
டீசர் 2
வெண்மேகமாய் வந்து தாலாட்டவா
ஈவ்னிங் வாலா @ Garland wala
“அந்த ப்ளாக்லயா ஒனக்கு ரூம கொடுத்துருக்காங்க? எந்த ரூம்?..” என்று ஒருவித திடுக்கிடலோடும் சிறு படபடப்போடும் கேட்ட சீனியர் மாணவியை பார்த்த மித்ராவோ,
“சிக்ஸ் நாட் ஃபோர்…” என்றவள், அந்த பெண் ஒரு மாதிரி திருதிருவென விழிப்பதை பார்த்துவிட்டு, “ஆமா ஏன் கேக்குறிங்க சீனியர்?…” என்று கேட்டு வைக்க,
“அந்த ரூம் வேணாம்னு சொல்லிட்டு முடிஞ்ச அளவுக்கு வேற ரூம்க்கு… இல்ல இல்ல வேற ப்ளாக்குக்கே மாறப்பாரு… அங்க இருக்கது அவ்ளோ நல்லது இல்ல…” என்று சொல்ல ஏன் என்று இவள் கேட்பதற்குள் அந்த பெண்ணோடு நின்ற மற்ற சீனியர் மாணவிகள் அவளை அவசரமாய்
அழைத்து சென்றிருந்தனர்… போகும் அந்த மாணவியையே பார்த்தபடி புரியாமல் நின்றவள் சிறு உதட்டு சுழிப்போடு தோளைக் குழுக்கிவிட்டு தனது வகுப்பறையை தேடி கிளம்பிவிட்டாள்…
**********************************************
“தேங்க் யூ சோ மச் சித்தப்பா.. நீங்க மட்டும் இல்லையின்னா சத்தியமா என்னால இங்க திரும்பவும் வந்துருக்கவே முடியாது…”என்ற விக்ரமின் குரலில் இருந்த உண்மையான மகிழ்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது… ஒருபக்கம் என்ன தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் சிறு கவலையோடு கூடிய பயமும் தோன்ற,
“விக்ரம் அண்ணனும் மதினியும் சொல்லியனுப்புனது நெனப்புல இருக்குல்ல… துவண்டு போயே கெடக்கியேன்னு தான்டா அப்படியிப்படி பேசி எல்லாரையும் சமாளிச்சு அங்கன அனுப்பிவுட்டுருக்கேன்… கவனமா நடந்துக்கிடுடா.. பத்திரம் என்ன…” என்று சொல்லி வைக்க அவனிடத்தில் இருந்து மௌனமே பதிலாய் கிடைத்திருந்தது…
**********************************************
“சீனியர பார்த்தா வணக்கம் வச்சுட்டு போற பழக்கமெல்லா கெடையாதா…” என்றவளை கீழிருந்து மேலாக ஒற்றை பார்வை பார்த்தவனோ!
“யாரு சீனியர்?…” என்று கேட்டு வைக்க, அவனைப் போலவே பார்க்க முயற்சித்து அவனது உயரத்திற்கு ஈடுகொடுக்க, அருகே இருந்த ஸ்டோன் பெஞ்சில் ஏறி நின்று அவனை மேலிருந்து கீழாக பார்த்து வைக்க, அவளது செய்கையில் புன்னகைக்க தான் தோன்றியது…
“என்ன பண்ணுற?…” என்று இதழில் குடிகொண்ட சிறு புன்னகையுடனே கேட்டு வைக்க,
“உன்ன யாரு இவ்ளோ உயரமா வளத்துவிட்டது? யூரியா கீரியா போட்டு வளத்தாங்களா?…” என்று கேட்க இப்பொழுது இதழில் புன்னகை பெரிதாகவே விரிந்தது…
**********************************************
“இத்தன வருசமாகியும் அப்புடியே இருக்கியான்ல…” என்ற தோழியை பார்த்து கலங்கிய விழிகளுடன் புன்னகைத்தவளோ!
“அப்படியேவா இருக்கியான்? நெறப்பவே மாற்றம் தெரியுது பாரு…” என்க,
“ஆமா ஆமா… ஈக்கிமாத்து குச்சியாட்டம் இருப்பியான்… இப்ப கொஞ்சம் சதயைப் போட்டு நல்லாவே இருக்கியான்… ஏன்ல அவனுக்கு நம்மளயெல்லா நியாபகம் இருக்குமா இருக்காதா? தயிரியமா திரும்பவும் இங்கனயே வந்து நிக்கிறான்…” என்று கேட்டு வைக்க உதட்டை பிதுக்கியவள்,
“பக்கத்துல போயி பாப்பமா?…” என்றுவிட்டு தோழியின் பதிலுக்கும் காத்திராமல் விர்ரென்று செல்ல, ஏக்கப்பெருமூச்சு விட்டவளாய் இவளும் பின்னேயே சென்றாள்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



Oru vela anga pei irukumo🥶🥶🥶🥶🥶 atha room enna room uh block yeah mathungrangalo.
என்னங்கடா இருக்குது அங்க… அந்த ரூமுக்குத் தனியா ஃப்ஷேஸ் பேக் இருக்குமா என்ன 🤔🤔😜😜
இரண்டு பேரும் நல்லா பேசுறாய்ங்க் ப்பா 😂😂… எது யூரியா போட்டு மனுஷன வளக்குறாய்ங்களா …. 😂😂😂
சூப்பர் டீசர். வாலா மா …
கதைக்காக எதிர்பாத்து காத்திருக்கேன்…