான் இருக்கா.. அவளுக்கு கூட ஹெல்ப் பண்ண ஆள் வேணும்..”

 

”  இப்படியா இந்த பொண்ணுக்கு மாத்தி மாத்தி வரனும்.. போய் பார்த்துகோ.. நான் சாயங்காலம் உங்க அப்பா கூட வந்து பார்க்கிறேன். உன்னையும் அப்படியே கூட்டிட்டு வரேன் ” என மகளை அனுப்பி வைத்தார் மீனாட்சி.

 

மாடியில் உள்ள அவளது அறைக்கு சென்று கிளம்ப தயாரானாள் பார்கவி.

 

அறைக்கு வந்த பிறை.. கதவருகே நின்று கொண்டே.. ” போயிட்டு வாங்க ” என வந்ததும் கூறி விட.. இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவன்..

 

” இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி ரியாக்ட் பண்ணுற ”

 

” எப்படி ”

 

” இதோ இப்படி நடுங்கிட்டு இருக்க.. நான் அப்படி என்ன பண்ணேன்..”

 

” அதெல்லாம் இல்ல ”

 

” என்னைய பாரு.. ” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

” உன்ன கிஸ் அடிச்சேனா ” சட்டென அவன் கேட்க..

 

“இல்ல ” என வேகமாக தலை அசைத்தாள்.

 

” தப்பா பார்த்தேனா ”

 

” இல்லைங்க..”

 

” தப்பா தொட்டேனா ” என்றதும், அவளுக்கு தான் ஒரு மாதிரியாகி போனது..

 

” இல்லை.. இல்ல… ”

 

” அப்பறம் ஏண்டி ஒரு மாதிரி பண்ணுற.. ”

 

” அது.. அது.. வந்து.. புதுசா … இருக்கா.. அதான் ” திக்கி திணறி கூறியவளை, நக்கலாக பார்த்தவன்..

 

” அப்போ நான் மட்டும் ஏற்கனவே பொண்ணுங்க கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வந்தனா.. எனக்கும் புதுசு தான் ”

 

” ஐயோ நான் அப்படி சொல்லல..”

 

” ரிலாக்ஸ்.. ஈவ்னிங் வெளிய போகலாம் ரெடியா இரு.. புடவை மட்டும் கட்டாத மூன் ” என்றவன்.. அவளது கன்னத்தை தட்டி விட்டு வெளியே சென்று விட்டான் ஆதி.

 

அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளி விட்டவள்.. அப்படியே மெத்தையில் அமர்ந்து விட்டாள்..அவன் தொட்ட கன்னங்கள் இரண்டு செவ்வானமாக சிவந்து போனது.

 

அவளுக்கும் அவனை பிடித்து தான் இருந்தது. அவனது தீண்டல்களும் அவளை சிலிர்க்க செய்தது.

 

காலையும் அப்படித்தான்.. உதவி கேட்டவளை நெருங்கி… ” மே ஐ ” என கேட்டவனை அரண்டு விழித்தாள் பிறை.

 

” என்ன… என்ன … ”

 

” என்ன.. இதுக்கு ஏன் அவளை கூப்புடனும்”

 

” வேற யாரு ஹெல்ப் பண்ணுவா.. அம்மா அத்தைக்கு  ஹெர் எல்லாம் கலைக்க தெரியாது. அதான்.. ”

 

” அப்போ நான் வேண்டாம்னு சொல்லுறியா”

 

” தனியா இருக்குற பொண்ணு கிட்ட வம்பு பண்ணுறீங்களா ” சின்ன பார்வை பார்த்து அவனை கேட்க..

 

” அப்போ எல்லாரும் இருக்கும் போதே பண்ணவா.. நான் சொன்னா செய்வேன்.. ” என்றதும் பதறிப் போனாள்.

 

” இல்ல இல்ல வேணாம்.. சும்மா தான் சொன்னேன்..”

 

மெதுவாக கைகளை உயர்த்தி அவளது தோளில் சரிந்து நின்ற புடவையை தொட வர..

 

பின்னால் சாய்ந்து.. அவனது கைகளை பார்த்தவள்.. ” கமிஷனர் சாரை ஈவ் டீசிங் கேஸ்ல போடலாம் போலையே” சற்றே தைரியம் வந்தவளாக பேசினாள் பிறை.

 

” போடலாமே… ஆனால் எப்படி கம்பளெண்ட் கொடுப்ப.. என் புருஷன் டச் பண்ணுறான்னா ” வார்த்தையில் நக்கல் அதிகமாக இருந்தது.

 

அதில் வெட்கி குனிந்து கொண்டவள்.. ” பிளீஸ் பார்கவியை வர சொல்லுங்களேன் ” என்றதும்.. மனைவியின் பேச்சில் மயங்கியவன்.. அவளை பார்த்து கண்களை சிமிட்டி விட்டு வெளியேறி இருந்தான்.

 

அந்த சின்ன கண் சிமிட்டலுக்கே அவனிடம் மயங்கிப் போனாள் பிறை. அறையில் இருந்து வெளியேறியவனை கண் இமைக்காமல் பார்த்தவள்.. அவன் சென்றதும் தலையை உலுக்கிக் கொண்டாள்.

 

‘ அச்சோ பிறை.. மொத்தமா கமிஷனர் உன்ன கவுத்துட்டாரு டி.. அவரு பார்த்தாலே கிறங்கி போய் நிக்கிறியே ‘ என தலையை தட்டிக் கொண்டாள். அதன் பிறகு பார்கவி வந்து பிறையிடம் பேச ஆரம்பித்து நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவளுக்கு தேவையான உதவிகளையும் செய்து விட்டே சென்றாள்.

 

இப்போதும் கணவனை நினைத்தால் முகமெல்லாம் சிவந்து விடுகிறது. கணவன் செய்ய வேண்டிய எந்த செயலையும் அவன் செய்ய வில்லை. அதற்கே இப்படி என்றால் .. அவன் ரோமியோவாக மாறும் பொழுது அவளது நிலை ?

 

சிவகாமியும், மீனாட்சியும் சேர்ந்து தடபுடலாக விருந்தை தயார் செய்தார்கள். இன்று தான் திருமணம் நடந்திருந்ததால் சைவ உணவை தான் சமைத்திருந்தார்கள்.

 

கிளம்பி வந்த பார்கவி நேராக பிறை இருந்த அறைக்குள் வந்தாள்.

 

” அண்ணி.. நான் ஒரு வேலையா வெளிய போறேன்.. உங்களுக்கு ஏதோ வாங்கனும்னு சொன்னீங்களே.. சொன்னீங்கனா வாங்கிட்டு வருவேன் ” என்றதும்..

 

சற்றே யோசித்தவள்.. ” இல்ல பாரு.. ஈவ்னிங் உங்க அண்ணன் வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு.. அப்போ நானே வாங்கிக்கிறேன்” என்றதும்.. விழிகள் விரிய தனது அண்ணன் மனைவியை பார்த்தவள்..

 

” எது அண்ணன் உங்களை அவுட்டிங் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரா ”

 

” ஏன்.. இவ்வளவு ஷாக் ”

 

” நீங்க சொல்லுங்க ”

 

” நிஜமா தான் மா ”

 

” பொண்ணு பார்க்க அம்மா லீவ் போட சொல்லுவாங்க.. அப்போ எல்லாம் வேலை இருக்குன்னு சொல்லுவான்.. இப்போ பாருங்களேன்.. ம்ம் நடக்கட்டும்.. என்கிட்டோ அண்ணனும் நீங்களும் சந்தோஷமா இருந்தா சரி.. ஆனாலும் என் அண்ணனை கொஞ்சம் மிரட்டி உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க .. அப்போதான் நான் என்ஜாய் பண்ண முடியும் ” வெகுலியாக பேசும் பார்கவியை பார்த்து சிரித்தவள்..

 

” நீ அப்படியே அத்தை மாதிரி. உங்க அண்ணன் அப்படியே மாமா மாதிரி ”

 

” அட சீக்கிரமே கண்டு பிடிச்சிடீங்க”

 

” எப்போ வருவ ”

 

” ஈவ்னிங் ஆகிடும் ”

 

” சரி பார்த்து போயிட்டு வா.. ”

 

” வரும் போது உங்களுக்கு சாப்பிட என்ன வேணும் அண்ணி ”

 

” கடை சாப்பாடா ”

 

” ஏன் அதுனால என்ன.. ”

 

” இல்ல அப்பா திட்டுவாரு ”

 

” என்னையும் தான் அண்ணன் திட்டுவாரு.. நான் அதெல்லாம் தெரியாம தான் சாப்பிடுறேன்.. உங்களுக்கும் வாங்கிட்டு வரேன்.. நம்ம மாடில போய் சாப்பிடுவோம் .. உங்களுக்கு என்ன பிடிக்கும்…”

 

பார்கவி கூறியதை கேட்டதும் அவளுக்கும் ஆசை வர.. ” பானி பூரி  வாங்கிட்டு வரியா ”

 

” சூப்பர் வாங்கிட்டு வரேன்.. பை அண்ணி ” என கிளம்பி இருந்தாள்.

 

வெகுளியாக இருக்கும் அவளை எண்ணி சிறிதாக பயமும் வந்தது.

 

மதிய உணவையும் முடித்து விட்டு அனைவரும் சற்று நேரம் ஓய்வெடுக்க.. மாலை நெருங்க நெருங்க பிறைக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.

 

ஆதி வந்து எங்கு அழைத்து செல்வான்.. என்ன செய்வான் என பல விஷயங்கள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

ஆனால் இங்கு யாருமே எதிர்பாராத விஷயங்கள் இன்று நடக்க போவதை யாரும் அறியவில்லை.

 

சனா 💖

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
23
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment