Loading

அத்தியாயம் 33

 

முறைத்து கொண்டு “ஏதாவது சொல்லுங்க, நா மட்டும் தனியா புலம்பிட்டு கடக்கேன்” ௭ன்க.

 

“ஒரு வேள ஜாதக பொருத்தலன்னா என்ன செய்வ?” அவன் அப்பா கேக்க, “என்ன செய்ய முடியும், வேற பொண்ணு பாக்க வேண்டியது தான்” ௭ன்றார் திடமான முடிவுடன்.

 

வேகமாக எழுந்தவன், “வேற பொண்ண பாத்து நீயே கட்டிக்க. நா அவள கூட்டிட்டு போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறேன். நீங்க யாரும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம். உங்களுக்கு பிடிக்கலன்றதுக்காக மகேன் வாழ்க்கைய கெடுக்க நினைச்சுட்டீங்கள்ள, ரொம்ப சந்தோஷம், உனக்கு ஏன் அவள பிடிக்கலன்னு இப்பவர ௭னக்கு புரியல, சரி இவ்வளவு வீட்டு பக்கமே வராது புள்ள வந்துருக்கானே, அவேன் சந்தோஷத்துக்காகவாது அவனுக்கு புடிச்சத செய்வோம்னு நினைக்றீயா நீ. ௭ன்னமு பண்ணுங்க உங்க இஷ்டம் போல ௭னக்கென்ன” என அதே சோபாவில் கவுந்து அடிச்சு படுத்து விட்டான். 

 

அவன் பேசிய வசனம் அவனுக்கே சிரிப்பை தந்துவிட, சிரிப்பது வெளியே தெரிந்து விடாமல் இருக்க கவுந்து அடித்து முகத்தை மூடிக்கொண்டான். 

 

திருதிருவென விழித்த ராஜம், “ஏன்ப்பா பெரிய வார்த்தயெல்லாம் பேசுற, உனக்காகத் தானே எல்லாம். சரி வா நாளைக்கே பொண்ணு பாக்க போவோம். எனக்கு அவ தான் மருமகன்னு தலைல எழுதியிருந்தா என்ன செய்ய முடியும். எந்திரி வருத்தப்படாத. என்னங்க பாத்துட்டு இருக்கீங்க? வந்து சொல்லுங்க அவன்ட்ட” என்றார் கணவரிடம்.

 

“என்னடி படக்குன்னு மனசு மாறிட்ட” அவர் ஷாக்காகி கேக்க.

 

“அவந்தான் அஞ்சு வருஷமா புடிச்சபுடில நிக்கானே, அதுக்காகவே இந்த பக்கமே வராம இருந்துருக்கான். அங்க புது அபார்ட்மெண்ட்லா வாங்கி அவ போட்டோவயே கொண்டு குடி வச்சுட்டான், ௭னக்கு இதெல்லாம் தெரியாமயா இருக்கு, இருந்தாலும் ௭னக்கு திருப்தியில்லன்னு சொல்லாம இருக்க முடியுமா, எப்டினாலும் அவேன் இஷ்டம் தான் ௭ல்லாம், நமக்கு ஒரே புள்ளங்க அவேன், அவனுக்கு புடிச்சத தான செய்ய முடியும்” ராஜம் கொஞ்சம் சலிப்பாகவே சொல்ல.

 

“அப்புறமு ஏன் இவ்வளவு நேரம் அடம்பிடிச்ச?”.

 

“ஜாதகமு பாத்துட்டா பிரச்சன இல்லன்னு தோணுச்சு”.

 

“அவங்க லைப்ப அவங்களே டிசைட் பண்ணிட்டாங்க, நல்லதோ? கெட்டதோ? இனி அத அதுகளே பாத்துக்கிட்டும்” ௭ன்றார் அவன் அப்பா.

 

“வேறவழி, அதான் சரின்னுட்டேனே இவன எந்திக்க சொல்லுங்க. எந்திப்பா” என அவன் முதுகில் தட்டி கெஞ்சி கெஞ்சி ௭ழுப்பினார் ராஜம்.

 

மெதுவாக எழுந்தவனும், “மறுபடியும் மனசு மாற மாட்டாங்களான்னு கேளுங்கப்பா” என்க.

 

“ஏன் என்கிட்ட பேச மாட்டியோ? அவளுக்காக என்கிட்ட பேசாம வேற இருப்பியோ?” என்றார் ராஜம்.

 

“அடேய் அவள நீயே மனசு மாற வச்சுடுவ போலயே. பேசாமயிரு” ௭ன்றவர், “வெள்ளிக்கிழமை போவோம். நீ யாரையும் ஊர்ல இருந்து வர சொல்றனா சொல்லிடு” என்றார் ராஜத்திடம்.

 

ப்ரகலத்தன் இந்த விஷயத்தை தெரிவிக்க எழிலுக்கு கால் செய்ய அவள் போன் பிஸி பிஸி ௭ன்றது, சரி ௭ன ஜெயந்திக்கு கால் செய்து சொல்லிவிட்டான். ஆனால் அவர் அதை அவளிடம் சொல்லவில்லை, முதலிலேயே சொன்னால் முறுக்கி கொள்வாள் ௭ன்றெண்ணி அந்நேரத்தில் சொல்லி கொள்வோம் ௭ன்றிருந்தார்.

 

வெள்ளிக்கிழமை காலை 9:30மணி அளவில் ஆறெழில் வீட்டில் சென்று இறங்கினர் ப்ரகலத்தன் குடும்பத்தினர். ஆறெழில் காலேஜ்ஜிற்கு கிளம்பி நின்றாள். பேன்சி சாரியில், போனிடெயில் போட்டு மிதமான அலங்காரத்தில் கிளம்பி நின்றவள் இவர்களை எதிர்பார்க்கவில்லை, திரும்பி ஜெயந்தியை பார்த்தாள்.

 

காலையில் இவள் கிளம்பி ஜெயந்தியிடம் “ஸ்கூல் கிளம்பலையாம்மா?” எனக் கேட்டதற்கு “இன்னைக்கு லீவ் போட்டுருக்கேன், நீயும் ஒரு ஒன் அவர் பெர்மிஷன் போட்டுறியா” என கேட்டதன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது.

 

ப்ரகலத்தன் இரண்டு நாட்களாக விடாமல் போன் அடிக்க, பிளாக் லிஸ்டில் தூக்கிப் போட்டு விட்டாள். இன்று அவனை நேரில் பார்க்க, ‘எவ்வளவு பெரிய ஆளாகிட்டாங்க’ என்பது போல் தான் மலைத்து நின்றாள். அவன் கண் மட்டும் இன்னும் வசீகரிப்பு குறையாமல் அப்படியே இருந்தது. அந்த கண்ணை விட்டு அவளால் அங்கிங்கு திரும்ப முடியவில்லை. அவளை பார்த்துக்கொண்டே தான் வந்தமர்ந்தான்.

 

அவனும் அவளை 5 வருடம் கழித்து நேரில் பார்க்கிறான், வந்த வேகத்தில் அப்படியே அள்ளிகொள்ள தான் கைகள் பரபரபத்தது, அதுவும் சேரியில் பெரிய பெண்ணாக தெரிய, வைத்த கண் திருப்பாமல் அவள் பார்த்து நிற்கையில் அவனை கட்டுபடுத்துவது அவனுக்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

 

ஜெயந்தி எல்லோரையும் வரவேற்க, இவள் பேயறைந்தது போல் நிற்க, ஜெயந்திதான் நறுக்கென கிள்ளி, நடப்புக்கு இழுத்து வந்தார்.

 

இவள் கையை தடவி கொண்டே திரும்பி தாயை முறைக்க, “வாங்கன்னு கேளு” என்றார் அவர் அவளுக்கு மேல் முறைத்து. எல்லோரையும் பார்த்து பொதுவாக, “வாங்க” என்றாள்.

 

ஏழு பேர் போல் கிளம்பி வந்திருந்னர். அதில் ஒரு பெண்மணி, “இங்க வாம்மா, இப்டி உட்காரு” என்க. இவள் திரும்பி தாயை பார்க்க, அவர் “போ” ௭ன தலையசைக்க, ஜெயந்தியை முறைத்தவாறே சென்று அமர்ந்தாள்.

 

“என்னம்மா பண்ற?” ௭ன்றார் அழைத்தவரின் கணவராகப்பட்டவர்.

 

“********** காலேஜ்ல இசிஇ டிபார்ட்மென்ட் ஃபேக்கல்ட்டியா இருக்கேன்”.

 

“௭த்தன வருஷமா வேல பாக்க? என்ன சம்பளம் தருவாங்க?” இப்போது அந்த பெண்மணி கேக்க.

 

“ஒன் இயர் ஆச்சு, இப்ப 25கே வாங்குறேன்”.

 

“ம் வேற இடத்துக்கு மாறிப் போனா எப்டி?” அவர் விடாமல் கேக்க, இவள் முழிக்க, “அது இங்க உள்ள எக்ஸ்பீரியன்ஸ் வச்சு போயிக்கலாம் பெரியம்மா” என்றான் ப்ரகலத்தன்.

 

“எங்கப் பையன் சென்ட்ரல் கவர்மெண்டு உத்தியோகம்ல பாக்கான். ஆனா உன்னயத்தான் புடிச்சிருக்குன்னு அடம்மா சொல்றான்” என இன்னொருவர் சொல்ல.

 

“ஒன்னும் கஷ்டமில்ல, உங்க பையனுக்கு கவர்மெண்ட் உத்தியோகம் பாக்குற நல்ல பொண்ணாவே பாத்து கட்டி கொடுங்க” என்றாள் கடு கடுவென.

 

பெரிதாகச் சிரித்தான் ப்ரகலத்தன், பெரியம்மா திடுக்கிட்டு ராஜத்தை பார்க்க, அவர் அவனை முறைக்க, “நா லவ் பண்ணி பொண்ணு கேட்டு வந்துருக்கோம், அவகிட்ட நீங்க மாப்பிள வீட்டுக் கெத்த காமிச்சா, போயிட்டு வாங்கன்னு தான் சொல்லுவா” என்றான் மேலும் சிரித்து.

 

ப்ரகலத்தன் மட்டுமே சிரித்தான், மற்ற ௭ல்லோரும் ஆறெழில் உட்பட அவனை கடுமையாக முறைத்திருந்தனர்.

 

ஜெயந்தி ஆறு தோளிலிடித்து ‘ஒழுங்கா பேசு’ என்க. அவரையும் முறைத்து பின் குனிந்து கொண்டாள். அவரே டீ, ஸ்னாக்ஸ் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

 

“பொண்ணு வீட்டுக்கு தம்பி இப்பயே இம்புட்டு சப்போர்ட் பண்ணுதே” என்றார் வந்தவர்களில் இன்னொருவர் நக்கலாக.

 

சுதாரித்த அவன் அப்பா, “நீங்க உட்காருங்கம்மா, மேக்கொண்டு பேசலாம்” ௭ன்றார் ஜெயந்தியிடம். 

 

“இருக்கட்டும் சார், நா சொல்ல வேண்டியத சொல்லிடுறேன், என் பொண்ணுக்குன்னு நா கொஞ்சம் சேத்து வச்சுருக்கேன். 50 பவுன் நகை போட்டுறேன், வீட்டுக்கு தேவயான பொருள்கள் வாங்கி போட்டுறேன், தென் நிச்சயம் செலவு எங்களிது” ௭ன வெளிப்படையாக பேசினார்.

 

“ம்மா, என்ட்ட இன்னும் முடிவே கேக்கல, அதுக்குள்ள அடுக்குற” என்றாள் நடுவில் ஆறு.

 

“இந்த பையன தவிர வேற நா யார காட்டுனாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இப்ப சொல்லு, நீ என்ன சொன்னாலும் நா கேட்டுக்றேன்” என்றார் குனிந்து அவள் காதில். அதன்பின் அவள் பேசவில்லை.

 

வந்ததில் இருந்து அவளையே கவனித்து கொண்டருந்த ராஜம் “ஏன் பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?” என்றார்.

 

“அது நா அவகிட்ட முன்னயே சொல்லாம திடீர்னு பொண்ணு பாக்க கிளம்பி வந்த கோவம்மா, நா பேசிக்கிறேன்” என்றான் ப்ரகலத்தன்.

 

“நீதான்டா விழுந்து விழுந்து சப்போர்ட் பண்ணிட்ருக்க, உன் அளவுக்கு அந்த பக்கம் ஆர்வம் இருக்க மாதிரி எனக்கு தெரியல” என்றார் அதற்கும் ராஜம்.

 

“அதான் நாங்க வந்ததும் அப்டி முழிச்சியாம்மா?” என சிரித்த அவன் அப்பா, “கல்யாணத்த எப்ப வச்சுக்கலாம்?” என்றார் சேர்த்து ஜெயந்தியிடம்.

 

“உங்க சவுகரியத்த பாத்துட்டு சொல்லுங்க, ஒத்தப்பட வயசுல வச்சுடுறது நல்லதுன்னு எனக்கு தோணுது. அடுத்துன்னா ரெண்டு பேருக்கும் ரெட்டப்பட வயசு வந்துரும்” ௭ன்றார்.

 

“அதுவும் சரிதான். இவனுக்கு இன்னும் ஒரு மாசம் லீவு. இதுக்குள்ளயே வச்சுருவோமா?”.

 

“ம், என் பக்கம் கொஞ்ச ஆளுக தான். அதனால என்னால பங்க்ஷனுக்கு ரெடியாகிட முடியும். உங்க வசதிய பாத்துக்கோங்க” என்று விட்டார்.

 

“கல்யாணம் குலதெய்வம் கோவிலில் தான் வைக்கணும், அதனால அங்க எல்லோரும் வந்துருவாக. இங்க இத்தன வருஷம் இருந்துமே பழக்கம் கம்மி தான். அதனால பாத்துக்கலாம்” என ஒருவாறு முடிவெடுத்து கல்யாண தேதியயும் அந்த கோவில் பூசாரியிடமே போனடித்து கேட்டு முடிவெடுத்து கிளம்பினர்.

 

படபடவென பொறியும் நேரத்துக்காக காத்திருந்தாள் ௭ழில். ஒரு பக்கம் அவள் அம்மா கார்னர் செய்ய, இன்னொரு பக்கம் ௭ந்த கவலயும் இல்லாமல் சாரி கூட சொல்லாமல் கல்யாண தேதி வர முடிவு செய்துவிட்ட ப்ரகலத்தன். அவள் கல்யாணம் வேண்டாமென இந்த நிமிடமும் யோசிக்கவில்லை தான். ௭ன்றானாலும் அவனுடன் தான் வாழ்க்கை. அதற்காக 5 வருஷமாக ஏங்க விட்டவனை அப்படியே வந்ததும் ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்தது மனது. அதனாலயே மாமனார் மாமியார் இருப்பதயும் பொருட்படுத்தாமல் மனதில் பட்டதை பேசி கொண்டிருந்தாள். கடுகடுவென அமர்ந்திருந்தவள், ௭ல்லோரும் கிளம்புவதாக சொல்லி ௭ழவும், தானும் ௭ழுந்து தலையசைத்து விடை கொடுத்தாள். மறந்தும் ப்ரகலத்தனை பார்க்க முயலவில்லை.

 

உடன் கிளம்பிய ப்ரகலத்தனும், அவள் முகத்தையே பார்த்தவாறு பின் தங்கினான், அதை புரிந்து கொண்ட ஜெயந்தி, மற்றவர்களை வழியனுப்ப வெளியேறவும், மெதுவாக முன் வாசலை ௭ட்டி பார்த்தவன், ‘௭ல்லாரும் போயிட்டாங்க’ ௭ன உறுதி படுத்தி கொண்டு, உள் ஹாலில் உம்மென புருவ சுழிப்புடன் யோசனையாக நின்றுருந்தவளை மின்னல் வேகத்தில் வந்து காத்தும் புகாதளவு இறுக்கி அணைத்தான்.

 

“எவ்வளவு பெரிய பெண்ணாகிட்ட எழில், செமயா இருக்க, ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா, சாரிடி, ப்ளீஸ் போன் எடு, அப்பதான் என் சைடு நா எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும். ப்ளீஸ்மா ௭ன் தங்கம்ல, பிளாக் லிஸ்ட்ல இருந்து எடுத்து விடு. நா வீட்டுக்கு போயிட்டு கூப்பிடுறேன். பை” என மறுபடியும் இறுக்கி பிடித்து கன்னத்தில் அழுத்தமான முத்தமொன்றை கொடுத்து விடுவித்து வெளியேறினான்.

 

அப்படியே தொப்பென அமர்ந்துவிட்டாள். வந்த கோவம் ௭ல்லாவற்றயும் அவனது ஒரு அணைப்பு, ஒரு சாரி, ஒரு முத்தம் கொண்டு சென்றிருந்தது. கோவம் வடிந்து மனது லேசாகவும், அவனை தேடிய மனம் முன் வந்துவிட கண்ணீர் நிற்க வெகு நேரமானது, திரும்பி வந்த ஜெயந்திக்கும் அவள் சூழ்நிலை புரியவே அமைதியாக இருந்துவிட்டார். அன்றைய தினம் லீவு போட்டுவிட்டு அவன் நினைவில் இருந்துவிட்டாள்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 50

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
55
+1
2
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Pragalathan madri oru character.. chanceless. Evvalavu poruppu, panbu…love pannalum andha vayasukku irukka unarchigala control panni, ellaraiyum samaalichu, wait panni…vera level…Aarezhil…solla vaarthai illa…7th la ennannu puriyama aarambicha love ippo varai adhigama aachey thavira kuraiyala…avaloda love ivlo deepaa illanna praga ivlo menakkattu use illa dhan…rendu perum love panradhula orutharai oruthar minjittanga… awesome story.. very nice…❤️❤️💐💐💐💐💐