Loading

அன்று:

 

மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுழைவாயிலில் அமைந்திருந்த ஜூஸ் கடையில் போடபட்டிருந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அதி, யாருடைய வருகைக்கோ காத்திருப்பவள் போல், மேசை மேல் வைத்திருந்த ஆரஞ்சு பழச்சாறை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை உறிஞ்சிக்கொண்டிருந்தாள் அகரநதி. எப்படியாவது குறும்படத்தை எடுத்து, பெஸ்ட் ஷார்ட் பிலிம் என்ற பெயரை வாங்கியாக வேண்டும், அதற்காக தான் அவள் அங்கே காத்திருந்தாள், அவள் எதிர்பார்த்தபடி விழியில் கருப்பு கண்ணாடி அணிந்தபடி, நீல நிற ஜூனும் சிவப்பு நிற சட்டையும் அணிந்த படி அவன் கடைக்குள் நுழையும் போதே சாக்லெட் பெர்ப்யூம் நறுமணம் வீச பட்டென திரும்பி பார்த்தாள் அதி.

“அகிலன்.?” அவனை பார்த்து அழைத்தாள் அதி, இவ்வளவு நேர காத்திருப்பின் பலனாய் வந்து சேர்ந்திருந்தான் அகிலன்.

“ம்ம் சொல்லு, என்ன விசயமா வரச் சொன்ன, எனக்க ஆயிரத்தி எட்டு வேலை இருக்கு” சற்று எரிச்சலுடன் விருப்பமின்மையை காட்டினான் அகிலன். 

“அகிலன், நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கிற பிரச்சனையை வச்சிட்டு இதை பேசினால் சரி வராது” சற்று குரலை தாழ்த்தி வார்த்தைகளை கோர்த்து பேசினாள் அகரநதி

“இங்கே பாரு அகரநதி!! கார்த்திக் விசயத்துல உங்களுக்கு நடுவில் நான் வந்திருக்க கூடாது அதனால் தான் அதை நான் பெரிசு படுத்தல பட்” என இடை நிறுத்தியவன் அவளை முறைத்தான்.

“ பிரின்ஸி ரூம் வரைக்கும் போயிட்டல, அதை மறக்கவே மாட்டேன்.” என கோபம் கொண்டு நகரச் சென்றவனை தடுத்து நிறுத்த முற்பட்டாள்

“சாரி அகிலன்!! இனிமேல் அப்படி நடக்காது” என மன்னிப்பு வேண்டியவளை கேவலமான பார்வை ஒன்றை பார்த்து வைத்தான்.

“சரி விசயம் என்னன்னு சொல்லு??”

“ஆக்ச்சுவலா என்ன விசயம்னா.?” தட்டு தடுமாறினாள் அவள்.

“ஏய் என்ன ராகம் பாடிட்டு இருக்க, சொல்ல வந்ததை சொல்லேன்” அவன் விழியை உருட்டி கேட்க, மருண்ட விழியுடன் நின்றிருந்தாள் அதி, ஆனால் அவள் நினைத்திருக்கும் கதைக்கு இவன் மட்டும் தான் சரியான நாயகனாக இருப்பான் என நினைத்து மேலும் தொடர்ந்தாள் அதி.

“இல்லை எங்களோட ஷார்ட் பிலிம்ல நீ ஹீரோவா நடிக்கணும்” அவள் சொன்ன கணத்தில். அவளை வியப்பாய் பார்த்தவன்,

“இது அபிஷியல் மீட்டிங்கனா, மீட் மீ இன் மை ஆபிஸ்” என சொன்னவன் விசிட்டிங் கார்ட்டை அவளிடம் நீட்ட, அவளோ பயத்தில் பட்டென வாங்கினாள்.

“ஆபீஸ்ல மீட் பண்ணு புரிஞ்சுதா, ஹீரோவ ஜூஸ் கடையிலையா அப்ரோச் பண்ணுவ இடியட்.? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை, நீயெல்லாம் ஃபூயுச்சர்ல டைரக்டர் ஆகி தமிழ் சினிமா உருப்பட்டுரும், பேசிக் நாலெட்ஜ் கூட இல்லாமல் படம் எடுக்க கேட்க வந்துட்ட.?” என அவன் திட்டி செல்ல பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.

“இந்த அவமானம் உனக்கு தேவையா.?” என்ற குரல் கேட்க, அவள் முன்னே இருந்த இருக்கையை ஏறிட்டவளின் விழிகளுக்கு தரிசனம் தந்தான் கார்த்திக் பாதாம் பாலை பதமை குடித்தபடி அவளை பார்த்து நக்கலாய் சிரித்தான் கார்த்தி.

“எருமைமாடு நீ எப்போடா வந்த.?”

“நீ ஆரஞ்சு ஜூஸை ஆர்டர் பண்ணி ஒன்றரைமணி நேரமா குடிச்சிட்டு இருந்தீயே அப்போவே வந்துட்டேன்”

“டேய் கார்த்தி ப்ளீஸ்டா அகிலனை எப்படியாவது சம்மதிக்க வைக்குறியா.?”

“நீ என்ன அதி லூசா.? அந்த கதையே வேண்டாம் சொல்லிட்டேன் தேவையில்லாத பிரச்சனையில மாட்டிக்கலாம்னு சொல்றீயா.?”

“சோஷியல் மெசேஜ் இருக்கணும் ஷார்ட் பிலிம்ல தெரியுமா.? தெரியாதா.?”

“சரி நான் உன்னோட வழிக்கே வர்றேன் அதி, நீ அந்த கதையை சொல்லி அவனை ஒத்துக்க வைக்க முடியும்னு எப்படி நினைக்கிற.?”

“அகிலன் கதைக்கு ஒகே சொன்னால்.? உனக்கு ஒகேவா கார்த்தி.?”

“அவனுக்கே ஒகேனா எனக்கு டபுள் ஒகே அதி. இந்த கதைக்கும் அதுவும் எதிர்மறையான கேரக்டர் நடிக்க எப்படி ஒத்துக்குவான், நீ சொல்றதுபடி பார்த்தால் அது ஹீரோ கேரக்டர் மாதிரி தெரியலையே” எனக் கார்த்தி கேட்க,

“மறுபடியும் கேட்கிறேன் அகிலன் ஓகே சொன்னால் போதும் தானே” என அவள் கேட்க,

“ம்ம்” என்ற தலையசைப்பு கார்த்தியிடமிருந்து.

“அப்போ இன்னும் ஏன் காத்திருக்க, கிளப்பு வண்டியை அகிலனோட ஆபிஸ்க்கு போகலாம்” என அவனை துரிதப்படுத்தானாள்

 “ஏய் அதி அவன் ஒத்துக்கமாட்டேன்டி, ஏன்டி நீ என் உயிரை வாங்குற.?”

“ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணுவோம்டா ஒருவேளை அகிலன் ஒத்துகலைனா பரவாயில்லை, நீ சொல்ற கதையை ஷார்ட் பிலிம்மா எடுப்போம், என்ன டீல்க்கு ஓகேவா.?”

“எப்படியும் அவன் ஒகே சொல்ல போறதில்லை, டீல் டீல்” என சிரித்தபடி அவளின் ஸ்கூட்டியின் முன்னே அதி அமர்ந்திருக்க, அவள் தோள்பற்றி ஏறி அமர்ந்தான் கார்த்திக்.

“ஆமா அவனோட ஆபிஸ் எங்கே இருக்கு.?”

“நீலாங்கரைடா கார்த்தி”

“அவ்வளவு தூரமா.?”

“பாரு விசிட்டிங் கார்ட்ல அதான் போட்டிருக்கு” ஒற்றை கையில் வண்டியை இயக்கியபடி அவளின் பர்ஸை மறுகையில் எடுத்து பின்னே நீட்டினாள் அதி.

“ஆமாடி நீலாங்கரைன்னு தான் போட்டிருக்கு, இருடி மேப்ல எந்த ப்ளேஸ்னு பாக்குறேன்” என அகிலனின் அலுவலகத்தை தேடி இருவரும் புறப்படிருந்தனர் கார்த்திக்கும், அகரநதியும்.

அவர்கள் கிளம்பிய அரைமணி நேரத்தில் அகிலன் கொடுத்த முகவரிக்கு வந்து சேர்ந்தனர். அந்த கட்டிடத்தை பிரமித்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

“அதி பாருடி அவனுக்கு எவ்ளோ பெரிய ஆபிஸ் ரெடி பண்ணி வச்சிருக்கான் பார்றேன், பணக்காரன் பணக்காரன் தான்ல” என கார்த்திக் பிரமித்தபடி பேச,

“ஹேய் கார்த்தி அதெல்லாம் அவங்க அப்பா காசுடா, புலம்பாமல் வா வந்த வேலையை பார்ப்போம்” என கட்டிடத்தை நோக்கி இருவரும் நடக்க, அவர்களுக்கு முன் சீறிபாய்ந்து சென்றது அகிலனின் புல்லட், அவர்களை பார்த்தும் பார்க்காதது போல் அலுவலகத்திற்குள் நுழைந்து மின் தூக்கிக்குள் செல்ல, அவனை தொடர்ந்து கார்த்திக்கும் அகரநதியும் மின் தூக்கிக்குள் நுழைந்திருந்தனர்

“அகிலன்.?” ராகமிழுத்தாள் அதி அதற்குள் லிஃப்ட் திறந்தவுடன் தலைமை பொறுப்பை ஏற்ற தோரணையில் அவனுடைய அலுவலுகத்திற்குள் சென்றான் அகிலன். அவளை ஒரு பொருட்டாக கூட அவன் மதிக்கவில்லை அதை பார்த்த கார்த்திக்கு அகரநதியின் மேல் தான் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

“அதி அவன் ஒத்துக்க மாட்டான், நீ ஏன்டி சொன்னால் கேட்க மாட்ற? எப்படி முகத்தை திருப்பிட்டு போறான் பாரு”

“முயற்சியே பண்ணாமல் , முடியாது முடியாதுன்னு முட்டு கட்டை போடதேடா கார்த்தி”

“தன்மான பெண் சிங்கமே, இப்போ எங்க போச்சுடி உன் ஈகோ.?”

“காரியம் சாதிக்கணும்னா தன்மானத்தை தள்ளி தான் வைக்கணும் கார்த்தி, இதுல என் தன்மானம் ஒன்னும் குறைஞ்சிட போறதில்லை கார்த்தி, அகிலனை விட மாஸ் காட்டுற ஹீரோஸ்லாம் சந்திக்க வேண்டியதாயிருக்கும், அவங்களுக்கு கதையை சொல்லி ஒத்துக்க வைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும், அதெல்லாம் பேஸ் பண்ணுனும்னா, முதலில் அகிலனை நடிக்க ஒத்துக்க வைக்கணும், இது என்னோட கேரியர் அதுல பேஷனெட்டா இருக்கணும்னு ஆசை படுறேன் கார்த்தி” என சொன்னவள் அகிலனின் அறையை நோக்கி வந்திருந்தாள் அதி.

“எக்ஸ்க்யூஸ்மீ சார்” எனக் கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு நின்றிருந்தாள் அதி.

“யா கெட் இன்” தோரணையாய் சொன்னான் அகிலன்.

“சார் ஐ யெம் அகரநதி ஃப்ரம் மீனாட்சி காலேஜ், ஹீ இஸ் கார்த்திக் ஃபரம் சேம் காலேஜ்” என அவளும் அவனுக்கு சளைக்காமல் தொழில்முறையில் அவனை அணுகினாள்.

“ஏன் அவருக்கு வாய் இல்லையா.? அவரு பேரையும் நீங்க சொல்றீங்க.?” நக்கலாய் கேட்டான் அகிலன்.

“அகிலு என்னை தெரியலையா.? நான் தான் கார்த்திடா.?”

“கார்த்திக் ஜெஸ்ட் ஷட் அப்” கார்த்திக்கை பார்த்து முறைத்தாள் அதி. அவள் முறைத்த முறைப்பிலே வாயடைத்து போனான் கார்த்திக்.

“சாரி ஃபார் தெட் சார், நீங்க எங்களோட ஷார்ட் பிலிம்ல ஹீரோவா நடிச்சா நாங்களும் கொஞ்சம் ரீச் ஆகுவோம், கதைய சொல்லவா சார்.?” பணிவாய் கேட்பதை போல் பாவனை செய்தாலும் உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்துக்கொண்டிருந்தாள் அதி.

“எனக்கு கதை கேட்க நேரமில்லை, எனக்கு டைம் கிடைக்கும் போது தான் ஒரு சீன் இல்லை ரெண்டு சீன் தான் நடிச்சு தர முடியும்” அவன் கண்டிப்பாய் சொல்ல, சரியென்பதை போல் தலையாட்டினாள் அதி.

“பை தி வே பேமென்ட சார்.?”

“ஃப்ரீ பார் யுவர் அப்ரோச் அதி” என அகிலன் சிரித்தபடி சொல்ல,

“மவனே உனக்கு இருக்குடா ஆப்பு” என நினைத்திருந்தாள் அகரநதி, அறியா பாவையிவளுக்கு இதனால் பிரச்சனை வரும் என அறியா குழந்தையாகி போனாள்.

அறையை விட்டு வெளியே வந்தவள் புன்னகை முகமாய் தன் நண்பனை பார்த்தாள்.

“கார்த்தி எப்படி சம்மதம் வாங்கினேன் பார்த்தியா?”

“அதி!! இது வேண்டாம்னு தோணுது”

“வேற என்ன பண்ணலாம் நீயே சொல்லு கார்த்தி. ஒருத்தராவது நல்ல ஸ்கிரிப்ட் சொன்னீங்களா? இப்போ அகிலனை ஒத்துக்க வைக்கிறது வரைக்கும் நானே தான் பண்ணிட்டு இருக்கேன்”

“அகிலன் ஹீரோவா கூட நடிக்கட்டும் பட் இந்த ஸஸ்கிரிப்டடுன்னு சொல்லாமல் நடிக்க வைக்கிறது தப்பு அதி” எத்சரித்தான் கார்த்தி.

“அவன் கதையை கேட்கலைனா நான் என்ன டா பண்ணுறது”

“ஆனால் நீ அவனை மாட்டி விடுறதுக்கு எதோ பண்ணுறேன்னு நீ மாட்டிக்கப் போற. அதான் நடக்க போகுது”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது கார்த்தி. நான் பார்த்துக்கிறேன்” என உறுதியாய் சொன்னவள் அதன் விளைவுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாவறுறிலும் சரியாகவும் நேர்மையாகவும் இருப்பவர்களுக்கு ஒரு குணம் உண்டு தன்னை சுற்றி இருப்பவர்களும் நேர்மையாகவும் உண்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது.

அகரநதி இதை அகிலனிடம் எதிர்பார்த்திருக்க கூடாது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பதை போன்ற செயலை தான் அகரநதி இப்போது செய்துக் கொண்டிருக்கிறாள்.

“இதில் நீ மட்டும் இல்லை அதி, நான் மலர், நிஹாவும் இருக்கோம். என்னை கூட விடு அவங்களோட எதிர்காலமும் இதில் தான் அடங்கி இருக்கு” என அவன் எடுத்துரைக்க அகரநதிக்கு புரிந்ததோ இல்லையோ சரியெனத் தலையை ஆட்டி வைத்தாள்.

சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையை செவி சாய்த்துக் கேட்டிருந்தாலே பல பிரச்சனைகளை வராமலே தடுத்திருக்கலாம் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும் அப்படி அகரநதி கார்த்தியின் எச்சரிக்கையை கேட்டிருந்தால்??

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகர நதி நீ வான்டடா போய் மாட்டிக்கிற சரி … இவங்க வாழ்க்கையும் சேர்த்து மாட்டி விட பார்க்குற …

  2. Short Film எடுக்க அப்படி என்ன ஆபத்தான கதையை கையில் எடுத்திருக்கிறாளோ!

    இதில் அகிலன் தான் நடிக்கணும்னு வீம்பா இருந்து அவன்கிட்ட இறங்கி போய் பேசி காரியம் சாதிக்கிறா.

    தைரியமாக இருக்க வேண்டியது தான் அதற்காக எல்லா இடத்திலும் சென்று தலையை விடுவது ஆபத்து.

    தன்னையும் தன்னுடன் இருப்பவரையும் ஆபத்தில் சிக்க வைக்க ஆவண செய்துவிட்டாள்.