
நதி 11
அன்று
“என்ன அதி மேடம் அரை மணி நேரத்தில எக்ஸாம் முடிச்சிட்டு வெளியே வந்துட்டாதா கேள்விபட்டேன், அவ்ளோ கான்ஃபிடென்ட்டா?”
“கார்த்தி அதெல்லாம் விடுடா ஒரு ப்ராப்ளம்” நேரடியாய் விசயத்துக்கு வந்தாள்.
“என்னடி வேற கொஸ்டின் பேப்பர் மாத்தி வந்திருச்சா..? சரி வா பராவாயில்லை மேம்கிட்ட பேசிஞஞ எழுதிவைக்கிறேன், இன்னும் ஒன் அவர் இருக்குடி” எனப் பதறினான் கார்த்தி.
“டேய் நீயா ஏன்டா முடிவு பண்ணிக்கிற, என்ன சொல்ல வர்றேன்னு கேளேன்”
“சொல்லி தொலைடி” எனக் கடுப்பாய்ச் சொன்னான்.
“இவ்ளோ அல்டிக்குற, நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் போ நானே ப்ராப்ளமை பார்த்துக்கிறேன் எனச் சொல்லி எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
“ஏய் சாரிடி அதி சொல்லு கேட்கிறேன், ஜெஸ்ட்டு ஃபன்னுக்காகச் சொன்னேன்” எனக் கெஞ்சியபடி அவள் பின்னே நடந்தான்.
“கார்த்தி மரியாதையா போயிரு கோபத்துல எதாவது சொல்லிருவேன்” விரல் நீட்டி அவனை மிரட்டினாள்.
“அதி வா கேண்டீன் போய், பச்சை டீ குடிக்கலாம்”
“பச்சை டீயா.?”
“அதான் உன் ஃபேவரெட் க்ரீன் டீ”
“ஒன்னும் தேவையில்லை நான் டையட்டை விட்டு பல மாசம் ஆச்சு”
“அப்போ வாடி க்ரில் சிக்கன் ஒரு வெட்டு வெட்டலாம், அதுல மையோனாஸ்ல புரட்டி எடுத்து சாப்பிட்டா வருமே ஒரு டேஸ்ட் ம்ம்” என அவன் சப்புக்கொட்டி ரசனையோடு சொல்லிக்கொண்டிருந்தான்.
“சிக்கனை ஃபேவரெட் லிஸ்ட்டுல இருந்து தூக்கிட்டேன்” அவள் பதில் கொடுத்தபடி விறுவிறுவென நடந்து சென்றாள்.
“அப்போ என்னைப் பண்ணி தான் உன்னைச் சமாதானம் செய்யுறது அதி” என வேகமாய் நடந்துக்கொண்டிருந்தவளின் குறுக்கே வழியை மறித்து நின்றான் கார்த்தி.
“ஏன் பொண்ணுங்கனா சாப்பிடுற விசயத்தை பார்த்து மயங்கி நீங்க சொல்றதெல்லாம் கேட்கணுமா.? இன்னும் எந்த காலத்துல டா இருக்கீங்க.? எவ்ளோ சீப் மென்டாலிட்டிடா உனக்கு த்தூ” என அவனை கடந்து சென்றாள்.
“எத்தனை தடவ வேணும்னாலும் துப்பிக்கோ, துப்பினா துடைச்சிப்பேன் அதி ஆனா விசயத்தை மட்டும் சொல்லேன்டி”
“வழியை விடு முக்கியமான வேலை இருக்கு” அவள் சொல்ல,
“அப்படி என்ன வேலை.?” எனப் பேசியபடி அவன் திரும்பி பார்த்த போது கல்லூரி முதல்வரின் அறையின் முன் நின்றிருந்தனர் இருவரும்.
“அடியே அதி..? என்னடி பண்ணிட்டு இருக்க..? பிரின்ஸி ரூம்கிட்ட வந்து நிக்குற”
“ஒரு கம்ப்ளைன்ட் பண்ண போறேன்”
“என்ன கம்ப்ளைன்ட்.?”
“எக்ஸாம்ல மால்ப்ராக்டிஸிங் (முறைகேடு) நடக்குதுன்னு” அசால்டாய் சொன்னாள்.
“அடியே அதி!! நீ தானே எனக்குப் பிட்டே எழுதிக்கொடுத்த, இப்போ என்னையவே கம்ப்ளைன்ட் பண்ண வந்திருக்கியா.? ஆத்தா மாரியத்தா இனி உன்கிட்ட பிட் எழுதி தர சொல்லி கேட்க மாட்டேன் கொஞ்சம் கருணை காட்டு ஆத்தா”
“கருணைலாம் காட்ட முடியாது” என பதில் கொடுத்தாள்.
“அப்போ வேப்பிலை அடிச்சா மலை இறங்கிருவியா.?” சிரித்தபடி அவன் கேட்க,
“பல்லைக் காட்டாம வழிய விடுடா கார்த்தி” கோபமாய் சொன்னாள்.
“இதெல்லாம் டூமச் அதி, நான் உன் ஃப்ரெண்டுடி”
“அதுக்கு.?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“இன்னைக்கி நீ சொன்ன மாதிரி படிச்சிட்டு வந்து தான் எக்ஸாம் எழுதினேன், புக்கை தலைக்கி வச்சி தூங்குறவன்டி நானு, நம்ம ஃப்ரெண்டு சொன்னாலேன்னு படிச்சிட்டு வந்தா கோர்த்து விடுறியேடி”
“நீ ஃபர்ஸ்ட்டு வழியை விடு கார்த்தி”
“நீ என்னைத் தாண்டி போய்த் தான் எதுனாலும் பண்ண முடியும் அகரநதி” புதிதாய் ஒரு குரல் அந்த இடத்தில் கேட்டது. அது வேறு யாரும் இல்லை அதி புகார் செய்யப் போகும் உத்தமன் அகிலன் தான்.
“வா மச்சான் அகிலு, எனக்காக வந்து நின்ன பார்த்தியா வேற லெவலுடா நீ”
“ஏய் லூசு கார்த்தி, நான் கம்ப்ளைன்ட் பண்ண போறதே அகிலன் மேல தான், விசயம் தெரியாம புலம்பாதடா” எனக் கார்த்தியை கண்டித்தாள் அதி.
“ஓ என்னை மீறி நீ கம்ப்ளைன்ட் பண்ணிருவியா அகரநதி..? அப்படினா உன் ஃப்ரெண்டு பண்ணின ஃப்ராடு தனத்தையும், அதுக்கு நீ உடந்தையா இருந்ததையும் நான் பிரின்ஸிகிட்ட சொல்ல வேண்டியதாயிருக்கும்” நேரடியாய் மிரட்டினான் அகிலன்.
“இப்ப தான டா உன்ன நண்பன்னு சொன்னேன் நீயுமாடா..?” எனப் பாவமாய் அகிலனை பார்த்து வைத்தான் கார்த்தி.
“நாங்க பண்ணது தப்பு தான், நாங்க தாரளாமா ஒத்துக்குறோம், அதுக்குத் தண்டனை கம்மியா தான் இருக்கும், ஆனா நீ பண்ணிண ஆள்மாறாட்டம் பிரின்ஸிக்கு தெரிஞ்சா உன் சீட்டு டார்ரா கிழிஞ்சிரும்” எனச் சொன்னவள் ஏளனமாய் நகைத்தாள்.
“என்னது ஆள்மாறாட்டமா..? இதைத் தான் நம்மகிட்ட சொல்ல வந்தாளா..? நம்ம தான் காமெடி பண்ணிட்டோமா, அவ சீரியாஸைல பேசிட்டு இருந்திருக்கா..? எப்போ காளி ஆத்தாவா மாறப்போறாளோ தெரியலையே” எனத் தனக்குள் புலம்பிக்கொண்டான் கார்த்தி.
“அதி இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கியே, எக்ஸாம் ஹால்லையே உன்னால ப்ரூவ் பண்ண முடியலை பிரின்ஸி நீ சொன்னது நம்பிருவாங்களா..? அதோட நான் மினிஸ்டரோட பையன் தெரியும்ல”
“அதி அவன் எதோ பண்ணிட்டுப் போறான், ஃப்ரஸ்ட்டு வா கிளம்பலாம்” அதியின் காதுகளில் கிசுகிசுத்தான் கார்த்தி.
“அகிலு அவ எதோ தெரியாமா பேசிட்டு இருக்கா, இதோட ப்ராப்ளமை விட்டுருலாம், அவகிட்ட நான் பேசிக்குறேன்”
“எடுத்து சொல்லுடா உன் ஃப்ரெண்டுக்கு, நம்மளை பத்தி உனக்குத் தெரியும்ல, அப்பறம் சேதாரம் ஆனா நாங்க பொறுப்பில்லைடா, நேத்து பிரச்சனை பண்ணினதுக்கே சும்மா விட்டு வச்சிருக்கேன், இப்போ இது வேற, உன் ஃப்ரெண்டை பார்த்துக்கோடா” மர்ம்மாய் எச்சரித்துச் சென்றான் அகிலன்.
“அதி.! சொன்னா புரிஞ்சுக்கோ இதெல்லாம் வேலைக்கே ஆகாது, ப்ரின்ஸி மினிஸ்டருக்கு ரொம்ப க்ளோஸ், விசயம் மினிஸ்டர் காதுக்குப் போச்சுனா நமக்குத் தான் டேஞ்சர், பெட்டர் அவாயிட் ஹிம் அதி”
“கண்ணு முன்னாடி நடக்குற தப்பை பார்த்துட்டு எப்படிடா போகச் சொல்லுற, பணம் இருக்குதுன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவாங்களா..?”
“அதி ஃப்ர்ஸ்ட்டு கூல் ஆகுடி”
“போடா காசுக்கு தான் வேல்யூல.? கஸ்டபட்டு படிச்சு எழுதுறவங்களுக்கு வேல்யூவே இல்லைல.?” சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டினாள் அதி.
“அதி ப்ளீஸ் ஸ்மைல் பண்ணுடி”
“நானே நார்மல் ஆகிருவேன் விடுடா” எனப் பேசியபடி பார்க்கிங்கு சென்றாள் அதி, அவளுடன் கார்த்தியோ,
“இன்னைக்கி நான் வண்டி ஓட்டுறேன் அதி உன்னை வீடு வரைக்கும் விட்டுட்டு அப்படியே அப்பா அம்மாவ பாரத்திட்டு வர்றேன்” எனக் கார்த்திக் கேட்க, அவனுடன் இருந்தால் சற்று இதமாய் உணர்வாள் அதி. அதற்காகவே சரியென்று சம்மதித்தாள் அகரநதி.
அவன் முன்னே உட்கார்ந்து வண்டியை இயக்க, பின்னே அவன் தோள் சாய்ந்து பேசியபடி வந்தாள் அதி.
“கார்த்தி..!”
“ம்ம் சொல்லு அதி..?”
“இல்லை ஒருத்தருக்குப் பதில் வேற ஒருத்தர் பரீட்ச்சை எழுதுறது தப்பு தானே.?”
“ஆமா தப்பு தான் யாரு இல்லைன்னு சொன்னது”
“தப்பு எழுதுறவன் மேலையா..? இல்லை எழுத சொல்லுறவன் மேலையா..?”
“ரெண்டு பேர் மேலையுமே ஈக்குவளா தப்பு இருக்கு அதி, ஏன் நீ அதையே நினைச்சிட்டு இருக்க..?”
“இல்லை கார்த்தி இப்படி முறைகேடு பண்ணுறதை நேர்ல பார்த்து இவ்ளோ ரீயாக்ட் பண்ணுறேனே, ஆனா இதே மாதிரி ஒரு படத்தைப் பார்த்து அதுல காலேஜ் முழுக்க ஒருத்தருக்குப் பதில் வேற ஒருத்தர் காலேஜ் ஃபுல்லா படிக்குற மாதிரி நடிச்சிருக்க, நாயகனை பார்த்து ஹீரோன்னு கொண்டாடியிருக்கேன்னு நினைச்சா எனக்கே கோபம் வருதுடா”
“ஏய் அதி அது வெறும் கதைடி”
“பட் அதைப் பார்த்து தானே இதெல்லாம் சின்னத் தப்புன்னு நம்ம மனசு ஏத்துக்குது, அதே படத்துல அந்த நாயகனுக்கு எதிரா இருக்கவனை வில்லனால காட்டுறாங்க, அதாவது படிச்சு எழுதுறவன் வில்லன், வேற யாருக்காகவோ பரீட்சை எழுதுறவன் ஹீரோ,அப்படிப் பார்த்தா, அகிலனை எதிர்க்குற நான் வில்லி தானே.?”
“நீ ரியலிட்டியையும் படத்தையும் போட்டு குழப்பாதடி அதி, சுவாரசியத்துகாகவும் மக்களை ஈர்க்குறதுக்காகவும் படத்துலையும் கதைலையும் என்ன வேணும்னாலும் வைக்கலாம்,பட் அதைப் படமா பார்த்திட்டுக் கடந்து போறது நல்லது, அதை லைஃப்ல அப்பளை பண்ணினால், நம்மளை விட முட்டாள் வேற யாரும் இல்லைடி”
“அப்போ நல்ல கருத்துகள் உள்ள படத்தை எடுக்கலாமே, இதை எனக்குப் பிடிச்ச நாயகன் பண்ணுறான், அவனை மாதிரியே நானும் பண்ணுவேன், அதுல எந்தத் தப்பும் இல்லைன்னு சொல்லுற யங்க்ஸ்டர்ஸ் இருக்காங்களேடா”
“என்னடி புலம்புற.?”
“என்னடா இப்படி சொல்லிட்ட, நம்ம விஸ்காம் ஸ்டூடண்ட் நம்ம நாளைக்கு கதை எழுதுவோம், படம் எடுப்போம், மக்கள்கிட்ட நல்ல கருத்துகளை கொண்டு சேர்க்கிரற மீடியேட்டரா இருக்க போறோம்டா,நமக்கு அந்த பொறுப்பு இருக்க வேண்டாமா.? சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இல்லாம இருக்க சொல்றீயா.? ”
“பொறுப்பெல்லாம் இருக்க தான் செய்யணும்டி, நான் இல்லைன்னு சொல்லையே”
“ஒரு எக்ஸம்பிள் சொல்றேன் கேளு பிராத்னான்னு ஏழு வயசு பொண்ணு கர்நாடகால, டிவி சீரியல்ல யாரோ நெருப்பு வளையத்துக்கு நடுவுல டான்ஸ் ஆடினாங்கன்னு, வீட்டுல யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தன்னைச் சுத்தி வேஸ்ட் பேப்பர் வச்சு நெருப்பு வச்சு ஆடியிருக்கா, அவ போட்டிருந்த ட்ரெஸ்ல தீ பிடிச்சு, உடம்புல எழுபது சதவீதம் எரிஞ்சு போயிருச்சு, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்க் காப்பத்த முடியல, அவளோட லைஃப் ஏழு வயசுலயே முடிஞ்சு போச்சு” என வருந்தியபடி அவள் சொல்ல,
“ஓ மை காட்” அதிர்ச்சி ஆனான்.
“இப்ப சொல்லுடா அந்தக் குழந்தைக்குத் தெரியுமா? இதை லைஃப்ல அப்ளை பண்ணணுமா, பண்ண கூடாதான்னு..? இந்த இன்ஸிடன்ட இரண்டாயிரத்தி பதினொன்னுல நடந்திச்சு, இப்போ எல்லாரும் மறந்தே போயிருப்பாங்க, அட் தி எண்ட ஆஃப் தி டே, போன குழந்தை உயிர் போனது தானே.? அதுக்கு யாரும் பொறுப்பேத்துக்க மாட்டாங்கல்ல.?” மிகவும் வருந்தினாள் அதி.
“நான் ஒன்னு சொல்லவா அதி, நீ எல்லாத்தையும் யோசிச்சு உன் பீஸ் ஆஃப் மைண்ட கெடுத்துகாதே, நம்மளால இந்த உலகத்தைத் திருத்த முடியாது, ஆனா நம்ம ஒன்னு மட்டும் பண்ண முடியும் நம்மளோட மாரல் அண்ட் எத்திக்ஸோட, எல்லாத்தையும் விட நம்ம டிஃப்ரெண்டா இருக்க முடியும்” எனக் கார்த்திச் சொல்ல,
“ஆமா கார்த்தி, நீ சொல்றது சரி தான்” எனப் புன்னகைத்தாள் அதி.
“அப்பாடா முதல் தடவை நான் சொல்றதை சரின்னு ஒத்துக்கிட்டியே, அதுவே போதும் தெய்வமே” என அவன் சிரிக்க அவன் தோள் சாய்ந்து, அகரநதியும் சிரித்தாள்.அவள் புன்னகை முகத்தைக் கண்ணாடி வழி பார்த்து நிம்மதி அடைந்தான் கார்த்திக்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எங்க பிரச்சினை நடந்தாலும் முன்னாடி போய் நிக்கிறாளே அகர்.
தவறு செய்வதில் சிறியது என்ன? பெரியது என்ன?. இவள் செய்ததும் தவறு தான்.
கார்த்தி சொல்வது சரியே! யாரையும் எதையும் மாற்ற முடியாது. நம்மால் முடிந்த வரை நாம் சரியாக இருப்போம். அவ்வளவுதான்.
ஆமா கார்த்தி சொல்வது தான் சரி சிஸ். நன்றி ❤️
நீ சொல்றதெல்லாம் சரிதான் நதி … ஆனா நடைமுறைக்கு ஒத்து வரணுமே … இன்னும் நீ என்ன பண்ணி வச்சிருக்க … இவனுங்க இப்படி பண்ற அளவு …
இந்த நதி நடைமுறையை யோசிக்க மாட்டேன்றாளே 😁 நன்றி சிஸ்