Loading

 

இன்று

 

சென்னை மாநகரத்தில் மழை அடித்து ஓய்ந்து போன ஈரமான சாலையில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது அந்தக் காவல் துறையின் வாகனம், அந்த வாகனத்தின் பின்னிருக்கையில் கைவிலங்கு மாட்ட பட்டு, முகத்தைத் துணியால் மறைத்தபடி அமர்ந்திருந்தான் கார்த்தி,

 அவனின் சட்டை கிழிக்கபட்டிருந்தது,அவன் கண்ணில் இன்னும் ரௌத்திரம் குறையவில்லை, சிவந்த விழிகளுடன், கை கால்கள் நடுங்க அமர்ந்திருந்தான், அவன் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக அவனின் பக்கத்தில் இரு காவலர்கள் அமர்ந்திருக்க நடுவில் கார்த்திக் உடல் எல்லாம் பயம் விரவி இருக்க, நடுக்கத்துடன் அமர்ந்திருந்தான் அவன்.

 வாகனம் காவல் நிலையம் வந்து விட, அடித்து இழுத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டான். காவல் நிலையமே பரபரப்பாகக் காணப்பட்டது,

“யோவ் எஃப்ஐஆர் பதிவு பண்ணுயா” எனக் குரல் கொடுத்தார் கஜேந்திரன் தலைமை காவலர் (chief constable)

“இருங்க சார், பெரிய சார் வரட்டும், அப்பறம் நான் வரதுக்கு முன்னாடி எதுக்காக எஃப்ஐஆர் ஃபைல் பண்ணிங்கன்னு பேசுவாரு சார்” என இன்னொரு காவலன் சொல்ல,

“அதுவும் சரி தான், இது ரேப் கேஸ்ல அதான் பாரத்தேன், சரி சரி பெரிய சார் வரட்டும் நான் போய் டீயை குடிச்சிட்டு வந்தறேன்” என அவர் கிளம்பிய வேளையில் புயலை போல் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான் அவன்,

 காவல் அதிகாரி உடையில் கம்பீரமாய் நுழைந்தவனின் தோள்பட்டையில் மூன்று நட்சத்திரங்கள் மின்ன, சிவப்பு மற்றும் நீல நிறத்தில் கோடுகள் சொல்லாமல் சொல்லியது அவன் காவல் அதிகாரி என்பதை, எதையோ சிந்தித்த படி வந்தவனைக் கண்டு அனைவரும் மரியாதை நிமித்தமாகச் சல்யூட் செய்யச் சின்னத் தலையசைப்புடன் அதை ஏற்றபடி நடந்து சென்றவன் சிறையில் முடங்கிக் கிடந்த கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் அறையை நோக்கி விரைந்தவன்,

அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அவன் தீரேந்திரன், எஸ்எச்ஓ (SHO) (STATION HOUSE OFFICER) என்று சொல்லபடும் பணியில் இருக்கும் காவலன், சுருங்க சொன்னால் காவல் நிலையத்தைத் தன் தலைமையில் வழி நடத்தும் பொறுப்பைப் பெற்றவன், தேர்வெழுதி தேர்ச்சி பெற்று எஸ்ஐயில் இருந்து பதவி உயர்வு பெற்றுப் பணியில் அமர்த்தபட்டவன். முப்பத்தி மூன்று வயது இளைஞன், காவல் நிலையத்தைத் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் அழகிய காவலன்.

தன் அறைக்குள் நுழைந்த கஜேந்திரனை பார்த்தான், யாரை நம்பினாலும் நம்பாவிட்டாலும், கஜேந்திரனின் நேர்மைக்காவே அவரை நம்புவான் தீரா, அதோடு அவர் அதே காவல் நிலையத்தில் பல வருடம் இருப்பதால், தீராவின் நம்பிக்கைக்குரியவர் அவர்.

“கஜேந்திரன் என்ன கேஸ்.?”

“சார் ரேப் கேஸ் எஃப்ஐஆர் போட்டாச்சு.” முதல் குற்ற பதிவை அவன் முன் நீட்ட, அதில் நிரப்பட்டிருந்த தகவலை ஒரு பார்வை பார்த்தான். அதில் காதலிக்க சம்மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில், அதியை பாலியல் ரீதியாய் கொடுமை செய்து, கொலை செய்ய முயற்சித்தேன், தலையில் இருமுறை பலமாய் தாக்கியதில் மயங்கி சரிந்தாள், அவள் இறந்துவிட்டதாய் நினைத்து நானே போலீஸூக்கு தகவல் தெரிவித்து குற்றத்தை ஏற்றுக்கொள்வதாய் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தான் கார்த்தி.

“ஸ்பாட்டுக்குப் போனிங்களா கஜேந்திரன்.?”

“ஆமா சார் சில ஆதாரங்கள் எடுத்துட்டு வந்திருக்கோம்” எனச் சொல்ல

“யார் தகவல் கொடுத்தது.?”

“குற்றவாளியே போன் பண்ணிட்டான் சார்” என அவர் சொல்ல,

“குற்றத்தையும் அவன் ஒத்துக்கிட்டானா?இல்லை அடிச்சு வாக்குமூலம் வாங்குனீங்களா கஜேந்திரன்.?” என தோரணையுடன் தீரன் கேட்பதிலே முதல் குற்ற பதிவை அவன் நம்பவில்லை என்பதை உறுதி செய்தது.

“அடிக்கல சார்,அவனே ஒத்துகிட்டான் சார், நாளைக்குக் கோர்ட்ல ப்ரோடியூஸ் பண்ணணும்” எனக் கஜேந்திரன் சொல்ல, எதோ தவறாய் இருப்பதை உணர்ந்தவன் எதையும் காட்டிக்கொள்ளாமல், கார்த்தி அடைக்கபட்டு வைத்திருந்த சிறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்தான் தீரேந்திரன். தீரேந்திரனை பாரத்ததும் அவன் கண்ணில் சிறு கலக்கம் எட்டி பார்க்க தான் செய்தது.

“தம்பி” என அழைத்தான் தீரேந்திரன்.

“நான் குற்றவாளி சார், ஒரு பொண்ண பாலியல் ரீதியா கொடுமை பண்ணிருக்கேன்,” எனத் தலைக் கவிழ்ந்தபடி அவன் பேச,

“இங்க பாரு தம்பி, குற்றத்தை ஒத்துகாதவங்களுக்குத் தான் போலீஸ் ட்ரீட்மென்ட், நீ தான் செய்த குற்றத்தை ஒத்துக்கிட்டியே,இதுக்கு மேல உன்ன அடிச்சு நாங்க என்ன செய்யப்போறோம், சாப்பிடுறியா.?பயப்படாதே, நீ சீனிமால பாக்குற போலீஸ் மாதிரி இல்லை நாங்க, நாங்களும் மனுசங்க தான், உனக்கு என்ன வேணும் சொல்லு” என மீண்டும் தீரேந்திரன் கேட்க.

“எனக்குச் சாப்படலாம் வேண்டாம், என்னை உடனே தூக்குல போடுங்க, நண்பன்னு நம்பி பழகின பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துகிட்டேன், என் புத்தி மழுங்கி போயிருச்சு, எனக்குள்ள இருந்த மிருகம் வெளிய வந்திருச்சு, என்னை உடனே தூக்குல போடுங்க, நானே என்னோட அதிய..! அய்யோ.!” என வெறியுடன் கத்தியவன் மயங்கி சரிந்தான், இதற்கு மேல் அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவில் சிறை கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான் தீரேந்திரன்.

“கஜேந்திரன் அவன் மயங்கிட்டான்,அவனை என்னன்னு பார்க்க சொல்லுங்க,விக்ட்டிம் எங்க இருக்காங்க கஜேந்திரன்.?”

“சார் ஜிஎச்ல” எனப் பதிலை உதிர்க்க, உடனே புறப்பட்டான் தீரேந்திரன். கஜேந்திரன் கார்த்திக்கை பார்க்க சென்றார்.

மருத்துவமனையில் ஐசியூ முன் நின்றபடி வசந்தி கதறி அழுதுக்கொண்டிருக்க, அவருடைய கணவர், கோபாலன் அங்கே போடபட்டிருந்த நாற்காலியில் ,மீளா துயரில் ஆழ்ந்து போயிருந்தார், ஒரே பெண் என்று பாசமும் அக்கறையுடன் வளர்க்கபட்டவள், உடல் முழுவதும் காயங்களும் கீரல்களுடனும், தன்னிலை மறந்து இமை மூடி கிடக்கும் அகரநதி எப்போது விழி மலர்வாள், என்ற ஏக்கம், இப்படி நடந்த பின் அவளை எவ்வாறு தேற்ற போகிறோம் என்ற பயம் ஒரு புறம் இருக்க,

“மிஸ்டர்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். காவல் சீருடையைப் பார்த்ததும் எங்கிருந்து வந்ததோ கோபம், எதிரே நின்றிருந்த தீரேந்திரனை முறைத்து பார்த்தார்.

“என்ன சார், இன்னும் உங்க விசாரணை முடியலையா.? அதான் குற்றவாளியே குற்றத்தை ஒத்துக்கிட்டானே, அப்பறம் எதுக்காக இங்க வந்திருக்கீங்க, என் பொண்ணோட மானம் போனது போதாதா சார், அவ உயிரும் போகணுமா” எனக் கோபத்தில் சாடினார் கோபாலன்.

“மிஸ்டர் கோபலன், உங்க பொண்ணோட ஹெல்த் கண்டீஷனை விசாரிச்சிட்டு, கண் முழிச்சிருந்தா அவங்களையும் விசாரிச்சிட்டு போகலாம்ன்னு வந்தோம்” எனத் தீரேந்திரன் அழுத்தமாய்ப் பேச,

“சார் அவ பிழைப்பாளான்னு கூடத் தெரியலை சார், ப்ளீஸ் எங்களைத் தொந்தரவு செய்யாதீங்க” எனக் கண்ணீருடன் வசந்தி அழ ஆரம்பிக்க, அதே சமயம் அங்கே மருத்துவரும் வந்து சேர்ந்தார்.

“சாரி டூ சே திஸ், உங்க பொண்ணுக்கு தலையில பலமா அடி பட்டிருக்கதால கோமா ஸ்டேஜ்வு போயிட்டாங்க, அவங்க அந்த அதிர்ச்சியில இருந்து மீள முடியமா இருக்காங்க, எப்போ சுய நினைவு திரும்பும்னு சொல்ல முடியாது” என மருத்துவர் சொல்ல, அனைவருக்கும் பக்கென ஆனது.

“என்ன டாக்டர் சொல்லுறீங்க.? என் பொண்ணு என்கிட்ட பேசமாட்டாளா.?” ஓ.. எனக் கதறி அழுதார் வசந்தி, கதறி அழுதவரை தாங்கி பிடித்தார் கோபாலன்.

“பசங்கல நம்பாதன்னு சொன்னா, கேட்டாளா உன் பொண்ணு, இப்ப பாரு எந்த நிலைமைல கொண்டு வந்து நிறுத்திருகான்னு படுபாவி பய” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் கோபாலன்.

“அம்மா அம்மா ன்னு இனிக்க இனிக்கக் கூப்பிட்டுட்டு, என் பொண்ண நாசம் பண்ணிட்டானே” தன் மன ஆதங்கத்தை வெளிபடுத்தினார் வசந்தியும், அனைத்தையும் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான் தீரேந்திரன்.

அகரநதி சம்பந்தபட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்பிய வேளை அவன் எதிரே கைகளைப் பிசைந்த படி நின்றார் கோபாலன்.

“சார்.! அந்தப் பொறுக்கி பயலுக்குத் தகுந்த தண்டனையை வாங்கிக் கொடுத்திருவீங்களா.?” கேள்வியாய் அவன் முகம் பார்த்தார்.

“ஒரு பொண்ணோட அப்பாவா உங்க மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியுது, குற்றவாளி தான் குற்றத்தை ஒத்துகிட்டான், இருந்தாலும்” என அவன் இடைநிறுத்த,

“என்ன சார் அவனுக்குத் தண்டனை கிடைக்காதா.?” இவ்ளோ தான சார் உங்க சட்டம்” என வருத்ததுடன் செல்லிவிட்டு தீரேந்திரன் சொல்ல வந்ததைப் புரிந்துக்கொள்ளாமல் சென்றார் கோபாலன், அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசவும் அவன் விரும்பவில்லை.

நாட்களும் கடந்தது, குற்றத்தை அவனே ஒப்புக்கொண்டதால் கார்த்திக்குக்குப் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு, தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கபட்டிருந்தான். என்ன தான் அவனுக்குத் தண்டனை கிடைத்தாலும் எதோ ஒன்று நெருடலாகவே இருந்தது தீரேந்திரனுக்கு. அடுத்த கட்ட விசாரணைக்கு நகர விடாமல் யாரோ தடுப்பதை போல் அவன் உணர்ந்தான்

அப்படித் தான் அன்றும் அவன் அறையில் படுத்துக்கொண்டிருந்தான், ஜன்னல் வழியே தென்றலாய் வீசிய காற்றுத் திடீரெனப் புயலாய் மாறி வீச, என்னைப் பார் என்று அகரநதி சம்பந்தபட்ட கோப்புகள் அவன் முன் வந்து விழுந்தது. அதில் அகரநதியின் புகைப்படம் இருக்க, எத்தனை முறை பார்த்தாலும், அவளை எங்கோ பார்த்த நினைவை தர, எங்குப் பார்த்தோம், நமக்குத் தெரிந்த பெண்ணா.? என்ற குழப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தவனின் கைகளில் இருந்த புகைபடத்தைப் பட்டெனப் பிடிங்கினார் வினோதா, தீரேந்திரனின் தாய். தாயின் செயலால் பட்டென எழுந்து அமர்ந்தான்.

“அடேய் போலீஸ்காரா, அம்மாக்கிட்ட சொல்லாம பொண்ணே பார்த்துட்டியா.? ம்ம் நல்லா லட்சணமா தான் இருக்கா என் மருமக” என மீண்டும் அகரநதியின் புகைபடத்தைப் பார்த்தபடி,

“பொண்ணு பேரு என்னடா படவா?” என மகனின் காதை திருகினார் வினோதா.

“ம்மா!! இது ஒரு கேஸ்மா, ஏன்மா உயிரை வாங்குற, நான் போலீஸ்மா இப்படிக் காதெல்லாம் பிடிச்சு திருகாதமா” எனத் தனக்கு வலிப்பது போல் பாவனைச் செய்தான் தீரேந்திரன்.

“எல்லாம் சரிடா, என்ன இந்தப் பொண்ணு என்ன விட அழகுல கொஞ்சம் கம்மியா இருக்கு” என அலட்டிக்கொண்டார் வினோதா.

“எப்புடி எப்புடி, நீ இந்தப் பொண்ண விட அழகா இருக்கியாமா.? இங்க பாரு நான் போலீஸ்காரன் பொய்யெல்லாம் சொல்லக்கூடாது மா, நல்லா பார்த்து சொல்லு அந்தப் பொண்ணு அழகா இல்லையா.?” என அகரநதியின் புகைபடத்தைக் காட்டி கேட்க,

“அப்படி அழகா இருந்தா அவளையே கட்டிக்கோடா, அது இந்த அம்மாக்குச் சந்தோசம் தான், இவ தான் உன் மருமகமான்னு சொல்லிட மாட்டியான்னு மனசு ஏங்குதுடா, சீக்கிரம் கல்யாண பண்ணிக்கோடா ராஸ்கல்” எனத் தலையில் குட்டி விட்டுக் கையில் வைத்திருந்த குங்குமத்தை தன் மகனின் நெற்றியில் பூசி அவர் சென்று விட, தலைக் குணிந்து அகரநதியின் புகைபடத்தை அவன் பார்க்க, மன்னவனின் நெற்றியில் இருந்த குங்குமம், புகைப்படமாய் இருந்த மங்கையவளின் நெற்றி வகிட்டில் சேர, அதிசயித்து இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தீரேந்திரன்.

யாரும் காணாத ரகசிய கோலம்…!

நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்…!

தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்…!

தொலைவில் நீ இருந்தாய்…!

தீராநதி தீராநதி…!

தேடல்களோ தீராதினி…!

இறங்கியே வருகுது என் வாசல் வழி…!

நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ பயங்கரம் … என்ன டுவிஸ்ட் இருக்குமோ … ரொம்ப இன்ட்ரெஸ்ட் டா போகுது 👏🏻

  2. நண்பன் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில்.
    தோழியோ வன்கொடுமை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில்.
    அப்படி என்ன நடந்து இருக்கும்?
    அகரநதி தீரேந்திரன் நல்ல பெயர்பொருத்தம்.
    அம்மா மகனது நெற்றியில் வைத்து விட்டு போன குங்குமம் மருமகளது புகைப்படத்தில் நெற்றி வகிட்டினில் சிதறியது அருமை.
    தீராநதியை காண ஆர்வமாக உள்ளது.