Loading

அத்தியாயம் 20

சமீப காலமாக வரும் இந்த கனவினால் பெண்ணவள் தான் தினமும் இரவில் உறக்கமின்றி தவித்துப் போகின்றாள்.

 

யார் இவன்.. எதற்காக இப்படி கனவு வர வேண்டும் என்று நினைத்து நினைத்து இவள் தான் குழம்பிப் போகின்றாள்.

 

“ச்ச.. இன்னைக்கும் இந்த கனவா.. ஏன் இப்படி டெய்லியும் வருது. அந்த கனவுல வர்றவனை முன் பின் பார்த்தது கூட இல்லை. எப்படி யாரோ ஒருத்தன் கூட..” என்று உக்காந்து யோசித்து கொண்டிருந்தவள், எப்பொழுது தூங்கினாலோ..

 

விடியற் காலையில் அவள் அலைபேசியில் வைத்து இருந்த அலாரம் சத்தம் கேட்டு தான் கண் விழித்தாள்.

 

இரவு சரியாக உறக்கம் இல்லாததால் அதன் எதிர்வினையாக தலை வேறு வலித்தது.

 

“கடவுளே.. ” என்று நொந்தப்படி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

 

“இன்னைக்கு சனிக்கிழமை தானே.. விக்ரமுக்கும் இன்னைக்கு லீவ் தான். இன்னும் கொஞ்ச நேரம் படுப்போம்..” என்று நினைத்து மீண்டும் தூங்கிப் போனாள்.

 

பொழுது நன்றாக விடிந்ததும், பரிதியின் வீட்டில் அனைவரும் எழுந்து அவர் அவர் வேலையைப் பார்க்க, இனியனின் எண்ணிற்கு, அவனது காவல் துறை நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

அப்பொழுது தான் இனியன் குளித்து விட்டு வந்து உடை அணிந்து கொண்டிருந்தான்.

 

“என்ன இவ்ளோ சீக்கிரம் கால் பண்ணிட்டான்.” என்று யோசித்தவன் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

 

“ஹலோ .. இனியா..” என்று நண்பன் அழைக்க,

 

“ம்ம். சொல்லு டா.. என்ன விஷயம் ” என்று கேட்டான்.

 

“நேத்து நைட் அர்ரஸ்ட் பண்ணோம்ல.. அவங்களா அது ஸ்கெட்ச் போடல. யாரோ ஒருத்தர் சொல்லி தான் உங்க வீட்டுப் பொண்ணை தூக்கி இருக்காங்க..” என்றான் நண்பன்.

 

“என்ன..என்ன சொல்ற.. யாரு சொல்லி பண்ணி இருக்காங்க இப்படி..” என்று காவல் துறை நண்பனிடம் கேக்கும் போது அவன் எண்ணத்தில் வந்து போனது சஞ்சய் தான்.

 

“ஒரு பொண்ணு பேர் சொல்றாங்க.. அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் எதுவும் பகையா.. முன் விரோதமா..” என்று காவலன் யோசனையாகக் கேட்டான்.

 

“என்னது பொண்ணு பேரா..” என்று குழப்பத்தில் ஆழ்ந்தான் இனியன்.

 

“ஆமா..” என்றிட,

 

“என்ன பேரு சொன்னாங்க..” இனியன் கேட்டிட,

 

“ஏதோ ஷில்பா வாம்..உனக்கு தெரியுமா அவளை..” காவலன் சந்தேகத்துடன் கேட்டான்..

 

“என்ன ஷில்பா வா.. அவ எதுக்கு இதை பண்ணனும்..” என்று கேட்டான் அதிர்ச்சியுடன்.

 

“அப்போ உனக்கு ஷில்பாவை தெரியுமா..” காவலன் கேட்டிட,

 

“ஆமா. அவ என் ஃப்ரண்ட் தான். ஆனால் ஏன் அவ பண்ணனும்..” என்று அவனிடமே இனியன் கேட்டான்.

 

“அது எனக்கு எப்படி தெரியும். அந்த பொண்ணை விசாரிச்சா தான் தெரியும்.” என்றவன், பின் “அந்த பொண்ணு கான்டாக்ட் நம்பர் இருந்தா கொடு..” காவலன் கேட்டதற்கு,

 

“ஒன் செகன்ட் ” என்றவன் உடனே அவனது புலனதுற்கு ஷில்பாவின் எண்ணை அனுப்பியும் வைத்தான்.

 

காவலன் அந்த எண்ணை ஒரு முறை பார்த்துவிட்டு, கைது செய்து அழைத்து வந்த, கும்பளின் தலைவனின் அலைபேசியில் வந்த அழைப்பை ஒப்பிட்டு பார்க்கையில், அந்த எண்ணில் இருந்து நிறைய அழைப்புகள் வந்து இருப்பது தெரிந்தது.

 

“இனியா.. நீ அனுப்பிச்ச நம்பர்ல இருந்து தான் இவனுங்களுக்கு கால் போய் இருக்கு.. மே பி அந்த பொண்ணு தான் இதுல இன்வால்வ் ஆகி இருக்கனும். அவ வீடு உனக்கு தெரியுமா. அவளை நேரடியாக போய் விசாரிச்சுரலாம்..” என்று அவன் அழைத்திட,

 

இவனும் “சரி நான் வரேன்.. நான் அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன். அங்க வந்துடு. நானும் வந்துடுறேன்..”என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

இனியன் கிளம்பி அறையில் இருந்து வெளியே வர, அப்பொழுது தான் தூங்கி எழுந்து வந்தாள் வைஷ்ணவி.

 

அவன் கிளம்பிச் செல்வதைப் பார்த்த, வைஷ்ணவி யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்த இனியன் அவளின் அருகில் வந்து, “நேத்து நடந்த இன்சிடென்ட் ஷில்பா சொல்லி தான் பண்ணி இருக்காங்க. அவனுங்க இவ பேரை தான் சொல்லி இருக்கானுங்க. அதான் என் ஃப்ரண்ட் அவ வீட்டுக்கு போய் விசாரிக்கனும்னு சொல்லி என்னை கூப்பிட்டான்..” என்றிட,

 

“என்ன அவளா..” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

 

“ம்ம். எனக்குமே அதிர்ச்சி தான். அவ அப்படி இப்படி தான். ஆனால் இப்படி எல்லாம் பண்ணுவாளானு தெரியல..” என்றான் யோசனையுடன்.

 

“அவளை நான் அடிச்சதுக்கு அவ என்னை பழி வாங்கிட்டா..” என்றாள் கோபத்துடன்.

 

“என்ன.. அவளை அடிச்சியா.. இது எப்போ நடந்தது..” என்று இனியன் புருவ சுருங்கிட கேட்டான்.

 

ஒரு பெருமூச்சுடன், “அன்னைக்கு நைட் அவ வீட்டுக்கு பார்ட்டினு போனியே.. அப்போ நடந்துச்சு..” என்றாள்.

 

“அன்னைக்கு என்ன நடந்துச்சு. எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை..” என்றான் குழப்பதுடன்.

 

“ஒரு நிமிஷம்..” என்றவள், தன் அறைக்குச் சென்று அவளது அலைபேசியை எடுத்து வந்து, அதில் இருந்து ஒரு காணொளியை போட்டுக் காட்டினாள்.

 

அதில் ஷில்பா, “டேய்… பிரகாஷ்.. இப்போதான் டா அந்த இனியன் நம்மகிட்ட வசமா மாட்டிக்கிட்டான். அவனுக்கு போதை மருந்து கொடுத்து மட்டை ஆக்கி விட்டாச்சு. நம்ம என்ன பண்ணாலும் அவனுக்கு தெரியாத அளவுக்கு அவன் மயக்கத்துக்கு போய்ட்டான். அதை யூஸ் பண்ணி நான் அவன்கூட இருக்குற மாதிரி போட்டோ எல்லாம் எடுத்தாச்சு. இனி இதை வச்சி, அவன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு சொல்லி, அதை நீ போட்டோ எடுத்து வச்சி மிரட்டுறதா சொல்லி அவனை நம்ப வச்சி, அவன்கிட்ட இருந்து காசை கறந்துர வேண்டியது தான். ” என்று போதை மயக்கத்தில் அவனிடம் உளறிக் கொண்டிருக்க,

 

அவன் நண்பன் பிரகாஷ் என்பவன், “ஷில்பா.. ஆனா இனியன் உண்மையா ஃப்ரண்ட்டா தானே உன்ன பாக்குறான். ஜஸ்ட் இது எல்லாம் அவனுக்கு பிடிக்காது. அதுனால அவாய்ட் பண்றான். மத்தபடி உங்கிட்ட அவன் நல்லா தானே பேசுறான். அப்புறம் எதுக்கு நீ அவனை இப்படி பழி வாங்க நினைக்குற..” என்று அவனும் வாய் குளறிக் கேட்டான்.

 

“உனக்கு ஒன்னு தெரியுமா.. நான் காலேஜ் படிச்சி முடிச்ச பிறகு அவன்கிட்ட என் காதலை சொன்னேன். ஆனா அவன் என் கேரக்டர் பத்தி தப்பா பேசி முடியாதுனு சொல்லிட்டான். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவனை பழி வாங்க சான்ஸ் தேடிட்டு இருக்கேன். அது இன்னைக்கு தான் அமஞ்சது. ” என்றாள் சிரித்தபடி.

 

அத்துடன் அந்த காணொளி முடிந்து இருந்தது 

 

“இது எப்படி நீ எடுத்த..” என்று இனியன் கேட்டதற்கு,

 

“அன்னைக்கு உன்னை கூப்பிட வரும் போது ஹால்ல கொஞ்ச பேரு படுத்து கிடந்தாங்க. நீ மட்டும் ஒரு ரூம்ல படுத்து இருந்த. நான் உன் பக்கத்துல வந்து பாக்கும் போது, உன் ட்ரெஸ் எல்லாம் கலைஞ்சி இருந்துச்சு. அப்பவே எனக்கு சந்தேகமாத் தான் இருந்தது. அப்புறம் உன்ன வெளியக் கூட்டிட்டு போய் காருல உக்கார வச்ச பிறகு தான் தெரிஞ்சது. என் போனை அந்த ரூம்ல மிஸ் பண்ணிட்டேன்னு. அப்புறம் அதை எடுக்க திரும்ப உள்ள போனேன். அப்போ தான் இன்னொரு ரூம்ல பேச்சு சத்தம் கேட்டது. அந்த ஷில்பா, அவ ஃப்ரண்ட் கிட்ட பேசிட்டு இருந்ததை தான் நான் வீடியோவா எடுத்தேன். எடுத்து முடிச்சிட்டு அவகிட்ட தான் போய் பேசுனேன். ” என்றாள்.

 

“அப்படி என்ன பேசுன.. நீ.” என்று அவன் கேட்க,

 

“அதை அவகிட்ட போய் கேட்டுக்கோ..” என்று அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்து விட்டு சென்று விட்டாள்.

 

“அடியேய்.. சொல்லிட்டுப் போடி..” என்று அவன் அவளிடம் சத்தம் போட்டுக் கேட்க,

 

“போடா..” என்று அவள் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள். 

 

“இவ ஒருத்தி..” என்று அவள் மூடிய அறைக் கதவை பார்த்து சொல்லி விட்டு, தனது காவல் துறை நண்பனை வரச் சொல்லிய இடத்திற்கு இவனும் விரைந்தான்.

 

ஷில்பாவின் வீட்டிற்கு சற்று தள்ளி இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு அவளது வீட்டை நோட்டம் விட்டனர்.

 

“இனியா. நீ அவ நம்பருக்கு கால் பண்ணி பேசிப் பாரு..” என்று கூற,

 

இனியனும் அவன் கூறிய படியே, அவளுக்கு அழைத்துப் பார்த்தான்.

 

ஆனால் ஷில்பா இவனது அழைப்பை ஏற்க வில்லை.

 

இப்பொழுது யோசித்த போலீஸ் நண்பன், அந்த கும்பளின் தலைவன் எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு விடுவிக்க, அவளும் சற்று நேரத்தில் அழைப்பு ஏற்று பேச ஆரம்பித்தாள்.

 

“என்ன டா.. சொன்ன வேளை என்ன ஆச்சு.. முடிச்சிட்டியா..” என்று கேட்க,

 

இந்த பக்கம் இருந்து, “அது எல்லாம் முடிச்சாச்சு மேடம்.. நீங்க பேசுன அமௌண்ட்டை எப்போ கொடுப்பீங்கனு கேக்க தான் அடிச்சேன்..” என்று குரல் மாற்றி பேசினான் காவலன்.

 

இனியனோ , அவள் பேச பேச அவனது கோவத்தை அடக்கிக் கொண்டு நின்று இருந்தான்.

 

“உன் அக்கௌன்ட்க்கு அமௌன்ட் வந்துரும்.” என்றாள்.

 

“சரிங்க மேடம்..” என்று அழைப்பை துண்டித்தான் அவன்.

 

“இவளை..” என்று கோபத்துடன் கிளம்பப் பார்க்க,

 

“நீ இப்போ இருக்குற கோவத்துக்கு அவளை கொன்னு போட்டாலும் போட்டுருவ.. அப்படி எல்லாம் எதுவும் ஆகிற கூடாது. ஸ்ட்ராங் எவிடென்ஸ் நம்மகிட்ட இருக்கு. நான் பார்த்துகிறேன். உனக்கு வாய்ப்பு தரேன். ” என்ற காவலன், அவளது வீட்டு கேட்டை திறந்து கதவை தட்ட,

 

“யாரு… இருங்க வரேன்..” என்று கூறி விட்டு சில நொடிகளில் கதவை திறந்தாள் .

 

வெளியில் காவலர்களைக் கண்டதும் ஒரு நிமிடம் அவளுக்கு ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.

 

இருந்தாலும் அதை சமாளித்துக் கொண்டு, ” என்ன சார்.. என்ன விஷயம். இங்க வந்து இருக்கீங்க.. ” என்று ஒன்றும் அறியாதவள் போலக் கேட்க,

 

“உங்கள அர்ரெஸ்ட் பண்ண வந்து இருக்கோம். “என்றான் அவன்.

 

“என்னது அர்ரெஸ்ட் பண்ணவா. நான் என்ன தப்பு பண்ணேன்..” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே இனியன் வெளியில் இருந்து உள்ளே வந்தான்.

 

அவனைக் கண்டதும் மொத்தமும் அவளுக்கு புரிந்து விட்டது. இருந்தாலும், “இனியா.. வாடா.. நல்ல நேரத்துல நீ வந்த.. என்னை அர்ரெஸ்ட் பண்ண போறாங்களாம். எதுக்குனு கேளு டா..” என்று அவனிடம் ஒன்றும் அறியாதவள் போலக் கேட்க,

 

அவனோ, ஒரு அடி தான். சுருண்டு விழுந்து விட்டாள்.

 

அடித்த அவனுக்கே கை வலித்து விட்டது.

 

“இங்க பாரு.. நீ தான் அவளை கடத்தி எல்லாமே பண்ண சொன்னனு எங்களுக்கு தெரிஞ்சிப் போச்சு. நீ அனுப்புன ஆளு நேத்தே அர்ரெஸ்ட் பண்ணியாச்சு. இப்போ உங்கிட்ட பேசுனது கூட அவன் இல்லை நான் தான்.” என்றான் இனியனின் நண்பன்.

 

“ச்சி.. நீ எல்லாம் ஒரு பொண்ணா.. என்ன ஜென்மம்டி நீ.. கூடா நட்பு கேடா முடியும்னு சொல்லுவாங்க. உன்கூட சகவாசம் வச்சிக்கிட்டதுக்கு எனக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட..” என்று கோவத்தில் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

“எதுக்கு டி.. இப்படி பண்ண..” என்று இனியன் கேட்டதற்கு,

 

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 

“ரைட்டு.. இவ எதுவும் பேச மாட்டா.. இனியா இவளுக்கு இன்னொரு அடி கொடு. அப்போதான் வாயை திறந்து பதில் சொல்லுவா..” என்று நண்பன் காதை குடைந்தபடி ஷோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டபடி சொன்னான்.

 

இனியனும் அடிப்பதற்கு கையை ஓங்கிட, “இல்லை நான் சொல்லுறேன். ” என்று அன்று தான் நண்பன் பிரகாஸிடம் பேசியதைக் கூறினாள்.

 

அதைத்தான் வைஷ்ணவி காணொளியாக இனியனுக்கு காட்டியது.

 

“அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு..” என்று நண்பன் கேட்டிட,

 

“நானும் பிரகாசும் பேசுனதை அவ கேட்டுட்டா.. கேட்டுட்டு உடனே “சபாஷ்.. சபாஷ்.. ஷில்பா… உனக்கு இந்த எண்ணம் வேற இருக்கா.. அது எப்படி டி நல்லவ மாதிரி வேஷம் போட்டு உன்ன நம்புனா அவனுக்கு இப்படி பண்ண மனசு வந்துச்சு.. நான் இருக்குற வரைக்கும் அவ்ளோ சீக்கிரம் அவனை அசிங்கப்பட விட்டுற மாட்டேன். என்னை தாண்டி தான் நீ அவனைத் தொடணும். இப்ப நீ பேசுனது எல்லாம் என் போன் ல ரெகார்ட் பண்ணிட்டேன். இனிமே நீ ஒன்னும் புடுங்க முடியாது…” அப்டினு சொல்லிட்டு போனவ, திரும்ப வந்து ஓங்கி ஒரு அடி அடிச்சிட்டு “இனிமே அவன் பக்கம் வந்த.. இதைக் காட்டி உன்ன லாக்கப் ல கம்பி எண்ண வச்சிருவேன். ஜாக்கிறதை..” அப்பிடினு மிரட்டிட்டுப் போனா..

 

அவ எப்படி என்னை மிரட்டலாம்..அவளை நிம்மதியா இருக்க விடக்கூடாதுனு நெனச்சேன். இவளை தாண்டித் தானே அவனைத் தொடணும்னு சொன்னா.. அப்போ இவளை முதல்ல தூக்கிட்டு அப்புறம் அவனை பார்த்துக்கலாம்னு நெனச்சி தான் நான் பண்ணேன்.. ” என்று கன்னம் வீங்க வலியுடன் மெதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

வைஷு தனக்காக பேசிய வார்த்தையைக் கேட்டதும், உள்ளுக்குள் ஒரு வித சிலிர்ப்பு உண்டாவதை இனியனால் தடுக்க முடியவில்லை.

 

“ஓ.. இதுனால தான் அவ என்கிட்ட சொல்லலையா..சரிதான். நேருல வந்து உங்கிட்ட பேசுக்கிறேன் டி..” என்று மனதினுள் நினைத்தவன், ஷில்பாவை கைது செய்து நண்பன் அழைத்துக் கொண்டு சென்று விட, இனியனோ வைஷுவை சந்திப்பதற்காக வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.

 

நித்தமும் வருவாள்…

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்