Loading

அத்தியாயம் 33

பரிதி சிலையாக நின்றதில், அவனைப் பார்த்து சிரித்த சஞ்சய், “என்னடா.. அப்படியே ஆடிப் போய்ட்ட.. இப்போ தெரியுதா நான் ஏன் உன்ன அடிக்கத் துடிக்கிறேன்னு.. அவ என் பவி.. என் உசுரு.. அது போக காரணமானவன் நீ..” என்று கோவமாய் பரிதியிடம் பேசிக் கொண்டிருக்க,

 

இதை கேட்ட இனியனும் நிரஞ்சனவுமே ஆடிப் போய் விட்டனர்.

 

இனியனோ, “என்ன.. அண்ணா ஒரு உயிர் போக காரணமா.!! ” என்று அவன் அதிர்ச்சி ஆகி இருக்க,

 

நிரஞ்சனா அதற்கும் மேலே..

 

அப்பொழுது நிரஞ்சனாவின் கழுத்தில் யாரோ ஒருத்தர் பின்னிருந்து அவளின் கழுத்தில் கத்தியை வைக்க, அதைக் கண்ட நிரஞ்சனா, “ஆஆஆஆ..” என்று பயத்தில் கத்தியே விட்டாள்.

 

சத்தம் கேட்டு ஆண்கள் மூவரும் அவளை திரும்பிப் பார்க்க, சஞ்சய் அந்தக் காட்சியை பார்த்தவுடன் கை தட்டி சத்தம் போட்டு சிரித்தான்.

 

பரிதிக்கும் இனியனுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை..

 

“ராமலிங்கம்.. நீங்களா.. நீங்க எப்படி இவன் கூட?? அப்போ நீங்களும் இவன் கூட கூட்டா..” என்ற பரிதியின் நினைவில் வந்த போனது தங்கராஜ் கூறியது.

 

ஆம். அன்று அவன் சஞ்சய் உடன் ஒரு வயதானவர் வந்து பேசியது என்று சொன்னனே.. அப்படி பார்த்தால் அது இவர் தானா?? என்று நினைத்துப் பார்த்த பரிதி, அவரிடம் “உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்?? எதுக்காக எங்க வீட்டுல டிரைவர் வேலைக்குச் சேந்தீங்க..??” என்று கேட்க,

 

அவரோ, ஒரு வன்மப் புன்னகையுடன் பதில் கூறும் முன், “எதுக்கு சேந்து இருப்பாங்க. எல்லாம் உங்கள வேவு பாக்கத் தான்..” என்றான் சஞ்சய் நக்கலாக சிரித்துக்கொண்டே.

 

“நீங்க எதுக்காக அவன் கூட சேந்து எல்லாம் பண்றீங்க. அவன் தான் தப்புக்கு மேல தப்பு பண்றான்னா.. நீங்களுமா..” என்று ஆதங்கமாக அவரிடம் கூற,

 

அவரோ, ” பவித்ரா.. என் பொண்ணு..” என்றார்.

 

பரிதிக்கு புரிந்து விட்டது. சஞ்சய் தான் அவரை இழுத்து உள்ளே விட்டிருக்க வேண்டும் என்று.

 

இனியனோ, சஞ்சயிடம் “யாரு அந்த பவித்ரா.. ஆளாளுக்கு வந்து பவித்ரா என் உசுரு.. பவித்ரா என் பொண்ணுனு சொல்லிட்டு இருக்கீங்க. அதுவும் அவங்கள எங்க அண்ணன் தான் கொன்னார்னு சொன்னா நாங்க அதை நம்பணுமா.. எதுனாலும் மொட்டையா சொல்லாம, தெளிவா எல்லாத்தையும் சொல்லு..”,என்று அதட்டினான் இனியன்.

 

நிரஞ்சனாவும் என்ன நடக்கிறது, பரிதி ஏன் பவித்ராவை பற்றி கூறும் பொழுது அமைதியாக இருக்கிறார்.

 

நிஜமாகவே அவரால் தான் அந்த பெண்ணின் உயிர் போனதா.. ஒன்றும் புலப்படவில்லை அவளுக்கு.

 

சஞ்சய், இனியனுக்கு தெளிவாகக் கூற ஆரம்பித்தான். பரிதியும் கடந்த காலத்திற்குச் சென்றான்.

 

பரிதியுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.

 

ராஜசேகர் – வள்ளியம்மை இவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் விஸ்வநாதன், இரண்டாவது மகன் மகாலிங்கம்.

 

ராஜசேகர் ஆரம்பித்த சிறிய அளவிலான தோல் உற்பத்தித் தொழிலை சற்று விரிவுப் படுத்தினார் விஸ்வநாதன்.

 

மகாலிங்கம் ஏனோ தானோ என்று தான் இருப்பார் எதிலும் பொறுப்பு இல்லாமல்.

 

வள்ளியம்மையின் அண்ணன் மகள் தான் மங்களநாயகி.

 

அவருக்கு இரண்டு தம்பி. முதல் தம்பி குருமூர்த்தி. இரண்டாவது விநாயகம்.

 

விஸ்வநாதனுக்கு மங்களத்தை மணமுடித்து வைத்தனர்.

 

ஆனால் நன்றாகச் சென்ற தொழில் திடீரென முடக்கம் ஏற்பட தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

 

அதனால் ராஜசேகர் இறந்து விட, அவரைத் தொடர்ந்து வள்ளியம்மையும் கணவன் பிரிவால் காலமானார்.

 

வீடும் ஏலத்திற்கு வர, என்ன செய்வதென்று புரியாமல் இருக்கும் நேரத்தில் மங்களம் அவரது அப்பா வீட்டிற்கு அழைத்து வர அங்கேயே அவர்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்ந்தது. 

 

அவர்களின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமைந்து இருக்க, அதற்கு பரிசாக பரிதி வந்து பிறந்தான்.

 

அதன் தொடர்ச்சியாக, மகாலிங்கத்திற்கும் மணமுடித்து வைத்தனர்.

 

மாமனார் வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், அவருடைய உதவியால் விட்டப் போன தொழிலை மீண்டும் தொடங்கினார்.

 

மங்களமும் அவருக்கு பலத்த பக்கத் துணையாக இருந்தார். 

 

மெல்ல மெல்ல வாழ்கைத் தரம் உயர்ந்து கொண்டே வந்தது.

 

அந்த வீட்டில் மங்களத்தின் அப்பா பேச்சிற்கு அடுத்து மங்களத்தின் பேச்சே எடுபட்டது.

 

இந்நிலையில் மகாலிங்கம் மற்றும் மஹாலக்ஷ்மி தம்பதியினருக்கு சஞ்சய் மகனாக வந்து பிறந்தான்.

 

அந்த வீட்டில் மங்களம் ஆட்சி செய்வதில் ஏனோ மஹாவிற்கு பிடிக்கவே இல்லை.

 

எது வேண்டுமானாலும் அவளிடம் கை கட்டி நிற்க வேண்டுமே என்று உள்ளுக்குள் கருமிக் கொண்டிருந்தார்.

 

அதுவும் மகாலிங்கம் ஏனோ தானோ என்று பொறுப்பற்று இருப்பது அவளுக்கு மரியாதை குறைவாகவும் இருப்பதாக தோன்றியது.

 

இங்கிருந்து சென்று, தன் கணவனுக்கு என்று ஒரு தொழிலை அமைத்து நம் வீட்டில் நாம் மகாராணியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

 

அதனை மகாலிங்கத்திடம் கூறி கூறி அவனை மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

 

அது போலவே மங்களத்திடமும் விஷ்வாவிடமும் கூற, மங்களமும் விஷவாவும் மறுத்தனர்.

 

அங்கு வாக்குவாதம் நடக்க, இறுதியில் அவர்கள் வீட்டை விட்டு செல்வது உறுதியானது.

 

வெறும் கையோடு தம்பியை அனுப்ப அனுப்ப மனம் இல்லாமல், தம்பிக்கு கையில் கொஞ்சம் பணமும் அவனுக்கு சேர வேண்டிய தன் தாயின் நகையையும் கொடுத்து அனுப்பினார் விஸ்வநாதன்.

 

அந்த பணத்தை வைத்து சிறிய வாசனை திரவியம் தொழில் ஆரம்பித்தார் மகாலிங்கம்.

 

அண்ணன் தம்பி என்று இருவரும் இரு வேறு துருவங்களாக இருந்தனர்.

 

விஸ்வாவிற்கு எப்பொழுதும் தம்பியின் மேல் பாசம் அன்பு இருக்கும். தன் மகனிடமும் அதைக் கூறியே வளர்த்து வந்தார்.

 

ஆனால் மகாலிங்கத்தின் மனதில் அவரது மனைவி நஞ்சை அல்லவா தாரை வார்த்தார்.

 

அவருக்கு எங்கே மீண்டும் பாசத்தால் அண்ணனிடம் சேர்ந்து விடுவாரோ என்று நினைத்து விட்டார் போலும்.

 

அண்ணனை எதிரியாக நினைத்து, தொழிலும் போட்டியாக பார்க்க ஆரம்பித்து விட்டார். 

 

மகாலட்சுமியின் எண்ணத்தின் பலனாக, சஞ்சய்க்கு ஏழு எட்டு வயது இருக்கும் போது அவர் நோய் வாய்ப் பட்டு இறைவனடி சேர்ந்தார்.

 

அதில் இருந்து சஞ்சய், தந்தையின் பொறுப்பாக ஆனான்.

 

ஏனோ அதற்குப் பிறகு அண்ணனிடம் சேரும் மனமும் இல்லை அவருக்கு.

 

காலங்கள் செல்ல செல்ல சிறுவர்களாய் இருந்தவர்கள், இளைஞர்களாய் மாறினர்.

 

பரிதியும் சஞ்சயும் ஒரே பள்ளியில் இருந்து, ஒரே கல்லூரி வரைக்கும் ஒன்றாகவே பயின்றனர்.

 

ஆனால் என்ன சஞ்சய்க்கு பரிதியை கண்டாலே பிடிக்காது.

 

தாய் சிறு வயதில் அவனுக்கு போதித்த மந்திரம் அப்படி.

 

நம்மை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று சொல்லி சொல்லியே அவனை கெடுத்து விட்டார் போலும்.

 

அதே தான் அவன் இளைஞனாய் நிற்கும் போதும் இன்றும் அப்படியே தொடர்கிறது.

 

பரிதியை பார்க்கும் போது எல்லாம் எதிரியாகவே பாவித்து, அவனுடன் வம்பிளுப்பது, தேவை இல்லாமல் அவனைச் சீண்டுவது என்றே அவனுக்கு தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருப்பான்.

 

அதனை எல்லாம் பொருட்படுத்தாது, தான் உண்டு தன் வேலை உண்டு என்றே சென்று கொண்டிருப்பான்.

 

ஒரு சமயம் சஞ்சய் செய்த தவறை சுட்டிக் காட்டி, அதனை கல்லூரியின் முதல்வரிடம் கொண்டு போக, அதனால் சஞ்சயை ஒரு மத்த காலம் கல்லூரியில் வரக் கூடாது என்று கூறி இருந்தார்.

 

அது மேலும் அவனுக்குள் வன்மத்தை கூட்டி இருந்தது.

 

கல்லூரி முடித்து இருவரும் அவர் அவர் தந்தையின் தொழிலை கையில் எடுத்துக் கொண்டனர்.

 

பரிதி மேலும் மேலும் விரிவுப்படுத்திச் செல்ல, சஞ்சயும் தன்னால் முடிந்த அளவு உழைத்தான்.

 

ஆனாலும் பரிதியின் அளவு வர இயலவில்லை என்று அதற்கும் அவன் மேல் தான் வன்மத்தை பெருக்கிக் கொண்டான்.

 

அப்பொழுது தான் அவனுக்கு காதலும் மலர்ந்து.

 

பவித்ரா, அவனுடைய அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தவள்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப, இருவரது காதலும் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சென்று கொண்டிருந்தது.

 

இதில் அவன் பரிதியை பழி தீரக்க வேண்டும் என்ற எண்ணத்தையே மறந்து இருந்தான்.

 

காதலில் திளைத்து, முத்தாடி அவளுடன் வாழ்வதற்கான வாழ்க்கையை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவன் எண்ணத்தில் இடியாய் வந்து இறங்கியது பவித்ராவின் மரணம்.

 

அன்று காபி ஷாப்பில் இருந்து சஞ்சயும் பவித்ராவும் சாலையை கடந்து அவனது காரில் ஏறப் போக, அப்பொழுது தன் பர்ஸ் காபி ஷாப்பில் விட்டு வந்ததை எண்ணி, சஞ்சயிடம், “ஏங்க.. என் பர்ஸ் அங்க டேபிள்ல விட்டு வந்துட்டேன் போல.. நான் போய் எடுத்துட்டு வந்துருறேன்..” என்று அவள் அங்கிருந்து கிளம்பப் போக, அவளின் கையை தடுத்து, “இரு பவி.. நான் எடுத்துட்டு வரேன்.” என்று காரில் இருந்து இறங்கப் போனவனை, தடுத்து, “அட நீங்க இருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்..” என்று அவனிடம் சொல்லி விட்டு, சாலையைக் கடந்து அவளுடைய பர்ச எடுத்துக் கொண்டு வெளியே வந்துப் பார்க்க, வரிசையாக வாகனங்கள் வந்து போன படி இருந்தன.

 

அவள் சிரிது நேரம் சாலையின் ஓரத்தில் காத்து கொண்டு இருக்க,

 

அதைப் பார்த்த சஞ்சய், “நான் வரேன். அங்க இரு.” என்று அவன் கூறினான்.

 

“நீங்க இருங்க.. நான் வந்துருறேன்..” என்று அவனிடம் கூறி விட்டு, சாலையைப் பார்க்க , வாகனங்கள் வருவது குறைந்து இருந்தது.

 

சரி செல்லலாம் என்று நினைத்து நடந்து வர, நடு ரோட்டில் வந்ததும் வேகமாக வந்த கார் ஒன்று அவள் மேல் ஏற்றி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

 

அதனைப் பார்த்த சஞ்சய் அங்கேயே சிலையாக உறைந்து விட்டான்.

 

அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய, “பவி…” என்று உரக்கக் கத்தினான்.

 

அவளின் அருகில் ஓடிச் சென்றுப் பார்க்க, அவளின் உயிரானது எப்பொழுதோ அவளின் கூட்டை விட்டு பிரிந்து இருந்தது.

 

பாவம் அவன் தான் நடை பிணமாகிப் போனான்.

 

அவளுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டாம் என்று கற்பனைக் கோட்டை கட்டி வைத்தான்.

 

இன்று அனைத்தும் சுக்கு நூறாய் உடைந்து விட்டது.

 

அவளின் உடலைப் பிடித்து கதறிக் கொண்டிருந்ததில், சுற்றி நின்ற அனைவருக்கும் அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

 

“பவி பவி..” என்று சிறு குழந்தை போல அவளுக்காக ஏங்க ஆரம்பித்து விட்டான்.

 

பிரேத பரிசோதனை முடிந்து அவளின் இறுதிச் சடங்கிலும், இவனின் அழுகுரல் தான் அங்கே பலமாக ஒலித்தது.

 

பாவம் அவள் மேல் எவ்வளவு காதல் வைத்து இருந்தால் இப்படி அவளுக்காக அழுவான்.

 

பவித்ராவின் பெற்றோரே பார்த்து மலைத்து விட்டனர்.

 

இப்படியே ஒரு மாத காலம் செல்ல, அவன் எங்கும் செல்லாமல் பவித்ராவின் நினைவிலேயே பைத்தியம் பிடித்த போல ஆகி விட்டான்.

 

அப்பொழுது தான், அவனுக்கு ஏதோ யோசனைத் தோன்ற, “பவித்ரா மேல யாரு ஏத்திட்டு போனா . இத்தனை நாள் இதை நான் யோசிக்கவே இல்லையே..” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

 

உடனே விபத்து நடந்த இடத்திற்குச் சென்று , அங்கு அவர்கள் இருவரும் காபி அருந்திய காபி ஷாப்பிற்குக்குச் சென்று அங்கு இருக்கும் cctv கேமரா பார்க்க வேண்டும் என்று அந்த கடையின் ஓனரிடம் கேட்டுப் பார்க்க, அவரும் அவனுக்கு அதை போட்டுக் காட்டினார்.

 

அதில் நன்றாகவே தெரிந்தது. பவித்ராவின் மேல் ஏற்றிய காரின் வகை மற்றும் காரின் எண் இரண்டையும் குறித்துக் கொண்டவன், அவருக்கு நன்றியை கூறி விட்டு, வெளியில் வந்து, “நம்ம யூஸ் பண்ற அதே கார் மாடல் தான். ஆனால் இந்த நம்பர் எங்கேயோ பார்த்த நம்பர் போல இருக்கே.. யாரு அது யாரு அது..” என்று கண்ணை மூடி யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவனின் மூளைக்குள் சட்டென புலப்பட்டது.

 

கண்ணைத் திறந்த சஞ்சயின் கண்கள் கோவத்தில் ஜொலி ஜொலித்தன.

 

“பரிதி.. நீதானா.. நீதான் என் பவியை அன்னைக்கு உன் காரால ஏத்திட்டுப் போனியா.. இத்தனை நாள் உன்ன சும்மா விட்டுட்டேன். இனி இருக்குடா உனக்கு. உனக்கு நான் தான்டா எமன்..” என்று கோவமாக பேசியவன், நேராக சென்றது என்னவோ பவித்ராவின் வீட்டிற்குத் தான்.

 

பவித்ரா ராமலிங்கத்திற்கு ஒரே மகள். மகள் இழந்த துக்கத்தில் பெற்றோர்கள் வருத்தத்தில் இருக்க, சஞ்சய் சென்று, “உங்க பொண்ணை கொன்னவன் யாருனு தெரிஞ்சா நீங்க என்ன பண்ணுவீங்க..” என்று கேட்க,

 

அவரோ, “அவன் மட்டும் என் கையில கெடச்சான், அவனை நானே குத்தி கொலை பண்ணிருவேன்..” என்று அவரும் மகள் மேல் உள்ள பாசத்தில் கோவமாக கூறினார்.

 

“எனக்கு அது யாருனு தெரியும். எனக்கு அவன் எதிரி தான். என்னை பழி வாங்க என் பவியை அவன் கொலை பண்ணிட்டான். இனி நம்ம ரெண்டு பேரும் சேந்து அவனை நம்ம அழிக்குறோம்..” என்று அவரிடம் கூற, அவரும் சரி என்றார்.

 

அதற்குப் பின் தான் ராமலிங்கம் பரிதியின் வீட்டில் கார் ஓட்டுநராக சேர்ந்து இருந்தார்.

 

அவர் தான் பரிதியின் வீட்டில் நடக்கும்  ஒவ்வொரு விஷயங்களை அங்கிருந்து சஞ்சய்க்கு கூறிவார்.

 

இனியன் சில வருடங்கள் வெளிநாட்டில் தங்கிப் படித்ததால் அவனுக்கு இது இல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் சஞ்சய் கூறும் போது இனியனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

 

“இப்போ சொல்லு.. உன் அண்ணன் தான் என் பவியை கொன்னான்.  அதுவும் என் கண்ணு முன்னால. அப்புறம் எப்படி நான் அவனை விட முடியும்.” என்று ஆத்திரத்தில் சஞ்சய் கத்த,

 

இனியனோ எதுவும் புரியாமல் தன் அண்ணனைத் தான் பார்த்தான்.

 

அப்பொழுது சஞ்சய் ராமலிங்கத்திற்கு கண் காட்ட, அவனோ நிரஞ்சனாவைத் தள்ளி விட்டு, பரிதியை கத்தியால் குத்தப் போனார்.

 

சஞ்சயோ, அவர் செயலில் குழம்பிப் போனான்.

 

நிரஞ்சனாவின் கழுத்தை அறுக்கச் சொன்னால், இவர் ஏன் பரிதியை கொல்லப் போகிறார்.

 

இனியன் ராமலிங்கத்தின் செயலை கண்டு கொண்டதால், குத்தப் போன கத்தியை அவன் கையால் தடுத்தான்.

 

அதில் அவன் கையில் இருந்து ரத்தம் வழிந்தது.

 

உடனே பரிதி, ராமலிங்கத்தை பிடித்து தள்ளி விட்டு, இனியனின் கையில் அவனுடைய கைக் குட்டையை எடுத்து கட்டினான்.

 

“ஹே.. முட்டாள் அந்த கார் என்னோடதுனு மட்டும் தான்டா உனக்கு தெரியும். ஆனால் அதை ஓட்டிட்டு வந்தது யாருனு தெரியுமா.. உங்க அப்பாடா இடியட்.” என்று சொல்ல,

 

அவனோ அதிர்ச்சியுடன் பரிதியை நோக்கினான்.

 

“என்ன பாக்குற.. அன்னைக்கு என்னோட காரை ஓட்டிட்டு போனது உங்க அப்பா தான். நான் இல்லை..” என்று பரிதி கூற,

 

சஞ்சய், “என்ன டா உளறுற..” என்று கேட்டான்.

 

“நான் ஒன்னும் உளறல.. உண்மை அதான். உங்க அப்பாவை இங்க வரச் சொல்லு டா..” இன்று பரிதி கோவத்தில் கர்ஜிக்க,

 

சஞ்சயோ அதில் சற்று மிரண்டு உடனே தன் தந்தைக்கு அழைத்து, அவன் இருக்கும் இடத்திற்கு வரும்படி கூறினான்.

 

அவரும் அரைமணி நேரத்தில் வந்து சேர, சஞ்சயும் ராமலிங்கமும் அமைதியாய் இருந்தனர்.

 

பரிதியோ வேட்டையாடும் புலி போல அங்கும் இங்கும் திரிந்தான்.

 

மகாலிங்கம் வருவதைப் பார்த்த பரிதி, “வாங்க.. நீங்க பார்த்து வச்ச வேலையால, உங்க பையன் இப்போ என்ன பண்ணிட்டு இருக்கான் தெரியுமா.. முதல்ல என்ன அழிக்க நெனச்சான். பிறகு என் தொழிலை. இப்போ இவளை..” இன்று நிரஞ்சனாவைக் கை காட்ட, அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

சஞ்சய் தன் அப்பாவிடம், “அப்பா.. உங்களுக்கு பவி தெரியும் தானே.. என்னோட பவித்ரா..” என்று கேட்க,

 

அவரோ, “ஆமா ப்பா..” என்றார்.

 

“அவ சாவுக்கு நீங்க தான் காரணம்னு இந்த பரிதி சொல்றான். அவன் மூஞ்சில அடிக்கிற மாதிரி பதில் சொல்லுங்க..” என்று சஞ்சய் ஆவேஷமாய் பேச,

 

மகாலிங்கம் பரிதியைப் பார்த்தார். அவனோ தனது சித்தப்பாவை ஆழ்ந்து பார்த்தான்.

 

அதுவே அவருக்கு கிழிப் பிடித்தது.

 

எச்சிலை கூட்டி விழுங்கியவர் “அது.. அது..” என்று இழுக்க,

 

“என்னப்பா.. யோசிக்கிறீங்க.. டக்குனு பதில் சொல்லுங்க..” என்றான் மகன்.

 

“அது வந்து.. அது வந்து.. என்னை மன்னிச்சிரு சஞ்சய்..” என்று தன் மகனைப் பார்த்து தயக்கத்துடன் சொல்ல,

 

அவனோ தனது தந்தையை குழப்பதுடன் பார்த்தான்.

 

“நான்.. நான் தான் காரணம்..” என்று சொல்லவும் உறைந்து போனான் சஞ்சய்.

 

ராமலிங்கமும் சஞ்சயின் பேச்சைக் கேட்டு தவறாக நடந்து கொண்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தவித்தார்.

 

நித்தமும் வருவாள். 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்