Loading

இன்று

 

 

மருத்துவர் எதிரே வசந்தியும் கோபாலனும் அமர்ந்திருந்தனர், மருத்துவரோ அகரநதியின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவரின் புருவ மத்தியில் இருந்த குழப்ப முடிச்சை பார்த்து பதறிய படி அமர்ந்திருந்தனர் இருவரும்.

“உங்க பொண்ணோட ரிப்போர்ட் படி, எவ்ரி திங் இஸ் நார்மல், அவங்களுக்குப் பாஸ்ட் தீரி யெர்ஸ்ல நடந்த எந்த இன்ஸிடென்ஸூம் நினைவுல இல்லை மத்தபடி ஷி இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட், நீங்க வீட்டுக்குத் தாரளாமா கூட்டிட்டுப் போகலாம்” என மருத்துவர் சொல்லி முடிக்க, வசந்தியும், கோபாலனும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.

“அப்போ அவளுக்கு நடந்த சம்பவத்தைப் பத்தி ஒரு துளி கூட நினைவுல இருக்காதுல டாக்டர்?” கோபாலன் கேட்டார்.

“உங்க பொண்ணுகிட்ட பேசின வரைக்கும் அவங்களுக்கு நினைவுல இல்லைன்னு சொல்றாங்க, யோசிக்கக் கஸ்டப்படுறாங்க” என மருத்துவர் சொல்ல,

“ஓகே டாக்டர் நாங்க எங்க பொண்ண கூட்டிட்டு போறோம், பில் எவ்ளோன்னு சொன்னா பே பண்ணிருவோம்”

“அதெல்லாம் வேண்டாம் தீரேந்திரன் பில் பே பண்ணிடாரு,அடுத்த வாரம் ரிவ்யூ செக்கப் கூட்டிட்டு வாங்க” என மருத்துவர் சொன்ன பிறகு, தீரேந்திரன் மேல் ஒரு மரியாதை வந்தது கோபாலனுக்கு.

இருவரும் சென்ற பிறகு மருத்துவரின் அறைக்குள் நுழைந்தான் தீரேந்திரன்.

“வாங்க தீரேந்திரன் உட்காருங்க” என அவர் முன் இருந்த சுழற் நாற்காலியை காண்பித்தார் மருத்துவர். அதில் அமர்ந்தவன்.

“சொல்லுங்க டாக்டர், நதியோட கவுன்சிலிங் செசன்ல எப்படிப் பிகெவ் பண்ணிணாங்க”

“ ப்ரில்லியண்ட் மிஸ்டர் தீரேந்திரன், நீங்க சொன்ன மாதிரியே அகரநதி பொய் தான் சொல்றாங்க” என தீரா ஏற்கனவே சந்தேகித்ததை மருத்துவர் ஊர்ஜிதம் செய்ய தன் கணிப்பு தப்பவில்லை என மனம் நிம்மதிக் கொண்டான்.

“எனக்குத் தெரியும் அவங்க பயத்துல அப்படிப் பண்றாங்கன்னு நினைக்கிறேன், அதுவும் நல்லது தான்” எனத் தீரேந்திரன் சொல்ல,

“நான் பேசின வரைக்கும் அவங்க மாத்தி மாத்தி பேசுறாங்க தீரேந்திரன். பதில் திக்கி திணறி தடுமாறி சொல்றாங்க”

“டாக்டர் ப்ளீஸ் அவங்களுக்கு நினைவு இருக்கிறது யாருக்கும் தெரிய வேண்டாம், மினிஸ்டர் ஆளுங்க வந்து கேட்டால் கண்டிப்பா தெரியபடுத்தக் கூடாது, திஸ் இஸ் மை ரெக்குவஸ்ட்” எனப் பணிவாய் கேட்டுக்கொண்டான்

“என்ன தீரேந்திரன் ரெக்வெஸ்ட்லாம் பண்ணுறீங்க, சொல்லாதீங்கன்னு உத்தரவிட்டால் போதும். இந்த ரூமை தாண்டி ஒரு வார்த்தை கூட வெளியே போகது”

“தெட்ஸ் கூல் டாக்டர், அதுக்காகத் தான் இந்த ஹாஸ்பிட்டல்ல நான் அகரநதியை ஷிஃப்ட் செய்ய வேண்டியதாயிருச்சு, டாக்டர் ஓம்கார் மினிஸ்டரோட ஆள். உங்களுக்கு தான் தெரியுமே நதி குணமாக கூடாதுன்னு தேவையில்லாத மருந்துகளை கொடுத்திகிட்டு இருந்தது. உங்களை மாதிரி நேர்மையான டாக்டர் நடுவில் இப்படியும் ஒருத்தர்” என அவன் எடுத்துரைத்த போது,

“ இது என்னோட டியூட்டி தீரேந்திரன். அகரநதிக்கு அவர் கொடுத்திருந்த மருந்தெல்லாம் ஸ்லோ பாய்சன்கு இக்குவள். பட் ஒரு விசயம் மட்டும் எனக்கு புரியலை மட்டும் எனக்கு புரியலை தீரேந்திரன். நீங்க அந்தப் பொண்ணுக்காக இவ்ளோ பண்ணுறீங்க பட், அந்தப் பொண்ணு உங்களை மதிக்கவே மாட்டேன்தே சார்”

“அவ புரிஞ்சுப்பா சார், எனக்கு என்னோட நதியை பத்தி நல்லாவே தெரியும், காதலுக்காகத் தாங்கிக்க வேண்டியது தான்” எனக் கன்னத்தில் குழி விழ சிரித்தான் தீரேந்திரன்.

“உங்க லவ் பொயட்டிக் லவ் ஸ்டோரில” ஆம் என்பது போல் தலையசைத்துச் சிரித்தான் தீரேந்திரன். தன் காதலை பற்றி மருத்துவரிடம் சொல்லும் போதே அவனுக்குள் உற்சாகம் பிறக்க, உரியவளிடம் சொல்லும் நாள் தான் என்றோ?

அதே சமயம் பித்துப் பிடித்தவள் போல் அங்கிருந்த மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்துக் கொண்டிருந்தாள் நதி.

அவளை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள் அகரநதியின் பெற்றோர்கள்.

அவளின் நினைவு கல்லூரி நாட்களுக்கு முன்பே நின்று போனதில் கோபாலனுக்கு அலாதியான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அகரநதியோ எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“அதிம்மா இப்போ நம்ம வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்கோம்மா” கோபாலன் சொன்னார்.

“ம்ம் சரிப்பா” எனச் சொன்னாள் அகரநதி.

“அதிம்மா உனக்கு இன்னைக்கி என்ன சமைச்சு தரணும் சொல்லுடா, அம்மா உனக்குச் சமைச்சு தர்றேன்” என வசந்தி கேட்க,

“உனக்கு எது பிடிக்குதோ அதையே பண்ணுமா” அவள் பிடி கொடுக்காமல் பேசினாள்.

“எப்படி இருந்த நம்ம பொண்ணு எப்படி ஆகிட்டா பாருங்க, வாய் விடாமல் பேசிக்கிட்டே இருப்பா, இப்போ பாருங்க வாயை திறக்கவே பயப்படுறா, எல்லாத்துக்கும் காரணம் அவன் தான்” என அதாங்கபட்டு கார்த்தியின் பெயரை சொல்ல வந்த வசந்தியை சைகை காட்டி தடுத்திருந்தார் கோபாலன்.

“வசந்தி” எனக் கோபத்துடன் முறைத்தார் கோபாலன்

“யாருமா?” விரைந்துக் கேட்டாள் அகரநதி.

“அது ஒன்னுமில்லை அதி உங்க அம்மா எதையாவது உளறிகிட்டு இருப்பா” எனச் சொல்லி சமாளித்தார் கோபாலன், ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர் மூவரும், தன் வீட்டை பல நாள் காணாதது போல் உணர்ந்தாள் அகரநதி.

வீட்டினுள் நுழைந்தவுடன் பூச்செடிகளுக்கு நடுவே போடப்பட்டிருந்த கல்மேடையில் போய் அமர்ந்துக்கொண்டாள் அதி.

“அப்பா கொஞ்ச நேரம் இதுல உட்கார்ந்திட்டு வர்றேன்” எனச் சொல்ல, வசந்தியும், கோபாலனும் வீட்டினுள் சென்றனர்.

அதியின் மனம் படபடவென அடிக்க ஆரம்பித்தது, கார்த்திக்கு என்ன நடந்திருக்கும், கார்த்தித் தீரேந்திரனிடம் இருக்கிறான் என்றால், ஒரு வேளை ஜெயிலில் இருக்கிறானா? பல குழப்பங்கள் பல கேள்விகள்.

அய்யோ என்ன தான் நடந்திருக்கும், எத்தனை நாள் கோமாவில் இருந்தேன்னு கூடத் தெரியலையே. மீண்டும் அதே யோசனையில் முழ்கினாள் பேதை பெண்ணவள்.

அதே நேரம் வீட்டின் கேட்டை திறந்துக்கொண்டு ஒரு பெண்மணி வீட்டிற்குள் நுழைந்தார், அவரைப் பார்த்து எழுந்து நின்ற அதிக்கு வந்திருப்பது யாரென விளங்கவில்லை.

“அம்மாடி மருமகளே உனக்குக் குணமாகிருச்சா?” வாஞ்சையாய் நெட்டி முறித்தார் வினோதோ.

“யார் நீங்க..?” அதி கேட்டாள்.

“நான் தான் உன் காதலனோட அம்மா” என வினோதா சொல்ல,

“காதலனா? அப்படி யாரும் இல்லை” என முகத்தில் அடித்தாற் போல் சொன்னாள் அதி தீரேந்திரன் மீது அவளுக்கு கோபம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவனுக்காக சேர்த்து வைத்த காதல் எல்லாம் காற்றோடு கரைந்து போயிருந்தது.

“என்னமா சொல்ற எல்லாத்தையும் மறந்துட்டியா..?” என வினோதா கேட்க, வசந்தி அங்கு வந்து சேர்ந்தார்.

“அதி போமா போய் ரெஸ்ட் எடு” எனத் தாயின் சொல்லைக் கேட்டு விரைந்து அவளறைக்குள் சென்று கதவடைந்துக்கொண்டாள் அகரநதி.

“வாங்க உள்ள வாங்க” என வசந்தி வினோதாவை அழைத்தார்.

“நதி எல்லாத்தையும் மறந்துட்டாளா.?” அதிர்வுடன் கேட்டார் வினோதா.

“அதைபத்தி பேச தான் உங்களை வரச் சொன்னேன், வாங்க” வீட்டிற்குள் அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தார் வசந்தி.

“சொல்லுங்க”

“எங்க அதி எல்லாத்தையும் மறந்துட்ட, அது ஒருவகையில நல்லதுன்னு நினைச்சாலும், தீரேந்திரன் விசயத்துல இந்த விசயத்தை என்ன பண்றதுன்னு தெரியலை”

“ஏன் அப்படிச் சொல்றீங்க வசந்தி, அவளோட கசப்பான விசயங்களை மறந்தது நல்லது தானே”

“இல்லை தீரேந்திரனையும் சேர்த்து மறந்துட்டாளே” வருந்தினார் வசந்தி.

“நீங்க எதுவும் கவலைபடாதீங்க, அதெல்லாம் என் பையன் பார்த்துப்பான், அவளை வீட்டுகுள்ளேயே அடைச்சி போடாம கோவில் குளத்துக்குக் கூட்டிட்டு போங்க. எழ மட்டான்னு நினைச்சீங்க இப்போ எழுந்து நடமாடலையா. காலம் எல்லாத்தையும் மாத்தும்.” என அறிவுறுத்தினார் வினோதா.

“அப்போ கல்யாணத்தைப் பத்தி இப்ப பேச வேண்டாமா..?” வசந்தி கேட்க,

“ஆமா அவ பூரணமா குணமாகட்டுமே, இப்போ என்ன அவசரம். அவளுக்கு நினைவே வரவில்லை தீரேந்திரன் வேண்டாம்ன்னு சொன்னாலும் பரவாயில்லை. அவள் கட்டிக்க சம்மதம்னு சொன்னாள் தான் கல்யாணம்” என வினோதா சொன்னார்.

“நீங்க சொல்றதும் சரி தான்” எனக் கோபாலனும் சொல்லிக்கொண்டிருந்த போது மீண்டும் அறையிலிருந்து வெளியே வந்தாள் அதி.

“ம்மா கொஞ்ச நேரம் கார்டன்ல இருக்கேன், உள்ள எனக்கு ஒரு மாதிரி இருக்கு” எனச் சொல்லியபடி வெளியே வந்தாள் அதி.

“சரிம்மா” என வசந்தி சொல்ல,

மீண்டும் பூச்செடிகளுக்கு மத்தியில் புல் தரையில் நடை பயின்றுக்கொண்டிருந்த வேளையில் அவளுக்காகக் காத்திருந்த கும்பல், ஓடி வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள், அவர்களைப் பார்த்தவுடன் கத்தி அலற ஆரம்பித்தாள்.

“அம்மா யாரோ வர்றாங்க பாருங்க” என அவள் கத்த அங்கே வந்தவர்கள் அகரநதியின் வாயை பொத்தி தூக்கி சென்று காருக்குள் அடைக்க, அவளுக்கு மூச்சே அடைத்து விடுவதைப்போல் உணர்ந்தாள். அதைப் பார்த்த வசந்தி,

“அய்யோ என் பொண்ணு” என அலற வினோதா வந்து நின்ற கணத்தில் அந்தக் காரின் நம்பர் ப்ளேட்டை துரிதமாய்ப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அகரநதி கடத்தப்பட்ட விசயம் வினோதா மூலம் தீரேந்திரனுக்குத் தெரிவிக்கபட்டது.

சூரிய ஒளி கொஞ்சம் கூட எட்டிபார்க்காத காட்டு பங்களாவின் பெரிய அறையில் கை கால்கள் சங்கிலியில் கட்டி போடபட்டிருந்தாள் அகரநதி, மயக்கத்தில் இருந்தவள் மெல்ல வழி மலர்ந்தாள். இருட்டறையில் சங்கிலியால் கட்டபட்டிருந்தவள் விழிகளைச் சுழற்றி அந்த அறை முழுவதும் அலசி பார்த்தாள் இதைச் செய்தது தீரேந்திரனாகத் தான் இருக்கும் என அவள் மனம் மெல்ல நம்பத் தொடங்கியது. இமை சிமிட்டாமல் அந்த அறையை அமைதியாக ஆய்வு செய்தவள் கதவு திறக்கும் சப்தம் கேட்டதும், இமை மூடி படுத்துக்கொண்டாள்.

அறையைத் திறந்துக்கொண்டு வெள்ளை வேட்டி சகிதமாய் வெளிபட்டார் அமைச்சர் செந்தமிழன். அய்யோ போச்சுடா எப்படிச் சமாளிப்பேன், இவர் என்ன கேட்க போகிறாரோ என்று பாதி விழிமூடி பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமோ பதறியது

“ஏய் பொண்ணு எழுந்திரு” என்றவர் நீரை அவள் மீது ஊற்றினார் உடல் முழுவதும் ஈரமாக நனைந்த கோழி போல் எழுந்து அமர்ந்தவளை பார்த்து கேட்டார்.

“சொல்லு எங்க வச்சிருக்க..?” கிட்டதட்ட மிரட்டினார் அவர்,

“என்ன எங்க வச்சிருக்க.? நீங்க யாரு எதுக்காக என்னைக் கட்டி போட்டிருக்கீங்க” எனக் கேட்டாள் அகரநதி.

“நான் தான் அகிலனோட அப்பா” எனச் சொல்ல,

“எந்த அகிலன்.? எனக்கு அந்தப் பேர்ல யாரையும் தெரியாது”

“ஏன்கிட்டையே நடிக்குறீயா..? இப்போ நீ உண்மைய சொல்லல, சுட்டுருவேன்” எனப் பிஸ்டலை கையில் எடுத்து அவள் நெற்றி பொட்டில் வைத்திருந்தார் செந்தமிழன்.

“இப்போ நீ எங்க வச்சிருக்கன்னு சொல்றீயா..? இல்லையா.?கார்த்தி உனக்குத் தான் தெரியும் சொன்னான், சொல்லு எங்க வச்சிருக்க.?”

“எனக்கு எதுமே தெரியாது” என்று அவள் அலறிய நொடியில் படபடவெனத் துப்பாக்கி தோட்டாக்கள் வெடிக்கும் சப்தம், அந்த அறையே அறை நொடி அதிர்ந்து அடங்க, புகைமூட்டத்திலிருந்து வெளிபட்டான் அவளின் தீரா.

அந்தச் சப்தத்தைக் கேட்டு ஆவெனக் கத்தியிருந்தாள் அகரநதி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்பாடா தீரா நல்லவன் தான் … நடிச்சுட்டு இருக்கான் போல …

    தீரா நதி கிட்ட நல்லா விளையாடுறான் … இது ஒரு விதமான லவ் கேம் தான் நல்லா இருக்கு …

    அமைச்சர் விஷயம் நாம நினைச்சதை விட பெருசு போலயே … என்னவா இருக்கும் …

  2. எதிர்பார்த்ததை போல தீரா காரணத்துடன் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றான்.

    எல்லா இடத்திலும், எல்லா சூழ்நிலைகளிலும் முகத்துக்கு நேரே எதிர்த்து நிற்க வேண்டியதில்லை, அப்படி செய்தால் அகர் போல் ஏதாவது இக்கட்டில் மாட்டும் வாய்ப்பு தான் அதிகம் வரும்.

    அகர் தீரா மீதான தவறான புரிதலில், தன் காதலை தூக்கி எறிந்துவிட்டதாக மனதோடு நினைத்து கொண்டிருக்கின்றாள்.

    அகரின் அம்மா, அப்பாவிற்கு ஒரு தற்காலிக நிம்மதி, அவளுக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்று எண்ணுகின்றனர்.

    அகரின் கடத்தல், தீராவின் மீட்பு நடவடிக்கை. இவை எல்லாம் உண்மையை எந்த அளவு வெளிக்கொண்டு வருகிறதென்று பார்ப்போம்.