
அத்தியாயம் – 13
அமுதினி கடற்கரையில் மெதுவாக ஆரவை நோக்கி நடக்க, அவளது இதயம் வேகமாகத் துடித்தது.
ஆரவோ அங்கு மௌனமாக நின்று, கடலை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சில அடிகளுக்கு பின்னால் நின்று தடுமாறிக் கொண்டு, தைரியத்தை வரவழைத்து பக்கத்தில் போய், “சார்…” என்று அழைக்க,
ஆரவ் திடுக்கிட்டு திரும்பினான். அவளைப் பார்த்ததும், அவனது முகம் உடனே கடினமானது.
“நீ இங்க என்ன பண்றே?”
“நான்… நான் கொஞ்சம் கடலை பார்க்க வந்தேன் சார்…” அமுதினி மெல்லமாக சொன்னாள்.
ஆரவ் திரும்ப கடலைப் பார்த்துவிட்டு, “சரி… நீ இருந்து பாரு… நான் போறேன்…” எனக்கூறி அவன் நடக்க ஆரம்பித்தான். ஆனால், அமுதினி குரல் அவனை மேலும் நடக்காவிட்டால் நிறுத்தியது.
“சார், ப்ளீஸ்… உங்ககிட்ட ஒரு நிமிஷம் பேசலாமா?”
ஆரவ் திரும்பாமல், “என்ன பேசணும்?”
அமுதினி அவனை நெருங்கினாள், ஆனால், இருவருக்கும் இடைவெளி அதிகமாவே இருந்தது.
“இன்னைக்கு ஆர்ட் தெரபி செஷனில்… அஞ்சலி மேம் பேசினது… அது உங்களை ஹர்ட் பண்ணுச்சா?”
ஆரவ் கடுமையாகச் சிரித்து, “என்னை யாரும் ஹர்ட் பண்ண முடியாது… நான் அதுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கேன்…”
“ஆனா, நீங்க அவ்வளவு கோபமா வெளியே போனீங்க… நீங்க அப்செட்டா இருந்த மாதிரி இருந்துச்சு…”
“நான் அப்செட் எல்லாம் இல்ல…” என்ற ஆரவ் திரும்பி அவளைப் பார்த்தான். அவனது கண்கள் கோபமாக இருந்தன.
“ஐம் டையர்ட்… எல்லாரும் என்னை அனலைஸ் பண்ணுறதுல, எனக்கு கோபம் தான் வருது…” என்று மேம்போக்காக சொன்னான்.
அமுதினி அவனிடமிருந்த பார்வையை திருப்பவில்லை.
“யாரும் உங்களை அனலைஸ் பண்ணல சார்… அஞ்சலி மேம் கேர் பண்றாங்க… அவங்க ஒரு தெரபிஸ்ட்… அவங்களுக்குத் தெரியும் நீங்க… ஸ்ட்ரகல் பண்றீங்கன்னு…”
“நான் எதுவும் ஸ்ட்ரகல் பண்ணல…” ஆரவ் உறுமி,
“என் வாழ்க்கை பெர்பெக்ட்-ஆ இருக்கு… எனக்கு எந்த தெரபியும் தேவையில்ல…”
“எல்லா மனுஷங்களுக்கும் ஹெல்ப் தேவைப்படும் சார்… அது யாருக்கும் வீக்னெஸ் இல்ல…”
ஆரவ் ஒரு அடி முன்னால் நெருங்கினான். அவனது குரல் மெல்லமாக இருந்தாலும் தீவிரத்துடன், “நான் உன்கிட்ட எத்தனை முறை சொல்லணும்? எனக்கு உன் ஹெல்ப் வேண்டாம்… ஹ்ம்ம்… எனக்கு யாரோட ஹெல்ப்பும் வேண்டாம்… நான் தனியாதான் இருக்க விரும்புறேன்… இதை மொதல்ல உன் தலையில ஏத்து…”
அமுதினி உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே திடமாக நின்றாள்.
“நீங்க தனியா இருக்கிறது உங்க சாய்ஸ் தான்… ஆனா… தனிமை ஹிலீங்-ஐ தராது சார்… அது உங்களை மேலும் உடைய வைக்கும்…”
“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்ற ஆரவின் குரல் கத்தி போல் கூர்மையாக இருந்தது.
“நீ என்னை கொஞ்சம் மாசமா தான் பார்த்திருக்க… நான் யார், எப்படிப்பட்டவன், நான் என்னென்ன அனுபவிச்சிருக்கேன், என் வாழ்க்கையில் என்ன நடந்துருக்கு – இதெல்லாம் உனக்கு ஒண்ணும் தெரியாது… அப்படி இருக்கும்போது, நீ எப்படி என்னை ஜட்ஜ் பண்ற?”
“அய்யோ! நான் உங்களை ஜட்ஜ் பண்ணல சார்…” அமுதினி மெதுவாகச் சொன்னாள். அவளது கண்களில் கண்ணீர் சுரந்தாலும் அவள் அழவில்லை.
“நான்… நான்… என்னால உங்க வலியை உணர முடியுது சார்… உங்க கண்கள்ல, உங்க உடல் மொழியில, உங்க வார்த்தைகள்ல, நீங்க ஹர்ட்டாகி இருக்கீங்கன்னு தெரியுது… நீங்க காயப்பட்டு இருக்கீங்க… அதை மறைக்க நீங்க எவ்வளவு ட்ரை பண்ணினாலும், அது எனக்கு நல்லாவே தெரியுது பார்…”
அவளது பேச்சில் ஆரவ் அமைதியாகி உற்றுப் பார்த்தான். அவளது உண்மையான பேச்சு அவனை நிராயுதபாணியாக்கி மௌனித்தது. ஆனாலும், அதை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனது கோபமெனும் பாதுகாப்பு கவசத்தை மீண்டும் போட்டுக்கொண்டான்.
“நீ என்னைப் பற்றி தவறா புரிஞ்சிக்கிட்டு இருக்க…” என்றவனின் குரலில் பொய்யான கோபம் தான்!
“நான் ஹர்ட் ஆகல… ஐம் ஓகே… நான் எதுக்காகவும் காயப்படல… நான்… மற்றவர்கள் தொல்லை இல்லாமல் நிம்மதியா இருக்க விரும்புறேன்… புரிஞ்சுக்க…”
“ஏன் சார்?” அமுதினி விடாமல் கேட்டாள். “நீங்க ஏன் எல்லாரையும் தள்ளி வைக்கிறீங்க?”
ஆரவ் பெருமூச்சு விட்டு கடலையே பார்த்தான்.
“ஏன்னா… இந்த மனுஷங்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு… அவங்க எல்லாரும் மத்தவங்களை ஹர்ட் பண்றாங்க… தேவைன்னா கூட இருக்காங்க… தேவை முடிஞ்ச பின்னாடி விட்டுட்டு போய்ட்டே இருக்காங்க… அவங்களை எல்லாம் என் வாழ்கையில சேர்த்து நம்பிக்கை வைப்பதற்கும், நான் மட்டும் தனியா, எந்தவொரு இடைஞ்சலும் கல்லாய் வாழுறதுக்கும் இடையில், நான் தனிமையை தேர்வு பண்ணி சந்தோஷமா இருக்கலாம்னு நினைக்கிறேன்…” என்று மனதில் உள்ளதை சரளமாக சொல்லிக் கொண்டிருந்தான் ஆரவ் கிருஷ்ணா.
அமுதினி இதயம் கனத்து, “யாரோ உங்களை ஹர்ட் பண்ணியிருக்காங்கனு தோணுது சார்… அதனால நீங்க எல்லாரையும் வெறுக்குறீங்க…” என்று பேச,
அவன் திடீரென்று திரும்ப, கண்களில் சீற்றம்,
“என்னை யாரும் ஹர்ட் பண்ணவும் இல்ல… நான் யாரையும் வெறுக்கவும் இல்ல… நான் ஜஸ்ட்… கேர் ஃபுல்லா இருக்கேன்… நான் என் வாழ்க்கையில யாரையும் நுழைய விடமாட்டேன்… ஏன்னா அவங்க ஏமாத்திட்டு போனா, அதுதான் என்னை ஹர்ட் பண்ணும்… அதனால, நான் யாரையும் என்கிட்ட வர விடமாட்டேன்…” என்று அழுத்தமாக சொன்னான்.
“அது ஒரு வாழ்க்கை இல்லையே சார்… அது சர்வைவல் மட்டும்தான்…”
ஆரவ் கசப்பாகச் சிரித்தான்.
“சர்வைவல் தான் முக்கியம்… லிவ்விங் லக்சுரி…”
அமுதினி அவளை இரண்டடி முன்னால் நெருங்கினாள். இப்போது அவர்களுக்கிடையே சில அடிகள் மட்டுமே.
“நீங்க பயப்படுறீங்க சார்… நீங்க ஹர்ட் ஆகிடுவீங்கன்னு பயப்படுறீங்க… அதனால நீங்க உணர்வுகளையே அவாய்ட் பண்றீங்க… ஆனா, உணர்வுகள் இல்லாம… ஒரு ரோபோட் மாதிரி இருந்திட முடியாது…”
ஆரவ் அவளை நேராகப் பார்த்தான். “நான் ஒரு ரோபோட் போல இருக்கத்தான் விரும்புறேன்… ஏன்னா, ரோபோட்ஸ்-க்கு எந்த ஒரு வலியும் வேதனையும் தெரியாது…”
“ஆனா அவங்களுக்கு சந்தோஷமும் தெரியாது… வாழ்க்கையோட எந்த ஒரு அற்புதங்களும் புரியாது…” அமுதினி மெதுவாகச் சொன்னாள்.
ஆரவ் மௌனமாகி கடலைப் பார்த்தான். அலைகள் மோதின. பறவைகள் பறந்தன. காற்று பலமாக வீசியது.
சற்று நேரம் கழித்து, அவன் மெதுவாகச் சொன்னான், “அமுதினி, நீ ஒரு நல்ல மனசு கொண்டவ… உனக்கு இருக்கும் எம்பதி ரொம்ப ப்யூட்டி ஃபுல்… ஆனா, நீ அதை வேஸ்ட் பண்ற… என்னை மாதிரி ப்ரோகன் பீபளை ஃபிக்ஸ் பண்ண ட்ரை பண்றதுல அர்த்தம் இல்ல. சில பேருக்கு எவ்வளவு மெனக்கெட்டாலும் சரியாக மாட்டாங்க…”
“எல்லாருமே சரி ஆகலாம் சார்… அதுக்கு அவங்க மனசு அனுமதிக்கணும்…”
ஆரவ் திரும்பி அவளைப் பார்த்தான். அவனது கண்களில் ஏதோ ஒரு உணர்ச்சி மின்னல் பொங்கியது – அது சோகமா? வருத்தமா? ஆனால், அது வரும்முன்னரே மறைந்து போனது.
“நான் அனுமதிக்க மாட்டேன்…” அவன் உறுதியாக சொன்னான்.
“நான் என் வாழ்க்கையை என் விருப்படி வாழுறேன்… நான் யாரையும் என் கிட்ட வர விடமாட்டேன்… குறிப்பா… உன்னை மாதிரி அப்பாவி, எமோஷனல், கருணை உள்ளம் கொண்ட பெண்களை! ஏன்னா, நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணுவேன்… நான் தனிமையிலிருந்து எல்லாரையும் ஹர்ட் பண்றேன் தான்… அது என்னோட நேச்சர்…”
“அது உங்க நேச்சர் இல்ல சார்… அது நீங்க கிரியேட் பண்ணின டிஃபென்ஸ் மெக்கானிசம்…”
ஆரவ் கோபமாக, “நீ எல்லாத்துக்கும் ஒரு சைக்காலஜிக்கல் விளக்கம் கொடுக்குறியா? நான் டிஃபென்ஸ் மெக்கானிசம் யூஸ் பண்றேனா? ஃபைன்… அது என்னை ப்ரொடெக்ட் பண்ணுது… அதுனால நான் அதை எப்பவும் விடமாட்டேன்…” என்று பல்லைக் கடித்துச் சொன்னான்.
அமுதினி தயங்கினாள். பிறகு மெதுவாக, “சார், அப்போ உங்க கடந்த காலத்துல யாரோ உங்களை ரொம்பவே ஹர்ட் பண்ணியிருக்காங்க இல்லையா? அதனால நீங்க மறுபடியும் மத்தவங்க மேல நம்பிக்கை வைக்குறதுக்கு பயப்படுறீங்க… அப்படி தானே?” என்று கேட்க,
ஆரவின் முகம் கல்லானது. அவனது கைகள் இறுகி போயின. “என் பாஸ்ட் பத்தி கேள்வி கேட்காதே… அதைப்பற்றி கேட்கிற உரிமையும் உனக்கில்ல… மறுபடியும் சொல்றேன் ஸ்டே இன் யோர் லிமிட்ஸ் அமுதினி…”
“நான் என் லிமிட்டை மீற நினைக்கல சார்… நான்… உங்களை… புரிஞ்சிக்க நினைச்சேன்…”
“என்னை நீ ஒன்னும் புரிஞ்சிக்க வேண்டாம்… இத புரிஞ்சு வச்சிக்க நான் ஒன்னும் உன்னோட சிலபஸ் கிடையாது…” ஆரவ் உறுமிவிட்டு,
“நான் யாருடைய தலையீடும் இல்லாம தனியா இருக்க விரும்புறேன். என் பாஸ்ட், என் பெயின், என் ஹேப்பினஸ், எல்லாமே என்னோட இருக்கணும்… அது என் பர்சனல், அது பத்தி நான் யாரோடயும் ஷேர் பண்ணிக்க விரும்பல…” என்று திட்டவட்டமாக சொன்னான்.
அமுதினி பெருமூச்சு விட்டாள்.
“சரி சார்… நான் உங்களை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்… ஆனா, நான் ஒண்ணு சொல்றேன் – நீங்க எப்போதாவது பேச விரும்பினா, எதையாவது சொல்ல நினைச்சா, நான் கேட்க ரெடியா இருப்பேன். நான் உங்களை என்னைக்கும் ஜட்ஜ் பண்ண மாட்டேன்… நான் உங்க பேச்சை கேட்பேன்…” என்று மனமுவந்து சொன்னாள்.
ஆரவ் அவளை ஒரு நிமிடம் பார்த்தான். அவனது முகத்தில் ஒரு சஞ்சலம். ஒரு மனம் அவளை மீது நம்பிக்கை வைக்க விரும்பியது. ஆனால், மற்றொரு மனமோ, தற்பொழுது அவனுள் ஆதிக்கம் செலுத்தும் மனமோ, அவளை ஒதுக்கிவிட்டு போக சொல்லியது.
கடைசியில், “நான் உன்கிட்ட என்னைக்கும் பேச வர மாட்டேன்… நீ போகலாம் அமுதினி…” என்றவன்,
சில நொடிகளின் மௌனத்திற்கு பின், “நாம ஒரே காலேஜில் இருக்கும் அவ்ளோதான்… இந்த ட்ரிப் முடிஞ்சா, நாம காலேஜ்-க்கு திரும்புவோம்… நீ உன் வாழ்க்கையை பார்ப்ப… நான் என்னோட வாழ்க்கையை பாரப்ப… நாம தனித்தனியா தான் இருக்க போறோம்… நீ என்னோட கிளாஸ் ஸ்டூடண்ட் கூட கிடையாது… நம்ம அதிகம் சந்திக்கவும் மாட்டோம்… அதுக்கான சூழல் ரொம்ப ரேர்… சோ, என் விஷயத்துல தலையிடாம, உன் வாழ்க்கையை பார்த்துட்டு போ அமுதினி…” என்று பொறுமையாக அழுத்தம் திருத்தமாக பேசினான் ஆரவ் கிருஷ்ணா.
அமுதினியின் இதயம் சிதைந்தது. ஆனால், அவள் நம்பிக்கையை விடவில்லை.
“சார், நான் கடைசியா ஒண்ணு சொல்றேன்… நீங்க தனியா இருக்க விரும்புறீங்க… இட்ஸ் ஓகே… ஆனா, தனிமை உங்களை எப்பவும் காப்பாத்தாது… அது உங்களை… உன் வாழ்க்கையை நாசம் பண்ணிடும்…. அது புரியும் நேரத்துல, கட்டாயம் ஒருநாள் நீங்க உங்களோட வால்ஸ்-ஐ இறக்க வேண்டியிருக்கும்… அப்போ, யாராவது உங்களுக்காக காத்திருப்பாங்கன்னு நம்புறேன்…” என்று கண்ணீருடன் சொல்லி விறுவிறுவென திரும்பி நடக்க ஆரம்பித்தாள் அமுதினி.
ஆனால் சில அடிகள் போன பிறகு, ஆரவின் குரல் அவளை நிறுத்தியது.
“அமுதினி…”
அவள் திரும்பிப் பார்த்தாள்.
ஆரவ் பேச தயங்கினான்.
பிறகு, “ஆர்ட் தெரபி செஷனில், உன் பெயிண்டிங்… அது… நல்லா இருந்துச்சு…” என்று மெதுவாகச் சொன்னான்.
அமுதினி ஆச்சர்யமாக இருக்க, “தேங்க் யூ சார்…” என்றாள்.
ஆரவ் அவளை பார்க்காமல், திரும்பி நின்று கடலைப் பார்த்தான்.
“அந்த இனிமையான உருவம்… அது உன்னைப் பற்றியா?”
அமுதினி தடுமாறி, “நான்… எனக்கு தெரியல சார்… நான் எதுவும் யோசிக்காம பெயிண்ட் பண்ணினேன்…”
ஆரவ் தலையசைத்து, “தட்ஸ் பவர்ஃபுல்… தனிமையை நீ அழகா கேப்சர் பண்ணியிருக்க…”
அமுதினி அவனைப் பார்த்தாள். இந்த நேரத்தில் அவன் பாதிக்கப்பட்ட ஒருவனாக இருக்க, அவனது கோபக் கவசம் கொஞ்சம் நழுவியது போல இருந்தது.
“சார், நீங்களும் லோன்லி-ஆ இருக்கீங்களா?” அவள் மெதுவாகக் கேட்டாள்.
ஆரவ் நீண்ட நேரம் மௌனமாக இருந்தான்.
பிறகு, அரிதாக, “எப்பவும்…” என்று பதில் கொடுக்க,
அமுதினியின் இதயம் தடுமாற, “சார்—” என்றவளுக்கு மேலும் பேச பேச்சு வரவில்லை.
“போ அமுதினி…” என்று திடீரென்று உரக்க சொல்ல, மீண்டும் இறுகி போனான்.
“இந்த கான்வேர்சேஷன் முடிஞ்சிருச்சு… மொதல்ல என்னை தனியா விட்டு… இங்கிருந்து போ அமுதினி…..” என்று சத்தமாக சொன்னான் ஆரவ் கிருஷ்ணா.
அமுதினி தலையாட்டி, மேலும் பேச நினைக்காமல் திரும்பி நடந்தாள். ஆனால், அவள் மனதில், ஒரு சிறிய நம்பிக்கை விதை போட்டது.
அவள் விடுதிக்கு திரும்பினாள். அவள் இதயம் கனமாக இருந்தாலும், அவளுக்கு ஒரு நல்ல உணர்வும் இருந்தது – இது ஆரம்பம்.
ஆரவ் இன்னமும் தன்னை வெளிப்படுத்த நினைக்காமல், முகமூடி அணிந்த வாழ்கிறான். அவனது கடந்தகாலம் இன்னும் மர்மமாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு, அவனுள் கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் இருந்தது. அவனுக்கு அது நல்ல ஒரு தொடக்கமே என்று எண்ணிக் கொண்டாள் அமுதினி.
********
அன்று இரவு, ஆரவ் தன் அறையில் தனியாக இருந்தான். அவன் பால்கனியில் நின்று, கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அலைகளின் சத்தம் மட்டுமே கேட்டது.
அமுதினியின் வார்த்தைகள் தான் அவனுள் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“நீங்க தனியா இருக்கிறது உங்க சாய்ஸ் தான்… ஆனா… தனிமை ஹிலீங்-ஐ தராது சார்…”
“எல்லாருமே சரி ஆகலாம் சார்… அதுக்கு அவங்க மனசு அனுமதிக்கணும்…”
“கட்டாயம் ஒருநாள் நீங்க உங்களோட வால்ஸ்-ஐ இறக்க வேண்டியிருக்கும்…”
‘அவள் ஏன் என்னை தனியா இருக்க விடாம வந்து பேசறா? அவள் ஏன் என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்றா? நான் அவளை எவ்வளவு ஹர்ட் பண்ணியிருந்தாலும், அவள் என்னை விட நினைக்கல… ஏன்?’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.
அவனுக்குப் பதில் தெரிந்திருந்தது. அவள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாள். அவளுடைய பாசம் உண்மையானது.
அவள் அவனை இப்படி அப்படி என எடைபோட விரும்பவில்லை, அவன் தனியில்லை என்பதை அவனுக்கு தெரிவிக்க விரும்புகிறாள்.
அவனுக்கு ஒரு துணையாக இருக்க ஆசைக் கொள்கிறாள் என்பது அவனுக்கு தெரிந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறான். அவனுடைய கடந்தகாலம் அவனை கொல்கிறது.
அவனுடைய ஏமாற்றம் அவனை வாட்டியது. அவனால் தன்னை தானே மன்னிக்க முடியவில்லை. அவன் எப்படி மற்றவர்களை தன் வாழ்க்கையில் அனுமதிக்க முடியும்?
அவன் மீண்டும் தன் இருளுக்குள் சென்றான். ஆனால் இன்றைக்கு, அந்த இருளில் ஒரு சிறிய ஒளி – அமுதினியின் வார்த்தைகள், அவளது பாசம், அவளது நம்பிக்கை.
அவன் அதை அடக்க முயன்றான். ஆனால் அது மறையவில்லை.
நாளைக்கு அவர்கள் சென்னைக்கு திரும்புவார்கள். இந்த பயணம் முடியப்போகிறது.
ஆனால் ஆரவ் மற்றும் அமுதினியின் கதை… அது இன்னும் முடியவில்லை!
பல்வேறு வலியுடன், வேதனையுடன், கோபத்துடன், பாசத்துடன் விதி தன் வேலையை செவ்வனே கொண்டிருக்கிறது.
**********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1
