
அத்தியாயம் 19
தெருவில் நடக்கும்போது, “எல்லோருமே நம்மளயே பாக்குற மாதிரி இருக்குல்ல” அமலா கேட்க.
“ஆமா எனக்குக்கூட அப்டித்தான் இருக்கு” என ஒத்து ஊதினர் மற்ற மூவரும்.
“வேகமா நடக்கவும் பயமாயிருக்கு, லேட்டா வேற ஆகுது” லட்சு சொல்ல.
“அதெல்லா லேட்டா போயிக்கலாம், இன்னைக்கு எதுவும் கண்டுக்க மாட்டாங்க” என்றாள் நிலா.
“கொன்றுவேன் ரெப் டி நானு. எவள காணும்னாலு என்ன தான் தேடுவாங்க, இதுல என்னயவே காணும்னா தொலச்சு தல முழிகிடுவாரு ஹெச்.ஓ.டி. சீக்கிரம் போணும், பேசாம காலேஜ் திரும்பிருவோமா?” லட்சு பம்ம.
“அதெல்லா பாத்துக்கலாம் வா, எங்க இருந்தன்னு கேட்டா, நீங்க எங்க தேடுனீங்கன்னு கேளு, கிளாஸ்லன்னு சொன்னா, ஆடிட்டோரியத்துல இருந்தேன்னு சொல்லு, அவரு ஆடிட்டோரியம்னு சொன்னா லேப்ல சர்க்யூட் செக் பண்ணேன்னு சொல்லு இப்டி எதயாது மாத்தி சொல்லேன்டி. பதில் சொல்ல தெரியாதவ மாதிரி பயப்படுற” என ஆறு திட்டிக் கொண்டே வர ஸ்டூடியோ வந்திருந்தது.
பின் 20 நிமிஷம் டிசைன் டிசைனாக போஸ் கொடுத்துவிட்டு, “ஈவினிங் வந்து வாங்கிக்றோம் சார்” என்று விட்டு காலேஜ் நோக்கி ஓடாத குறையாக சேலையைப் பிடித்துக் கொண்டு ஓடினர்.
இவர்கள் காலேஜிற்குள் நுழைய, செக்யூரிட்டி “யார்? என்ன?” என விசாரிக்க, பின்பே தெரிந்தது, ஐ.டி கார்டு போட்டு வரவில்லை, பேக்கிற்குள் வைத்து பேக்கை பார்லரில் வைத்து விட்டு கிளம்பி வந்தது “அச்சோ” என தலையிலடித்துக்கொண்டு.
“ஒருத்திக்குமா நியாபகத்துக்கு வரல” என்றாள் லட்சு.
“காலேஜ் காலேஜ்ன்னு துடிச்ச உனக்கே ஞாபகம் இல்ல” என்றாள் அமலா.
“இப்ப போயிட்டு வேற வந்தா லேட்டாகுமே. என்னடி காலையிலேயே நம்ம டைம் இப்டி இருக்கு” என நிலா புலம்ப.
“போகாம முடியாதுடி, செக்யூரிட்டி கண்டிப்பா விட மாட்டாரு, அதுவும் போக ௭ன் பேக்ல ரெண்டு பேர் செமினார் அப்ளிகேஷன் இருக்கு. கிட்ட தான போயிட்டு வந்துடலாம், நின்னுட்டிருந்தா லேட் ஆகும்” என முடிப்பதற்குள் செக்யூரிட்டி “என்னம்மா ஆச்சு” என்க.
அவரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, மறுபடியும் பார்லர் நோக்கி ஓடி பேக்கை எடுத்துக் கொண்டு திரும்பினர். 10 மணியாகி விட்டிருந்தது காலேஜிற்குள் நுழையும்போது.
“போச்சு இன்னைக்கு மாட்டிக்கிட்டு முழிக்கத் தான் போறோம்” என புலம்பியவாறே கிளாசை நோக்கி செல்ல, அங்கு யாருமில்லை கிளாஸே காலியாக இருந்தது.
நால்வருக்கும் இன்னும் படபடப்பு அதிகரித்திருந்தது. “அப்ப எல்லோரும் ஆடிட்டோரியம் போய்ட்டாங்கன்னு நினைக்குறேன். கெஸ்ட் வந்திருப்பாரோ?” என லட்சு கேட்க.
“ஃபஸ்ட் டைம் சேல கட்டுனா முன்ன பின்ன ஆகத்தான் செய்யும்னு அந்த கெஸ்ட்டுக்கே தெரியும், வா போவோம். அமைதியா போய் உக்காந்துப்போம்” என ஆறு முன்னால் ஸ்டெப்ஸ் இறங்கி விட, பின் தொடர்ந்தனர் மூவரும்.
ஆடிடோரியம் நுழைய அப்பொழுது தான் சீனியர் ஒரு பெண் வெல்கம் ஸ்பீச் பேசிக்கொண்டிருந்தது. இவர்கள் நால்வரும் அமைதியாக நுழைய மொத்த ஹாலும் இவர்களைத் தான் பார்த்தது. மெதுவாக லட்சு மட்டும் ஹெச்.ஓ.டி யை நிமிர்ந்து பார்த்தாள். அவர் காளி அவதாரம் எடுத்திருக்க, படக்கென குனிந்து கொண்டாள். கொஞ்சம் தள்ளி உள்ளேயே ஒரு ரோ சேர் பிரீயாக இருக்க, அதில் சென்று அமர்ந்து கொண்டனர்.
“ச்ச ஆசையா ப்ரெசிடெண்ட்ட காட்டணும்னு தான் பார்லர் போய் கட்டவே ஒத்துக்கிட்டேன், இன்னும் அவுங்க பாக்கல” ஆறு சோக கீதம் பாட.
காண்டாக முறைத்த லட்சு “என் வாய கிளாறாதடி, அங்க ஹெட்ச்.ஓ.டி. கொல வெறில இருக்காரு என்ன சொல்லுவாரோன்னு நா பயந்துட்டுருக்கேன், உனக்கு உன் கவல பெருசா தெரியுதோ” என லட்சு எகிற.
“உனக்கு உன் பிரச்சனை, எனக்கு என் பிரச்சனை போடி” என்றாள் பதிலுக்கு ஆறு, இருவரும் முறைத்துக்கொண்டு திரும்பிவிட.
அடுத்த டூ ஹார்ஸ் பேப்பர் பிரசெண்டேஷனில் சென்றது. அது முடியவும் அடுத்தடுத்த செஷனுக்கு வெளி காலேஜ் ஸ்டூடண்ட்ஸை பிரித்தனுப்பினர். இடையில் கிடைத்த ஸ்னாக்ஸ் டைமில் ப்ரகலத்தனை பார்த்து விடலாம் என இவள் நினைத்திருக்க, அது முடியாமலே போய்விட்டது.
ஸ்டூடண்ட்ஸ் பிரித்து இன்ச்சார்ஜ் எடுத்துக் கொண்டு, முதலில் ஒன் செட் குய்ஸ், ஒன் செட் சர்க்யூட் கனெக்சன் டெஸ்ட், மற்றொரு ஒன் செட் மினி பிராஜக்ட் சப்மிஷன், ஒன் செட் கம்ப்யூட்டர் புரோகிராம் டெஸ்ட் எனப் பிரித்து விடப்பட்டனர். பின் அடுத்த ஒன் ஹவரில் முன்னால் குய்ஸ் அனுப்பப்பட்ட செட் இப்போது சர்க்யூட் டெஸ்ட் அப்படி மாற்றி மாற்றி அனுப்பப்பட்டனர். இடையில் லஞ்ச் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அந்நேரமும் அவனிடம் காட்ட ஓடினாள். ஆனால் ரெகுலர் லஞ்ச் ஹவர் முடிந்திருந்ததால் அவர்கள் டிபார்ட்மென்ட்டில் கிளாஸ் ஸ்டார்ட்டாகி இருந்தது.
“ச்ச என்னால தான் வர முடியலனா இவங்களாது வந்தா என்ன? சரியான இடியட் பிரசிடெண்ட்” என முனகலுடன் கார்டரில் நின்று சோகமான முகத்துடன் திரும்பிச் செல்ல கீழே இறங்கினாள்.
இவள் நாலு ஸ்டெப் இறங்கி அடுத்த கட்டிங்கில் திரும்புகையில், பின் யாரோ திடுதிடுவென இறங்கி வருவது போல் இருந்ததால், திரும்பி யாரென பார்க்கப் போக, அதற்குள் அந்த உருவம் அவள் கன்னத்தில் மின்னல் வேகத்தில் முத்தமிட்டு திரும்பி இரண்டு படி ஏறி இருந்தது, இவள் என்ன நடந்தது என்ற குழப்பத்தில் சென்ற உருவத்தின் கையை வேகமாக பிடித்திழுக்க.
“எழில் லேப்ல இருந்து ஓடி வந்துருக்கேன், ஸ்டாஃப் என் ப்லேஸ்ல நா இல்லன்னு பாக்குறதுக்குள்ள போணும்” ௭ன திரும்பாமலே சொன்னான் ப்ரகலத்தன்.
“ப்ரஸிடெண்ட்” இவள் வாயை ஆ ௭ன திறக்க.
“வெரி சாரி எழில், நீ வேற இன்னைக்கு செமயா இருக்கியா, தப்பு தப்பா தோணுது. இப்ப கிஸ் பண்ணுனதே ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு” என படபடவென குனிந்தவாறே சொன்னான்.
மேலே இரண்டு படி அவனுக்கு ஈக்குவளாக ஏறி வந்தவள், அவன் சாரியை கிடப்பில் போட்டுவிட்டு, “உங்ககிட்ட காட்ட தான் வந்தேன். எப்டி இருக்கேன்?” என்றாள் புருவம் உயர்த்தி.
அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்ணை நேராக பார்த்தவன், “தாறுமாறா இருக்க எழில்”.
“தேங்க்ஸ் இப்ப போங்க, இவ்னிங் வெயிட் பண்ணுங்க”.
“சரிமா” என கிளம்பிவிட்டான், ஆனாலும் அவன் முகம் தெளியவில்லை என்பதை குறித்துக் கொண்டு கிளம்பினாள்.
இங்கு வகுப்பில் நுழைய, லட்சு, “என்னாச்சு ஆறு, சீனியர் பாத்துட்டு என்ன சொன்னாங்க?” ௭ன்றாள் நக்கலாக, அவன் செய்தது போலவே வேகமாக கிஸ் பண்ணி காமித்தாள்.
“ஐயே என்ன ஏன்டி எச்ச பண்ற?” என்றவள் ஷாக்காகி, “கிஸ் பண்ணிட்டாங்களா?” என காத்தாக ரகசிய மொழியில் கேட்க.
“இதுக்கு பேரு கிஸ்ஸாடி, சும்மா இத பண்ணிட்டு ப்ரஸிடெண்டுக்கு ஏக கில்ட்டி பீல் வேற. ஈவினிங் பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்”.
“என்னடி இவ்வளவு அசால்ட்டா சொல்ற, உனக்கு ஷாக்கிங்காவே இல்லையா?”.
“நீ வேற, நா வேற திங்கிங்ல போனேனா சோ இத கவனிக்கல”.
“என்னமோ போ” என்ற லட்சு சாக்கில் இருந்து வெளிவர அதிக நேரம் பிடித்தது.
சிம்போசியம் பங்க்ஷன் முடிந்து எல்லோருக்கும் சர்டிபிகேட் கொடுத்து அனுப்ப ஈவினிங் ஏழு மணி ஆகியிருக்க. ஒரு வேலையும் பார்க்காவிட்டாலும் 5த் பிளோரில் இருக்கும் தனது வகுப்பிற்கும் பக்கத்து பிளாக்கில் இருக்கும் ஆடிட்டோரியத்திற்கும், டிபார்ட்மெண்ட் லேப்பிற்கும், நடுவில் இருக்கும் அவன் டிபார்ட்மெண்ட்டிற்கும் என அழைந்ததில் மொத்தமாக டயாடாகி விட்டிருந்தாள் ஆறு.
அவளை ௭திர்பார்த்து என்றும் அமரும் இடத்தில் அமராமல் கேண்டினில் அமர்ந்திருந்தான் ப்ரகலத்தன். மேக்சிமம் ஸ்டுடன்ஸ் சென்றுவிட்டிருந்தனர். சிம்போசியம் என்பதால் இவர்கள் டிபார்ட்மெண்ட் மட்டுமே இன்னும் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
ஆறு அவனைத்தேடி சுற்றிக் கொண்டிருக்க, வைரமும், தாணுவும் எப்போதும் இவர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருக்க, “தங்கச்சி நல்லதங்கையே அருமை. பெரிய பெண்ணாக தெரிகிறாய் இன்றே உனக்கு திருமணம் முடித்து விடலாம் போல இருக்கிறதே” என்க.
“அதுக்கு தான் மாப்பிளய தேடிட்டு இருக்கேன்” என்றாள் சுற்றி முற்றி தேடிக்கொண்டு.
“அவங்க நாலு பேரும் கேண்டீன்ல உட்கார்ந்துருக்காங்க. எங்கே என் மூழி அலங்காரி, அவளை நான் பார்த்தாக வேண்டுமே” என்றான் சேர்த்து.
கேண்டீனை நோக்கி நடக்க திரும்பியவள், நின்று மெதுவாக திரும்பி “எதுக்கு நீ அவளத் தேடுற?” என்றாள் நக்கலாக புருவத்தை ஏற்றி இறக்கி.
“என்ன நீ இப்டி நம்பா பார்வை பார்க்கிறாய், நான் என் மனைவியைப் பார்க்க விருப்பப்பட கூடாதா என்ன?” என்க.
தாணு விழுந்து விழுந்து சிரிக்க, “நீ ஏன்டா லூசு மாதிரி பல்ல பல்ல காட்டுற?” என தாணுவிடம் எரிந்து விழுந்தவன், அப்போதுதான் அவன் அருகில் மூழி அலங்காரியாகவே முறைத்து நின்றுகொண்டிருந்க லட்சுவை கண்டு, அசடு வழிந்தவன் சமாளித்து, “ஓமைகாட், என் மூழி அலங்காரியா இது. விண்ணுலக தேவதையாகவே தெரிகிறாளே” என அவன் அவளை சுற்றி வந்து வர்ணிக்க.
லட்சு கையை முறுக்க, “இனி நீ பாத்துபன்னு நம்புறேன் லட்சு, ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு கேண்டீன் நோக்கி நடந்து விட்டாள் ஆறு.
லட்சுவுடன் வந்த நிலாவும், அமலாவும், “கேண்டீனுக்கு எதுக்குடி இந்நேரம் அங்க எல்லாம் காலியாகிருக்கும்” என அவளை நிறுத்த.
“ப்ரஸிடெண்ட் அங்க தான் இருக்காங்களாம் நா பாத்துட்டு வரேன். நீங்க கொஞ்சம் என் அண்ணனுக்கு அதிக சேதாரம் ஆகாம பாத்துக்கோங்க” என திரும்பாமலே கூறிவிட்டுச் சென்றாள்.
ஆல்ரெடி லட்சு அவனை விரட்ட ஆரம்பித்திருக்க, “ஓடிக்கொண்டே நா உன்ன என்னதான் தேவதைன்னு சொன்னாலும், நீ என் மனைவி மூழி என்றே நிரூபிக்கிறாய்” என சொல்லிக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் அவர்களைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
இவள் சேலையில் நடக்கமாட்டாமல் நடந்து வருவதை கேன்டீன் ஜன்னல் வழியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ப்ரகலத்தன்.
இவள் உள்நுழையவும், நேராக திரும்பி அமர்ந்தவன், “வா எழில், பங்க்ஷன சிறப்பா முடிச்டீங்க போலயே” என ஆரம்பிக்க.
“ம் ஆச்சு ப்ரெசிடெண்ட்” என்றவள் மற்ற மூவரிடமும் திரும்பி.
“ஒரு கோக், 2 பிரெட் பஜ்ஜி சூடா, 2 புள் பாயில்டு எக் வாங்கிட்டு வரீங்களா சீனியர்ஸ்” என்றாள்.
“வந்ததும் ஆர்டர பாத்தியாடா?” ௭ன நாதுவிடம் மூர்த்தி சொல்ல.
“கழட்டி விடுறன்னு தெரியுது, சொல்றதவாது எங்களுக்கும் சேர்த்து சொல்லலாம்ல” என்றான் அகத்தியன்.
“காசு உங்களிது பாஸ், உங்க இஷ்டம்போல எவ்வளவு வேணும்னாலும் ஆர்டர் கொடுத்துக்கோங்க ஏன்னு 1 வார்த்த கேக்க மாட்டேன்” என்றாள் தோள்களை குலுக்கி பெருந்தன்மையாக.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Nice eagerly waiting for next episode 😊