
விடியும் முன்..!
அத்தியாயம் 29
அர்ஜுனிடம் அடி வாங்கி களைத்துப் போய் அமர்ந்து இருந்தனர்,மூவரும்.
தன் கோபம் தீரும் வரை அடித்தவனோ களைப்பாய் கதிரையில் அமர்ந்து கொள்ள அவனை விழி எடுக்காது பார்த்திருந்த ராமின் வலது கன்னம் வீங்கி இருந்தது.அருகே இருந்த கார்த்திக்கின் இதழின் இடது முனை வெடித்திருந்தது.
மூவரிலும் படு மோசமாய் இருந்தது,வினோத்தின் நிலை தான்.அவனல்லவா மூவரிலும் தலைவன்.
அர்ஜுனின் இந்த அவதாரத்துக்கு காரணம் பவித்ரா மீதான காதலும் ரிஷியுடனான நட்பும் என்பது புரிய தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு அர்ஜுனை நிமிர்ந்து பார்த்திடவே பயம்.
இருக்கையில் சாய்ந்து விட்டத்தை வெறித்த படி அமர்ந்திருந்தவனின் மனதில் பல நினைவுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
வாழ்வில் பல அடிகள் சுமந்தவனுக்கு இயல்பாய் இருக்கும் இறுக்கம் அவனின் முகத்தை நிறைத்திருக்க பவித்ராவின் இழப்பு எல்லாவற்றுக்கும் மேலான அடியாகவல்லவா இருக்கிறது..?
சில பல எண்ணங்கள் தோன்ற நிமிர்ந்து பார்தத அர்ஜுனின் விழிகளில் கேள்வியுடனான ரௌத்திரம்.
“அவ எவ்ளோ நல்ல பொண்ணுன்னு உங்களுக்கு தெரியுமாடா..? எனக்காக அவ எவ்ளோ தியாகம் பண்ணிருக்கா..அவள போய் கொன்னுட்டீங்களே…?” கோபத்துடன் சொன்னாலும் அவனின் குரலில் அத்தனை வலி.
என்னவென்றாலும் அவன் நேசித்த பெண் அல்லவா..?
வலிக்காமல் போகுமா என்ன..?
வலி கோபமாய் உருமாற வினோத்தை எட்டி உதைக்கவும் அர்ஜுனின் கையில் இருந்த வினோத்தின் அலைபேசி அலறவும் சரியாய் இருந்தது.
சேமிக்கப்படாத எண் ஒன்றில் இருந்து அழைப்பு வர ஏற்றிடும் முன்னரே அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
வாசு தான் அழைக்கிறானோ என்கின்ற எண்ணத்தில் ஆராய்ந்தவனோ வினோத்திடன் திரையை காட்டிக் கேட்டிட தெரியாது என்று உதடு பிதுக்கியவனின் விழிகளில் துளியும் பொய்யில்லை.
“யார்ரா இது..? ரிங் கட் தர்ரான்..வாசுவா இல்லன்னா வாசுவேட அல்லக்கைங்களா..? என்னட எதுவும் சொல்லாம நடுங்குற..?” அதட்டலாய் கேட்க வினோத்துக்கும் பதில் தெரிந்திருந்தால் தானே பதில் மொழிய இயலும்.
“இப்போ நீ யார்னு சொல்லல..சத்தியமா கொன்னு போட்ருவேன்..” செய்து தீருவேன் என்ற உறுதியுடன் உரைத்தவனை பயப்பார்வை பார்த்தான்,வினோத்.
“சார் சத்தியமா எனக்கு இது யாருன்னு தெரியாது..ஆனா நா ஒரு உண்மய உங்க கிட்ட சொல்லல..”
“ம்ம்..நைஸ் என்ன விஷயம் சொல்லு..?”
“பவித்ராவ கொல பண்ணது யாருன்னு தெரியாது..ஆனா வாசு சாருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கறதுக்கு ஒருத்தர் இருக்காரு..”
“வாட்..?”
“ஆமா சார்..அவரு யாருன்னு எனக்கு தெரியாது..ஆனா அவர ரிஷி சாருக்கு நல்லா தெர்யும்..வாசு சாருக்கு ஆர்டர் போட்றது அவரு தான்னு ரிஷி சாருக்கு எப்போவே தெரிஞ்சிருக்கு..?”
“என்ன..என்ன சொல்ற நீ..?” அவன் முகத்தில் சடுதியாய் அதிர்வின் சாயல்.எல்லாவற்றுக்கும் மையப்புள்ளி வாசு என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க அது முற்றிலும் பொய்யாகிப் போனதால் வந்த அதிர்வோ என்னவோ..?
“அவரு ஏன் இப்டி பண்றாருன்னு தெரியல..ஆனா அது பெரிய நெட்வர்க்..அது மட்டும் கன்பார்ம்..”வினோத் அடித்துக் கூற அர்ஜுனுக்கோ ரிஷி ஏன் தன்னிடம் இந்த விடயத்தை மறைக்க வேண்டும் என்பது தான் பெரும் சிந்தனையாய்.
“ஆமா..அவன வாசு பாத்துருக்கானா..?”
“இல்ல சார்..”
“அவன யாருமே பாத்தது இல்லயா..?”
“ரிஷி சார் பாத்திருக்கிறதா ஒரு தடவ வாசு சார் சொன்னாரு..” என்க பிரமிப்பில் மொத்தமாய் குளித்துப் போனான்,அர்ஜுன்.
யாருக்கும் தெரியாமல் தனி ஆளாய் நின்று துல்லியமாய் காய் நகர்த்தி இருப்பவனின் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“வேறு ஏதாச்சும் தெர்யுமா..?”
“அது..அ..து அவன் ரிஷி சாரோட..” என்று சொல்லி முடிக்கும் முன்னமே எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்ட் வினோத்தின் நெற்றியைத் துளைத்துச் செல்ல அப்படியே சரிந்தான்,வினோத்.
●●●●●●●●
புகைப்படத்தை பார்த்த நிவேதாவுக்கு சட்டென பேச்சு எழவில்லை.
அனைவரும் அவளின் அலறல் கண்டு அவள் மீதே பார்வையை பதித்து நின்றிட தன்னை எச்சரித்த பெண் இவள் தான் என சொல்ல பெரிதும் சிரப்பட்டாள்,அவள்.
“இ..இவ..ங்க எ..என் கிட்..ட பேசு..னாங்க..” திக்கித் திணறி சொல்லி முடிக்க அனைவருக்கும் பெரும் அதிர்வு.
“நீ என்ன சொல்ற நிவேதா நீ..?” சாதாரணமாகக் கேட்டாலும் சத்யாவின் மனதுக்குள் ஒரு வித தீவிரம்.
“ஆ..ஆமா சத்யா நா நா பா..பாத்தேன்..” பிதுங்கிய விழிகளுடன் அவள் மீண்டும் கூறிட தோப்பு வீட்டிற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லலாதது போல் தோன்ற அடுத்த பத்து நிமிடங்களில் தோப்பு வீட்டின் வாயிலில் நின்றிருந்தனர்,அவனுடன் வந்தவர்கள்.
நிவேதாவுக்கு துணையாக ஒருவரை விட்டு ரகுவை பார்த்துக் கொள்ளும் படி ஜீவாவிடமும் விஜய்யிடமும் கூறி விட்டு வந்திருந்தனர்.
தோப்பு வீட்டின் வாயிலை சத்யா திறக்கவுமே மிதமான வேகத்தில் காற்று வீசி அனைவரினும் மேனியைத் தீண்டிச் செல்ல கொஞ்சம் பயம் தான்.
ஓரளவு தைரியத்துடன் முன்னேறிய சத்யாவின் பார்வை சுற்றத்தை அலச ஏனோ பழைய வீட்டைப் போல் இருந்தது,அதன் வடிவமைப்பு.
அழுக்கேறியிருந்த சுவர்கள் அந்த இடத்துக்கு ஒரு அசாராதரண தன்மையை வழங்குவது போல் தோன்றிட தலைலயை உலுக்கிக் கொண்டு நடந்து சென்று கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தது,அவன் தான்.கதவு பூட்டபட்டு இருக்கவில்லை.
சத்யாவுக்கு அடுத்து அவனின் பின்னூடு வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கு அந்த இடத்தைக் கண்டதுமே திகிலாய் இருந்தது.
பேய்,பிசாசு என்றாலே அவனுக்கு உள்ளுக்குள் கிடுகிடுக்கும்.வரவே மாட்டேன் என மறுத்தவனை தர்ஷினியின் பாதுகாப்புக்காகத் தான் தந்தையும் அவரின் உடன் பிறப்பும் வம்படியாய் அனுப்பி வைத்ததிருந்தனர்,இந்த பயணத்திற்கு.
அதுவும் சத்யாவிற்கு அழைப்பெடுத்து விசாரிக்கச் சொல்லி உயிரை வாங்குவார்கள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக தான் அவன் வந்ததே.
உள் நுழைந்தவர்களுக்கு அழுக்குப் படிந்த அந்த வீட்டைக் கண்டதும் முகம் மாறினாலும் அதன் பிரம்மாண்டத்தில் ஒரு முறை ஸ்தம்பித்து போனது உண்மை தான்.
ராஜ வம்சத்து அரண்மனை போல் கட்டபப்ட்டு இருந்த அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் நுண்ணிய வேலைப்பாடுகளால் நிரம்பி இருந்தது.
ஓரளவு தூசாய் இருந்த அவ்விடத்தை பார்வையால் தீண்டிய படி திரும்பி நின்று பேசத் துவங்கியது,சத்யா தான்.
“காய்ஸ் லிஸன் ப்ளீஸ்..எல்லாருக்கும் நாம எதுக்கு இங்க வந்துருக்கோம்னு தெர்யும்..இந்த எடத்துல ஊர் ஆளுங்க சொல்ற மாதிரி அமானுஷ்யம் இருக்கா இல்லயான்னு கன்ஃபார்ம் பண்றது தான் நம்ம வேல..”
“டேய் பேய் இருக்குன்னு தெரிஞ்சும் ஏன்டா இப்டி பேசற..?”
“கிருஷ்ணாஆஆஆஆஆஆ”
“சரி சரி நா பேசல..” என்ற படி விரல்களால் வாயைப் பொத்திக் கொண்டவனின் மேல் ஒரு முறைப்பை செலுத்தி விட்டு மீள தன் பேச்சைத் தொடங்கினான்,சத்யா.
“இந்த எடத்துல எத்தன பேர் எறந்து இருக்காங்கன்னு சரியா தெரில..இன்னிக்கி ஒரு பௌர்ணமி நாள்..பொதுவா பௌர்ணமி நாள்ல தான் ஆவி வெளில வந்து கொல செய்றதா ஊர் ஆளுங்க சொல்றாங்க..அது உண்மயா பொய்யான்னு இன்னிக்கி தான் பாக்கனும்..”
“இன்னொரு விஷயம் காய்ஸ்..பாதி பேர் இங்க தங்க போறோம்..மீதி பேர் பின்னாடி இருக்குற மத்த வீட்ல தங்க போறோம்..ஏன்னா ஒரு பொண்ணு அந்த வீட்ல தான் சூசைட் பண்ணி எறந்து இருக்கு” என்க சத்யாவை கலவர முகத்துடன் ஏறிட்டான்,கிருஷ்ணா.
“ஓகே..ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் தர்ரேன்..அது வர எல்லா எடத்தயும் சுத்தி பாருங்க..அதுக்கப்றம் நாம டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணலாம்..”
“சரி சத்யா..” கூட்டத்தில் இருந்து வந்த குரல்களுடன் விரும்பிய திசைக்கு ஆட்கள் கலைந்து செல்ல கிருஷ்ணாவை உடன் அழைத்துக் கொண்டு படிக்கட்டு வழியே மேல் தளத்துக்கு ஏறினான்,சத்யா.
“மச்சீ இந்த வீட்ட பாக்கும் போது பீஜீ எம் இல்லாமலே பேய் ஃபீல் வருது..” ஏறிய படி சொன்ன தோழனை ஏறிட்ட சத்யாவின் இதழ்களில் புன்னகை.
“சிரிக்காதடா பிசாசே..நெஜமாவே பயமா இருக்கு..”
“என் கூட இருக்கும் போது எதுக்குடா பயம்..?”
“ஆமா இவரு பெரிய ஹீரோ..முன்னாடி தியேட்டர்ல பேய் படம் பாக்கும் போது தனியா விட்டுட்டு ஓடுனவன் தான நீயி..”
“அது..தெரியாத வயசு டா..”
“தெரியாத வயசோ..அறியாத வயசோ..அப்போவே நா முடிவு பண்ணிட்டேன்..உன் கூட வரக் கூடாதுன்னு..” பாவமாய் சொல்ல கிருஷ்ணாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு ஏறியவனின் பார்வை ஓரிடத்தில் ஒட்டி நின்றது.
●●●●●●●
விமலனை அழைத்துக் கொண்டு கொஞ்சம் தூரமாய் வந்தான்,பிரகாஷ்.அவ்விடத்தில் வைத்து கேள்விகளை கேட்பதால் தேவசகாயம் இன்னும் உடைந்து போவார் என்ற எண்ணம் மனதில் ஓடவே இந்த செயல்.
“விமலன்,சுத்தி விசாரிச்சிட்டீங்களா..? இவனுக்கு எதிரிங்கன்னு யாராச்சும் இருக்காங்களா..?”
“ஆமா சார் தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் கிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணப்போ ஒரு லோக்கல் தாதா ஒருத்தன் ட்ரக்ஸ் கடத்துறத இவன் மீடியா கிட்ட காட்டி கொடுத்து இருக்கான்..அதுல அவன் ஜெயிலுக்குப் போக அவனோட வைஃப் கொழந்தயோட அவன விட்டுட்டு பிரிஞ்சுட்டாங்கன்னு ஆர்யாவ கொல்லனும்ங்குற தாட்டோட அவன் சுத்திகிட்டு இருந்ததா சொல்றாங்க..”
“ஆமா அந்த ரவடி பேர் என்ன..? இப்போ என்ன பண்றான்..?”
“அவன் பேரு காளிதாஸ்..முன்ன அடிதடி போதப்பொருள் கடத்தல்னு இருந்து இருக்கான்..இப்போ ஏதோ அவங்கப்பாவோட துணிக் கடய நடத்திகிட்டு இருந்தாலும் அப்பப்போ அடிதடி பண்ணிட்டு தான் இருக்கானாம்..”
“ம்ம்..சிசிடீவி எல்லாம் செக் பண்ணிட்டீங்களா..?”
“ஆமா சார்..ஆள தூக்குனது எல்லாம் அந்த காளிதாஸோட ஆளுங்கன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு..என்டர் ஆகறப்போ அவனுங்க சிசிடீவில சிக்கல..ஆனா வெளில வரும் போது மாட்டியிருக்காங்க..”
“ம்ம்..ஆமா இவன் அப்பா பேரு என்ன..? பேமிலி டீடெய்ல்ஸ் ஏதாச்சும் தெரிஞ்சுதா..?”
“இவனோட கசின் ப்ரதர் கிட்ட கேக்கும் போது ஓரளவு சொன்னான்..அப்பா பேரு சிவதர்ஷன்..இவனுக்கு ரெண்டு வயசு ஆகும் பொதே எறந்துட்டாங்களாம்..அம்மா பேரு வடிவுக்கரசி..இவன் பொறக்குறதுக்கு முன்னாடியோ அப்பாக்கும் அம்மாக்கும் டைவோர்ஸ் ஆகிருச்சாம்..அம்மாவோட சொந்த ஊர் ரணதீர புரம்னு சொன்னான்..”
“என் ப்ரெண்ட் விசாரிச்சு சொன்னப்போ அம்மாவோட ஊர் எதுவும் சொல்லலியே..?”
“ஐ திங்க் இவன பத்தின விஷயங்கள எல்லாம் ரொம்ப கன்ஃபிடன்ஷலா மெய்ன்டெய்ன் பண்ணிண்டு வர்ராங்கன்னு..அந்த பையன் இன்னும் ஏதோ சொல்ல வந்தான்..அவனோட தாத்தா கண்ண காட்டிட்டு தடுத்துட்டாரு..அதுக்கப்றம் அவன் வாய தெறக்கல..ரொம்ப தடவ அவன் கிட்ட கேட்டும் அவன் எதுவும் சொல்ல மாட்டேங்குறான்..” என்க யோசனையாய் நெற்றியைத் தடவினான்,பிரகாஷ்.
“சரி காளிதாஸ அர்ரெஸ்ட் பண்ணிட்டீங்களா..?”
“இல்ல சார் இன்னும்..?”
“வாட்..? இன்னுமா அர்ரெஸ்ட் பண்ணல..?”
“அவனுங்க மூனு பேரும் எங்கயோ ஒளிஞ்சு இருக்கானுங்க..காளிதாஸ் வீடு மத்தவங்க வீடு எல்லா எடத்தயும் செக் பண்ணியாச்சு..அவனுங்கள காணோம்..இன்னுமும் நம்ம ஆளுங்க தேடிகிட்டு தான் இருக்காங்க..கூடிய சீக்ரம் கண்டு புடிச்சிருவாங்க சார்..”
“ம்ம்..இன்னும் ஏதாச்சும் சொல்ல இருக்கா..?”
“இல்ல சார்..”
“ஓகே விமலன்..நீங்க இவங்க கூட இருந்து வாட்ச் பண்ணிட்டு சொல்லுங்க..நா போய் ஆக வேண்டியத பாக்கறேன்..” கூறிக் கொண்டு வெளியேறிவயனின் அலைபேசி அடித்தது.
●●●●●●●●
“அறிவில்ல உங்களுக்கு..படிச்சவரு தான சின்னப் புள்ள மாதிரி நடந்துக்கிறீங்க..?” திட்டிய படி வந்தவளை சட்டை செய்யாது முன்னேறிக் கொண்டிருந்த பையனை கொலைவெறியுடன் பார்த்தாள்,அவள்.
புதரின் பின்னே இருந்து எழுந்து வந்ததில் இருந்து அர்ச்சனை செய்தும் அசராமல் இருப்பவனைக் காண்கையில் வெறியாகியது,அவளுக்கு.
“என்ன ஸ்பீக்கர் அவுட்டா..?” ஓடிச் சென்று பையனின் முன்னே வழி மறித்து நிற்க இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவனோ நகருமாறு விழிகளால் சைகை செய்ய இன்னுமே பாதங்களை அழுந்த ஊன்றி அவள் நிற்க அவனுக்கும் கோபம் வரும் சாயல்.
“மித்ரஸ்ரீ..வாய மூடிட்டு வா..இருட்றதுக்கு முன்னாடி உன் மாமா வீட்டுக்குப் போனும்..”
“நீங்க கூப்டா நா எதுக்கு வரனும்..வர மாட்டேன்..” என வீம்பு பிடித்துக் கொண்டு அருகே இருந்த மரமொன்றின் சாய்வனா கிளையில் சட்டமாய் அமர்ந்து கொள்ள பையனின் கைகளோ ஒரு அறை விடத் தான் கைகள் பரபரத்தது.
“இவள எதுக்குத் தான் கட்டி வச்சாங்களோ..?” மூவிரல்களால் நெற்றியை சுருங்கத் தேய்த்த படி அவளை நோக்கி அடி எடுத்து வைத்திட காலை ஆட்டிய படி அமர்ந்திருந்தாள்,வானத்தை விழிகளால் அலசிக் கொண்டு.
“மித்ரஸ்ரீ..அடம் புடிக்காம வா..”
“நீங்க கூப்டா நா வர்னுமா என்ன..?”
“இட்ஸ் ஃபைன்ன்ன்ன..வந்து தான் ஆகனும்..ஏன்னா நீ என்னோட வைஃப்..”
“ஹெலோ சார் இங்க பாருங்க..நீங்க தான் நமக்குள்ள ஒட்டுல்ல ஒறவும் இல்ல..உங்க மனசுல அடுத்த ஜென்மம் எடுத்தாலும் எனக்கு எடம் இல்ல..ரொம்ப வெறுக்குற ஆள் நாந்தான்னு சொன்னீங்க..அதுவும் நாம டைவோர்ஸ் எடுக்கப் போறதா நீங்க சொன்னதா ஞாபகம்..” எத்தனை முயன்றும் முடியாது போக இறுதியில் குரல் உடைந்து விழிகள் கலங்கிட பட்டென மறுபுறம் திரும்பிக் கொண்டவளின் செயலில் பையனின் மனம் அடிபட்டுப் போனது.
வேண்டுமென்று தான் சொன்னான்,அது மறுப்பதற்கல்ல.ஆனால்,அவளின் எதிர்வினையைக் காணும் போது மனம் வலித்துத் தொலைகிறதே.
குனிந்து அடுத்த புறம் சென்றவனோ அவளின் முகம் பார்க்க முயல தலை தாழ்த்தி இருந்தவளோ பிடிவாதம் பிடிக்க கோபம் வரப்பெற்று பின்னூடு கரத்தை கொண்டு சென்று சடையை இழுத்த இழுப்பில் கத்திக் கொண்டு நிமிர்ந்து அவனின் முகம் பார்த்திட அவளையே ஆழமாய் ஊடுருவிக் கொண்டிருந்தன,பையனின் விழிகள்.
தொடரும்.
🖋️அதி..!
2024.05.01

