Loading

இன்று

இப்போதெல்லாம் தீராவுடன் தொலைப்பேசியில் பேசுவதே தலையாய கடமை போல் செய்து வந்தாள் அகரநதி, கார்த்திக்கை மீட்க அவள் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது அவளின் செயல்கள்.

“நதி..?” மென்மையாய் செல்லிடப்பேசியில் அழைத்தான்

“ம்ம்ம சொல்லுங்க தீரா.?” அவள் பதில் கொடுத்தாள்

“என்கிட்ட ஒரு உண்மையை மட்டும் சொல்லுவியா.?”

“ம்ம் கேளுங்க தீரா சொல்றேன்.”எனப் பேசியவள் சுடிதாரின் துப்பட்டாவை சரி செய்த படி கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தாள்.

“நீ சொல்றதுபடி பார்த்தால் கார்த்தியும் மலரும் காதலிச்சிருக்காங்க, அப்போ மலருக்கு இந்த விசயத்தை பத்தி எதாவது ஷேர் பண்ணியிருப்பான்ல”

“சரியா சொன்னீங்க தீரா, கார்த்தி கண்டிப்பா மலர்கிட்ட பேசியிருப்பான்”

“அப்போ மலரை பிடிச்சா நமக்கு சில உண்மைகள் தெரிய வரலாம் சரிதானே.?”

“சரிதான் உடனே மலரை போய் பார்க்கலாமா.?”

“ம்ம் போகலாமே நதி, டென் மினிட்ஸ்ல கிளம்பி வந்திடுறேன்” எனத் தீரா கூறினான்.

“வெயிட், அது ஏன் எப்போ பார்த்தாலும் நீங்களே எங்க வீட்டுக்கு வர்றீங்க நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா தீரா.?”

“என் அருமை காதலியே தாரளாமா உங்க வீட்டுக்கு நீங்க வரலாம், அமைச்சர் செந்தமிழன் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா நதி?”

“என்னது காதலியா.?” இதழுக்குள் சிரிப்பை மறைத்தபடி அவள் கேட்க,

“ஓ தப்பா சொல்லிட்டேனோ ஆசை பொண்டாட்டின்னு சொல்லியிருக்கணுமோ.?”

“ஏய் தீரா? அப்போ நான் வரக் கூடாதா?” செல்லக் கோபம் கொண்டாள் அகரநதி

“சரி சரி லொக்கேசன் அனுப்பி வைக்கிறேன்” என்றான் தீரா.

“ இப்போ எதுவும் சொல்ல அவரு?”அவள் கேட்க,

“யாரு நதி”

“அதான் உங்க தோஸ்த் செந்தமிழன்”அவள் மெலிதாய் சிரித்தாள்

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ நேர்ல வா நதி, நான் பேசிக்கிறேன்” அவன் அழைப்பை துண்டிக்க, அவள் தீராவின் வீட்டிற்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தாள்.

“அதிமா..?” கோபாலனின் குரல் முதுகிலிருந்து கேட்க,

“சொல்லுங்கப்பா”

“உன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கமா.?”

“அப்பா நான் கார்த்தி வெளிய கொண்டு வர்ற வரைக்கும் கல்யாணத்தை பத்தி யோசிக்குறதா இல்லை”

“அப்போ தீராகிட்ட பேசுறதுக்கெல்லாம் என்னமா அர்த்தம்”

“நடிப்புன்னு அர்த்தம்பா”

“என்னமா சொல்ற.?” அதிர்ந்தார் கோபாலன்,

“ப்பா தீராவைக் க்ளோஸா வாட்ச் பண்ணினாதான், கார்த்தியை வெளிய எடுக்க முடியும்ப்பா”

“என்னமா அதி சொல்ற அப்போ இது காதல் இல்லையா.?”

“என்னால இந்த விசயத்துல தெளிவான முடிவு எடுக்க முடியலைப்பா, அவர் என் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகுற வரைக்கும், இது இப்படி தான் இருக்கும், என்னோட ஒரே நோக்கம் கார்த்தியை வெளிய கொண்டு வரணும், எந்த தப்பும் பண்ணாமல் அவன் உள்ள இருக்கிறது, எனக்கு குற்ற உணர்வா இருக்குப்பா”

“அதி நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைச்சுக்காதே, இது உன் வாழ்க்கை இதை யாருக்காகவோ பணையம் வைக்காதே அதி, ஒரு ஆணை காதல்ன்ற பெயரால ஏமாத்தாதே அதி, அது பெரும் பாவம், உன்னோட வாழ்க்கை தடம் மாறி போறதை என் கண்ணால பார்க்க முடியாது அதி.?”

“என்னப்பா சொல்றீங்க.? நான் தீராவை ஏமாத்தல. இது நடிப்புன்னு என் மனசுக்கு மட்டும் சொல்லிக்கிறேன். ஒருவேளை அவர் கெட்டவரா இருந்தால் என் மனசு தாங்காதுப்பா” என்றவள் விழிகள் சற்று கலங்கி மீண்டும் இயல்புக்கு மீண்டது.

“அதி நீ பேசுறது ரொம்ப தப்பு” கண்டிப்புடன் மகளை முறைத்தார்.

“என்னப்பா முறைக்குறீங்க.?”

“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க அதி, தீராவோட காதல் உண்மையானது, உன்னை பாதுகாக்கணும்னு அவரு தவிச்ச தவிப்பை நான் கண்ணால பார்த்திருக்கேன்”

“தீரா உண்மையா இருக்காருன்னு எதை வச்சுப்பா சொல்றீங்க”

“நீ எதை வச்சும்மா இல்லைன்னு சொல்ற.? தீரா உண்மையா இல்லைன்னு” பட்டென கேட்டுவிட, தன் அறைக்கு சென்று பழைய நாளிதழ் ஒன்றை எடுத்து கொடுத்தவள்.

“அப்பா இதில் பன்னிரெண்டாவது பக்கத்தில் கார்னர் நியூஸ் கொஞ்சம் சத்தமா படிங்களேன்”

“மீனாட்சி கல்லூரியின் தமிழ் பேராசிரியர், கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டார், அப்படின்னு போட்டிருக்கு இதுக்கும் தீராவுக்கும் என்னமா சம்மந்தம் இருக்கு அதி.?”

“ப்பா அவங்க தான் சராளா மேம், அவங்களோட மரணம் இயற்கையானதுன்னு நேத்து தான் சொன்னாரு உங்க நம்பிக்கைக்குரிய தீரா” அவள் இதழ் வளைந்தது.

“என்னை பொறுத்தவரைக்கும் தீரா எது செய்திருந்தாலும் உன்னோட நல்லதுக்கு தான் செய்வார், இதை நீ புரிஞ்சுகிற காலம் வரும் அதி, உன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு கூட பொய் சொல்லியிருக்கலாம்”

“ஏன்ப்பா எல்லாத்தையும் இப்படி கண்மூடி தனமா நம்புறீங்க.? இந்த உலகத்துல யாருமே நல்லவங்க இல்லைப்பா, அவங்க அவங்க சுயநலத்துகாக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க” என சொல்லி கோபமாய் கைப்பையை மாட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியை கிளப்பியிருந்தாள் அகரநதி.

தீராவின் இல்லம் நோக்கிய பயணத்தில் பாதி வழியை கடந்திருந்தாள் அதி. வெகு நாட்களுக்கு பிறகு தன் சிங்கத்தில் பயணிப்பதே அவளுக்கு இதமான உணர்வை கொடுத்தது.

அவள் மனதிற்குள் திடீரென மலரை பற்றி யோசனைகள் உதிக்க ஆரம்பித்தது. மலரை எப்படி தொடர்பு கொள்வது என்ற எண்ணம் மேலோங்கியது, ஐந்து நிமிட பயணத்தில் தீராவின் வீட்டை அடைந்திருந்தவள்.தயங்கிய படி அழைப்பு மணியை அழுத்தினாள். கதவை திறந்துக்கொண்டு புன்னகை முகமாய் வந்து நின்றார் வினோதா.

“மருமகளே! வந்துட்டியா.? வா வா” என வரவேற்றார் வினோதா, ஒரு வித தயக்கத்திலே வீட்டினுள் நுழைந்தாள் நதி.

“என்னமா நதி.? தயங்காம வா நீ வாழப்போற வீடு, மகாராணி மாதிரி உள்ளே வாமா” என அன்புடன் அழைக்க, வராத புன்னகையை இழுத்துபிடித்து முகத்தில் பூசிக்கொண்ட நதி,

“ஹாய் ஆண்ட்டி தீராவை பார்க்க வந்தேன்”

“நதி குளிச்சிட்டு இருக்கேன் வெயிட், வில் பீ பேக்” என தீராவின் குரல் மட்டும் குளியலறையிலிருந்து கேட்க,

“வாமா நதி, தீரா ரூம்ல உட்காரு ஆண்ட்டி காஃபி போட்டு வர்றேன்” என சமையலறைக்குள் புகுந்தார்.

அவனின் அறையை மின்னல் விழிக்கொண்டு பார்வையால் அலசினாள் அகரநதி, அவளின் டைரி மேஜை மேல் இருக்க அதை திறந்து பார்த்தாள், அவள் அன்று காதலுடன் எழுதிய வார்த்தைகள் வாசித்து புன்னகைத்தாள்.

பல குழப்பங்களையும் தாண்டி அவன் விழியில் தொலைந்த நாளோடு இந்த உலகமே நின்றிருக்க கூடாதா, அவள் மனம் மெல்ல கரைந்தது, காதல் மனதில் வந்த நாளிலிருந்த என்று அவன் விழி பார்த்து காதல் சொல்வேன் என காத்திருந்த கணங்களும்,காதலை சொல்ல முடியாத துயரத்தில் தூக்கமில்லாமல் கடந்து சென்ற இரவுகளை நீ அறிய வாய்ப்பில்லை தீரா, அவள் கையில் டைரியை வைத்தபடி எதோ சிந்தனையில் இருக்க, தீரேந்திரனோ கிளம்பி தயாராக நின்றிருந்தான்.

கருப்பு கண்ணாடி அணிந்திருந்தவன், அவனின் இறுக்கமான டீசர்ட்டும், ப்ளூ நிற ஜீனும் அணிந்திருக்க விழியசையாமல் பார்த்தவள் அவனின் முறுக்கு மீசையுடன் சேர்ந்த கம்பீரத்தை சேர்ந்தாற் போல் தன்னை மறந்து ரசித்தாள்,

“லுக்கிங் குட் தீரா” தன்னை மறந்து குழந்தையை போல் மிழற்றினாள் பேதை பெண்ணவள்.

“தேங்க்ஸ் நதி”

“உங்களை அன்யூனிஃபார்மில் பார்த்திருக்கேன், கேஷுவல்ஸில் இன்றைக்கு தான் பார்க்கிறேன்”

“ரசித்தது போதும், மலர் வீட்டுக்கு போகலாமா நதி?” அவன் கேட்ட போது தான், அவள் எதற்காக இங்கு வந்தாள் என்ற நினைவே வந்தது.

“தடுமாறாதே அதி” தனக்குள்ளயே சொல்லிக்கொண்டிருந்தாள் வினோதாவும் சரியான நேரத்துக்கு காஃபி கொண்டுவர அதை பருகி விட்டு, இருவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

வழக்கம் போல் மௌனமான கார் பயணம் அவள் கையிலிருந்த முகவரியை வைத்துக்கொண்டு மலரின் வீட்டை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.

“இந்த வீடு தான் டோர் நம்பர் த்ரீ போட்டிருக்கே” அவசரமாய் சொன்னாள் நதி. அவள் சொன்னவுடன் பட்டென வாகனத்தை நிறுத்தினான் தீரேந்திரன்.

“நதி போய் பேசிட்டு வா, ஐ யெம் வெய்ட்டிங் அவுட் சைட்” என சொன்னான்.

“நீங்களும் வாங்களேன்”

“இல்லை நதி அது நல்லா இருக்காது, நம்ம இன்விடேசன் வைக்கும் போது சேர்ந்து போகலாம்” இமை சிமிட்டி சிரித்த அழகை கொஞ்சமும் ரசித்து தான் போனாள் அவனின் நதி.

கேட்டின் முன் நின்ற படி வீட்டின் அழைப்பு மணியை அடித்தாள் அகரநதி. கேட்டை திறந்து கொண்டு வந்த பெண்மணி எதோ சொல்ல முகத்தை வாட்டமாய் வைத்துபடி வருவதையும் காரில் இருந்த படி பார்த்துக் கொண்டிருந்தான் தீரேந்திரன். மீண்டும் காரின் முன்னிருக்கையில் வந்தமர்ந்த நதி சோகம் வழிந்துக் காணப்பட்டாள்.

“என்னாச்சு நதி.?”

“மலர் இங்கே இல்லையாம்”

“சரி அவ போன் நம்பர் வாங்கிட்டு வந்திருக்கலாமே.?”

“இல்லை அவங்க பேமிலி வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டதா சொல்றாங்க”

“சரி நதி ஃபீல் பண்ணாதே தேடி கண்டு பிடிச்சரலாம்”

“மலர் அப்ராட்ல இருக்காலாம் இன்னும் ரீட்டன் ஆகலைன்னு சொன்னாங்க” என அவள் சொல்ல

“சரி பரவாயில்லை நதி நம்ம கண்டுபிடிச்சிருவோம்”

“ம்ம்ம்” என ஒற்றை சொல்லில் அகரநதி பதில் அளித்தாள்.

கார் மெல்ல நகர்ந்தது, தார்சாலையை கண்டவுடன் சீறி பாய்ந்த வாகனம் ஓரிடத்தில் வந்து நிற்க,எங்கே வந்திருக்கிறோம் என விழி உயர்த்தி அந்த கட்டிடத்தை பார்த்தாள்.

“தீரா இங்கே எதுக்கு வந்திருக்கோம்.?”

“எதுவும் பேசாமல் அமைதியா என் கூட வா நதி, செந்தமிழனோட ஆட்கள் எங்கே வேணும்னாலும் இருக்கலாம்” என சொல்லி முன்னே நடந்தவனை பின் தொடர்ந்து சென்றாள் நதி. அது பிரம்மாண்டமான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

“இங்கே எதுக்கு வந்திருக்கோம் தீரா” அவன் காதுகளில் கிசுகிசுத்தாள்.

“நதி ப்ளிஸ் அமைதியா வா” கண்டிப்பாய் சொன்னான்.

“ரூம் புக் பண்ணியிருந்தேன்” அவன் செல்பேசியை வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் புறம் நீட்டினான்.

“யா சார் ரூம் நம்பர் டூ நாட் த்ரீ, யுவர் கீ சார்” என கதவை திறக்கும் அட்டையை அவன்புறம் நீட்டினாள் அந்த பெண்.

“தீரா என்ன இதெல்லாம்” கோபமாய் பார்த்து வைத்தாள் நதி.

“நதி சொன்னா புரியாதா.? வா” அவனும் சினம் கொண்டு சொன்னான்.

“நான் வரமாட்டேன், எதுக்காக என்னை இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க.?” பட்டென அவள் தோளில் கைபோட்டவன் வலுகட்டாயமாக அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.

அறை முழுவதும் மலரால் அலங்காரம் செய்யபட்டிருந்தது, இருண்ட அறையில் வரிசைக்கட்டி நின்றுக்கொண்டிருந்த நறுமண மெழுகுவர்த்திகள் வெளிச்சத்தை கொடுத்திருந்து, ரோஜா பூ இதழால் நிரப்பட்டிருந்த கிங் சைஸ் பெட் அகரநதியை மிரட்டியது. இவை அனைத்தையும் பார்த்து பயந்து போனவள் கோபமும் வெறுப்பும் கலந்த பார்வையை தீராவின் மீது செலுத்தியிருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நதி பழசை சொல்ல வைக்க எதும் புது பிளானா தீரா ..

  2. தன் மனதில் காதல் இருந்தும், அவன் மனதின் காதல் புரிந்தும் நம்பிக்கையின்மையால் விளைந்த ஒதுக்கம் நதியிடம்.

    உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வரை இணக்கமாக செல்வது போல் நடிக்க எண்ணுகிறாள்.

    தீராவிற்கு இவளது எண்ணம் புரியாமலா இருக்கும்.