Loading

அன்று  

 

அறை முழுவதும் அமைதி நிரம்பி இருக்க, பொசு பொசுவென மூச்சை விட்டபடி தன்னெதிரே திமிராய் அமர்ந்திருந்த தன் தவப் புதல்வன் அகிலனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார் செந்தமிழன், தன்னை எதிர்த்து பேசிய மகனை எரித்து விடுவது போல் பார்த்தார்.

“என்ன லுக்கு விடுறீங்க..? என்னைக் குத்தம் சொல்லுறீங்க, நீங்க யோக்கியமா..? உங்க அரசியல் சம்ராஜியத்தை உருவாக்குறதுக்கு ஒன்னுமே தெரியாத எங்க அம்மாவ கொண்ணீங்களே அதை மறந்துட்டேன்னு நினைக்குறீங்களா..?”

“அகிலா..! என்ன பேச்சு பேசுற..? உன் சந்தோசத்துகாக நான் எவ்வளவோ பண்ணியிருக்கேனடா.? என்னோட அடுத்த அரசியல் வாரிசு நீதானே டா, உங்க அம்மாவ கொன்றது உண்மை தான், அது எதிர்பாரம நடந்தது, அதை நான் பரிதாப ஓட்டுக்குப் பயன்படுத்திக்கிட்டேன், நான் முழுநேர அரசியல்வாதி தான், பாசமோ பந்தமோ குறுக்க இருக்கக் கூடாது, ஆனால் உன்கிட்ட அப்படி இல்லை அகிலா, நீ என்னோட உயிரு, என்னோட அரசியல் சம்ராஜியத்துக்கு அடுத்த வாரிசு”

“அவ்ளோ பாசம் இருந்தா எதுக்கு நிக்க வச்சுக் கேள்வி கேக்குறீங்க, ஏன் நீங்க அம்மாவை தவிர வேற எந்தப் பொம்பளையும் தொட்டதில்லையா.? நான் என்ன உங்களை நிக்க வச்சா கேள்வி கேட்கிறேன்? ஐம்பத்தி நாலு வாயசாகியும் உங்களுக்கு ஆசை குறையாதப்ப, வயசு பையன் எனக்கு இருக்காதா.?” கோபமாகக் கேட்டான் அகிலன்.

“அடேய் அகிலா நீ எவளை வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பண்ணு, நான் உன்னை எதுவும் கேட்கலை, ஆனால் எல்லாமே ரகசியமா இருக்கணும், அரசியல் வாழ்க்கை வேற சொந்த வாழ்க்கை வேறடா, சொந்த வாழ்க்கை அரசியலுக்குத் தெரியக் கூடாதுடா.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் எதோ ஒரு விசயம், உங்க காதுக்கு வந்திருச்சுன்னு கபடி ஆடுறீங்க.? நீங்க யாருக்கு வேணும்னாலும் மந்திரியா இருங்க அதை என்கிட்ட காட்டாதீங்க” எனக் கோபமாய்ப் பேசினான்

செந்தமிழனின் மகன் தான் அகிலன், அரசியலில் பரிதாப ஓட்டுக்காகக் கட்டிய மனைவியைக் கொன்ற தந்தையை நேரில் பார்த்து வளர்ந்தவன், அன்னையின் ஆதரவின்றி, சிறந்த வழிகாட்டுதல் இன்றிச் சீரழிந்து போனவன் தான் அகிலன். பெற்ற தந்தையின் நடவடிக்கைகளைப் பார்த்துத் தன்னைத் தானே கெடுத்துக் கொண்டான்.

சிலருக்கு மது மீது போதை, ஆனால் இவனின் போதை பெண்கள் மீது தான். அத்தனை போதை பொருள்களிலும் இல்லாத ஒரு வித புதிய போதை பெண்களை அவர்களின் விருப்பமின்றி அடைவதில் இருப்பதாய் நினைப்பவன். செந்தமிழனை போலவே பணத்தின் மீது மோகம் கொண்டவன். காதல் என்றால் என்னவென்று தெரியாதவன் இந்த அகிலன்.

“அகிலா நீ என்ன செய்வீயோ ஏது செய்வீயோ எனக்குத் தெரியாது, இனிமேல் அந்தப் பொண்ணு உன் லைன்ல வரவேக்கூடாது, அவகிட்ட அந்த வீடியோ இருக்கவே கூடாது” என எச்சரிக்கையாய் சொல்ல,

“ஆதாரம்லாம் அப்போவே அழிச்சாச்சு”திமிராய் பதில் சொன்னான்.

“அப்போ அந்தப் பொண்ணுகிட்ட இருந்து விலகியே இரு, இதுக்குத் துணிஞ்சவ எதுக்கும் துணிவா, அமைச்சரோட பையன்னு தெரிஞ்சும் அவ வீடியோவ ஷார்ட் பிலிமா ஆக்கிருக்கானா.? அவளுக்குள்ள எவ்ளோ தைரியம் இருந்திருக்கணும், ஒருத்தியா இருந்து இவ்ளோ வேலை பண்ணிருக்கா.?”

“இப்போ எதுக்கு அவளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்திட்டு இருக்கீங்க.? அவக்கிட்ட ஆதாரம் கிடைச்ச உடனே, ஏன் போலீஸ் கிட்ட அவ போகலை யோசிச்சிங்களா.? அவளுக்குள்ள என் மேல எதோ பயம் இருக்குது அதான் அவ ஷார்ட் பிலிம் எடுத்திருக்கா, லேடிஸ்க்கு எங்க தைரியம் இருக்கப் போகுது” எனப் பேசினான் அகிலன்.

“எது எப்படியோ அவ பக்கம் போகதா, அவ காலேஜ்குள்ள இருக்குற வரைக்கும் நம்ம எதுவும் பண்ண முடியாதுடா அகிலா, அவளுக்கு டிகிரி கொடுக்கச் சொல்லிடுறேன், இப்போ அவளுக்கு என்ன நடந்தாலும் நம்ம பேரும் சேர்ந்து தான் வெளிய போகும், ஆடிடோரியத்துல இருந்த ஒரு பையன் சாட்சி சொன்னாலும் கேஸ் நம்ம பக்கம் திரும்பிரும். போலீஸ்காரணுக கிட்ட பேச முடியாது, கொஞ்சம் விட்டு பிடிடா அகிலா, புரிஞ்சுதா டா அவகிட்ட இருந்து விலகியே இரு”எனச் சொன்ன தந்தையிடம் அகிலனோ அவளிடமிருந்து விலகி இருப்பதாகத் தன் தந்தைக்கு வாக்குக் கொடுத்திருந்தான். தந்தை சொல் தட்டாத மகனில்லை அவன், ஆனால் அதியிடம் இருந்து விலகியிருப்பது நல்லது என அவனுக்கே தோன்றியதால், குறும்படப் பிரச்சனையை அத்தோடு விட்டிருந்தான் அகிலன், ஆனால் அவனின் பழியுணர்வு சற்றும் மாறவில்லை, அவனுள் அக்கினி குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தது.

அந்தப் போதை மாத்திரையை விழுங்கியதில் பல மணி நேரம் கழித்துப் போதையிலிருந்து தெளிந்திருந்தாள் அகரநதி, அருகே மலரும் நிஹாரிக்காவும் அமர்ந்திருந்தனர், அவளெதிரே வாடிய தன் தோழியின் முகத்தைக் காண இயலாது, விழிகள் குளமாக நின்றிருந்தான் கார்த்திக்.

என்ன தான் கார்த்திக் மலரை காதலித்தாலும், அவன் நட்பிலக்கணமாய் இருந்த அகரநதிக்குத் துன்பம் நேரக் கூடாது என்று நினைக்கும் நல்ல மனம் படைத்தவன் கார்த்திக். அவளிடம் பேசுவதற்கே தயங்கி நின்றான் கார்த்தி,

அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என ஒருபுறம் யோசித்தாலும், நானில்லாமல் இவள் ஏன் அங்குச் சென்றாள், தன்னையும் அழைத்துச் சென்றிருந்தாள் இந்த நிலை இவளுக்குத் நேர்ந்திருக்குமா? என அவன் மனம் யோசித்தது.

ஆனால் அவனின் ஆருயிர் தோழியை இந்நிலைக்கு ஆளக்கியவனின் மீது கோபமும் மல்லுக்கட்டிக் கொண்டு வந்தது. அரசியல் பின்புலம் இருக்கின்ற ஒரே காரணத்தினால் ஒருவனுக்கு இந்த அளவு தைரியமும் துணிச்சலும் யார் கொடுத்தது.? மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் அமைச்சர்கள், உண்மையாகவே மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார்களா.? என்று கேட்டால் இல்லை என்ற பதிலே வரும், நம்மில் பலரும் இதை அறிந்திருப்போம், ஆனால் அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிகாட்டவோ, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கோ யாருக்கும் தைரியம் இல்லை, அந்த நிமிடம் முடிவு செய்தான் கார்த்திக். அவனின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்ட வேண்டுமென்று.

தன் தோழியை இந்நிலைக்கு ஆளக்கியவன், இனி ஒரு நிமிடம் கூட நிம்மதியாய் இருக்கக் கூடாது என்று முடிவே செய்துவிட்டான். இவன் வேறு என்ன தவறுகளைச் செய்கிறான் எவ்வாறு அதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போதே, பேசுவதற்குக் கூடத் தெம்பில்லாமல், காற்றுக்குக் கூட நோகாத அளவுக்கு எதிரே நின்றிருந்த தன் தோழனை கண்டு அழைத்தாள் அகரநதி.

“கார்த்தி..!”

“அதி உனக்கு ஒன்னுமில்லைடி டாய்லெட்ல வழுக்கி விழுந்துட்ட, மலர் தான் கூட்டிட்டு வந்தா எந்திரி” என வராத புன்னகையை இழுத்து வரவழைத்தான் கார்த்திக், தன் தோழி இதையே நினைத்து கவலைக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.

“எனக்கு எதுவும் ஆகலைன்னு எனக்குத் தெரியும்டா, ஏன்டா பொய்க் சொல்லுற. ஆனா அவன் எதோ டப்லெட்டை கொடுத்தான் அது என்னனேனே தெரியலை, மண்டைக்குள்ள எதோ பண்ணுதுடா கார்த்தி” என வாடிய முகத்துடன் பேசியவள் உடைந்து போகவில்லை என்று உணர்ந்து கொண்டான், மனதளவில் தன் தோழி உறுதியாய் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

“இந்த நிலைமையில் இவளை எப்படிடா வீட்டுக்கு அனுப்புறது, அதி வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சனை தானே.?” கேள்வி தாங்கிய முகத்துடன் கார்த்திக்கை மலர் ஏறிட்டாள்.

“அதி இன்னைக்கி நைட் எங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கிறியாடி.? நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு போ” நிஹா அவள் வீட்டுக்கு வருமாறு அழைத்தாள்.

“இல்லை அப்பாக்கிட்ட எதைச் சொல்லியும் சமாளிக்க முடியாது, நான் வீட்டுக்கு போனாலே போதும், நைட் ஸ்டேலாம் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கடி” என அதி மறுத்தாள்.

“அப்போ சரி அதியை நான் வீட்டுல போய் விட்டறேன்”

“ஆமா அவன்கிட்ட இருந்து என்னை யாரு காப்பாத்தினது, என் கண்ணுக்குக் கதவு திறந்தவுடன் வெளிச்சம் மட்டும் தான் தெரிஞ்சுது”

“அதுவா கார்த்தித் தான் கதவை திறந்தான், நீ வெளிய ஓடி வந்துட்ட டி” எனச் சமாளித்தாள் மலர், தீராவை பற்றிப் பேசி அவனுக்கு இந்த விசயம் தெரியும் என அதிக்கு தெரிந்தால் அவளின் மனம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளுமா என்ற பயத்தில் பட்டெனப் பொய் சொல்லியிருந்தாள் மலர்.

“சரி வா அதி போகலாம்” என அழைக்கச் சற்றுத் தடுமாற்றம் இன்றி நடக்க ஆரம்பித்த அதியை ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றான் கார்த்திக். நிஹாவும் மலரும் கல்லூரி பேருந்தில் சென்றனர்.

“அதி இந்தப் பிரச்சனை தொடங்கும் போதே சொன்னேன் இதெல்லாம் வேண்டாம்னு கேட்டியா..?”

“கார்த்தி நான் ஒன்னு சொன்னா செய்வீயா..?”

“அதி மறுபடியும் எதாவது பிரச்சனை பண்ண போறீயா.?”

“இல்லைடா பிரின்ஸி ரூமுக்கு மறுபடியும் போகணும்”

“எதுக்கு அதி கம்பளைண்ட் லட்டர் எழுதி கொடுக்காவா.?”

“இல்லைடா..” ராகமிழுத்தாள்.

“கார்த்தி நான் சொன்னால் நீ திட்டக் கூடாது”

“முதல்ல விசயத்தைச் சொல்லு அதி, போட்டு உலட்டாதே, ஆனா அகிலன் விசயமா இருந்தா நான் கூட்டிட்டுப் போகமாட்டேன்”

“என்னடா கார்த்தி இப்படிச் சொல்லுற.?”

“வேற எப்படிச் சொல்றது அதி.? நான் சொல்றதை முன்னவே கேட்டிருந்தனா, தேவையில்லாத விசயத்துல மாட்டியிருக்க மாட்டோம்டி, இப்போ பாரு உன் டிகிரி போனதும் இல்லாம எல்லாருக்குமே பிரச்சனை ஆகிருச்சு” அவன் என்ன தான் பேசியபடி வண்டியை ஓட்டினாலும் மிகவும் நிதானமாய்ப் பொறுமையாய்ப் பேசினான்.

“கார்த்தி எல்லாத்தையும் சரி பண்ணலாம்டா, அங்கே நடந்தெல்லாம் மொபைல் கேமரால ஷூட் ஆகியிருக்குடா, அதை எடுக்கத் தான் கூப்பிடுறேன்” என அதி அவசரமாய்ச் சொல்ல.

“உனக்கு எல்லாமே விளையாட்டு தானா அதி, இதுல உன்னோட வாழ்க்கை அடங்கியிருக்குடி, அங்க நடந்ததை வீடியோ எடுத்திட்ட சரி அதுல என்ன சாதிக்கப் போற சொல்லு, அவனைலாம் ஒன்னும் பண்ண முடியாதுடி அதி புரிஞ்சுக்கோ” கெஞ்சாத குறையாய்ச் சொன்னான் கார்த்தி.

“டேய் கார்த்தி நம்மகிட்ட இருக்க வீடியோல பிரின்ஸி பேசினதும் ரெக்கார்ட் ஆகிருக்கும் டா, பிரின்ஸி ரூம்ல தான் அந்தப் போன் இருக்கும், போதை மாத்திரைய அவன் வாயிலை போடலைனா எடுத்திட்டு வந்திருப்பேன்” என அவள் சாதாரணமாய்ச் சொல்ல, துரிதமாய் வண்டியை நிறுத்தியவன்.

“அதி உனக்கு இவ்ளோ தான் லிமிட், இனி நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது, உனக்கு எதாவது ஆயிடுச்சுனா நான் என்னடி பண்ணுவேன் லூசு மாதிரி பேசிட்டு இருக்க, இவ்ளோ நடந்தும் நீ இன்னும் மாறலைல அதி, பிரின்ஸி ரூம்க்கு போனப்ப எதுக்குடி என்ன கூட்டிட்டு போகலை, காலேஜ் ஃபுல்லா உன்னைத் தேடி அலைஞ்சிருக்கோம் தெரியுமா.? இது உன்னோட லைஃப் அதி, இதுல ஏன்டி உனக்கு அக்கறையே வரமாட்டேன்து.? உனக்குன்னு கனவே இல்லையா.? நீ என்ன சோஷியல் ஆக்டிவிஸ்ட்டா ஆகப் போறியா.? நான் மறுபடியும் சொல்றேன் அதி உன் லைஃப் எனக்கு முக்கியம்டி, காதல் மட்டும் தான் கடைசி வரைக்கும் கூட நிக்கும்னு இல்லை, நட்பும் நிக்கும், நான் நிப்பேன்டி என்னோட அதிக்காக, என் மேல சத்தியமா அகிலனை பத்தி நீ பேசவே கூடாது, எல்லாத்தையும் நான் சரி பண்ணுறேன் அதி” எனக் கார்த்திக் உறுதி அளிக்க அவன் அன்பில் நெகிழ்ந்து நின்றாள் அதி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அந்த வீடியோவை எங்க மறைச்சு வச்சிருக்காங்க ன்னு தெரியல .. மலரை வேற காணோம் ..