
பிறை -30
அழகிய சல்வார் அணிந்து தயாராகி வந்தாள் பார்கவி. அண்ணனை போல அப்படியே அழகிற்கு பஞ்சமில்லை. அவன் சற்று மாநிறம்.. இவள் மீனாட்சியை போல நல்ல நிறம்.
” எங்க டி போற இந்த நேரத்துல ”
” போகும் போது எங்க போறன்னு கேட்க கூடாது மா ”
” சரி அப்போ வரும் போது எங்க இருந்து வருவ ” என்ற மீனாட்சியை பார்த்து முறைத்தவள்.. ” வர வர ரொம்ப டிவி பார்க்குற மீனு ” என தலையில் கைவைத்து விட்ட மகளை பார்த்து சிரித்தவர்..
” இங்க பாரு டி என் புருஷன் மட்டும் தான் என்னைய மீனுன்னு கூப்பிடனும், நீ அம்மான்னு கூப்பிடு டி ” முனைத்துக் கொண்டார் மீனாட்சி.
” ஓ ரொமான்டிக் ”
” அப்படியே வச்சுக்கோ.. கேட்டதுக்கு பதில் சொல்லு ”
” சர்ச் போறேன் மா.. என் பிரெண்ட பார்க்க ”
” சரி நேரத்தோட வீட்டுக்கு வா.. உன் அண்ணன் வந்தா பதில் சொல்லனும் ” என ஜாடையாக மிரட்டினார் மீனாட்சி.
” அவனுக்கு தான் அண்ணி வந்தாச்சில்ல .. எதுக்கு என்ன பத்தி யோசிக்கிறான். ஒழுங்கா அவங்களை லவ் பண்ணுற வழியை பார்க்க சொல்லு ”
” இதே வசனத்தை உன் அண்ணன் கிட்ட சொல்லி பாரேன்..”
” கிளம்புறேன் மா ” என பையை போட்டு கொண்டு ஓடியே விட்டாள் பார்கவி.
பின்னே இந்த வசனத்தை எல்லாம் அவன் முன் நின்று பேசி விட முடியுமா.. அவனது ஒவ்வொரு பார்வையையும் எதிர் கொள்வதற்கு அத்தனை தூரம் நடுங்கிப் போவாள் பார்கவி.
இப்போது வரை அவனது திருமணத்திற்கு ஒரு வாழ்த்து கூட கூறவில்லை. அண்ணனை நேரில் பார்த்தால் தானே கூற வேண்டும்.. அவள் தான் அவன் வருவதற்குள் அறைக்குள் சென்று அடைந்து கொள்கிறாளே! பிறகு எங்கே வாழ்த்து கூறுவது.
அவளது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு சிட்டாக பறந்திருந்தாள் பார்கவி.
வழக்கம் போல சர்ச் வாசலில் நின்றிருந்த பார்கவி.. அங்கு வாசலில் விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை வாங்கி ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டு காத்திருந்தாள்.
அவள் வந்து பத்து நிமிடம் ஆகிய நிலையில், கடலையும் முடிந்து விட, சரியாக அதே நேரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு அவளை நோக்கி ஓடி வந்தான் அர்ஜுன்.
” வந்து ரொம்ப நேரம் ஆச்சா கவி..”
” எப்பவும் போல தான் கடலை காலி ஆகவும் வந்துட்டீங்க அர்ஜுன் ”
” சரி வா உள்ள போகலாம் ” என இருவருமாக சர்ச் உள்ளே சென்றனர்.
அர்ஜுன் இந்து மதம் தான்.. ஆனால் கிறிஸ்துவ மதத்தின் மீதிருந்த ஈடுபட்டால் இயேசுநாதரை வணங்க சரியாக வந்து விடுவான். அங்கே தான் இருவரும் சந்தித்து கொள்வார்கள்.
இருவரும் உள்ளே சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள். சில மணி நேரத்தில் பிராத்தனை ஆரம்பித்து விட்டதும்.. இருவரும் கண்களை மூடி மனமுருகி வேண்டுதலை வைத்து விட்டு வெளியே வந்தனர்.
” என்ன கவி.. முகமே ரொம்ப பிரைட்டா இருக்கு ”
” என் அண்ணனுக்கு பொண்ணு பார்த்தாச்சு.. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் ”
” என்னது அதுக்குள்ளையா ”
” ஆமா.. இப்போ கூட டிவில வந்தாங்களே.. அவங்க தான் என் அண்ணி.. அவங்களையே வீட்ல பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டாங்க.. ஆனால் என் அண்ணி ரொம்ப அமைதி. அவங்களையும் என் அண்ணன் படுத்தி எடுக்க போறான். ஒன் வீக்ல கல்யாணம். அப்பறம் இந்த கேஸ் எல்லாம் முடியவும், கிராண்டா ரிசப்ஷன் வைக்கலாம்னு அப்பா சொல்லியிருக்காங்க.. அதுக்கு உங்களை இன்வைட் பண்ணுறேன் அர்ஜுன் ”
” இதை நீ சொல்லனுமா கவி.. எப்படியோ ரொம்ப சந்தோஷம்.. உன் அண்ணன் குடும்பஸ்தன் ஆக போறாரு. என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு”
” கண்டிப்பா .. ரிசப்ஷன் அப்போ எங்க அண்ணனை நேர்ல மீட் பண்ணி நீங்களே சொல்லிடுங்க.. அப்போதான் உங்களையும் என் குடும்பத்துல இன்ட்ரோ கொடுக்கலாம்னு இருக்கேன்..”
” இவ்வளவு சீக்கிரமா எதுக்கு கவி ”
” இவ்வளவு நாள் நான் ஒரு விஷயத்தை வீட்ல சொல்லாம இருந்ததே இல்ல அர்ஜுன். முதல் முறையா உங்க விஷயத்தை தான் சொல்லல.. ”
” உங்க விஷயம்ன்னு சொல்லாத கவி.. நம்ம விஷயம்”
” ம்ம் நம்ம விஷயம் ”
” இன்னும் நான் மட்டும் தான் காதலிக்கிறேனா கவி.. உனக்கு என் மேல காதல் இல்லையா ” எனக் கேட்டவனை முழித்து பார்த்தவள்..
” அப்படியெல்லாம் இல்ல அர்ஜுன். எனக்கும் உங்களை பிடிக்கும்.. கல்யாணம் பண்ணா காதல் வரப் போகுது ” சிறுபிள்ளையாக பேசும் அவளை.. பெரும் மூச்சுடன் பார்த்தவன்.. ” ம்ம் போகலாமா ”
” ம்ம் எனக்கு நேரம் ஆச்சு.. அண்ணன் வரதுக்குள்ள நான் போகனும் ” என பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தாள் பார்கவி. போகும் அவளையே கலங்கிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவர்களை இரு விழிகள் பார்த்ததை இருவருமே உணரவில்லை.
***
அவளிருக்கும் திசை நோக்கி அடியெடுத்து வைத்த பார்வையை.. கடினத்துடன் அடக்கிக் கொண்டு பார்வையை சாலையில் மட்டுமே பதித்து கொண்டு வண்டி ஓட்டுவதற்கு மிகவும் கடினப்பட்டான் ஆதிதேவ்.
அவள் மீதிருந்த வந்த நறுமணம், வெளியே இருந்து வந்த இயற்கை காற்றுடன் கலந்து புதியதோர் நறுமணத்தை உண்டு செய்து, அவனது நாசியில் ஏறி, அவனது உடலை புத்துணர்வுக்கு அழைத்து செல்ல.. அதனை ஆழ்ந்து அனுபவித்து கொண்டே சாலையில் சீறிக் கொண்டு சென்றான் ஆதி.
அவளும் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வழியில் இருந்த சிக்னலில் அவன் காரை நிறுத்த.. பார்வை என்னவோ நாலாபுறமும் நோட்டமிட்டு கொண்டே இருந்தது. இவளை எப்படி அழைத்து சென்றோமோ.. அதே போல அவளை வீடு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தான் ஆதி.
ஒவ்வொரு நொடியும் அவளது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்தான் ஆதி.
சிக்னலில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவர்.. இவர்கள் ஜோடியாக இருப்பதை பார்த்து.. மல்லிகை சரத்தை கொண்டு வந்து நீட்டினார்.
” சார்.. வாங்கி கொடுங்க சார்.. கம்மி விலை தான் ” என மல்லிகை பூவை கொடுக்க.. அவனது கைகள் தானாக பூவை வாங்கிக் கொண்டது.
வாங்கிய நொடி அவளது கைகளில் கொடுக்க.. அவளும் வாங்கிக் கொண்டாள். பிறகு காசை கொடுத்து விட்டு காரை கிளப்பினான் ஆதி.
அவளது கூந்தலில் பூ இல்லாததை உணர்ந்தவன்.. எதை பற்றியும் யோசிக்காமல் வாங்கி விட்டான்.
காரை கிளம்பியதும்.. கையில் இருந்த பூவை ஒரு முறை பார்த்தவள்.. முன்னால் இருந்த டேஷ் போர்டில் இருந்த முருகனுக்கு வைத்து விட்டு அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அதில் சற்றே சினம் எழுந்தது அவனுக்கு. பூ வாங்கிக் கொடுத்தால் அதை தலையில் வைக்காமல், சாமிக்கு வைத்ததில் அவனுக்கு கோபம் ஏறியது.
அதேநேரம் ‘ பூவை வாங்கிக் கொடுத்து , உனக்கு தான் வச்சுக்கோன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆக போகுது.. அத சொல்ல வாய் இல்லையா இவருக்கு.. அப்படி ஒன்னும் இந்த பூ தேவையில்ல ‘ என அங்கே வைத்து விட்டாள்.
கோபத்தில் கார் அதிவேகம் எடுக்க.. முன்னாள் உள்ள இருக்கையில் அமர்வதற்கே அத்தனை பயமாக இருந்தது அவளுக்கு.
” கொஞ்சம் மெதுவா போனா என்ன ” பயத்தில் கேட்டே விட்டாள்.
” இருக்க இஷ்டம் இருந்தா வா.. இல்லைனா இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போ ” வெடுக்கென்ற அவனது பேச்சில், அவளுக்கு தான் ஒரு மாதிரியாகப் போனது.
மீண்டும் அமைதியே நிலவ.. கடை பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு அவன் இறங்கி நிற்க.. தனக்கு முன்னால் இருந்த மல்லிகையை வெறித்துப் பார்த்தவள்.. பின் அதை எடுத்து அதிலிருந்து கொஞ்சமாக எடுத்து முருகனுக்கு வைத்து விட்டு.. மீதம் உள்ள மலரை எடுத்து அவளது சிகையில் சூடிக் கொண்டாள்.
அவளது புடவைக்கும், அவளது முகத்திற்கும் அந்த மல்லிகை மலர் அத்தனை அழகாய் இருந்தது. வெளியே வந்த பிறையை பார்த்தவனுக்கு.. மனதெங்கும் சில்லென்று மழைச்சாரல்.
உற்சாகத்துடன் கடைக்குள் நுழைந்தவனை முறைத்து கொண்டே பின்னால் சென்றாள் பிறை.
” கல்யாண புடவை பார்க்கனும்” என கேட்டுக் கொண்டே உள்ளே சென்றவன், தளத்தை தெரிந்து கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு லிப்டில் ஏறினான்.
அவனும் அவளும் மட்டும் அந்த லிப்டில் இருக்க.. மல்லிகையின் வாசம் அந்த இடத்தை அமர்களப் படுத்த.. இழுத்து நறுமணத்தை சுவாசித்தவன்..
” நைஸ் பிளேவர்” என்றவனை பாராமல் குனிந்து கொண்டாள் பிறை.
பின் பட்டு தளத்திற்கு சென்றவர்கள்.. அவன் கேட்டதை போல பட்டுக்களை எடுத்து விரிக்க ஆரம்பித்தார்கள்.
விரிக்கப்பட்டிருந்த அத்தனை பட்டுகளும் ஒவ்வொரு விதமான அழகை கொண்டிருந்தது. பிறைக்கு தான் சேலை என்றால் பிடிக்குமே.. பார்த்ததுமே அவளுக்கும் பிடித்து போக.. இருந்தும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவன் தான் ஒவ்வொன்றாய் தரத்தை பார்த்து எடுத்துக் கொண்டிருந்தான். ” வேற கலெக்ஷன் காட்டுங்க ” என்றவனை முட்டை கண்கள் விரிய பார்த்தாள் பிறை.
அவனுக்கு முன்னால் இருந்த சேலைகள் எல்லாம் அத்தனை அழகாய் இருக்க.. இவன் அடுத்த புடவையை கேட்கிறானே என்ற எண்ணம் தான். மொத்ததில் பெண்கள் செய்ய வேண்டியதை இவன் செய்து கொண்டிருந்தான். அவள் ஆண்களை போல ஒதுங்கி அமர்ந்திருந்தாள்.
அவன் கேட்டதை போல ஜரிகை வைத்த அழகான புடவைகள் எல்லாம் கொண்டு வரப்பட்டது.
அதில் ஆகாய வண்ண நிறத்தில் ,சிவப்பு நிற பார்டரும்.. அதில் தங்க ஜரிகைகளும் போட்ட பட்டு அவனது கண்ணை கவர.. அதை கையில் எடுத்து புடவையை ஒரு கணம் பார்த்தவன்.. அவளையும் பார்க்க.. அவனது பார்வையையும் கையில் இருந்த புடவையையும் மாறி மாறி பார்த்தவளுக்கு புரிந்து விட்டது.
அவளுக்குமே அந்த புடவை பிடித்திருந்து. ” இத டிரெயல் பண்ணி பாரு ” என்றதும்.. ஊழியர் பெண் வந்து கட்டி காண்பிக்க, அந்த சேலையில் அவளை பார்த்தவனுக்கு கண்களை அகற்ற முடியவில்லை.
” சார்.. சார் உங்களுக்கு ஓகே வா ” ஊழியர் பெண் இருமுறை அழைத்ததும் தான் நினைவிற்கு வந்தவன்.. சரி என்பதாக தலையசைத்து விட்டு திரும்பிக் கொண்டான்.
‘ ஏன் ஒரு மாதிரி ஆகிட்டாரு.. இவரு தானே செலக்ட் பண்ணாரு ‘ என்ற யோசனையோடு அவனருகில் வந்தவள்..
” உங்களுக்கு அந்த சேலை ஓகே தானே .. ” இருப்பு கொள்ளாமல் கேட்டு வைத்தாள்.
” ம்ம் எனக்கு ஓகே தான்.. ஆனால் இப்போ எனக்கு பட்டு வாங்குற மூட் இல்ல.. சோ அதை பேக் பண்ண சொல்லிட்டு வா.. நம்ம பர்ஸ்ட் நைட்டிக்கு சேரி வாங்க போகலாம் ” என்றவனை அதிர்ச்சியாக பார்க்க..
” இப்படியே எத்தனை முறை அதிர்ச்சியா பார்க்க போற.. சேலை வேணாமா .. உன் இஷ்டம் .. சேலை கட்டிட்டு வந்தாலும்.. ஓகே.. இல்லைனாலும் டபிள் ஓகே ” கண்ணடித்து கூறியவனை பார்க்க இயலாது அந்த தளத்தில் இருந்த படிக்கட்டுகளில் வேகமாக இறங்க ஆரம்பித்தாள் பிறைநிலா.
கமிஷனரிடம் இருந்து இப்படி ஒரு அதிரடியை அவள் எதிர்பார்க்கவில்லை. அவனும் அவளிடம் இப்படி எல்லை மீறி பேசுவான் என எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்தாலே தானாக வந்து விடுகிறது.
எதிர்பார்ப்புகள் இல்லாதது தானே காதல். இன்னும் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் காத்திருக்கிறதோ!
சனா💖

