
இன்று:
கார்த்திகா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் விழி திறந்து விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தவளின் விழிகள் கண்ணீரை சுமந்து நின்றது, அவளின் செவிகளுக்குச் சிலரின் குரல்கள் கேட்டது, அதில் ஒன்று அவள் மனதிற்கு நெருக்கமானவனின் குரல். அந்தக் குரல் தெளிவாக கேட்டது.
‘இந்தக் குரல் என் தீராவின் குரல் தான்’ எனச் சந்தோசம் கொண்டது பேதை பெண்ணவளின் மனம். முதலில் குரலை மட்டும் கேட்டு சந்தோசம் கொண்டவளின் மனமோ இப்போது என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என கவனிக்க ஆரம்பித்தது.
தொலைவில் கிசுகிசுப்பாய் கேட்ட குரல் இப்போது அருகில் கேட்பதை போல் உணர்ந்தாள்.
“தீரா” அவளின் இதழ்கள் மெல்லச் சொல்லி நாணம் கொண்டது. அவனை முதல் முறை பார்த்த காட்சிகள் அவள் கண் முன் படம் போல் ஓடியது. அறைக்குள் இருந்த படியே மழையில் நனைந்து போனாள் அகரநதி.
கொட்டி தீர்த்த காதல் மழையின் முதல் துளியிலிருந்து சாரலாய் முடிவுற்ற மழையின் கடைசி துளிகள் வரை மொத்தமாய் நனைந்து போனாள் அவள்.
இத்தனை நாள் கோமாவில் இருந்தவளின் இதழ் முதல் முறை புன்னகையைச் சுமந்தது. அவள் படுத்திருக்கும் அறை அருகே தான் அவன் பேசிக் கொண்டிருந்தான். அவளின் தீரன், சில நொடிகளில் தன் காதலானவனைப் பார்க்க போகிறோம், அனைத்தையும் அவனிடம் சொல்லி விடப் போகிறோம் என்ற எண்ணம் அகரநதிக்குள் எழுந்தது. அவன் குரல் கேட்டு செவிகளைக் கூர்மையாக்கினாள்.
அவளை காக்க வந்த கடவுள் போல் அவனை நினைத்தாள். அவளுக்கானவன் வந்துவிட்டான் என்ற எண்ணமே அவளின் மனதிற்கு
நிம்மதியை கொடுத்ததோடு தைரியத்தையும் சேர்த்து கொடுத்தது.
உடல் முழுக்கப் குளிர் பரவிய படி அங்கு இயங்கிக் கொண்டிருந்த ஏசி அவளுக்குக் குளிர்ந்த உணர்வை கொடுத்தது. இருகைகளையும் தேய்த்து முகத்தில் ஒற்றியெடுத்தவள், முதல்முறை நடை பயலும் குழந்தை போல் தயங்கி தயங்கி தன் பாதங்களை, கீழே பதித்தாள் கட்டிலின் கம்பியை பிடித்தபடி மெல்ல நடந்து கதவருகே சென்றாள் இப்போது அவனுடைய குரல் அவளுக்கு மிக அருகில் கேட்டது.
அவன் விழிகளைப் பார்த்து காதலையும் சொல்லி விட வேண்டு்ம். அவளுக்கு தெரிந்த உண்மைகளை அவனிடம் கொட்டி தீர்த்து விட வேண்டும். ஒரு முறையேனும் உரக்க கத்தி காதலை சொல்லி விட மாட்டோமா? என அவளின் ஒரு தலைக் காதல் ஏங்கி தவித்தது.
“என்னை மீட்க என் தீரா வந்துவிட்டான்” என அவளின் மயில் தோகை விழிகள் படபடத்தது. அவனைக் காண எண்ணி தவித்த விழிகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று குழம்பி தவித்தாள் பேதை பெண்ணவள்.
அவன் கரம் தனை பிடித்து அனைத்தையும் சொல்லியாக வேண்டும், முதலில் கார்த்திக்கை பார்க்க வேண்டும், அவனிடம் தீராவை அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.
“கார்த்தி என்னோட தீரா வந்துட்டான்டா, நீ ஏன்டா என்னைப் பார்க்க வரலை, நீ எங்கே இருக்க..?” எனத் தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டாள் நதி. அவனின் உயிர் தோழனை அவள் மனம் தேடியது.
அதே சமயம் கதவின் மறுபுறம் நின்று யாரிடமோ தொலைப்பேசியில் உரக்க பேசிக்கொண்டிருந்தான் தீரா.
“செந்தமிழன் பார்த்து பதமா நடந்துக்கங்க, நான் என் டார்லிங்கை பார்க்க போற நேரத்துல போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” நக்கலாய்ப் பேசினான் தீரேந்திரன்.
“இங்கே பாருங்க தீரேந்திரன் அந்தப் பொண்ணு, உயிரோட எனக்கு வேணும்”
“நான் கேட்டதை நீங்க செஞ்சீட்டிங்க, நீங்க கேட்டதைக் கண்டிப்பா நான் செய்வேன், இதுக்கு மேல பேசினீங்கன்னா, இந்தப் போலீஸ்காரனோட ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” என மிரட்டலாய்ப் பேசினான் தீரேந்திரன்.
“என்னது இவரு அமைச்சர் செந்தமிழனோட ஆளா.? தீரா நல்லவரு இல்லையா..?” எனத் தன்னிடமே கேட்டவளின் விழிகள் அதிர்ச்சியைத் தத்தெடுத்தது. இதைக் கேட்டவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் படுக்கையில் படுத்தவளுக்குத் தீராவின் மேல் கோபம் எழுந்தது, அவன் வரும் அரவம் கேட்டு, நடை பயிலும் குழந்தை சுவற்றை பிடித்துக் கொண்டே நடந்து வந்தவள். படுக்கையில் படுத்து, விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
அவள் கட்டி வைத்திருந்த காதல் கோட்டையை ஒரு நொடியில் ஒரே ஒரு வார்த்தையில் தகர்த்திருந்தான் தீரேந்திரன். அவள் துளியும் இதை எதிர் பார்த்திருக்கவில்லை. நான் காதலித்த வீரா கெட்டவனா? அவளின் மனம் நம்ப மறுத்தது. டொக் டொக் என்ற பூட்ஸ் காலடி சத்தம் மிக அருகில் கேட்க. நிற்காமல் வழிந்தக் கண்ணீரை அவசரமாய் துடைத்தெறிந்தவள். அமைதியாய் விழிகளை மூடிய நொடியில்,
மருத்துவரும் தீரேந்திரனும் ஒன்றாய் சேர்ந்து புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்தனர்.
“என்ன சார், எழுந்து எதாவது பேசினாங்களா..?” அகரநதியை விழிகளில் ஆராய்ந்த படி கேட்டான்.
“இல்லை சார் ரொம்பச் சைலண்டா இருந்தாங்க, எதுமே பேசலை, அவங்க அந்தச் சம்பவத்துல இருந்து இன்னும் வெளிய வந்திருக்க மாட்டாங்க சார், அவங்களுக்கு அது நேத்து நடந்த மாதிரி இருக்கும், இத்தனை நாள் கோமால இருந்தோம்னு கூட அவங்களுக்குத் தெரியாது சார்” என மருத்துவர் விவரித்தார்.
“என்னது நான் கோமாவில் இருந்தேனா..? கார்த்திக்கு என்ன ஆச்சு அவன் ஏன் இங்க வரலை” வழிமூடி கிடந்தவள் தனக்குள் யோசனை செய்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ எழுந்திருப்பாங்களா.?” தீரா கேட்டவனின் பார்வை அவளை விட்டுச் சற்றும் நகரவில்லை
“வெயிட் சார்” என்ற மருத்துவர்.
“அகரநதி..! கேன் யூ ஹியர் மீ..?” மருத்துவர் அழைத்தார் அவளின் கருவிழிகள் சுழன்றது.
“நதி” மென்மையினும் மென்மையாய் அழைத்தான் அவளின் தீரேந்திரன்.
“சார் ஷி இஸ் ரெஸ்பான்டிங்” மருத்துவர் மன நிம்மதியோடு சொன்னார்.
“நதி கேட்குதா..?” கேட்காதது போல் இமை திறக்காமல் பாசாங்கு பண்ணினாள் அகரநதி. அவன் மீது ஒரு சதவிகித நம்பிக்கை இல்லாமலும். தன் நிலைமைக்கு யார் காரணம் என தெரிந்துக் கொள்ளவும் இறுதியாய் வேறு விழியின்றி விழி திறந்து பார்த்தாள்.
“நதி நீ ஓகே தானே?” விழியில் ஆவல் தேங்க கேட்டான் தீரேந்திரன். அவள் கரங்களை விரைந்து பற்றியிருந்தான், அவனுடைய கைகளை வேகமாய் உதறிவிட்டவள்,
“யார் நீங்க..? ஏன் கைய பிடிக்குறீங்க” கோபமாய்ப் பார்த்தாள் அகரநதி. அவள் பார்வை அவனை சுட்டெரித்தது.
“நதி என்ன தெரியலையா..?”
“தெரியுதே போலீஸ் ட்ரெஸ் போட்டிருக்கீங்க போலீஸ் தானே, எனக்குப் போலீஸை கண்டாலே பிடிக்காது, என்னோட அப்பா அம்மா எங்கே.?” என விரைந்து எழ முயற்சித்தவளை அதிசயித்தப் படி பார்த்தான் தீரேந்திரன்.
“டாக்டர், என்ன இப்படிப் பேசுறாங்க அகரநதிக்கு என்ன ஆச்சு” வினவினான் தீரேந்திரன்.
“நத்திங் டூ சே, மெம்மரி லாஸ் தான் சார், வேற எதுவும் இல்லை, அகரநதி எல்லாத்தையும் மறந்துட்டாங்க, இந்த மாதிரி கேஸஸ்ல இது ரொம்பவே நார்மல் தான் சார்” என மருத்துவர் விவரித்தார்.
“அப்போ நான் இவங்களை விசாரணை பண்ண முடியாதா?” தீரேந்திரன் கேட்க,
“அவ எல்லாத்தையும் மறந்ததே போதும் விசாரணைலாம் செய்ய நாங்க அனுமதிக்க மாட்டோம்” எனக் கோபாலனின் குரல் அவன் பின்னேயிருந்து ஒலிக்க, தீரேந்திரன் திரும்பி பார்த்த போது வசந்தியும் கோபாலனும் வந்து நின்றிருந்தனர்.
“உங்க பொண்ணை நான் விசாரிச்சு தான் ஆகணும் இது மேல் இடத்து உத்தரவு” என உறுதியாய்ச் சொன்னான் தீரேந்திரன்.
அகரநதிக்கோ ஒன்றும் விளங்கவில்லை “என்ன கேஸா இருக்கும்..? இவர் எதுக்கு என்னை விசாரிக்கணும்னு சொல்றாரு, அன்னைக்கி நடந்தது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சோ..? கார்த்தி எங்கே தான்டா போன, நீ இருந்தா தான் இந்த விசயத்தை நான் சமாளிக்க முடியும்” என நினைத்தபடி மருத்துவமனை கட்டிலில் துறு துறுவென விழிகளை உருட்டிய படி விழித்துக் கொண்டிருந்தாள்.
“தீரேந்திரன் முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும், என் பொண்ண இதுல இன்வால்வ் பண்ணாதீங்க ப்ளீஸ், அவளோட பாஸ்ட் அவளுக்குத் தெரியாம இருக்குறது தான் அவளுக்கு நல்லது” என முகத்திற்கு நேராய் சொல்லிவிட்டு அகரநதி அருகே சென்றிருந்தார் கோபாலன் அவருடன் சேர்ந்து சென்ற வசந்தி.
“அதி மா..? அம்மாவ தெரியுதாடா” எனக் கேட்க, அம்மா என்று கட்டிக்கொண்டு கேவி அழுதாள் அகரநதி.
அவளின் செயல்கள் ஒவ்வொன்றையும் விழியசையாது பார்த்துக் கொண்டிருந்தான் தீரேந்திரன். மருத்துவர் அருகே சென்றவன்.
“என்ன சார் அவங்க அம்மா அப்பாவலாம் நினைவில இருக்கிறாங்க நான் மட்டும் எப்படி நினைவில் இல்லாமல் போனேன். சம்திங் இஸ் ராங்” என தீரா கிசுகிசுக்க.
“உங்களுக்கு சந்தேகமான க்ளியர் பண்ணிடலாம் சார்” என்றார் மருத்துவர்.
“அதி கண்ணு” தலைக்கோதி விட்டார் கோபாலன். வெகு நாட்கள் கழித்து அவள் குரல் கேட்பதே இருவருக்கும் நிம்மதி அளித்தது.
“சரி எல்லாரும் கொஞ்சம் வெளிய போங்க, அவங்களுக்கு ஸ்கேன் எடுத்திட்டு டிஸ்சார்ஜ் பண்ணலாம்” என மருத்துவர் சொல்ல, கோபாலன், வசந்தி தம்பதி வெளியே சென்ற நொடி, யாருக்கோ அழைப்பு விடுத்திருந்தான் தீரேந்திரன்.
“செந்தமிழன் பொண்ண பார்த்தாச்சு, அந்தப் பொண்ணுக்கு எல்லாமே மறந்து போயிருச்சே என்ன பண்ணலாம், என்னைக் கூட மறந்து போயிருக்கான பாருங்க” என அவன் பேசிக்கொண்டிருந்த போது அதியின் முக அசைவுகளையும் அவளின் பதட்டத்தையும் மறக்காமல் குறித்துக் கொண்டான் தீரேந்திரன்.
“அப்போ கார்த்தியை போட்டுத் தள்ளிரலாம், விசயம் தெரிஞ்ச ஓரே ஆள் அவன் தான், நம்ம கஸ்டேடியில் இருக்குறதால நமக்கு வசதியா போச்சு” என அவன் சொன்ன போது அதியின் விழிகள் தீவிரமாகின. அவளின் விழியில் தானாய் நீர் சுரந்தது.
‘கார்த்திக்கு என்ன ஆச்சு?’ அவளின் மனம் படபடத்தது.
“சொல்லீட்டிங்கல்ல செஞ்சிட்டா போச்சு ஹா ஹா ஹா” எனச் சிரித்தான் தீரேந்திரன் அகரநதிக்குள் எரிச்சலை மூட்டியது.
‘இவனெலாம் என்ன போலீஸ், தப்பானவனுக்குத் துணை போறது தான் போலீஸா இவனைப் போய் ரோடு ரோடா சுத்தி காதலிச்ச என்னைத் தான் சொல்லணும், கார்த்தி இவன்கிட்ட இருக்குறான்னா.? எல்லாமே செந்தமிழனோட ப்ளானா தான் இருக்கும், இப்போ கார்த்தியை பத்தி எப்படித் தெரிஞ்சுக்கிறது.?’ என யோசித்துக்கொண்டிருந்தவளின் அருகே வந்தவன் அவளின் முகம் பார்த்து கோணலாய் சிரித்தான்.
“என்ன நதி மனசு கார்த்தியை தேடுதோ?” அவன் கேட்க அவள் பதில் தராமல் அமைதிக் காத்தாள்.
“எத்தனை நாள் இந்த நாடகம்ன்னு நானும் பார்க்கிறேன் நதி, தீராநதியாவோமா..?” நக்கலாய் அவன் சிரிக்க, அடக்கபட்ட கோபத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தவளின் விழிகள் நீர் தேங்கி நின்றது.
“ஸ்டே அவே ஃபரம் மீ” அவனைப் பார்த்து நேராய் முறைத்தாள். அவனோ அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“இடியட்” எனத் திட்டி கடந்து சென்ற நதியை ரசித்துக் கொண்டிருந்தது தீராவின் விழிகள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னமோ போ தீரா … ஷாக்கிங் நதிக்கு மட்டுமில்ல எங்களுக்கும் தான் …
எந்த சூழ்நிலையில் அகர் கோமாவிற்கு சென்றிருப்பாள்? எந்த பதட்டமும் பயமும் இல்லாமல் இருக்கிறாளே!
தீராவின் குரல் கேட்டதும் குழந்தைபோல் குதூகலித்து எழுந்தவள், அவன் பேசியதை கேட்டதும் மனம் குழம்பி போய் நிற்கிறாள்.
பழையது மறந்துவிட்டால் மறந்ததாகவே இருக்கட்டும் என்று எண்ணும் பெற்றோர்.
வழக்கை விசாரித்தே தீருவேன் என்று விடாப்பிடியாக நிற்கும் தீரன்.
அவன் மேல் உள்ள சந்தேகத்தில் அவனை தெரியாதவள் போல் காட்டிக்கொள்ளும் அகர்.
காவல்காரன் மூளை ஆயிற்றே மறந்தது போல் நடிக்கும் அகரின் எண்ணம் புரியாத என்ன?