Loading

பிறை -23

 

ஏனோ இப்போது தான் மனம் நிம்மதியாக இருந்தது. மனதில் ஒன்றை வைத்து கொண்டு வேறொன்று பேசும் ரகம் இல்லை மீனாட்சி. தற்போது மகனுக்காக பிறையின் தாய் தந்தையிடம் அனைத்தையும் கூறி விட்டு உற்சாகமாக அறைக்குள் வந்தார் மீனாட்சி.

 

” என்ன என் மீனு முகம் மினுமினுக்குது.. என்ன விஷயம் ” திவாகர் மனைவியின் மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்க..

 

” அது.. நான் பிறையோட அம்மா அப்பா கிட்ட பேசிட்டேங்க” என்றதும் அவரை அதிர்ச்சியாக பார்த்தவர்..

 

” என்ன பண்ணியிருக்க மீனு.. அவங்க கிட்ட எதுக்கு இவ்வளவு அவசரமா பேசனும் ”

 

” மனசுல வச்சிட்டு இருக்க முடியல.. அப்பறம் அவங்களை பார்க்குற நேரம் எல்லாம் அதுவே கண்ணு முன்னாடி வரும்.. அதுவே எனக்கு ஒரு மாதிரி இருக்குங்க.. அதான் வெளிப்பைடையா பேசிட்டேன். அவங்களை கட்டாய படுத்தல.. ஆனால் யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் ”

 

” அவங்க இப்போ எந்த மாதிரி ஒரு  நிலைமையில இருக்காங்க.. நம்ம இப்போ அவங்களுக்கு ஆதரவா தான் இருக்கனும்.. அதை விட்டுட்டு நம்ம மனசுல நினைச்சதை அவங்க கிட்ட திணிக்க கூடாது மீனு..” சற்றே மனைவியை கண்டித்தார்.

 

” நான் அவங்களை கட்டாய படுத்தல.. யோசிச்சு தானே சொல்ல சொல்லியிருக்கேன் ”

 

”  சரி அப்போ அவங்க சம்மதம் சொல்லி.. உன் மகன் சம்மதம் சொல்லைனா என்ன பண்ணுவ ”

 

” ஏங்க இப்படியெல்லாம் அபசகுணமா பேசுறீங்க ” மீனாட்சி பதற..

 

” எல்லாத்தையும் யோசிக்கனும் மீனு.. நீ இப்படி சட்னு முடிவு பண்ணி அவங்க கிட்ட பேசியிருக்க கூடாது ” திவாகர் மனைவியை கடிந்து கொள்ள முடியாமல், அவரது அதிருப்தியை காட்ட.. கலங்கிப் போனவர்..

 

” தப்பு பண்ணிட்டேங்க.. மன்னிச்சிடுங்க.. உங்க கிட்ட கேட்டுட்டு போய் பேசிருக்கனும் ”

 

” மகனுக்கு கல்யாணம் ஆகனும்னு ஆர்வத்துல போய் பேசிட்ட மீனு.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா.. ” என மனைவியை அணைத்தவர்… ” சீக்கிரமே நல்லது நடக்கும் மீனு.. நீ மனசை போட்டு குழப்பிக்காத.. அவங்களா இந்த விஷயத்தை பத்தி பேசுற வரைக்கும் நீ பேச வேண்டாம்.. அவங்களே அவங்க முடிவை சொல்லட்டும்.. ”

 

” ம்ம் சரிங்க ” என மனம் தெளிந்தவராக அடுத்த வேலையை பார்க்க சென்றாலும்.. பிறையை பார்த்து விட்டு வரலாம் என கையில் மாதுளை சாறோடு அறைக்கு சென்று விட்டார் மீனாட்சி.

 

ஆனால் அவருக்கு முன்பே சிவகாமி மகளுக்கு அருகில் அமர்ந்து, அவளது தலையை மடியில் வைத்து சுகமாக வருடிக் கொடுக்க.. விட்டத்தை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள் பிறை.

 

” பிறை மா ” என அழைத்துக் கொண்டே மீனாட்சி உள்ளே வந்தவர்.. ” இந்தா இந்த ஜூசை குடிச்சுட்டு அம்மா மடியில படுத்துக்கோ ” என்றதும்.. சின்ன புன்னகையோடு அவரது கையில் இருந்த ஜூசை வாங்கி குடித்தவள்.. ” ஏன் மா உங்களுக்கு சிரமம்.. நான் பார்த்துக்க மாட்டேனா.. ” சிவகாமி அமைதியாக கேட்டார்.

 

” ஏன் நான் பார்த்துக்க கூடாதா ” என செல்லமாக கண்டித்தவர்.. ” நீங்க பேசிட்டு இருங்க.. நான் போய் வேலையை பார்க்குறேன்” என மீனாட்சி கிளம்ப போக..

 

” இருங்க இருங்க நானும் வரேன்.. நீங்களே எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கீங்க.. என் பொண்ணை நினைச்சு நானும் அப்படியே இருந்துட்டேன்.. ” என சிவகாமி எழ.. மீனாட்சி மறுத்தும் கேட்காமல் அவரோடு சென்றிருந்தார் சிவகாமி.

 

அவர்கள் இருவரும் சென்ற பின்னர்.. அறையை சுற்றி பார்த்தவளுக்கு.. காலையில் ஆதியோடு சந்தித்த நினைவுகள் மனதிற்குள் ஓடியது..

 

இறுதியாக அவன் கூறிய… “இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல.. உண்மையை சொல்லிட்டு செத்து போ ” என்றவனது வார்த்தை அவளது மனதை உடைத்து இருக்க.. அதிர்ந்து போனவளின் கண்களோ ஏகத்திற்கும் கலங்கிப் போனது.

 

அவளது அழுகையை பார்த்தவன்.. அந்த இடத்தில் இருந்து எழுந்து சற்றே தள்ளி நின்றவன்.. ” நீ பண்ணது தானே சொன்னேன்.. அதுக்கு ஏன் அழுகை வருது. அன்னைக்கு அந்த ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு செத்தப்போ மட்டும் .. உனக்கு அதுக்கும் சம்மதம் இல்லைன்னு ஸ்டேஷன் வந்து பேச தெரிஞ்சது.. உன் பிரெண்ட் கீதாவுக்கு ஒரு பிரச்சனை வந்த போ என் ஆபிஸ் வந்து பேச தெரிஞ்சது.. என்கிட்ட மட்டும் தான் வீராப்பா.. அப்போ உனக்கு ஒரு பிரச்சனை வந்த அப்போ என்ன பண்ணிருக்கனும்.. முடியுமோ முடியாதோ.. முதல்ல போராடி பார்க்கனும்.. ஆனால் நீ என்ன பண்ண.. தற்கொலை பண்ண பார்த்துருக்க.. யாருன்னு தெரியாத ஒருத்தனுக்காக உன் உயிரை விட பார்த்திருக்க.. சீப்பெஸ்ட் பிகேவியர்.. ” என கட்டுக் கடங்காத கோபத்தில் கத்தி விட்டான்.

 

அவனையே விழி அகலாது பார்த்தவள்.. ” போராடாமா நான் இருந்தேன்னு உங்களுக்கு தெரியுமா சார்.. நீங்க என்ன வந்து தூக்கும் போது.. உங்க கையில தான் நான் நிம்மதியா மயங்கிப் போனேன். ஏன்னா இதுக்கு அப்பறம் எப்படியும் நீங்க என்ன காப்பாத்திடுவீங்கன்னு நம்பினேன்.. நீங்க என்ன தூக்கும்  போது நான் என்ன நிலைமையில இருந்தேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்.. அதெல்லாம் போராடி கிடைச்சது தான்.. ” அழுகையை அடக்கிக் கொண்டு அவள் பேச ..அவனது முகம் இறுகிப் போனது.

 

” அந்த நிலைமைக்கு போனதுக்கு அப்பறம் தான் நான் அந்த முடிவை எடுத்தேன்.. ஒரு பொண்ணு போராடலாம்.. ஆனால் ஒரு எல்லைக்கு மேல .. ” என கூர் பார்வையை அவன் மீது செலுத்த.. அவளது பார்வையை சந்திக்க முடியாமல் எதிர் திசையில் திரும்பிக் கொண்டான் ஆதி.

 

” அந்த இடத்துல நீங்க மட்டும் இருந்தீங்களா.. இல்ல வேற யார் யார் இருந்தாங்கன்னு கூட எனக்கு தெரியாது.. ஆனால்..”

 

” நான் மட்டும் தான் வந்தேன் ” அழுத்தமாக வந்தது அவனது பதில்.

 

அதில் நிம்மதி மூச்சை விட்டவள்..  ” அப்போ உங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிஞ்சேன் சார் ” சற்றும் கலங்காமல் அவள் கேட்ட கேள்வியில்.. இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவளது கழுத்தை அழுத்தி இருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

 

” நல்லா கேட்டுக்கோ.. இதுக்குமேல ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது. வந்துச்சு நானே உன்ன கொன்னுட்டு போயிடுவேன்.. ” என எச்சரிக்க.. அவளுக்கு தான் மூச்சு விட சிரமமாகி.. கண்கள் மேல் நோக்கி சொருக ஆரம்பித்தது.

 

” சா… சார்… ” என பேச முடியாமல் அவள் திணற.. எச்சரிக்கையோடு கைகளை விலக்கிக் கொண்டான் ஆதி.

 

பெரும் இருமலுடன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவள்.. ” உண்.. உண்மையை தான்.. சொன்னேன் ” மெல்லிய குரல் வெளிப்பட..

 

” சரி சொல்லு நான் காபி ஷாப்புக்கு வர சொன்னேன் தான்.. எதுக்காக நான் வர சொன்னதும் நீ வந்த ” இம்முறை கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாக அவள் மீது பார்வையை செலுத்த.. என்ன பதில் கூறுவது என தெரியாமல் விழித்தாள் பிறை.

 

” நீங்க ரெண்டு விஷயத்துல எனக்கு ஹெல்ப் பண்ணிருக்கீங்க.. அதுனால ”

 

” ஓ… பைன்.. சோ எவன் ஹெல்ப் பண்ணி காபி ஷாப் கூப்பிட்டாலும் போயிடுவ ரைட் ” என்றவனுக்கு முறைப்பையே பதிலாக கொடுத்தாள் பிறை.

 

ஆதிக்கு எப்படி மற்றொரு முகமோ.. அதே போல பிறைக்கு இன்னொரு முகம் இருப்பது அவனுக்கு தெரியாது. அவள் இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவள் தான். ஆனால் அவளுக்கும் கோபம் வரும்.. அவளும் சுட்டி செய்வாள்.. இத்தகைய குணம் எல்லாம் அவளது அன்னை சிவகாமி.. மற்றும் அவளது தோழிகளை தவிர யாருக்கும் தெரியாது.

 

இதோ எதிரே நின்ற கமிஷனரை அவள் முறைத்து பார்த்ததில்.. அவன் யோசனையுடன்.. ” முறைக்கிறியா என்ன ” என சந்தேகத்தோடு கேட்டு வைத்தான்.

 

” எவன் கூப்பிட்டாலும் போன்னு எங்க அப்பா ஒன்னும் என்ன வளர்க்கல சார்.. சென்னையோட கமிஷனர் .. அந்த ஒரு காரணம் தான் .. வேற ஒன்னும் இல்ல ” என அவனது காக்கி சட்டையை சுட்டிக் காட்டி பேச.. அவனால் அதற்கு பதில் கூற முடியவில்லை.

 

” உங்களை நம்பி தான் வந்தேன்.. கடைசியா அந்த இடத்தில உங்களை நம்பி தான் கண்ணை மூடினேன்.. ஏன்னா நீங்க என்னைய காப்பாத்துவீங்கன்னு நம்பிக்கை ” அவளது ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று வெளியேற.. ஆடவன் அசையாது நின்றான்.

 

” வெளிய நம்மளை பத்தி நியூஸ் ரொம்ப பரவிட்டு இருக்கு.. ”

 

அதற்கும் சலனமில்லாமல்.. ” நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்குன்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும் இல்லையா சார்.. அப்புறம் எதுக்கு அதையெல்லாம் பார்த்துட்டு.. ” என தெளிவாக பேசினாள் பிறைநிலா.

 

இம்முறை அவளை சுவாரசியமாக பார்த்தவன்.. ” ஓ.. அப்படி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன இருக்கு மூன்.. நீ கொஞ்சம் சொல்லேன்.. ஏன்னா எனக்கு தெரியல ” சற்றே நக்கல் குரலில் அவன் கேட்டதும்.. இதுவரையிலும் தைரியமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு.. திடீரென வார்த்தைகள் மாயமாகி இருந்தது.

 

” மூன்….. ” மீண்டும் அவன் அழைக்க..

 

” பிறை.. என் பெயர் பிறைநிலா ” அதையும் அவன் முகம் பார்த்துக் கூறவில்லை.

 

” நானும் அதான் சொன்னேன்.. எப்படி கூப்பிட்டாலும் உன் பெயர் மூன் தானே.. ”

 

” நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா ”

 

” சொல்லு ”

 

” எப்போ எங்க வீட்டுக்கு விடுவீங்க ”

 

” என்ன அவசரம்.. எல்லாம் முடிஞ்சதும் முறைப்படி போகலாம் ” என்றதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் பிறை.

 

அவளது பார்வையை சந்திக்காமல்.. கதவை திறந்து வெளியேறி இருந்தான் ஆதிதேவ்.

 

‘ முறைப்படியா.. என்ன சொல்றாரு.. ‘ என குழம்பி போனாள் பிறை. ஆனால் அதை யோசிக்க விடாமல் அடுத்தடுத்து அவளது அறையில் ஆட்கள் வந்து விட..  தற்போது மீண்டும் அவனது நினைப்பு வந்து விட்டது.

 

” பேசுறத பாரு.. என்னமோ இவருக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி ” என மனதிற்குள் திட்டிக் கொண்டாலும்.. அந்த நிமிடத்தில் இறுதியாக அவனை பார்த்து அவளது மனம் நிம்மதியாக கண் மூடி இருக்க.. எதற்காக அவன் மேல் இத்தனை நம்பிக்கை என மனதிடம் கேட்டதற்கு ஒரே பதிலை தான் கொடுத்தது.

 

ஆனால் அந்த பதிலை தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால்  வீட்டில் அவளுக்கு தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவோடு அலைந்து கொண்டிருந்தார்கள். அந்த கனவுக்கு சொந்தகாரியோ.. அவளது மன்னவனோடு கனவில் உலா வரத் தொடங்கி இருந்தாள்.

 

அவளிடம் பேசி விட்டு சிடு சிடுவென அறைக்கு வந்தவனின் இதழ்கள்.. உள்ளே வந்ததும் மெல்ல மலர்ந்தது. அவனது முறுக்கிய மீசைக்குள் புதைந்திருக்கும் தடித்த இதழ்கள் மெதுவாக விரிய.. அந்த மாற்றத்திற்கு சொந்தக்காரியோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

 

விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறது..

 

சனா💗

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
32
+1
0
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்