
விடியும் முன்..!
அத்தியாயம் 24
பின்னே கேட்ட காவேரியின் குரலில் கலைந்தவளோ “இந்த கோயில தான் பாத்துட்டு இருக்கேன்..” என்ற படி தூரத்தே தெரிந்த கோபுரத்தை விரல் நீட்டிக் காட்ட காவேரியின் பார்வையும் அவளின் விரல் நீண்ட திசையிலேயே சென்றது.
“காவேரி..”
“ம்ம்ம்ம்..”
“அந்த கோயில மூடி எத்தன வருஷம் இருக்கும்..?”
“இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்..இருபத்தெட்டுன்னு நெனக்கிறேன்..”அவள் கூற தரஷினிக்கு பேரூந்தில் சந்தித்த பெண்மணியின் கூற்றுத் தான் நினவிலாடியது.
“இப்போ யாரும் வர மாட்டாங்களா..?”
“ம்ஹும்..வாசலுக்கு வர கூட பயப்டுவாங்க..இப்போலாம் கேணிக்கு பக்கத்துல இருக்குற கோயிலுக்கு தான் போவாங்க..”
“அப்டியா..? இந்த கோயிலுக்கு நீங்க போனதில்லயா..?”
“போயிருக்கேன்..அப்பா முன்ன பின் கட்டு வழியா கூட்டிட்டு போவாரு..அப்பா எறந்ததுக்கு அப்றம் அவ்ளவா போனதில்ல..ஏதாச்சும்னா மருது அண்ணன் கூட்டிட்டு போகும்..ஐயோ மருது யாருன்னு சொல்லலியே..அது எங்க பெரிம்மா மகன்..”
“ஆமா இவ்ளோ பேர் சொல்றாங்களே..உங்களுக்கு பயம் இருந்தது இல்லியா..?”
“எப்பவாச்சும் பயமா இருக்கும்..ஆனா அப்பாவோட போற டைம் அந்தளவு பயம் இருந்தது கெடயாது..”
“நாம போலாமா..?” ஆர்வம் மின்னும் விழிகளுடன் அவள் கேட்டாலும் அடி மனதில் இயல்பான பயம் எட்டிப் பார்த்திட்டது.
நெற்றியைத் தட்டி யோசனை செய்த காவேரிக்கும் மறைந்திருந்த ஆர்வம் தலை தூக்க சரியென்று தலையசைத்தவளின் செயலில் தர்ஷினியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“தர்ஷினி போலாம்..ஆனா அம்மா பக்கத்துல எழவு வீட்டுக்கு கெளம்பினதும் நாம போலாம்..”
“சரி..ஆமா இந்த வம்சத்த பத்தி யாரு உங்க கிட்ட சொன்னது..?”
“எங்கப்பா..?”
“உங்கப்பாவா..?”
“ஆமா எங்கப்பா ஒரு ஆக்கியாலாஜிஸ்ட்..”
“ஆக்கியாலாஜிஸ்ட்டா..தொல் பொருள் ஆய்வாளர்..வாவ்வ்வ்..செம்ம..செம்ம சூப்பர்..”
“காவேரி..ஆனா நெஜமாவே இப்டி ஒரு வம்சம் இருக்கா..?”
“ம்ம்..உண்மயா இருக்கு..அப்பா ரொம்ப விஷயம் சொல்லுவாரு..அவரு நெறய தேடுனாரு இந்த வம்சத்த பத்தி..”
“ஆமா காவேரி..வம்சம் இருக்குறது ஓகே..ஆனா இந்த வம்சத்துல பொறக்குறவங்களுக்கு இப்டி நெஜமாவே வரம் ஒன்னு கெடக்குமா..?”
“ஆமா..”
“அத எப்டி காவேரி உறுதியா சொல்றீங்க..ரணதீரனுக்கு அப்றம் ஆண் வாரிசு கெடயாதே..அப்றம் எப்டி கன்பார்ம் பண்றது..?”
“யாரு சொன்னா..ரணீதரனுக்கு அப்றமா ரெண்டு பேருக்கு வரம் கெடச்சி இருக்கு..ஆனா ரெண்டு பேருமே மீள் ஜனனம் எடுத்தும் சின்ன வயசுலயே எறந்துட்டாங்க..அதனால அவங்கள பத்தி பெருசா எந்த தகவலும் இல்ல..”
“வாட் என்ன சொல்றீங்க..?இந்து சொன்ன கதைல அப்டி இல்லன்னு சொன்னாங்க..நா தேடுனதுக்கு அப்றமும் அப்டி ஏதும் கேள்விப்படலயே”
“இல்ல தர்ஷினி..இந்த ஊரே ரொம்ப மர்மமான ஊர்..நெறய விஷயம் யாருக்கும் தெரியாது..ஏன் எங்கப்பா கூட ரொம்ப விஷயத்த என் கிட்ட இருந்து மறச்சு தான் இருக்காரு..ஒரு தடவ அப்பாவோட பழய நியூஸ் கலெக்ஷன படிக்கற வர நானும் நீங்க நெனக்கிற மாதிரி தான் நெனச்சிகிட்டு இருந்தேன்..ஆனா அதுக்கப்றம் தான் அப்டி இல்லன்னு தெரிஞ்சுது..யாரும் அந்த மர்மமான விஷயத்த பத்தி தேட விரும்பவும் மாட்டாங்க..ஏன்னா இந்த ஊர்ல பேய் இருக்குல..”
“அப்போ அதுவும் உண்மயா..”
“ஆமா..நானும் ஆரம்பத்துல பொய்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன்..ஆனா அப்டி கெடயாது..எங்கப்பா ஒரு தடவ அப்டி ஒரு இன்சிடன்ட ஃபேஸ் பண்ணி இருக்காரு..அதுக்கப்றம் தான் நானும் உண்மன்னு நம்ப ஆரம்பிச்சேன்..”
“எனக்கு ஒவ்வொரு கதயா சொல்லுங்க காவேரி..பர்ஸ்ட்டு ரணீதர வம்சத்த பத்தி பேசிட்டு பேய் பத்தி பேசலாம்..” சோர்வாய் சொல்ல அவளைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றவளின் விரல்கள் கதவை மூடி தாழிட்டன.
“எங்கம்மாக்கு இப்டி கத பேசறது தெரிஞ்சாலே கோவம் வந்துரும்..அப்பா கூட ஆக்கியாலாஜிஸ்டா இருந்தது அம்மாவுக்கு புடிக்கல..அதான் ரூமுக்கு கூட்டி வந்தேன்..” என்றவாறு யன்னலைத் திறந்து அதனருகே இருந்த கதிரையில் அமர்ந்து கொள்ள அவளுக்கு பக்கத்தில் இருந்த கட்டிலின் விளிம்பில் இடம் பிடித்தாள்,தர்ஷினி.
“ரணதீர வம்சம்னு இருக்குறது நெஜம்..அந்த வரமும் நெஜந்தான்..ரணதீரனுக்கு அப்றம் வரம் கெடக்கலன்னு தான் நெறய பேர் சொல்லுவாங்க..இந்த ஊர்ல இருக்குறவங்களோட நம்பிக்க கூட அது தான்..யாரும் இன்னொரு தடவ அந்த வரம் கெடச்சதுன்னு நம்ப மாட்டாங்க..இன்னொரு தடவ கெடச்சு இருக்குன்னு எங்கப்பா சொல்லியும் கூட யாரும் ஒத்துக்கல..ஏன் கெடச்சத பத்தி கூட பத்தி பெருசா எந்த டீடெய்ல்ஸும் இல்ல..அப்பா கூட ரொம்பத் தேடுனதுக்கு அப்றம் தான் அந்த உண்மயும் தெரிய வந்துச்சு..”
“கொழப்பமா இருக்கே..”
“ரணதீரனுக்கு அப்றம் இந்த வரம் கெடச்சதுக்கு தெளிவான ஆதாரம் இல்ல..ஆனா ரெண்டு பேருக்கு கெடச்சு தான் இருக்கு..”
“அது யாரு..அவங்க பேரு..”
“இகனினியன் செவ்வேளரசன்..இத”
“வேணாம்மா வேணா..நானே ரொம்ப கொழம்பி இருக்கேன்..இந்த பேரே கன்பியூஸிங்கா இருக்கு..நீங்க கதய சொல்லுங்க..”
“ரெண்டு பேரு கதயும் ஒரே மாதிரி தான்..ரெண்டு பேரயும் சின்ன வயசுல கொன்னு இருக்காங்க..மீள்ஜனனம் எடுத்ததுக்கு அப்றமும் அவங்கள கொன்னுருக்காங்க..அப்போ அவங்களுக்கு இருபது வயசு தாண்டன்னு சொல்றாங்க..அதனால தான் அவங்கள பத்தி யாருக்கும் தெரியல..”
“ஒரு விஷயத்த தேடி இந்த ஊருக்கு கேள்விப்படற எல்லா விஷயமும் புதுசா இருக்கே..முடிலங்க..சத்தியமா முடில..”
“கூலாகுங்க தர்ஷினி..இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..இத விட இன்னும் இருக்கு..” அவள் சொல்ல கை கூப்பி கும்பிட்டவளின் செயலில் அவள் இதழ்களில் அகன்ற விரிவு.
“ஏற்கனவே தாங்க முடில..நீங்க வேற இன்னும் வெடிகுண்டா போட்றீங்க..போகப் போக எல்லாம் புரியும்னு பாத்தா இன்னும் கொழப்பம் தான் கூடுது..யப்பா..மத்த விஷயத்த எல்லாம் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கலாம்..இப்ப எனக்கு ஒரே ஒரு டவுட்..இந்த ஊர்ல ரணதீர வம்சம் யாரு..?”
“வடிவுக்கரசி அம்மா அவங்க பேமிலி தான்..” என்க யோசனை ரேகைகள்,தர்ஷினியின் முகத்தில்.
●●●●●●●●●
நேரம் மதியம் மூன்று மணி முப்பத்தைந்து நிமிடம்.
வினோத்துக்கு இன்னுமே திகைப்பு அடங்கியபாடில்லை.
அர்ஜுனின் ஆக்ரோஷமான அடிகள் கிளப்பிய பயமும் சேரந்து கொள்ள மீளாதவனின் பார்வை மற்றைய இருவரின் மீதும் தாவ அவர்கள் எங்கே அவனைக் கவனிக்க..?
விழிகள் விரிய மிரண்டு அர்ஜுனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்,குழம்பிப்போய்.
அதிலும் அடியைப் பார்த்துமே வினோத்துக்கு புரிந்து விட்டது,ரிஷியின் பயிற்சி தான் என்பது.
சத்தம் வராமல் இரத்தம் வர வைத்திருந்தானே.
“நமக்கே அப்டி வலிக்கிதுன்னா வினோத் சார்கு எப்டி இருக்கும்..?” கண்ணோரம் கன்னிப் போயிருக்க முறுக்கிய கைகள் சிவந்து வலியைத் தர அந்த நிலையிலும் ராமின் சிந்தனை இவ்வாறே.
கைகள் இரண்டும் கட்டப்ட்டு முழந்தாளிட்டு மூவரும் அமர்ந்து இருக்க அவர்களுக்கு முன்னே கதிரையில் உடலை கொஞ்சம் முன்னே சரித்து அவன் அமர்ந்திருந்த தோரணை ஏனோ ரிஷியைத் தான் நினைவூட்டிற்று,மூவருக்கும்.
பிடித்த ஒருவருடன் பழகிடும் பொழுது அவரின் இயல்புகள் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும் என்பது அவனுக்கு நினைவில் வரவில்லை.
வினோத்துக்கு அன்று துப்பாக்கி முனையில் ரிஷியின் முன்னே அமர்ந்திருந்தது நினைவில் வர ஒரு கணம் தேகம் வெடவெடத்திற்றே.
கடைவாய் உதடு கிழிந்து இரத்தம் கொட்டுவது போன்ற பிரம்மை,இப்போதும்.
“என்னடா பாக்கற..?” வினோத்தின் பார்வையை உணர்ந்து அர்ஜுன் கேட்க மறுப்பாய் தலையசைத்தவனின் வயிற்றில் ஒரு உதை.
“ஆஆஆ..”அலறிக் கொண்டே விழுந்தவனுக்கு வலியில் உயிர் போனது.இதைக் கண்ட கார்த்திக்கின் தொண்டைக்குழி ஏறி இறங்க சரியாய் அடுத்த நொடி கார்த்திக்கின் புறம் திரும்பின,அவன் விழிகள்.
அவனோ அதிர்ந்து பயத்துடன் பம்மிக் கொண்டு அமர்ந்தவனின் விழிகளில் அளவுக்கு மீறிய பயம்.
நேரம் பார்த்து வினோத்தின் அலைபேசி ஒலிக்க நடுக்கத்துடன் எடுத்துப் பார்த்தவனின் இதயம் தொண்டைக்குழியில் வந்து துடித்தது.
அவனின் வெளிறிய முகத்தைக் கண்டதும் எழுந்து அவனருகே சென்று அலைபேசியை பறித்தவனின் விழிகள் திரையில் பதிய கோபம் கொழுந்து விட்டெறிந்தது.
“அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கர் போடு..” என்ற படி நீட்டியவனின் மறு கரத்தில் இருந்து துப்பாக்கி முனை வினோத்தின் தலையில் முட்டிக் கொண்டிருந்தது.
பதட்டத்துடன் அழைப்பை ஏற்றவனுக்கு விரல்கள் நடுங்க நழுவ முயன்ற அலைபேசியை இறுகப்பற்றிக் கொள்ள அவனுக்கும் பியரத்தப்பட வேண்டி இருந்தது என்னவோ உண்மை தான்.
“வினோத்..”
“சொல்லுங்க சார்..”
“நா ரணதீர புரம் வந்து இருக்குறது தெரியும்ல..”
“ஆ..ஆமா சார்..”
“எதுக்கு இவ்ளோ டென்ஷன்..?”
“அது ஒன்னுல்ல சார்..” துப்பாக்கி முனையில் இருப்பவன் எங்கனம் சொல்வான்..? அர்ஜுனின் கனல் பார்வையால் தான் நா குழறுகிறது என்பதை.
“சார் மேடம பாத்தீங்களா..?” அர்ஜுனின் விழிமொழியைப் படித்தவனாய் கேட்க மறுமுனையில் சட்டென ஒரு அமைதி.
“சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”
“ப்ச்..இல்ல வினோத்..பேப்ஸ் கண்ணுலயே படல..அதான்..”
“அதான் என்ன சார்..?ந கேட்கச் சொன்ன அர்ஜுனுக்கே மனநிலை சற்று பதட்டமான உணர்வு.
“அதான் என்ன பண்றதுன்னே தெரியல..”ஆதங்கத்துடன் கேட்டவனின் குரலில் ஒரு வித குரூரம் நிரம்பியிருந்தது.
“ஓகே..ஐ ல் கால் யூ லேடர்..” என்ற படி அழைப்பை துண்டிக்க வினோத்தின் பார்வை கலவரத்துடன் அர்ஜுனைத் தீண்டிற்று.
ஏதோ யோசித்தவனோ,
“பவித்ராவ என்ன பண்ணுனீங்க..?” மாறாத் தோரணையில் அழுத்தமாய் கேட்டிட விழிகள் தெறித்து விடும் அதிர்வு வினோத்தின் முகத்தில்.
●●●●●●●●●●
எல்லாரும் தயாராகி முடித்திருக்க அந்த வீட்டில் இருந்த கல்லூரி மாணவர் குழு தமக்கு தேவையான தகவல்களை திரட்ட வெளிக்கிளம்பி இருந்தது.
சத்யா வரவில்லை என்றாலும் தேவையான வழிகாட்டல்களை வழங்கித் தான் இருந்தான்,தன்னால் முடியுமான அளவு.சிறிது நேரம் கழித்து அவர்களுடன் வந்து இணைந்து கொள்வதாக குறிப்பிட்டதுமே ஆசுவாசம் அடைந்தது,ரகுவின் மனம்.
தன் சூழ்நிலை எப்படி இருந்தும் கையளித்த பொறுப்பில் கவனம் செலுத்தக் தூண்டுதலாய் இருக்கும் தோழனின் இயல்பை மனதுக்குள்ளால் மெச்சிக் கொண்டனர்,அனைவரும்.
இருந்தவர்கள் மூன்று குழுவாக பிரிந்திருக்க ஒவ்வொன்றுக்கும் தலைமையாய் ஆட்களை நியமித்த பின்னரே பயணம் துவங்கியது.
ரகுவின் குழு அந்த ஊரின் தெற்கே கேணியின் அருகே அமைந்திருக்கும் கோயிலை நோக்கியும் நிவேதா தலைமை தாங்கும் குழு ஊரின் கிழக்குப் புறமாய் இருக்கும் காட்டுப் பகுதியையும் நோக்கி கிளம்பி இருந்தது.
மூன்றாவது குழுவோ தோப்பு வீட்டை அண்டிய இடத்துக்கு நகர்ந்து இருந்தனர்.விசாரித்துப் பார்த்ததில் இந்த இடங்களில் இருந்து தான் தமக்குத் தேவையான நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று சத்யா தீர்மானித்திருக்க அதன் படியே அவர்களின் பயணம்.
ஆட்களை குழுக்களாக பிரிக்கும் போதே தர்ஷினி அவ்விடம் இல்லாதது அவனுக்குத் தெரிய சத்யாவிடன் சொல்லவில்லை,தோழன்.கூறியிருந்தால் சத்யாவின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று ஊகிக்க முடியாதே.
தர்ஷினியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை கண்டு இதழ்கள் விரிய அலைபேசியை பாக்கெட்டில் போட்டவாறு கோயில் படியில் நுழைந்தவனின் இதயம் படபடத்தது.
கோயிலின் முன் வாசலில் வலது புறமாய் மரமொன்று நின்றிருக்க பூக்கள் நிரம்பிக் கிடந்தது.
நான்கைந்து படிகளை கொண்ட அந்த படிக்கட்டின் முதல் படியில் ஒரு சித்தர் அமர்ந்திருப்பதை கண்டவர்களின் பார்வையில் ஆராயும் தன்மை.
அனைத்தையும் உள்வாங்கியவாறு கோயிலுக்குள் நுழைந்தவர்களுக்கு பெரிதாய் ஆட்கள் இல்லாதது பிரச்சினையாய் மாறிட யாரிடம் தகவல் கேட்பதென்று தெரியவில்லை.
“பேயிருக்குன்னு சொல்றாங்க..ஆனா அதக் கேக்கறதுக்கும் ஆள் இல்ல..”
“என்னடி இது..கோயில்ல யாருமே இல்ல..இன்னிக்கி ஏதோ பூஜ இருக்கும்னு சொன்னாங்கள்ல..”
“ஊர்ல யாருமே கோயிலுக்கு வர்ரதில்ல மாதிரி இருக்கு..ஆளுங்களயே காணோம்..”
வந்திருந்தவர்கள் தமக்குள் பேசிக் கொள்ள அலுத்துக் கொண்டான்,ரகு.
அவனாலும் இதைத் தாண்டி என்ன செய்வதென்று யோசிக்க முடியாது இருந்தது.
கோயிலின் உள்ளே இருந்து வந்த பூசாரி இவர்களின் அருகே வர அவரின் முகமும் கேள்வியை பிரதிபலித்தது.
“தம்பீ..நீங்க இந்த ஊரில்லீங்களா..?”
“இல்ல சாமி..காலேஜ் ப்ராஜெக்ட் ஒன்னுக்காக இங்க வந்துருக்கோம்..சாமி இங்க பூஜ எதோ இருக்குன்னு சொன்னாங்க..யாரயும் காணோம்..?”
“அவ்ளவா ஆளுங்க வர மாட்டாங்க தம்பி..நீங்க கொஞ்சம் சுத்தி பாருங்க..அதுக்குள்ள ஆளுங்க வருவாங்க..” என்ற படி அவர் நகர்ந்திண நிம்மதியைடந்தவனாய் சாமி சன்னிதிக்குச் சென்று கை கூப்பி மனமுருக வேண்டிக் கொண்டான்,ரகு.
அனைவரையும் உள்ளே இருக்கச் சொல்லி விட்டு சத்யாவுக்கு அழைப்பெடுக்க வெளியே இருந்த மரத்தின் கீழே வந்து நின்று கொள்ள தோளில் ஏதோ விழுவது போல்.
அதிர்வுடன் தலையைத் தூக்கி பார்த்தவனுக்கு கத்தக் கூட நா எழவில்லை,பயத்தில்.
●●●●●●●●
தன் கையைத் தடவிய படி அமர்ந்திருந்நவளின் இதழ்களோ பையனுக்கு தன்பாட்டில் அர்ச்சித்துக் கொண்டிருந்தன.
“கிறுக்கு..மெண்டல்..முதுகுல அடிச்சேன்னு கைய இப்டியா முறுக்கி விட்றது..மனசாட்சி இல்லாத ஜென்மம்..” முணுமுணுத்தவளுக்கு முறுக்கியதற்கு பதிலாக அவனின் விரல்களை கடித்து வைத்தது,தற்காலிகமாய் மறந்து இருந்ததே.
“என்னடி முணுமுணுப்பு..?” கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திய படி கேட்டான்,பையன்.
அவனுக்கும் வலிக்காமல் இல்லை.அழுத்தி பல் தடம் பதியுமாறு தான் கடித்து வைத்திருந்தாள்,இம்முறையும்.
“ஒன்னுல்லடா கிறுக்கு..”
“ஒழுங்கா பேசு மித்ரஸ்ரீ..” கடுப்புடன் மொழிந்தவனின் பற்கள் அரைபடும் சத்தம் செவியை நிறைத்தது.
“என் வாய்..நா என்ன வேணா பேசுவேன்..உங்களுக்கு என்ன..?”
“என்ன திரும்ப கன்னம் வீங்கனும்னு ஆசயா..?” விழிகளில் கூர்மையைத் தேக்கி ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிய படி கேட்க அசருவாளா அவள்..?
“ஆமா..ஆச தான்..உங்க கன்னம் பொங்கி வர்ர பன்னு மாதிரி வீங்னும்னு ரொம்ப நாள் ஆச..”
“இட்ஸ் ஃபைன்ன்ன்ன்..இப்டி ஆச வேற இருக்கா மேடம்கு..?” அமர்த்தலாய் கேட்டவனின் விரல்கள் தொடையில் தாளம் தட்டின.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.19

