Loading

இன்று

நதி..!” எனக் கோபமாய் கத்தியவனை பார்த்து முறைத்திருந்தாள் அகரநதி.

“அப்படி என்ன தயவு செய்து கூப்பிடாதீங்க.? அது என்னோட தீரா இப்படி தான் என்னை அழைக்கணும்னு நான் வச்ச பேரு, இந்த பேரை சொல்லி கூப்பிட உங்களுக்கு கொஞ்சமும் தகுதியே இல்லை, என்னோட கார்த்தியை எப்படி வெளிய கொண்டு வரணும்னு எனக்கு தெரியும், அதுக்கு நான் என்ன செய்யணுமோ செஞ்சுக்குறேன், உங்களோட உதவியோ.? அனுதாபமோ எனக்கு தேவையே இல்லை.” என உறுதியுடன் பேசி அங்கிருந்து நகர முற்பட,

“நதி நம்ம எங்கே இருக்கோம்ன்னு பார்த்து பேசு.?” அவளுக்கு எதையோ உணர்த்த நினைத்து தோற்றே போனான் தீரேந்திரன். அவர்கள் சிறைச்சாலையின் வாயிலில் நின்றிருந்தார்கள்.

“அதெல்லாம் சொல்ல நீங்க யாரு சார்” என அவள் மீண்டும் கேட்க கடுங்கோபம் கொண்ட தீரேந்திரன்.

“இதுக்கு என்னை மன்னிக்கவே மாட்டன்னு எனக்கு தெரியும் நதி, இருந்தாலும் உன்னோட நல்லதுக்காக தான் இதை செய்யுறேன்னு நீ போக போக புரிஞ்சுப்ப நதி, ஐ யெம் வெரி சாரி நதி” என்றவன் பளாரென அறைந்திருந்தான், இதை எதிர்பாராமல் நின்றிருந்தவளோ விழிகள் கலங்கி போய் நிற்க,

“மரியாதையா வண்டியில ஏறு, பொறுமையா சொன்னால் கேக்குறதில்லை, அடக்கு முறையை கையாள வைக்குறது, இதை பார்த்துட்டு ஊர் உலகம் என்னை ஆன்ட்டி ஹீரோன்னு சொல்லணும், உன்னை அப்பாவி ஹீரோயின்னு சொல்லணும் அதான உன்னோட ஆசை.?” என அவன் கோபமாய் பேச, சாந்தமாய் வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டாள் அகரநதி.

நதியின் வீட்டை நோக்கி பயணபட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும், அவளின் மௌனம், அவன் மனதை கொல்லாமல் கொன்றுக்கொண்டிருந்தது, எதை சொன்னாலும் தவறாக புரிந்துக் கொள்கிறாளே, இவளை வைத்துக்கொண்டு இந்த வழக்கில் இருக்கும் மர்ம முடிச்சுகளை எவ்வாறு அவிழ்ப்பேன், நான் அவளை காதலித்ததால் தான் அவள் மீது இவ்வளவு கரிசனம் ஏற்படுகிறதோ? மற்ற வழக்கில் எல்லாம் குற்றவாளியை எளிதாக கண்டுபிடிக்கும் அவனுக்கு. இந்த வழக்கின் சின்ன நகர்வை மேற்கொள்வதே மிகவும் சிரமமாக இருந்தது.

மேலிடத்திற்கு தெரியாமல் விசாரித்தாக வேண்டும், நதியை ஆபத்து நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இத்தனைக்கும் நடுவில் கார்த்தி வேறு வாயை திறந்து எதையும் சொல்லாமல் இருப்பதும், நதியை பார்த்தாவது வாயை திறப்பான் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வழி கிடைக்கும் என்ற எதிர்பார்பையும் பொய்யாக்கி இருந்தான் கார்த்திக். இயலாமை ஒருபுறம் என்றால், தன்னை புரிந்துக்கொள்ளாத நதியின் மீது கோபமும் ஏற்பட,

“நதி நீ எந்த பதிலும் பேசாதே, நான் சொல்றதை மட்டும் காதுல வாங்கிக்க ரெண்டும் பேரும் பேசினாலே சண்டை தான் வருது” அவன் உரைக்க,

“ம்மம்” கொட்டினாள் அவனின் நதி.

“நான் உண்மையை சொல்லிடுறேன் நதி, அப்பறம் உன் விருப்பம்” என தீராக் கூற மீண்டும்,

“ம்ம்ம” என்றாள் நக்கலாக சாலையை பார்த்தபடி,

“இப்போ உன்னை அடிச்சது கூட அங்கே மினிஸ்டர் ஆளுங்க இருந்தாங்க, அதுக்காக தான் அடிச்சேன், உனக்கு நினைவு வந்திருச்சுன்னு தெரிஞ்சாலே பிரச்சனை தான் நதி. உன்னை என் கண்காணிப்பிலே வைச்சிருக்க வேண்டியதா இருக்கு”

“ஓஹோ அப்படியா.?” நக்கலாய் கேட்டாள் நதி. நீ நம்பலைனாலும் அதான் நெசம் என்பது போல் பார்த்து வைத்தான் தீரேந்திரன்.

“என்ன நிறுத்திட்டீங்க சொல்லுங்க, நீங்க கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றீங்க கேட்க நல்லா தான் இருக்கு, வீடு வேற ரொம்ப தூரமா இருக்கா, உங்க வண்டில எஃப்எம் வேற இல்லைன்னு வருத்தபட்டேன், அதான் நீங்க இருக்கிங்களே மேல சொல்லுங்க” என எகத்தாளமாய் சொன்னாள் அகரநதி.

“நான் சொல்றதெல்லாம் உண்மை நதி, ஏன் என்னை நம்ப மாட்டேன்ற, என்ன பத்தி அவ்ளோ காதல் கவிதைகள் எழுதி வச்சிருக்க, ஒவ்வொரு சந்திப்பையும் அழகா வர்ண்ணை பண்ணிருக்க, தூரிகையாய் வண்ணம் தீட்டி வச்சிருக்க.? உனக்கு என்னை தான் ஆச்சு நதி. என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“அது ஒன்னுமில்லை மிஸ்டர், நீங்க அமைச்சர் செந்தமிழனோட ஆளுன்னு தெரிஞ்சு போச்சு, என்னோட டைரியை எடுத்து படிச்சுட்டதால, என்னை பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டிங்கன்னு அர்த்தம் இல்லை.என்னை உங்களால படிக்கவே முடியாது மிஸ்டர் தீரேந்திரன்” சற்று கோபமாக பேசினாலும் அவள் விழிகள் பலமுறை அவனை தொட்டு மீண்டது.

ஒரு தலைக் காதலில் இப்படியொரு தருணம் யாருக்கும் அமையாது, பிடித்தவருடன் பேசிக்கொண்டே பயணிப்பதும் உரிமையாய் சண்டையிடுவதும் ஒரு தலைக் காதலில் சாத்தியம் இல்லாத ஒன்று, ஆனால் இன்று அவளுடைய காதல் அவளின் கண் முன்னே, அவளிடம் பேசிக்கொண்டிருப்பதை நம்ப முடியவில்லை என்றாலும், காலத்தின் சூட்சமம் தான் என்னவோ, உருகி உருகி காதல் செய்தவனிடமே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு சண்டையிடுவாள் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாள். அவன் விழிதனை பார்க்கும் போதெல்லாம் அவன் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி தவித்த நாட்கள் தான் நினைவில் வந்து பேதை பெண்ணவளின் விழிகளை குளமாக்க, எதையும் காட்டிக்கொள்ளாது மௌனம் சாதித்தாள் தீராவின் நதி.

“உன்னை என்னால படிக்க முடியும் நதி, நீ சொல்லாமலே உன்னை பத்தி எனக்கு புரிஞ்சிக்க முடியும் நதி” என தனக்குள் நினைத்தவனின் மனதில் பெரிதாய் வலியெடுத்தது, இதற்கு காரணம் காதலா.? மோதலா.? என்பதை தீரா மட்டுமே அறிந்திருந்தான் அதற்குள் வீடு வந்து விட வீட்டின் வாசலில் இறக்கி விட, அவளோ இறங்கி வேகமாய் வீட்டிற்குள் ஓடினாள் அகரநதி.

“அதி வந்துட்டியாமா.? யாருமா உன்னை கடத்திட்டு போனது” கேள்விகளை தொடுத்தார் கோபாலன்.

“அப்பா இவர் தான்” என தீரேந்திரனே பார்த்து கைகாட்டினாள் நதி.

“அவர் தான்மா உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்ததே” என வசந்தி எடுத்துரைக்க காதில் வாங்காமல் தன்னறைக்குள் சென்றாள் அகரநதி.

“வாங்க தீரேந்திரன் சின்ன பொண்ணு எதோ தெரியாமல் பேசிட்டா” என கோபாலன் சொல்ல வர,

“ஆமா கடத்திட்டு போனவனையே வீட்டுக்குள்ள அழைச்சு விருந்து வையுங்க” தன் அறைக்குள் இருந்து தலையை வெளியே நீட்டி சொன்னவள் மீண்டும் உள்ளே சென்றாள்.

“அவ எதோ புரியாமல் பேசுறா விடுங்க” வசந்தி சொல்ல,

“இன்னைக்கி நான் புரிய வைச்சிருவேன்” என சொல்லியபடி அவளறைக்குள் நுழைந்திருந்தான் தீரேந்திரன்.

“ஏய் என்ன போலீஸ்னா எங்கே வேணும்னாலும் நுழைஞ்சிருவிங்களா.?” எகிறினாள் அகரநதி.

“நதி எனக்கும் உன் மேல காதல் இருக்கு அதை எனக்கு புரிய வைக்க வேற வழியில்லை”என சொன்னவன் அவளை மெல்ல நெருங்கினான், அவன் அருகாமை அவளை என்னவோ செய்தது,

அவன் நெருங்க நெருங்க சில நினைவுகள் அவளின் மூளையை உரசி சென்றது. பல குரல்கள் அவள் செவிகளுக்குள் கேட்க, காதை இறுக மூடியவளின் செவிகளுக்குள்.

“நான் உன்னை காதலிக்கிறேன் அதி” என்ற அகிலனின் குரல் தெளிவாய் கேட்க, அவன் குரல் கேட்டு அஞ்சினாள்.

“ஆஆஆஆ” எனக் கத்தியபடி ஓடி வந்தவள் தீரந்திரனை கட்டியணைத்து அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் செவிகளுக்குள் “ரிலாக்ஸ் நதி” என்ற தீரேந்திரன் குரலும் படபடக்கும் அவனின் இதயத்துடிப்பும் கேட்டவளோ இறுக விழிகளை மூடிய போது,

  “நதி இது உனக்குக் கேக்குதா இல்லையான்னு எனக்குத் தெரியலை, ஆனா எதோ ஒரு நம்பிக்கையில தான் நான் உன்கிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன். உன்னோட டைரில முதல் பக்கத்தைப் படிச்சேன், அதுல நீ எழுதியிருக்கக் காதல் வந்த தருணம்னு, உன் விழி மேல் சலனம் வந்த தருணமும் அதுதான், இவ்வளவு நாள் நீ என்ன மறைஞ்சு மறைஞ்சு காதலிச்சது போதும் நதி, எழுந்து வா உன்னைக் காதலில் திக்குமுக்காட வைக்கக் காத்திட்டு இருக்கேன் உன் தீரா. தீராநதியாவோம் வா நதி..! அவள் கோமாவில் சுயநினைவின்றி படுத்திருந்த போது தீரேந்திரன் சொன்ன வார்த்தைகள் அவள் செவிகளில் கேட்க ஆரம்பித்தது.

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் இருப்பதை உணர்ந்த பெண்ணவளுக்கு எதிரே நிற்பவன் தான் இதை சொன்னானா.? என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது, அவளின் உயிரை தீண்டிய வார்த்தைகளை கோர்வையாய் பேசியவன் அவன் தானா.? என்ற சந்தேகமும் அவளுக்குள் எழ தான் செய்தது.கட்டிக்கொண்டு நின்றாள் மெல்ல விலகி கால்கள் இடற பின்னோக்கி தன் பாதங்களை பதித்தவளின் விழிகள் அவனை விட்டுகநகர மறுத்தது.

சுவற்றோடு மெல்ல ஒட்டி நின்றவளின் எதிரே மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தவனின் விழியோ வெறுமையை சுமந்து நின்றது. அவளின் மென்மையான கரங்களை பற்றியவன்.

“என் பெயர் அறிந்து என்னை நீ காதல் செய்தாய், உன் பெயரும் அறியாமல், நீ யாரென்று தெரியாமல் உன் விழி மட்டும் பார்த்து காதலை சுமந்து கொண்டிருந்தவனை எட்ட நிறுத்தி பார்க்காதே என் நதியே.” என பற்றியிருந்த கரங்களில் வலுகட்டாயமாக மோதிரத்தை அவளின் மோதிர விரலில் திணிக்க விழி அகல பார்த்தவள் வியந்தே போனாள். அவள் கரங்களில் பூட்டியிருந்த மோதிரம் சொல்லாமல் சொல்லியது அவள் மீதான காதலை.

“இன்னும் நீ என்னை நம்பலைன்னா பரவாயில்லை நதி, இந்த போராட்டம் உனக்காக நான் தனியா ஆரம்பிச்சது, நானே தனியா போராடிக்கிறேன், இதில் இருந்து உன்னை மீட்டெடுப்பேன்” என சொல்லி உறுதியாய் அகன்றவனை பார்த்தபடி நின்றிருந்தாள். அவன் அறையை விட்டு வெளியே வருவதை பார்த்த கோபாலன்.

“தீரேந்திரன் என்ன ஆச்சு.?”

“உங்க பொண்ணுக்கு நினைவு வந்திருச்சு மாமா” என அவன் சொல்லிய வார்த்தைகளில் உறைந்து போய் நின்றார் கோபாலன். அகரநதியோ அறையில் இருந்து விரைந்து ஓடி வந்தாள்.

“தீரா” என அவள் அழைத்த நொடி அவன் நடையை நிறுத்தினான்.

“இந்த மோதிரம்” என அவள் திணறிய போது, அவளை பார்த்து திரும்பி நின்றான்.

“உன்னுடையது தான் நதி” அவன் சொன்ன போதே அவள் விழிகள்

 கண்ணீரை சுமந்து நின்றது.

“அன்னைக்கி அங்கே வந்தது நீங்களா?” வார்த்தைகளை கோர்க்க சிரமப்பட்டு கோர்த்தாள்.

“இன்னும் நம்பிக்கை வரலையா நதி??” அவளிடமிருந்து பதில் வரவில்லை எதையும் தைரியமாய் எதிர்கொள்பவள். எதோ நினைவில் உழன்று தன்னவனையே பார்த்து நின்றாள். எதையும் கண் மூடித் தனமாய் நம்பும் மனநிலையில் அவள் இல்லை. அவள் கையில் அணிந்திருக்கும் மோதிரமே சாட்சி அவர்களின் காதலுக்கு.

காவலனாய் பார்த்து காதல் கொண்ட நெஞ்சம்., இப்போது காதலனாய் ஏற்க மறுக்கிறது. தீரா அவளின் நம்பிக்கைகு உரியவனாக மாறுவது எப்போதோ? அவள் எந்த பதிலேதும் தரவில்லை மெல்ல அந்த வீட்டை விட்டு வெளியேறினான் அந்த ஆறடிக் காவலன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தீரா உன்னோட முழு காதலும் இப்போதான் எங்களுக்கே புரிஞ்சிருக்கு … நதிக்கு புரிய டைம் ஆகலாம் … இன்னும் உங்க ரெண்டு பேர் காதலுக்கும் கூட ஃப்ளாஷ்பேக் கதைகள் இருக்கும் போல …

  2. அகர் அவள் சொல்வதே சரி செய்வதே சரி என்று பிடிவாதமாக இருக்கின்றாள். அவளாக பொறுமையாக யோசித்து முடிவெடுப்பதும் இல்லை, மற்றவர்கள் சொல்வதை கேட்பதும் இல்லை.

    கார்த்திக் உண்மையை மறைக்கின்றான். அகர் அவனை புரிந்துகொள்ள மறுக்கின்றாள்.

    தீரா கண்களை மட்டும் பார்த்தே காதல் கொண்டானா!