Loading

அத்தியாயம் – 15 

மகாபலிபுரம் பயணத்திற்கு பிறகு, இரண்டு வாரங்கள் கடகடவென்று கடந்துவிட்டன.

அமுதினி தன் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாள். சரண்யா மேடம் எடுக்கும் வகுப்புகள், வகுப்பீடுகள், பயிற்சிப் பணி என்று எல்லாமே நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 

ஆனால் அவளது மனம்… ஒரே இடத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது – காரணம் ஆரவ் கிருஷ்ணா.

அவன் அந்த பயணத்திற்கு பிறகு, அவளை மொத்தமாக தவிர்த்துவிட்டான். கல்லூரி வளாகத்தில் அவளை பார்த்ததும், அவன் வேறு திசையில் திரும்பிவிடுவான். காரிடாரில் நடக்கும்போது, அவனது கைப்பேசியில் மும்மரமாக பார்ப்பது போல் நடிப்பான். அவளைத் அவனுடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அழிக்க முயன்றான்.

அமுதினிக்கு மனதிற்கு அதீத வலியை கொடுத்தது. ஆனால், அவளால் என்ன செய்திட முடியும்? அவன் தெளிவாக சொல்லிவிட்டான் – அவனுக்கு யாரும் தேவையில்லை!

*******

ஒரு வெள்ளிக்கிழமை மாலை, அமுதினி நூலகத்தில் இருந்தாள். அவள் தனது ஆய்வறிக்கை முன்மொழிவிற்காக (Thesis Proposal) கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். 

இறுதியாண்டு மாணவர்கள், அவர்களுடைய ஆய்வறிக்கை தலைப்பை இப்பொழுதே தேர்ந்தெடுத்து ஒரு முன்மொழிவைச் அவர்களின் பேராசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அது அடுத்த செமஸ்டரில் ஆராய்ச்சிப் பணிகளுக்கான அடித்தளமாகும்.

(“Empathy Fatigue among Mental Health Professionals: A Qualitative Study”) “மனநல நிபுணர்களிடையே பச்சாதாப சோர்வு: ஒரு தரமான ஆய்வு” என்ற தலைப்பை அமுதினி இறுதியாக தேர்ந்தெடுத்தாள். 

அவள் அதிர்ச்சி சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்களை நேர்காணல் செய்து, அவர்கள் பச்சாதாப சோர்வை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்வாள்.

சுருதி அவளது பக்கத்தில் அமர்ந்து, “அமுது, உன் டாபிக் ஃபைனலைஸ் ஆச்சா?”

“ஆமா… எம்பதி ஃபேடிக்…” 

“நல்ல டாபிக் அமுது… உனக்கும் இது பர்சனலா ஒத்துப் போகும்…”

அமுதினி புன்னகைத்தாள். “ஆமா… நான் ரொம்ப எம்பதியா ஃபீல் பண்றேன்… அது சில நேரங்கள்ல என்னை டரைன் பண்ணுது… அதனால் இதை பத்தி கொஞ்சம் ஸ்டடி பண்ண விரும்பி சூஸ் பண்ணேன்…”

“உன் தீஸிஸ் அட்வைசர் யாரு?”

“சரண்யா மேம்…”

“சூப்பர்… அவங்க ரொம்ப சப்போட்டிவ்… என்னோட அட்வைசர் ரமேஷ் சார்… நான் என் ஃப்ரபோசலை நாளைக்கு சப்மிட் பண்ண போறேன்…”

அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று, நூலக நுழைவாயிலில் யாரோ உள்ளே நுழையும் அரவம் கேட்டது.

ஆரவ் கிருஷ்ணா உள்ளே நுழைய, கையில் ஒரு தடிமனான கோப்பைக் கொண்டு வந்திருக்க, நூலகரிடம் சற்று நேரம் பேசிவிட்டு, பின்னர், உளவியல் துறைசார்ந்த புத்தகங்கள் இருக்கும் பிரிவுக்குச் சென்றான்.

ஆரவின் வரவில் அமுதினி உறைந்துபோனாள். அவளுக்கு சில அடிகள் தள்ளி நின்றிருக்க, அவனுக்கு வேண்டிய புத்தகங்களைத் தேடி குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் அவளைப் பார்க்கவே இல்லை.

சுருதி தோழியின் முக மாற்றத்தை பார்த்துவிட்டு, “அமுது, ஆரவ் சார் வந்து இருக்காரு… நீ ஓகேவா இருக்கியா?”

“நான் ரொம்ப நல்லாவே இருக்கேன் சுருதி…” என்று இயல்பாக கண்சிமிட்டிச் சொன்னாள்.

ஆனால், ஆரவ் அங்கே இருக்கவும், அவளால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அவள் அவனைப் பார்க்க விரும்பினாள், ஆனால், அவனுக்கு அவளைப் பார்க்க துளிக்கூட விருப்பமில்லை!

பத்து நிமிடங்கள் கழித்து, ஆரவ் சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு நூலகரிடம் கொடுத்து, சரிபார்த்த பிறகு, அவன் அமுதினியை ஏறெடுத்தும் பாராமல் செல்ல ஆரம்பித்தான்.

அதிலும் அவன் அமுதினி அமர்ந்திருக்கும் மேசையை கடந்துதான் போனான், இருந்தும் அவளைப் பார்க்கவில்லை, 

யாரையும் கண்டுக்கொள்ளாமல் நூலகத்தில் இருந்து நேராக வெளியேறினான்.

அமுதினிக்கு இதயம் கனத்துவிட, ‘அவர் என்னை முழுமையா விலக்கி வைச்சிட்டார்.. அவர் கிட்ட பாசம் காட்ட நினைச்சது தான் என் தப்பா?’ என்று வேதனையுடன் நினைக்கவும்,

‘உனக்கு அவர் மீது வெறும் பாசம் மட்டும் தானா? வேறெதுவுமே இல்லையா அமுதினி?’ என்று அவள் மனமே எள்ளி நகையாடியது.

******

அடுத்த வாரத்தில், ஆய்வறிக்கை முன்மொழிவை வெற்றிகரமாக முடித்து விட்டாள் அமுதினி.

அதனை கொஞ்சம் பயத்துடன் கொண்டுபோய் பேராசிரியர் சரண்யாவிடம் சமர்ப்பிக்க, அவரும் அவற்றை கவனமாகப் படிக்க ஆரம்பித்தார்.

“அமுதினி, உன் டாப்பிக் ரொம்ப சூப்பர்… நம்மோட மெண்டல் ஹெல்த் ஃபீல்ட்-ல எம்பதி ஃபேடிக் ஒரு முக்கியமான ரியல் இஸ்யூ… நீ குவாலிடேடிவ் மெதட் யூஸ் பண்றது இன்னும் நல்லது… செமி-ஸ்ரக்சர் இன்டர்வியூஸ் வந்து உனக்கு பவர்ஃபுல் டேட்டாவை கொடுக்கும்…” என்று அனுபவத்துடன் கூறினார் சரண்யா.

“தேங்க் யூ மேம்…” என்றாள் சந்தோஷத்துடன்!

“ஆனா ஒண்ணு… நீ உன் பார்ட்டிசிபென்ட்ஸ்-ஐ எப்படி சூஸ் பண்றதுன்னு கிளியரா மென்ஷன் பண்ணு… எத்தனை தெரபிஸ்ட் இன்டர்வியூ பண்ற, அவங்களோட எக்ஸ்பிரீயன்ஸ் லெவல் என்ன, எல்லாமே குறிப்பிட்டு தனித்துவமா சொல்லு…”

“சரிங்க மேம்… நான் நீங்க சொல்ற மாதிரி எல்லாம் பண்றேன்…” என்கவும்,

சரண்யா புன்னகைத்து, “அமுதினி, நீ ஒரு திறமையான மாணவி… உன் எம்பதி! உன் ஸ்ட்ரென்த்! எல்லாமே ஒகே… ஆனா, நல்லா ஞாபகம் வச்சிக்க – கரெக்ட்டான பவுண்டரிஸ் மெயின்டெய்ன் பண்ணு… எல்லாரோட பெயினையும் நீ தூக்கி சுமக்கணும்னு நினைக்க வேண்டாம்…”

அமுதினி, “எனக்குத் புரியுது மேம்… நான் கவனமா இருப்பேன்…” என்றாள் வெளியே மட்டும் தைரியமாக!

சரண்யா அவளை கூர்ந்து பார்த்துவிட்டு, “அமுதினி, நீ சமீபத்தில் கொஞ்சம் சோர்வா இருக்க… எல்லாம் சரியா போய்ட்டு இருக்கா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?” என்று பரிவுடன் கேட்டார்.

அமுதினி அவரிடம் பொய் சொல்ல நினைத்தாள். ஆனால், அவளால் முடியாமல் போனது. 

“மேம், எனக்கு… சில தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கு… ஆனா, நான் மேனேஜ் பண்றேன்… கண்டிப்பா மேனேஜ் பண்ணி வெளியே வந்திடுவேன் மேம்…”

“நீ கவுன்சிலிங் தேடணும்னா, கேம்பஸ்-ல சர்வீஸ் இருக்கு… நீ தெரபிஸ்ட் ஆகப் போற தான்… ஆனா, உனக்கும் ஒரு மெண்டல் சப்போட் தேவைப்படலாம்…” என்று சொல்லவும், 

அமுதினி சரியென்று தலையசைத்து, “தேங்க் யூ மேம்… எனக்கு அப்படி ஏதாவது தேவைப்பட்ட கவுன்சிலிங் போறேன் மேம்…” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

******

அன்று மாலை, அமுதினி கல்லூரி வளாகத்தில் தனியாக நடந்தாள். அவள் மனம் குழம்பிப் போய் இருந்தது.

சரண்யா சொன்னது சரிதான் – அவள் மனக்குழப்பத்தில் சோர்ந்து போய் இருந்தாள். ஆனால் காரணம் என்னவோ அவன் ஒருவனே! 

ஆரவ் கிருஷ்ணா!

அவன் அவளை முழுமையாக பலவீனமாக மாற்றிவிட்டான். அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதினை குத்திக் கிழித்துக் காயப்படுத்தியது.

அவள் உளவியல் துறையின் கட்டிடத்தைக் கடந்து சென்றாள். அங்கே ஒரு ஆசிரியர் வாகன நிறுத்துமிடம் இருந்தது. அங்கே ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று மறைந்திருந்து பார்த்தாள்.

அரவினின் கார் அங்கேதான் நிறுத்தப்பட்டிருந்தது. அவன் காரின் அருகில் நின்று, தொலைபேசியில் யாருடனோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் முகம் ஆத்திரமாகவும், கோபமாகவும் இருந்தது.

அமுதினி அவனுக்கு வெகு தொலைவில் நின்றிருந்த காரணத்தினால், அவளை அவனால் பார்க்க முடியவில்லை. அவன் யாரிடமோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.

பின்னர், திடீரென்று, ஆரவ் தனது காரின் மீது தொலைபேசியை தூக்கி வீசினான். அது டேஷ்போர்டில் விழுந்ததில் பலத்த சத்தம் ஏற்ப்பட்டது. 

அவன் விரக்தியின் உச்சியில் தலையில் கைகளை வைத்து, அங்கேயே அமர்ந்து, விரக்தியான ஒரு கர்ஜனையுடன் ஆஆஆ என்று சத்தமாக கத்தினான். அவன் தன் கைகளால் காரின் மேற்கூரையிலும் சுவரிலும் மீண்டும் மீண்டும் கோபத்தில் குத்த, அவனது கைகளில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது.

அமுதினி அதிர்ந்து, அவனது ஆக்ரோஷமான செயலில் பயந்து போனாள். ஆனால், அவன்மீது அவளுக்கு அக்கறையும் பாசமும் அதிகமாக இருந்தது. 

‘அவருக்கு என்னாச்சு? ஏன் இப்படி தன்னைத்தானே கஷ்டப் படுத்திக்கிறாரு?’

அவள் அவனிடம் போக வேண்டுமா? அல்லது அவனைத் தனியாக விட்டுவிட வேண்டுமா? அவளுடைய சிகிச்சையாளர் உள்ளுணர்வு சொன்னது – போ, அவனிடம் போய் பேசு, ஆறுதலாக ஏதாவது சொல், அவன் இப்பொழுது ஆபத்தான நிலையில் இருக்கிறான். 

ஆனால் அவளுடைய காயமடைந்த இதயம் சொன்னது – அவன் உன்னை பார்க்கவே விரும்பவில்லை, உன்னை மதிக்கவில்லை, அவனுக்கு உன் முகத்தை காண விருப்பமில்லை… அவனது வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து விலகி சென்றுவிடு.

அவள் தயங்கினாள், முரண்பட்டாள். ஆனால், கடைசியாக அவளுடைய அக்கறை தான் வென்றது. 

அவள் மெதுவாக அவனை நோக்கி, எச்சரிக்கையாக நடந்தாள்.

“சார்…” அவள் மெல்லிய குரலில் அழைத்தாள்.

ஆரவ் திடுக்கிட்டு திரும்பினான். அவளைப் பார்த்ததும், அவனது முகம் உடனே கோபமாக மாறி, “நீ இங்க என்ன பண்ற?” என்று உறும,

“நான்… நான் இந்த பக்கம் நடந்து போயிட்டு இருந்தேன்… நீங்க… நீங்க ஏதோ பிரச்சினையில இருக்குற மாதிரி தெரிஞ்சுது…”

ஆரவ் கடுமையாகச் சிரித்து, “நான் நல்லாதான் இருக்கேன்… எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… நீ உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்த்ததுட்டு கிளம்பு…” என்றான்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் “சார், நீங்க உங்க ஃபோன்-ஐ… ப்ச்! சார் உங்க கையில ரத்தம்…” என்று பதற்றமாக பேச,

“அது வந்தா வந்துட்டு போகுது… எனக்கே வலிக்கல.. உனக்கென்ன அக்கறை வந்துச்சு… நீ ஏன் இங்க வந்தேன்னு உன்ன கேட்டேன்? அதுக்கு ஃபர்ஸ்ட் பதில் சொல்லு?” ஆரவ் கத்தி,

“நீ ஏன் என்னை எப்ப பார்த்தாலும் அப்சர்வ் பண்ற? நீ எதுக்கு என்னை ஃபாலோ பண்ற?”

அமுதினி வலியுடன், “நான் உங்களை ஃபாலோ பண்ணல சார்… நான் எதேச்சையா இந்த பக்கம் வந்தேன்… அப்ப உங்களை பார்த்தபோது, நீங்க ரொம்ப கோபமா பேசி.. உங்களையே காயப்படுத்திட்டு இருந்தீங்க… அதான்… நான்…” 

“எனக்கு உன் கன்சர்ன் வேணாம்… உன் ஹெல்ப் வேணாம்…” ஆரவ் கடுமையாகச் சொன்னான். 

“நான் எத்தனை முறை சொல்லணும் உனக்கு? என்னை விட்டுடு… என்னை தொந்தரவு பண்ணாதே… என் வாழ்க்கையில குறுக்க வந்து டிஸ்டர்ப் பண்ணாத…”

“நான் அப்படி நினைக்கல சார்… உங்களை கேர் பண்ண விரும்பினேன்… அவ்வளவுதான்..”

“எனக்கு உன் கேர் வேண்டாம்!” ஆரவ் உரக்கக் கத்தினான்.

“நான் உன் கேரை கேட்டேனா?” என்றான் ஆரவ் கொடூரமாக!

அவனது ஒவ்வொரு வார்த்தையும் கத்தி போல வந்தன.

“நீ ஏன் என் மேல தேவையில்லாத அட்டென்ஷன் கொடுக்குற? நீ என்ன நினைக்குற? நீ என்னை சரியா டிரீட் பண்ணா, அதுல நான் உருகி… நாம ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவோம்னா? இல்ல அதுக்கு மேல ஏதாவது?” ஆரவ் அதிகப்படியாக பேச,

அமுதினி திகைத்துப்போய், “நான்… நான் அப்படி நினைக்கல சார்—” என்று கண்ணீருடன் சொல்ல,

“பொய் சொல்லாதே!” ஆரவ் மனசாட்சியின்றி சொன்னான். 

“நான் தான் பார்க்குறேனே… நீ என்னை எப்படி பார்க்குறேன்னு எனக்குத் தெரியும்… அந்த பார்வை, அந்த அக்கறை, அந்த கேர் – எல்லாம் சுத்த நடிப்பு… 

நீ என்னை ஒரு ப்ராஜெக்ட் மாதிரி பார்க்குறே… ‘ஓ, புவர் டேமேஜ்ட் ஆர்வ்’ நான் அவரை எப்படி ஃபிக்ஸ் பண்றேன், நான் அவரை எப்படி ஹீல் பண்றேன்… எப்படி அவரை மயக்க போறேன்’ அது தானே? அதெல்லாம் தானே செய்ய நினைக்கிற” என்று சீற்றத்துடன் சொன்னான்.

“இல்ல சார்!” அமுதினியின் கன்னங்களில் நீர்த்துளிகள் உருண்டோடியது.

“உனக்கு எதை பத்தியும்… யாரை பத்தியும் கவலை இல்ல!” என்றான் ஆரவ் இரக்கமில்லாமல். 

“நீ உன்னைப் பத்தி மட்டும்தான் கவலைப்படுற. நீ நல்லா ஃபீல் பண்ணனும், மத்தவங்களுக்கு உதவியா இருக்கணும், ஒரு உன்னதமான சேவியரா இருக்கணும். ஏன்னா, அது உன் ஈகோவை பூஸ்ட் பண்ணுது… ஆனா, என்னை பத்தி? என் ஃபீலிங்ஸ் பத்தி? நான் என்ன விரும்புறேன்னு? அதை நீ கவனிக்கவே இல்ல!”

“சார்… ப்ளீஸ்…”

“நீ என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணினே, அதுக்கு நான் தயாரா இல்ல… நான் எனக்கு உன் அக்கறை தேவையில்லன்னு கிளியரா சொன்னேன். ஆனா, நீ என்னை ரெஸ்பெக்ட் பண்ணல… நீ என்னை புஷ் பண்ணினே… நீ என் பவுண்டரிஸ்-ஐ மீறின… நீ என்னை சங்கடமா ஃபீல் பண்ண வைக்குற… ஒவ்வொரு முறையும் நான் உன்னை பார்க்கும்போது, எனக்கு கில்ட் வருது, நீ என்னை ரொம்ப ப்ரஷர் பண்ற… அது உனக்கு புரியுதா அமுதினி?”

“எனக்கு… எனக்கு சத்தியமா தெரியல சார்…” என்று மொத்தமாக உடைந்து விட்டாள்.

“இப்போ தெரியும் இல்லையா?” ஆரவ் உறுதியாக சொன்னான். 

“தயவுசெய்து இனி என் கண்ணு முன்னாடி வராதே… என்னை பார்க்காதே… என் கிட்ட பேசாதே… என்னை மறந்துடு… நீ என் லைஃப்-ல இல்லன்னு நினைச்சிக்க… நானும் உன் லைஃப்-ல இல்லன்னு நினைக்கிறேன்… நாம ஸ்ரேன்ஜர்ஸ். அவ்வளவுதான்… கிளியரா?”

அமுதினி நடுங்கி அழுதுகொண்டே நின்றாள். அவள் உடல் முழுவதும் நடுங்கியது. அவளது இதயம் நொறுங்கி, முற்றிலுமாக உடைந்து போனது. 

அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை! வார்த்தைகள் வரவில்லை!

“சார், நான் ப்ளீஸ்—”

“போ…” ஆரவ் உரக்க சொல்லி,

“என் முன்னாடி இருந்து போ… இப்போவே போய்டு…” என்று விட்டான்.

அவளது கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ஆனால் அவள் எதுவும் சொல்லவில்லை.

ஆரவ் தனது காரைத் திறந்து, உள்ளே ஏறி, கதவைச் சாத்திக் கொண்டு, என்ஜினை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டான்.

அமுதினி அங்கேயே தனியாக நின்றாள். அவள் இதயம் உடைந்திருந்தது. அவன் அவளை அதிகப்படியாக பேசி, முற்றிலுமாக நிராகரித்துவிட்டான். 

******

அன்று இரவு, ஆரவ் தனது அபார்ட்மெண்டில் தனியாக இருந்தான். குளியலறை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். அவரது உள்ளங்கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அவனது கண்கள் சிவந்து, வீங்கி இருந்தன. அவனது முகம் வேதனையில் திளைத்திருந்தது. அவன் தன்னையே முற்றிலுமாக வெறுத்தான்.

‘நான் அவளையும் ஹர்ட் பண்ணிட்டேன், என்னால அவளும் கஷ்டப்படறா… நான் கெட்டவன்… நான் ஒரு மனசாட்சி இல்லாத அரக்கன்’ அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் மருந்துப் பெட்டியைத் திறந்தான். அவனுடைய தூக்க மாத்திரைகள், பதட்ட எதிர்ப்பு மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் – எல்லாம் வரிசையாக இருந்தன. அவன் தினமும் அவற்றைச் சார்ந்திருந்தான். அவை இல்லாமல் அவனால் செயல்பட முடியாது. 

அவனை மயக்கமடையச் செய்ய, அவனைத் தூங்க வைக்க, அவனது வலியைத் தடுக்க, மாத்திரைகளை, கூடுதல் டோஸ் எடுத்துக் கொண்டான்.

‘அவள் இனி என்னை மன்னிக்க மாட்டா… நான் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திட்டு இருக்கேன்… இப்போ அவள் என்னைவிட்டு மொத்தமா விலகிடுவா… அது தான் அவளுக்கு நல்லது…’

ஆனால், அவனது இதயம் அதை ஏற்க மறுத்தது. ஏதோ ஒரு மனம், அமுதினியை இழப்பை எண்ணி கலங்கி தவித்தது.

அவன் படுக்கையில் படுத்துக் கொண்டு கூரையைப் பார்த்திருந்தான்.

‘நான் தனியா இருக்க விரும்புகிறேன். அது தான் எல்லாருக்கும் சேஃப்டி… குறிப்பா, அமுதினி! அவ ரொம்ப நல்லவ… அவளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது… அதை நான் அழிச்சிட கூடாது…”

அவனது கடைசி எண்ணம் அமுதினியைப் பற்றியது தான் – அவளுடைய கண்ணீர், அவளுடைய உடைந்த முகபாவனை. அதற்கு முழு காரணமும் ஆர்வ் மட்டுமே!

மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பித்தன, அவன் மருந்து கலந்த தூக்கத்தில் மூழ்கினான்.

பல்வேறு வலிகளை சுமந்திருக்கும் இரு ஆன்மாக்கள். 

இருவருக்கும் வலி! இருவருக்கும் தனிமை!

இருவருக்கும் துன்பம்!

விதி மிகவும் கொடூரமானது. அது அவர்களை ஒன்றிணைக்கிறது, பின்னர், அதுவே அவர்களைப் பிரிக்கிறது. 

ஆனால், ஒருவேளை… இது நல்லதா? அல்லது மோசமான தவறா? 

இதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

*******

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்