Loading

இன்று

யுக யுகமாய்க் காத்துக்கொண்டிருந்தவனின் கடைவிழி பார்வைக்கு ஏங்கி இருந்த பாவையிவளுக்கு மனதே உறைந்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான் தீரேந்திரன். இவனுக்கும் அந்த அகிலனுக்கும் என்ன தான் வித்தியாசம்.? அவனைப் போல் இவனும் பெண்களைத் துச்சமென நினைக்கும் துச்சாதனனா.?

அவனுக்கு வளைந்து கொடுத்து செல்வதால், அவனின் கால் நனைக்கும் நதியென நினைத்தானோ.? எத்தனை கரங்கள் என்னைச் சீண்ட நினைத்தாலும் விலகி செல்லும் அகரநதி நான். அவன் என்னைப் படுக்கைக்கு அழைத்து வர தான் மலரை பார்க்க வேண்டுமெனச் சொன்னானா.? அய்யோ இவனை நம்பி வெளியே வந்து விட்டேனே..?

அந்த அறையிலிருந்த நறுமண மெழுவர்த்தியின் சுகந்தம் அவள் நாசி சீண்டி அவளை மெல்ல நடப்புக்குக் கொண்டு வர, நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் அங்கிருந்த கிங் சைஸ் பெட்டில் தூவபட்டிருந்த மலர்கள் மீது பார்வையைப் பதித்தாள்,

வண்ண ரோஜா பூக்களின் அலங்காரம், அங்காங்கே எரிந்துக்கொண்டிருந்த மின்விளக்குளுக்குக் கீழே அழகாய்த் தொங்கிக்கொண்டிருந்த புகைபடத்திற்கு அவளின் தெத்துப்பல் சிரிப்பு அழகு சேர்த்திருந்தது.

இந்தப் புகைப்படம் எல்லாம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது என்ற கேள்வியும் பெண்ணவளின் மனதில் எழுந்தது. பீச் நிற சுவற்றில் காகித பட்டாம்பூச்சிகள் சிறகடிக்காமல் அப்படியே ஒட்டியிருந்தது.

அவளின் பாதம் படும் இடமெல்லாம் பூக்களால் நிறப்பட்டிருந்தது, என்ன இது இப்படி வந்து மாட்டிக்கொண்டேன் என நினைத்தவளின் கரங்களை மெல்ல பற்றியிருந்த தீரா அவளிடம் நெருக்கமாக நின்றான்.

அவளின் முன் நெற்றியில் விரவி கிடந்த குழல் கற்றையை மெல்ல ஒதுக்கிவிட்டான், அவனின் ஒரு விரல் தீண்டலே உயிர் வரை இனித்தது பெண்ணவளுக்கு, அவனின் அருகாமையைக் காதல் கொண்ட மனம் ரசித்தாலும், எதோ ஒன்று அவளை அவனிடமிருந்து அவளை விலகச் சொன்னது.

மஞ்சள் நிற சுடிதாரும் பிங்க் நிற இழையோடிய துப்பட்டாவும் அணிந்திருந்தவளின், கால் கொலுசு தயக்கத்தில் சிணுங்கியது.

“நதி..!” அவன் மீசை ரோமம் உரச அவளின் காதோரம் அழைத்தான், உள்ளுக்குள் கொதித்தெழுந்த படபடப்பை அடக்கிய படி,

“ம்ம்ம்” என்றாள் இதழுக்கே நோகாமல்,

“உனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கா.?” எனக் கேட்டவனின் கரங்கள் அவளிடையில் கோலம் போட ஆரம்பித்திருந்தது.

“தீரா எதுக்கு இதெல்லாம்..? நாம வீட்டுக்கு போகலாமே” என அவன் சொன்ன போது அவனிதழகள் அவள் கழுத்து வளைவில் நச்சென முத்தமிட உடல் சிலிர்த்து போனாள்.

“இப்போ சொல்லு நதி வேண்டாமா..? நமக்குத் தான் கல்யாணம் ஆகப் போகுதே, இதெல்லாம் தப்பில்லை” எனப் பேசிக்கொண்டிருந்தவன் மர்ம்மாய்ச் சிரித்தான்.

“மேரேஜ் ஆகப் போகுது தான், ஆனா அதுக்கு நாள் இருக்கே, இப்போ எதுக்கு..?”

“நதி” அவனின் கணீர் குரல் அவளைப் பயம் கொள்ளச் செய்தது.

“உனக்கும் அகிலனுக்கும் என்ன வித்தியாசம் தீரா..?” கேட்க அவள் இதழ் பரபரத்தது, ஆனால் நொடி பொழுதில் அவள் கண்களைக் கருப்பு துணியை வைத்துக் கட்டியிருந்தான் அவளின் தீரா.

“தீரா என்ன பண்ணுறீங்க, ப்ளீஸ் இதெல்லாம் தப்பு”

“எது தப்பு நதி.? அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ பயப்படாதே..? நீ பயப்படாக் கூடாதுன்னு தான் உன் கண்ணைக் கட்டியிருக்கேன்”

“இவனை ஏன்டி காதலிச்சு தொலைஞ்ச, எங்க வந்து நிறுத்தியிருக்கான் பார்த்தியா..? இப்போ நீ என்ன செய்வடி” அவள் மனம் கேள்வி கேட்க பதில் சொல்ல இயலாது இருளில் இருப்பதைப் போல் உணர்ந்தாள் நதி.

அவன் பேசியபடியே அவளின் துப்பட்டாவை கழற்றி தூற எறிந்திருந்த உணர்வோ அவளுக்கு அகிலனை நினைவூட்டியது, அன்று அவன் அவள் வாயில் மாத்திரையை போட்ட வரை மட்டும் தான் இவளுக்கு நினைவிருந்தது, அதன் பின் தீரா வந்து காப்பற்றியதோ, அவள் போதையில் நன்றி சொல்லியதையும் மறந்து போயிருந்தாள் அகரநதி.

இப்படி ஒரு நிலைக்கா கோமாவில் இருந்து மீண்டு வந்தேன், அத்துமீறுவது காதல் இல்லையே, இது அத்து மீறல் தானே? அப்போது தீரா என் மீது வைத்திருப்பதற்குப் பெயர் தான் என்ன.? அய்யோ இதிலிருந்து என்னை எந்தச் சக்தியாவது வந்து காப்பாற்றி விடாதா.?

“நதி உன்னைக் காப்பாற்ற யார் வரவேண்டும் உனக்காக நீயே துணிந்து போராடு”அவள் மனம் உறுதிபடச் சொல்ல,

காதல் கொண்ட நெஞ்சமோ அவனின் பார்வையிலும் தொடுதலிலும் கரைய ஆரம்பித்தது, இறுதியில் காதல் கொண்ட நெஞ்சமே ஜெயித்தது, அவன் மேல் கொண்ட காதலிலனாலே அவளால் அவனை எதிர்க்க முடியவில்லை, அவனிடம் அவளால் கோப முகத்தையும் அனல் தெறிக்கும் பார்வையும் காட்ட முடியவில்லை அனைத்திற்கும் காரணம் காதல் தான்.

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள் அதை உறுதிபடுத்தும் விதமாக அவளருகே நின்றிருந்தவனின் கரம் தனை பற்றியவள்.

“நான் உன்னை நம்புறேன் தீரா” அவள் உறுதியளித்த கணமே அவன் கைவளைக்குள் தன்னவளை நிறுத்தியவன் அவளின் பிறைநுதலில் முத்தம் வைக்க, அவன் அன்பின் ஆழம் புரிந்தது நதிக்கு.

அந்த ஆறடி காவலனோ நாலரை அடியான நதி பெண்ணைக் கையில் ஏந்தியிருந்தான்.

“இந்த நாள் உன் வாழ்க்கையில மறக்கவே கூடாது நதி” எனக் கையில் ஏந்தி நடக்க ஆரம்பித்தான், விழி கட்டபட்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பயத்தில் கையில் மிதந்துக்கொண்டிருந்த அழகிய நதியை ஒட்டுமொத்தமாய் ரசித்தான்.

ஆகாயச் சூரியனோ ஒய்வெடுக்க மேற்கில் தஞ்சம் தேடி பயணித்துக்கொண்டிருந்தான், அந்த அழகிய மாலைப் பொழுதில், அந்த நாளின் இறுதியை எட்டியிருந்தது. எதற்காகவோ காத்திருந்தவன் போல், தன் இடது கரத்தை திரும்பி மணியைப் பார்த்தான் மணி ஐந்தை காட்டியது.

“ஹப்பிப் பர்த் டே மை டியர் நதி” என்றவன் அவன் கண்கட்டை அவிழ்க்க புரியாது விழித்த பேதை பெண்ணவளை கரங்களில் ஏந்தியபடி ஒரு பொத்தானை தட்டினான். ரகசியமாய் ஒரு பாதை மெல்ல திறக்கபட்டது. அதை தொடர்ந்து நடந்தான். அவள் பிறந்த நேரம் மாலை ஐந்து மணி அதற்காக தான் இவ்வளவு நேரம் காத்திருந்தான்.

“எனக்கு இன்னைக்குப் பர்த்டேவா? யார் சொன்னது” அவள் விழி விரிய கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாது முன்னேறி நடந்தவன் பொத்தென அவளைக் கரங்களில் வைத்துக்கொண்டே எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குதித்திருந்தான் நதியின் தீரா. அவர்கள் இருவரும் குதித்தில் நீர் சிதறி வெளியே தெறிக்க,

காதலின் ஆழத்திற்குச் சென்ற இருவரும் நீந்தி மேல வர பெண்ணவள் அங்கம் முழுவதும் நனைந்து போயிருந்தது. முத்து முத்தாய் நீர் துளிகள் அவள் அங்கம் முழுவதும் அழகு சேர்த்தது , காற்றில் ஆடும் அவளின் குழல் கற்றறைகள் நீரின் கட்டுபாட்டில் அடங்கிப் போயிருந்தது. அவளும் தன்னவனின் அனைப்பில் வெதுவெதுப்பாய் உணர்ந்தாள், அவளுடன் சேர்ந்து காவலுனும் ஒட்டுமொத்தமாய் நனைந்து போயிருந்தான் காதலில், அவளின் அருகாமை அவனின் இளமையைச் சூடறேற்றியது, இன்ப அதிர்ச்சியில் உரைந்திருந்த பேதை பெண்ணவளோ அவனைத் தவறாக எண்ணியதற்குக் குற்ற உணர்வில் குறுகி போனாள்.

“இது நீ என்னோட கொண்டாடுற முதல் பிறந்த நாள், உன்னோட ஆசைக் கனவு எதையும், நான் தொலைய விட மாட்டேன் நதி. உனக்கு நீச்சல்னா ரொம்பப் பிடிக்கும் ஆனா, உனக்கு ப்ரைவெட்டா நீச்சலடிக்க ஆசை இது உனக்காக ப்ரைவெட்டா நான் புக் பண்ணின நீச்சல் குளம், நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் நீந்தலாம், இங்க யாரும் வரமாட்டாங்க உனக்குச் சலிப்பு தட்டுற வரைக்கும், நீயே போதும்னு சொன்னதுக்கு அப்பறம், இங்க இருந்து நீ சேஃபா போகலாம்” என அவன் சொல்லி முடிக்க,

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தீரா தெரியும்” எனக் கேட்டவளின் மனம் மெல்ல அவன்புறம் சாய்ந்தது. ஆம் காதலில் நம்பிக்கையை விதைப்பது இப்படிப் பட்ட சந்தோச தருணங்கள் தானே., ஒரு தலைக் காதலில் தள்ளி நின்ற இரு காதலர்களும், முதல் முறை அவர்களின் இனிமையான தருணத்தை அனு அனுவாய் ரசிக்கத் தொடங்கியிருந்தனர்.

“உன் டைரில பார்த்தேன் நதி, நீ ஸ்விம் பண்ணிட்டு வா நான் வெயிட் பண்ணுறேன்” எனச் சொல்லி நீச்சல் குளத்தில் இருந்து வெளியே செல்ல நினைத்தவனின் கைப்பற்றித் தடுத்திருந்தாள்.

“என் மனம் கவர்ந்த காவலனே, இந்நாள் மட்டுமல்ல வாழ்வின் இறுதி நாளில் கூட இதே காதலுடன், உன் விழி பார்த்து என் இமை சிரிக்க காதல் செய்வோம் வா தீரா” எனத் தன் காதலை உறுதி செய்தவள் எட்டி நின்று அவன் இதழ் எனும் தீயை தன் செவ்விதழ் கொண்டு அணைத்திருந்தாள்.

காதல் என்ற காந்தக் கடலில் தன் காதல் தீராவை நீந்த செய்தாள் முத்தம் என்னும் தீவை நோக்கி, நீச்சல் குளத்தில் வெப்ப சலனம் அதிகரிக்க, அவள் காதலுடன் கொடுத்த பரிசை துளி அளவு சிந்தாமாலும் சிதறாமலும் பெற்றுக்கொண்டிருந்தவனின் வலிய கரங்கள் அவள் இடையைச் சுற்றி வளைக்க, அவளின் கரங்கள் அவனை இறுக்கமான பிடிக்குள் அடக்கியிருந்தது. என்ன தான் இருவரும் பொய் வேசம் போட்டாலும். அவர்களுக்குள் இருக்கும் காதல் முழுமையாய் வெளிபட்ட நாள் அன்று தான். அவள் இதழ் யுத்தத்தை முடித்து விலகி நிற்க,

அதைத் தாங்காத காதலனின் மனமோ மெல்ல அவள் தலை உயர்த்தி அவனைப் பார்க்க செய்தது, முதல் முறை அவனைக் கண்டு நாணம் கொண்டு, அவளின் கன்ன கதுப்புகள் செவ்வரளியாய் மாறிப்போக, அவளின் நாணமதில் தொலைந்து போனான் அவள் மனதை களவாடிய காவலன். மெல்ல அவளை நோக்கி குனிந்தவன், அவள் செவ்வதரத்தை வருடி மெல்லச் சிறை செய்தான்.

இதழோடு இதழ் சேர்த்து இணைப்பு தர தன்னுள் காதல் மின்சாரம் பாயந்ததை உணர்ந்தாள் அவனின் நதி.அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் ஏனோ, நதிக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் இழுத்தனைத்து கொடுத்த இதழ் முத்தம்.இருவர் இதழின் முத்தங்களும் அவர்களின் இதயத் துடிப்பின் சத்தங்களும் ஒன்றாக இணைந்த வேளையில் திக்கு முக்காடி போனாள் அவனின் நதி, அவன் தெவிட்ட தெவிட்ட கொடுத்த காதல் முத்தத்தில்

என்ன மந்திரம் செய்தானோ தெரியவில்லை, அவன் இமை சிறகில் பறக்க விரும்பிய நதி, அவனின் இதழ் சிறையில் அகப்பட்டுவிட்டாள் ஆயுட்காலக் கைதியாக, அவளைச் சிறை செய்திருந்தான் கலியுக காவலன்.

அதே சமயம் மெத்தை மேல் கேட்பாரற்று கிடந்த அவனின் செல்போன் சிணுங்கி அதில் அமைச்சர் செந்தமிழின் புகைப்படம் வந்து மறைய. அதை அறியாத காதல் பறவைகளோ தங்களை மறந்து காதல் புரிந்துக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன அதுக்குள்ள முடிஞ்சு போச்சு .. ரொமான்ஸ் சீன் மட்டும் வேகமா போயிடுது போல ..

  2. நதியின் ஆசையை நிறைவேற்றுவதே என் கடமைனு அவள நீச்சல் குளத்துல நீந்த விட்டுட்டான் தீரன்.

    யாரும் பார்க்க கூடாதுனு ரகசிய ஏற்பாடா தீரா.

    அவன் கடமைக்காகனு சொல்றான், அவ நட்புக்காகனு சொல்றா ஆனா நீங்க romance பண்றத பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே. 🫢