
இன்று.
தீராவை கட்டிக்கொள்ள அவள் சம்மதம் தெரிவித்ததுக்குச் சாட்சியாய், மத்திய சிறையின் வாசலில் தீரேந்திரனும், அகரநதியும் நின்றிருந்தனர். அவள் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடத்தபடி தீரேந்திரனை ஏறிட்டது.
“என்ன நதி, பார்க்க போகலாமா.?”
“ம்ம் போகலாம்”
“அப்போ உனக்குச் சம்மதம் தானே.?”
“அது வந்து” வார்த்தைகளை உள்இழுத்தாள் கோதை பெண்ணவள்.
“அப்போ வா வா, அப்படியே உங்க வீட்ல விட்றேன், நீ அவ்ளோ கஸ்டபடத் தேவையில்லை மை டியர் நதி” அவள் கைகளைப் பிடித்துத் துரிதபடுத்தினான். அவன் மை டியர் எனச் சொன்னதிலே எரிச்சலடைந்தாள் நதி.
“எனக்குக் கார்த்திக்கை பார்க்கணும். அவ்வளவு தான் .” என முறைத்தபடிச் சொன்னாள்.
“அப்போ சொல்லு நதி உன் சம்மதத்தை”
“மிஸ்டர் காக்கி, இது உங்களுக்கே அபத்தமா இல்லையா.? இப்படி ஃபோர்ஸ் பண்ணிலாம் லவ்லாம் வர வைக்க முடியாது” என அவள் எதோ சொல்ல வர,
“நான் உன்னை லவ் பண்ணவே சொல்லலையே கட்டிக்கத் தான சொல்லுறேன், உனக்கு உன் ஃப்ரெண்டை பார்க்கணும்னா சம்மதம் சொல்லு, இல்லைனா வேண்டாம் விடு, நான் உன்னை எதுலையுமே கட்டாயப் படுத்தல நதி, எல்லாமே உன் கையில தான் இருக்கு” என்றவன் விசமமாய்ப் புன்னகைத்தான் தீரேந்திரன்.
கார்த்திக்காக அவள் தன் இன்னுயிரை மாய்த்து விடச் சொன்னால் கூட அதற்கும் அவள் தயாராகத் தான் இருப்பாள், ஆனால் இவனோ வாழ்க்கையைக் கேட்கிறானே, இது தினம் தினம் செத்து பிழைக்கும் நிலை அல்லவா.? அதை எப்படி ஏற்பது என்று மனம் தடுமாறியது, அவளுக்கே என்ன நடந்ததென்று தெரியாத நிலை, அனைத்தும் தெரிந்தவன் கார்த்திக் மட்மே, அன்று அவள் மயங்கிய பின் என்ன நேர்ந்ததோ.? குழப்பமும் கேள்வியும் அவளைக் குழப்பமடையச் செய்தது. கார்த்தியிடம் மட்டுமே அவள் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் என நம்பினாள் அகரநதி.
என்ன ஆனாலும் பரவாயில்லை, கார்த்திக்கை சந்தித்தாக வேண்டும் என முடிவெடுத்தாள் அகரநதி. வருவதைப் பின் பார்த்துக்கொள்ளலாம் என நினைக்கத் தொடங்கிய மனதோ, அருவருத்த பார்வையைத் தீரேந்திரனின் மீது செலுத்தியது.
“சம்மதம், இப்போ கூட்டிட்டு போவீங்களா.?”
“ம்ம் அந்தப் பயம் இருக்கணும்” என்ற தீராவோ முன்னே நடக்க அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் நதி.
இனி வாழ்க்கை முழுக்க இவனைப் பின் தொடர்ந்து சென்றாக வேண்டுமா.? அய்யோ என்றிருந்தது அவளுக்கு, அவன் அடிக்கடி தீராநதி என்ற பெயரை சொல்வதிலே அவளுக்கு ஒன்று தெளிவானது, அவளுடைய டைரி இவனிடம் தான் இருக்கிறது என்று உறுதி செய்துக்கொண்டவள் அமைதியாய் அவனைப் பின் தொடர்ந்தாள்.
சிறையின் மூளையில் இருகால்களைக் கூட்டி முகத்தைப் புதைத்த படி அமர்ந்திருந்தான் கார்த்திக். அந்த அறையில் அவன் மட்டுமே அடைக்கபட்டிருந்தான், குறைந்த வெளிச்சமே இருந்த அந்த அறையின் பூட்டுத் திறக்கபடும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான் கார்த்திக்.
தீரேந்திரன் உள்ளே நுழைய அவனைத் தொடர்ந்து அகரநதியும் உள்ளே நுழைந்தாள், அவள் அணிந்திருந்த கொலுசொலி மெல்ல சிணுங்கியது, வெற்றிடமாய் இருந்த அறையில் அவள் கொலுசொலி எதிரொலிக்க, நிமிர்ந்து பார்த்தவன் மேலும் தலையைச் சேவல் போல் உயர்த்தி அகரநதி பார்த்தவுடன் முகத்தை வேறு திசையில் திருப்பி வைத்துக்கொண்டான்.
தீரேந்திரன் சொன்னதைப் போல் அதியை அழைத்து வந்திருந்தது, அவனுக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
‘இதெப்படி நடந்தது இதற்கு வாய்ப்பே இல்லை’ என தனக்குள் பேசிக்கொண்டான் கார்த்தி.
“கார்த்தி” மெல்ல அழைத்தாள் அவனின் தோழி அதி. விரைந்து கைகளைக் கொண்டு இரு காதுகளையும் அடைத்துக்கொண்டவன் அவளைப் பார்க்காமல் முகத்தைச் சட்டையினுள் புதைத்துக்கொண்டான் கார்த்திக்.
“கார்த்தி என்னடா பண்ற, என்னதான் ஆச்சு, உனக்கென்னடா விதி.? இப்படி இங்க வந்து உட்கார்ந்திருக்க.? ஏய் லூசு” அவனைத் தொடச் சென்றவளை வெறிக்கொண்ட மிருகம் போல் தள்ளிவிட, நிலை தடுமாறி விழச் சென்ற தன்னவளை தாங்கி பிடித்திருந்தான் அவளின் தீரா.
“நதி ஆர் யூ ஆல்ரைட்” என தீரா கேட்க அவன் வார்த்தைகளை பொருட்படுத்தாது மீண்டும் அவள் நண்பன் கார்த்தியை நோக்கிச் சென்றாள்
அவளைப் பார்த்தவுடன் தன் தோழனின் சிரிக்கும் விழிகள் எங்குப் போனதோ? கள்ளம் கபடமற்ற நட்பு எங்கே சென்றது என பரிதவித்துப் போனாள் பேதை பெண்ணோ, இதைத் தாங்கி கொள்ள இயலாது மீண்டும் அவனிடமே தஞ்சம் புகுந்தாள். அவன் அணிந்திருந்த காலர் இல்லா சட்டையைப் பற்றி,
“டேய் கார்த்திக் உனக்கு என்ன தான்டா ஆச்சு.? சொல்லேன்டா வாயை தான் தொறந்து பேசேன்டா.?” கோபம் பொங்க கத்த, நடப்பவற்றை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்த தீரேந்திரனுக்கு ஒன்று புரிந்து போனது, தனக்கு என்ன நடந்ததென்று நதிக்கு தெரியவில்லை, அனைத்து உண்மைகளும் தெரிந்த ஒரே ஆள் கார்த்திக் மட்டும் தான். எதைத் தான் அவன் மறைத்துத் தொலைகிறான் என்ற கோபமும் கூடவே சேர்ந்த ஆற்றாமையையும் தீரேந்திரனிடம் வெளிப்பட்டது.
“ஏய் உன்னை யாரு இங்கே வரச் சொன்னது.? இந்தப் பொறுக்கி கூட்டிட்டு வந்தானா.?” என நக்கலாய் தீரேந்திரனை ஏறிட்டான் கார்த்திக். அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை கார்த்திக்கா இப்படிப் பேசுகிறான், தீராவை பற்றிச் சொன்ன போது முதலில் சந்தோசபட்டதே கார்த்திக் தான். இப்போது இப்படிப் பேசுகிறான் என்று யோசனை செய்தாள். ஒருவேளை அவன் அனைத்தையும் மறந்துவிட்டானோ என்று தான் அவளுக்குத் தோன்றியது.
“கார்த்திக் என்னைத் தெரியலையடா.? நான் தான் உன் அதி”
“நீ யாருனே எனக்குத் தெரியாது, மரியாதையா போயிரு” அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி சொன்னான் கார்த்திக். அவளை மறந்தவன் போல் நடித்தான்.
“கார்த்திக் உனக்கு நியாபகம் இருக்காடா நீயும் நானும் மீனாட்சி காலேஜ்ல சேர்ந்து விஸ்காம் படிச்சோமே” அவள் அவனுக்கு நினைவுபடுத்துவதை நினைத்து கேட்டாள், பாவம் பேதை பெண்ணவளுக்குத் தெரியவில்லை அவனுக்கு அனைத்தும் நினைவிருப்பதால் தான் அவளை நிராகரிக்கிறான் என்று,
“ஏய் ஒரு தடவை சொன்னால் உனக்குப் புரியாதா.? ஹலோ தீரேந்திரன் இவங்களை வெளிய கூட்டிட்டு போங்க” எனக் கோபமாய்ச் சொன்னான் கார்த்திக்.
“கார்த்திக் உங்களை உங்க ஃப்ரெண்டு தான் பார்க்கணும் சொன்னாங்க, உங்களுக்கு நடுவுல நான் வரலை” எனச் சிறைக் கதவை திறந்துக்கொண்டு அவன் வெளியே சென்றுவிட, அங்கிருந்து செல்ல மணமில்லாமல் அவள் அங்கேயே நின்றிருந்தாள்.
“கார்த்திக் கடைசியா கேக்குறேன் நிஜமாவே என்னை மறந்துட்டியா கார்த்தி.?”
“ஆமா மறந்துட்டேன், முதலில் இங்க இருந்து கிளம்பு” அவளைக் கிளப்புவதிலே குறியாய் இருந்தான் கார்த்திக்.
“அப்போ மலரையும் மறந்துட்ட அப்படித் தானே.?” அவள் கேட்டுவிட்டு அவன் முகப் பாவனைகள் பார்த்தாள்.
“எவளையும் எனக்குத் தெரியாது, எல்லாத்தையும் நான் மறந்துட்டேன்” என ஆக்ரோசமாய்க் கத்திய கார்த்தியை வியப்பாய் பார்த்தபடி சிறையின் கதவை தள்ளிக்கொண்டு வெளியே வர ஜெயிலர் கதவை மூடி பூட்டிட, எதையோ யோசித்தபடி சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தாள் அதி.
“என்ன எதாவது சொன்னானா உன் ஃப்ரெண்டு.?” நக்கலாய் பார்த்தபடி கேட்டான் தீரேந்திரன்.
“பாவம் அவனுக்கு எல்லாமே மறந்து போயிருச்சு போல அதான் இப்படிப் பிகெவ் பண்ணுறான்” வருத்தமாய்த் தெரிவித்தாள் நதி.
“அவன் எதையும் மறக்கல, மறைக்குறான்” நேரடியாய் நதியின் விழி பார்த்துச் சொன்னான் தீரேந்திரன்.
“அவன் கண்ணுல பொய் தெரிஞ்சுது நானும் பார்த்தேன்” அவள் மௌனமாய்ச் சொல்ல,
“பரவாயில்லை இருந்தாலும் உனக்கு ரொம்ப இரக்க குணம் தான் நதி”
“ஏன் அப்படிச் சொல்றீங்க.?“ அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்டாள்.
உன் வாழ்க்கையை நாசம் பண்ணினவன் மேலேயே, உனக்கு இவ்வளவு கரிசனமா.? அப்படினா என் மேல அளவில்லா காதல் இருக்கும் போலையே.?”
“என்னது நாசம் செஞ்சானா.? என்ன சொல்ல வர்றீங்க புரியலை.?”
“உன் வாழ்க்கையைச் சீரழிச்சு உன்னை இந்த நிலமையில் நிறுத்தினவன் மேலே கூட உனக்கு இவ்வளவு கரிசனமா? அந்த அளவிற்கு அவன் மேல் உனக்குக் காதலா? இல்லை நீ அவனை மன்னிக்கிற அளவிற்கு இரக்கக் குணம் படைத்தவளா? காலேஜ் முழுசும் நீயும் அவனும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்றாங்க. ஆனால் உங்களைப் பார்த்தால் எனக்கு அப்படித் தெரியலையே..?” என அவன் சொன்னதும்,
“போதும்!” காதுகளைப் பொத்திக் கொண்டு அலறினாள் அகரநதி. மனதிற்குள்ளோ ‘கார்த்தி இதற்காகத் தான் ஜெயிலுக்குள்ளே இருக்கானா? அப்படி அன்னைக்கு என்ன நடந்தது?’ முயன்று யோசித்துப் பார்த்தவளுக்கு ஒன்றும் நினைவிற்கு வராமல் போக,
“உண்மையான நட்பைக் கொச்சைப் படுத்த உங்களால் மட்டும் தான் முடியும். இவ்வளவு கேவலமான பிறவியாய் இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என்னோட கார்த்தியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”
அருவருப்பான பார்வையொன்றை அவனை நோக்கி வீசியவள், யோசனையோடே அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள் அகரநதி.
நிறமற்ற அவள் வாழ்வில் வானவில்லாய் வண்ணம் தீட்டியவன் தான் கார்த்தி. கொதிக்கும் மணலிலும் நடந்து செல்வாள் அவன் நண்பன் துணையிருந்தால்,வஞ்சகமில்லா மனதுடன் அழகாய் ஒரு நட்பு அந்த நட்பை ஒரே வார்த்தையில் கொச்சை படுத்தியிருந்தான் தீரேந்திரன்.
இதுவரை அனைத்தும் அவளின் நன்மைக்காக தான் செய்கிறோனோ என்ற சந்தேகத்துடன் இருந்தவளுக்கு, இவன் கெட்டவனா என்பதை ஏற்றுக்கொள்ள மனமோ பதபதைத்தது. காதலுக்கு கண் இல்லை என்பது உண்மை தான் போல என்றெல்லாம் அவளுக்கு தோன்றாமல் இல்லை.
ஒரு பக்கம் காதலன் அந்நியமாய் போன நிலை என்றால், மறுபக்கம் நண்பனே தன்னை சீரழித்துவிட்டான் என்ற செய்தி, எல்லாம் ஒன்றாய் சேர்ந்துக்கொண்டு பெண்ணவளை வாட்டி வதைக்க, தீரேந்திரனை ஏறிட்டாள். அவனை சற்றும் அவளுக்கு பிடிக்கவில்லை எஞ்சியிருந்த காதலும் காற்றோடு கரைந்து போயிருந்தது.
“என்னையும் என்னோட நண்பனையும் நீங்க தவறாக பேசீட்டீங்க, இனி மேல் இப்படி ஒரு உறவும் எனக்கு தேவையில்லை, உங்களை தான் மணம் முடிக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை, இது என் வாழ்க்கை, என்னோட உரிமை” சினம் கொண்டவளாய் தீரேந்திரனை எதிர்கொண்டாள் பெண்ணவள்.
“நதி எதுவாயிருந்தாலும் உங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம், இது உனக்கு சேஃப் கிடையாது” அவன் எதோ சொல்ல வர, அவள் எதையும் காதில் வாங்க தயாராக இல்லை.
“ஸ்டாப் இட் மிஸ்டர் தீரேந்திரன், என்னோட கார்த்தி அப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை, எங்களை பத்தி கமெண்ட் பண்ண நீங்க யாரு.? நீ யாரு எனக்கு.? சொல்லு நீ யாரு” என அவள் ஒருமையில் பேச,
“நதி..!” எனச் சினம் கொண்டு கத்தியவனின் விழிகள் சிவந்து போனது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கார்த்தி ஏன் இப்படி இருக்கிறான் … எனக்கே கஷ்டமா தான் இருக்கு … மலருக்கு என்ன ஆச்சு … தீரா நீ போய் விசாரிக்காம இவங்க ரெண்டு பேர் கூட சண்டை போட்டுட்டு இருக்க …
தனது நண்பனை காண வேண்டி தீராவின் திருமண கோரிக்கைக்கு சம்மந்தம் தெரிவித்துவிட்டால் அகர்.
உயிரையே துச்சமென எண்ணும் நட்பு இருவருக்கும்.
அகருக்கு நடந்தது என்னவென்றே தெரியாது போலவே!
கார்த்திக் ஏன் அகர் தன்னை வந்து பார்த்ததை எதிர்பார்க்காதது போல் நடந்துகொள்கின்றான்.
அகரின் நன்மைக்காக எதையோ மறைகின்றான்.