
அன்று
கல்லூரியின் நுழைவாயிலில் காவல்துறையை சேர்ந்த ஜீப் வந்து சேர, தட தடவென பூட்ஸ் கால்களுடன் நான்கு காவலர்கள் இறங்கி, ஆடிடோரியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் அதில் ஒருவனாய் வந்திருந்த தீரேந்திரனை பார்த்து பெண்ணவளின் மனம் உருகி தவித்தது, இதை அவனிடம் சொல்லியாக வேண்டும் என தவித்தாள். மீண்டும் ஆடிடோரியத்தை நோக்கி நடக்க எத்தனிக்க, அவள் கரம் பிடித்திழுத்த நிஹாவோ,
“இதுக்கு தான் இவ்வளவு சாகசம் செஞ்சியா அதி? உன் காதலுக்காக எங்க வாழ்கையை அழிக்க முடிவு பண்ணிட்டல அதி” விழிகள் சிவக்க கேட்ட நிஹாவை நேராய் பார்த்தவள்.
“நிஹா!! இந்த ஷார்ட் ஃபிலிம் எடுத்தது என்னோட தப்பு தான்டி ஆனால், தீரா இங்கே வந்தது கோ- இன்ஸிடன்ஸ்” நிஹாவுக்கு புரிய வைக்க முயற்சித்தாள் அகரநதி. அவள் சொல்வதை காதில் வாங்காது கோபம் குறையாமல் நின்றிருந்தாள் நிஹா.
“சரி வாங்க ஆடிடோரியம் போகலாம்” என அகரநதி அழைக்க மூவரும் அமைதியாய் நின்றனர்.
“ஏய் அதி, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லைல” கார்த்திக் துரிதமாய் கேட்டான்.
“நான் தான் போலீஸ்க்கு கால் பண்ணிணேன், நானே போய் எல்லாத்தையும் சொல்லிடுறேன்” என விரைந்து போன அதியின் கரங்களை பிடித்து தடுத்திருந்தாள் மலர்.
“அதி இதை பத்தி உனக்கு முழுசா தெரியலை, இதுவரைக்கும் நீ செய்த விசயங்களோட விளைவே என்னனு தெரியாமல் இருக்கும் போது, நீ தான் போலீஸூக்கு போன் பண்ணினன்னு தெரிஞ்சா என்னடி ஆகும், நீ முதலில் இங்கே இருந்து கிளம்பு அதி” கண்டிப்பாய் சொன்னாள் மலர்.
“ஆமா அதி, மலர் சொல்றது சரி தான், நீ பிரச்சனைல மாட்டிக்கிறதை நாங்க விரும்பலை, நீ எங்களை பத்தி யோசிக்காமல் இருக்கலாம் பட் நாங்க உன்னை மாதிரி இல்லை. நீ வீட்டுக்கு கிளம்பு என்ன நடந்துச்சுன்னு நாங்க உனக்கு போன் பண்ணுறோம்” என நிஹா கோபமாக இருந்தாலும் அக்கறையுடன் எடுத்துரைத்தாள்.
“இல்லை நான் போய் சொல்லி தான் ஆவேன், என்னோட கையில ஒரு ஆதாரம் இருக்கு” அதை தான் சரளா மேம்கிட்ட கொடுத்து வச்சிருக்கேன்” என சொல்லி நடந்தவளை குறுக்கே வந்து நின்ற கார்த்திக்கோ தடுத்து நிறுத்தியிருந்தான்.
“முதலில் பார்ட் டைம் பைத்தியமா இருந்த, இப்போ முழு நேர பைத்தியமாவே மாறிட்டியா அதி.? இவ்ளோ தூரம் எல்லாரும் சொல்றோம் ஏன் கேட்க மாட்ற, நீ அகிலன் அப்பாவை நினைச்சு பயப்பட தேவையில்லை, உன் பேமிலியை பத்தி நினைச்சியா.? நீ செய்யுற விசயம் உன் பேமிலியை பாதிக்காதா.? நீ என்ன சின்ன பொண்ணா அதி.? கொஞ்சமாவது செல் பிஷா இருடி” என திட்டிய கார்த்தியையும் பொருட்படுத்தாது அரங்கத்திற்குள் நுழைந்தாள் அதி.
அவளை தொடர்ந்து அவர் நண்பர்களும் வேறு வழியில்லாமல் செல்ல, அனைவரும் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து நின்றனர்.
“யார் எங்களுக்கு போன் செஞ்சது, இங்க இருந்து தான் போன் பண்ணிருக்கீங்க, இப்போ ஏன் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கீங்க” தீரேந்திரனின் குரல் அரங்கத்தில் நிறைந்திருக்க,
“சார் பசங்க தெரியாமல் பண்ணிட்டாங்க, படிக்கிற பசங்க விட்டுருங்க” என அங்கிருந்த பேராசிரியர் தீரேந்திரனிடம் கேட்டுகொண்டிருந்த போதே, வலுவாய் பிடித்திருந்த கார்த்தியின் கைகளிலிருந்து திமிறிக் கொண்டிருந்தாள் அதி.
“கார்த்தி என்னை விடுடா” ஹீனமான குரலில் அகரநதி சொன்னாள்.
“அதி கொஞ்ச நேரம் அமைதியா இருடி”
“அகிலனை நீயும் சப்போர்ட் பண்ணுறீயா.?” கோபமாய் முறைத்தாள் அதி.
“கார்த்தி சொல்லறதை கேளு அதி” அதியின் காதில் கிசுகிசிப்பாய் சொன்னாள் மலர், நிஹா உச்சக்கட்ட பயத்தில் இருந்தாள்.
அதியின் விழிகள் தீராவையே பார்த்து எதையோ சொல்ல ஏக்கம் கொண்டு நின்றது,கூட்டத்தின் நடுவே அவள் விழிகள் தெரிய, அவள் விழிதனை பார்த்த தீராவிற்கு தெரிந்து போனது அவள் அவனுடைய நதி தான் என்று. ஆனால் அவள் விழிகள் எதோ சொல்ல வருவதை அவனால் உணர முடிந்தது ஆனால் அவன் மனசாட்சியோ.?
“டேய் போலீஸ்காரா வந்த வேலையை பாருடா, உன்னோட பர்சனல் வேலைக்கா வந்திருக்க.?” அவன் மனசாட்சி அவனை கழுவி ஊற்றியது .
“இங்க எல்லாரும் படிச்ச பசங்க தானே, இந்த மாதிரி ப்ராங்க் கால் பண்ணுறவங்களுக்கு சட்டபடி தண்டனை இருக்கு, உங்களுக்காக ஒரு ஹெல்ப் லைன் கொடுத்தா அதை நல்லதுக்காக யூஸ் பண்ணுங்க” என அனைவரையும் திட்டி நகர்ந்தவனின் விழிகள் அங்கிருந்து செல்லும் வரை அவனுடைய நதியின் விழிகளை அசராமல் பார்த்துக் கொண்டிருந்தது, ஆனால் பாவம் இந்த முறையும் அவள் முகத்தை காணமுடியவில்லை என்ற வருத்தம் தான் இந்த ஆறடி காவலனுக்கு.
“சாரி ஃபார் திஸ் ட்ரபுல் சார்,இங்க நீங்க நினைக்குற மாதிரி எந்த சண்டையும் நடக்கல” என கல்லூரியின் முதல்வர் சொல்ல, நொடிக் கூட தாமாதிக்காமல் அங்கிருந்து அகன்றவனின் விழிகள், அவனை பதற்றத்தோடு உறுத்து விழித்துக்கொண்டிருந்த நதியின் விழியை வருடிச் சென்றது.
ஒருவழியாய் பிரச்சனை முடிந்துவிட, தன் நண்பர்கள் தன்னால் பாதிக்க பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் கல்லூரியின் முதல்வர் அறைக்கு சென்றாள் அகரநதி.
“எக்ஸ்க்யூஸ்மீ சார்” தயங்கியபடி கேட்டாள் அகரநதி.
“வாம்மா நீ தானே அந்த ஷார்ட் பிலிமை டேரக்ட் பண்ணின பொண்ணு”
“ஆமா சார்”
“இப்போ எதுக்கு இங்க வந்திருக்க, சாரி கேட்டு டிகிரி வாங்கிகலாம்ன்னு இருக்கியா.?”
“சார் இதில் என் ப்ரெண்ட்ஸூக்கு எந்த சம்மந்தமும் இல்லை சார், அதனால இன்னொரு சான்ஸ் கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்”
“என்னது இன்னொரு சான்ஸா.? உங்க நாலு பேரையும் சஸ்பெண்ட பண்ணுறதுக்காக பேச்சு வார்த்தை நடக்க போகுது, அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடாவடியாய் சட்டை பட்டனைகளை கூட சரியாக போடாது, தலையில் சிவப்பு நிற கைகுட்டையை கட்டியிருந்தவன் ரௌத்திரமாய் உள்ளே நுழைந்தான் அகிலன்.
“ஏய் ******** என்னடி நினைச்சிட்டு இருக்க.? திமிரா உனக்கு.? என்னையவே எனக்கு எதிரா நடிக்க வச்சிருக்க.? ******* ” அவன் பேசிய வார்த்தைகளில் முக்கால்வாசி காதில் கேட்க கூடாத வார்த்தைகள் தான்.
“இப்படி கெட்ட வார்த்தை பேசுறதெல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்கோ அகிலன், என்கிட்ட வேண்டாம்” என சிங்கமாய் கர்ஜித்தாள் அதி.
“என்னடி பண்ணிருவ, உன்னால என்னடி பண்ணமுடியும்.? அப்படி தான் பேசுவேன், நீ எடுத்த ஷார்ட் பிலிமே அப்ரூவ் ஆகலை, டிஸ்குவாலிஃபை ஆகிருச்சு, என்னடி ரொம்ப எகிறிட்டு நிக்கிற.?” அவன் பேசியபடி அவளை நெருங்கினான் அந்த குரூரன்.
அங்கே சிலையாகவே மாறி போயிருந்தார் கல்லூரியின் முதல்வர், அவரால் இப்போது எதுவும் பேச முடியாது எதுவும் பேசவும் மாட்டார். அவர் தான் அமைச்சர் செந்தமிழனின் நெருங்கி தோழர் ஆயிற்றே.
“அமைச்சர் பையன் எதுவும் பண்ணமாட்டான்னு தான நினைச்சிட்டு இருக்க.?இந்த அறையில எது நடந்தாலும் அது கடுகளவு கூட வெளிய போகது அதி, என் தன்மானத்தை சீண்டி பார்த்த உன்னை, நான் ஏன் சீண்டி பார்க்க கூடாது.?” என அதிதீவிரமாய் அவளை நெருங்கியிருந்த அகிலனின் வக்கிர பார்வையை பொறுத்துக்கொள்ள முடியாத அகரநதி,அவனை ஆத்திரம் பொங்கும் விழிகளோடு முறைத்தாள்.
“தள்ளிப்போ அகிலன்” சுவரோடு ஒட்டியபடி இருந்தவள் சொல்ல, அவளின் முகத்தை நோக்கி மேலும் குணிந்தவனை, என்ன செய்து கட்டுபடுத்துவது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள் அகரநதி.
“அதென்னடி என்கிட்ட மட்டும் தான் பிரச்சனை பண்ணுவியா.? நான் செய்யுற தப்பு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுமா.?” என்ற அவள் முகம் வருடி அவன் சொல்ல, அவனின் தொடுதல் அவளின் மேல் கம்பளி பூச்சி ஊர்ந்து செல்லும் உணர்வை கொடுத்தது.
“மரியாதையா கைய எடு அகிலன்” பாம்பை போல் சீறியவள் அனல் கக்கும் பார்வை பார்த்தாள்.
“உன்னால என்ன செய்ய முடியும் அதி, பிரின்ஸி பர்சனலா பேசிட்டு இருக்கோம் தெரியுதுல, கதவை சாத்திட்டு வெளிய போறது, கோட்டான் மாதிரி உறுத்து பார்த்தா எப்படி பிரின்ஸி” என அகிலன் சொன்னவுடன் நொடி கூட தாமதிக்காது வெளியே சென்றிருந்தார் கல்லூரியின் முதல்வர்.
“நானும் நல்லவனா தான் இருக்கணும் நினைச்சேன் அதி, சாரி சாரி நடிச்சேன், ஆனா உங்களை மாதிரி பொண்ணுங்க எங்களை எதிர்த்து பேசுறதே, என்னோட ஈகோவை டச் பண்ணிருது, போயும் போயும் பொண்ணு உனக்கே இவ்வளோ தைரியமும் துணிச்சலும் இருக்கும் போது, அமைச்சர் பையன் எனக்கு இருக்காதாடி.? உன்னோட தைரியத்தையும் துணிச்சலையும் இங்கேயே அடக்கி காட்டவா..?” என அவன் கேட்ட படி அவள் அணிந்திருந்த ஆகாய நீல நிற துப்பட்டாவை அவன் பற்றி அவன் புறம் இழுக்க, அவன் மேல் மோதி நின்ற அகரநதியை பார்த்து கிறக்கம் தாங்கிய விழிகளுடன் பெண்ணவளின் அழகை ரசிக்க தொடங்கியவன் அருகே அவஸ்தையுடன் சிக்கி கொண்டிருந்தவளின் கரம் பற்றியவனிடமிருந்து வெடுக்கென கைகளை இழுத்தவள் அந்த அறையில் தன்னை தற்காத்துகொள்ள எதாவது இருக்கிறாதா என்று தேடினாள்.
புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஓடிச் சென்று ஒவ்வொரு புத்தகமாய் தூக்கி அவன் மீது தூக்கி எறிய,
“அதி இதெல்லாம் சரி வராது, கடைசியில் நீ தான் டையர்ட் ஆகப்போற” மீண்டும் அவளை நெருங்க பதைபதைத்து பெண்ணின் மனது.
“அதி இவனை உன்னால சமாளிக்க முடியும்டி நம்பு, உன்னை நீ நம்பு அதி” தனக்கு தானே சொல்லியபடி தன் துப்பாட்டாவை அவள் கழற்ற,
“கமான் அதி, திஸ் இஸ் வாட் ஐ வாண்ட், முதல்ல துப்பட்டா அடுத்து..?” அவன் சிந்தை எங்கெங்கோ செல்லவதற்குள் துப்பாட்டவின் உதவியால் அவன் கழுத்தை நெறித்தருந்த வீர மங்கையோ, அவன் பின்னால் நின்று, மேலும் நெறிக்க ஆரம்பித்தாள்.
“அதி நோ நோ” வலியால் துடித்து அலறினான்.
“என்னடா நினைச்சுட்டு இருக்கா.? பொண்ணுங்கனா வீக்கர் செக்ஸ்னு நினைச்சுட்டு இருக்கியா.? ஒரு பொண்ணுக்கு ஒன்னு கொடுத்தா அது டபுளா கிடைக்கும், நீ என்னை ரேப் பண்ணிட்டா மூளையில உட்கார்ந்து அழுவா, சூசைட் பண்ணிப்பான்னு நினைக்குற உன் புத்தியை உடனே மாத்திக்கோ, உன்னை எதிர்த்து நிற்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது அகிலன், ஆமா அந்த ஷார்ட் பிலிம் நான் உன்னோட தோலுரிச்சு காட்ட தான் எடுத்தேன், எக்ஸாம்ல மால் பிரக்டிஸிங் செஞ்ச பொறுத்துகிட்டேன், என்னையும் கார்த்தியும் பத்தி தப்பா பேசின பொறுத்துக்கிட்டேன், ஆனா நீ இப்போ செஞ்சிருக்க தப்பு மன்னிக்க முடியாத தப்பு, நீ யாருக்கோ என்னமோ வித்துக்கோ காலேஜ்க்கு வெளிய பண்ண வேண்டியது தானே, ஏன்டா உன் சுயநலத்துகாக பெண்களோட கற்பை எடுக்கிற.? யாருடா உனக்கு அந்த உரிமையைஃ கொடுத்தது” கோபமாய் பேசியவள் பிடியை மேலும் உறுதியாக்கினாள்.
“நானா பொண்ணுங்களை தேடி போகலை, தேடி வர்ற பொண்ணுங்க தான் என்னோட டார்கெட், நானா தேடி வந்த பொண்ணு நீ மட்டும் தான் அதி, நான் உன்னை காதலிக்குறேன் அதி” அவன் சொன்ன சொற்கள் அதியை உறைய செய்தது. பற்றியிருந்த துப்பட்டாவை மேலும் இறுக்கினாள் அகரநதி.
“ஆஆஆ” என அகிலன் அலறியிருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் நதி .. எல்லாமே கரெக்ட்டா தான் பண்ற .. ஆனா உன்னை அப்படி பண்ண விட மாட்டாங்களே .. பெரிய விஷயத்துல மாட்டிகிட்ட .. கார்த்தி ஜெயில்ல இருக்கான் .. மலர் நிஹா எங்க ??
அதி தான் அவரசக்குடுக்கைத்தனம் செஞ்சு பிரச்சினையை இழுத்து விட்டானா. இப்போ பிரச்சனை பூதாகரமாகி நிக்கிறப்போ தீரன் கிட்ட சொல்ற வாய்ப்பு தானா தேடி வந்தும் கூட அதை உபயோகிக்காம மறுபடி தப்பு செஞ்சிட்டாங்க அவ நண்பர்கள்.
தீரன் நதி கண்கள்ல தெரிஞ்ச அலைப்புறுதல கவனித்தாலும் கடமையே கண்ணாக இருந்துவிட்டான்.
பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு தவறானவர்களுக்கு துணை போகின்றார் கல்லூரி முதல்வர்.
நாம் ஒரு தவறை சுட்டிக்காட்டும் போது அதனை நம்மை சுற்றி உள்ளோரும் ஏற்றுக்கொண்டு மாறிவிடுவர் என்று நினைப்பது அபத்தம்.