
விடியும் முன்..!
அத்தியாயம் 20
கன்னத்தில் வாங்கிய அறையின் வலி எல்லாம் பையனின் செய்த செயலில் அப்படியே பின் தள்ளப்பட்டிருக்க பேயறைந்தது போல் நின்றிருந்தாள்,அவனின் மனையாள்.
கொஞ்சமேனும் பையனிடம் இருந்து இத்தகைய ஒரு அதிரடியை எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.
திமிறி விலகக் கூட தோன்றாது திகைத்து அவளிருக்க அதற்கு முற்றிலும் தலைகீழான மனநிலையில்,பையன்.
அவனின் தோள்வளைவில் அவளின் தலை பதிந்திருக்க அவளின் தோற்பட்டையை பற்றியிருந்த கரத்தில் மெல்லிய நடுக்கம் இழையோட மறுகரமோ அவளின் கன்னத்தில் படிந்திருக்க நெற்றியுடன் நெற்றி முட்ட நின்றிருந்தவனுக்கு உயிர் ஆட்டம் கண்டது என்னவோ உண்மை தான்.
சத்தியமாய் அவன் செத்துத் தான் மீண்டான்,அந்த நொடி.அவளுக்கேதேனும் ஆகியிருந்தால் என நினைக்கையிலே உடல் மீண்டும் நடுங்க முகமெல்லாம் வியர்த்து போட்டிட அவன் அவனாய் இல்லை.
கொஞ்சம் இயல்பு மீண்ட மித்ரஸ்ரீக்கு இதயம் படபடக்க துவங்கியது.
நெற்றியில் மோதிய மூச்சுக்காற்றின் வேகமும் தோளில் பதிருந்திருந்த கரத்தின் நடுக்கமும் கன்னத்தில் பதிந்திருந்த கரத்தின் அழுத்தமும் அவளுக்கு எதையோ உணர்த்த முயன்றாலும் அதை உணரும் நிலையில் அவள் இல்லை,என்பதே உண்மை.
அவனே உணராத பட்சத்தில் அவள் உணர்ந்திட வேண்டும் என்கின்ற நியாயம் எல்லா இடத்திலும் பொருந்தாது அல்லவா..?
ஒரு கட்டத்தில் அவளுக்கும் இதயத்தின் ஓசை செவியை நிறைக்க பதட்டம் மிகுதியாகி அதீத உணர்த்தி வசத்தில் கண்கள் கலங்கித் தொடங்கிற்று.
கடுகடுப்பாய் அவளுடன் நடந்து கொண்டாலும் இடையிடையே அவன் காட்டிடும் கரிசனமும் அக்கறையும் அவளை வேரோடு சாய்த்தல்லவா விடுகிறது..?
அதிலும் பையனின் அருகாமையில் ஒரு வித சங்கடத்தையும் தர திமிறி விலகப்பார்த்தவளின் செயல் பையனுக்குப் புரிந்தாலும் அசைந்து கொடுக்கவில்லை,அவன்.வெகுவாய் பயந்து போயிருந்தானே.
ஆழமாய் மூச்சும் வெளியேற அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாது போயிற்று.
அவனின் காதலை உணர்ந்து இருந்தால் அடங்கி நின்றிருப்பாளோ என்னவோ..?
எங்கே தான் காதல் பூகம்பாய் வெடித்துச் சிதறிடுமோ என்கின்ற பயம் மனதை நிறைக்க பையனின் அடி வயிற்றில் முழங்கையால் ஓங்கி ஒன்று சுரீரென்று ஒரு வலி.
“பட்டாசு பைத்தியம்..” இருந்த மோனநிலை மொத்தமும் கலைந்து விலகி நின்று அவளை முறைக்க முகத்தில் துளிர்த்த வியர்வைத் துளிகளை துப்பட்டாவால் ஒற்றிய படி கலங்கிய விழிகளை சிமிட்டிய படி பெருமூச்சு விட ஏகத்துக்கும் கடுப்பானது,பையனுக்கு.
“எதுக்குடி குத்துன..?” நொடியில் மாறியிருந்தது,பையனின் மனநிலை.
“நீங்க அறஞ்சீங்க நா குத்துனேன்..” காரணத்தை மறைத்து அவளிதழ்கள் பொய்யை உச்சரிக்க இருமுனைகளுக்கும் அலைந்த கருமணிகளே அவளின் கள்ளத்தை தெளிவாய் ஒப்புவித்திருந்தது,பையனிடம்.
“இட்ஸ் பைன்ன்ன்ன்..பொய் சொல்ற..” மார்புக்கு குறுக்கே கரத்தை கட்டிய படி தெற்றுப் பல் தெரிய கொஞ்சமாய் இதழ் வளைத்து அவன் கேட்டிட பதில் சொல்லாவிடினும் பையன் நின்றிருந்த தோரணையை இரசித்து தான் தொலைந்தது,அவள் விழிகள்.
“மானங்கெட்ட மனசு..” தனக்குத் திட்டிக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு பையனின் அழுத்தமான முகத்தை கண்டு ஆயாசமாய் இருந்தது.
“பேசாம அப்டியே இருந்துருக்கலாமே..இவன சமாளிக்க முடியலியே..” தனக்குள் நொந்தவளாய் அவனின் வினாக்களில் இருந்து விடுதலை கிடைத்தால் போதுமென்ற எண்ணத்துடன் அவனைப் பார்த்து அசடுவழிய சிரிக்க பையனின் பார்வை கூர்மையானது.
“சாரி தலைவரே..தெரியாம அடிச்சிட்டேன்..வேணுன்னா நீங்க ஒரு அற அறஞ்சிகோங்க..” புன்னகை முகத்துடன் சொன்ன படி அவனுக்கு கன்னத்தை காட்டி நிற்க பையனின் தோரணையில் எந்த வித மாற்றமும் இல்லை.
“எத்தன வாங்கனாலும் இந்த வாய் மட்டும் அடங்குதா பாரு..”நினைத்தவனின் விழிகளில் கடுப்பு தெரிந்தாலும் அதற்கு மாறாய் கொஞ்சம் இரசனையும்.
“தலைவரேஏஏ”அவனுக்கே சமாதானம் ஆகும் எண்ணம் தோன்றினாலும் சாமியாடத் தூண்டி விடுவதாய் தான் பெரும்பாலும் அமைந்திடும்,அவளின் நடத்தைகள்.
“அடி வயித்துல நல்ல அடி..” அவன் முடிக்கும் முன்னே “ஈஸ் இட்..வாவ்..”கண்கள் மின்னச் சொன்னவளோ கொஞ்சமாய் கொஞ்சமாய் அவனின் நிதானத்தை தின்று கொண்டிருந்தாள்.
உறுத்து விழிக்கவே தன் மடத்தனம் புரிய “சாரி தலைவரே..வலிச்சிதா..?”பாவமாய் நடிப்பை அள்ளி விட கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றவனுக்கு கோபம் கட்டுங்கடங்காமல் வந்தது.
“அற வாங்காம வா..” அவளின் கரத்தை பிடித்திழுக்க முடியாது என்று சண்டித்தனம் செய்தவளின் கன்னம் மட்டும் வீங்கியிருக்காவிடின் அடுத்த அறையும் விழுந்திருக்கும்.
“திரும்பவுமா..? கண்ணால பாத்தே நமக்கு ஹார்ட்டு பீட்ட ஏத்துவானே..நோ..” இதழ்களுக்குள் முணுமுணுத்த படி மாட்டேன் என்று சைகை செய்ய ஒன்றும் யோசிக்கவில்லை,பையன்.
அடுத்த நொடி பாய்ந்திழுத்து அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க திமிறித் தோற்று அவனின் தோற்பட்டையை பதம் பார்த்திருந்தாள்,அவள்.
ஓரிரு நிமிடங்கள் கடந்திருக்கும்.
“என்ன வெயிட்டா சாமி..யானக்குட்டிய தூக்குன மாதிரி இருந்துச்சு..” கையை நீவிய படி சொல்ல கனலுடன் முறைத்தாள்,அவள்.
“அப்போ நீ தான் யா பெரிய யான..நானாய்யா உனக்கு தூக்க சொன்னேன்..கிறுக்கு நீ தான் யா தூக்கி போட்டுட்டு வந்த..மனுஷனா நீ..
ராட்சசன்..” திட்டியவளுக்கு தான் கடித்ததற்கு பதிலாக அவன் காதைப் பிடித்து திருகிய வலி இன்னும் மீதமிருக்க விரல்களோ மெதுவாய் தடவிக்கொண்டது.
அதிலும் யன்னலோரம் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு முன்னிருக்கையில் உட்கார்ந்து இருப்பவனின் கால்களோ நீண்டு அவளின் பக்கத்தில் அல்லவா கிடந்தது.
அவளுக்கு அணையாக வைத்திருப்பான் போலும்.இல்லையென்றால் சீண்டுவதற்கு வைத்தானோ..?
யாருக்குத் தெரியும்..?
கால்களை நீட்டி அவளுக்குப் பக்கமாய் வைத்து சரிந்தமர்ந்தவனுக்கு கைகளிலும் சற்றே வலி தான்.அதில் பொய் சொல்வதற்கும் இல்லை.
“நா கூட பிப்டி கேஜி தாஜ்மஹால்னு ஈசியா தூக்கலாம்னு பாத்தா இது அப்டி இல்ல போல..கொஞ்சம் விட்டிருந்தா கை ஒடஞ்சி இருக்கும்..”
“ஆமா இவரு பெரிய சினிமா ஹீரோ..நா காத்து மாதிரி இருக்குற ஹீரோயின்..தூக்கிக் கிழிக்கப் பாத்துருக்கு..கருமம்..எனக்குன்னு வந்து சேருதுங்க..”
“நல்ல வேள நா ஒனக்கு புருஷனா வந்தது..ரொமான்டிக்கான ஒரு ஆம்பள வந்திருந்தான்னு வையி உன்ன தூக்கி சுத்தும் போதே இடுப்பெலும்பு ஒடஞ்சி போய்ருக்கும்..அப்றம் நீ கீழ விழ உனக்கும் டேமேஜ்..தரக்கும் டேமேஜ்” புன்னகைக்காது அவன் சொல்ல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்து தள்ளிவளுக்கு அப்படியே அவனின் காலில் ஏறி அமர்ந்து உடைத்து விடலாமா என்கின்ற எண்ணம் மனதுக்குள்.
“அட கிறுக்கு..உனக்கு என்ன தூக்க சத்தில்லன்னு சொல்லுங்க..நமக்கு மட்டும் கல்யாணம் ஆகி இல்லன்னா இப்ப பேசனதுக்கு உலகம் பூரா தேடி சரி எனக்கேத்த ஒரு ஜிம்பாடிய தேடி கல்யாணம் பண்ணிருப்பேன்..அவரு என்ன தூக்கிட்டு காலாற நடந்துருப்பாரு..” சிலுப்பிக் கொண்ட சொல்ல அந்த வார்த்தைகளில் உள்ளுக்குள் பற்றி எரிந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை,என்பது தான் உண்மை.
“இட்ஸ் பைன்ன்ன்..அப்ப உன்ன தூக்கற அளவு நா பிட் இல்லங்குற..?”
“அதத்தான இவ்ளோ நேரம் சொல்றேன்..புரியல..ஸோ ஷேம்ம்ம் ஹா ஹா..சில்லி ஃபெலோ”
“இட்ஸ் பைன்ன்ன்..” அவன் சற்று நிதானத்துடன் தீர்க்கமாய் சொல்ல மனைவியானவளுக்குத் தான் கலவரமானது.
●●●●●●●
நேரம் மதியம் இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடம்.
ரணதீரபுரத்தில் இருக்கும் அந்த கோயிலின் அருகே இருந்த அந்த பெரிய வீட்டின் முன் நிறுத்தப்பட்டது,பேரூந்து.
ஒவ்வொருவராய் கீழே இறங்கிக் கொண்டிருக்க சலிப்போடு இன்னும் எழ மறுத்து அமர்ந்து கொண்டிருந்தாள்,தர்ஷினி.
பசி வேறு பாடாய் படுத்தியது.நடந்த களேபரத்தில் யாரும் இன்னும் மதிய உணவை உண்டிருக்கவில்லை.
“தர்ஷினி க்விக்..” செவியில் மோதிய ரகுவின் குரலை மறுக்க முடியாமல் தளர்ந்த நடையுடன் இறுதியாக பேரூந்தில் இருந்து இறங்கியவளோ அந்த வீட்டைக் கண்டதும் ஒரு நொடி பிரமித்து தான் போனாள்.அவளின் பசியும் சோர்வும் கூட அந்த பிரமிப்பில் பின்னே போயிருந்தன.
பிராம்மாண்டமான வீடு.
அதிலும் அதைச் சுற்றியிருந்த நிலப்பரப்பு இன்னும் பெரிதாய் இருக்கும்.
அவள் மட்டுமல்ல, இறங்கிய அனைவருமே ஒரு வித ஆச்சரியத்துடனேயே ஆராய்ந்து கொண்டிருந்தனர் அவ்விடத்தை.நகரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த கிராமத்தின் சூழ்நிலை புதிதாய் இருந்தது.
“காய்ஸ் இன்னிக்கு இங்க தான் நாம ஸ்டே பண்ணப் போறோம்..மேல ப்ளோர் பொண்ணுங்களுக்கு..கீழ இருக்குற ப்ளோர் பசங்களுக்கு..எல்லாரும் ப்ரெஷ் ஆகிட்டு க்விக்கா ரெடி ஆகுங்க..” ரகு அறிவிப்பாய் சொல்ல பலர் உள்ளே சென்றாலும் சிலர் அந்த சூழலை இரசித்த படி வெளியில் நிற்க அதில் தர்ஷினியும் அடக்கம்.
தூய்மையான சூழலும் முகத்தில் மோதிய மென்காற்றும் அவளுக்கு பெரும் இதத்தை கண்மூடி நின்றவளை கலைத்தது வண்டி சத்தமொன்று.
புளுதியைக் கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்ந்து வந்து நின்றது,வாசுவின் என் எஸ் டூஹன்ட்ரட்.
வாசுவைக் கண்டதும் ஊருக்கு வருவதை ஊகித்து இருந்தாலும் இவ்விடத்திற்கு வருவான் என எதிர்பாராதிருக்க முகத்தில் பயத்தின் ரேகைகள் சூழ்ந்தன.
அவளைக் கண்டு கொண்ட வாசுவின் முகம் இறுகி இருந்தாலும் இதழோரம் சிறு எள்ளல் புன்னகையொன்று.
வண்டியில் இருந்து இறங்கி விசிலடித்த படி அவள் அருகில் வர கால்கள் நடுங்கத் துவங்கிற்று,அவளுக்கு.
பிடித்திருக்கிறது என்ற பெயரில் விருப்பமில்லாத அவளிடம் அவன் செய்த தொல்லைகள் அத்தனை எளிதாய் மறக்கக் கூடியதன்றே.
அருவருப்பாய் இருந்தது,இப்போது நினைக்கையிலும்.
“ஹாய் தர்ஷினி..”
தர்ஷினி என்கின்ற அழைப்பே பெருத்த நிம்மதியைத் தந்தது,அவளுக்குள்.
முன்பெல்லாம் கொஞ்சல் மொழிகளிலேயே உயிரை வாங்குவது அல்லவா வழக்கம்.
“என்ன ஹாய் சொன்னா பதில் கூட பதில் சொல்ல மாட்டேங்குற..?”
“…………….”
“சரி சரி..ஷாக்க கொற..பேப்ஸ் இன்னிக்கு இங்க வர்ராளாமே..அவள பாக்க தான் வந்தேன்..அன்ட் வன் மோர் திங்..இன்னிக்கி அவளுக்கும் எனக்கும் கல்யாணம்..முடிஞ்சா வந்து கலந்துக்கோ..” சாதாரணமாய் சொல்லி விட்டு செல்ல அவனின் பேச்சில் சமைந்து நின்று விட்டிருந்தாள்,மித்ராவின் தோழியவள்.
●●●●●●●●●
வருத்தம் துளியும் இல்லாத ஓரமாய் அமர்ந்திருந்த மனைவியைக் காண தர்மேந்திரனுக்கு கோபம் எழுந்தாலும் மனதில் பயத்தின் சாயலும் இருக்கத் தான் செய்தது.
இழப்பு பெரிதென்றாலும் அழுகை வரவில்லை.மகனின் கீழ்த்தரமான செயல்களை அறிந்தும் அதற்கு துணை போகும் தாயும் இல்லை அவர்.
விரக்தியுடவ் அவரிருக்க வீட்டின் வெளியே நிலவில கூச்சல் சத்தம் பதபதைப்பை உண்டு பண்ணிற்று.
வேகமாக வீட்டின் வாயிலுக்கு செல்ல அவர் முன்னே கையில் அளிவாளுடன் உக்கிரம் மிகுதியில் பாய முயன்று கொண்டிருந்த தர்மேந்திரனை கஷ்டப்பட்டு தடுத்துக் கொண்டிருந்தனர்,சிலர்.
“விடுங்க..விடுங்க..அவன கொன்ன தான் என்னோட ஆத்திரம் அடங்கும்..விடுங்கடா..”ஆக்ரோஷமாய் வெளிவந்த வார்த்தைகளில் கொலைவறி கொந்தளித்தது.விழிகளிலும் நெருப்பாய் கோபம்.
அவரின் ஆக்ரோஷத்தை ஆரம்பித்து வைத்தவனோ அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.பார்வை முழுதையும் வடிவுக்கரிசியின் மீதே செலுத்தி நின்றிருந்தான்.
அவரின் பார்வை அவனில் படியவில்லை.
இறைஞ்சலுடன் தன்னை பார்த்து நின்றவனை ஏற்றுக் கொள்ளும் மன எண்ணம் அவரில் கொஞ்சமும் எட்டிப் பார்க்கவில்லை.
தாயின் பாராமுகம் ஒரு வித வலியைக் கொடுக்க மனம் இன்னும் கனமாகிப் போக உணர்வு துடைத்த முகத்துடன் அவரைப் பார்த்த படி நின்றிருந்தான்,அபிஷேக்.
●●●●●●●●●
பாதியை படித்து முடித்து விட்டிருந்தாள்,சங்கீதா.
அதில் சொல்லப்பட்டிருந்த மன உணர்வுகள் ஏனோ அத்தனை அழகாய்த் தோன்றியது,அவள் மனதுக்கு.
இப்போதும் ஒரு பக்கத்தை புரட்டியவளுக்கு அதில் எழுதப்பட்டிருந்தவை அத்தனை ஈர்த்தன.
*”இன்னிக்கி ஜஸ்ட்டு மிஸ்..ஒரு ரெண்டு நிமிஷம் முன்னாடி போயிருந்தா அவள பாத்துருக்கலாம்..ஷட்ட்ட்ட்..ஆனா ஒரு விஷயம் எனக்குப் புரிஞ்சுது..அவ மேல எனக்கு ஏதோ ஒரு பீலிங்க்ஸ் இருக்கு..இவ்ளோ நாள் இல்லன்னு இல்லன்னு நா எனக்கே சொல்லிகிட்டாலும் ஏதோ இருந்திருக்கு..”*
*”லவ்வா..ச்சே லவ் எல்லாம் இல்ல..ஆனா அவ அங்க தான் இருக்கான்னு அஷோக் கை காட்டுன டைம் எதுக்கு என்னோட ஹார்ட்டு அப்டி துடிக்கனும்..? ஹார்ட்டு துடிக்கிதா வெடிக்கிதான்னு டவுட் வார மாதிரி ஒரு சத்தம் காதுக்குள்ள..எதுக்கு அவ்ளோ மூச்சு வாங்கனும்..? ஹன்ட்ரட் மீட்டர்ஸ்ல பர்ஸ்ட் அடிச்சப்போ கூட எனக்கு அப்டி மூச்சு வாங்குனதில்ல..பயமா நர்வஸா ரொம்ப படபடப்பா எதுக்கு இருக்கனும்..?எக்ஸாம் ரிஸல்ட்ஸ கூட நா கூல தான பாப்பேன்..மை காட்ட்ட்ட்..அட பொண்ணே பைத்தியமாக்கற நீ!”*
*”பரபரன்னு என்னோட கண்ணு நிக்கம அவள தேடிச்சு..அந்த நிமிஷம் அவள பத்தி மட்டுந்தான் என்னோட மைன்ட் யோசிச்சிச்சு..ஐ ஸ்வேர்..அது உண்ம தான்..அவ என்னமோ பண்றா..அதுவும் அந்த டைம் ஹார்ட் முழுக்க பட்டர்ப்ளை பறக்குற மூமண்ட்..காட்ட்ட்ட்..அந்த பீல் இருக்கே..ஒரு கையால ரெண்டு கண்ணயும் மறச்சுட்டு நா நின்னத நெனச்சு எனக்கே ஷாக் தான்..வெக்கம் இல்ல..ஆனா அவள பாக்க லைட்டா ஒரு தயக்கம்..என்னாச்சு எனக்கு..?”*
*”லவ்வா..இல்ல..அப்டி தோணல எனக்கு..ஆனா ஆனா அவ முன்னாடி நா நானா இல்லியே..கேரக்டரயே தொலச்சிட்டுல நிக்கறேன்..யாரோ ஒரு பொண்ணுக்காக நா இப்டி மாறிப் போய் நிக்கறேன்னா..இது..இது லவ் ஆ..இல்ல..இல்ல..லவ் இல்ல..ஆனா டோட்டலா லவ் இல்லன்னும் சொல்ல முடியாது..ஏதோ இருக்கு..பெரிய மனசுல சின்னதா ஒரு எடம் இருக்கு..தூங்கப் போற டைம் அவள பத்தி யோசிச்சி விழிச்சுக் கெடக்குற டைம் இருக்கு..ரோட்ல போற டைம் அவள தேட்ற கண்ணுல அவள பாக்கனுமுங்குற ஆச இருக்கு..யாருன்னு தெரியாத அவ பேர் என்னன்னு தெரிஞ்சுக்குற ஆர்வம் இருக்கு..இதெல்லாம் இருக்குறப்போ எதுவும் இல்லன்னு சொல்லிர முடியாதுல..அப்போ அது லவ்வா..ம்ம்..லைட்டா ஒரு லவ்வு தான்..ஐ ஸ்வேர்..”*
“அப்பாடா இப்பவாச்சும் புரிஞ்சுதே..” படித்து முடித்து விட்டு ஆசுவாசப் பெருமூச்சுடன் அடுத்த பக்கத்துக்கு தாவினாள்,அவள்.
” *யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..*
*ரொம்ப ரொம்ப நாள் வெய்ட் பண்ணி அவள பாத்துட்டேன்..* *இன்னிக்கி தான் அவள பாத்தேன்..இன்னிக்கி எதிர்ப்பாக்கல அவள பாப்பேன்னு..வோஹ்ஹ்ஹ்ஹ்..* *எதுக்காக இப்டி பீல் பண்றேன் நான்.. காட்ட்ட்ட்..”*
*”அவன்னு தோணி வேற ஒரு பொண்ணு கிட்ட தான் பர்ஸ்டு போய் பேசனேன்..அந்தப் பொண்ணு மொறச்சிகிட்டே “அங்க இருக்கா அவ.”ன்னு சொல்லி காட்டுனா..ஆனா என் லைப்ல என் கிட்ட பயமில்லாம பேசுன மொத பொண்ணு இந்த பொண்ணா தான் இருக்கும்..எனக்கு கோவம் வர்ல..தாங்க்ஸ் சொல்லிட்டு போனா அங்க நின்னுருந்தா அவ..பேரு சாந்தவின்னாங்க..எதுக்கு பொய் சொல்ல..எனக்கு சாந்தவிங்குற பேரு புடிக்காது தான்..ஆனா அந்த பொண்ணோட கேரக்டர் ரொம்ப புடிச்சிப் போச்சு..அதுல அவ என்னப் பாத்த பார்வ..ஐ திங்க் அவளும் என்ன லவ் பண்றா..அப்டி தான் தெரிஞ்சுது அவளோட பார்வைல..”*
*”ஏன்னு தெரியல..என்னால அவ கூட நார்மலா பேச முடியல..அந்த கண்ணுல தெரிஞ்ச லவ் என்ன ரொம்ப கில்டியா பீல் பண்ண வச்சது..ரொம்ப நாளா என்ன லவ் பண்றா போல..அவளோட நடவடிக்க தயக்கம் எல்லாம் அப்டி தான் இருந்துச்சு..அவள பாத்ததும் ஸ்பார்க் அடிச்சுதா..பீலிங்க்ஸ் வந்துதான்னா தெரியல..எனக்காக உயிர கொடுக்க துணிஞ்ச பொண்ண கைவிட்ற கூடாதுங்குற ஒரு தாட்..தட்ஸ் ஆல்..”*
பக்கத்தில் இறுதியாய் எழுதியிருந்த வார்த்தைகளில் நேர்த்தி தூரப் போயிருக்க அவனின் தடுமாற்றம் புரிந்தது,சங்கீதாவுக்கு.
அடுத்த பக்கத்தை புரட்ட முன் முகப்பை பார்த்திட அதில் உணர்வுகளில் உரிமையாளனான அவனின் சிறிய புகைப்படமொன்று ஒட்டபட்டிருந்தது.
புகைப்படத்தின் கீழ் அவன் பெயர். நேர்த்தியான தெளிவான கையெழுத்துக்களில் எழுதப்ட்டிருந்தது,
“ரிஷிவர்மன்” என்று.
தொடரும்.
🖋️அதி..!
2024.04.04

