
இன்று
மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாசலில் சீருடை அணியாத காவலனாய் அங்கிருந்த வாயிற்காவலனிடம் பேசிக்கொண்டிருந்தான் தீரேந்திரன்.
“சார் நீங்க ப்ரின்சிபால்கிட்ட பர்மிஷன் கேட்காமல் யாரையும், பார்க்க முடியாது சார். சொன்னா புரிஞ்சுகங்க”
“இல்லை நீங்க நினைச்சா முடியும், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க, எனக்குக் குறிப்பிட்ட பேட்ச்ல படிச்ச ஸ்டூடண்ட் லிஸ்ட் அண்ட் அட்ரஸ் மட்டும் கிடைச்சா போதும் ” எனத் தீரா சொல்ல,
“அது ரொம்பக் கஸ்டம் சார், சரிங்க சார் நான் ஒன்னு பண்ணுறேன், ஆனா அதுக்குக் கொஞ்சம் செலவாகுமே”
“போலீஸ்கிட்டையே லஞ்சமா?” வெற்றுப் புன்னகை சிந்தியவன், பிங்க் நிற பணத்தாளை நீட்ட, முகமெல்லாம் புன்னைகையாய் அவன் உள்ளே செல்வதற்கான வழியைச் சொன்னான்.
“உள்ள போங்க சார், யார் கேட்டாலும் தங்கச்சியைக் கூப்பிட வந்தேன்னு சொல்லுங்க அதுக்கு அப்பறம் விசயத்தை யாருகிட்ட வாங்க முடியுமோ வாங்கிகங்க, அவ்வளவு தான் என்னால பண்ணமுடியும்” என அறிவுறித்தி அனுப்பினார். அவர் சொன்னபடி சிலரிடம் சொல்லிவிட்டு காலேஜ்குள் நுழைத்திருந்தான் தீரேந்திரன்.
“மிஸ்டர் தீரேந்திரன்” என்ற குரல் அவன் முதுகு பின்னேயிருந்து கேட்க, பட்டெனத் திரும்பி பார்த்தான். ஃஅங்கே முகத்தில் புன்னகையும் கையில் புத்தகமுமாய் நின்றிருந்தார் தமிழ் பேராசிரியர் சரளா.
“நீங்க யாரு.? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்” ஆச்சரியமாய் விழித்தான்
“உங்களை எப்படித் தெரியாமல் போகும், நீங்க தான் நேஷனல் ட்ரெண்டிங் க்ரஷ் ஆச்சே, ஒரு பேட்ச் இருந்திச்சு உங்களை க்ரஷ்னு சொல்லிகி்ட்டு” எனச் சரளா சிரித்த முகமாய்ச் சொல்ல.
“அந்தப் பேட்ச் அகரநதி, கார்த்திப் பேட்ச் தானே.?” பட்டென அவன் கேட்டு விட நடு நடுங்கி போனார் சரளா, சிரித்த முகம் பட்டென வெளுத்துப் போனது, அவரின் முகம் பார்த்து சரளாவுக்கும் இந்தக் கேஸூக்கும் எதோ சம்மந்தம் இருப்பதை உணர்ந்தான்.
“நீங்க சொல்லுற மாதிரி எந்தப் பேட்சும் எனக்கு நினைவுல இல்லை சாரி, நான் தப்பான ஆள்கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நினைக்குறேன்” எனச் சொல்லி வேகமாய் நடந்த சரளாவின் பின்னே நடந்தவன்.
“மேடம் உங்களுக்கு எதோ தெரிஞ்சிருக்குச் சொன்னீங்கன்னா கேஸ்ல எனக்கு ஒரு தெளிவான பாதை கிடைக்கும்.” எனத் தீரேந்திரன் கேட்டான். அவன் கேட்ட நொடியில் கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் நிலைக்குத்தி நின்றது சரளாவின் பார்வை.
“இங்க பாருங்க தீரேந்திரன், இதை நீங்க சாதாரணமா நினைச்சிட்டு இருக்கீங்க, ஆனா இந்தக் கேஸை இதோட விட்டுறது உங்களுக்கும் நல்லது, உங்க குடும்பத்துக்கும் நல்லது, அதோட கோமாவில் இருக்க அகரநதியை சொர்க்கத்துக்கு அனுப்ப வழி பண்ணிறாதீங்க தீரேந்திரன். இதுக்குப் பின்னாடி இருக்க மர்மம் அகரநதியோட போறது தான் நல்லது, இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது, இந்தக் கேஸ் பத்தி தான் என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சா எனக்குத் தான் ஆபத்து”
“யாருக்காகப் பயப்படுறீங்க.? எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன், அகரநதி படிச்ச பேட்ச்ல இருந்த ஸ்டூண்ட் லிஸ்ட் அட்ரெஸ் மட்டும் கொடுங்க நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் மேம்” என அவன் கேட்க,
“அதெல்லாம் முடியாது தீரேந்திரன், தயவுசெஞ்சு இங்க இருந்து போங்க..?” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே தீரேந்திரனின் அலைப்பேசி அதிர்ந்தது.
“தீரேந்திரன் சார் உடனே வீ்ட்டுக்கு வாங்க” எனக் கோபாலனின் குரல்.
“சார்! என்ன எதாவது பிரச்சனையா..?”
“நீங்க வீட்டுக்கு உடனே புறப்பட்டு வாங்க” எனச் சொல்லி அழைப்பை துண்டித்திருந்தார் கோபாலன், நொடிக்கூடத் தாமதிக்காமல் நதியின் வீட்டை நோக்கி பயணபட்டான் தீரேந்திரன்.
பதறியபடி நதியின் வீட்டை அடைந்திருந்தான் தீரேந்திரன், வீட்னுள் நுழைய போனவனைப் பார்த்தவுடன் “வாங்க சார்” என அழைத்தார் கோபாலன்.
“என்னாச்சு சார்.?”
“அதியோட கேஸை, இனி விசாரிக்காதீங்க சார்” சோர்வான முகத்துடன் சொன்னார்.
“ஏன் சார் இப்படிச் சொல்றீங்க, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டாமா.?” அவன் அவர் விழி பார்த்து கேட்டான்.
“எங்களுக்கு எங்க அதி எழுந்து பழையபடி நடமாடினா போதும், அவள் உயிரோட இருந்தா போதும் தீரேந்திரன்” எனச் சொல்லியவர் தீரேந்திரனின் கரம்தனை பிடித்து அழ ஆரம்பித்தார்.
“இப்போ நதி எங்கே இருக்கா..?”
“நீங்க சேர்த்துவிட்ட ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கா, கூட வசந்தி இருக்கா” எனச் சொன்ன கோபாலனை பாரத்தவன்.
“யாரு உங்களை மிரட்டினாங்கன்னு சொல்லுங்க சார், அவங்க ஏன் என்கிட்ட வந்து பேசமாட்டேன்றாங்க, என்ன தான் நடந்தது உண்மையைச் சொல்லுங்க” என நேரடியாய் கேட்டான் தீரேந்திரன். கண்கலங்கியபடி நிமிர்ந்து பார்த்தவர், அதியின் அறைக்குள் சென்று ஒரு பெட்டியை எடுத்து வந்தார்.
அதில் அகரநதி மருத்துவமனையில் அணிந்திருக்கும் உடையின் சிவப்பு நிற துப்பட்டாவும் அதனுடன் ஒரு வெள்ளை காகிதமும் இருந்தது,அதை எடுத்துத் தீரேந்திரனிடம் கொடுத்தார் கோபாலன். அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.
“விசாரணையை நிறுத்துவும். எச்சரிக்கை, அபாயம் நெருங்க நெருங்க ஆபத்து இப்படிக்கு முடிஞ்சா கண்டுபிடி” போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்த காகிதத்தில் அபாயக் குறியும் வரையப்பட்டிருந்தது.
“சார் இது நதியோட துப்பட்டாவா..?”
“ஆமா சார், அதுவும் அவ இன்னைக்கி போட்டிருக்கும் சுடிதாரோட துப்பட்டா, அப்படினா அவளை யாரோ கண்காணிக்குறாங்கன்னு தானே அர்த்தம்” எனப் பளீரெனக் கேட்டார்.
“நீங்க சொல்றது சரி தான் சார், வாங்க ஹாஸ்பிட்டல் போய்ப் பார்க்கலாம்” என அவனழைத்தபடி அந்தக் காகிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான் தீரேந்திரன்..
நாட்களும் கடந்தது பல மிரட்டல் கடிதங்கள், பல மிரட்டல்கள் ஆனால் விடாப்படியாய் அந்தக் கேஸை துரத்துவதிலே குறியாய் இருந்தான் தீரேந்திரன். அன்றிரவு தாயின் மடியில் படுத்திருந்த தீரேந்திரன் கையில் தொடுதிரை பேசியில் எதையோ பார்த்தபடி கேட்டான்.
“ம்மா..!”
“சொல்லுடா தீரா..?”
“இல்லை நதியை உங்களுக்கு எப்படிப் பிடிச்சு போனதுமா..?”
“ஏன்டா அப்படிக் கேக்குற.?”
“இல்லை அவ கோமால இருக்கா..? எல்லாத் தாயும் தான் மகனுக்கு வரப்போற பொண்ணு மூக்கு முழியுமா. லட்சணமா இருக்கணும், எந்த நோயும் இருக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க, ஆனா அவ எழுந்து பேசினது கூட இல்லை, அதோட அவளோட கேரக்டர் கூட என்னன்னு தெரியாது, அப்பறம் எப்படிக் கல்யாணத்தைப் பத்தி யோசிச்ச.?”
“அவ உன் மேல வச்சிருக்க லவ்ல தான்டா நானே விழுந்துட்டேன், அவ எழுந்து உன்கிட்ட லவ்வ சொல்ல தான் போறா நீயும் விழுந்து குதிக்க தான் போற” எனச் சொல்லி புன்னகைத்தார் வினோதா.
“இதெல்லாம் ஓவர்மா, இருந்தாலும் நீ ஒரு புதுமையான மாமியார் தான் மா நீ”
“சரி நீ சொல்லுடா நதியை பத்தி நீ என்ன நினைக்குற..?”
“நதியா..?” சில நொடிகள் யோசித்தான்.
“சொல்லுடா” வினோதா வற்புறுத்த.
“நதி நல்ல வரையுற பொண்ணுமா, கவிதைலாம் பயங்கரமா எழுதி வச்சிருக்கா, சிம்பிளி ஷி இஸ் டேலன்ட்டட்மா” அவன் சொன்னான்.
“அதை யாருடா கேட்டது, பொண்ணை பிடிச்சிருக்கான்னு கேக்குறேன்”
“ஓ..! நீ அப்புடி வர்றீயா.? அவ தான் உன் மருமகள்னு ஆசையெல்லாம் வளர்த்திட்டு இருக்காதே மா, எனக்கு என்னோட வேலை தான் முக்கியம், ஊர்ல எல்லா பொண்ணுங்களும் என்னை லவ் பண்ணுதுன்னு, எல்லாரையும் எனக்கு கட்டி வச்சிருவியா..?”
“என்னடா இப்படி சொல்லிட்ட” முகத்தை வாட்டமாய் வைத்துக்கொண்டார் வினோதா.
“ஏன்மா இப்படி பண்ணுற.? என்னோட துறையில நான் சாதிக்கணும்மா, கல்யாணம்ன்ற முட்டுகட்டைய போட்டு என் வாழ்க்கையை க்ளோஸ் பண்ணீறாதமா”
“தீரா நீ எதையோ என்கிட்ட மறைக்குற, எனக்கு நல்லா தெரியுதுடா, உண்மையை சொல்லு நதியை உனக்கு பிடிச்சிருக்கு தானே.?”
“இல்லைமா சத்தியமா இல்லை”
“தீராநதியோவோம் எழுந்து வா நதின்னு ஏன்டா சொன்ன..? அவ கண்ணை பார்த்து உனக்கும் சலனம் வந்திச்சு சொன்ன..? எல்லாத்தையும் விடு நீ சொன்ன வார்த்தைகளை நம்பி தான கோமால இருக்க பொண்ணு ரெஸ்பான்ஸ் பண்ணினா..? காதல் இல்லாம எப்படிடா அவளால ரெஸ்பான்ஸ் பண்ண முடியும், அவளோட காதல் எந்த அளவுக்கு உண்மையா இருந்தா அவ உன்னோட குரலுக்கு ரொஸ்பான்ஸ் பண்ணிருப்பா.?”
“ம்மமா போதும் இந்த டாபிக்கை விடு, அவகிட்ட யாரு கைய பிடிச்சு உணர்ச்சி வசமா பேசியிருந்தாலும் அவ ரெஸ்பான்ஸ் பண்ணிருப்பா, அவங்க வீட்ல யாரும் அதை செய்யாம இருந்திருப்பாங்க” என்றவன் மடியிலிருந்து கோபமாய் எழுந்த போது அவனுடைய செல்பேசி கீங் கீங் என்ற சப்தத்துடன் ஒளிர்ந்தது.
வாட்ஸ் ஆப்பில் புதிதாய் எதோ எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருக்க அதைத் திறந்து பார்த்தான். அதில் எதோ குரல்பதிவு புதிய எண்ணிலிருந்து வந்திருந்தது, உடனே தன் அறைக்கு சென்று திறந்தான்.
“தீரேந்திரன் சரளா பேசுகிறேன் உங்களுக்குத் தேவையான தகவலை அனுப்பியிருக்கிறேன், என்னைச் சந்திக்க முயற்சி செய்யாதீர்கள்,அது ஆபத்தில் முடியலாம், என்னால் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது”அது பேராசரியர் சரளாவின் குரல் தான், அவர் அனுப்பியிருந்த தகவலை க்ளிக்கிட்டுத் திறந்தான்.
அகரநதியுடன் படித்த மாணவர்களின் பெயர், முகவரி தொலைப்பேசி எண் அடங்கிய கோப்பு அது, திக்கற்று நின்றவனுக்கு இந்தத் தகவல்கள் பெரும் நிம்மதியை தந்ததோடு, அவனுடைய நதியை மீட்க ஒரு வழி கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சிக்கொண்டது அவனின் மனம். அவனின் சந்தோசம் மொத்தமும் மறுநாள் காலை வரை மட்டுமே நீடித்தது.
உற்சாகமாய்க் காவல் நிலையத்திற்கு வந்தான் தீரேந்திரன். அவனை எதிர்கொண்ட கஜேந்திரன் மரியாதை நிமித்தமாகச் சல்யூட் வைத்தான்.
“சார் புதுக் கேஸ் ஸ்பாட்டுக்கு போகணும்”
“என்ன கேஸ்யா.?”
“சூசைடு சார்” பதிலளித்தார் கஜேந்திரன்.
“தற்கொலையா..? சரி வா ஸ்பாட்டுக்கு போவோம்” எனக் காவல் நிலையத்தை விட்டு கிளம்பிய காவல் வாகனத்தில், மொத்தம் நான்கு காவலர்கள் ஓட்நரையும் சேர்த்து.
“கஜேந்திரன், ஃபிங்கர் பிரிண்ட் டீம்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..?”
“பண்ணியாச்சு சார்” பின்னிருக்கையில் இருந்தபடி பதில் கொடுத்தார் கஜேந்திரன். சில விநாடிகளில் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர் காவலர்கள்,
“கஜேந்திரன் என்னன்னு போய்ப் பாருங்க, மத்த ரெண்டு பேரும் எதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாருங்க” எனச் சொல்லி விட்டு வீட்டினுள் நுழைந்தான் தீரேந்திரன்.
தனி வில்லா அமைப்பை போன்ற அந்த வீட்டின் வாயிலில் பெரிய வேப்பமரம், அதன் கிளைகள் நிழலை பரப்பி நின்றது.
தீரேந்திரன் உள்ளே நுழைய போன சமயம் அவனெதிரே ஒரு பெண் வெளியே வந்தாள்.
“நில்லுமா யாருமா நீ..?” தீரா கேட்டான். அவள் முகம் களையிழுந்து காணப்பட்டது, பதின் வயதின் இறுதியில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கோ தாயை இழந்த வருத்தம் அவளைச் சூழ்ந்திருக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டு சொன்னாள் அந்தப் பெண்.
“என் பேரு சத்யா சார், அம்மா இப்படிச் செய்வாங்கன்னு எதிர்பாக்கல சார்”
“நீ தான் ஃபர்ஸ்ட்டு பார்த்தியாமா..? கடைசியா அம்மாகிட்ட எப்போ பேசின.?”
“சார் அம்மா வேலைக்குப் போயிட்டு வந்ததுல இருந்தே ரொம்ப டிஸ்டர்ப்பா இருந்தாங்க, அதோட அம்மா ரொம்பவே ஸ்டராங், ஏன் இப்படிச் செஞ்சாங்கன்னு புரியலை சார்” எனச் சொல்லி மீண்டும் கேவி அழுதவள் முகத்தை மூடிக்கொண்டாள்.
“சரிமா விசாரணைக்கு எப்ப கூப்பிட்டாலும் வரணும்” எனச் சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“சார் பாடி பெட் ரூம்ல இருக்கு சார்” எனச் சொல்ல நேராய் அங்கே சென்றான்.
பரந்து கிடந்த குயின் சைஸ் பெட்டின் குறுக்கே இரவு உடையுடன் குப்பற படுத்துக்கிடந்தார் அந்தப் பெண்மணி.
“பாடியை திருப்புங்க” உத்தரவிட்டான் தீரேந்திரன்.
பிரேதத்தைத் திருப்பிய நொடியில் அதிர்ச்சியில் உறைந்தான் தீரேந்திரன், அங்கே உயிர்ற்ற உடலாய்க் கிடந்தது, அவன் ஒரு வாரத்திற்கு முன் பார்த்து பேசி வந்த பேராசிரியர் சரளா. சரளாவை இப்படி ஒரு நிலையில் பார்ப்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பிரச்சனை நினைச்சதை விட பெருசு போல … வினோதா சூப்பர் … தீரா நீ போரிங் போ பா …
அகரின் நண்பர்களின் தகவல்கள் பற்றிய தேடலில் தீரன். சிறு தகவல் அளித்தவரும் இப்பொழுது தற்கொலை செய்து கொண்டார்.
அகர் அவர்களின் கண்காணிப்பிலேயே உள்ளால் போல. அவளின் உடையுடன் மிரட்டல் கடிதம்.
அத்தனை மிரட்டல்களையும் தாண்டி தீரன் குற்றவாளியை நெருங்குவானா பார்ப்போம்.
Intersting and thrilling story sis… Story Narration super sis.. Nathiyota problem ku Karanam akilana sis…