Loading

அத்தியாயம் 19

 

அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்த ரஞ்சனிக்கு, வாயிலில் இருந்தவளைக் கண்டதும் மயக்கம் வராதது ஒன்றுதான் குறை.

அசையாது சிலை போல் நின்றிருந்த தோழியின் தோளில் தட்டிய மௌனிகா, “ஏய் படி, என்ன ஆச்சு?”

“என்னப்பா, இப்படி வந்து நிக்கிற?”

“ஏன், எப்பவும் போல தான வந்திருக்கேன்?”

“படி, நேத்து தான் உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகி இருக்கு.’

“சோ வாட்..?” என, கண்களால் அவள் வழியை மறைத்து நிற்பதைக் காட்டிட, வாயிலில் இருந்து சற்றே நகர்ந்தாள் ரஞ்சனி.

“என்ன படி, சோ வாட்னு கூலா கேட்கிற? ஆச்சி எப்படி உன்னை விட்டாங்க?”

“இப்ப போனாதான் கல்யாணத்துக்கு வர முடியும்னு சொன்னேன், விட்டுட்டாங்க.”

“பாவம் படி ஆச்சி.”

மௌனி சிரிக்க, ‘சரி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியுமா நீ எங்கேஜ்மெண்ட் அன்னைக்கே கிளம்பி வந்தது.?”

“அவரு தான், நேத்து என்னை இரயில்வே ஸ்டேஷன்ல செண்ட்ஆஃப் பண்ணாரு!”

“பாருடா.. ஆள் எப்படி?”

“ஓகே தான்.”

“ஓகே தானா.? நைஸ்.. பெஸ்ட்.. இந்த மாதிரி எதுவும் இல்லையா?”

மௌனிகா சின்னதாய் சிரிக்க, “படி, ஆர் யூ ஸுயர்?”

“நீ ஏற்கனவே இதைக் கேட்டு, நான் பதில் சொல்லிட்டேனே? திரும்பவும் என்ன?”

“இல்ல, எனக்கு என்னமோ ஏதோ ஒன்னு ஆஃப்பா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது. உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிடுச்சு. பட், அந்த எக்சைட்மெண்ட் எதுவும் உன்கிட்ட இல்லையே?”

“அன்எக்ஸ்பட்டடா நடந்த விஷயம். நான் அதை அக்செப்ட் பண்ணவும், நியூ ரிலேஷன்ஸிப் கூட ஆப்ட் ஆகவும் டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.” எனும்பொழுதே அவளது கைப்பேசி ஒலித்தது.

கையில் எடுக்க, எட்டிப் பார்த்தாள் ரஞ்சனி.

“யாரு..?” என சைகையால் கேட்டிட, விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டினாள்.

“ஸ்பீக்கர்ல போடு!”

“ரஞ்சு, திஸ் இஸ் நாட் ரைட்!” என்று மௌனி கண்டிக்கும் விதமாய் உரைத்திட, “என் ஃப்ரெண்டோட ஃபியூச்சர் பார்ட்னர் எப்படினு நான் தெரிஞ்சிக்க வேணாமா? நார்மலா, இந்த வரன் அமைஞ்சிருந்தா கூட, கவலைப்பட்டு இருக்க மாட்டேன். பட், உன்னோட சித்தப்பா பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ள, இப்ப உன்னோட வுட்பி! முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்லுவாங்க. இங்க ஸ்டார்ட்டிங்கே கோணலா தான் ஆரம்பிச்சு இருக்கு. அடுத்த எதுவும் அதுமாதிரி நடந்துட கூடாதுனு நினைக்கிறேன். நான் சொல்ல வர்றது புரியிதா?”

தன் மேல் இத்தனை தூரம் அக்கறை கொண்டிருக்கும் தோழியின் சொல்லைத் தட்ட இயலாது, அரை மனதாய் தலை அசைத்தாள் பாவை.

அதற்குள் அழைப்பு நின்று போயிருந்தது.

“கட் ஆகிடுச்சே?” எனப் புன்னகைத்திட, “சந்தோஷமோ? கட்டானா என்ன? நீ கால் பண்ணு!”

மௌனி வேண்டுமென்றே அழைப்பு விடுப்பதைத் தவிர்த்து, “வேணாம். விடு!” என்றிட, மீண்டும் கைப்பேசி ஒலித்தது. சரண் தான் இரண்டாம் முறையாய் அழைப்பு விடுத்திருந்தான்.

“இப்ப கால் வந்திடுச்சு. அட்டன் பண்ணு.”

“விட மாட்ட போலயே?”

“எஸ்.. நான் விடுறதா இல்ல. எனக்காவது நல்லது கெட்டதைப் பார்க்கிறதுக்குக் குடும்பம்னு ஒன்னு இருக்கு. உனக்கு ஆச்சியைத் தவிர யாரு இருக்கா? கல்யாணம் செஞ்சிக்க போற ஆளு ஓரளவுக்காவது நல்லவனா இருக்கணும்ல?” என்ற ரஞ்சனி தானே அழைப்பை இணைத்து, ஒலிப்பெருக்கிக்கு மாற்றினாள்.

“ஹலோ.. மோனி.”

“யா சரண். சொல்லுங்க.”

“ஊருக்குப் போயாச்சா?”

“ம்ம்.. அப்பார்ட்மெண்டுக்கு வந்துட்டேன்.”

“ஓகே தான நீ?”

“ஐம் ஆல்ரைட் நேத்து கிளம்பும் போதும் கேட்டீங்க? என்ன விஷயம்?”

“யாரும் இல்லாம, நம்மளை நாமளே பார்த்துக்கிறதுக்கு ரொம்பவே வில்பவர் வேணும். அப்பா சடனா இறந்து போனப்ப, நான் அதை ஃபேஸ் பண்ணி இருக்கேன். இங்க எல்லாரையும் விட்டுட்டு, நேத்து நீ மட்டும் தனியா  போனப்ப, ஐ ஜெஸ்ட் ஃபீல் தட்!”

“ஐம் நாட் எ வீக் பர்சன் சரண்.”

“தெரியும்! இருந்தாலும் கூட ஒரு ஆள் சப்போர்ட் பண்ணா, பெட்டரா ஃபீல் ஆகும்ல?”

அவள் புன்னகைக்க, “ஏன் ஃபர்ஸ்ட் கால் பண்ணப்ம அட்டன் பண்ணல?”

“அப்பதான் வீட்டுக்குள்ள வந்தேன். சோ..”

“ம்ம்.. இனி ஊருக்கு வர்றதா இருந்தா என்கிட்ட முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணீடு. அதேபோல இங்க இருந்து கிளம்பும் போதும் சொல்லு.”

“ஏன்?”

“பிக்கப் பண்ண வர்றேன். நேத்து மாதிரி செண்ட்ஆஃப் பண்ணுறேன்.”

“ரைஸ்மில்லைத் தவிர்த்து, டிரைவர் வேலை வேற பார்க்குறீங்களா என்ன?”

“இதுக்குப் பேருதான் தானத்துக்கு வந்த மாட்டை பல்லைப் பிடிச்சுப் பார்க்கிறதுங்கிறது. நான் என்னோட அம்மாக்கும் தங்கச்சிக்கும் என்ன செய்வேனோ, அதையே தான் உனக்கும் செய்ய நினைக்கிறேன். ஆனா.. நீ.. மோனி, ஐ டிட்நாட் எக்ஸ்பெட் திஸ் ஃப்ரெம் யூ!”

“ஐ ஹேவ் நெவர் ஹேடு எனி எக்ஸ்பீரியன்ஸ் லைக் திஸ் பிஃபோர், சரண். அதுனால தான் ஜெஸ்ட் நார்மலா அப்படிக் கேட்டேனே தவிர, உங்களைக் கிரிட்டிஸைஷை ஜோக்கோ பண்ணுற எண்ணம் இல்ல எனக்கு.”

“ம்ம்.. நேத்தும் இதுபோல பேசுன தான?”

“தப்பா எதுவும் சொல்லல நான். லைஃப் பார்ட்னராவே இருந்தாலும் துணையைப் பத்தின  விஷயங்களை, இன்னொருத்தர் முடிவு எடுக்கிறது சரியில்ல.”

“நான் அப்படி யோசிக்கல. உன்னை எப்படி அவங்க இக்னோர் பண்ணலாம்னு, சட்டுனு கோபம் வந்துடுச்சு. நானும் என்னோட வீட்டு ஆளுங்களும் இருக்கோம் பார்த்துக்கனு நேரடியா வந்து சொல்லி சண்டை போட்டா, அது சில்லியா இருக்கும். அதான் செயல்ல காட்ட நினைச்சேன்.”

“புரியிது. நானும் ஏன் எதுக்குனு யோசிக்காம பட்டுனு பேசிட்டேன்.”

“அது பிரச்சனை இல்ல. புதுசா உருவாகுற ரிலேஷன்ஸிப்ல ஆர்கியூமெண்டும், மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கும், அப்பப்ப சண்டை வர்றதும் இயல்பு தான். ஆனா ஒரு விசயம். அதை உடனுக்குடனே பேசித் தீர்த்துக்கணும், என்ன ஓகேவா?”

“ம்ம்..”

“ஒரு ஜென்டில்மென் அண்ட் ஜென்டில்வுமன் அக்ரிமெண்ட் போட்டுக்குவோமா, நாம?”

சட்டென்று சிரித்தவள், “என்ன அது?”

“நமக்கு இடையில என்ன பிரச்சனை வந்தாலும் சரி, அதை ஒரு நாளைக்கு உள்ளேயே பேசி சமாதானம் ஆகிடணும். மறுநாள் அது தொடரக் கூடாது.”

“ஐ அக்ரீட்.”

“ஓகே, ஆஃபிஸ் போகணும் தான நீ?”

“ம்ம்.. கிளம்பப் போறேன்.”

“எந்த டைம்ல நீ ஃப்ரீயா இருப்ப மோனி?”

“ஏன் சரண்?”

“எதுவும் பேசணும்னா, அந்த டைம்ல கால் பண்ணுவேன்.’

“அப்படி எந்த டைமிங்கும் இல்ல. யூ கேன் கால் மீ எனி டைம். ஐ வில் டெஃபனட்லி ஆன்சர் யூ. ஒருவேளை பதில் சொல்லலேனா, முக்கியமான வேலையில இருப்பேன். ஃப்ரீ ஆனதுக்கு அப்புறம் ஸுயரா கால் பண்ணுவேன். ஓகே, நீங்க எப்ப ஃப்ரீ.?”

“நீ சொன்ன அதே பதில் தான்!”

“ம்ம்.. அப்புறம் தேங்க்ஸ் சரண்.”

“எதுக்கு?”

“நேத்து எங்கேஜ்மெண்ட்ல அந்த சுச்சுவேஷனை, உங்க ஃப்ரெண்டை வச்சு அழகா ஹேண்டில் பண்ணீட்டீங்க?”

“அது என்னோட பொறுப்பு மோனி, நான்தான் செஞ்சாகணும்.”

“அப்படினா, எனக்கும் அதுல பங்குண்டு தான? நான் எதுவும் செய்யலயே? சும்மா பார்த்துட்டு தான இருந்தேன்?'”

“ஹேய்! இதைப் பத்தி எல்லாம் நீ யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. முதல் விஷயம்.. மேரேஜ் அப்படிங்கிற எமோஷனுக்கு நான் ஏற்கனவே ரெடி ஆகிட்டேன். ஆனா, நீ இப்பதான் அதை அக்செப் பண்ண முயற்சி செய்யிற. சோ,  உடனே ரியாக்ட் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம். டைம் எடுக்கும்.

செகெண்ட், உன்னை கல்யாணம் செஞ்சுக்கிற முடிவை எடுத்தது நான். அதுனால, எது நடந்தாலும் சரி என்னோட லைஃப் பார்ட்டனர் அஃபெக்ட் ஆகாம டிஃபண்ட் பண்ண வேண்டியது என் கடமை. அதைத்தான் நேத்து செஞ்சேன்.”

“நானும் மேரேஜுக்கு ஓகே சொன்னது, என்னோட வோன் இண்டென்ஸன்ல தான். அப்ப எனக்குமே அந்த பொறுப்பு உண்டு. சீக்கிரமே, நானும் இந்த நியூ ரோலுக்கு ஏத்தமாதிரி என்னைச் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.”

மறுபுறம் சிரித்த ஆடவன், “ஐ திங்க், ஐ மேட் தி ரைட் டெஸிஷன் அபௌட் மை லைஃப் பார்ட்னர்.”

“ஐ திங்க் சோ டூ..” என அவனின் சொற்களிற்கு மறுமொழி தந்திட, “ஏன் என்னை நேத்து ஃபோட்டோ எடுத்த மோனி?”

“ஃப்ரெண்ட் கேட்டா, நான் யாரை மேரேஜ் பண்ணக்கப் போறேன்னு பார்க்கணுமாம். நேத்து ஃபங்ஷனுக்காக ரெடி ஆகி இருந்தீங்க. யூ லுக் பெட்டர். சோ..”

“நீயும். பியூட்டிஷியன் வேணாம்னு எடுத்த முடிவு சரினு தோணுச்சு. யூ லுக்டு கிரேட், வித் யுவர் ஒன் வே!”

“ஓகே.. டேக்கேர் சரண்!” என அவள் பேச்சை முடித்திட, “ம்ம்.. பாய் மோனி!” என்று இணைப்பைத் துண்டித்தான் அவன்.

இரண்டு கைகளாலும் இருபக்க கன்னங்களைத் தாங்கிய படி, இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

தோழியைக் கவனித்த மௌனி, “ரஞ்சு?” என அவளின் தோளைத் தொட, தூக்கத்தில் இருந்து விழித்தது போல் நோக்கினாள்.

“ஹான்.. என்ன படி.?”

“என்ன, அவர் பேசுனதைக் கேட்டது போதுமா?”

“ஹேய்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் முன்னாடியே தெரியுமா?”

“நோ, ஊருக்குப் போன அன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைமா பார்த்தேன்.”

“அப்புறம் எப்படி இவ்வளவு ஈஸியா பேசுறீங்க? அதுவும் ரெண்டு நாள் கேப்ல?”

“சிலர்கிட்ட அது தானாவே வந்துடும். சரண்கிட்ட அப்படித்தான் எனக்குக் கிளிக் ஆச்சுனு நினைக்கிறேன். அவரும் என்னை மாதிரிதான், ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட் பர்சன். அதுனால, எங்களுக்கு இடையில சுகர் கோட்டிங் வேர்ட்ஸுக்கோ, ஒருத்தருக்கு ஒருத்தர் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய அவசியமோ இல்லாம நேச்சுரலாவே பேச்சு டெவலப் ஆகிடுச்சு.”

“ம்ம்.. பேசுனதை வச்சு கவனிச்ச வரைக்கும் என் மௌனிக்கு ஏத்த ஆளுதான். கேரெக்டருக்கு எய்ட்டி பர்சண்ட் மார்க் கொடுக்கலாம்.”

மௌனி சிரித்து, “டிவண்டி கட் ஆனதுக்கு என்ன காரணம்?”

“ஆளைப் பார்க்கலயே நான். எங்க ஃபோட்டோ?”

கைப்பேசியில் முதல்நாள் இரவில் இரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படத்தைக் காட்டினாள்.

“ம்ம்.. ஸ்மார்ட்டா தான் இருக்காரு ஆளு. ஹேய் எங்கேஜ்மெண்ட் ஃபோட்டோஸை எனக்கு அனுப்புறேன்னு சொல்லி இருந்த தான?”

“நேத்து அதுக்கு எல்லாம் டைம் கிடைக்கல படி.” என உரைக்கும் பொழுதே, முதல்நாள் விழாவில் எடுத்த புகைப்படங்கள் வரிசையாய் அவளது புலனத்திற்கு வந்து சேர்ந்தன.

“அண்ணா, அனுப்ப சொன்னாரு அண்ணி. இது நான் எடுத்தது. ஃபோட்டோகிராஃபர், எல்லா போட்டோஸையும் பென்டிரைவ்ல போட்டுத் தர்றேன்னு சொல்லி இருக்காரு. அது வந்ததும், மெயில் பண்ணுறேன்!” என சில நொடிகளின் இடைவெளியில் குறுஞ்செய்தி அனுப்பினான் விமல்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்