Loading

அத்தியாயம் – 20

மதியம், அமுதினி கல்லூரி வளாகத்தில் இருக்கும் தோட்டத்திலிருந்த பெஞ்சில் தனியாக அமர்ந்து, தனது நாட்குறிப்பை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

“நான் அவர் கிட்ட இருந்து விலக முடிவு எடுத்துட்டேன்… நான் ஆரவ் சாரோட ப்ராஜெக்ட்-லிருந்து விலகிவிட்டேன்… அது கஷ்டமான டெசிஷன் தான்… ஆனா, நான் என்னை காப்பாத்திக்கணும். நான் பர்ன் அவுட் ஆகிட்டேன். எமோஷனலா என்னால ஃபேஸ் பண்ண முடியல… அவரை எவ்வளவு கேர் பண்ணினாலும், அவர் என்னை வேணாம்னு தான் சொல்லுவாரு… நான் இனியும் ட்ரை பண்ணிட்டு இருக்க முடியாது.

ஆனா என் மனசு… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் அவரை… நான் அவரை ரொம்ப லவ் பண்ணிட்டேன் போல! அது எப்போ நடந்துச்சு தெரியல… ஆனா நான் அவரை ரொம்ப லவ் பண்றேன். அவரோட பெயின், அவரோட லோன்லினெஸ், அவரோட ஸ்ட்ரகல் – எல்லாத்தையும் நான் உணர்கிறேன், அண்ட்ர்ஸ்டாண்ட் பண்றேன்… ஆனா, அவருக்கு நான் வேண்டாமாம்… என் அன்பு, பாசம், காதல் எதுவுமே வேணாமாம்…

அதனால நான் அவர் இஷ்டம் போல விட்டுடுறேன்… இதுக்குமேல நான் என் வாழ்க்கையை பார்க்கணும்… என் கனவுகளை அச்சீவ் பண்ணணும்… ஒரு நல்ல தெரபிஸ்ட்டாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும்… அதுல கவனத்தை செலுத்தி ஆரவ் சாரை மறக்கணும்…

ஆனா, அது எப்படி பாஸிபிள்? என் காதல் அவருக்கு சொந்தமா இருக்கும்போது எப்படி நான் அவரை மறப்பேன்..!!”

என்று எழுதி விட்டு, மௌனமாக கண்ணீர் வடித்தாள். கேம்பஸில் மாணவர்கள் நடந்து போய் கொண்டிருக்க, அவளை யாரும் கவனிக்கவில்லை. 

திடீரென்று, ஒரு நிழல் அவள் மீது விழவும், நிமிர்ந்து மேலே பார்த்தாள்.

ஆரவ் கிருஷ்ணா அங்கு நின்றிருந்தான். அவன் முகம் வெளிறிப்போய், கண்கள் சிவந்து, அவ் தோற்றமே அவளுக்கு பயத்தை கொடுத்தது.

“அமுதினி…” அவன் குரல் உடைந்தது.

அமுதினி உடனே எழுந்து, தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “சார், நீங்க இங்க என்ன—”

“நீ நம்ம பண்ணிட்டு இருக்குற ப்ராஜெக்ட்ல இருந்து போறேன்னு சொன்னியா?” அவன் கேட்டான்.

“ஆமா சார்…”

“ஏன்?”

அமுதினி நேராகப் பார்த்து, “எனக்கு தெரியும் சார்… நீங்க என்னோட வொர்க் பண்ண விரும்பல… அதான், நீங்க என்னை தொடர்ந்து ஹர்ட் பண்றீங்க… நான் அதிலிருந்து என்னை ப்ரொடெக்ட் பண்ணிக்கணும் இல்லையா! அந்த காரணத்தால நான் விலகிக்க முடிவெடுத்துட்டேன்…” என்று அழுத்தமாக சொன்னாள்.

அந்த பதிலில் ஆரவ் உறைந்து. “அமுதினி, நான்…” என்று ஏதோ சொல்ல வர,

“நீங்க என்ன சார் சொல்ல போறிங்க? நீங்க என்கிட்ட மறுபடியும் சாரி சொல்லப்போறீங்களா? அத சொல்லிட்டு மறுபடியும் என்னை காயப்படுத்த போறிங்களா? இல்ல வேற ஏதாவது காரணம் வச்சி இருக்கீங்களா சார்?”

“அமுதினி, ப்ளீஸ்… நான் தப்பு பண்ணிட்டேன்… நான் உன்னை ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டேன்… அது எனக்கு புரியுது… அதுக்கு ஐம்… ஐம் சாரி அமுதினி…” 

அமுதினி இடவலமாக தலையாட்டி கசப்பான புன்னகையை கொடுத்தாள்.

“நீங்க எத்தனை முறை சாரி சொல்லப்போறீங்க சார்? அந்த சாதியால் எதுவும் மாற போறதில்லை… ஆக்ஷன்ஸ் ஸ்பீக் லவ்டர் தென் வர்ட்ஸ்… நீங்க தொடர்ந்து என்னை வேண்டாம்னு சொல்லி திட்டறீங்க… அவ்வளவு மோசமா போய்ட்டேனா நான்! அதான் போதும்டா சாமின்னு முடிவு பண்ணிட்டேன்.. இப்ப நான் சொல்றேன்… தயவுசெய்து என்னை விட்டுடுங்க… தொல்லை பண்ணாம இங்கிருந்து போய்டுங்க சார்…” என்று கோபமாக சொன்னாள்.

ஆரவின் அவளின் பேச்சை எவ்வித இடையூறும் செய்யாமல் அமைதியாக கேட்டுவிட்டு, “நீ… நீ பண்ணது எல்லாமே கரெக்ட் தான் அமுதினி… நான் உன்னை டிசர்வ் பண்ணல… ஆனா, ப்ளீஸ் ப்ராஜெக்ட்-ல் இருந்து போகணும்னு நினைக்காத… இது உன் கேரியருக்கு இம்பார்ட்டன்ட்… நல்லா யோசிச்சு பாரு அமுதினி…”

“என் மெண்டல் ஹெல்த் என்னோட கேரியரை விட இம்பார்ட்டன்ட் சார்… நான் என் டெசிஷனில் உறுதியாக இருக்கேன்… நீங்க தயவு செய்து என்னை தனியா விட்டு கிளம்புங்க…” என்று ஆத்திரத்தில் சொல்ல, அவன் அங்கிருந்து செல்வது போல தெரியவில்லை!

“என்ன நீ போன ஐடியாவில் இல்லையா? சரி ஓகே… நானே இங்கிருந்து போறேன்…” என்று அவள் பொருட்களை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

“அமுதினி, வெயிட்!” ஆரவ் சத்தமாக கத்தினான்.

அதில் அமுதினி நின்றுவிட, இன்னமும் திரும்பவில்லை.

“நான்… நான் உன்னை தனியா விட்டுடுறேன் அமுதினி… நான் உன்னை இனி தொந்தரவு பண்ண மாட்டேன்… ஏதாவது பேசி கஷ்டப்படுத்த மாட்டேன்… ஆனா, நீ ஒண்ணு தெரிஞ்சிக்கணும் – நீ ஒரு அமேசிங் பெர்சன்… நீ ரொம்ப புத்திசாலி… கைன்ட்… எம்பதெடிக்… நீ ஒரு எக்ஸலென்ட் தெரபிஸ்ட்-ஆ வருவ… நான் உன்னை ரொம்ப குழப்பி விட்டுட்டேன்… அது முழுக்க முழுக்க என்னோட தப்பு தான்… எல்லாத்துக்கும் சாரி அமுதினி…” என்று மனதார மன்னிப்புக் கேட்டான் ஆரவ் கிருஷ்ணா.

அவனது பேச்சைக் கேட்டதும் அமுதினியின் கண்களிலிருந்த கண்ணீர் துளிகள் கன்னத்தை தாண்டி வழிந்தோடியது. ஆனால், அவள் அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. 

ஆரவ் அந்த இடத்திலேயே வேதனையுடன் நின்றிருக்க, அவள் வேக நடையுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

ஆரவ் அங்கேயே உடைந்து, தோற்கடிக்கப்பட்டு நின்று, அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க, அமுதினி தன் வாழ்க்கையிலிருந்தும் மொத்தமாக விலகிச் செல்வதைப் போல உணர்ந்தான்.

அவனுக்கு நன்றாகவே தெரியும் – அவன்தான் இதற்குக் முழுக்காரணம். அவனுடைய பயம், அவனுடைய வலி, அவனுடைய குணமடைய முடியாத இயலாமை – அவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு அழகான பந்தத்தை அழித்துவிட்டது.

இப்போது, அவன் முற்றிலும் தனியாகவே இருந்தான். ஒருகாலத்தில் அவனே விரும்பி தேர்ந்தெடுத்த தனிமை தான். அவளை போக சொல்லியதும் அவனே தான்!

ஆனால், இம்முறை, அது தாங்க முடியாத வேதனையாக இருந்தது. அதுவே அவனை கொன்று தின்றது. ஏனென்றால் அவனுக்குத் தெரியும் – அவன் விலைமதிப்பற்ற ஒன்றை இழந்துவிட்டான். 

உண்மையிலேயே அவன்மீது அக்கறை கொண்ட ஒருத்தி! அவனை குணப்படுத்த உதவக்கூடிய ஒருத்தி! அவனையே சுற்றி வந்த ஒருத்தி!

இப்பொழுது ஆரவ் கிருஷ்ணா அமுதினியை முற்றிலுமாக இழந்துவிட்டான்.

********

அமுதினி நடந்து சென்றதும், ஆரவ் தோட்டத்தில் இருந்த ஒரு பெஞ்சில் சரிந்து உட்கார்ந்தான். அவனது கைகள் நடுங்கின. அவனுக்கு மூச்சுக்காற்று சீராக இல்லாமல் வேகமாக வர, பேரச்சத் தாக்குதல் (pain attack) வரத் தொடங்கியது.

‘நான் என்னோட அவசர புத்தியால மறுபடியும் ஒருத்தியை இழந்துட்டேன்… அப்போ அவளை உடனே நம்பிட்டு இழந்து இந்த நிலைமைக்கு வந்தேன்… இப்போ இவளை வலியின் தாக்கத்தால் வந்து கோபத்துல இழுந்துட்டு இருக்கேன்…’ என்று மனம் அவனை சாடியது.

ஆரவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை! அமுதினியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

முதல் முறையாக, ஆரவ் ஒரு உண்மையை எதிர்கொண்டான். இதை அவனால் தனியாக சமாளிக்க முடியாது. அவனுடைய காயங்களுக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவை! உதவி தேவை!

ஆனால் மிக முக்கியமாக – அவன் அதற்கு முன்னர் அமுதினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அது உண்மையான மன்னிப்பாக இருக்க வேண்டும். அவன் தன் கடந்த காலத்தை அவளிடம் முழுதாய் விளக்க வேண்டும். அவள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமுதினி காட்டிய பாசத்தில் தவறில்லை! ஆரவ் கிருஷ்ணாவின் கோபம் , வவி, ஏமாற்றங்களை சந்தித்த அவனது கடந்தகாலம் நிகழ்வுகள் தான் முற்றிலும் தவறானது!

ஆரவ் அங்கிருந்து எழுந்தவன், திடமான ஒரு முடிவினை எடுத்தான். அவன் மாறப் போகிறான். அவன் கடந்தகால காயங்களிலிருந்து குணமடையப் போகிறான். அவன் சிகிச்சையாளரிடம் சென்று உதவியை தேடப் போகிறான்.

ஆனால், அதற்கு முன்பாக அவன் அமுதினியிடம் செல்ல வேண்டும். அவன் அவளிடம் எல்லா உண்மையையும் சொல்லி, மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவள் அவனை மன்னிப்பாளா? அவனுக்குத் தெரியாது. ஆனால் அவன் முயற்சியாவது செய்ய வேண்டும். இந்த முறை, அவன் பயந்து ஒளிய விரும்பாமல், அவளை எதிர்கொள்ளப் போகிறான். 

அவனுடைய கடந்த காலத்தை, அவனுடைய வலியை, அவனுடைய உண்மையை என்று முழுமையாக சொல்ல முடிவெடுத்து விட்டான்.

ஆரவ் அங்கிருந்து உறுதியுடன் நடக்க ஆரம்பித்தான். அமுதினியின் முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும். 

அமுதினியிடம் சென்று, அவன் மனதில் புதைந்திருந்த அனைத்து வலிகளையும் அவளிடம் இறக்கி வைக்க வேண்டும்.

இது தான் ஆரவ் குணமாதற்கான முதல் படி! இதில் பயம், வேதனை, ஏமாற்றம், வலி என்று எல்லாமே வெளிப்படும், அது அவசியமானது.

*****

இரவு 7 மணி. ஆரவ் தனது காரில் அமுதினியின் முகவரியை நோக்கி சென்று கொண்டிருந்தான். அவசர தொடர்பு என்ற பெயரில் பேராசிரியர் சரண்யாவிடம் அவளது முகவரியைப் பெற்றிருந்தான்.

அவனது கைகள் ஸ்டீயரிங் வீலைப் இறுக்கி பிடித்தன. ஆனால், அவை லேசாக நடுங்கிக் கொண்டிருக்க, அவனுடைய மனமோ குழப்பத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது. 

என்ன சொல்வது? எப்படி தன் நிலைமையை அவளிடம் விளக்குவது? அவள் காது கொடுத்து கேட்பாளா? இல்லை என்னை பேச விடாதபடி செய்து திருப்பி அனுப்பி விடுவாளா? என்றேல்லாம் எண்ணி மனம் கலங்கியது.

அவன்‌ வாகனம் ஓட்டும்போது, அவனது மனம் அந்த வேதனையான கொடிய நினைவுகளுக்குத் திரும்பியது. 

அது நடந்த முடிந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தது. ஆனால், இன்று நினைத்தாலும், அது நேற்று நடந்தது போலவே இருந்து அவனை இம்சிக்கும். அதனாலேயே அந்த நினைவுகளில் சிக்காமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தான்.

******

**ஃப்ளாஷ்பேக் – 2019, ஜெர்மனி**

இருபத்தி ஆறு வயது ஆரவ் கிருஷ்ணா பல்கலைக்கழக உணவு விடுதியில் உள்ள இருக்கையில் தனியாக அமர்ந்து, அவனுடைய பாடக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி, மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து விளையாட்டாக பேசி, சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஆரவோ எப்போதும் போல தனியாக தான் இருந்தான்.

இருந்தும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். வகுப்பில் பேசி சிரிப்பான். ஆனால், நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவன் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவன். ஒரு அனாதை. அவனுக்கென்று யாரும் இல்லை. நட்பை எப்படி உருவாக்குவது, நம்பிக்கையை எப்படி வளர்ப்பது என்று அவனுக்குத் தெரியாது.

அப்பொழுது,

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ, இஸ் திஸ் சீட் டேக்கன்? ஆர் ஃப்ரீ?” என்று ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல் அழகாக ஒலித்தது.

அதில் ஆரவ் நிமிர்ந்து மேலே பார்த்தான். ஒரு நவநாகரீக பெண் நின்றிருந்தாள். அழகான முகம், நீண்ட கருகருவென கூந்தல், முத்து பற்கள் தெரிய புன்னகையுடன் நின்றிருந்தாள் ரியா.

“இட்ஸ் ஃப்ரீ…”

“ஓஓஓ! மே ஐ சிட்?”

“நீங்க இங்கேயே உட்காரலாம்,” ஆரவ் சொன்னான்.

அதற்கு பின்னர், அவளும் உட்கார்ந்துக் கொண்டு, அடுத்த சில வினாடிகளில்,

“நீங்க தமிழா?” என்று கேட்டாள் ரியா.

“ம்ம்…”

“நானும் தான்…”

“ஓஓஓ… குட்…”

“நீங்க சைக்காலஜி தானே…”

“ம்ம்ம்…”

“நானும் தான்… நான் உங்களை சைக்காலஜி கிளாசில் பார்த்திருக்கேன்… நீங்க எப்பவும் சூப்பரா ஆன்சரஸ் கொடுப்பீங்க… பை தி வே… ஐம் ரியா…” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“நான் ஆரவ்… ஆரவ் கிருஷ்ணா…”

அதுதான் ஆரம்பம். 

அதன்பின்னர், இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர். ரியா ஒவ்வொரு நாளும் அவனுடன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பாள். 

அவள் அவனுடன் அமர்ந்து, குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வாள், காபிக்கு அழைப்பாள், வெளியே எங்காவது செல்லலாம் என்று சொல்லி இருவருமாக அவுட்டிங் செல்வார்கள்.

மூன்று மாதங்களில், அவர்கள் நெருங்கிய நண்பர்களானார்கள். அது ஆரவுக்குப் புதியது – யாரோ அவனுடன் இருந்து, நேரம் செலவிட விரும்பினார் என்பது அவனுக்கு அதீத மகிழ்ச்சியை கொடுத்தது. ஆய்வுக்கும் ரியா அதிகமாக பிடிக்க ஆரம்பித்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அன்று மாலை விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது.

இருவருமே பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்தனர்.

“ஆரவ்.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…”

“என்ன ரியா?”

“ஆரவ், நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல…‌ பட்டுனு சொல்லிடறேன்… உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் ஆரவ்.”

ஆரவுக்கு அதிர்ச்சியாகி, “வாட்?” என்க,

“எஸ்… நான் உன்னை லவ் பண்றேன்… உன்னோட புத்திசாலித்தனம், உன் கருணை, உன் அப்பாவித்தனம்- எல்லாமே… நீ ரொம்ப ஸ்பெஷல் ஆரவ்..”

ஆரவ் குழம்பிப்போய், “ரியா, நான்… எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்-ஸ் பத்தி சுத்தமா ஒன்னும் தெரியாது… நான் எப்படி உன்னை போய்—” என்று தயங்க,

“நீ எல்லாத்தையும் கத்துக்குவ. நாம சேர்ந்து கத்துக்குவோம்… ப்ளீஸ் ஆரவ். எனக்கு ஒரு சான்ஸ் குடு.. என்னை கொஞ்சம் கன்சிடர் பண்ணு ஆரவ்…” என்று விடாமல் ஒரு நாய்க்குட்டி போல அவனையே சுற்றி சுற்றி வந்தாள் ரியா.

ஆரவ் முதலில் மறுத்துவிட்டான். ஏனெனில், அவன் கொஞ்சம் பயந்தான். இதற்கு முன்பு, அவன் யாரையும் காதலித்ததில்லை. நான் ரியாவை எப்படி நம்ப முடியும்? என்று சிரமப்பட்டான்.

ஆனால், ரியாவோ அவளது காதலில் அதிரடியாகவும், விடாப்பிடியாகவும் இருந்தாள். அவள் ஒவ்வொரு நாளும் அவனிடம் காதலைக் காட்டி, அவனை அவ்வளவு அன்புடன் கவனித்துக் கொண்டாள். அதில் மெதுவாக, ஆரவின் குழப்பம் மறைந்து தெளிவு பிறந்தது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆரவ் கிருஷ்ணா ரியாவின் காதலை ஒப்புக்கொண்டான். 

“ரியா உண்மையை சொல்லணும்னா எனக்கு உன்ன மொதல்ல இருந்தே பிடிக்கும் ரியா… ஆனா, எனக்கு கொஞ்சம் குழப்பமா, பயமா இருந்துச்சு, அதான் நான் வேணாம்னு சொன்னேன்… பட், இதுக்கு மேலேயும் உன்ன வெயிட் பண்ண வைக்க விருப்பம் இல்ல… இட்ஸ் குட் டைம் டு சே… ஐ லவ் யூ ரியா…” என்று உருக்கமாக சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன் ஆரவ்.

ரியாயும் அவனை ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவி அணைத்துக் கொண்டாள். 

“ஐ ப்ராமிஸ் யூ… நான் உன்னை எப்பவும் ஹேப்பியா வச்சிப்பேன்… எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… லவ் யூ சோ மச் ஆரவ் கிருஷ்ணா…” என்று காதலுடன் சொன்னாள்.

அடுத்த ஆறு மாதம், ஆரவின் வாழ்க்கையில் மிகச்சிறந்த காலம் எனலாம். ரியா அவனுக்கு எல்லாமுமானாள். அவள் அவனது ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளை கூர்ந்து கவனிப்பாள். (அவன் அறியாமல்). 

“ஆரவ், நீ இப்போ என்ன ஃபீல் பண்ற?” என்று கேட்க, அவனும் தன்னுடைய காதலை வார்த்தைகளால் வடித்துச் சொல்வான், அவள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு, குறிப்பு எடுப்பாள். (இதெல்லாம் தனது ஆராய்ச்சிக்கு என்று அவனுக்குத் தெரியாமல்).

ஆரவ் அனாதையாக வாழ்ந்த தனிமை வாழ்க்கை முற்றிலுமாக மறைந்துவிட்டது. முதல் முறையாக, அவனுக்காக, அவனுக்கே உரியவளாய் ஒருத்தி இருந்தாள்… அவனது ரியா. உண்மையில், அவன் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

ஆனால், ஆறாவது மாதத்தில், ரியா கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினாள். அவள் அவனைத் தவிர்க்க ஆரம்பித்தாள். அவள் அழைப்புகளை எடுக்க மாட்டாள். அவனது சந்திப்பை ரத்து செய்வாள்.

ஆரவ் கவலைப்பட்டான். 

“ரியா, என்னாச்சு? நான் எதாவது தப்பு பண்ணினேனா?” என்று ஒன்றும் புரியாமல் கேட்பான்.

“இல்ல ஆரவ்… எனக்கு கொஞ்சம் வொர்க் ப்ரஷர்… தீஸிஸ் முடிக்கணும். சாரி…” என்று மழுப்பி விடுவாள் ரியா.

அடுத்த ஒரு மாதம், அவனுக்கு சித்திரவதையாக இருந்தது. ரியா அவனிடம் பேசவே இல்லை. ஆரவ் மீண்டும் தனிமையாக உணர்ந்தான்.

பின்னர், ஒரு வெள்ளிக்கிழமை மாலை, ரியா திடீரென்று அவன் அபார்ட்மெண்டிற்கு வந்தாள். அவள் கண்களில் கண்ணீர். அவள் நீண்ட நேரம் பேசாமல் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ரியா, என்னாச்சு?” ஆரவ் எவ்வளவு கேட்டும் அவளிடமிருந்து பதில் வரவில்லை.

கடைசியாக, கிளம்பும் சமயத்தில் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்தாள். 

“ஐம் சோ சாரி ஆரவ்…”

“எதுக்கு சாரி?”

அவள் பதிலேதும் பேசவில்லை. அவள் அவனை மிகவும் இறுக்கமாக அணைத்து, இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டு, திடீரென்று விலகிச் சென்று, 

“ரொம்ப சாரி… ப்ளீஸ் என்னை எதுவும் கேட்காத… நான் இப்ப போகணும். குட்பை ஆரவ்…” என்று அழுகையுடன் சொல்லி சென்று விட்டாள் ரியா.

ஆரவ் குழப்பமடைந்து, ரியாவை எண்ணி கவலைப்பட்டான். அவளை எவ்வளவோ தொடர்பு கொள்ள முயல, அவள் பதிலளிக்கவில்லை.

நான்கு நாட்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது – ரியா என்ற மாணவி, அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்து, தற்கொலை செய்து கொண்டாள்.

அந்த செய்தியில், ஆரவின் உலகமே முற்றிலும் நின்றுபோனது.

******

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆரவ் இந்தியா செல்வதற்காக, தனது அபார்ட்மெண்டை காலி செய்து கொண்டிருந்தான். அவனது முனைவர் பட்டம் நடந்து முடிந்தது.

அவனுடைய அலமாரிக்கு பின்னால், ஒரு சீல் வைக்கப்பட்ட உறை ஒன்று கிடைத்தது. 

அதில் டியர் ஆரவ் என்றிருக்க, அது ரியாவின் கையெழுத்து!

ஆரவ் நடுங்கும் கைகளால் அதை திறந்தான்.

அந்த கடிதத்தை படிக்க படிக்க, அவனது உலகம் தலைகீழாக மாறியது போல இருந்தது.

“டியர் ஆரவ், நீ இதை படிக்கும், நான் உயிருடன் இருக்க மாட்டேன்…”

அதில் ரியா ஒப்புக்கொண்டாள் – அவளுடைய காதல் போலியானது. அவளுடைய ஆய்வறிக்கைக்கான சோதனைப் பொருள் அவன்தான். ‘தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் உணர்ச்சி கையாளுதல் மற்றும் இணைப்பு உருவாக்கம்’ – ஒரு சர்வதேச உளவியல் போட்டிக்கு. அவன் சரியான பாடமாக இருந்தான் – அனாதை, தனக்கென ஒரு அன்புக்காக ஏங்கும் ஜீவன். 

ரியா தனியாக இதை செய்யவில்லை. அவள் தனது லெஸ்பியன் காதலி ஐராவுடன் சேர்ந்து இந்த திட்டங்களை வகுத்திருந்தாள். ரியா நடிப்பாள், ஐரா அவற்றை கவனித்து ஆவணப்படுத்துவாள்.

ஆனால், ஐரா ரியாவை ஏமாற்றி விட்டாள். அவள் அனைத்து ஆராய்ச்சிகளையும் எடுத்து போட்டிக்கு அவளுடைய பெயரில் சமர்ப்பித்தாள். ரியாவின் பெயர் எதிலும் பயன்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக ரியாவும் ஐராவும் சண்டையிட்டு கொண்டனர். தான் ஐராவால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று ரியா உணர்ந்தாள்.

அதேபோல் தானே ஆரவையும் தான் ஏமாற்றி இருக்கிறோம் என்று உணர்ந்த நொடியில், கத்தி அழுதாள். 

ஏனென்றால், ஆரவ் அவளை உண்மையாக நேசித்தான். அவனுடைய கள்ளங்கபடமற்ற பாசத்தில் இவளும் ஒருகணம் நெகிழ்ந்து விட்டாள். அவனைப் போய் இப்படி ஏமாற்றி விட்டோமே என்று எண்ணி முற்றிலும் உடைந்து விட்டாள்.

கடிதத்தின் கடைசி வரிகள்: “தயவுசெய்து என்னை மன்னிச்சிடு ஆரவ்… ப்ளீஸ் மூவ் ஆன்… ஃபைன்ட் ஹேப்பினஸ்… நான் செஞ்ச தப்புக்கு, உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்காத ஆரவ்… நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…” 

ஆரவ் அந்த கடிதத்தை தூக்கி வீசி, பெரும் குரலெழுப்பி கத்தினான். அவன் வீட்டிலுள்ள அனைத்தையும் உடைத்தான்.

அதில் பயந்து அக்கம்பக்கத்தினர் போலீஸை அழைத்தனர். ஆரவ் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களில் முற்றிலும் மயக்கத்தில் இருந்தான்.

அதன்பின்னர், இருபத்தி ஆறு வயது ஜாலியான, அப்பாவி, கனிவான ஆரவ் இறந்து, அவனது இடத்தில், முற்றிலும் கோபமான, கொடூரமான, மனசாட்சியின்றி, உணர்வுகள் மரத்துப் போன ஆரவ் பிறந்தான்.

நான் இனி யாரையும் நம்பமாட்டேன்! யாரையும் காதலிக்க மாட்டேன்! என்னுடன் யாரையும் நெருங்க விடமாட்டான்! என்று அன்றுதான் முடிவு செய்தான் ஆரவ் கிருஷ்ணா.

********

**தற்போது – 2025**

கார் திடீரென ஜெர்க்கானது. அவன் தனது இலக்கை அடைந்துவிட்டான் என்று உணர்ந்தான். இதோ அமுதினியின் வீட்டிற்கு முன்பாகத்தான் இருந்தான்.

அமைதியான தெருவில் ஒரு சிறிய வீடு. அவளும் தன் பெற்றோரை இழந்து, தனியாக தான் வசிக்கிறாள்.

ஆரவ் காரில் இருந்து இறங்கி, கதவின் முன் நின்றான். அவனது கைவிரல்கள் அழைப்பு மணியை அழுத்த தயங்கியது.

‘நான் அவக்கிட்ட என்ன சொல்லப்போறேன்? என் பாஸ்ட்-ஆ எப்படி எக்ஸ்பிளைன் பண்றது? அவள் புரிஞ்சுக்குவாளா? இல்ல என்னை மேலும் ஹர்ட் பண்ணி விட்டுட்டு போய்டுவாளா?’

ஆனால் அவனுக்குத் தெரியும் – அவன் முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், அவன் உண்மையான உறவை, அவனுடைய அமுதினியை இழக்க நேரிடும்.

ஆரவ் ஆழ்ந்த மூச்சை எடுத்து, மணியை அடித்தான்.

கதவு திறந்தது.

அமுதினி நின்று கொண்டிருந்தாள். அவளோ சாதாரண உடை அணிந்திருக்க, தலைமுடி தளர்ந்திருக்க, கண்களும் சிவந்திருந்தன – அவள் அழுது கொண்டிருந்தாள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

அமுதினி ஆரவ் பார்த்ததும், அதிர்ந்து போனாள்.

“சார்? நீங்க… இங்க எப்படி இங்க?” வார்த்தைகள் வராமல் திணற,

ஆரவ் அவளை மட்டுமே பார்த்திருக்க, அவனது கண்களில் அப்பட்டமான வலி. 

“அமுதினி, நான்… நான் உன்கிட்ட பேசணும்… ப்ளீஸ்… இது ரொம்ப முக்கியம்… ப்ளீஸ்… லாஸ்ட் டைம்…” என்று மன்றாடினான்.

அமுதினி சற்று தயங்கினாள். முதலில் வேதனைப்பட்டாள், கோபப்பட்டாள். ஆனால் அவன் முகத்தைப் பார்த்ததும், அவன் விரக்தியை உணர்ந்ததும், அவள் இதயம் மென்மையாகியது.

“உள்ளே வாங்க சார்…” அமுதினி மெதுவாகச் சொன்னாள்.

ஆரவ் உள்ளே நுழைந்தான். சிறிய ஹால், இரண்டு நாற்காலிகள், சுவர்களில் அமுதினியுடைய பெற்றோரின் புகைப்படங்கள். அவளும் அவனைப் போலவே தனியாக வாழ்கிறாள், அவளும் இழப்பை அனுபவித்திருக்கிறாள் என்று நன்கு உணர்ந்தான்.

அவர்கள் இருவரும் அமர்ந்தனர். சங்கடமான அமைதி.

ஆரவே மெதுவாக பேச ஆரம்பித்தான்.

“அமுதினி, நான் உன்கிட்ட உண்மை சொல்லணும்… என் பாஸ்ட் பத்தி… நான் ஏன் இப்படி இருக்கேன்னு உன்கிட்ட சொல்லணும்…” என்கவும், அமுதினி அமைதியாகக் கேட்டாள்.

ஆரவின் குரல் உடைந்து, “ஆறு வருடங்களுக்கு முன்பு, நான் ஜெர்மனியில் PhD பண்ணிட்டு இருந்தேன்… நான்… நான் ஒரு ஜாலி பெர்சனா இருந்தேன்… இன்னொசென்ட்..” என்றவன் தான் ஒரு அனாதை என்பதை அப்போது சொல்லவில்லை.

அவன் ரியாவைப் பற்றி எல்லாமே சொன்னான். எப்படி அவள் அவனை அணுகினாள், எப்படி அவர்கள் காதலில் விழுந்தார்கள், எப்படி அவன் மகிழ்ச்சியாக இருந்தான் என்று எல்லாமே சொல்லி,

பின்னர், அவளது துரோகம், அவள் ஏமாற்றியது, அவள் ஏமாந்து போனது, அந்த கடிதம் கிடைத்தது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி விட்டான் ஆரவ்.

ஆரவின் கண்ணீர் நிரம்பி, “அவள்… அவள் என்னை லவ் பண்ணவே இல்ல அமுதினி… எல்லாமே ஃபேக்… நான் அவளோட ஆராய்ச்சிக்கு பயன்படுத்தின எலி… என் எல்லா எமோஷன்ஸ்-ஐயும் அவள் டாக்குமெண்டரி பண்ணினா – எல்லாத்துக்கும் காரணம் ஒரு ஆய்வறிக்கை! அதுவும் கேவலம் ஒரு போட்டிக்காக! என்னை அவ முழுசா அழிச்சிட்டு போய்ட்டா அழுதினி…” என்று வேதனையுடன் சொன்னான்.

அதைக்கேட்ட அமுதினிக்கு அழுகை வந்தது. அந்த அளவிலான துரோகம் பற்றி அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

ஆரவ், “அதனால் தான் அமுதினி, நான் இப்படி ஆனேன்… நான் எல்லாரையும் ட்ரஸ்ட் பண்ண பயப்படுறேன். லவ் பண்ண பயப்படுறேன். யாராவது என்னை கேர் பண்ணினா, நான் பேனிக் ஆயிடுறேன். ஏன்னா… ஏன்னா அது மறுபடியும் பொய்யா இருக்குமோன்னு பயமா இருக்கு.”

அவன் அவளது கண்ணைப் பார்த்து, “நீ என்னை உண்மையா கேர் பண்ணினே… ஆனால், நான் உன்னை என்கிட்ட இருந்து தள்ளிவச்சேன்.. ஏன்னா, என் ட்ராமா! என் பாஸ்ட்! என் பயம்! அதான் நான் உன்னை திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணினேன்… அதுல உன் தப்பு எதுவுமே இல்ல அமுதினி. அது என் தப்பு… என் ப்ரோக்கன் பாஸ்ட்!” என்று மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே சொன்னான்.

அமுதினி அழுதாள். அவளுக்கு இப்போது எல்லாமே புரிந்தது. 

ஆரவ் அவள் முன் மண்டியிட்டு, “அமுதினி, சாரி மா… ரொம்ப சாரி… நான் உன்னை டிசர்வ் பண்ணல… நீ ரொம்ப பெர்பெக்ட், கைன்ட், ஜெனியூன்… ஆனால் நான்… நான் ப்ரோக்கன். நான் கட்டாயம் புரொபஷனல் ஹெல்ப் தேடப்போறேன்… தெரபி, கவுன்சிலிங்… நான் ஹீல் ஆகப்போறேன்… ஆனா, அதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்… ப்ளீஸ் அமுதினி. என்னை மன்னிச்சிடு…” என்று கையெடுத்து கும்பிட்டான்.

அமுதினி அவனைப் பார்த்தாள். அவனது கண்ணீர், அவனது பலவீனம், அவனது வலி – எல்லாம் உண்மையானவை. முதல் முறையாக, ஆரவ் அவனுள் எழுப்பியிருந்த சுவர்களை முழுவதுமாகத் இறக்கி இருந்தான்.

அவள் அவனது தலையில் கை வைத்தாள், மென்மையாக. 

“நான் கட்டாயம் மன்னிக்கிறேன் சார்… நான் புரிஞ்சுக்குறேன். உங்க பெயின்… உங்க பயம்… நான் உங்க மேல கோபமா இருந்தேன், ஆனா இப்போ எனக்கு புரியுது. நீங்க பெருசா காயப்பட்டு இருக்கீங்க… நான் உங்களுக்கு உதவி பண்றேன். நாம சேர்ந்து இந்த ஜர்னியே ஃபேஸ் பண்ணலாம்…” என்று அவனுக்கு நம்பிக்கை அளித்தாள்.

ஆரவ் அவளது கையை இறுக்கமாக பற்றி, “தேங்க் யூ… தேங்க் யூ அமுதினி…” என்றான்.

அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் நிறைய அழுதவர்கள். ஆனால் இந்த முறை, அவர்கள் தனியாக இல்லை, இருவரும் ஒன்றிணைந்து இருந்தனர். அவர்களது மனம் உடைந்து, காயமடைந்து இருந்தாலும் இருவரும் ஒன்றாக இருந்தார்கள்.

இவர்களின் காயங்களை குணப்படுத்தும் பயணம் இப்போதுதான் தொடங்கியிருந்தது. ஒரு நீண்ட, வேதனையான பயணம். ஆனால் இனிமேல், அவர்கள் தனியாக இல்லை.

விதி இறுதியாக அவர்களை சரியான இடத்திற்கு கொண்டு வந்துவிட்டது. இப்போது, சிகிச்சையை காதலுடன் ஆரம்பிக்கலாம்!

*******

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்