Loading

அத்தியாயம் 14

 

நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க,

 

பரிதிக்கு கொடுத்த தொடர்ச்சியான பிஸியோதெரபி பயிற்சியின் பலனாக அவனும் நடக்கத் தொடங்கியிருந்தான். 

 

மெல்ல மெல்ல நடப்பதற்கு உறுதுணையாக இருக்கும் கம்பியை பிடித்துக் கொண்டு, இனியனின் துணையுடனும் அவன் அறைக்குள்ளேயே நடந்து பயின்றான்.

 

இதற்கு இடையில் ஒரு நாள், பரிதியை சந்திக்க அவர்கள் இருக்கும் பிரகாஷ் நகரைச் சேர்ந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் வந்து இருந்தார்.

 

கூடத்தில் மங்களம் அமர்ந்து இருக்க, அவரிடம் வந்து, “இங்க இளம்பரிதின்றது யாரு..?? ” என்று கேட்டார்.

 

மங்களம், “என் பையன் தான். அவனை எதுக்காக நீங்கப் பார்க்க வந்து இருக்கீங்க..?? ” என்றார் யோசனையுடன்.

 

“உங்க பையனுக்கு கொஞ்ச நாள் முன்ன ஆக்சிடண்ட் நடந்தது தானே.. அதை பத்தி விசாரிக்கத் தான் நாங்க வந்து இருக்கோம்..” என்றார்.

 

“ஆனால்.. அது விபத்து தானே… அதைப் பத்தி என்ன விசாரிக்க வேண்டி இருக்கு..” என்று மங்களம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இனியன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான்.

 

“வாங்க சார்..” என்று வந்தவரை வரவேற்று அமர வைத்தவன், தன் அன்னையிடம், “அம்மா.. சார் க்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வாங்க..” என்றான்.

 

“நீதான் வரச் சொன்னியா இனியா..” என்று இளைய மகனிடம் கேட்டதற்கு,

 

“ஆமாம் ம்மா.. அதைப் பத்தி உங்களுக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன்.. இப்போ கொண்டு வாங்க..” என்று கூற, அவரும் சமையல் அறைக்குச் சென்றார்.

 

“சார்.. அன்னைக்கே உங்ககிட்ட சொன்னது தான். இந்த விபத்து தற்செயலா நடக்கல.. இதை எங்க அண்ணாவுக்குனு தான் நடந்து இருக்கு.. இதை அண்ணாவே என்கிட்ட சொன்னாரு.. இதுக்கு அப்புறம் ஆக்ஷன் நீங்க தான் எடுக்கணும்..” என்ற இனியன் அவரிடம்.

 

“உங்க அண்ணன்கிட்ட விசாரிக்கணும் இனியன்..” என்றார் இன்ஸ்பெக்டர்.

 

“போலாம் சார்.. அண்ணா ஓட அறை மேல இருக்கு. வாங்க போகலாம்..” என்று அவரை அழைத்துச் செல்லும் முன், மங்களம் கையில் பழச்சாருடன் வந்தார்.

 

“சார்.. குடிச்சிட்டு போலாம்..” என்றவன், அதை வாங்கி அவர் கையில் கொடுக்க அவரும் அதை வாங்கி பருக ஆரம்பித்தார்.

 

குடித்து முடித்ததும், அதை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்தவர், “போலாம்..”என்றவுடன் இனியனும் அழைத்துச் சென்றான்.

 

பரிதி அப்பொழுது தான் நடை பயின்று விட்டு ஷோபாவில் சென்று அமர்ந்தான்.

 

இனியன் வருவதைப் பார்த்த பரிதி, “வா… இனியா..” என்று சொல்லி முடிப்பதற்குள், பின்னாலே வந்த இன்ஸ்பெக்டரை கண்டவுடன் புருவம் சுருக்கினான்.

 

அவரை அமர வைத்து விட்டு இனியனும் அவருடன் அமர்ந்து கொண்டான்.

 

இருவரையும் பார்த்த பரிதிக்கு புரிந்து விட்டது.

 

இவன் தான் புகார் கொடுத்துள்ளான் என்று.

 

ஒரு பெருமூச்சுடன், “சொல்லுங்க சார்..” என்றான் அவரைப் பார்த்து.

 

“Mr. பரிதி.. உங்க தம்பி, உங்களுக்கு நடந்த விபத்துல சந்தேகம் இருக்குனு கம்பளைண்ட் கொடுத்து இருக்காரு.. நீங்க அதை பத்தி டீடெயிலா சொன்னீங்கனா, நாங்க அதைப் பத்தி விசாரணை பண்ணுவோம்.. ஓகே.. இப்போ சொல்லுங்க.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா..??” என்று கேள்வி கேட்டு பரிதியைப் பார்த்தார்.

 

தம்பிக்காரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “எனக்கு யார் மேலயும் சந்தேகம் இல்லை சார்..”என்றான் பரிதி..

 

அவனை யோசனையுடன் பார்த்த இனியன்,”அண்ணா…”என்று ஆரம்பிக்கும் முன், அதுக்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என கை காட்டி அவனது பேச்சை நிறுத்தினான்.

 

இனியனும் அமைதியாக இருந்து கொண்டான்.

 

“கண்டிப்பா தெரியுமா.. யாரு மேலயும் சந்தேகம் இல்லையா..” என்று அவர் திரும்பவும் கேட்க,

 

“இல்லை சார்..”என்றான்

 

“சரி ஓகே.. அப்போ நாங்க இந்த வழக்குல யாரு சம்மந்த பட்டிருக்கானு நாங்க விசாரிச்சிட்டு சொல்றோம் Mr.பரிதி..” என்றார் ஆய்வாளர்.

 

“ஓகே.. சார்.”என்ற பரிதி அவருக்கு கைக் கொடுத்து வழி அனுப்பி வைத்தான்.

 

இனியனும் பின்னால் சென்று, அவருடன் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்து விட்டு மீண்டும் தன் அண்ணனை பார்க்க வந்தான்.

 

“அண்ணா…”என்று தம்பிக்காரன் சற்று காட்டமாக அழைத்திட,

 

“எதுக்குடா இப்போ கத்துற.. மெல்ல பேசு.. “என்று அண்ணன்காரன் சலிப்புடன் சொன்னான். 

 

“நீ ஏன் அப்படி சொன்ன..” என்று கேட்டிட,

 

“என்ன சொன்னேன்..” என்று மீண்டும் திரும்பிக் கேட்டான் பரிதி.

 

“ஐயோ.. சும்மா கடுப்பேத்தாத..” என்று சற்றே கோவமாக சொன்னான் தம்பி.

 

“ஹும்ம்ம்ம்…” ஒரு பெருமூச்சை விட்டவாரு, “நான் உன்ன கம்பளைண்ட் கொடுக்க வேண்டாம்னு தானே சொன்னேன். நீ ஏன் பண்ண..” என்று கேட்டான் அண்ணன்.

 

“இது தற்செயலா நடக்கலைனு தெரிஞ்ச பிறகு சும்மா இருக்க சொல்றியா.. இதுக்கு ஏதாவது ஆக்ஷன் எடுத்தா தான் எதிரிக்கு கொஞ்சம் பயமும் இருக்கும்.இதுக்கு மேலயும் எதுவும் முயற்சி பண்ணாம இருப்பாங்க..” என்றான் கோவமாக.

 

“இது யாரு முயற்சி பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். “என்றான் பரிதி..

 

“யாரை சொல்ற..”என்று புருவம் சுருக்கி கேட்டான் தம்பிக்காரன்.

 

“இன்னுமா உனக்கு புரியல..”என்றான் இதழ்களை  கோணலாக வளைத்து சிரித்தபடி.

 

“சஞ்சய்..” என்றான் புருவம் சுருக்கி..

 

ஆமாம் என்று தலை அசைத்தான் அண்ணன்.

 

“டேமிட்..”என்று அவனை திட்டியவன், “அவனை ஒரு வழி பண்றேன்..” என்று உடனே அங்கிருந்து கிளம்பினான்.

 

“டேய்.. எங்க டா போற?? “என்று விறு விறுவென சென்றவனை நிறுத்தி அண்ணன்காரன் கேட்க,

 

“அவனை சாவடிக்காம விட மாட்டேன். என்ன தைரியம் இருந்தா இந்த அளவுக்கு அவன் இறங்குவான். இன்னைக்கு என் கையாள தான் அவனுக்கு சாவு..”என்றான் ஆத்துறதுடனும் அதீத கோபத்துடனும்.

 

“இப்போ நீ போன, உன்னை தான் நான் சாவடிக்க போறேன். முதல்ல இப்படி எதுக்கு எடுத்தாலும் அவசரப் பட்டு முடிவு எடுக்காத.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு நிரூபிச்சிட்டே இருக்க.. நான் அவன் தான் பண்ணிருப்பான்னு தெரிஞ்சும் அமைதியா இருக்குறேனா, அவனுக்கு சரியான நேரத்துல வைக்க போறேன் செக். அதுக்கு முன்னாடி நீ எதுவும் சொதப்பி வைக்காத.. ” பரிதி சற்று காட்டத்துடன் தம்பிக்காரனிடம் கூறிக்கொண்டு இருந்தான்.

 

எதுவும் பேச முடியாமல் கோபத்துடன் அவனை முறைத்து விட்டு வெளியேறிப் போகையில், “டேய்ய்…”என்று பரிதி அழைக்க, “அந்த சஞ்சயை பாக்க போகல.. போதுமா..”என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.

 

அதே நேரத்தில், இவர்களின் தொழிற்சாலையில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இவர்களின் பொருட்கள் மீண்டும் இவர்களுக்கே திரும்ப அனுப்பப்பட்டது என்றும் இவர்களிடம் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கின்றோம் என்றும் இவர்களுக்கு வெளிநாட்டு பங்குதாரர்களிடம் இருந்து மின் அஞ்சல் வந்து சேர்ந்தது.

 

இதனைப் பார்த்த பரிதிக்கோ அதிர்ச்சியாய் இருந்தது.

 

எப்படி இது சாத்தியம் என்று…

உடனே ஸ்டீபன் என்பவனுக்கு. அழைப்பு விடுவித்தான் பரிதி.

 

அவனும் அழைப்பை ஏற்று, “ஹாய்.. பரிதி.. சொல்லு மேன்..” என்றிட,

 

“ஸ்டீபன், வாட் ஹேப்பண்ட்… எதுக்கு அக்ரீமெண்ட் கேன்சல் பண்ணீங்க..” கேட்டதற்கு,

 

“உங்க ப்ராடக்ட் எதுலயும் குவாலிட்டி இல்லை மேன். இங்க யூஸ் பண்ணவங்களுக்கு ஸ்கின் அலர்ஜி வந்துருச்சு. அதனால அதை தொடர்ந்து யூஸ் பண்ண முடியாது.. சோ நாங்க திருப்பி அனுப்பிட்டோம். நாங்க உங்களுக்கு கொடுத்த அமௌண்ட்டை எங்களுக்கு திரும்ப அனுப்பி வச்சிருங்க.”என்று பாதி தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து பேசிக் கொண்டிருந்தான்.

 

“கண்டிப்பா இருக்க வாய்ப்பில்லை.. நாங்க எல்லாமே இயற்கையான ஹெர்பல்ஸ் மட்டும் தான் யூஸ் பண்றோம். அப்படியே கெமிக்கல்ஸ் இருந்தாலும் அது எல்லாம் ரொம்ப ரொம்ப மிகக் குறைவான அளவு. அதுனால எந்த பாதிப்பும் ஏற்பட வைப்பே இல்லை. எங்ககிட்ட அதற்கான சான்றிதழ் இருக்கு..”என்றான் சற்று ஆவேசத்துடன்.

 

“நான் என்ன பொய்யா சொல்றேன். எனக்கு பொய் சொல்லணும்னு என்ன அவசியம் வந்துச்சு. நானே விருப்பட்டு தானே உன் கம்பெனி கூட அக்ரீமெண்ட் போட்டேன். அப்புறம் எப்படி மேன் நான் பொய் குற்றச்சாட்டு வைக்க முடியும்.. “என்றதற்கு, பரிதியால் எந்த பதிலும் கூற முடியவில்லை.

 

ஆம் அவன் சொல்வதும் உண்மைதானே. 

 

அவர்களாகத் தானே விரும்பி நம்மிடம் வந்தார்கள்.

 

இப்பொழுது பொருட்களின் தரம் சரி இல்லை என்று அவர்கள் ஏன் பொய்யாக சொல்ல வேண்டும்.

 

யோசித்தான்.. ஆனாலும் எதுவும் புலப்படவில்லை.

 

ஒரு வேளை இவர்களின் மூலம் அந்த சஞ்சய் எதுவும் நாடகம் ஆடுகிறானா..

 

ஸ்டீபன் இந்த பக்கம் இருந்து எந்த பதிலும் வராததால், அழைப்பை அணைத்து விட்டான்.

 

இனியனோ, இப்பொழுது தான் கோவமாகச் சென்று இருக்கின்றான்.

 

மறுபடியும் அவனிடம் இந்த விடயத்தை இப்பொழுது கூறினால், அதற்கும் சேர்த்து ஆடுவான்.

 

வெளிநாட்டு பங்குதாரர்கள், அவர்களுடைய ஒப்பந்ததை ரத்து செய்து விட்டதால், இனி அவர்களுக்கு இங்கிருந்து நம்முடைய தயாரிப்புகளை அனுப்ப முடியாது.

 

அவர்களுக்காக செய்யப்படும் தயாரிப்புகளை முதலில் நிறுத்தச் சொல்ல வேண்டும். இல்லை என்றால் நமக்கு இன்னும் மேலும் நஷ்டம் ஆகும், என்று நினைத்தவன் உடனே தொழிற்சாலையில் இருக்கும் மேனேஜருக்கு அழைத்து வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் தயாரிப்புகள் என்ன என்னவோ அதன் தயாரிப்புகளை அப்படியே நிறுத்த சொல்லி இருந்தான்.

 

அவரும் சரி என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.

 

பரிதி தான் இது எப்படி சாத்தியம் என்று குழம்பி போனான். 

 

***************

 

நிரஞ்சனா, விக்ரமிற்கு அவன் முதலில் படித்த கல்லூரியிலேயே அவனுக்கு, சேர்க்கைக்கான விண்ணப்பதை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து விட்டாள்.

 

அவன் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால், இவள் சென்று கேட்டதும் கல்லூரி அதிபர், அவன் யார், எந்த துறையில் படித்தவன் என்பதை பார்த்து விட்டு அவனுக்கு மீண்டும் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை வழங்கி இருந்தனர்.

 

விக்ரமும் இப்பொழுது, நன்றாகத் தேறி இருந்தான். அதனால் தான் அவனுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்து இருந்தாள் நிரஞ்சனா.

 

இருந்தாலும் அதிக வெளிச்சத்தை சிறிது காலத்திற்கு பார்க்க வேண்டாம் என்ற அறிவுரையுடன் அவன் கல்லூரிக்கு புறப்பட்டான்.

 

இனிமேல்,  தான் வீட்டிலேயே இருந்தால் சரி வராது என்று கருதி, அவளும் வேலைக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கும் வந்து இருந்தாள்.

 

அவள் ஏற்கனவே ஆசிரியராகப் பணி புரிந்த இடத்தில் கேட்டுப் பார்க்க, அங்கு காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லாததால், மீண்டும் வேறு சில பள்ளிகளில் தொடர்பு கொண்டாள்.

 

எந்த இடத்திலும் அவளுக்கு அவள் எதிர் பார்த்த பதில் கிடைக்கவில்லை.

 

இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள், அவள் படித்த படிப்பை வைத்து அதற்கு சம்மந்தமான நிறுவனங்களுக்கு காலிப் பணியிடங்கள் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கி இருந்தாள்.

 

அவள் படித்ததோ, M.Sc பயோடெக்னாலஜி. அது போக ஒரு வருடம் ஆசிரியர் பயிற்சி பயின்று இருந்தாள். அதனால் தான் அவள் தனியார் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவை எடுத்துக் கொண்டிருந்தாள். 

 

இப்பொழுது அதற்கு அமையாததால், நிறுவனங்களுக்கு சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

 

அதன் தொடர்ச்சியாக, அவள்  மூன்று நிறுவங்களுக்கு விண்ணப்பித்து விட்டாள்.

 

எப்படியும் நேர்காணலுக்கு அழைத்து விடுவார்கள் என்ற எண்ணத்துடன் அதற்காக காத்திருக்கவும் தொடங்கி விட்டாள். 

 

 

நித்தமும் வருவாள். 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்