Loading

 

 

அன்று

கல்லூரி வளாகத்தில் அகரநதிக்காகக் காத்துக்கொண்டிருந்தனர் மலரும், நிஹாவும், சில நொடிகளில் ஆரம்பிக்க இருக்கும் குறும்படத் திருவிழாவில் அவர்களின் கதை இடம்பெற்றாக வேண்டும்மென்றால் அதியின் பென்டிரைவ் தேவைப்படுகிறது. அனைத்து மாணவர்களும் அவர்களது பென்டிரைவை கொடுத்திருக்க, அதியும் கார்த்தியும் வர தாமதம் ஏற்பட்டதால் பதற்றத்தில் அமர்ந்தினர் மலரும், நிஹாவும்.

“என்னடி இதுங்க ரெண்டையும் இன்னும் காணோம்” புலம்பினாள் நிஹா,

“கோவிலுக்குப் போகணும்ன்னு சொன்னாடி அதி, அதான் லேட்டுன்னு நினைக்கிறேன்” என்றாள் மலர்.

“அய்யோ பயமா இருக்குடி” ரொம்பவே பயந்து போனாள் நிஹா.

“ஹே வந்திருவாங்காடி பயப்படாதேடி” என மலர் சொல்ல,

“உங்களுக்கென்ன மேடம், நீங்க அப்ராட்ல வொர்க் பண்ண போறீங்க, அதுவும் டிகிரி கூட இல்லாம, எங்களுக்கு அப்படியா? இந்த டிகிரி ரொம்ப முக்கியம்டி” எனச் சலித்தபடி சொன்னாள் நிஹா.

“ஏய் நிஹா அதிக்கும் அந்தப் பயம் இருக்காதா என்ன? அவ வந்திருவா பாருடி” என மலர் சொல்லிக்கொண்டிருந்த போதே அகரநதியும், கார்த்தியும் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“ஏய் அதி என்னடி இவ்ளோ நேரம் பயந்தே போயிட்டோம்” நிஹா பயத்தில் பிதற்றினாள்.

“அதான் வந்துட்டோம்ல வாங்க போகலாம்” என அதி அனைவரையும் அழைத்துக்கொண்டு படம் திரையிடப்படும் ஆடிட்டோரியம் சென்றடைந்தனர், கடைசி நேரத்தில் இவர்களின் பென்டிரைவ் கொடுக்கபட, கலந்து கொண்டவர்களின் ஒவ்வொரு குறும்படமும் வரிசையாய்ய ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க, இருக்கையில் அமர்ந்து ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இறுதியாய் அதி இயக்கிய குறும்படம் ஒளிபரப்பு செய்யபட்டது

படத்தின் தொடக்கத்திலே ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது, புகைப்பழக்கம் கேடு என்றால் அதிலும் கேடு போதை பழக்கம், போதையை விற்பனையாக்கும் ஒரு சாமானியனின் கதை தான் இது, எனச் சொல்லி முடித்த முதல் காட்சியிலையே அந்தப் படத்தின் கதாநாயகன் தன்னிடம் இருக்கும் தோழர்களிடம் போதை பொருள்களை எப்படிக் கைமாற்றுவது என்பதை விவரித்துக்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அகிலன் புரியாது விழித்து நின்றான்.

இதில் நாயகன் பேசிய வசனங்கள் அவன் பேசியது கிடையாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தயார் செய்திருந்தாள் அகரநதி, புதிதாய்ச் சந்தைபடுத்தக் கொண்டிருக்கும் போதை மருந்து எவ்வாறு கைமாற்ற படுகிறது என்றும், அதன்பின் செயல்படும் கும்பல், அரசியல் சாயம் பூசிக்கொண்டு போதை மருந்துகளைச் சந்தை படுத்துவதில் மும்மரமாய் இருப்பதையும் தெளிவாய் எடுத்து சொல்லியிருந்தவள். குறும்படத்தின் இறுதியில் அதற்குச் சாட்சியாய் அதற்குச் சம்பந்தபட்ட உண்மையான வீடியோவையும் இணைத்திருந்தாள் அதி. அதில் அவள் பேசியிருந்த வசனங்கள்,

“கல்லூரி என்பது கல்வி கற்கும் கூடமாக இல்லாமல் போதை விற்பனை செய்யும் சந்தையாக மாறியுள்ளது, இதில் ஆச்சரியம் என்னவென்றால், இப்படி ஒன்று நடந்தேறிக்கொண்டிருப்பது கல்லூரிக்கே தெரியாமல் இருப்பது தான் வியப்பை எற்படுத்துகிறது. மெட்ரோ நகரங்களில் கல்லூரி மாணவர்களிடையே, ஒரு ட்ரெண்டாகப் பரவி வரும் புதுவித போதை கலாச்சாரம் தான் எல்எஸ்டி எனும் போதைப் பொருள், மாணவர்களின் கைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த எல்எஸ்டி எனும் போதைப்பொருள், பார்ப்பதற்குத் தபால்தலை வடிவத்தில் உள்ளங்கை அளவில் தான் இருக்கும், அது இப்போது கல்லூரி மாணவர்களிடையே புழங்கி வருகிறது, அது நம் கல்லூரியிலே ஏக போகமாய் வியாபாரமும் நடந்து வருகிறது அதற்கான ஆதாரம் இதோ” எனக் காணொளியில் காட்சிகள் விரிந்தது.

அதைப் பார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, ப்ளே ஆகிக்கொண்டிருந்த காணொளி இடையில் நிறுத்தபட்டிருந்தது, கையில் பென்டிரைவ்வை பிடிங்கியிருந்தவன் தன் கையில் வைத்துக்கொண்டு கோபமாக நின்றிருந்தான் அகிலன், அதைப் பார்த்து அதியோ இகழச்சியாய் இதழ் வளைத்தாள்.

“என்ன வச்சு செஞ்சிட்டல்ல அதி” கோபமாய்க் கத்திக்கொண்டு அகரநதியை அடிக்கக் கை ஓங்கிய அகிலனின் கை அந்தரத்தில் பிடிக்கபட்டிருந்தது கார்த்தித் தான் அவன் கையைப் பிடித்திருந்தான்.

“என்னடா கை வச்சிருவியா.? உண்மைய தானே அவ சொல்லிருக்கா, கேவலம் காசுக்காகப் போதை மருந்துக்கு எல்லாரையும் அடிமையாக்கிட்டு இருந்திருக்க ஃப்ராடு” கோபமாய்க் கார்த்திக் திட்ட,

“டேய் கார்த்தி இது எனக்கும் அதிக்கும் இருக்கப் பிரச்சனைடா, நீ இடையில வராதே” மீண்டும் திமிறிக்கொண்டு அடிக்க வர, அந்த இடமே சண்டைகாடாக மாறியது, அங்கிருந்த பேரராசிரியர்கள் சண்டையை நிறுத்த முயன்றும் முடியாமல் போக. சண்டையின் நடுவே அகிலன் கையிலிருந்த பென்டிரவை லாவகமாக பறித்திருந்தாள் அகரநதி.

“எல்லாரும் சைலண்ட்டா அவங்க அவங்க இடத்துக்குப் போய் உட்காருங்க” கணத்த குரலில் பேசினார் பிரின்ஸிபால். அவர் பேச்சுக்கும் மதிப்புத் தராமல் கார்த்தியை அடித்திருந்தான் அகிலன், அகிலனின் புறம் ஆதரவு வலுக்கத் தொடங்கியது அவன் அமைச்சரின் மகன் என்பதால். அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் காவல்துறைக்கு அழைப்பு விடுத்திருந்தாள் அகரநதி, தன் தோழனை காப்பாற்ற அவளுக்கு அந்த வழிதான் தோன்றியது. சில நொடிகளில் களேபரம் அடங்கிப் போக, அகரநதியின் குறும்படம் நிராகரிக்கபட்டது,

“கல்லூரியின் நற்பெயரை பாதிக்கும் விதமாக இந்தக் குறும்படம் அமைந்திருப்பதால், இந்தக் குறும்படம் நிராகரிக்கபடுகிறது” எனக் கல்லூரியின் முதல்வரும் சிறப்பு விருந்தினருமாய் வந்திருந்த ஒரு நடிகரும் அவளின் குறும்படத்தை நிராகரித்துவிட, அகிலன் மர்ம்மாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

உடனே அந்த அரங்கத்தை விட்டு அதியும் அவளுடைய நண்பர்களும் வெளியே வந்திருந்தனர்.

“அதி என்னடி நினைச்சிட்டு இருக்க, நீ எங்க கிட்ட இந்தக் கதைய சொல்லவே இல்லை, அதோட அந்த வீடியோ உனக்கு எப்படிக் கிடைச்சுது” கோபமாய்க் கேட்டாள் நிஹா.

“போச்சு இப்போ யாருக்குமே டிகிரி கிடைக்கப் போறதில்லை, இப்போ நம்ம என்ன பண்ணப்போறோம்” மலரும் அதிர்ந்து பேசினாள்.

“அதி வாயை திறந்து தான் பேசேன்டி” என நிஹா பேசிக்கொண்டிருந்த போதே தமிழ் பேராசிரியர் சரளா எதிரே வர, விரைந்து ஓடிய அதி.

“மேம் இந்தப் பென்டிரைவ யார்க்கிட்டையும் கொடுத்திறாதீங்க சீக்ரெட்டா வச்சிக்கோங்க, நீங்களும் பார்க்காதீங்க” எனச் சொல்லி விரலி நினைவகத்தை நீட்டினாள் அகரநதி.

“என்னமா இது.?” வியப்பாய் பார்த்தார் சரளா, அவர் வகுப்புக்கு செல்ல நேரம் ஆனதால் அதை வாங்கித் தன் கைப் பையில் போட்டுக்கொண்டு விரைந்து சென்ற சரளாவிடம்,

“மேம் ப்ளீஸ் இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் இதைப் பத்திரமா வச்சுகோங்க நான் உங்க கிட்ட போன்ல தெளிவா சொல்லுறேன்” எனப் பதட்டத்தோடு மீண்டும் தன் நண்பர்களை நெருங்கினாள் அதி.

“ஏய் அதி என்ன பண்ணிட்டு இருக்க, ஷார்ட் பிலிம்ல லாஸ்டா அட் பண்ணின வீடியோ உனக்கு எப்படிக் கிடைச்சுது, எடிட்டிங் பண்ணும் போது கூட அந்த வீடியோ இல்லையே, அகிலனுக்கு யார் வாய்ஸ் கொடுத்தாங்க.? எதுக்கு எல்லாத்தையும் எங்க கிட்ட இருந்து மறைச்ச.? இப்போ நீ சொல்லி தான் ஆகணும் இதனால எல்லோரட ஃப்யூச்சரும் ஸ்பாயில் ஆகும்னு உனக்குத் தெரியாதா.?” கோபமாய்ச் சாடினான் கார்த்திக்.

“என்னடா கார்த்தி நீயும் இப்படிப் பேசுற.? இதனால எத்தனை ஸ்டூடண்ட்ஸோட லைப் ஸ்பாயில் ஆகிருக்கு உனக்குத் தெரியுமா.?” அதே வேகத்தில் அவளும் பதில் சொன்னாள்.

“அப்போ நம்ம லைஃப் பத்தி உனக்குக் கவலை இல்லையாடி, அகிலனோட அப்பாக்கு விசயம் தெரிஞ்சா என்னடி ஆகுறது, பாரு பிரின்ஸியே நம்ம கதையை ஏத்துக்கல, இப்போ நம்ம என்னடி பண்ணப் போறோம்.?” நிஹாவும் சேர்ந்து கேட்க,

“ஹே எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருக்கிங்களா.? நான் எதுக்காக இதை ஷார்ட் ஃபிலிமா எடுத்தேன்னு தெரியாமல் பேசாதீங்க” எனக் கோபமாய்க் கத்தினாள் அகரநதி.

“அப்படி என்னடி தலைப்போற காரியம்.?”

“அன்னைக்கி நடந்ததை நான் முழுசா ஷூட் பண்ணலைடி, அதையும் பார்த்திருந்தா இப்படிப் பேசமாட்டிங்க” எனச் சொன்னவள் அன்று நடந்ததை விவரிக்கத் தொடங்கினாள்.

“நான் லைப்ர்ரில புக் படிச்சிட்டு இருந்தேன், அப்போ நிறைய ஸ்டூண்ட்ஸ் நம்ம லைப்ரரி பின்னாடி இருக்க ரெஸ்டிரிக்ட்ட் லேப்கு போயிட்டு இருந்தாங்க, கேர்ள்ஸ்லாம் ஃபேஸை கவர் பண்ணிட்டு போனாங்க, நானும் ஃபேஸை கவர் பண்ணிட்டு போனேன் அப்போ தான் அதைப் பார்த்தேன், எல்லாரும் நம்ம ஜூனியர்ஸ் போதைக்கு அடிமையாகி இருக்காங்க, அது மட்டும்மில்லாமல்” என அவள் இடைநிறுத்த அதியின் விழிகளோ குளமாகியது,

“ஏய் என்னடி ஆச்சு சொல்லு.?” நிஹா பதறினாள்.அதியின் விழிகளைத் துடைத்துவிட்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

”எல்எஸ்டி என்பது முழுக்க முழுக்கப் போதைக்காகத்தான்

பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொண்டவர்கள், பிரமை (ஹாலுசினேஷன்) பிடித்தவர் போல் இருப்பார்கள். அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வென்பது சிலருக்கு மோசமான பயணம் போலவும் அமைந்து விடும். எல்எஸ்டியின் இன்னொரு பிரச்சனை

என்னவென்றால், இவ்வகைப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்

அதை உட்கொள்ளாதபோதும்கூடப் போதையில் இருப்பதுபோலவே

உணர்வார்கள். பவுடர், ஊசி மருந்து வடிவத்திலும் கிடைக்கிறது. இந்தப் போதைக்கு அடிமையானவர்கள்,அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.

மது அருந்தினால் மற்றவர்களுக்குத் தெரிந்து விடும். இந்த வகை

போதையை எடுத்துக்கொண்டால் யாருக்குமே தெரிய வராது.

யு.எஸ். போன்ற நாடுகளில் இவ்வகைப் போதை பயன்பாடு அதிகம். ஆனால் இந்தியாவில் இப்போ தான் தலை தூக்க தொடங்கியிருக்குதாம், இதைப் பத்தி நான் ஆர்டிக்குள் படிச்சு தான் தெரிஞ்சுக்கிட்டேன், இதில் தடவ பட்டிருக்கும் மருந்தை ஊசியாகவும் உடலில் நேரடியாக ஏற்றி கொள்ளலாமாம்”

“எல்லாம் சரிடி இதை எதுக்கு நீ இவ்வளவு சீரியஸா எடுத்திகிட்ட.?” கார்த்திக் கேட்டான்.

“பசங்க இந்தப் போதையில சிக்குறது நார்மல்டா, ஆனா பொண்ணுங்க.? இதோட விலை ஆயிரத்தி ஐநூறு, அதைக் கொடுக்க முடியாத பெண்களிடம் அவர்கள் பேசும் பேரமே வேறடா, பெண்களின் கற்ப்பை சூரையாட இந்தப் போதை பொருளை ஆயுதமாய்ப் பயன்படுத்துறாங்க, முதலில் இலவசமாகக் கொடுத்து அதை அவர்களுக்குப் பழக்கபடுத்தி விடுகிறார்கள், அதன் பின் பணம் கேட்க ஆரம்பிக்கிறார்கள், அதைத் தர முடியாத பெண்களோ போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள இயலாமல் அவர்கள் கேட்பதை கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள், இத்தனைக்கு முதல் காரணமாய் இருப்பவன் தான் அகிலன்” என அதி சொல்லி முடிக்க அனைவரின் விழிகளிலும் அதிர்ச்சி தோன்றி மறைந்தது

“இப்போ சொல்லுங்க நான் செஞ்சதுல என்ன தப்பு இருக்குக் குற்றம் நடக்குதுன்னு தோலுறிச்சு காட்டினது தப்பா.? சொல்லு கார்த்தி.?” என அகரநதி கேட்க, பதில் சொல்ல இயலாமல் துவண்டு போய் நின்றிருந்தனர் கார்த்தியும் மலரும் . நிஹாவோ கடுங்கோபத்தில் அகரநதியை முறைத்து பார்த்தாள்.

“உன் மேல எந்த தப்பும் இல்லை அதி. உன்னை நம்பினதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தணுமோ அங்க வந்து நிறுத்திட்ட. ரொம்ப சந்தோசம் அதி” என நிஹா கோபமாய் பேசிக்கொண்டிருந்த போதே, சைரன் சத்தத்துடன் காவல் துறையை சேர்ந்த வாகனம் கல்லூரிக்குள் நுழைய. அகரநதியை மூவரும் முறைத்து பார்த்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஐயையோ இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ ..

  2. போதைபொருள் பழக்கவழக்கம் அதனை ஊக்குவிப்பது தவறு தான். ஆனால் இந்த விசயத்தை அகர் அணுகிய விதம் தவறு.

    சாதுர்யமாக மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய இடத்தினில் தவறை வெளியில் காட்சிப்படுத்துவதால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்று எண்ணுவது முட்டாள்தனம்.

    சரியான சூழ்நிலையில் சரியான மனிதரிடம் இதனை கொண்டு சென்றிருக்க வேண்டும்.

    அதிகாரம் உள்ளவர்களே இது போன்ற பிரச்சினைகளில் நிதானமாக செயல்படுவார்கள். அகரோ சிறுபிள்ளைத்தனமாக அவசரப்பட்டுவிட்டால்.