Loading

அத்தியாயம் 28

அன்று பரிதியிடம் பேசிய பிறகு, நிரஞ்சனாவின் மனதில் என்ன உள்ளது என்று அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவர், இரு நாட்கள் செல்ல விட்டு, அவளை தனியாகத் தோட்டத்து பக்கம் அழைத்துச் சென்றார்.

அங்கே போடப் பட்டிருந்த சேரில் அமர்ந்தவர், “உக்காரு மா.. ” என்று தன் அருகில் அமர வைத்தவர் “உங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்  ” என்று கூற,

அவளோ, ” என்ன த்தை.. சொல்லுங்க.. ” என்றாள்.

“அம்மாடி.  உனக்கு கல்யாண் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கோம்.. நீ என்னம்மா சொல்ற..” என்று கேட்க,

“அதுக்குள்ள என்ன அத்தை  அவசரம்.. கொஞ்ச நாள் போகட்டுமே..” என்க,

“உனக்கு தான்ம்மா இப்போ முதல்ல முடிக்கணும். உனக்கு தான் நேரம் சரி இல்லனு ஜோசியர் சொன்னாங்க. இப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா தான் நல்லதுனு சொல்லி இருக்காரு நிரஞ்சனா..” என்று அவள் தலையை ஆதுறவாக தடவிக் கொடுத்த படி பேச,

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“என்னம்மா.. அமைதியா இருக்க.. ஏதாவது சொல்லு..” என்றிட,

“எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்த்தை.. இப்போதான் நான் இங்க வந்து இருக்கேன். அதுக்குள்ள என்னை அனுப்ப பாக்குறீங்களே..” என்று எதையாவது சொல்லி கல்யாணத்தை தள்ளிப் போட அவள் எண்ணினாள்.

“சூழ்நிலை அப்படி இருக்கு நிரஞ்சனா. என்னைக்கு இருந்தாலும் நீ கல்யாணம் பண்ணி போறவ தானே.. என் தம்பி இருந்தானா இந்நேரத்துக்கு உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பான். நீ யோசிச்சு பாரும்மா..” அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரும் அவளிடம் கேட்டுக் கொண்டார்.

“இல்லை த்தை வேண்டாம். எனக்கு விருப்பம் இல்ல. என்னை இப்படியே விட்டுருங்க. நான் இப்டியே இருந்துகிறேன். ” என்று அவள் கெஞ்சுவது போலக் கேட்க,

“ஏன் மா வேண்டாம்னு சொல்ற.  நீ யாரையும் விரும்புறியா.. விரும்புனா சொல்லு. அந்த பையன் வீட்டுல பேசலாம்..” அவரும் விடாமல் கேட்க, 

“உங்க பையனைத் தான் நெனச்சிட்டு இருக்கேனு நான் எப்படி உங்ககிட்ட சொல்லுவேன். ஆமா ஒருத்தரை விரும்புறேன்னு சொன்னா, யாரு என்ன னு விசாரிப்பீங்க. சம்மந்தம் இல்லாத வேறு ஒருத்தரை நான் எப்படி காட்ட முடியும்..” என்று அவள் தனக்குள்ளேயே பேசிட, அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

“என்ன நிரஞ்சனா.. எதுவும் பேச மாட்டேன்ற..” என்று அவள் தோளைப் பிடித்து உலுக்க, “ஹான்.. என்ன கேட்டீங்க..” என்று அவள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே,

அங்கு தன் தாயை தேடி பரிதி வந்தான்.

“என்ன ம்மா.. இங்க உக்காந்துட்டு இருக்கீங்க. ” என்று தாயைப் பார்த்து கேட்டிட,

“அது ஒன்னும் இல்லை ப்பா.. நிரஞ்சனா கூட பேசிட்டு இருந்தேன். அவ கல்யாணம் விஷயமா கேட்டுகிட்டு இருந்தேன். உன்ன மாதிரியே அவளும் கல்யாணம் வேணாம்னு சொல்றா. யாரையாவது விரும்புரியானு கேட்டா, அதுக்கும் பதில் சொல்லாம அமைதியா இருக்கா.. என்ன பிள்ளைங்களோ நீங்க. எதுனாலும் வெளிப்படையாக சொல்றது இல்லை..” என்று அவர் சலித்துக் கொண்டு சொல்ல,அவனோ யோசனையாக அவளைத் தான் பார்த்தான்.

அவளோ அவனைக் காணாமல் தலையை குனிந்தபடி அமர்ந்து இருந்தாள்.

“நிரஞ்சனா..” என்று அவளை அழைத்திட,

அவள் மெதுவாக தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், ” உன் மனசுல உள்ளதை சொல்லு. நீ யாரை விரும்புனாலும் அவங்க கூட உன்னை சேர்த்து வைக்கிறோம். தயங்காமல் சொல்லு..” என்று அவன் அவள் கண்களைப் பார்த்து கேட்டிட,

அந்த கண்களோ அவனிடம் எதுவோ சொல்வது போலவே அவன் உணர்ந்தான்.

அது என்னவென்று அவனுக்கு புலப்படவில்லை.

அவள் எதுவும் பேசாமல் அவனிடம்  வேண்டாம் என்பது போல முக பாவனை கொடுக்க,

அவனோ இன்னும் இன்னும் குழம்பித் தான் போனான்.

“உன் நல்லதுக்காக தான சொல்றோம். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்ற. இவ்ளோ தூரம் சொல்றாங்கல்ல.. அப்போ அதுக்கு கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுத்து பதில் சொல்லலாம்ல.. யாரையும் விரும்புறியானு கேட்டா, சொல்றதுக்கு ஏன் இவ்ளோ தயக்கம்..” என்று அவன் சற்று காட்டமாகவேத் தான் கேட்டான்.

ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததே தவிர, அவள் வாயில் இருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

அவள் அழுவதைப் பார்த்த மங்களம், “அட இதுக்கு ஏன் மா அழகுற.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். விடு.. ” என்று அவர் அவளை சமாதானம் செய்ய,

அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

பரிதிக்கோ கடுப்பு.. இவ்வளவு கேட்டும் வாயை திறப்பேனா என்று இருக்கின்றாலே.. இவளை என்ன செய்தால் தகும் என்று மனதினில் அவளை அர்ச்சித்தவன், அங்கிருந்து செல்லப் போக,

மங்களம் அவனை நிறுத்தி, “பரிதி.. அது தான் நிரஞ்சனா வந்துட்டாலே.. அப்புறம் ஏன் நீயே அந்த செயின் போட்டுட்டு இருக்க.. அவகிட்ட கழட்டிக் கொடுத்துரு. ” என்று அவனிடம் கூற,

அவனோ முறைப்பாக அவளைப் பார்க்க, அவளோ பயந்தப்படி அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கண்டிப்பா செயின் நான் கழட்டி கொடுக்கணுமா..”  என்று அவளைப் பார்த்து கேட்க,

அவளோ, ” இல்லை இல்ல.. நீங்களே வச்சிக்கோங்க.. ” என்று அவனிடம் சொல்லிவிட்டு, வேகமாக அந்த இடத்தில் இருந்து சென்று விட்டாள்.

” என்ன இந்தப் பொண்ணு இப்படி சொல்லிட்டு போறா.. நீ கேட்டத்துலயே அவ பயந்துருப்பாடா.. அதான் வேண்டாம்னு சொல்லிட்டு போறா.. நீ என்கிட்ட கொடு. நான் அவகிட்ட கொடுத்துருறேன். ” என்று மறுபடியும் அவனிடம் கேட்க,

“அவளே வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டா. அப்புறம் எதுக்கு உங்களுக்கு. ” என்று அவரிடமும் கடு கடுப்பாக பேசி விட்டுச் சென்றான்.

“இவன் ஏன் இப்போ என்கிட்ட எகுறிப் பாயுறான். என்னமோ ஒன்னும் புரியல. ” என்று அவர் பாட்டுக்கு புலம்ப, விக்ரம் வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

அவனும் கிளம்பி விட, சிறிது நேரம் கழித்து அவரது அலை பேசிக்கு அழைப்பு வந்திட, யார் என்று பார்க்க, அது ஜோசியர் தான் அழைத்து இருந்தார்.

“சொல்லுங்க ஜோசியரே  என்ன விஷயம்.??.” என்று மங்களம் கேட்க,

“அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் நான் கூப்பிட்டேன். நீங்க உங்க பிள்ளைங்களோட ஜாதக காப்பிய கொடுத்துட்டு போனீங்களே. அதை பார்த்துட்டு தான் இப்போ நான் அடிக்கிறேன். ” என்று ஜோசியர் ஏதோ பொடி வைத்துப் பேச,

“என்ன சாமி சொல்லுங்க.. ” மங்களம் கேட்க,

“நிரஞ்சனா யாரு..” ஜோசியர் கேட்க,

“அவ.. என்னோட தம்பிப் பொண்ணு..என்ன சாமி என்ன ஆச்சு..”

“ஒன்னும் இல்லை. பதறாதீங்க.. நல்ல விஷயம் தான். அந்த பொண்ணோட ஜாதகமும் உங்க பெரிய பையன் பரிதியோட ஜாதகமும் நல்லாவே ஒத்துப் போகுது. அவங்களுக்குள்ள பொருத்தம் அமோகமா இருக்கு. கல்யாணம் யோகமும் ரெண்டு பேருக்கும் கூடி வந்து இருக்கு. கல்யாணம் பண்ணி வச்சா அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்..” என்று கூறிட,

“அப்படியா சொல்றீங்க..” என்று மங்களம் உறுதி படுத்திக் கொள்ள,

“ஆமா ம்மா.. நான் ஏன் போய் சொல்ல போறேன். இன்னைக்கு திரும்பவும் எடுத்து வச்சி பாக்கும் போது தான் தெரிஞ்சது. சரி ம்மா நான் வச்சிடுறேன்..” என்று ஜோசியர் வைத்து விட,

“இது தான் சரியான வாய்ப்பு. ரெண்டு பேரும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்காங்க. இதை வச்சி ரெண்டு பேருக்கும் பேசி முடிச்சிற வேண்டியது தான். ” என்று அவர் ஒரு கணக்குப் போட, இளசுகள் இருவரும் என்ன சொல்ல காத்து இருக்கின்றரோ..

மறுநாள் விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.

விக்ரம் அவனது கல்லூரியில் இருந்து கல்விச் சுற்றுலா சென்று இருந்தான்.

முன் அறையில் அனைவரும் கூடி இருக்கும் சமயத்தில், “உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்.” என்று மங்களம் புதிர் போட,

பரிதியும், என்ன தான் சொல்ல வருகிறார் என்று அமைதியாக இருந்தான்.

குரலை செருமிக் கொண்டு, “நம்ம பசங்களுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்..” என்று கூற,

விநாயகமோ, ” என்னக்கா, பொண்ணு மாப்பிள்ளை யாருக்கு யாருனு முடிவு பண்ணியாச்சா என்ன?” என்று கேட்க,

“ஆமா ப்பா.. நமக்கு வெளிய தேடுற வேளை எல்லாம் இல்லை..” என்றார் மங்களம்.

இப்பொழுது ஆர்வமுடன் விநாயகமும் மல்லிகாவும் பார்க்க, பரிதிக்கு இவர் என்ன சொல்ல போகிறாரோ என்றே யோசனையில் அமர்ந்து இருந்தான்.

தானும் நிரஞ்சனாவும் வேண்டாம் என்று கூறியதால், இனியனுக்கும் வைஷுவுக்கும் திருமண பேச்சு எழ பெரும்பாலும் வாய்ப்பு இருக்கிறது.

தங்களைப் பற்றி என்ன முடிவு எடுத்து இருக்கிறாரோ, என்றே யோசித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

இனியனோ, “அடடா.. நம்ம விஷயம் இது வரைக்கும் அம்மாகிட்ட சொல்லல. ஆனால் அவங்க அதுக்குள்ள கல்யாண பேச்சை எடுத்துட்டாங்களே..” என்று அவன்  உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

வைஷுவும், “அய்யயோ.. இப்போ என்ன பண்றதுனு தெரியலையே.. சரி அத்தை என்ன தான் சொல்றாங்கனு பாப்போம். வேற யாரையும் சொன்னாங்கனா, நம்ம விஷயத்தை சொல்லிற வேண்டியது தான்” என்று அவள் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டிருந்தாள். 

“இனியன் வைஷு ரெண்டு பேரும் வாங்க..” என்று அவர்களை அழைத்து அருகில் நிற்க வைத்த மங்களம், “நம்ம இனியனும் வைஷுவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க..” என்று சிரித்தபடி கூற,  மல்லிகா “உங்க பொண்ணுக்கு வேற ஆளே கிடைக்கலையா..” என்று கணவனின் காதை கடித்தாள்.

“ஏன் டி? அவனுக்கு என்ன குறைச்சல். அவனும் இந்த வீட்டு வாரிசு தான். வெளிய போறதுக்கு பதில் இங்கேயே நம்ம பொண்ணு நம்ம கூடவே இருக்கப் போறா. அதை நெனச்சி சந்தோசப் படு..” என்று மனைவியை கடிந்தார்.

“என்னமோ ஒரு விதத்துல அது நல்லது தான்..” என்று அமைதியாகி விட,

இனியன், தன் அண்ணனைப் பார்த்து, “நீதான் சொன்னியா..” என்று வாயை அசைத்து மெல்லக் கேட்க, அவனோ ஆமாம் என்பது போல இமைகளை மூடித் திறந்தான்.

“இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம் கூடிய சீக்கிரம்..” என்று கூற,

பரிதியும், நிரஞ்சனாவும் “அப்பாடா.. நம்மள பத்தி எதுவும் சொல்லல.” என்று நினைத்து முடிப்பதற்குள்,

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நேத்து ஜோசியர் திரும்ப எனக்கு போன் பண்ணாரு. அவரு நம்ம பரிதி ஜாதகத்தையும் நிரஞ்சனா ஜாதகத்தையும் பார்த்ததுல, ரெண்டு பேருக்கும் பொருத்தம் அமோகமா இருக்குனு சொன்னாரு. இப்போ எனக்கு என்ன தோணுதுனா, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருலாம்னு தோணுது..” என்றிட,

விநாயகம், “ரொம்ப நல்ல விஷயம் க்கா..” என்றார். 

“அம்மா.. அன்னைக்கே நான் சொன்னேன். நீங்களா எந்த முடிவும் எடுக்காதீங்க. சம்மந்தபட்டவங்க கிட்ட பேசிட்டு முடிவு எடுங்கனு..” என்று அழுத்தமாகக் கூற,

“அதான் ரெண்டு பேரும் இங்கதானே இருக்கீங்க. உங்க விருப்பத்தை சொல்லுங்க..” என்று மங்களம் கேட்க,

அவனோ நிரஞ்சனாவை முறைத்துப் பார்க்க, அவளோ அவனைப் பார்த்து பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள்.

“கேக்குறாங்கல்ல .. சொல்லு..” என்று அவன் அதட்டியபடி அவளிடம் கேட்க,

“அது.. அது..” என்று இழுத்துக கொண்டே இருந்தாளே தவிர, எதுவும் சொல்லவில்லை.

“நீ எதுவும் சொல்ல மாட்ட. நானே சொல்றேன். ” என்றவன், ” எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்றவன் அங்கிருந்து செல்ல முயல,

“டேய்.. பேசிட்டு இருக்கோம்ல.. அதுக்குள்ள ஏன் போற. என்ன பழக்கம். இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டுப் போற.. ” என்று மங்களம் அதட்டினார்.

அமைதியாக இருந்தான் பரிதி.

எதுவும் கூறாமல் என்னைப் போட்டு அழைக்கழித்து கொண்டிருக்கின்றாள் என்று தான் அவனக்கு இந்த அளவு கோவம்.

என்னிடம் சொல்லியதை இங்கே மற்றவர்கள் முன் கூறினாள் என்ன.. எதற்கு அமைதியாக இருந்து இப்படி என்னை சாவடித்துக் கொண்டிருக்கின்றாள் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பரிதி. 

இனியனுக்குமே, அண்ணனின் இந்த அதிரடி ஏன் என்று புலப்படவில்லை.

நிரஞ்சனா ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கின்றாள். அன்று அண்ணனிடம் அப்ப டிதானே கூறியதாக அண்ணனும் கூறி இருந்தார்.

யாரை விரும்பினால் என்ன.? வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம்.

எதற்கு இப்படி அமைதியாக இருந்து அண்ணனை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றாள் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான் இனியன்.

வைஷு கூட, நிரஞ்சனா அருகில் வந்து, “அக்கா.. உனக்கு சம்மதம் இல்லனா சொல்லிற வேண்டியது தானே.. எதுக்கு யோசிச்சிட்டு எல்லாரையும் கஷ்ட படுத்திட்டு இருக்க..” என்று கூற,

அவளோ ஒரு முடிவுடன், “எனக்கு சம்மதம்” என்றாள்.

பரிதிக்கோ அதிர்ச்சி. அன்று தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளாமல் இன்று மட்டும் திருமணத்திற்கு சம்மத்துகிறாளா… என்னை என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்று தான் அவன் மனதில் தோன்றியது அவனுக்கு.

இனியனும் பரிதியைப் பார்க்க,

அவனின் அதிர்ந்த முகத்தைக் கண்டு அமைதியாக இருந்தான்.

“அவ சம்மதம் சொல்லிட்டா.. இப்போ நீதான் டா முடிவை சொல்லணும்..” என்று மங்களம் பரிதியைப் பார்த்து கேட்டார்.

“நான் அவகிட்ட பேசணும்..” என்றான் அவளைப் பார்த்தவாரே.

அவளும் அதை எதிர்பார்த்து இருந்து இருப்பாள் போலும். 

“அவகிட்ட என்ன பேசணும்..” என்று மங்களம் கேட்க,

“அது அவளுக்கு தெரியும்..” என்றிட,

அவளோ ஒரு பெருமூச்சுடன், “நான் பேசிட்டு வரேன் த்தை..” என்று சொல்லி விட்டு, அவனைப் பார்க்க,

அவனோ மேலே அவனது அறை நோக்கிச் சென்றான்.

அவளும் அவன் பின் சென்றாள் .

இனியனோ,”ம்மா.. அவங்க பேசி முடிச்சிட்டு முடிவைச் சொல்லட்டும். அது வரைக்கும் நம்ம மேல மாடில இருப்போம். வாங்க. ரொம்ப நாள் ஆச்சி அங்கப் போய்.. ” என்று அவர்களுக்கு இங்கே தனிமை கொடுத்து விட்டு மேலே மற்றவர்களை இழுத்துச் சென்றான்.

நித்தமும் வருவாள்…

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்