
அன்று
கேஃப் காபி டே என்ற பெயர் பலகையைத் தாங்கி நின்ற காபி ஷாப்பினுள், காரசாரமான விவாதம் நடந்துக்கொண்டிருந்தது, கார்த்தியின் எதிரே அகரநதி அமர்ந்திருந்தாள், அவனருகே மலரும், மலரின் எதிரே நிஹாவும் அமர்ந்திருந்தாள், அவர்களின் பேச்சின் மும்மரத்தில் மேஜை மேல் வைக்கபட்டிருந்த குளம்பியை மறந்தே போயிருந்தனர், அதி அவளுக்குப் பிடித்தமான கேப்பச்சீனோ ஆர்டர் செய்திருந்தாள் அதில் சக்கரையைக் கலக்கிய படி பேசிக்கொண்டிருந்தாள், கார்த்தியோ மூளையே உறைந்து விடும் அளவிற்கு சில்லென இருக்கும் கோல்ட் காஃபியை ஆர்டர் செய்திருந்தான் அதன் குளிர் தனிய தன்னை விட்டு எட்ட வைத்திருந்தான், நிஹாவும் மலரும் லெமன் மின்ட் மோஜிட்டோ ஆர்டர் செய்திருந்தார்கள்.
“நம்மளோட பைனல் இயர் ப்ராஜெக்ட்டுக்கு நம்ம நாலு பேரும் சேர்ந்து ஷார்ட் ஃபிலிம் பண்ணி தான் ஆகணும்” எனச் சொன்ன கார்த்தியின் விழிகள் மலரை தொட்டு மீண்டது. மலரோ உணர்வுகள் துடைக்கபட்ட முகத்துடன் அமர்ந்திருந்தாள், அங்குப் பேசிக் கொண்டிருப்பதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பது
போல் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள்.
“இப்போ யாருடா இல்லைன்னு சொன்னா, ஃபர்ஸ்ட் நம்ம நாலு பேருக்கும் ஒற்றுமைனு ஒன்னு இருக்கணும் அப்போ தான், ப்ராஜெக்ட்டை ஒழுங்க முடிக்க முடியும். அதுக்குத் தான் இந்த மீட்டிங்” என அகரநதி சொல்லியபடி காஃபியை ஒரு மிடறு மிடறினாள்.
“எனக்கெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை நான் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்க பாத்துக்குறேன்” எனச் சொன்னாள் நிஹா.
“சூப்பர் டி நிஹா” அவளை ஊக்கபடுத்தினாள் அதி.
“கார்த்தி நீடா.?”
“இரு அதி” என்றவன்,
“மலர் நீங்க சொல்லுங்க, உங்களோட பார்ட்டிசிபேசன் எதுல இருக்கும்.?” தயங்கிய படி கேட்டான் கார்த்தி.
“இல்லை நான் இதுல எதுவும் பண்றதா இல்லை, நீங்களே பார்த்துகோங்க” நிராகரிக்கும் படி சொன்னவள் சோக சித்திரமாய்க் காணப்பட்டாள்.
“ஏய் மலர் நீ கேமரா நல்லா ஹண்டில் பண்ணுவியே அப்பறம் என்னடி, கேமரா வீமனா ஆகிக்கோ” எனச் சிரித்தபடி சொன்னாள் நிஹா.
“அதென்ன கேமரா வீமன்” கார்த்திக் கேட்டான் மலரை சிரிக்க வைக்கும் நோக்கத்தோடு கேட்டான், ஆனால் அவளிடம் தான் செல்லுபடியாகவில்லை.
“ஏன் கேமரவை மேன் மட்டும் தான் ஹண்டில் பண்ணணுமா வீமன் பண்ணக் கூடாதா.?” எனக் கேள்வி எழுப்பினாள் அதி.
“ஏய் மலர் வாயை திறந்து எதாவது சொல்லேன்டி” நிஹா கேட்டாள்.
“சரி விடுங்க அவ எதோ அப்செட்ல இருக்கா போல, நம்ம பார்த்து செஞ்சுப்போம், அவ நேம் மட்டும் அட் பண்ணிப்போம்” என அதி துரிதமாய் முடிவெடுத்தாள். மூவரும் சரியெனத் தலையசைக்க அடுத்தக் கட்டமாக கதையின் விவாதம் தொடங்கியது.
“என்ன கதை எடுக்கலாம்..?” மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நம்மளோட வீடியோ டியூரேசன் ஜெஸ்ட் டென் டூ பிஃப்ட்டீன் மினிட்ஸ் தான் அதுக்கு ஏத்த மாதிரி கதை இருக்கணும்”நிஹா சொன்னாள்.
“டையலக்ஸ் லைவ்லியா இருக்கணும்” கார்த்திச் சொன்னான்.
“மூவி டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கணும் சோஷியல் மேசெஜ் இருக்கணும்” அதி அழுத்திச் சொன்னாள்.
“நம்ம ஏன் ஹரெஸ்மென்ட் வச்சு டாக்குமென்ட்ரி பண்ணக் கூடாது” நிஹா கேட்டாள்.
“அது எல்லாருமே பண்ணுவாங்க, நம்ம கதை வித்தியாசமா இருக்கணும், அதோட உண்மைய எல்லாருக்கும் எடுத்து சொல்ற மாதிரி இருக்கணும்” என அதி சொன்னாள்.
“அப்படி என்னடி கதை எடுக்குறது..?” கார்த்திக் கேட்டான்.
“நம்ம இருபத்தி நாலு மணி நேரம் எடுத்துக்கலாம், ஆளுக்கொரு கதை நாளைக்கு இதே நேரம் இதே இடத்துல எல்லாரும் மறுபடியும் மீட் பண்ணுறோம், உங்களுக்குத் தெரிஞ்ச ஜானர்ல பிக்ஸ் பண்ணுங்க, ஒன் டே தான் டைம், நம்ம கதையைப் பிக்ஸ் பண்ணினா தான் ஆர்ட்டிஸ்ட்டை பிக்ஸ் பண்ண முடியும்” எனத் தெளிவாய் எடுத்து சொன்ன அதி, மலரை பார்த்து திரும்பினாள்.
“உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியலைடி மலர், த்ரீ டேஸா இப்படித் தான் இருக்க, நம்ம டிகிரி வாங்கணும்னா இதுல கான்ஸன்ட்ரெட் பண்ணி தான் ஆகணும், உன்னோட பிரச்சனையை எங்ககிட்ட ஷேர் பண்ணணும்னு தோணிச்சினா நீ தாரளாமா பண்ணலாம், எங்களால முடிஞ்ச ஹெல்ப்ப நாங்க பண்ணுறோம் டி” என அதி கேட்க மௌனித்தாள் மலர். அவளின் மௌனம் கார்த்திக்கை என்னமோ செய்தது, எப்போதும் கவுன்டர் அடித்துத் திரிபவன் இன்று அமைதியாய் இருப்பதே அதிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“ஏய் விடுடி அதி நம்மல ஃப்ரெண்டா நினைச்சா தான் சொல்லுவாளே, நீ அவக்கிட்ட எதுவும் கேட்காதேடி” என இருவரும் பேசிக்கொண்டிருந்த போதே மௌனமாய் எழுந்து காபி ஷாப்பை விட்டு வெளியே நடந்தவளின் விழிகளில் கண்ணீர் தானாய் வழிய அதைத் துடைத்தபடி அருகிலிருந்த பேருந்து நிலையத்தில் போய் நின்றாள் மலர்.
“என்னடி அவ கோவிச்சுட்டாளா.? நாலு பேரை வச்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்குறது எவ்ளோ கஸ்டம் சீரியஸ்னஸ் தெரியாமல் போறா அவ” வருத்தமாய்ச் சொன்னாள் அதி.
“எனக்கு என்னமோ பேமிலி ப்ராப்ளம்னு தோணுதுடி அதி” என நிஹா சொல்லிக்கொண்டிருந்த போதே கார்த்தியை முறைத்து பார்த்தாள் அதி. அவனோ தலைக்கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“சரிடி அதி, நான் மலர்கிட்ட போய்ப் பேசிட்டு அவ கூடவே பஸ்ல போயிறேன்டி” எனச் சொன்னாள் நிஹா.
“ம்ம் சரிடி நிஹா, அவளுக்கு என்ன ப்ராப்ளம்னு கேட்டு சொல்லுடி” என அதி சொல்லி அனுப்பினாள்.
“பாய் கார்த்தி” எனச் சொல்லி நிஹா விடைப் பெற்றுக்கொண்டாள்.
அவள் கிளம்பிய பின் கார்த்தியும் அதியும் எதிர் எதிரே அமர்ந்தபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அதியோ அவனை விழியசையாமல் முறைத்துக் கொண்டிருந்தாள். அவனைச் சுட்டெரித்துவிடுவது போல் முறைத்தாள். அவனோ இவள் எதற்கு முறைக்கிறாள் எனப் புரியாமல் பார்த்தான்.
“அதி போதும், இப்போ எதுக்கு என்னைப் பார்த்து மொறைக்குற.?”
“ஓ! சார்க்கு நான் முறைக்குறது இப்போ தான் தெரியுதா.? உண்மைய சொல்லுடா உனக்கும் மலர்க்கும் என்ன தான்டா பிரச்சனை”
“அதி நீ எதோ தப்பா புரிஞ்சிகிட்டு பேசுற”
“நான் என்ன தப்பா புரிஞ்சுகிட்டேன் அவளை லிவ்இன் எதுவும் கேட்டு தொலைஞ்சியா.?”
“அய்யோ அதி என்னை இப்படி நனைச்சிட்ல்ல.?”
“கார்த்தி நீயும் மலரும் லவ் பண்ணுறீங்கன்னு எனக்குத் தெரியும், இப்போ உண்மையைச் சொல்லுறீயா..?”
“நீ சொல்றது உண்மை தான், ஆனா இப்போ அவ இப்படி இருக்கதுக்கு நான் காரணம் இல்லைடி, லிவ் இன்லாம் நான் கேட்கலைடி” உறுதியாய்ச் சொன்னான் கார்த்தி.
“என்னடா சொல்ற, அப்போ என்ன ஏதுன்னு கேட்க வேண்டியது தானே, லவ் பண்ணிட்டா மட்டும் போதாதுடா அட்லீஸ்ட் கொஞ்சமாவது கேரீயிங்கா நடந்துக்கோயேன்டா, நான் கூட உன் மேல தான் எதோ தப்புன்னு நினைச்சுட்டேன்டா”
“அதி அவ ஒன் வீக்கா என்கிட்ட பேசவே இல்லைடி, நான் கால் பண்ணினா எடுக்க மாட்டேன்றா டி”
“சரி அவகிட்ட நான் பேசுறேன்” எனச் சொன்னவள் தன் அலைப்பேசியில் இருந்து அழைப்பு விடுத்தாள்.
“சொல்லுடி அதி” அழைப்புக்குச் செவி மடுத்த மலர் பேசினாள்.
“நிஹாவ பஸ்ல ஏத்திவிட்டு மறுபடியும் காஃபி ஷாப் வாடி மலர்” எனச் சொன்னாள் அதி.
“ஏன்டி அதி, நான் வீட்டுக்கு போகணும்”
“நீ நிஹாகிட்ட போனை கொடுடி”
“ம்ம் சரிடி”
“சொல்லு அதி, என்ன விசயம்” நிஹா கேட்டாள்.
“நிஹா மலரை தனியா காபி ஷாஃப்க்கு அனுப்பி வைடி, அவ பிரச்சனை என்னன்னு கேட்கணும்”
“அதென்னடி அவ மட்டும் வரணும் நானும் வர்றேன்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவள் மலரை இழுத்துக்கொண்டு காபி ஷாப்க்குள் நுழைந்தாள் நிஹா.
“மேடம் வாங்க உட்காருங்க” மலரை பார்த்து சொன்னாள் அதி தயங்கியபடி கார்த்தியின் அருகே அமர்ந்தாள் மலர்.
“மலர் நான் நேரா விசயத்துக்கு வந்தறேன், நீயும் கார்த்தியும் லவ் பண்ணுறீங்கன்னு எனக்குத் தெரியும்”
“என்னது லவ்வா.?” அதிர்ச்சியானாள் நிஹா, உடனே மலர் கார்த்தியை பார்த்து முறைத்தாள்.
“அவனை முறைக்காதேடி மலர், நான் தான் ஒரு நாள் உங்க ரெண்டு பேரையும் ஐஸ்க்ரீம் பார்லர்ல பார்த்தேன், எங்க முன்னாடி சண்டைக்கோழி மாதிரி சண்டை போட்டுட்டு, நீங்க தனியா போய் லவ் பண்ணுறீங்களா.?” எனச் சிரித்தபடி கேட்க,
“அப்போ நான் மட்டும் தான் சிங்களா.? என்னை எல்லாரும் ஏமாத்திட்டிங்களேடி, அட ஊதுங்கடா சங்கு, ஐ யெம் தண்டச்சோறு கிங்கு, தமிழ் இஸ் மை மதர் டங்கு, ஐ யெம் சிங்கிள் அண்ட் ஐ யெம் யங்கு” எனப் புலம்பி தள்ளினாள் நிஹா.
“நிஹா நானும் உனக்குத் துணைக்கு இருக்கேன்டி, ஏன்டி பாட்டு பாடி வெறுப்பேத்துற” அதி சொன்னாள்.
“நீ தான் தீரேந்திரன் கூட ஒன் சைடா கம்மிட் ஆகிட்டியே, நீ ஃபூயட்சர் போலீஸ்காரன் பொண்டாட்டி”
“போடி லூசு” என நிஹாவை திட்டிய அதி, கார்த்திப் புறம் திரும்பினாள்.
“இங்க பாரு கார்த்தி அவளோட பிரச்சனை என்னனு கேட்டு, அவளை நீ தான் சரி பண்ணணும், நாளைக்கு எல்லாரும் ஒரு ஸ்கிரிப்ட்டோட வரணும் எந்த ஸ்கிரிப்ட் நல்லா இருக்குதோ, அவங்க ஸ்டோரிய பிக்ஸ் பண்ணிக்கலாம்” எனச் சொன்ன அதி.
“இனி எங்களுக்காக நீ மறைஞ்சு மறைஞ்சு காதலிக்க வேண்டிய அவசியமில்லை மலர், காதலுக்கு எல்லாத்தையும் மாத்துற சக்தி இருக்கு, உன்னோட பிரச்சனையைக் கார்த்திகிட்ட சொல்லு, அவன் உன் கூட நிப்பான்” எனச் சொல்லி அவள் நிஹாவின் கையைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தவள், எதோ நினைவு வந்தவளாய்,
“டேய் கார்த்தி, பேசிட்டு ரெண்டு பேரும் என் ஸ்கூட்டில வீ்ட்டுக்கு போங்க நான் நிஹாவோட சேர்ந்து பஸ்ல போறேன்” எனச் சொன்னவள் அவளுடைய வண்டி சாவியைக் கண்ணாடி கதவருகே நின்றபடி தூக்கி எறிய அதை லாவகமாகப் பிடித்துக்கொண்டான் கார்த்தி.
“தேங்க்ஸ்டி அதி” எனப் புன்னகை முகமாய்ச் சொன்ன கார்த்தியின் கரத்தை அழுத்தமாய்ப் பிடித்திருந்தாள் மலர்,
“ஏன் மலர் குட்டிக்கு என்ன பிரச்சனை ஏன் போனை எடுக்க மாட்டேன்றீங்க” அவன் சிரித்தபடி கேட்க, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பெருக்கெடுக்க, தாரை தாரையாய் விழிநீர் வழிய அவனை ஏறிட்டவள் பொதுவெளி என்றும் பாராது அவனைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள் மலர்விழி. அவளை தேற்ற காரணம் தெரியாமல் தவித்து போனான் காதலனாய் கார்த்திக்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் தான் அப்படின்னு … மலர் ஏதோ பிரச்சனை பத்தி சொல்ல போறா … ஆமா மலர் நிஹா எங்க இப்போ …
College project காக short film எடுக்க போறாங்களா? இதில் என்ன வில்லங்கம்?
அதி, நிஹா மீது அப்படி என்ன பயம் ரெண்டு பேரும் மறைஞ்சு மறைஞ்சு காதல் செஞ்சிருக்கீங்க.
நான் கூட ரெண்டு பேருக்கும் மனசுக்குள் காதல் இருக்கும் இன்னும் சொல்லிக்கல போல என்று தான் நினைச்சேன்.
கடைசியில் பார்த்தா செல்லக்குட்டி கண்ணுகுட்டினு கொஞ்சிக்கிறீங்க! 🙄