Loading

காதல் -14

 

அத்தனை பெரிய போர்வையை போர்த்தி இருந்தாலும் ஏனோ இன்று குளிர் அதிகமாக இருப்பதாக தோன்ற… அந்த போர்வைக்குள் முழுதாக தன்னை சுற்றிக் கொண்டு படுத்திருந்தாள் சாயாலி..

 

ஏனோ அசவுகரியாமாக இருக்க… வெளியே கேட்கும் சத்தத்திலும்.. ஜில்லென அவள் மீது அடிக்கும் குளிர் காற்றில் தூக்கம் மொத்தமும் கலைந்து இமைகளை பிரித்தவளுக்கு .. ட்ராக் பேண்ட் மற்றும் கையில்லா பனியனுடன் காட்சி கொடுத்தான் மறவன்..

 

முகம் முழுவதும் வேர்வையில் முக்குளித்து இருக்க… மீண்டும் கண்ணை கசக்கி விட்டு பார்த்தவளுக்கு நிதர்சனம் புரிய.. சட்டென்று அந்த சோபாவில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

 

அவள் எழுந்ததை அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் அவன் வேலையில்  கவனமாக இருக்க.. ” என்ன இந்த குளிர்ல இவனுக்கு இப்படி வேர்க்குது ” என மனதிற்கு நினைத்தாலும்… ‘ இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப தேவையா ‘ என மனம் காரி துப்ப… அமைதியாக எழுந்து பால்கனிக்கு சென்றாள்.

 

ஜில்லென்ற காற்று அவளது மேனியை தழுவி சென்றது.. இயற்கையை ரசித்த வண்ணம் அதை இதமாக அனுபவித்தவள்.. நேற்று இரவு இதே பால்கனியில் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தாள்..

 

இறுதியாக ” மேடம் யாரை கொலை பண்ணீங்க ” என மறவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனவள்.. அவனுக்கு பதில் கூறாமல் அறைக்குள் செல்ல பார்க்க… அவளது கைகளை பற்றி  வேகமாக தன் பக்கம் இழுத்தவன் ” கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லனும்” என அழுத்தமான பார்வையுடன் கூறியவனை பார்க்க சற்று நடுங்க தான் செய்தது அவளுக்கு…

 

அதற்கும் அவள் அமைதியையே கடைபிடிக்க.. பெரும் மூச்சை விட்டவன்.. ” உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு ” என அவளை இழுத்து கொண்டு பால்கனி கதவை அடைத்து விட்டு அறைக்குள் வந்தான்.

 

“பெட் நல்லா பெருசா தான் இருக்கு, சோ நீ அந்த பக்கம் தாராளமா படுக்கலாம் .. ” என்றதும் அவனை தீயாக முறைத்தாள்..

 

அறையை சுற்றி பார்த்தவள் குளிருக்கு கண்டிப்பாக தரையில் படுக்க இயலாது என்பதை அறிந்து.. அவன் பெட்டில் இருந்து ஒரு கனமான போர்வையை மட்டும் எடுத்து கொண்டு அங்குள்ள பெரிய சோபாவில் உள்ள சின்ன தலையணையை தலைக்கு வைத்து கொண்டு அந்த கனமான போர்வையை போர்த்தி கொண்டு ‘ போதுமா ‘ என்பதை போல பார்க்க.. அவளது செய்கையில் உள்ளுக்குள் சிரித்தவன்… வெளியே ” சரியான அழுத்துக்காரி ” என்றே முனங்கினான்..

 

இரவில் புத்தகம் படித்து விட்டு தூங்கும் சாயாவிற்கு , இன்றும் தமிழ் காதலன் புத்தகத்தை தேட… பைத்தியம் பிடிப்பதை போல இருந்தது..

 

பத்து நிமிடம் , இருபது நிமிடமாக மாற தூக்கம் தான் வந்த பாடில்லை… புரண்டு படுத்து போர்வைக்குள் சுற்றி கொண்டிருந்தவளை பார்த்தவன்…

 

” எதுக்கு இப்படி சுத்தி வர, அங்க படுக்க கம்போர்ட்டா இல்லேனா இங்க வந்திரு.. இல்ல புது இடம்னு தூக்கம் வரலையா ” என அவன் கேட்டு விட…

 

‘ புத்தகம் வேண்டும் என அவனிடம் கேட்டு விடலாமா ‘ என மனதிற்குள் நினைந்தவள் அதையே கேட்டும் விட்டாள்…

 

சைகையில் தனக்கு புத்தகம் படிக்காமல் ஒரு நாளும் தூக்கம் வராது என்று கையை ஆட்டி கட்ட.. அவள் செயலில் சற்றே முகத்தை மாற்றியவன்..

 

” என்கிட்ட புக்ஸ் இருக்கு ” என்று அவளுக்கு நேர் உள்ள கண்ணாடி அலமாரியை காட்டினான்.. அதுதான் அவளுக்கும் தெரியுமே .. அறைக்குள் வந்ததும் முதலில் புத்தகத்தை பார்த்து தானே மிரண்டு போனாள்.

 

கிட்டத்தட்ட அதில் ஒரு நானூறு புத்தகமாவது இருக்க வேண்டும்… அலமாரியை எப்போது திறப்பான் என காத்திருந்தவளுக்கு லாட்டரி விழுந்ததை போல அவனே அலமாரியை காட்ட….

 

” நான் திறந்து புக் எடுத்துக்கவா ” என செய்கை செய்ய…

 

” ம்ம் ” என்றதோடு அவனது வார்த்தைகள் இறுகி போனது.

 

அடுத்த நொடி அலமாரி கதவு திறந்து இருந்தது… ஆசையாக புத்தகங்களை எல்லாம் தன் பிஞ்சு விரல்களால் வருடி பார்த்தாள். ஏனோ இத்தனை நேரம் இருந்த இறுக்கம் அவளுக்கு சற்று மட்டு பட்டதை போல இருக்க… அங்கு என்னென்ன புத்தகங்கள் எல்லாம் இருக்கிறது என் ஆராய தொடங்கினாள்.

 

” நீ விரும்பி படிக்கிற புத்தகம் எது ….” என்றவனின் கேள்விக்கு…

 

” தமிழ் காதலன் புத்தகம் எதுவா இருந்தாலும் ரொம்ப பிடிக்கும் ” என கண்களை அகல விரித்து சைகை செய்து அவளது பிடித்தத்தை காட்ட..

 

” ஓ ” என்று மட்டுமே வெளி வந்தது அவன் குரல்..

 

” அவரை பார்த்து இருக்கியா ” அடுத்த கேள்வியில் வேகமாக தலையை ஆட்டினாள் ஆம் என்று….

 

” எப்போ.. ?”

 

” அது சரியா தெரியலை ஆனால் ஒரு விழாவுக்கு வந்து இருந்தாங்க.. ஆட்டோகிராஃப் வாங்க முடியலை ” என கவலையாக சைகை மொழியில்..

 

” இனிமே தமிழ் காதலன் புத்தகத்தை நீ படிக்க கூடாது… ” கட்டளையாக வெளி வந்தது அவனது வார்த்தை..

 

” என்னது…… ” என அதிர்ச்சியாக கேட்டவளை சற்றும் மதிக்காமல் … ” சீக்கிரம் ஒரு புக்கை எடுத்துட்டு வந்து படு… இல்லேனா அந்த புக் உள்ள அலமாரியை பூட்டி வச்சிடுவேன்” என மிரட்டிய மறவனை வெறி கொண்டு முறைத்தவள்… இறுதியாக ஒரு புத்தகத்தை தேர்வு செய்து எடுத்து கொண்டு வந்து அந்த இடத்தில் படுத்துக் கொண்டாள்…

 

சரியாக பதினைந்து நிமிடம் அந்த புத்தகத்தை புரட்டி இருப்பாள்… அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த புத்தகம் அவள் மார்பு மீது துயில் கொள்ள, அவளும் சுகமான நித்திரையை தழுவினாள்..

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளாமல் விட்டத்தை வெறித்து பார்த்தவன் சற்று நேரத்தில் அவனும் உறக்கத்தை தழுவி இருந்தான்.

 

” என்ன காலையிலேயே பகல் கனவா ” என்றவனின் அழைப்பில் தன்னிலை அடைத்தவள்.. தலையை இட வலமாக ஆட்டி விட்டு மாற்று உடையை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்..

 

சரியாக இருபது நிமிடத்தில் குளித்து விட்டு மீண்டும் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு தலையில் துண்டோடு வெளி வந்தவளை கண்டு கொள்ளாது அவளுக்கு பின் அவன் குளித்து வெளியே வந்தான்.

 

அதற்குள் சாயாலி தலையை உலர்த்தி இரு பக்கமும் முடி எடுத்து கிளிப் செய்து நெற்றியில் பொட்டிட்டு கீழே இறங்கினாள்…

 

” குட் மார்னிங் மா மருமகளே ” என்ற மூர்த்தியின் குரலுக்கு… ” டீ குடிக்கிறீங்களா ” என சைகையில் கேட்க…

 

” நோ மா நான் சுகர் பேஷண்ட்… கிரீன் டீ தான் … அதுவும் குடிச்சுட்டேன் ” என அன்றைய நாளிதழை புரட்ட ஆரம்பித்தார்.

 

சாயாலி நேராக சாமி அறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு தனக்கான டீயை தயாரித்து கொண்டு வெளியே உள்ள தோட்டத்தில் அமர்ந்து டீயை பருக… அதே நேரம் மாடியில் இருந்து டிப் டாப்பாக கிளம்பி வந்தான் மறவன்.

 

” டேய் இன்னைக்கு எங்க போற… ”

 

” என்ன பா எப்பவும் எங்க போவேன்… நம்ம எஸ்டேட்க்கு தான் ” என தந்தையிடம் பதில் கூறினாலும் கண்கள் என்னவோ தன் மனைவியை தான் தேடியது..

 

” இன்னைக்கு நம்ம மருமகளை மேலே உள்ள எஸ்டேட்க்கு கூட்டிட்டு போ டா அவ அதை எல்லாம் பார்த்தது இல்லேல …”

 

” எனக்கு வேற வேலை இல்லன்னு நினைசீங்களா ” என பொரியும் மகனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தவர்…

 

” இதெல்லாம் எங்க திருந்த போகுது.. புது பொண்டாட்டியை வெளியே கூட்டிட்டு போக கசக்குது ” என அவன் காதில் கேட்கும் படியாகவே முனங்கி விட்டு அறைக்குள் அடைந்து கொண்டார்..

 

அதன் பின் சற்றே யோசித்தவன்.. தன் மனைவியை தேடி வெளியே செல்ல … அவளோ தோட்டத்தில் உள்ள மலர்களுடன் மலராக அமர்ந்திருந்தாள்.

 

“இன்னைக்கு நம்ம எஸ்டேட் போகனும் சாயா… சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா ” என மறவனின் குரலில் அவனை திரும்பி பார்த்தவள்… ” நான் எங்கேயும் வரலை ” என்று சைகை செய்ய…

 

“வரியான்னு கேட்கலை… வான்னு சொன்னேன் ” எனவும்… அவனை முறைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்…

 

அவள் பின்னே சென்றவன்… அறைக்குள் வந்து… ” சேரி கட்டிட்டு வா… அங்க இன்னைக்கு மீட்டிங் இருக்கு எல்லாரும் வருவாங்க ” என கூறி விட்டு தனக்கு தேவையான கோப்புகளை எல்லாம் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்…

 

முனங்கி கொண்டே அவன் எடுத்து கொடுத்த ஒரு புடவையில் ஒன்றை கட்டி கொண்டு மிதமான ஒப்பனையில் படியிறங்கி வந்தவளை கண் இமைக்காமல் பார்த்து வைத்தான் மறவன்…

 

” என்ன இவ்வளவு அழகா இருக்கா, இத்தனை நாளா இந்த பாவாடை சாட்டையில ஒன்னும் பெருசா தெரியலை, இப்போ இப்படி இருக்காளே ” என மனசாட்சி அவளது அழகை வர்ணிக்க… அவள் நெருங்கி வந்ததும் சட்டென்று தலையை திருப்பி கொண்டு காரை எடுக்க வெளியே சென்று விட்டான்.

 

மூர்த்தியிடம் கூறி விட்டு அவள் வெளியே செல்ல… கார் தயாராக இருந்தது… அவளுக்கு முன்பாகவே முன் கதவை திறந்து வைத்து அவன் தயாராக காத்திருக்க ஒரு முறைப்போடு ஏறி அமர்ந்து விட.. கார் எஸ்டேட்டை நோக்கி சென்றது.

 

பிங்க் வண்ண சில்க் சேரியில்… முடியை தளர்வாக பின்னி… அவன் வாங்கி கொடுத்த நகைகளில் ஒன்றை மட்டும் கழுத்தோடு ஒட்டி போட்டு கொண்டு கண்களுக்கு மிதமான மையை பூசி மயக்கி விட்டாள் ஆடவனை…

 

எஸ்டேட் உள்ளே சென்றதும் … அனைவரும் அவர்களை வரவேற்க… அங்குள்ள டீலர்ஸ் அனைவரிடமும் தன் மனைவியை அறிமுக படுத்தினான் மறவன்…

 

அத்தனை பேரும் போட்டி போட்டு அவளுக்கு வாழ்த்தை தெரிவிக்க.. அனைவருக்கும் சின்ன தலை அசைப்போடு நிறுத்திக் கொண்டாள்..

 

” நான் போய் மீட்டிங் முடிச்சுட்டு வரேன் சாயா.. அதுவரைக்கும் நீ என் ரூம்ல இரு” என சற்று நேரத்தில் நடக்க இருக்கும் விபரீதத்தை அறியாமல் அவன் கூறி விட்டு அவன் அறையையும் காட்டி விட்டு செல்ல… அமைதியாக அவனது அறைக்குள் நுழைந்தாள் சாயாலி…

 

வெளியே உள்ள தன் பிஏ விடம் சாயா தன் அறையில் இருப்பதை கூறி விட்டு பார்த்து கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கி விட்டு மீட்டிங் ஹாலிற்கு சென்றான் மறவன்.

 

மலை மேல் இருக்கும் எஸ்டேட்டிற்கு இன்று தான் வந்திருக்கிறாள் சாயா… அவள் வேலை பார்த்தது எல்லாம் மலை அடிவாரத்தில் .. கேபினை திறந்து உள்ளே சென்றவளது கண்கள் அச்சத்தில் பெரிதாக விரிய… தான் பார்ப்பது உண்மை தானா என அறிய முடியாமல் .. தன் எதிரே உள்ள போட்டோவை பார்த்து பயத்தின் உச்சத்திற்கு சென்றவள்…

 

அடுத்த நொடி .. தலையை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தாள்..

 

சனா🖤

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்