Loading

காதல் -15

 

மாறன் கூறிவிட்டு போனதால் ஃப்ரெஷ் ஜூசை எடுத்து கொண்டு அவனது அறைக்குள் சாயாவிற்கு கொடுக்க எடுத்துக் கொண்டு சென்றாள் அவனது பிஏ பிரீத்தி..

 

அறைக்குள் வந்து உள்ளே தேடிவிட்டு கீழே பார்த்தவளது கண்கள் அதிர்ந்து போனது… கையில் கொண்டு வந்த ஜூசை வேகமாக டேபிள் மீது வைத்து விட்டு மயங்கி கிடக்கும் சாயாலியை பதறி கொண்டு எழுப்ப தொடங்கினாள்…

 

” மேடம் கண்ண முழிச்சு பாருங்க .. மேடம்… ஐயோ ” என பதறி… உடனே அறையை விட்டு வெளியேறி மீட்டிங் நடக்கும் இடத்திற்கு விரைந்தாள்.

 

வாசலில் தயக்கமாக நிற்கும் பிரீத்தியை பார்த்த மேனேஜர் .. ” என்னாச்சு மா எதுக்கு இங்க நிக்கிற” என கேட்க..

 

” நம்ம சாரை உடனே நான் பார்க்கனும் அதான் சார் ”

 

” உனக்கு தெரியாதா மீட்டிங் நடக்கும் போது யாராவது அவரை டிஸ்டர்ப் பண்ணா கெட்ட கோபம் வரும் , எதுனாலும் இன்னும் அரை மணி நேரத்துல முடிஞ்சுரும்..அப்பறம் பேசிக்கலாம் மா ”

 

” இல்ல சார் அதுவரைக்கும் வெய்ட் பண்ண முடியாது… ரொம்ப அவசரம் சார் ”

 

” அப்படி என்னாச்சு பிரீத்தி ”

 

” நம்ம எம் டி ஓட வைஃப் சாயாலி மேடம் சாரோட ரூம்ல மயங்கி கிடக்காங்க… ” என்றதும் அதிர்ந்த மேனேஜர் அடுத்த நொடி மீட்டிங் நடக்கும் இடத்திற்கு விரைந்தார்.

 

கதவை தட்டி விட்டு அவனது அனுமதிக்காக காத்திருக்க… மாறன் உள்ளே அழைத்ததும் வேகமாக உள்ளே சென்றார்.. எப்போதும் உள்ளே வராதவர் இன்று வந்திருக்கிறார் என்றால் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிய…

 

” சொல்லுங்க எனி பிராப்ளம்” என சரியாக கேட்டான்..

 

” சார் … மேடம்… ரூம்ல மயங்கிட்டாங்க… ” என்றதும் தான் தாமதம் கைகளில் உள்ள கோப்புகளை எல்லாம் கீழே விட்டுவிட்டு பதறி அடித்து அவனது அறையை நோக்கி ஓடினான்…

 

அதற்குள் பிரீத்தி அங்கு சாயாலியை எழுப்ப முயற்சிக்க … உள்ளே வந்த மறவன் வேகமாக அவள் அருகே நெருங்கி அமர்ந்து அவளை மடியில் கிடத்தி… ” வாட்டர் கொண்டு வா பிரீத்தி குயிக்” என கத்தினான்.

 

அடுத்த நொடி தண்ணீர் கொடுக்கப்பட .. அதை சாயாலியின் முகத்தில் தெளித்து ” யாழி… கண்ணை திற டி… யாழி….. ” என அவளை அழுத்தமாக அழைக்க… தண்ணீர் பட்டவுடன் மெதுமெதுவாக நிதானத்திற்க்கு வந்தவள் .. இமைகளை பிரிக்க , அவளது இமைகளுக்குள் வந்து விழுந்தான் மறவன்…

 

அவள் கண் விழிக்கவும் மேனேஜர் மாற்று பிரீத்தி இருவரும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு வெளியே செல்ல… தன் மடியில் இருந்தவளை அப்படியே கைகளில் அள்ளி சென்று தனக்கான ஓய்வறையில் உள்ள கட்டிலில்   படுக்க வைத்தான்…

 

அப்போது தான் நன்றாக தெளிந்து கண் விழித்தாள்… சுற்றி எங்கும் பயத்தோடு பார்வை பார்க்க… அவள் பார்வைக்கு எட்டிய தூரம் அந்த புகைப்படம் இல்லை .. அதுவே அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது…

 

அவளது பயத்தை நன்கு உணர்ந்தவன் .. ” சாயா என்னாச்சு எப்படி மயங்கி விழுந்த ” என அமைதியாக கேட்டான்…

 

அதற்கு பதில் கூறாமல் ஒரு வித பயத்தோடு அமர்ந்திருந்தாள்… ” நீ என்னனு சொன்னா தானே எனக்கு தெரியும் ” என்றதும்…

 

” அது…. நான் பயந்துட்டேன் ” என்றாள் சைகையில்…

 

” அதான் தெரியுதே… திடீர்னு பயப்பட காரணம் ” என்று அவனும் விடாமல் கேட்க….

 

‘ படத்தில் இருக்கும் நபர் இவருக்கு யாராக இருக்கும் என தனக்குள் புலம்பி கொண்டவள்..

 

” கொஞ்சம் தலைவலி .. அதான் ” என மீண்டும் சைகை செய்ய .. அவள் பொய் சொல்கிறாள் என அப்பட்டமாக தெரிந்தாலும் மேற்கொண்டு அவன் கேட்க விரும்பவில்லை …

 

” சரி இதோட இங்க இருக்க வேணாம், வா வீட்டுக்கு போகலாம், நீ ரெஸ்ட் எடு சரியா போயிடும்… இல்லேனா டாக்டரை பார்க்கலாம் ” என்றதும் அவசரமாக மறுத்தாள்..

 

” வீட்டுக்கு போகலாம் ” என தலையை ஆட்ட.. அவளை அழைத்து கொண்டு ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்தான் மறவன்..

 

அந்த அறையில் இருந்து மறவன் அறைக்குள் நுழைந்ததுமே அவன் பிடித்திருந்த அவளது கரங்கள் நடுங்குவதை அவனால் நன்றாக உணர முடிந்தது…

 

இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளை கவனித்து கொண்டே வர, அவளது பார்வையோ அந்த போட்டோவின் மீது அச்சத்தில் படிந்திருக்க… அதை பார்த்தவனது விழிகள் யோனைனையில் சுருங்கியது..

 

கிட்டத்தட்ட அறையில் இருந்து அவள் வெளியேறும் வரை அந்த புகைப்படத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள்..

 

அனைத்தையும் கவனித்து கொண்டே வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளை ஓய்வு எடுக்க கூறி விட்டு பால்கனியில் நின்று தீவிரமாக சிந்திக்க தொடங்கினான்..

 

‘ இப்போ எதுக்காக அந்த ஃபோட்டோவை பார்க்கிறா, அவ அதை பார்க்க என்ன காரணமா இருக்கும் … ”  என்ன யோசித்தும் அவனுக்கு பதில் கிடைக்காமல் போக… அவளிடமே கேட்டு விட முடிவு செய்து விட்டான்…

 

ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலைமையில் கேட்க வேண்டாம் என உள்ளே சென்று பார்க்க… சாயாலி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் .. மறவன் அழைத்து வந்ததோடு அவனது மெத்தையில் படுக்கவைத்திருக்க… அவனுக்கும் யோசித்ததில் தலை வலி வந்திருக்க மாத்திரையை போட்டு கொண்டு விளக்கை அனைத்து விட்டு அவளுக்கு மறுபக்கமாக படுத்துக் கொண்டான்..

 

**

 

அதேநேரம் தேனுவின் வீட்டில் பெரிய பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது… அவரது கணவர் வழி சொந்தங்கள் எல்லாம் சாயாலியின் திருமணத்தை எதிர்த்து வீட்டிற்கு வந்திருந்தனர்.

 

” ஏன் தேனு ஒரு வார்த்தை எங்ககிட்ட கேட்க உனக்கு தோணலையா… ”

 

” அது எப்படி கேட்க முடியும்… புடிச்சாலும் புளியங்கொம்பால பிடிச்சு இருக்கா … ”

 

” ஆமா, அதான் பெரிய இடம் வந்ததும் நம்மள கண்ணுக்கு தெரியலை … ”

 

” நமக்கு சொல்லிட்டு நம்ம கல்யாணத்தை நிறுத்தி நம்ம சொந்தத்துல உள்ள பையனை கட்டி வச்சிட்டா என்ன பண்றது , இதையெல்லாம் யோசிச்சு இருப்பா ”

 

” ஏன் தேனு , உன் மகளை கட்ட உன் மருமகன் எவ்வளவு கொடுத்தாரு”

 

” அதான் அவரு உனக்கு நிறையா கொடுத்து இருப்பாருல, இந்த வீடு எங்க அப்பா பேர்ல இருக்கு , அவர் எங்க அண்ணனுக்கு கொடுத்தாலும் எழுதி வைக்கல, அதுனால இப்போ பங்கு போடணும் , இதை வித்து எங்க பங்கை பிரிச்சு கொடுத்துடு ”

 

” ஆமா தேனு இதுநாள் வரைக்கும் உனக்கு ஆள் இல்ல, கஷ்ட படுறன்னு நினைச்சு தான்  நாங்க சும்மா இருந்தோம் , இனிமே உன் மகள் பார்த்துப்பா ”

 

என சொந்தங்கள் அனைத்தும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச… பதில் பேச முடியாமல் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார் தேனு..

 

” நீ அழுதாலும் நாங்க விட போறது இல்ல, வீடு உன் புருஷன் பேருல இல்ல… இன்னும் எங்க அப்பா பேர்ல தான் இருக்கு அதுனால இத்தனை நாள் இருந்ததுக்கு வாடகையை கழிச்சுட்டு தான் உனக்கு பங்கு வரும் ” என அவரது நாத்துனார் நாக்கில் நிரம்பில்லாமல் பேச..  துடித்து போனார் தேனு..

 

சொந்தங்கள் எல்லாம் இந்த காலத்தில் வெறும் வாய் வார்த்தைக்கு தான் என்பது நிதர்சனமான உண்மையாக தோன்றியது அவருக்கு.. வலித்தது தான் ஆனால் என்ன செய்ய முடியும்.. வீடு அவரது கணவர் பெயரில் இல்லாத போது அது பொது சொத்து தானே… கண்ணீரை அடக்கி கொண்டு .. ” ஒரு மாசம் டைம் கொடுங்க அத்துகுள்ள நான் நல்லா வீடா பார்த்து போயிடுறேன்.. அதுக்கு அப்பறம் நீங்க வீட்டை பங்கு போட்டுக்கோங்க… ” என முடிவாக கூறிவிட்டார்.

 

” தனி வீடு பிடிச்சாலும் காசுக்கு எங்க போவ, பேசாம உன் மக வீட்ல போய் இருந்திடு.. புருஷன் இல்லாம தனியா எப்படி ஒரு பொம்பளை இருக்க முடியும் ” என வியாக்கானம் பேச…

 

தன் பொறுமையை கையில் பிடித்து கொண்டு… ” என் பொண்ணை நான் நல்ல இடத்தில கட்டி தான் கொடுத்திருக்கேன் அண்ணி, அவளை விக்கல.. அவளும் வந்து போறதுக்கு அம்மா வீடுன்னு ஒன்னு வேணும் , அதுனால நான் என் பிரச்சினையை பார்த்துக்கிறேன் .. உங்களுக்கு தேவை வீடு தானே தாராளமா எடுத்துக்கோங்க… ”  என முகத்திற்கு எதிராக பேசிவிட..

 

அதில் கடுப்பான அவரது நாத்தி.. ” நல்லதுக்கே காலம் இல்ல போல, நீ கஷ்ட பட கூடாதுன்னு தான் சொன்னேன் .. எனக்கு என்ன வந்துச்சு.. எங்க பங்கு எங்களுக்கு வந்தா போதும்… வாங்க டா போவோம் ” என இரு நாத்தியும் அவரது மகன்களை இழுத்து கொண்டு சென்றனர்.

 

இப்படி ஒரு குடும்பத்தில் தன் மகள் வாக்க படவில்லை என்பதே அவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.. இனி வீட்டிற்கு என்ன செய்வது என்று யோசனையில் இறங்கினார் தேனு..

 

புதிதாக திருமணம் ஆகி இருக்கும் தன் மகளிடம் கூறி அவளையும் வருத்த பட வைக்க விரும்பவில்லை அவர்..

 

***

 

மாலை ஐந்து மணி ஆனதும் சில்லென்ற காற்று மேனியை தழுவுவதை உணர்ந்து மெதுவாக கண் விழித்தாள் சாயா…

 

குளிர் அதிகமாக இருந்தாலும் ஏனோ அவளுக்கு சற்று கதகதப்பாகவும் இருந்தது.. சுகமாக மீண்டும் கண்களை மூடியவள் அடுத்த நொடி அதிர்ந்து விழித்தாள்…

 

அந்த கதகதப்பு எங்கே இருந்து வருகிறது என்பது அவளுக்கு தெளிவாக புரிந்து விட… அவனுக்குள் இருந்து நெளிய ஆரம்பித்தாள் சாயாலி..

 

இருவரும் ஒவ்வொரு பக்கம் தூங்கினாலும் .. குளிரில் இருவரும் ஒருவரை ஒருவர் தேடி நெருங்கி அணைத்து வண்ணம் உறங்கி இருந்தார்கள் .. இதில் சாயாலி மொத்தமாக அவனுக்குள் புதைந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்தாள்…

 

இப்போதே நிதர்சனம் புரிய, அவனை விட்டு விலகும் நோக்கத்தில் அவள் எழ பார்க்க… அவனது கிடுக்கு பிடியில் இருந்து அவளால் அசைய கூட முடியவில்லை…

 

‘ என்ன தைரியம் இருந்தா என்ன கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்கி இருப்பாரு…  எப்படி நான் இங்க வந்தேன் ‘ என சிந்தித்து கொண்டே அவள் எழ பார்க்க…

 

” ப்ச் பேசாம படு யாழி ” என தூக்கத்தில் அவளை மேலும் இறுக்க… அவளுக்கு தான் பொறுமை பறந்து இருந்தது.

 

நறுக்கென்று அவனது இடையில் கிள்ளி வைத்து விட்டு மூக்கு சிவக்க அவள் முறைத்து கொண்டிருக்க .. அவள் கிள்ளியதில் வலி தாங்க முடியாமல் அவள் அலறி எழ… தன் முன் பத்ர காளியாக இருக்கும் தன் மனைவியை பார்த்து குழம்பி போனான்…

 

அடுத்த நொடி சைகையில் சடசடவென ஏதேதோ அவள் பேசியிருக்க… அவனுக்கு தான் புரியாமல் போனது…

 

” உன்ன கட்டுனதுக்கு நான் கிளாசுக்கு போய் தான் உன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தனும் .. கொஞ்சம் மெதுவா பண்ணு அப்போதானே எனக்கு புரியும் … ” என சோம்பல் முறித்து கொண்டே கேட்டான்…

 

அதில் இன்னும் வெறியானவள் .. ” நான் எப்படி இங்க வந்தேன் ” என சைகை செய்ய…

 

” ஏன் உனக்கு அம்னீஷியாவா … நான்தான் உன்ன கூட்டிட்டு வந்தேன் ” என்றான் நக்கலாக…

 

” அது இல்ல… பெட்ல ” என அவள் சுட்டிக் காட்ட…

 

” அதுவா நேத்து உன்ன இங்க தானே படுக்க வச்சேன்… ”

 

” அதான் ஏன் ” என ஆட்டினாள்…

 

” இத நேத்து நான் படுக்க வைக்கும் போதே நீ கேட்டு இருக்கனும்… அப்போ தெரியலையா இது பெட் தான்னு ”

 

” ப்ச் ” என முகத்தை சுழித்தாள்…

 

” அதெல்லாம் இருக்கட்டும் மேடம்… ஏதோ குளிருக்கு இதமா இருந்துச்சு… அதான் அப்படி ஆகிடுச்சு… இப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு ” என்றதும் அவன் கூறிய அலட்சிய பதிலில் அவளுக்கு தான் கோபம் தலைக்கு ஏற.. அவனுக்கு பதில் கூறாமல் அறையில் இருந்து வெளியேற போனவளை தடுத்தது மறவனின் குரல்…

 

” நேத்து ஏன் நீ என் அம்மா போட்டோவை பார்த்து சாக் ஆன ” என மறவன் சாதரணமாக கேட்டு விட .. சாயாலிக்கு தான் இந்த செய்தியில் தலையில் இடி விழுந்ததை போல இருந்தது…

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்