Loading

“ஏன் அம்மு தனியா புலம்பி அழுவுற … வா உன் பாவா கிட்ட சொல்லு வா”…. என்று கூறிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தான்…. அவனின் குரலில் தூக்கிவாரி போட்டு அவனின் முகத்தைப் பார்த்தாள்…..

அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்து அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்…. அவள் அவன் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்….. அவனும் அவளைத் தான் பார்த்தான்….

“என்ன அம்மு உன் பாவாவ அப்டி பாக்குற”…. என்று கேட்டுக் கொண்டே கண் சிமிட்டினான்… அதை பார்த்து உடனே தலையைக் குனிந்துக்கொண்டாள்….

அவள் அமைதியாக இருந்தாள்…. “அம்மு  என்னைப்  பாரு”…. என்று அவளைப் பார்த்துக் கூறினான்….. அவள் இன்னும் தலையைத் தன் காலில் புதைத்துக் கொண்டாள்….

“அம்மு நீ என்னைப் பாக்குற வரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன்” என்று கூறிவிட்டு அவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்து கொண்டான்…..

கால் மணி நேரம் சென்றது…. அவள் அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை… அழுது கொண்டே இருந்தாள்…. இது வேலைக்கு ஆகாது என நினைத்து எழுந்து அவள் அருகில் சென்று முட்டி போட்டு அமர்ந்தான்…. அப்பொழுதும் அவள் அவனைப் பார்க்கவில்லை….

“ஏய் புள்ள… மாமன கொஞ்சம் பாக்குறது… எம்புட்டு நேரம் தான் தரையவே பாப்ப… இங்குட்டும் கொஞ்சம் பாக்குறது…” என்று பக்கா மதுரைக்காரனாக மாறி அவளிடம் பேச்சைக் குடுத்தான்…

அவனின் பேச்சின் மாற்றத்தை உணர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்……. அவள் பார்ப்பதை உணர்ந்து “என்ன புள்ள மாமன அப்டி பாக்குற… மாமன் அம்புட்டு அழகா இருக்கேனா” என்று கேட்டான்….

அவனின் கேள்வியில் அவள் சிரித்துவிட்டாள்… “என்ன புள்ள சிரிக்குறவ…. மாமன் அழகா இல்லையா” என்று கேட்டான்….. அதில் இன்னும் சத்தமாக சிரித்துவிட்டாள்……

அதில் நிம்மதியான அவன் அவளையே ஆதுரமாகப் பார்த்து கொண்டு இருந்தான்…. பிறகு அவளைப் பார்த்து பேச ஆரம்பித்தான்….. “அம்மு என்ன பாரு”…. என்று கூறினான்…. அவளும் அவனைப் பார்த்தாள்….

“அம்மு…. ஏன் உனக்கு என்ன பிடிச்சி இருக்குனு சொல்ல தயக்கம்….. உன் ராசியால யாருக்கும் தப்பா நடக்காது டா…. நீ பொறந்த அப்பா கடை எரிஞ்சி போனதுக்கு உன் அப்பா தான் காரணம்…. உங்க அப்பா கடைல போதை மருந்து வெச்சி இருந்து இருகாங்க….. போலீஸ்க்கு அது தெரிஞ்சி போச்சி… அத மறைக்க தான் உன் அப்பாவே கடைய அவரே நெருப்பு வெச்சி எரிய வெச்சிட்டாரு” என்று கூறினான்…..

“அப்புறம் அந்த ஆக்சிடென்ட் அது உங்க அப்பா யாரோ ரவுடி கூட சண்டை போட்டு இருக்காரு… அவரு நேரம் பார்த்து கொலை பண்ண பார்த்து இருக்காரு…. இதுல எதுவுமே உன் தப்பு இல்லை டா ம்மா…. இங்க வந்த வாட்டி உன்ன காலைல பாக்கலான எனக்கு நாளே போகாது டா அம்மு…. உன்னால எல்லாருக்கும் நல்லது தான் டா நடக்கும்” என்று கூறினான்……..

அவனைப் பார்த்து “நிஜமா என்னால யாருக்கும் கெட்டது நடக்காதா பாவா… என்னால யாரும் கஷ்ட படமாட்டாங்களா பாவா” என்று பாவமாக உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள்……

“இல்லை டா… உன்னால யாரும் கஷ்ட படமாட்டாங்க…. அப்புறம் உனக்கு யாரும் இல்லனு ஏன் டா சொல்ற…. வசும்மா, நிதிஷ், பிரியா கேட்டா எவளோ கஷ்ட படுவாங்க…. உன் மேல உயிரே வெச்சி இருகாங்கடா…. உனக்காக என்ன வேணா செய்வாங்க … இனிமே இப்டிலாம் பேச கூடாது சரியா…” என்று கேட்டான்…. அவளும் சரி என தலையை ஆட்டினாள்…

“அம்மு இப்ப சொல்லு என்னைப் பிடிச்சி இருக்கா” என்று அவளின் கண்ணைப் பார்த்து கேட்டான்…..

அவளும் அவனின் கண்ணைப் பார்த்துக் கொண்டே ஆம் என தலை ஆட்டினாள்…. “உன் வாயால சொல்லு அம்மு பிடிச்சி இருக்கா இல்லையானு” என்று கேட்டான்…..

“பிடிச்சி இருக்கு ஆனா அது காதலானு கேட்டா தெரியல பாவா ” என்று அவனின் கண்ணைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்….

“அம்மு என்னை நீ என்ன சொல்லிக் கூப்பிட்ட”என்று கேட்டான்… சொல்ல மாட்டேன் என்று தலையை ஆட்டினாள்….

“ஓகே விடு” என்றுக் கூறி விட்டு அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டான்…

“அம்மு இப்போ நம்ம தெளிவா பேசிக்கலாம்… நீ இன்னும் உன் படிப்பை முடிக்கல….. உன் படிப்பு முடியுற வர நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்…. உனக்கு பைனல் இயர் பினிஷ் ஆகுறதுக்குள்ள நீ உன்னோட பௌன்டேசன் பினிஷ் பண்ணி இருப்பனு நினைக்குறேன் கரெக்டா” என்று கேட்டான்…. அவளும் ஆம் என்று தலையை ஆட்டினான்….

“ஓகே பௌன்டேசன் பினிஷ் பண்ணு… அதுக்கு அப்பறம் உன்னோட இண்டர்(INTER) எங்க பண்ணலாம்னு நீயே முடிவு பண்ணு… சேலம் இல்லனா மதுரை எங்க வேணாலும் பண்ணு….  அது உன் முடிவு தான் ஓகேவா டா” என்றுக்  கேட்டான்……

அவளும் “ஓகே” என்று சொல்லிவிட்டு “உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சது??”…. என்று கேட்டாள்….

அது “இன்னொரு நாள் நான் சொல்றேன் டா”…. என்று கூறிவிட்டு “அம்முமா ஒரு கேஸ் விசயமா நான் பெங்களூரு போறேன்…. இன்னும் நான் அப்பத்தா கிட்ட கூட சொல்லல  உன்கிட்ட   தான் சொல்றேன்….  நாள மறுநாள் மதியம் கிளம்பனும் டா… அதுனால நாளைக்கு காலைல அப்பத்தாவைக்  கொண்டு போய் மதுரைல விட்டுட்டு நான் நைட் வந்துடுவேன்…. அதுக்கு அப்பறம் அடுத்த நாள் பெங்களூரு கிளம்பிடுவேன்…. வர ரெண்டு மாசம் ஆகும் டா”….. என்றுக் கூறினான்..

“என்ன பாவா சொல்றிங்க ரெண்டு மாசமா” என்று அதிர்ச்சியாகக்  கேட்டாள்….

“ஆமா அம்மு ரெண்டு மாசம் ஆகும்… உன்னோட பிடித்தம் காதலா சேன்ஜ் ஆகுதானு பாரு அம்மு….” என்று கூறினான்…

“பாவா என்னோட பிடித்தம் எப்பயும் அப்டியே தான் இருக்கும்…. காதல் அது வருமா தெரியாது…. ஆனா என்னோட கல்யாணம் எப்பயும் உங்களோட தான்” என்று கூறினாள்…..

“அம்மு நீ சொல்றது கரெக்ட் தான் எப்பயும் ஐ லவ் யூ சொல்லிட்டு இருக்குறது காதல் இல்லை… ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சி நடந்துக்குறது தான் காதல்….. “

“ஓகே டா…. நீ இந்த ரெண்டு மாசம் உனக்கு எதுக்குன்னா உன்ன நீயே புரிஞ்சிக்கோ… ரெண்டு மாசம் உன்ன நான் பாக்க மாட்டேன்…. நான் பாக்குற அப்ப கொஞ்சம் போல்ட் ஆன அம்முவ நான் பாக்கணும்…. எப்ப பாரு அழுகாம…. போல்டா பேஸ் பண்ணனும் டா….” என்றுக்  கூறிவிட்டு அவளின் உச்சியில் முத்தமிட்டான்…. அவள் அப்டியே வெக்கத்தில் நின்று விட்டாள்….

“ஓகே டா அம்மு நாம உள்ள வந்து ரொம்ப நேரம் ஆகுது… வெளிய போலாம்… எல்லாரும் அங்க வீட்டுல இருக்காங்க…” என்றுக் கூறி அவளை அழைத்து கொண்டு கீழே வந்து அங்கு இருக்கும் சோபாவில் அமர்ந்தான்…. பிறகு நிதிஷ்ற்கு அழைத்து அனைவரையும் வீட்டுக்கு வர சொன்னான்….

அனைவரும் வந்து இருவரை முகத்தைத் தான் பார்த்தனர்… இருவர் முகமும் சந்தோசமாக இருந்தது… அதை பார்த்து அனைவரும் நிம்மதி அடைந்தனர்… இரவு எட்டரை மணி ஆகி இருந்தது…. அதியின் வீட்டுலயே சமைத்து வசும்மா வீட்டிற்கு எடுத்து வந்து இருந்தனர்….

வசும்மா சாந்தாவின் அறைக்குச் சாப்பாடு எடுத்து சென்றார்.. அவர் இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தார்… அவரை எழுப்பி உண்ண கூறினார்… அவர் உண்டவுடன் மாத்திரை குடுத்து போட சொன்னார்… போட்ட சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார் அவர்…..

வசும்மா வந்தவுடன் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்க்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்… அப்போது தான் ஆதி பெங்களூரு செல்லும் விசயத்தைக் கூறினான்… அதோடு அப்பத்தாவை மதுரை அழைத்து செல்வதையும்…..

அவன் அப்டி சொன்னவுடன் அப்பத்தா அதியிடம் “ராசா நான் மருத போகல டா இங்கனவே இருக்கேன்”…. என்று கூறினார்….

அதி அவசரமாக “இல்லை அப்பத்தா நீ தனியா இருப்ப…. ஊருல இருந்து வந்து ரொம்ப நாள் ஆகுது…. நீ ஊருக்கு போ…. நான் வந்த வாட்டி நீ இங்க வந்துடு” என்று கூறினான்…

வசும்மா அதியிடம் “தம்பி அம்மா இங்கவே இருக்கட்டும் நாங்க இருக்கோம்ல இங்க…. நானோ இல்லை நிவேதாவோ அம்மா கூட போய் தூங்கிக்கறோம்”…. என்று கூறினார்…. பிரியா நிதிஷ் இருவரும் அதையே கூறினார்…. நிவேதாவும் கண்களால் அதையே கூறினாள்… அவளின் விழி அசைவில் மயங்கி அவன் அப்பத்தா சேலத்திலேயே இருக்க ஒத்துக்கொண்டான்….

சிறிது நேரம் பேசிவிட்டு அப்பத்தாவும் அதியும் அவன் வீட்டிற்கு சென்றனர்….

நிதிஷ் அறைக்கு சென்றுவிட்டான்…. வசும்மாவும் சாந்தா இருக்கும் அறைக்குத் தூங்க சென்றுவிட்டார்…. பிரியா நிவியின் அறைக்கு பேசச் சென்றாள்…. அங்கு அவள் அதியின் உச்சி முத்தத்தை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தாள்… அதை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த பிரியா அமைதியாக நிவேதாவின் பின்புறம் சென்று அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினாள்… அதில் நிவேதா துள்ளி குதித்து சிரித்தாள்….

“ஹே கேடி சொல்லு உனக்கு அண்ணாவை ஏற்கனவே பிடிக்கும் தானு… அதுனால தானு சீக்கிரம் சமாதானம் ஆன… இல்லனா உனக்கு பிடிக்காத விசயத்தை யாரு சொன்னாலும் நீ ஒத்துக்கமாட்ட சொல்லு பிராடு”… என்று கேட்டுக்கொண்டே கிச்சு கிச்சு மூட்டினாள்…

அவளும் சிரித்துக்கொண்டே ஒத்துக்கொண்டாள்…. “ஆமா பிடிக்கும்…. ப்ளீஸ் போதும் நிறுத்து அண்ணிம்மா…. மூச்சு வாங்குது…” என மூச்சு வாங்கிக் கொண்டே பேசினாள்…..

அவளும் போதும் என நிறுத்திவிட்டாள்…. “சொல்லு எப்ப இருந்து லவ் பண்ண???”  என்று பிரியா நிவேதாவிடம் கேட்டாள்….

“லவ்னு சொல்ல முடியாது…. ஆனா அவரை எனக்கு பிடிக்கும்” என நிவேதா பிரியாவிடம் கூறினாள்….

“சரி ஓகே நீ தூங்கு குட் நைட்” என கூறிவிட்டு பிரியா தன் அறைக்கு சென்றாள்… அங்கு அவளின் கணவன் தூங்க எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.. இவளும் பாத்ரூம் சென்று இரவு உடை அணிந்துகொண்டு நிதிஷின் பக்கத்தில் அமர்ந்தான்…

“குட்டிமா என்ன சொன்னா பாப்பு… அவளுக்கு அதிய பிடிச்சி இருக்குல” என்று கேட்டான்…. எங்கே தங்கை தங்களுக்காக ஒத்துக்கொண்டாளோ என நினைத்து….

“அவளுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு போதுமா…. வா மாமா தூங்கலாம்” என கூறி அவனின் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு அவனை அணைத்து கொண்டு தூங்கி விட்டாள்…அவனும் அவளுக்கு முத்தமிட்டுவிட்டு அவளை அணைத்து கொண்டு தூங்கிவிட்டான்…

நிவேதாவிற்கு புது எண்ணில் இருந்து செய்தி வந்தது.. “குட் நைட் அம்மு” என…. அப்டி வேறு யாரு அனுப்ப முடியும் அதியை தவிர…. அவளும் பதிலுக்கு “குட் நைட் பாவா” என அனுப்பி விட்டு தூங்கி விட்டாள்….

அடுத்த நாள் காலை….

சூரியன் மேக போர்வையில் இருந்து மெல்ல மெல்ல எட்டி பார்க்கும் ஆறு மணி வேளையில் வசும்மா எழுந்து தன் அறைக்குச் சென்று தன் அன்றாட வேலையைப் பார்க்க சென்று விட்டார்… சிறிது நேரத்தில் சாந்தாவின் அறையில் இருந்து பேச்சு குரல் கேட்டது…. என்ன பேச்சு சத்தம் என்று பார்க்க போன வசும்மா அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டார்….

(அப்படி வசும்மா என்ன பார்த்து இருப்பார் ????????)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அய்யோ இந்த சாந்தா இருக்கு … அவளை இங்க விட்டுட்டு போறான் அதி …