
அத்தியாயம் 28
“நீங்களும் சுத்தி பாக்க போலயா சீனியர்?” ஆறு மூர்த்தியை கேக்க.
“ம்கூம் சும்மா இங்க பக்கத்துல ஒரு மியூசியம் இருக்கு, அங்க டைம் பாஸ் பண்ணிட்டு, இப்ப மாப்ள மெசேஜ் அனுப்பவும் கிளம்பி வந்தேன்”.
“சரி நீ உள்ள போ. நாளைக்கு நாங்க இன்டஸ்ட்ரி விசிட் போயிட்டு அங்க பக்கத்துல 2 பிளேஸ் போயிட்டு அப்டியே ரிடன் கிளம்பிடுவோம். சோ காலேஜ்ல பாக்கலாம். கேர்ஃபுல் ஓ.கே” ௭ன்றான் ப்ரகலத்தன்.
“ம் ஓ.கே. பை ப்ரஸிடெண்ட், பை சீனியர்” என அவள் ஸ்டெப்ஸ் ஏறி ரூம் நோக்கி கொஞ்சம் தூரம் செல்ல, பின்னயே ஸ்டெப்ஸ் ஏறி வந்தவன், அவள் தோள் பிடித்து நிப்பாட்ட, பின்னயே வந்து நின்றவனை கண்டு குறும்பாக அவள் சிரிக்க.
தலையில் கொட்டி, “உடனே நம்மல பிரிய முடியாம பின்னயே வந்துட்டாங்களேன்னு ஓவர் இமேஜினேஷனுக்கு போகாத, அப்டியே நட, ஒரு விஷயம் மறந்துட்டேன் அத சொல்லிட்டு போக வந்தேன்” இருவரும் பேசி கொண்டு ரூம் நோக்கி நடந்தனர்.
“உங்கள லவ் பண்ணிட்டு அப்டிலாம் ௭க்ஸ்பெக்ட் பண்ணிடுவேனா பிரசிடெண்ட்”.
இதற்குள் ரூம் வந்து விட்டுட்டிருக்க “போடி, சரி விஷயம் ௭ன்னன்னா, உனக்கு ஸ்டொமக் பெயின்னு சொல்லி தான் லட்சு உங்க இன் ஜார்ஜ் மேம்கிட்ட பெர்மிசன் கேட்ருக்கா, அவுங்க ரிட்டன் ஆனதும், உன்ன வந்து பாத்தா மேனேஜ் பண்ணிக்க” என்க.
அவள் தலையை உருட்ட., உருட்டிய தலையை இரு கைகலாலும் பிடித்து , நெற்றியில் அழுத்தமான முத்தமொன்றை பதித்தவன் “டேக் கேர் ௭ழில்” ௭ன்றுவிட்டு திரும்பியும் பாராமல் இறங்கி சென்றான்.
பின் கீழ் வந்து மூர்த்தியிடம், “அவ தனியா இருக்காடா எதுக்கும் அவங்க பஸ் வர்ற வர இங்க வெயிட் பண்ணலாம்” என ௭திரில் இருந்த பேக்கரி கடையில் சென்று அமர்ந்து விட்டனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் லட்சு அண்ட் கோவின் பஸ் வந்திருக்க. அதை கண்டுவிட்டு மூர்த்தியும் ப்ரகலத்தனும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று விட.
லட்சு, நிலா, அமலாவுடன் அவர்கள் மேடமும் சேர்ந்து சென்று ஆறு தங்கியிருந்த ரூம் கதவை தட்டினர்.
ஆறு வந்த வேகத்தில் மல்லாந்திருக்க, தூக்க கலக்கத்தில் தான் வந்து திறந்தாள். இவள் முழித்த முழியில், “ஸ்டொமக் பெயின் எப்டி இருக்கு” என்றார் பின்னாலிருந்து சுகந்தி மேடம். அந்த ஒரு நிமிடம் அவள் மனதில் பொய் சொல்கிறோமே என்ற நெருடல் வந்து சென்றது.
அவரை “இப்ப வலி இல்ல மேம், நாளைக்கு கண்டிப்பா வந்துடுறேன் மேம், சாரி காலைல வந்து பெர்மிசன் கேக்க முடில” ௭ன நல்ல பிள்ளையாக சமாளித்துவிட்டு,
“இட்ஸ் ஓ.கே டேக் கேர்” ௭ன அவர் நகரவும், கதவை அடைத்துவிட்டு, மூவரும் உள் நுழைய.
“ஹே எங்கல்லா போனீங்க? நாங்க எங்கெல்லாம் போனோம் தெரியுமா?” ௭ன ஆறு போன இடத்தையெல்லாம் சொல்ல மூவருமே அவளை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
லட்சு நேராக பாத்ரூம் புகுந்துவிட, மற்ற இருவரும் கட்டிலில் படுத்து விட்டனர்.
“என்னாச்சுடி பயங்கர டையர்டா? எனக்குக் கூட அப்டித்தான் இருக்கு. என்ன நடந்துச்சு? ஏதாவது சொல்லுங்க. சொல்லிட்டு படுங்க” என அவள் இருவரையும் எழுப்ப, அசையாமல் படுத்திருந்தனர்.
லட்சு வெளிவர, நிலா புகுந்து கொண்டாள். லட்சு வந்தவுடன், “எனக்கு பிரசண்ட் போட்டியா லட்சு” என லட்சுவிடம் கேட்க, அவள் இவள் முகத்தை திரும்பியும் பாராமல் சென்று படுத்து விட, “கோவமா இருக்கீங்களா? என்னாச்சு? மேடம் ஏதும் திட்னாங்களா? அம்மா போன் போட்டு கேட்டாங்களா?” அந்நேரத்தில் சரியாக அவள் போன் வைப்ரேட் ஆகியது.
எடுக்க ஜெயந்தி தான், “ஹலோ எழில், ஏன் போன் எடுக்கல? காலைலயிருந்து எத்தன டைம் போன் பண்றது? மிஸ் நம்பரும் வாங்கி வைக்காம விட்டுட்டேன். இப்பயும் நீ எடுக்கலனா லட்சு அப்பாவுக்கு போன் போட்டு, உன் மிஸ்ட்ட பேச சொல்லலாம்னு இருந்தேன். போன மறந்து வச்சிட்டு போயிட்டியா?” என பதட்டத்தோடு கேட்க.
“ஹான்……ஆமாம்மா மறந்துட்டேன்” என்றாள் திக்கி திணறி.
“உனக்கு போன் கைல வச்சு பழக்கமில்லாததால வச்சுட்டு போயிருப்பன்னு நா நினச்சேன் அத தான் நீயும் செஞ்சிருக்க. சரி விடு எங்கெல்லாம் போனீங்க? சாப்டீங்களா?” என அவர் மேலும் கேட்க. சொல்ல நா எழவில்லை இவளுக்கு.
“சொல்லேன்டி எங்கெல்லாம் போனன்னு” என அவர் மறுபடியும் கேட்டபின், ப்ரகலத்தனுடன் சென்று பார்த்த இரண்டு இடங்களை சொன்னாள்.
“சரி சரி நாளைக்கு ஈவினிங் கிளம்புறீங்க தானே? பாத்து கவனமா இருக்கணும், புரியுதா” என சின்ன பிள்ளைக்கு சொல்வதை போல் சொல்லி விட்டு வைத்தார். அது ஆறுவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
“ஏன்டி போன எடுத்து பேசலையா?” ௭ன்றாள் லட்சுவிடம்.
“உன் அளவுக்குலா என்னால ஈஸியா பொய் சொல்ல முடியாதும்மா”.
“ஏன் லட்சு இவ்ளோ கோவமா இருக்க?”.
“நீ செஞ்சது உனக்கு தப்பா தெரியலயா ஆறு?”.
“சொல்லிட்டு தான போனேன்”.
“யார்ட்ட சொல்லிட்டு?. உனக்கு ரெஸ்பான்சிபிள் ஃபர்ஸ்ட் உங்க அம்மா, அவங்ககிட்ட கேட்டியா? செகண்ட், வந்த இடத்துல சுகந்தி மேடம், அவங்ககிட்ட கேட்டியா? நீ இன்னமு செல்ஃபிஸா தான் இருக்க ஆறு. கொஞ்சம் கூட மாறல”.
மெதுவாக….”நா வீட்ல போயி அம்மாட்ட சொல்லிடுவேன்” ௭ன்றாள்.
“தயவு செஞ்சு அந்த நல்ல காரியத்தனாலும் செய். எனக்கு இப்டி ஊர் சுத்த போறீங்கன்ற பிளான் தெரியாது. நீ எப்டி இருந்தாலும் சீனியர் கரெக்டா இருப்பாங்கன்னு நெனச்சேன். அவங்களும் ஏன் இப்டி பண்ணாங்க ச்ச……சரி வந்த இடத்துல ஒரு பத்து நிமிஷம் உன்ன சர்ப்ரைஸ் பண்ணிட்டு போய்டுவாங்கன்னு நினைச்சேன். நீங்க ஈசியா சொல்லிட்டு ஜாலியா கிளம்பி போயிட்டீங்க, மேம்ட்ட சமாளிக்க ௭வ்ளோ கஷ்ட பட்டேன்னு தெரியுமா உனக்கு. அதெல்லாம் யோசிச்சியா நீ??? உனக்கு ஸ்டொமெக் பெயின்னு சொன்தும், சுகந்தி மேடம், ‘நா வேணும்னா கூட இருக்கேன், இந்த புது ஊர்ல, அதும் ஹோட்டல்ல அவள தனியா விட்டுட்டு எப்டி போறதுன்னு யோசிச்சாங்க. கூடவே கூட்டிட்டு போவோம் பஸ்ல கூட படுத்துக்கட்டும்னு சொன்னாங்க, நாதான் அவ உள்ள லாக் பண்ணிட்டு சேஃபா இருப்பா மேடம், கைல போன் இருக்கு, கால் பண்ண சொல்லிருக்கேன்னு சொன்னேன். அவங்க அங்க வச்சு நாலு டைம் விசாரிச்சாங்க. ௭வ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? உன்மேல எவ்வளவு ஹோப் வச்சிருந்தா உன் அம்மா வீடு வர சீனியர அலோவ் பண்ணுவாங்க, நீ அத அட்வான்டேஜ்ஜா எடுத்துக்றியே நல்லாவா இருக்கு, இப்டி ௭ல்லாரயும் ஏமாத்றது கில்டியா இல்ல உனக்கு?? யாரும் ௭ப்டியும் போங்க ௭னக்கு ௭ன் சந்தோஷம் தான் முக்கியம்னு இருக்க உன்னால தான் முடியும் ஆறு” என பட படவென மொத்த கோவத்தயும் கொட்டி விட்டாள்.
“சாரிடி, எனக்கு பிரஸிடண்ட கேட்டதும் சந்தோஷமா இருந்தது லட்சு, அத வேணானு எப்டி சொல்றதுன்னு தெரில. ௭ப்பயும் இப்டி கூட்டிட்டு போனது இல்ல தான??”.
“ஏன் இன்னையோட உலகம் அழிஞ்சிட போகுதா?? அந்த அண்ணாவ தான கல்யாணம் பண்ணிக்க போற, இப்டிலா அப்போ வந்து சுத்து, யாரு கேக்க போறா? இப்ப என்ன அவசரம். இவ்வளவு பேர் நம்பிக்கைய உடச்சு, எங்களையும் பொய் சொல்ல வச்சு, அப்டி ௭ன்ன தேவ” ௭ன நொந்தவள்.
“இந்த லவ்வுக்காக நா உனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கேன், ஆனா அதுக்காக நீ ஒரு தப்பு பண்ணும் போது சப்போர்ட் பண்ண மாட்டேன். எனக்கு இது பிடிக்கல ஆறு” என சேர்த்து சொல்லி விட்டு முகத்தை மூடி படுத்து விட்டாள்.
“நா இவ்வளவுலா யோசிக்கலடி. அந்த டைமுக்கு சரின்னு தோணுனது கிளம்பிட்டேன். இப்டி நீ காலையிலேயே திட்டி நிறுத்திருக்கலாம்ல?”.
“நானும் உன் ஏஜ் தான் எனக்கு மட்டும் முன்னயே ௭ல்லாம் தெரிஞ்சிருக்குமா. இன்னைக்கு ஃபுல்லா நடந்தத வச்சு தான் இப்ப கூட இத நா சொல்றேன். ஆனா இனியும் நாம சின்ன பிள்ளைங்க இல்ல, நீ எதையும் செய்ய முன்ன யோசிக்க பழகு”.
“லட்சு மேடம் கூப்பிடுறாங்க” என ஒரு பெண் வந்து சொல்லி செல்ல, “சாப்பிட போக தான் கூப்பிடுவாங்க, நீங்களும் வாங்க சாப்பிட்டு வந்த பிரெஷ்ஷாகு அமல்” என்றாள்.
எழிலுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, ‘இன்னைக்கு போய் இருக்க வேண்டாமோ?’ என இப்போது சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
பின் சாப்பிட்டு வரவும், வாங்கி வந்த பொருட்களை கடை பரப்ப, “வாங்குனதெல்லாம் அம்மா காசுல, ஆனா அவங்கள ஏமாத்தி உன் சந்தோசத்த தேடிக்குவ?” என்றாள் நக்கலாக லட்சு அப்போதும். இப்பொழுது எழிலுக்கு நின்ற அழுகை மீண்டும் வந்திருந்தது.
“எவ்வளவு பேர் ௭ன்னலாமோ தப்பு பண்றாங்க, என்ன மட்டும் சொல்ற?” ௭ன்றாள் தேம்பி கொண்டு.
“எனக்கு நீதானடி ப்ரண்ட் எரும, உன்ன தான் சொல்ல முடியும்”.
“ஹே போதும்டி. ஏற்கனவே போதும் போதும்ன்ற அளவுக்கு காய்ச்சி எடுத்துட்ட. இனி செய்ய மாட்டா, இன்ன ஆறு?”. என்றாள் நிலா. ஆறு கண்ணை துடைத்துக் கொண்டு “சரி” என வேகமாக தலையாட்ட.
“அது ஒன்னுமில்ல ஆறு, லட்சுக்கு, உனக்காக மேடத்துட்ட பொய் சொன்ன கடுப்ப விட, வைரம் உன் நம்பருக்கு போன போட்டு ஊத்துன ஜொல்லுல தான் ரொம்ப கடுப்பாகிட்டா” என அமலா சிரித்து கொண்டே சொல்ல.
“ஆமா போனவ சும்மா போகாம எதுக்குடி அவன்ட்ட உன் நம்பர குடுத்த?” லட்சு இப்போது மறுபடியும் பல்லை கடிக்க.
“காலைல ஒரு 10 மணி இருக்கும், பிரசிடெண்ட் நம்பருக்கு போன் பண்ணி கேட்டான்டி. நமக்கு தான் இன்னைக்கு பிளான் தெரில. அவங்களுக்குலா தெரிஞ்சு தான் இருக்கு, அதான் ஈவினிங் மூர்த்தி சீனியர் கூட இங்கயே வெய்ட் பண்ணிருக்காங்க, வைரம் ௭ன்ட்ட, லட்சு எப்டி நீ இன்னைக்கு வரலன்றத உங்க மேடம்ட்ட சமாளிப்பான்னு போன் பண்ணப்ப கேட்டான். நா இப்பவர அவட்ட பேசல, நீயே கேட்டுக்கோன்னு சொல்லிக் குடுத்தேன்”.
தலையிலடித்தவள் “போன் மேல போன போட்டு உசுர வாங்கிட்டான்” லட்சு சலித்துக் கொண்டு கூற.
“பொய் சொல்லுறாடி இவளும் நல்லா கடலய வறுத்துட்டு இப்ப வந்து கத விடுறா” என்றாள் நிலா.
“இதுகூட உன் போன்ல வந்த ரிங் டோன் வேற,
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்னு வந்துச்சு, ௭ந்த கால ஃபீல்டுல உள்ள பாட்டோன்னு மறுபடியும் வைப்ரேட்டுக்கே மாத்திட்டேன்”
“அதான் உனக்கு சொன்னா புரியாதுன்னு சொன்னேன்ல, ௭ங்கம்மாட்ட கேட்டா, தத்துவ பாடல்டி, உனக்கு ௭ங்க அதோட அருமை தெரியபோதுன்றாங்க”,
“அது சரி அது அவுங்க போன் சோ அவுங்கவுங்க விருப்பம்”.
அதன் பின்னர் ஏதேதோ பேசி விளையாண்டு, அதில் சண்டையாகி, சிறிதுநேரம் அடிதடி சண்டைக்குப் பின் உறங்கச் சென்றனர்.

