Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 17

 

அவன் வரிகளை படிக்கும் போது ஏனோ ஒரு புன்னகை அவளிதழ்களில்.விழிகளில் ஒரு வித ரசிப்புத் தன்மை மின்னியது.

 

*”இன்னிக்கி எனக்கு என்னாச்சுன்னு தெரியல..அஷோக் ஒரு பையன காட்டித் தந்தான்..அவன் உன்ன காப்பாத்துன பொண்ண டீஸ் பண்ணி அவமானப்படுத்திட்டான்னு..அவ அழுதழுது போனான்னு..சத்தியமா எனக்கு அவ்ளோ கோபம்..கண்ணு மண்ணி தெரியாத கோபம்னே சொல்லலாம்..ஆனா அவ்ளோ சீக்கரமா எமோஷனல்ஆகுற ஆளு கெடயாது..”*

 

*”ஆனா அந்த செக்கன் ஐ அம் டோட்டலி அவுட் ஆப் மை கண்ட்ரோல்..நா என்னோட கன்ட்ரோல லூஸ் பண்ணிட்டேன்னு எனக்கே புரிது..ஆனா என்னால எதுவும் பண்ண முடியல..அந்த பையனுக்கு ஓங்கி அறயும்னு தோணுச்சு..நீ எதுக்கு அவள டீஸ் பண்ணனும்னு”*

 

*”அப்டியொரு கோவம்..அஷோக் நா ரியாக்ட் பண்ணத பாத்து பயந்துட்டான்..அப்டியே அவன் கிட்டப் போனேன்..அந்த பார்க்ல அவன் அவனோட லவ்வர் கூட கடல போட்டுட்டு இருந்தான்..”* வாசிக்கும் போதே முகம் முழுக்க கோப ரேகைகள் பரவ சட்டைக் கையை மடித்து விட்ட படி அவன் அந்தப் பையனை நோக்கி நடப்பது போன்ற பிம்பம் மனக்கண்ணில் ஓட தன்னை நினைத்தே சிரிப்பாய் இருந்தது,சங்கீதாவுக்கு.

 

ஆனால்,அவனைத் தெரிந்த இத்தனை நாட்களில் அவனை கோபமாய் கண்டிருக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானதாய் இருக்க கோபப்பட்டான் என்று அவன் கூறியிருப்பது சிறு அதிர்வைத் தந்திடவும் மறக்கவில்லை.

 

” *அவ்ளோ கோவம் எனக்கு.* *அவனோட பயம் அவன் கண்ணுல தெரிஞ்சுது*

*வேற யாரும் அப்டி பாத்துருந்தா நா கொஞ்சமாச்சும் நிதானமா ஆயிருப்பேன்..* *ஆனாலும் என்னால என்ன கன்ட்ரோல் பண்ணிக்க முடியல..”*

 

*”அடி அடின்னு அடிச்சேன்..அஷோக் வந்து தடுக்க பாத்தப்போ அவனயும் தள்ளி விட்டுட்டேன்..யாருன்னே தெரியாத பொண்ணு அவ.. அவளுக்காக நா எதுக்கு இவ்ளோ அக்ரஸிவா ரியாக்ட் பண்ணேன்னு புரியல..”*

 

*”சும்மா யாராவது ஒரு பொண்ண அவன் கலாய்ச்சு இருந்திருந்தாலும் நா அவன கண்ணால பாத்தே ஆப் பண்ணிருப்பேன்..ஆனா பப்ளிக் ப்ளேஸ்னும் பாக்காம இப்டி ரொம்ப ரொம்ப டெரரா அட்டேக் பண்ணிருக்க மாட்டேன்..அவன் ஒதடு கிழிஞ்சு ப்ளட் வருது..அவன் கன்னம் ரொம்ப வீங்கி இருக்குன்னும் புரிது..ஆனா அவன் எப்டி அவள அழ வக்கலாம்..அது மட்டுந்தான் என்னோட மைன்ட்ல ஓடிட்டே இருந்துச்சு..ஐ ஸ்வேர்..ஐ ஸ்வேர்..”*

 

*”நான் நானா இல்ல..ஐ அம் ஸ்லோவ்லி லூஸிங்க் மை ஸெல்ப் பார் ஹர்..பட் வய்..? ம்ஹும்..சத்தியமா இது லவ் இல்ல..நோ நோ இது லவ் கெடயாது..கண்டிப்பா லவ் இல்ல..”* இறுதியில் கிறுக்கலாய் மாறியிருந்த எழுத்துக்களின் சாட்சியமே போதும்,எழுதிய நொடிகளில் அவன் வெகுவாய் தடுமாறிப் போயிருப்பதை உணர்த்த.

 

காதல் இல்லை என்கிறான்.ஆம்

அப்படித்தானே சொல்கிறான்,அவனும்.

 

இம்சித்து வதம் செய்ய உணர்வுகளில் உயிர்த்தெழும் உருமாற்றங்கள் காதல் இல்லை என்கிறான்.

தொலைத்து தவிக்கச் செய்ய மனதோரம் உண்டாகிடும் தடுமாற்றங்கள் காதல் இல்லை என்கிறான்.

மாற்றி மறக்கச் செய்ய சுயமதில் ஜனித்திருக்கும் சிறுமாற்றங்கள் காதல் இல்லை என்கிறான்.

தளர்த்தி இழக்கச் செய்ய வெண்ணிற எண்ணங்களில் உண்டாகிடும் நிறமாற்றங்கள் காதல் இல்லை என்கிறான்.

 

ஆணவனின் இதயத்துடிப்பு அவள் பெயர் சொல்வது அவனுக்குப் புரியவில்லை.ஆடவனின் ஆழ்மனத் தவிப்பு அவளைத் தேடி நிற்பது அவனுக்கு தெரியவில்லை.

 

இதயத் துடிப்பும் இம்சிக்கும் தவிப்பும் அவளுக்கென்றே ஆன பின் அதைக் காதல் இல்லை என்றால்…

இல்லவே இல்லை என்றால்,யார் தான் நம்பிட..?

 

உணர்த்தத் தவறி காதலிக்கும் ஆயிரம் பேர் இன்று.உணரத் தவறியவனாய் காதலிப்பதோ ஆயிரத்தில் ஒன்று.ஆடவனும் அப்படித் தானோ..?

 

“இல்லை..இல்லை..” என்று சொல்லிக் கொண்டே இது போல் இல்லை என சொல்லும் அளவு காதலித்து தொலை(க்)கிறான்,ஆடவன் அவனும்.

 

●●●●●●●

அந்தப் பெண்மணி சொன்னதை கேட்ட தர்ஷினியின் விழிகள் விரிந்திட ஏற்கனவே துளிர் விட்டிருந்த பயம் இப்போது எழுந்து மனதில் கிளை பரப்பி விரிந்து நின்றது.

 

அடிதடி என்றால் பத்தடி தள்ளி நிற்கும் ரகம் அவள்.வரும் போது கேள்விபட்ட கொலை பற்றிய செய்தியே அவளை நிலைகுழையச் செய்திருக்க இப்போது இந்தப் பெண்மணி பேசுவது மனதை மிரள வைக்கத் தவறவில்லை.

 

அவருக்குமே தர்ஷினியின் மிரட்சியைக் கண்டு மனம் இளகிட “பயப்டாதமா..” என்றார்,மென்குரலில்.

 

அவளுக்கும் அந்த சமயத்தில் அப்படி ஒரு வார்த்தை தேவைப்பட்டது.பயத்திலும் பிரச்சினைகளிலும் ஆறுதல் வார்த்தைகளுக்காக மனம் ஏங்குவது நியாயம் தானே.

 

“எதுக்குக்கா போக வேணாம்னு சொல்றீங்க..?”

 

“‌அது ஒரு பெரிய கத மா..”

 

“பரவால்ல கா சொல்லுங்க..”

 

“இது இப்போ இருபத்தெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது..இவ்ளோ பயப்டாத மா..உன் கண்ணுல அவ்ளோ பயம்..நா சொல்லல..”

 

“இல்ல..இல்லக்கா நா பயப்டல..நீங்க சொல்லலனா எங்களுக்கு மண்ட வெடிச்சிரும்..”

 

“இது எங்க பாட்டி எனக்கு சொன்ன கத தான்..எங்க ஊர்ல ஒரு பெரிய மனுஷன் இருந்தாரு..அவருக்கு சொந்தமா தான் ஊர் இருந்துச்சு..ரொம்ப நல்ல மனசு..நெலத்த பிரிச்சு கொடுத்துட்டாரு பணம் கூட வாங்காம..அதுல இருந்து ஊர்ல இருக்குறவங்களுக்கு அவரு மேல ஒரு தனி மரியாத..”

 

“ம்ம்ம்ம்..”

 

“அவருக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளக்கி அப்றம் தான் கொழந்த பொறந்துச்சு..ரெட்ட புள்ள..ஆனா ஒரு கொழந்த தான் பொழச்சிகிச்சாம்..ஒரு கொழந்த எறந்து போனத ஊர்ல இருக்குற பாதிப்பேர் தப்பு அபசகுனம்னு பேச அவரு எதயும் காதுல வாங்கிக்கல..ஒத்தப் பொண்ண ரொம்ப நல்லா தான் வளத்தெடுத்தாரு..அப்போ நானெல்லாம் சின்னப் பொண்ணு..கொஞசம் கொஞ்சம் எனக்கும் தெர்யும்”

 

“அவங்களுக்கு ஊர்லே ஒரு வசதியான வீட்டுப் பையனா பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க..அவங்களும் ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்தாங்க..யாரு கண்ணு பட்டுதுன்னே தெரியல..திடீர்னு அவங்களுக்குள்ள சண்ட..”

 

“அந்தம்மாவும் அவங்க புருஷனுக்கும் ஏதோ ப்ரச்சனன்னு பாத்ததுமஞ புரிஞ்சி போய்ரும்..சண்ட வர முன்னாடி எல்லாம் அவங்க ரொம்ப அன்னியோன்னியமா இருப்பாங்க..ஆனா அதுக்கப்றம் அப்டி இல்ல..அந்த அம்மா ஆளுங்க இருக்குன்னும் பாக்காம அவங்க புருஷன அவமானப்படுத்த எல்லாம் செய்வாங்க..”

 

“அப்டியாக்கா..?”

 

“ஆமா..நானுமே சின்ன வயசா இருக்கும் போது பாத்துருக்கேன்..ஆனா அவரு ரொம்ப நல்ல மனுஷன்..நெறய உதவிலாம் பண்ணுவாரு..அப்டியே சண்ட முத்திப்போய் பிரியுறதுன்னு வந்தப்போ தான் அந்தம்மாக்கு கொழந்த உண்டாகி இருக்குறது தெரிஞ்சுது..அவங்க பருஷன பாக்கனும் தனக்கு ஒரு வாரிசு வரப் போகுதுனு அவ்ளோ சந்தோஷப்பட்டாரு..”

 

“அப்றம் அவரு விவாகரத்து எடுக்குறதுங்குற முடிவ மாத்திகிட்டாரு..ஏன்னா கொழந்த வரப் போகுதுல..ஆனா அந்தம்மா எதுக்கும் மசியல..அவர முறிச்சு விடனும்னு தான் இருந்தாங்க..”

 

“அப்றம் என்னாச்சுகா..?”

 

“இப்டியே நாளும் போக அந்தம்மாவோட புருஷன் இன்னொரு பொண்ணோட தொடர்புல இருந்ததா ஊரெல்லாம் பேசிக்கிட்டாங்க..அந்தம்மா அவங்க புருஷன முறிச்சு விட்றதுக்கு காரணமே இந்த பொம்பள சகவாசம்னு வேற ஆளாளுக்குப் பேசுனாங்க..”

 

“என்னது..?”

 

“ஆமாம்மா அப்டி தான் ஊர்ல பேசிகிட்டாங்க..என்னால அந்த ஐயா அப்டி நடந்துகிட்டு இருப்பார்னு கொஞ்சமும் தோணல..அவர ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன்..எந்த பொண்ணு கூடவும் தேவயில்லாம பேசக் கூட மாட்டாரு..”

 

“அப்றம் என்னாச்சு கா..?”

 

“ஒரு நாள் அந்தம்மாவுக்கு பிரசவ வலி வர்ரப்போ வீட்ல யாரும் இல்ல..பக்கத்து வீட்ல இருக்குறவங்களும் ஏதோ எழவு வீட்டுக்குப் போயிருக்காங்க..சோன்னு மழ வேற கொட்டிச்சாம் அன்னிக்கி..அந்தம்மாவுக்கு ரொம்ப வைராக்கியம் ஜாஸ்தி..வலி கூட்றதுக்குள்ள ஹாற்பிடல் போயிரலாம்னு டாக்டர் கிட்ட தனியா நடந்து போயிருக்கு..”

 

“என்னது..?”

 

“நம்ப முடில ல..ஆனா அதான் உண்ம..அப்றம் வலி கூடிப் போய் அந்தக் கோயில் பக்கத்துலயே விழுந்திருக்கு..என்னம்மா நம்ப முடியாம இருக்கா..நானும் மொத தடவ கேள்வி படும் போது கொஞ்சமும் நம்பல..ஆனா இதெல்லாம் உண்ம தான்..”

 

“அதான் கா பட்டுன்னு நம்ப முடியல..நீங்க மேல சொல்லுங்க..”

 

“அப்றம் கோயில் பக்கத்துல இருந்தவங்க யாரோ பாத்துட்டு..மத்த ரெண்டு பேர கூப்டு அவங்களுக்கெ கோயில்லே பிரசவம் பாத்துருக்காங்க..”

 

“என்னக்கா சொல்றீங்க..?”

 

“ஆமாம்மா..இது தான் உண்ம..அவங்க பிரசவம் கோயில்ல தான் நடந்துருக்காம்..ஆனா பொறந்த புள்ள எறந்ததுன்னு சொல்றாங்க..எத நம்பறது..? நம்பாம இருக்குறதுன்னு புரியல..”

 

“சரிக்கா எதுக்கு கோயில் பூட்டி இருக்கு..?”

 

“அந்தக் கொழந்த எறந்ததுன்னு சொன்னதுக்கு அப்றமா எல்லாரும் பயந்துட்டாங்க..உசுர காவு வாங்குன கோயில்னு..நாளாக நாளாக ஆள் போறதும் கொறஞ்சிருச்சு..அப்றம் கோயில் பாழடஞ்சு போச்சு..”

 

“சரிக்கா பொறந்தது பொண்ணா பையனா..?”

 

“அதுன்னா பையன்..பையன் தானாம்..ஆனா,பொறந்த கொழந்த எறந்து போச்சுன்னு மட்டும் சொன்னாங்க..ஆனா பொணத்த கண்ணுல காட்டல..”

 

“ஒரு கொழந்தயாக்கா..? ட்வின்ஸ் இல்லன்னா மூணு கொழந்த அப்டி ஏதும் இல்லியா..?”

 

“ஒன்னே ஒன்னு தான் தாயி..பிரசவம் பாத்தத அந்தக் கோயிலுக்கு பக்கத்து வீட்ல இருக்குற ஒருத்தங்க தான்..அவங்க தான் சொன்னாங்க..ஒரு பையன் தானாம்..பொறக்குறப்பவெ மூச்சு பேச்சு எதுவும் இல்லன்னாங்க..அந்தம்மாவோட புருஷன் கொழந்தய டாக்டர் கிட்ட தூக்கிட்டு ஓடினதா சொன்னாங்க..அதுக்கப்றம் என்னாச்சுன்னு தெரியல..”

 

“ஆமாக்கா..உங்களுக்கு இந்த ரணதீர வம்ச வரம் பத்தி ஏதாச்சும் தெரியுமா..?”

 

“மூத்த ஆண் வாரிசுக்கு மட்டும் கெடக்குமே..அதத் தானேமா நீ சொல்ற..அது மட்டுந்தான் எனக்கு தெர்யும்”

 

அவர் சொல்ல தர்ஷினியின் மனதுக்குள் பதில் தெரியா கேள்விகள் நிரம்பி வழிந்தது.

 

“ரணதீர வம்சத்த பத்தி தேட போலாம்னு பாத்தா அந்த கோயிலுக்குள்ள இவ்ளோ ப்ராப்ளமா..ஆண்டவா..” அலறிய மனதை அடக்கும் வழி தெரியவில்லை.

 

பெரும் குழப்பத்தை வெளிப்படுத்தி நின்ற முகத்தைக் கண்டு அந்தப் பெண்மணியும் எதுவும் பேசாமல் வர வண்டி நகரந்து கொண்டிருந்தது,அந்த பாதை வழியே.

 

●●●●●●●●

தென்றல் சொன்னதை கேட்ட ஆகஷுக்கு உலகமே தலை கீழாக சுழன்ற உணர்வு தான்.சகாதேவன்,வாசுதேவனின் தம்பி என்றறிந்த பின்னர் சில நிமிடங்களுக்கு அவனால் எதுவும் பேச முடியவில்லை.

 

வீட்டை பூட்டி தம்மை அடைத்து வைத்து விட்டு சென்றிருப்பது தெரிந்தாலும் அவ்விடத்தில் இருந்து தப்பிக்க உபாயம் இல்லையே.

 

அந்த விடயத்தை கிரகித்து ஏற்கவே அவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.எல்லாவற்றையும் விசாரித்துப் பார்த்தவனுக்கு எந்த இடத்தில் சறுக்கல் வந்ததென்று எத்தனை யோசித்தும் புரிவதாய் இல்லை.

 

விண்விண்ணென தலை வேறு வலிக்க மகிழினியும் தென்றலும் கையைப் பிசைந்து கொண்டிருப்பது புரிய அவர்களை பார்த்தவனின் மனதில் சடுதியாய் ஒரு எண்ணம்.

 

“எனக்கு உண்ம தெரிஞ்சதுங்குற விஷயம் சகாக்கு தெரிய வேணாம்..நா அப்டியே இருக்கேன்..நீங்களும் அதே மாதிரி இருக்கனும்..புரியுதா..?” அவன் இறுகிய குரலில் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்தவர்களுக்கு தாம் ஒரு பெரிய பிரச்சினையில் வந்து சிக்கிக் கொண்டிருப்பது தெளிவாப் புரியத் தான் செய்தது.

 

“அவனுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வந்துரக் கூடாது..அப்டி வந்துச்சுன்னா உங்க ரெண்டு பேரயும் தொலச்சி கட்டிருவேன்..” உறுமி விட்டு அறைக்குள் நுழைந்தவனுக்கு ஏதோ தவறாய் நடந்திருப்பது மட்டும் உறுதியான மன எண்ணமாய்.

 

சகா வந்தால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தோன்ற அறைக்குள் இருந்தவனுக்கு என்ன செய்வதென்று துளியும் புரியவில்லை.

 

கட்டிலில் சாய்ந்து கண்மூடியவனின் செவியைத் தீண்டியது,சகாவின் வண்டி சத்தம்.

 

●●●●●●●●

 

நேரம் மதியம் இரண்டு மணி.

 

பயணக் களைப்ப வாட்ட வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தான்,வாசு.

 

ஒருவாறு ரணதீரபுரத்தை வந்தடைந்திருக்க மனம் முழுக்க மித்ரஸ்ரீயைப் பற்றிய எண்ணமே ஆக்கிரமித்திருந்தது.

 

அவன் ரயில் நிலையத்தை அடையும் போது அவள் அங்கில்லாதிருக்க சாமர்த்தியமாய் தப்பித்து இருப்பதை எண்ணி மனதுக்குள் மெச்சிக் கொண்டாலும் எப்படி தப்பித்திருப்பாள் என்பது புரியவேயில்லை.

 

நிச்சயம்,அவளுக்கு யாரோ ஒரு ஜீவன் காவலாய் இருப்பது புரிய யாரென்று ஊகிக்க கூட இயலவில்லை,அவனால்.

 

“ஆர்யாவும்…அவன் இல்ல..அப்போ யாரு அவள காப்பாத்துறது..?” யோசித்துப் பார்த்தவனுக்கு பிடிபடாது போக கோபத்தின் உச்சத்ததில் கையில் இருந்த இளநீரை தூக்கி நிலத்தில் அடிக்க பக்கத்தில் இருந்தவர்கள் தான் பயத்தில் ஓரடி தள்ளி நின்றனர்.

 

அவர்களின் பயந்த நிலை அவனுக்கு கேலிப் புன்னகையொன்றை தோற்றுவிக்க எள்ளல் நகைப்புடன் தன் வண்டியில் ஏறி கிளப்ப முற்பட்டவனை தடுத்தது,பைக் கண்ணாடியில் தெரிந்த விம்பம்.

 

சட்டென திரும்பிப் பார்த்தவனின் இதழ்கள் இன்னுமே விரிய மனதில் இருந்த இறுமாப்பு இன்னுமே அதிகமாக வண்டியை நகர்த்தி பேரூந்துக்காக நின்று கொண்டிருந்த நபரின் அருகே நிறுத்தினான்,வாசுதேவன்.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.28

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்