Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 13

 

எப்போதும் போல் முகம் இறுக மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிருந்தவனோ சுற்றுப் புறத்தை ஆராய பார்வை வீச்சின் எல்லை வரை மயானம் தான்.

 

சில இடங்களில் மட்டும் கல்லறைகள் கட்டப்பட்டிருந்தன.நேரத்தை பார்த்தவனுக்கு தன்னை மீறி பெருமூச்சொன்று விடுபட காலடிச் சத்தம் கேட்டு விழி நிமிர்த்தி பார்த்தவனின் விழிகளில் கேள்வியொன்று வந்து தொக்கி நின்றது.

 

ஓடிச்சென்றவர்கள் மூச்சு வாங்க திரும்பி ஓடி வருவது புரிய கண்கள் இடுங்க முன்னே நடந்தான் அவனும்,கொஞ்சம் வேகமாகவே.

 

“என்னாச்சு ரகு..? எதுக்கு இப்டி ஓடி வர்ரீங்க..?” முழங்காலை பிடித்து படி சற்றே முன்னே சரிந்து மூச்சு வாங்க நின்றிருந்தவர்களை பார்த்து கேட்க சட்டென பதில் சொல்ல இயலவில்லை,அவர்களால்.

 

“சத்யாஆஆஆஆ..”

 

“பர்ஸ்ட் காம் டவுன்..அதுக்கப்றம் பேசு..குணா நீயாச்சும் சொல்லு..என்னாச்சு..?”

 

“அது..அ..அது…”

 

“காம் டவுன்ன்ன்ன்ன்..”

 

“சத்யா முன்னாடி கொஞ்ச தூரம் போனா லெப்ட் சைட்ல ஏதோ மரம் இருக்கு..அதுல யாரோ எறந்து போயிருக்காங்க..” அப்படியே நிலத்தில் அமர்ந்து மூச்சு விட்டு படி சொல்லி முடித்த ரகுவை கலவரமாய் பார்த்தன,சத்யரூபனின் விழிகள்.

 

“வாட்ட்ட்ட்ட்”

 

“ஆமா டா..இவன் சொல்றது உண்ம தான்..கட்டி வச்சிருக்காங்க..”

 

“சரி குணா..இரு நா போய் பாத்துட்டு வர்ரேன்..”என்றவனோ பேரூந்தில் தலையைப் போட்டு கிருஷ்ணாவின் பொறுப்பில் அனைவரையும் விட்டு விட்டு நகர அவனின் பின்னூடு சென்றனர்,இன்னும் சிலர்.

 

கலவரம் மிகுதியான போதிலும் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டு நகரும் அவனின் நிதானத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை,கிருஷ்ணாவால்.

 

வேக எட்டுக்களுடன் அவ்விடத்தை நெருங்க அங்கு அவன் கண்ட காட்சியில் உறைந்தே போய் விட்டிருந்தான்,

சத்யா.

 

நெஞ்சில் சூலம் இறங்கி நாக்கு ஒரு பக்கம் வெளியே தள்ளிக் கொண்டிருக்க தலை ஒரு பக்கமாய் சரிய இறந்து கிடந்தது,அவனின் மாமன் அல்லவா..?

 

அவன் தந்தையின் தங்கையின் கணவர் ஆயிற்றே.

 

அத்தை இறந்து போக மாமன் மறுமணம் செய்து கொண்டிருக்க உறவு முற்றாக முறிந்து போனதாய் அவன் நினைத்துக் கொண்டிருந்தாலும் இந்த கலக்கம் அந்த எண்ணம் பிழையென அவனிடம் எடுத்துக் காட்டியதே.

 

அவரின் அநாகரிகமான வார்த்தைகளும் வீணான கோபங்களும் அவனின் சிந்தனையில் இருந்து மறைந்தே போயிருந்தது.

 

இருக்கும் போது மன்னிக்கத் தயங்கும் மனம் இறந்த பின் அனைத்தையும் மறந்தே விடும்.அந்த கருத்தில் அவனின் மனம் மட்டும் விதி விலக்கில்லையே..?

 

அவனின் உறைநிலை உடன் வந்தவர்களுக்கு ஒரு வித கலக்கத்தை தர கை கரம் பற்றி உலுக்கிய உலுக்கலிலேயே இயல்பு மீண்டான்,சத்யா.

 

அவனுக்கு எதுவும் புரியாத நிலை.மொத்தமாய் எல்லாம் மறந்து போனது போல இருந்தது.

 

அடி வைத்து அவன் முன்னே நடக்க சத்தியமாய் அவனின் செயலுக்கான காரணம் உடனிருந்த யாருக்கும் புரியவில்லை.

 

“சத்யா என்னடா முன்னாடி போற..” கரம் பிடித்த தோழனை உதறி விட்டு முன்னேறியவனின் பாதங்கள் நிற்கவில்லை.

 

“சத்யா நில்லுடா அந்த மரத்துகிட்ட போகாதடா..தெரியாத ஊரு வேற..”

 

“டேய் சத்யா..சத்யா நில்லுடா..டேய்ய்ய்ய்ய..”

தோழர்களின் கத்தல் அவனின் செவிகளை எட்டினாலும் ஏனோ அவனுக்கு எதிர்வினையாற்ற மனம் வரவில்லை.

 

இத்தனை நாளாய் அவரை கண்ணில் காணக் கூடாது என்று நினைத்திருந்தாலும் இப்படி ஒரு கோலத்தில் மாமனை பார்த்தது, அவனின் மனதை ஆழமாய் தாக்கியிருந்தது.

 

மரத்தை நெருங்க முயன்றவனின் கரத்தை பற்றி இழுத்து நிறுத்தியது,வலிய கரமொன்று.

 

உக்கிர விழிகளுடன் தோழனின் புதிரான நடத்தைக்கு காரணம் தெரியாது அவனை தடுத்து நிறுத்தியிருந்தது,கிருஷ்ணா தான்.

 

“சத்யா என்னடா பண்ற..அங்க போற வாடா இங்க..”

 

“மச்சி லிங்கம் மாமா டா..தேனு அத்தயோட புருஷன்..” என்றவனின் குரலில் கலக்கம் மண்டிக் கிடக்க தான் அடிக்கடி இடும் சாபங்களால் தான் இப்படி நேர்ந்திருக்குமோ என்கின்ற எண்ணம் அவனின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

 

சத்யாவின் வார்த்தைகளை கேட்டு கிருஷ்ணாவுக்கு அதிர்ச்சி என்றாலும் இப்போது சூழ்நிலையை கையாள வேண்டுமே.

 

“சரி கொஞ்சம் இரு..போலீஸ் வரட்டும்..அப்றம் பாத்துக்கலாம்..நமக்கு வேற எதுவுமே தெரியாது..” தோளணைத்து முரண்டு பிடித்தவனை பின்னே இழுத்துக் கொண்டு நகரும் போது போதுமென்றாகி விட்டது.

 

சத்யாவின் மன எண்ணம் முழுக்க மாமன் மகள்களை பற்றி சுழன்று கொண்டிருக்க தாயும் தந்தையும் இல்லாமல் ஏது செய்திடுவார்கள்..? என்ற கேள்வியே பெரும் வலியைத் தந்தது,உள்ளுக்குள்.

 

இவனை பின்னே நிறுத்தி விட்டு கிருஷ்ணா தான் செழியனுக்கு அழைப்பெடுத்திருந்தான்,விடயத்தை சொல்ல.

 

●●●●●●●●

கஜேந்திரன் வீட்டில் இருந்து கிளம்பி சற்றே தூரத்தே இருக்கும் ஆற்றோரத்தில் கால் நீட்டி அமர்ந்திருந்தான்,

முத்துகுமார்.

 

அவனின் மனதில் பலவித யோசனைகள் தோன்றி மறைய அதை அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது,அவன் வதனம்.

 

தோழனின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளுக்கு காரணம் புரியாது பெரிதும் குழம்பிக் கொண்டிருந்த ப்ரித்வியின் விரல்கள் முத்துவின் தோளை சுராண்டின.

 

“என்னடா..? ஏதாச்சும் கேக்கணுமா..?”

 

“ஆமா டா..எனக்கு உன்னோட நடவடிக்க எல்லாம் சரியா படல..ஊருக்கு வர்ரதே எப்பவாச்சும் ஒருநாள்..ஆனா அன்னிக்கி கூட ஒரே யோசனைல இருக்க..வேல செய்ற எடத்துல ஏதாச்சும் ப்ராப்ளமா..?”

 

“ச்சே..அப்டிலாம் ஒன்னுல்ல மச்சான்..” என்றவனின் கூற்றில் உண்மை இல்ல என்பது அவனுக்குமே புரியத் தான் செய்தது.

 

“முத்து…நீ சொல்றத நம்பறதுகு நா என்ன பச்சக் கொழந்தயா..என்கிட்ட இருந்து ஏதோ ஒரு விஷயத்த சொல்லாம மறச்சிட்டு இருக்க நீ..” கோபமாய் சொன்னவனைப் ஆழ்ந்து பார்த்தவனின் இதழ்களினோரம் சின்னதாய் ஒரு புன்னகை.

 

“எதுக்குடா சிரிக்கிற..உன்ன பத்தி எதுவுமே தெரியாம எனக்கு தான் மண்ட கொழம்புது..”

 

“மச்சான்..கொஞ்சம் அமைதியா இருடா..நேரம் வரும் போது நா எல்லாத்தயும் சொல்றேன்..” சொன்னவனுக்கு தோழனிடம் தற்போதே தன்னைப் பற்றிய விடயங்களை எத்தி வைக்க மனம் ஒப்பவில்லை.

 

அனைவருக்கும் விடயம் தெரிந்து விட்டால் ஒவ்வொருவரின் பிரதிபலிப்பும் வெவ்வேறாக இருக்குமே.

 

“மச்சான்..அந்த கஜாவோட இருப்பான்ல மருது..அவனுக்கு செல்வி செத்தத பத்தி ஏதாச்சும் தெரிஞ்சு இருக்கும்னு தோணுது..நீ என்னடா நெனக்கிற..?”

 

“அப்டின்னும் சொல்ல முடியாது முத்து..கஜேந்திரன் அவன மனுஷனாவே நடத்த மாட்டான்..அதனால அவனோட விஷயம் தெரிஞ்சு இருக்குறதுகு சான்ஸ் கம்மி..”

 

“அவன் இப்போ எங்க இருப்பான்..? எழவு வீட்டுக்கு வந்துட்டு போனத பாத்தேன்..வீட்ல இருப்பானா..? இல்லன்னா வேறெங்கயாச்சும் சுத்திட்டு இருப்பானா..?”

 

“அவன் நல்ல பையன் டா..ஒன்னு வேலைல இருப்பான்..இல்லன்னா அவன் வீட்லயோ அவனோட சித்தி வீட்லயோ இருப்பான்..”

 

“ம்ம்..” என்றவனின் இதழ்களில் மர்மப்புன்னகை தவழ அதை தோழனுக்கு தெரியாமல் சாமர்த்தியமாய் மறைத்தவனுக்கு காவேரியை எப்படி சந்திப்பது என்கின்ற எண்ணம் எழுந்தது,என்னவோ உண்மை தான்.

 

●●●●●●●

 

கடுகடுப்புடன் திட்டிய படி சமைக்க உதவி விட்டு வந்து அறைக்குள் நுழைந்த சங்கீதாவுக்கு எப்போது அந்ந நாட்குறிப்பை படித்து முடிப்போம் என்றிருந்தது.

 

அந்தளவு அதன் வரிகளில்..ம்ஹும் வரிகளாக வரிக்கப்பட்டிருக்கும் அவன் உணர்வுகளில் ஈர்க்கப்பட்டிருக்க பாதியில் நிறுத்தி விட்டு வேறெதிலும் கவனம் செலுத்துவது அத்தனை கடினமாய் இருந்தது.

 

யன்னலை கொஞ்சமாய் திறக்கச் செய்து கட்டிலில் வந்து அமர்ந்தவளின் தாள்களை புரட்டியது.

 

*”இன்னிக்கு ஏதோ வேலயா தான் ஹாஸ்பிடல் போனேன்..ஆனா அங்க சீக்ரெட் சப்ரைஸ் இருக்கும்னு நா எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல..நெஜமாலுமே ஷாக் தான்..அட பொண்ணே எதுக்கு அடிக்கடி உன்ன பத்தின விஷயங்கள் கேள்விப்படுதுன்னு புரியலயே..பட் யூ ஆர் சேஞ்சிங் மீ..ஐ ஸ்வேர்..நா அடிச்சு சொல்றேன்..நீ என்ன கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டே இருக்க..”*

 

*”நைட்டெல்லாம் உன்ன பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்..கொஞ்சமா தூங்குனாலும் கனவுல நீ தான் வர்ர..ஐ கான்ட் அக்ஸெப்ட் திஸ் ஏஸ் லவ்..உன்ன பாத்தது கூட இல்ல நா..இத லவ்னு ஏத்துகிட்டு காத்துகிட்டு இருக்குறது எல்லாம் ப்ராக்டிகல் லைப்கு கொஞ்சம் கூட பொறுத்தம் கெடயாது..ஸோ இது லவ் கெடயாது..கெடயவே கெடயாது..”* எழுதியிருந்தவனின் எண்ணப்போக்கை கண்டு இதழ்களில் புன்முறுவல் தோன்றியது,சங்கீதாவுக்கு.

 

இரவுகளில் அவன் நினைவுகளும் விடியல்களில் அவன் கனவுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் அதிகாரத்திற்குள் இழுபட்டுச் செல்வது தான் அவன் காதல் அதிகாரத்தின் துவக்கம் என்று யார் தான் புரிய வைத்திட..?

 

உணர்த்திட முயலும் அவனோ உணர்ந்திட மறுக்கும் காரணம் சத்தியமாய் அவளுக்குப் புரியவில்லை.

 

அரிதான தருணங்களில் உணர்த்தலை விட உணர்தலே சிரமமாய் இருக்கும்.அவன் காதலும் அப்படியோ என்னவோ..?அவனிடம் தான் கேட்க வேண்டும்.ஆனால்,அது காதல் தான் அவனுக்கு புரிந்திருக்குமோ என்னவோ என்பதும் சந்தேகம் தான்.

 

” *மனசுல பீல் பண்றது பியான்ட் தி வர்ட்ஸ்..கவித எழுதனும் போல இருக்கு..ஆனா நம்மளுக்கு அந்தளவு டேலன்ட் இல்ல பா..ஆனா எழுதனும்னு தோணுதே நா என்ன பண்ண..?என்னமோ பண்ற போ..இத எழுதும் போது கூட என்னோட மொகத்துல சின்னதா ஒரு ஸ்மைல்..ரைட் ஹேன்ட் அப்டியே நெஞ்சுல இருக்கு..யாரும் பாத்திருந்தா மயக்கம் போட்டே விழுந்திருப்பாங்க..”*

 

*”சத்தியமா புரியல..எதுக்கு நர்ஸ் அப்டி சொல்லனும்..நா ஏன் அதக்கேட்டு ஸ்டன் ஆகி நிக்கனும்..எந்த விஷயத்தயும் சிம்பளா கடந்து போற நா எதுக்கு இந்த விஷயத்த பத்தி இவ்ளோ யோசிச்சு காம்ப்ளிகேட் பண்ணிக்கனும்..ஒன்னுமே புரியல..ஒரு வேள இது லவ்வோ..ச்சே லவ்வு தண்டக் கருமாந்தரம் எல்லாம் நமக்கு வராது..நா மொரட்டு சிங்கள்..”*

 

எழுதியிருப்பதை பார்த்தவளுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

 

“மொரட்டு சிங்கள்னு சொல்லிட்டு இப்டி பீலிங்க்ஸ் கொட்டிருக்கு..பச்சப்புள்ள கூட மொரட்டு சிங்கிள்னு நம்பாது..” தனக்கே சொல்லிக் கொண்டு அடுத்த பக்கத்தை புரட்டியவளின் விரல்கள் மெதுவாய் அந்த பக்கத்தை தடவி மீண்டது.

 

*”நர்ஸ் வந்து இதாங்க சார் உங்க வைபோட செய்ன்னு தர்ரப்போ பட்டுன்னு என் மைன்ட்கு வந்தது அன்னிக்கு பாத்தவ தான்..பேஸ் முழுக்க கவர் பண்ணி அவ நின்னிருந்தது தான் மின்னல் மாதிரி வந்துட்டுப் போச்சு..அதுக்கப்றம் நார்மலாகி நர்ஸ பாக்க அவங்க லைட்டா சிரிச்சாங்க..”*

 

*”சார் உங்க வைப் கூட கோவமா இருக்கீங்களா..?அதான் செய்ன வாங்காம இருக்கீங்களான்னு கேக்க தலைல அடிச்சுகிட்டே இல்லன்னு தலயாட்டுனேன்..”அன்னிக்கு அவங்க இருந்த பதட்டத்துல செய்ன் விழுந்தத கவனிக்கல..நா தான் எடுத்து ரிஷப்ஷன்ல குடுத்து விட்டு இருந்தேன்..நீங்களே வந்துட்டீங்கன்னு..” அவங்க தந்தப்போ நா வாங்கி கிட்டது எனக்கே ஷாக் தான்..நா அந்த எடத்துல உண்மய சொல்லிருக்கனும்ல..ஏன் பண்ணல..எதனால என்னோட மனசு பண்ண விடல..”*

 

” *அந்த நர்ஸ் என்ன பாத்து சிரிக்கிறது மாதிரி இருந்துச்சு..”மேட் பார் ஈச் அதர்” னு சொல்லிட்டு அவங்க கெளம்பினதும் நா என்ன பீல் பண்ணேன்னு யார் கிட்டவும் சொல்ல முடியாது..மனசு முழுக்க ஆயிரம் கொழப்பம்..என்னோட போஸ் ரியாக்க்ஷன்ல எந்த சேஞ்சும் இல்ல..நா அப்டியே தான் இருந்ததா மத்தவங்களுக்கு தோணும்*

 

*”ஆனா உதட்டுல கண்ணுக்கு தெரியாத ஸ்மைல்..கண்ணோரமா சின்னதா ஒரு ஸ்பார்க்..நா எதுக்கு ஹாஸ்பிடல் போனேனுங்குற ரீசன் எல்லாம் அந்த செக்கன் மைண்ட்ல வர்ல..ஐ பெல்ட் அ பிக் டிபரன்ட் இன் மை செல்ப்..அந்த பொண்ண பாத்தே ஆகனும் அது தான் தோணுன ஒரே ஒரு விஷயம்..ரொம்ப ஓவரதான் போய் கிட்டு இருக்கு..அட பொண்ணே எங்க மா இருக்க..?நா இங்க பெருமூச்சா விட்டுட்டு இருக்கேன்”*

 

சிரிப்புடன் படித்துக் கொண்டிருந்தவளை கலைத்தது,அறைக்கதவு தட்டப்படும் சத்தம்.

 

●●●●●●●

 

தொப்பியை கழற்றி வீசி விட்டு உள் நுழைந்த பிரகாஷின் விரல்கள் சட்டை பட்டன்களை பிய்த்து எறிந்தன.

 

அடக்க முடியாத கோபம் மனதினுள் கனன்னு கொண்டிருக்க அதை குறைக்கத் தான் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தவனுக்கு ஆத்திரம் அடங்குவேனா என்றிருந்தது.

 

“பிரகாஷ்..உங்க ஆர்வம் எனக்கு புரியுது..ஆனா வாசு பெரிய எடத்து ஆளு..நம்மளால எதுவும் பண்ண முடியாது..அவன் கூட இருக்குறவனயும் தான்..” என்று மேலதிகாரி கையை விரித்த சமயமே அவருக்கு அடிக்க வேண்டும் என்றிருந்தது என்னவோ உண்மை தான்.

 

மேலதிகாரி என்பதால் கட்டுப்படுத்திக் கொண்டு வந்திருந்தாலும் தற்போது வீட்டில் இருந்த உடையக் கூடியவற்றை எல்லாம் உடைத்து விட்டுத் சோபாவில் அமர்ந்தவனுக்கு மூச்சு வாங்கியது.

 

கண்ணாடித் துண்டுகள் கையையும் கீறிட துளித்துளியாய் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு வலிக்கவில்லை.கோபத்தின் ஆக்கிரமிப்பில் மனம் மரத்துப் போயிருக்கும்,போலும்.

 

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.தோழனுக்கு குறுஞ்செய்தியொன்றை தட்டு விட்டு அலைபேசியை வைத்த கணம் கதவைத் திறந்து கொண்டு வந்த அருளுக்கு வீடு இருக்கும் நிலையைப் பார்த்ததுமே புரிந்து போனது,அண்ணன்காரனின் மனநிலை.

 

ஆத்திர மிகுதியில் அனைத்தையும் உடைத்து நொருக்கும் அண்ணனின் மீது கோபமாய் வந்து திட்டித் தீர்க்க நா எழுந்தாலும் அவனிருக்கு மனநிலைக்கு திட்டினால் தனக்குத் தான் சேதாரம் அதிகம் என்பதை இத்தனை நாட்களில் உணராதவனா அவன்..?

 

உடன் வந்த தோழனையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவனை தலை நிமிர்த்தி பார்த்த பிரகாஷோ அறைக்குள் நுழைந்திட அவனுக்கு திட்டிய படியே ஹாலை சுத்தம் செய்தன,மற்றைய இரு ஜீவன்களும்.

 

அறைக்குள் நுழைந்தது போலவே உளவாளி நண்பனிடம் இருந்து அழைப்பு வர புன்னகையுடன் ஏற்றுக் அலைபேசியை காதில் வைத்தாலும் அவனின் புன்னகையில் ஒரு வித வெறி.

 

“சொல்லு மச்சீ..”

 

“நீ கேட்ட டிடெய்ல்ஸ் கெடச்சிருச்சுடா..”

 

“பொறந்தது எங்கன்னு தெரியாது..எங்கயும் டீடெய்ல்ஸ் இல்ல..ஆனா வளந்தது எல்லாம் சென்னைல..கே.கே பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சிட்டு அதுக்கப்றம் இஞ்சினியரிங்க முடிச்சிருக்கான்..”

 

“ம்ம்..”

 

“ஸ்கூல் காலேஜ்ல எந்த கெட்ட பேரும் இல்ல..காலேஜ்ல பெட்ச் டாப்பர் அவன் தான்..ஸ்போர்ட்ஸ் சைட்லயும் நல்லா பெர்போம் பண்ணுவானாம்..செவன்த் மார்ச் தான் அவனோட பர்த் டே..வயசு இருபத்தேழு..ஆரம்பத்துல ஒரு கம்பனில வேல செஞ்சதுக்கு அப்றம் தான் வாசு கூட சேந்துருக்கான்..விசாரிச்சு பாத்ததுல தாத்தாவும் அவனோட கசின் ப்ரதரும் தான் இருக்காங்க போல..கூடப் பொறந்த அண்ணன் தம்பின்னு யாரும் இல்ல..அவங்க கூட தான் இருக்கான்..”

 

“வேற..?”

 

“எல்லாருமே அவன ப்ளே பாய் ரேஞ்சுக்கு தான் சொல்றாங்க..ஆனா சீக்ரட்டா ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்து இருக்கான்..ஆனா யாருன்னு தெரியல..அவனுக்கு கோபமே வராதாம்..வாசுவோட சேர்ர வர ரொம்ப நல்ல பையனா தான் இருந்தான்னு சொல்றாங்க..”

 

“ம்ம்ம்ம்..அம்மா அப்பா இல்லியா..?”

 

“அம்மா வேற மேரேஜ் பண்ணிட்டிருக்காங்களாம்..அப்பா சின்ன வயசுலயே எறந்துட்டாராம்..”

 

“ஆமா..அவனோட புல் நேம்..?”

 

ஆர்ய தர்ஷன் வேல்விழியன்..”

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.21

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆர்யா தான் அந்த இரணதீர குடும்ப வாரிசா…