Loading

அத்தியாயம் 25

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்ததில் பாவம் அவளுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் கண்டு வீட்டில் முடங்கிக் கொண்டிருந்தாள்.

காயத்ரியிடம் தனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் விடுப்பில் உள்ளதாக கூறி இருந்தாள்.

உடம்பில் காய்ச்சல் இருந்ததோ இல்லையோ, மனம் மற்றும் எண்ணம் முழுவதும் பரிதியே நிறைந்து இருந்தான்.

தூங்கலாம் என்று கண்ணை மூடினாலே, ஏதோ ஏதோ செய்து இம்சிக்கிறான் கள்வன்.

“ஐயோ.. கண்ணை மூடுனாலே அவரு நியாபகம் தான் வருது. அவரு எதுக்காக என்னைத் தேடி வந்தாரு..  தெரியலையே.. எப்படி என் அட்ரஸ் கெடச்சது. சரிதான் அவரு தான் பெரிய ஆள் ஆச்சே. ஹாஸ்பிடல்ல கேட்டு வாங்கி இருப்பாரு. அங்க தான் கொடுத்தோம் நம்ம. சரி போன் நம்பர் எல்லாம் சொல்லிட்டு போய் இருக்காரு. என்ன பண்ணலாம்..” என்று  இந்த இரண்டு நாட்களும் பரிதிக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று அவள் தான் மனதைப் போட்டு அலைக்கழித்து கொண்டிருந்தாள்.

சரி ஒரு முறை அழைக்கலாம் என்று எண்ணி, அவனுக்கு அழைப்பு விடுவித்து விட, பின் ஏதோ தோன்ற, உடனே சட்டென்று அணைத்து விட்டாள்..

தன்னுடைய அலைபேசி எண் அவனிடம் இருந்துருக்க வாய்ப்பு இல்லை என்றும், வேறு ஏதோ எண்ணில் இருந்து வந்து இருக்கின்றது. அதை கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் நினைத்து இருந்தாள்.

பாவம் அவளுக்குத் தெரியாது அல்லவா.. அவன் அவளின் அலைபேசி இலக்கத்தை சேமித்து வைத்துள்ளான் என்று.

“ச்ச.. போன் எடுத்தா என்னனு  பேசுறது. பயமா இருக்கே.. படப்படனு வேற வருது..” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அங்கு பரிதிக்கு அழைப்பு வரும் சத்தம் கேட்டு உடனே நின்று விட, “யார்ரா அது.. நமக்கு மிஸ்ஸுடு கால் கொடுக்கிறது. ” என்று யோசித்து எடுத்துப் பார்க்க,

“My soul..” என்ற எண்ணில் இருந்து தவறிய அழைப்பபைக் கண்டதும், அவனால் அவனின் கண்களை நம்ப முடியவில்லை.

“என்ன ஒரு அதிசயம். நமக்கு கால் பண்ணிருக்கா.. அதுவும் மிஸ்ஸுடு கால் வேற.. பயந்துட்டு கட் பண்ணி இருப்பாளோ..” என்று அவளின் எண்ணத்தை இங்கிருந்தே சரியாகக் கணித்தான்.

“பரவாயில்லை.. இந்த அளவுக்கு பண்ணனும்னு தோணி இருக்கே.  இனி இவ பயந்துட்டு பண்ண மாட்டா.. நம்ம நேருல போய் ஷாக் கொடுத்துற வேண்டியது தான். ” என்று அலைபேசியை பார்த்து சிரித்துக்கொண்டே பேசிட, அதனைப் பார்த்த வைஷு, “மாமா.. என்ன ஆச்சி.. நீங்களா தனியா சிரிக்கிறீங்க போன் பார்த்து. ” என்றாள்.

“அதுவா.. அது எல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது..” என்றான் விளையாட்டாக.

“ஏன் சொல்ல முடியாது. சொல்ல முடியாத அளவுக்கு அது என்ன தேவ ரகசியமா..” என்று வேண்டும் என்றே அவளும் வாயாட,

“ம்ம்ம். அப்டித்தான் வச்சிக்கோயேன்..” என்றான் அவன்.

“அப்போ சொல்ல மாட்டீங்க.. அப்படித்தான..” என்று அவளும் விடாமல் கேட்க,

“ஆமா…” என்றான் அவன் சிரித்துக்கொண்டே..

“இருங்க. நான் போய் இனியன் கிட்ட சொல்றேன்..” என்று அவள் அங்கிருந்து கிளம்பப் போக..

“போ.. போ.. சொல்லு.. சொல்லிட்டு மட்டும் வா.. இது ஆபீஸ். உங்க லவ் எல்லாம் ஆபீஸ் டைம்ல வச்சிக்க கூடாது..” என்றான் புன்னகைத்தவாறே.

சென்ற வேகத்தில் நின்றவள் தன் மாமனை திரும்பிப் பார்க்க, அவனோ தோள்களை குலுக்கி கொண்டான்.

“உங்களுக்கு எப்படி..” என்று முழுதாக சொல்லாமல் ராகம் பாட,

“இனியன் சொல்லிட்டான். உன்ன மாதிரி இல்லை அவன்..” என்றான் பொய்க் கோபத்தோடு.

“அது வந்து.. அது வந்து.. எப்படி சொல்றதுன்னு தெரியல. ஒரு வித கூச்சம். அதான்.. சாரி மாமா..” என்றாள் அசடு வழிந்தவாரு.

“ரொம்ப வழியாத.. வந்து வேலையைப் பாரு..” என்று கூற, அவளும் வந்து விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

இங்கு இவர்கள் இப்படி இருக்க, அங்கு சஞ்சய் குழம்பிக் கொண்டிருந்தான்.

“எப்படி அவனுக்கு மீண்டும் ஃபாரின் ஆர்டர் கெடச்சது. நம்ம அவ்ளோ பண்ணியும் அசராம இருக்கான். ஒரு வேளை நம்ம தான் பண்ணோம்னு கண்டு பிடிச்சிருப்பானோ.. கண்டு பிடிச்சாலும் சும்மா இருப்பானா என்ன..” என்று பலவித யோசனையுடன் தவித்துக் கொண்டிருக்க,

அப்பொழுது அவனுக்கு ஒரு அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ.. சொல்லுங்க..” என்றிட, அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, “நம்மளும் முடிஞ்ச அளவு எல்லாம் பண்ணித் தான் பாக்குறோம். ஆனால் தப்பிச்சிருறானே.. எப்படியும் நான் இதுல இன்வோல்வ் ஆகி இருக்கேனு தெரிஞ்சி இருக்கும். தெரிஞ்சும் அமைதியா இருக்கான்னா, அவ வேற ஏதோ நோக்கத்தோட தான் இருக்கான். நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கனும். ” என்று சஞ்சய் கூற,

அந்தப் பக்கம் கூறப்பட்ட பதிலில் இவன் இந்த பக்கம் அழைப்பை அணைத்து இருந்தான்.

அவனுக்கு இருந்த கடுப்பில் தலை வலி வந்து விட, அலுவலகத்தில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்று விட்டான்.

அன்று ஒவ்வொருவருக்கும் ஒன்றாக அன்றைய பொழுது கழிய, மறுநாள் பரிதிக்கு ஒரு புத்துணர்வுடன் விடிந்தது.

முதல் நாள் இரவு, இன்று நிரஞ்சனாவை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவுடம் தான் தூங்கினான்.

இதோ அதற்காக ஆயுத்தமாகிக் கொண்டு இருக்கின்றான்.

அதுமட்டும் அல்ல. இன்று பரிதியின் பிறந்த தினமும் கூட. அதனால் தான் அவளுக்கு இந்த நாளில் தன் காதலையும் வெளிப்படுத்தலாம் என்று நினைத்து இருந்தான்.

அதற்கு முன் நிரஞ்சனா அலைபேசியில் அழைத்து இருந்தால் ஒரு வேளை அவளை சந்தித்து இருப்பானோ என்னவோ.

ஆனால் அவள் அழைத்து பேசவில்லை என்பதால், இனியும் கால தாமதம் படுத்த விரும்பாமல் அவனே அவளை சந்திக்க தயராகி விட்டான்.

அவன் அறையில் இருந்து கீழ் இறங்கி வர, அவனுக்காகவே அவன் தாய் மங்களம் காத்துக் கொண்டு இருந்தார்.

“வாப்பா பரிதி.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா..” என்று வாழ்த்திட, இனியனும், வைஷு மற்றும் விநாயகம் மல்லிகா என எல்லோரும் வந்து விட்டனர்.

அனைவரும் அவனுக்கு தனித்தனியாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிட, அனைவரிடமும்  தன் நன்றியை தெரிவித்தவன், தனது தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

“நல்லா இருப்பா.. நல்லா இரு..” என்று மனதார வாழ்த்த, பரிதியும் எழுந்து நின்றான்.

அப்பொழுது அவன் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலி வெளியில் வந்து விழுந்து இருந்தது.

அதை கண்டு விட்ட மங்கலாம், “பரிதி இது என்னப்பா புது செயின்.. ” என்று கேட்க,

அவனோ சற்றுத் தடுமாறி, “நான் வாங்குனேன் மா.. டிசைன் நல்லா இருக்குனு..” என்றான்.

ஆனால் மங்களம் அந்த சங்கிலியை எடுத்துப் பார்த்து, அந்த இதய வடிவ டாலரையும் பார்த்தார்.

அதைப் பார்த்தவருக்கு ஏதோ புரிய, அந்த டாலரைப் பிரித்துப் பார்க்க, அதில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

தாயின் செய்கைகள் எதுவும் புரியாத பரிதி, அவர் அதிர்ச்சி அடைந்ததை கண்டதும், “ம்மா.. என்ன ஆச்சு..” என்று கேட்க,

“பரிதி.. இந்த செயின் எப்படி கெடச்சது உனக்கு..” என்று கேட்டார்.

“அது வந்து.. ” என்று சொல்ல முடியாமல் தவிக்க,

மற்றவர்களுக்கும் மங்களத்தின் செயல் புரியாமல் யோசனையுடனே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“சொல்லுப்பா இது எப்படி வந்துச்சுனு.. “என்று கேட்டதும் , பரிதியோ, தாயிக்கு இதை பற்றி ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அது தான் துருவித் துருவி மீண்டும் மீண்டும் கேட்கின்றார் என்று சரியாக கணித்தவன்,

“என்னை ஹாஸ்பிடல்ல ஒரு பொண்ணு அட்மிட் பண்ணாளே .. அவளோடது தான். அவ மிஸ் பண்ணிட்டா செயின்..” என்றான் ஒரு பெருமூச்சுடன்.

“அந்த பொண்ணு யாரு என்னனு தெரியுமா..??” என்று மங்களம் கேட்க,

பரிதியும் இனியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அந்த பொண்ணு பேரு நிரஞ்சனா.. அதான் தெரியும். வேற எதுவும் தெரியாது ம்மா..” என்று கூற,

அவரோ, ” அந்த பொண்ணு வீடு எங்கனு தெரிஞ்சா வா போகலாம். அந்தப் பொண்ணுகிட்ட நான்  விசாரிக்கணும்.. ” என்றார்.

“அம்மா.. என்ன மா ஆச்சு.. என்ன விசாரிக்கனும் நீங்க.. இந்த போட்டோல உள்ளவங்கள உங்களுக்குத் தெரியுமா..” என்று பரிதி கேட்க,

அவரும் கண்கள் கலங்கியவாரு ஆமாம் என்றார்.

“தெரியுமா.. அப்போ யாரு இது..” என்று இனியன் கேட்க,

“அது.. அது… என் தம்பி.. குருமூர்த்தி..” என்று கண்களில் கண்ணீர் வடியக் கூற,

அதைக் கேட்டுக் கொண்டிருந்த விநாயகம் அவசரமாக முன்னே வந்து அந்த டாலரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தார்.

“அக்கா.. அக்கா… நம்ம குரு.. ஆமா.. இது குரு தான்.. குரு மூர்த்தி தான்..” என்றார் அவரும்.

“அவனைத் தேடாத இடம் இல்லை. இப்போ எப்படி இருக்கானோ..” என்று அழுதவாரு புலம்பினார்.

இப்பொழுது தான் பரிதிக்கு விஷயம் புலப்பட்டது.

அம்மாவிம் தம்பி என்றால் தனக்கு மாமா. அதனால் தான் இவரை பார்த்தது போல நமக்கு தோன்றி இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது அவர் உயிருடன் இல்லை என்பதை கூறினால், அம்மா அதை தாங்கிக் கொள்வாரா..

“அம்மா.. ஒரு நிமிஷம்.. இருங்க..” என்று அழுதவரை தேற்றியவன், “இங்க பாருஙக ம்மா.. அவரு நம்மள விட்டுப் போய் ரொம்ப வருஷம் ஆச்சு.. ஒரு வேளை அவருக்கு இப்போ ஏதாவது கூட ஆகி இருக்கலாம். அதுனால நீங்க அதை நெனச்சி கவலைப் படக்கூடாது. ” என்றவன்,புருவங்களை நீவி விட்டு, பின் ஒரு பெருமூச்சுடன்,

“அம்மா.. நிரஞ்சனா இவங்களோட பொண்ணா இருக்க வாய்ப்பு இருக்கு. ஏன் னா, இது அவளோட செயின் தான். அவ போட்டு இருந்தது தான். ஆனால் இவங்க ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்லை. அதுனால தான் என்னவோ அவங்க நினைவா இதை போட்டு இருப்பா போல..” என்றதும், அவரோ அருகில் இருந்த ஷோபாவில் தொப்பென்று அமர்ந்து விட்டார்.

அருகில் இருந்த பரிதியோ, ” அம்மா..” என்று பதறியபடி அவர் அருகினில் வர, மங்களமோ, “இத்தனை வருஷம் கழிச்சு அவனைப் பத்தி தகவல் தெரிஞ்சும் அவன் இப்போ இல்லாம போய்ட்டானே.. கடைசி வரைக்கும் அவனை பாக்க முடியாம போயிருச்சே.. அன்னைக்கு அழுதுகிட்டே போனவன். அதுக்கு அப்புறம் என்ன என்ன கஷ்டப் பட்டானோ.. ” என்று தம்பியை நினைத்து வருத்தப் பட்டார்.

“என்ன ஆச்சு.. அவரு ஏன் இங்க இருந்து போனாரு..” என்று பரிதிக் கேட்க,

விநாயகமோ, ” அண்ணா வெளியூர்ல வேலை பார்த்துட்டு இருக்கும் போது, அவரு ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. வீட்டுக்கு அந்த பொண்ணை கூட்டிட்டு வர, எங்க அப்பா அவங்களை ஏத்துக்கல. வெளிய அனுப்பிட்டாரு. அப்போ அக்காக்கு கல்யாணம் ஆகி மாமா எங்க வீட்டோட தான் இருந்தாரு. உனக்கு அப்போ மூணு நாலு வயசு இருக்கும் னு நினைக்கிறேன். இனியன் அப்போ கைக் குழந்தையா இருந்தான்.. ” என்றார் வருத்தமாக.

அந்த இடத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

பிறகு என்ன தோன்றியதோ, அழுத கண்களை துடைத்துக் கொண்ட மங்களம், “அவன் தான் போய் சேந்துட்டான். ஆனால் அவன் புள்ளைங்களை அடையாளம் காட்டிட்டு போய் இருக்கான். அவன் பசங்களை இங்கயே கூட்டிட்டு வந்துரலாம். இத்தனை நாள் சொந்த பந்தம் இல்லாம இருந்தாங்க. இப்போதான் யாருனு தெரிஞ்சி போச்சே. இனியும் எதுக்கு அவங்க தனியா இருக்கணும். இனிமே இங்கேயே இருக்கட்டும். பரிதி அவங்கள இங்க கூட்டிட்டு வந்துரலாம் ப்பா..” என்று அவனிடம் கூறிட,

அவனும் புன்னகையுடன், “சரிம்மா.. அழைச்சிட்டு வந்துரலாம்..” என்றான்.

அவனுக்குச் சொல்லவா வேண்டும். தன் உள்ளத்தில் இருப்பவளை தள்ளி வைத்து வேடிக்கைப் பார்க்க அவன் என்ன முட்டாளா. இதோ தன் அன்னையே அவளை அழைத்து வரச் சொல்லி விட்டார். இனி என்ன.. அவர்களிடம் பேசி இங்க அழைத்து வர வேண்டியது தான்.

இனியனோ அருகில் இருந்த படி, “அண்ணா.. இனி உன் காட்டுல மழை தான். ” என்றிட,

அது புரியாத மங்களம், ” என்ன டா சொல்றான் அவன்.. ” என்றுக் கேட்க,

“அவன் ஏதோ உளறுறான்..” என்று சமாளித்துவிட்டு, “சரி.. முதல்ல நான் போய் பார்த்து பேசுறேன். அதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் வாங்க..” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினான் தன்னவளைப் பார்க்க..

மனதில் எழுந்த உத்வேகத்துடன் காரை உல்லாசமாக ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

அங்கே நிரஞ்சனா தம்பியை கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டு, ஒரு யோசனையுடன் அமர்ந்து இருந்தாள்.

இரண்டு நாள் ஓய்வு எடுத்து இருந்ததில் இன்று அவளுக்கு நன்றாகவே உடல் தேறி இருந்தது.

இன்று அலுவலகம் செல்வோமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவள், பின் வேண்டாம் என்று தள்ளி வைத்து விட்டு, பரிதிக்கு அழைத்துப் பேசி விடலாம் என்ற முடிவுடன் குளிக்கச் சென்று இருந்தாள்.

அவள் குளித்து உடை மாற்றி சாப்பிட்டு விட்டு அமர்ந்து இருக்க, ஒரு படபடப்புடன் தன் அலைபேசியை எடுத்து அவனது இலக்கத்தை டைப் செய்து பச்சை நிற பொத்தானை அழுத்தி விட்டு, தன் காதில் வைத்தாள்.

ஒரு பக்கம் படபடப்பு. இன்னொரு பக்கம் அடி வயிற்றில் இன்னதென்று தெரியாத உணர்வு.

இந்தப் பக்கம் அழைப்பு போய்க் கொண்டிருக்க, அந்தப் பக்கம் கள்வன் அவன் அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தி, அலைபேசியை ஒரு சிரிப்புடன் பார்த்த வண்ணம், அந்த அழைப்பை ரத்து செய்தான்.

அவளுக்காக வாங்கிய பூங்கொத்தை கையில் எடுத்துக் கொண்டு, அவள் வீட்டின் கதவைத் தட்ட, அங்கு உள்ளே இருப்பவளோ.. ” இருங்க.. ஒரு நிமிஷம்.. ” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறக்க,

வாசலில் அவனோ  புன்சிரிப்புடன் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அவ்வளவு தான். அவளது கண்கள் தானாகவே அகல விரிந்தன. தான் கனவில் கண்டது போல கையில் பூங்கொத்துடன் நேரில் வந்து நிற்கிறானே.. கனவா இது நனவா..
என்று புரியாமல் ஒரு நிமிடம் தலை சுற்றி கிழே விழப் போக,

அவனோ, “ஹே.. ஹே..” என்று பதறிக் கொண்டு அவள் கீழே விழுவதற்கு முன் அவளைத் தாங்கிப் பிடித்தான்.

தான் இன்னும் கீழே விழாமல் இருக்கின்றோம் என்று உணர்ந்து மெல்ல கண்களைத் திறந்துப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி

என்ற பாடல் எங்கேயோ ஒலித்துக் கொண்டிருக்க, இங்கு இவர்களின் நிலையும் அதே..

நித்தமும் வருவாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
1
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்