
அத்தியாயம் 30
எவ்வளவு நேரம் முத்தம் இட்டானோ, அவள் மூச்சுக்கு ஏங்க, அவளை மெல்ல விடுவித்தான்.
அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் அவன் கொடுத்த அதிரடி முத்தத்தில் இருந்து, தன்னை சமன் படுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டவள், கண்களை திறந்து மெல்ல அவனைத் தான் பார்த்தாள்.
அவனோ அவளைத் தான வசீகர புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்படி.. நான் சொன்னதுக்கு எதுவுமே பேசாம போனீங்க. இப்போ வந்து முத்தம் கொடுக்கிறீங்க. நான் சொன்னதை நம்பலாமா வேண்டாமானு யோசிச்சிட்டு வந்தீங்களா..” என்று அவள் ஆதங்கமாக கேட்க,
“எனக்கு எல்லாம் தெரியும். உன் வாயால நீயே சொல்லணும்னு தான், நான் அப்படி பேசுனேன்.” என்றான் அவன்.
“என்ன தெரியும் உங்களுக்கு. அதுவும் இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொன்னது இல்லை. அப்புறம் எப்படி..” என்று அவள் புரியாமல் கேட்க,
“ஒரு நிமிஷம் இரு..” என்றவன் தன் அறைக்குச் சென்று எதையோ எடுத்துக் கொண்டு, சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்தவன் அவளிடம் அதைக் காண்பித்து, “இது மூலமா தெரிஞ்சிகிட்டேன்..” என்றான்.
“என் டைரி எப்படி உங்க கையில.. இங்க வந்ததுக்கு அப்புறம். நான் அதை மறந்தே போய்ட்டேன்..” என்றவள், அவனுக்கு எப்படி கிடைத்தது என்று அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என் கைக்கு இது வரணும். உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கணும்னு இருக்கு.. அதான் வந்து இருக்கு.” என்றான் தோள்களை குலுக்கியவாரு.
“அதான் எப்படி உங்ககிட்ட கெடச்சதுனு சொல்லுங்க..” எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவனிடம் கேட்க,
“எதுக்கு இவ்ளோ அவசரம்.. வா. உக்காந்து பேசுவோம்..” என்று அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவாரு, அருகில் இருந்த கட்டிலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான்.
“இதை நீ உங்க வீட்டுல இருந்து வரும் போது எடுத்துட்டு வந்தியா..” என்று கேட்டதற்கு,
“இல்லை. எல்லாம் எடுத்து வச்சிட்டு கடைசியா தேடும் போது அது கிடைக்கல.. அதுக்கு அப்புறம் நேரம் ஆச்சுனு அப்படியே கிளம்பி வந்துட்டேன்..” என்றாள்.
“ம்ம்ம்ம். அதுக்கு அப்புறமும் நீ தேடுனாலும் கெடச்சி இருக்காது.” என்று அவன் கூற,
“ஏன்..” என்றாள்.
“இதை உன் தம்பி அவன் புக்ஸ் எல்லாம் எடுத்து வைக்கும் போது சேர்த்து எடுத்து வச்சிட்டான். அவன் இப்போ காலேஜ் டூர் போறதுக்கு முன்னாடி பார்த்து உங்கிட்ட கொடுக்க வந்து இருக்கான். ஆனால் நீ உன் ரூம்ல இல்லை. கரெக்ட்டா நான் அப்போ என் ரூம்ல இருந்து வரவும் என்கிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லிட்டு போய்ட்டான்.
என்னனு பார்த்த போது அது டைரினு தெரிஞ்சது.. ஜஸ்ட் ரெண்டு பக்கத்தை தான் முதல்ல பார்த்தேன். அதுல உன்னோட வாழ்க்கையில நடக்குற முக்கியமான சம்பவங்கள் மட்டும் அன்ன அன்னைக்கு தேதியில எழுதி வச்சி இருந்த.
உங்கிட்ட கொடுத்துரலாம்னு தான் வாங்குனேன். ஆனால் என்ன தான் எழுதி இருக்கனு படிச்சி பார்த்துட்டு கொடுப்போம்னு, அதை படிச்சேன்.
எனக்கு ஆக்சிடண்ட் ஆனது.. விக்ரமுக்கு சர்ஜ்ரி பண்ணது, உன் செயினை மிஸ் பண்ணது, உன் தம்பி காலேஜ்ல சேந்தது .. உன் கனவை பத்தி ஆரம்பித்துல ஒரு விதம் தயக்கம் அண்ட் பயம்.. அதுக்கு அப்புறம் அந்த கனவுல வந்தவனை காதலிச்சது.. நீ வேலையில சேந்தது.. காயத்ரிகிட்ட என்னை பத்தி தெரிஞ்சிகிட்டது.. அப்புறம். நான் வீட்டுக்கு வந்ததை உனக்கு தெரியப் படுத்துனதுனு எல்லாத்தையும் படிச்சிட்டேன்.
அது வரைக்கும் தான் நீ எழுதி இருந்த.. அதுக்கு அப்புறம் நீ அதுல எழுதல.
எனக்கு படிச்சதுக்கு அப்புறம் அது நான் தான்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிப் போச்சு. ஆனால் நீ எதுக்கு அதை மறைக்கிற.. அதை உன் வாயால சொல்ல வைக்கணும் தான் நான் அவ்ளோ பேசுனேன்.. ” என்றான்.
“அப்புறம் ஏன் எதுவும் பேசாம போனீங்க..” என்று அவள் சிறு குழந்தை போல அழுது கொண்டு பேச,
“அதுவா.. அது அம்மாகிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு வந்தேன்..” என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி.
“நீங்களும் என்னை நம்பலனு எவ்ளோ அழுதேன் தெரியுமா..” என்று சிறு குழந்தை போல சொல்ல,
“நீ அன்னைக்கு சொன்னப்போ எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா. அதான் கொஞ்ச நேரம் உங்கிட்ட விளையாட்டு காட்டுனேன். ” என்றவனை லேசாக அவன் மார்பில் குத்த, அவனோ அணைத்துக் கொண்டான்.
“சரி.. டைரில என்னென்னமோ எழுதி வச்சி இருந்தியே. அது எல்லாமா கனவுல வந்துச்சு?? ” என்று அவன் அவளை அணைத்தவாரே கேட்க,
“ம்ம்ம். ” என்றாள் அவனது மார்பினில் வாகாக சாய்ந்தபடி.
“அப்போ என்னை பார்த்தப் பிறகு அது தானே தோணி இருக்கும் உனக்கு..” என்று அவன் அவள் காதினில் கிசு கிசுக்க,
“ஆமா.. அப்படி இருக்குறப்போ, என்னால வேற ஒருத்தரை எப்படி நெனச்சி பாக்க முடியும்.. ஆனால் உங்கள பார்த்து பிறகு அந்த கனவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா.” என்றவளிடத்தில்,
“அதை உனக்கு நேராவே சொல்லிக் கொடுத்துக்கிறேன். எதுக்கு கனவுல..” என்று அவன் சில்மிஷமாய் கூற,
“ச்சி.. போங்க..” என்று வெட்கத்தில் மேலும் மேலும் அவன் மார்பினில் புதைந்தாள்..
அப்பொழுது அவன் கழுத்தில் அணிந்து இருந்த அவளது சாங்கிலி தட்டுப்பட, அந்த சங்கிலியோடு சேர்த்து அவன் மார்பினில் மெல்லிய முத்தம் வைத்தாள்.
அவளாக கொடுக்கும் முதல் முத்தம். கண்ணை மூடி ஆழ்ந்து அனுபவித்தான்.
அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
இத்தனை நாள் தவிப்பு, ஏக்கம், வலி என அனைத்தும் தீர முத்தம் இட்டான் அவளை.
பாவம் பெண்ணவள் தான் திக்கு முக்காடிப் போனாள்.
“நம்ம ரொம்ப நேரம் ரூம்குள்ள இருக்கோம். எதுவும் நெனச்சிக்க போறாங்க. வாங்க போவோம்..” என்று அவனை வெளியே அழைத்துச் செல்ல,
அப்பொழுது தான் மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.
மற்றவர்கள் வருவதைப் பார்த்த நிரஞ்சனா, பரிதியிடம் இருந்து சற்றுத் தள்ளி நின்றவளை, மீண்டும் அருகில் இழுத்து அவளது கையை பிடித்துக் கொண்டான் இறுக்கமாக.
“என்ன பொண்ணு மா நீ. நீ பரிதியை தான் விரும்புறேன்னு சொல்லி இருந்தா நாங்க என்ன சொல்லப் போறோம். அதுக்கா இவ்ளோ பயந்த.. நல்ல பொண்ணு நீ..” என்று மங்களம் சிரித்தபடி கூற,
அவளோ பரிதியைப் பார்க்க, அவனோ, ” இதை மட்டும் தான் டி சொன்னேன். வேற எதுவும் சொல்லல..” என்றான்.
தன் தாயைப் பார்த்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் போதே, இனியனை அழைத்து விஷயத்தைக் கூறி விட்டான்.
அதனால் அவனும் அண்ணனை அணைத்து “என்ஜாய் ண்ணா.. போய் கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. நான் லேட்டா கூட்டிட்டு வரேன்.” என்று சொல்லி அனுப்பி இருந்தான் இனியன்.
இதோ, பெரியவர்களின் மகிழ்ச்சியும், இளசுகளின் உற்சாகமும் சேர்ந்து அங்கே கொண்டாட்டம் களை கட்டியது.
பரிதி, நிரஞ்சனாவின் கையை விடவே இல்லை.
அவள் கூட அவனிடம் சொல்லி சொல்லி அழுத்து விட்டாள்.
ஏனோ, அவனின் தவிப்பு தீரும் வரைக்கும் அவளை விட மாட்டான் என்று தான் தோன்றுகிறது.
அவள் தனக்கு இல்லையோ என்று உள்ளுக்குள் மருகி மருகி கிடந்தவன், இப்பொழுது தன்னவளாகி விட்டாள் என்பதால் அந்த வலியை இதன் மூலம் போக்கிக் கொண்டிருக்கின்றான்.
“ஏன் மாமா.. கொஞ்ச நேரம் முன்ன எப்படி இருந்தீங்க.. இப்போ எப்படி இருக்கீங்க. என்ன நடந்துச்சு அதுக்குள்ள. அப்படி என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்..” என்று வைஷு பரிதியிடம் கேட்க,
“ஹே.. உனக்கு எதுக்கு அவங்க பர்சனல். நீ பேசாம இரு..” என்று இனியன் அவளை அதட்ட,
“உனக்கு என்ன நான் கேட்டா.. மாமா சொல்லுங்க மாமா..” என்று இனியனிடம் கூறி விட்டு பரிதியிடம் கேட்டாள்.
“அதான் இனியன் சொல்றானே. அது எங்க பர்சனல்னு. அப்போ தெரிஞ்சிக்க ஆசைப்படாத..” என்றான் பரிதியும் சிரித்துக்கொண்டே..
“என்னமோ நடந்து இருக்கு. அதான் மறைக்கிறீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும்..” என்று அவளும் அவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
சிரிப்பும் கேலியும் கிண்டலுமாக சென்றது அன்றைய தினம்.
விக்ரமும் கல்லூரி சுற்றுலா முடித்து வந்தவுடன், அவனிடமும் கூற, “ஹே… சூப்பரு.. அக்கா அப்போ நம்ம இனிமே இங்கதானே இருக்கப் போறோம்.. சூப்பரு.. மாமா வாழ்த்துக்கள்..” என்று இரு மாமனிடமும் சந்தோஷம் போங்க மகிழ்ச்சியை தெரிவித்தான்.
அடித்தடுத்த நாட்களில், ஜோசியரிடம் நல்ல நாள் பார்த்து குறிக்க, அவர் ஒரு மாத இடைவெளியில் மூகூர்த்த தினத்தை குறித்து கொடுத்து இருந்தார்.
இனியனும் பரிதியும் மட்டுமே அலுவலகம் சென்று வந்தனர்.
அக்காவும் தங்கையும் வீட்டிலேயே கேலி கிண்டல் பேசி பொழுதை கழித்தனர்.
பரிதிக்கு, நிரஞ்சனாவின் அறை தன் அறைக்கு பக்கத்தில் இருந்தது வெகு வசதியாக அவனுக்கு அமைந்து விட்டது.
அலுவலத்தில் இருந்து வந்த பிறகு தன் காதலை வளர்த்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்க, இனியன் அவனுடைய காதலியுடன் நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான்.
அவர்களின் தனிமையில், பரிதி மற்றும் நிரஞ்சனாவை பற்றிக் கூறி இருந்தான் இனியன்.
“ஓஹோ.. அப்போ ரெண்டு பேரும் முதல்லயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா.. சரிதான்.. ஆனால் அக்கா கொடுத்து வச்சவ.. நானும் தான் இருக்கேனே..” என்றாள் சலிப்புடன்.
“உனக்கு என்ன டி..” என்றான் அவன்.
“மாமா.. அக்காவை எவ்ளோ கேரிங்கா பார்த்துகிறாரு. நீ அப்படி நடந்து இருக்கியா. எனக்கு அந்த மாதிரி ஒரு ஆபத்து வரலைனா, நீ என்கிட்ட உன் லவ் சொல்லி இருப்பியா..” என்றான் அவள்.
“அப்படி எல்லாம் இல்லை வைஷு.. நம்மளோட ஆழ் மனசுல நம்ம காதல் நமக்கே தெரியாம இருக்கும்.. ஆனால் அது வெளிப்படுறதுக்கு ஒரு சூழ்நிலை வேணும்ல. அது எப்படி வேணும்னாலும் இருக்கலாம். இப்படி தான் அமையனும்னு இல்லை.
நீ மத்த ஆண்கள் கூட, லைக் நம்ம ஆபீஸ் ஸ்டாப் வச்சிக்கோ. அவங்ககிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போது எனக்குள்ள ஒரு பொறாமை தானா ஏற்படும். அது எரிச்சல் பட்டு உன்ன வந்து திட்டுவேன். அதே சமயத்துல நீ பேசுற ஆளு எப்படி னு தெரிஞ்சிகிட்டு தான் உன்ன வந்து திட்டுவேன்.
அவங்க பார்வை உன் மேல தப்பா பட்டுச்சுன்னா, அதை பார்த்து எப்படி டி சும்மா இருக்க முடியும்.
அந்த மாதிரி நிறைய டைம் நடந்து இருக்கு. உன்னையும் வார்ன் பண்ணுவேன்.
பேசுற நபரையும் வார்ன் பண்ணுவேன்..” என்றான் அவன்.
“அடப்பாவி.. அதுனால தான் என்னை ஒர்கிங் டைம் ளா பேசாதனு வந்து சொல்லுவியா?? ” என்று கேட்டிட,
அவனும், ” இப்போயாவது புரிஞ்சதே..” என்றான்.
“சோ ஸ்வீட்..” என்று அவன் கன்னத்தை பிடித்துக் கொஞ்ச,
“போடி..” என்று தட்டி விட்டான்.
“அச்சோ.. என் செல்லம்..” என்று அவனது கன்னத்தில் முத்தம் வைக்க, அதன் பிறகு அந்த முத்தத்தை தனதாக்கிக் கொண்டான் ஆடவன்.
பெரியவர்களுக்கு இவர்களின் ஜோடிப் பொருத்தம் பார்க்க பார்க்க, மகிழ்ச்சியாய் இருக்க, தன் தம்பி விநாயகத்திடம், “பிள்ளைகளுக்கு சுத்திப் போடணும் விநாயகம். நம்ம கண்ணே பட்டுரும் போல..” என்றார் சிரித்தபடி.
“ஆமா க்கா.. நானும் மல்லிகாட்ட கூட சொல்லிட்டு இருந்தேன்..” என்றார்.
இங்கு இவர்கள் இப்படி மகிழ்ச்சியுடன் இருக்க,
அந்த மகிழ்ச்சியை கருவறுக்க ஒருவன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
சஞ்சய் அவனது வீட்டில் நீச்சல் குளம் அருகே போடப்படிருந்த சேரில் அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கு வந்த, மஹாலிங்கம்,”டேய்.. சஞ்சய்.. எத்தனை நாளைக்கு தான்டா இப்படி இருக்கப் போற.. நீயும் மனைவி குழந்தைனு குடும்ப சகிதமா வாழ வேண்டாமா.. பாரு.. அந்த பரிதி வீட்டுல அவனுக்கும் அவன் தம்பி ரெண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.
பொண்ணு யாருனு தெரியுமா.. இனியனுக்கு அந்த விநாயகம் பொண்ணையும், பரிதிக்கு, வீட்டை விட்டுப் போனனே.. அந்த குருமூர்த்தி. அந்த குருமூர்த்தி ஓட பசங்க கெடச்சிட்டாங்க போல. அவன் பொண்ணைத் தான் அந்த பரிதிக்கு பேசி முடிச்சி இருக்காங்க.
நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க.. அவங்க முன்னாடி நம்ம நல்லா வாழனும்டா.. ” என்று அவர் ஆதங்கமாக அவனிடம் பேசினார்.
“ஓஹோ.. கல்யாண ஏற்பாடு பண்றங்களா.. பண்ணட்டும்.. ரொம்ப நல்லா பண்ணட்டும்..” என்றான் வன்மமாக சிரித்தபடி.
நித்தமும் வருவாள்..
