Loading

காதல் -10

 

இதோ பூ பழம் வெற்றிலை பாக்கு தட்டுடன் சாயலியின் வீடே நிறைந்து இருந்தது. வாசலில் கார் நிற்கும் சத்தத்தில் அனைவரும் வாயிலை பார்க்க… மறவனுடன் சாயாலி கையில் பைகளை தூக்கி கொண்டு வீட்டு வாயிலில் இறங்கினாள்.

 

வீட்டில் உள்ள கூட்டத்தை பார்த்து அவள் கண்களை சுருக்க.. அதே பார்வையுடன் வந்த மறவன் அங்குள்ள ஆட்களையும் தட்டையும் பார்த்தே ஓரளவிற்கு கணித்து விட்டவன்.. அடுத்த நொடி சாயாலியின் கரத்தை இறுக்க பற்றி இருந்தான்.

 

தன் கரத்தையும் அவனையும் பார்த்தவள் அனைவரும் தங்களை பார்ப்பதை பார்த்து சங்கட்டமாக அவனது கைகளில் இருந்து தன் கைகளை உருவ பார்க்க … அவனது முரட்டு பிடியில் அவளால் சற்றும் கையை அசைக்க இயலவில்லை…

 

தேனு பதட்டமான முகத்துடன் அவ்விருவரையும் பார்த்தவர்.. அவசரமாக வாயிலுக்கு விரைந்து .. “தம்பி அது வந்து … இவங்க … ” என இழுக்க ..

 

” என் பொண்டாட்டிய பொண்ணு கேட்க வந்து இருக்காங்களா ?” என பட்டென்று மறவன் கேட்டத்தில் சாயா ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

 

” அதற்குள் இவனுக்கு பொண்டாட்டி ஆகி விட்டேனா” என உள்ளுக்குள் பொறுமி கொண்டாள்.

 

அவனது நேரடிக் கேள்வியில் அதிர்ந்த தேனு… சங்கட்டமாக அவனை பார்த்து ” ஆமா தம்பி இவங்க எல்லாரும் என் வீட்டுகாரர் வகையரா … என்னால ஒன்னும் சொல்ல முடியல.. அதன் இவ வந்து பேசட்டும்னு இருக்கேன் ”

 

” உங்க பொண்ணை யாருக்கு கட்டி கொடுக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது உங்க முடிவு… நீங்களே தாராளமா பேசலாமே… எதுக்கு சாயா ? ” சரியான கேள்வியில் மறவன் நிறுத்த .. தன் மகளை தயக்கமாக பார்த்தார் தேனு..

 

அதை புரிந்து கொண்ட சாயாலியும் அவன் கையை விடுத்து உள்ளே சென்று வந்தவர்களை வாங்க என்பதை போல தலை ஆட்டி வரவேற்று விட்டு .. பின்னே வந்த தமிழ் மறவன் அருகில் நின்று கொண்டவள்… ” நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம் ” என தாலி கட்டுவது போல செய்கை செய்து அவர்களுக்கு அவர்களது திருமணத்தை உணர்த்த.. அங்குள்ளவர்கள் ஆளுக்கு ஒன்றாக பேசி கொண்டனர்.

 

” இங்க பாரு மா… எங்க வீட்டுல பொட்ட புள்ள யாரும் கிடையாது .. குடும்பத்தோட ஒரே வாரிசு நீதான்.. உன்ன வெளிய கொடுக்க நாங்க ஒத்துக்க மாட்டோம், இங்க இருக்குற உன் அத்தை மகன்களை பார்த்து நீயே முடிவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ ” என அங்குள்ளவர் வந்ததை சுருக்கமாக சொல்லி முடிக்க.. சாயாலி அவர்களை வெட்டும் பார்வை பார்த்து வைத்தாள்.

 

இத்தனை நாள் எங்கிருந்தது இந்த சொந்தம்… இப்போது எங்கிருந்து வந்தது… எதற்காக வர வேண்டும் என மூளையில் போட்டு குழப்பிக் கொள்ள.. ” இங்க பாரு நாங்க பெருசா சீர் எல்லாம் கேட்போம்ன்னு நினைக்காத .. எங்க குடும்பத்து வாரிசா போயிட்ட .. இப்போ நீங்க இருக்குறது சொந்த வீடு தானே.. அதை மாப்பிள்ளை பேருக்கு எழுதி வச்சுடுங்க… கல்யாணத்துக்கு அப்பறம் உங்க அம்மாக்கு ஒரு நல்ல இடமா பார்த்து சேர்த்துக்கலாம்… நகை ஒரு முப்பது பவுன் உனக்கும் பத்து பவுன் மாப்பிளைக்கும் போட்டா போதும்… ”

 

இப்போது புரிந்தது.. எதற்காக ஈசல் மொய்த்ததை போல இங்கே கூட்டம் திரண்டு வந்திருக்கிறது  என்று .. சொந்தங்களே வேண்டாம் என்று தானே தன் தாயோடு தனியாக வந்து அறவே அவர்களை விட்டு ஒதுங்கி வாழ்கிறாள்.. மீண்டும் அவள் வாழ்க்கையில் நுழைந்து அவளது வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது…

 

” அப்போ மறவனுக்கு மட்டும் யார் கொடுத்தது… ஏன் அவன் கேட்டவுடன் சம்மதம் சொன்னாய் ” என மனசாட்சி கேட்ட கேள்விக்கு , தன் கோபத்தை அடக்கி கொண்டாள்… பின்னே விடை தெரிந்து கொண்டே கேள்வி கேட்டால் கோபம் வராதா என்ன ? ஒரு வேளை மனசாட்சி வேறு ஒரு பதிலை எதிர்பார்த்து இருக்குமோ ??

 

” என்னால முடியாது ” என தீர்க்கமாக மறுத்து மறவனது கையை பற்றிக் கொண்டவளை அங்குள்ள அனைவரும் கொலை வெறியுடன் பார்த்து வைக்க… அவளது அத்தை பெத்த ரத்தினங்களும் எங்கே அவள் கை விட்டு போய் விடுவாளோ என பயந்து போனார்கள்.

 

” அதான் சொல்லிட்டாள இப்போ நீங்க எல்லாரும் கிளம்புங்க ” இடியென இறங்கியது தமிழின் குரல்.

 

” இங்க பாரு பா இது எங்க குடும்ப விஷயம், அதுனால நீ தலையிடாத… வாய் பேச முடியாத பொண்ணு தானே அப்டின்னு நினைச்சு அவ சொத்த எழுதி வாங்க பார்க்குறியா ” என உறவுகளில் ஒருவர் கேட்க..

 

அதை கேட்கும் போது சாயாவிற்கே சிரிப்பு தான் வந்தது .. அவன் உயரம் தெரியாமல் பேசும் இந்த மூடர்களை என்னவென்று சொல்வது..

 

“அப்படியே வச்சுக்கோங்க… எனக்கு இந்த வீடும் சாயாவோட நகையும் கண்டிப்பா வேணும்.. அதை யாருக்கும் நான் விட்டு தரதா இல்ல ” என வெளிப்படையாகவே போட்டு உடைத்து விட… அங்குள்ளவர்கள் அதிர்ந்து போனார்கள்.

 

“அவன் உன் சொத்துக்கு ஆசை பட்டு தான் கல்யாணம் பண்ணிக்க போறான்… இப்போ உண்மை தெரிஞ்சு போச்சுல.. நீ அவனை கல்யாணம் பண்ணாதே ” கடுமையாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க.. சாயாலி பூட்டிய கரங்களை அவனிடம் இருந்து விலக்கவில்லை…

 

“ஏய் தேனு … நீயே அவளை சம்மதிக்க வைக்கிறியா இல்ல காட்டாய தாலி கட்டி கூட்டிட்டு போக சொல்லவா ” என அவரது நாத்துனார் கேட்க.. தேனு அதிர்ந்து மறவனை பார்த்தார்.

 

சாயாலி அமைதியாக நிற்கும் அவனையே வெறித்து பார்க்க… அடுத்த நொடி அங்கு போலீஸ் கூட்டம் உள்ளே நுழைந்தது.

 

“இது சாயாலி வீடு தானே ?”

 

“ஆமா ” என தலை ஆட்டினாள் சாயா..

 

” என்ன மா பிரச்சனை .. உன்ன கல்யாணம் பண்ண சொல்லி டார்சல் பண்ணுறதா நியூஸ் வந்துச்சு ” என காவலர்கள் கேட்க… ” அடப்பாவி நீயும் தானே டா என்ன டார்சல் பண்ணுற ” என மனதிற்குள் மறவனை நினைத்தவள்…

 

தன் சொந்தங்களை கை காட்ட.. அவர்கள் அதிர்ந்து போனார்கள்.. ” ஓ நீங்க தானா.. பிடிக்காத பொண்ணை ஏன் மா கட்டாய படுத்துறீங்க .. இன்னும் ரெண்டு நிமிஷத்தில நீங்க எல்லாரும் இடத்தை காலி பண்ணனும்… இல்ல ஒருத்தர் விடாம எல்லாத்தையும் தூக்கி உள்ள வச்சுடுவேன் ” என்றவரின் குரலுக்கு பயந்து அவர்கள் மீது வன்மத்தை வளர்த்து கொண்டு விடைபெற்று சென்றது அவளது சொந்தங்கள்.

 

மழை பெய்து ஓய்ந்ததை போல இருந்தது அந்த வீடு.. தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு அவனுக்காக ஒரு நாற்காலியை எடுத்து போட்டு விட்டு குளியலறைக்குள் சென்ற மகளை பார்த்தவர்… மறவனுக்கு காபி கலந்து கொடுத்தார் தேனு.

 

அதற்குள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சாயா.. அவளுக்கென தேனு போட்ட காபியை வாங்கி கொண்டு அவள் வழக்கமாக அமரும் புத்தகத்தின் அருகில் அமர்ந்து கொண்டார். சாயாவின் பார்வை கொஞ்சமும் அவளது வருங்காலத்தின் பக்கம் செல்லவில்லை.. ஆனால் அங்கே அப்படி இல்லை… வெறும் குளிர்ந்த நீரை மட்டும் முகத்தில் அடித்து கழுவிக் கொண்டு உள்ளே வந்தவளை இன்னும் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மறவன்.

 

மாசுமருவற்ற பொழிவான முகத்தை அவனையும் மீறி பார்த்து வைக்க… அவனது பார்வையை உணர்ந்த தேனு வெளியே சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

 

” நாளகழிச்சு நம்ம கல்யாணம்… நான் வரும் போது எங்க அப்பாவோட வரேன்… நீ கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு வரும் போது உன் அம்மாவோட தான் வந்து ஆகனும் ” … வர சொல்கிறாயா என கேட்கவில்லை.. மாறாக வந்தே ஆகவேண்டும் என்ற கட்டளை போட்டான்.

 

எரிச்சலாக வந்தது சாயாவிற்கு… எல்லாம் சிறிது காலத்திற்கு தான் என தப்பு கணக்கு போட்டு கொண்டாள்..

 

பின் நாற்காலியில் இருந்து எழுந்தவன்.. அவளது புத்தக மேஜை அருகே வந்து மேஜை மீது இருந்த புத்தகத்தை பார்த்து… ” தமிழ் காதலன் மேல ரொம்ப பிரியமோ ” என கேட்க…

 

இன்று தான் ஒரு உருப்படியான கேள்வியை கேட்டுள்ளான் என மனதிற்குள் நினைத்து கொண்டவள்… ” இந்த புத்தகம் இல்லேனா எனக்கு வாழ்க்கையே இல்ல .. இன்னும் நான் உயிரோடு இருக்குறதுக்கு காரணமே இந்த புத்தகம் தான் ” என கண்கள் மின்ன பேசும் சாயாவை ரசனையான பார்த்தவன்… என்ன நினைத்தானோ அவளது நாடியை அழுத்தமாக பற்றி தன்னை பார்க்க செய்தவன்…

 

“நாளைக்கு வரைக்கும் தான் உனக்கு டைம்… அதுக்குள்ள எவ்வளவு படிக்க முடியுமோ படிச்சுகோ… நம்ம கல்யாணம் முடிஞ்சு அங்க வரும் போது இந்த புத்தகம் இருக்க கூடாது .. புரியுதா ??” என அதட்ட… எதற்குமே கலங்காத சாயாவின் கண்கள் இன்று சற்று அதிகமாக தான் கலங்கி போனது.

 

எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பாள் ஆனால் புத்தகம் அப்படி இல்லையே அவளது உயிர் மூச்சான புத்தகத்தை அல்லவா விட்டு வர கூறுகிறான்.

 

ஆத்திரமாக வந்ததது அடக்கிக் கொண்டாள். நாடியில் இருக்கும் அவனது கையை வெடுக்கென்று தட்டி விட்டு அவளது பிஞ்சு விரலை நீட்டி.. ” தொட்டு பேசுற வேலை வேணாம் ” என கடுப்பாக சைகை செய்ய.. அவள் கூறியது புரிந்ததும் அவளையே  மார்க்கமாக பார்த்தவன் ஒன்றும் பேசாமல் தேனுவிடம் கூறி கொண்டு கிளம்பிவிட்டான்.

 

அவன் சென்றதும் தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.. மீண்டும் டேபிள் அருகே அமர்ந்து தமிழ் காதலனின் புத்தகத்தை கை கொண்டு வருடியவாரு கண்ணீருடன் பார்த்து வைத்தாள்..

 

அதற்கு மேல் தாமதிக்காமல் திறந்து விட்டாள் ஒரு பக்கத்தை… பின்னே இப்போது தமிழ் மறவன் கொடுத்த மன காயத்தை ஆற்ற தமிழ் காதலன் வேண்டும் அல்லவா…

 

பக்கம் என் 156 … அதிலிருந்த வரிகள்..

 

விட்டு போகிறேன் என

துவள வேண்டாம் கண்மணியே..

 

இனி உன் கைகளில்

தவழும் நாட்களை விட..

 

உன் மனதில் தவழும்

நாட்களே போதுமானது…

 

மனம் கனத்தது…. எப்படி தான் இவனுக்கு என் மனநிலை தெரியுமோ … சரியாக எழுதுகிறான்… என பெருமூச்சை விட்டுக் கொண்டாள்.

 

திருமண நாளும் விடிந்தது .. அவன் வாங்கி கொடுத்த பட்டு புடவையிலும் நகையிலும் தேவதைகளாக ஜொலித்தாள் சாயாலி…

 

இனி வரும் காலங்களிலும் ஜொலிப்பாளா ???

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்