
விடியும் முன்….!
அத்தியாயம் 04
காவேரிக்கு மனம் பிசைந்தது.அத்தனை சத்தமாய் ஒலித்த கோயில் மணி அடங்கிப் போனாலும் அவள் மனதில் எழுந்த தவிப்பின் ஆர்ப்பரிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
அவளுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.தந்தை விட்டுச் சென்ற கடமை இருக்கிறது.அப்படி இருக்கும் இப்படி மணியோசை கேட்பது இன்னும் அவளை குற்றவுணர்வில் ஆழ்த்திச் சென்றது.
அந்தப் பொருளை அந்த வம்சத்தின் மூத்த வாரிசிடம் ஒப்படைக்க வேண்டும்.உயிர் பிரியும் தருவாயில் தந்தை அவளிடம் வைத்தது,
அந்த வேண்டுகோளைத் தானே.
இறப்பு ஏதாவது நடந்திருக்குமோ என்று எண்ணினாலும் அப்படி ஏதும் நடந்திருக்கக் கூடாது என்று மனமுருட வேண்டி நின்றாள்.
ஆனால், அவளுக்கு அந்நிமிடம் புரியவில்லை.
நடந்த பின் எத்தனை சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் நடந்தது மாறப்போவதில்லை,
என்பது.
ரணதீர வம்சத்தின் மொத்தக் கதையையும் அவளின் தந்தை அவளிடம் கூறி இருக்கவில்லை.
சில விடயங்களை மறைத்திருக்க இன்னும் சில விடயங்கள் அவருக்கே தெரியாமல் மறைந்திருந்தன.
அவளுக்கு தந்தை தன்னிடம் விடயங்களை மறைத்து இருப்பது தெரிய அந்த விடயங்களை அறிந்து கொள்வதில் பேராவல் இருப்பது உண்மையே.
ஆனாலும் தந்தையிடம் அவள் இதுரவை அதைப்பற்றி கேட்டுத் துருவியதில்லை.
“ஒரு வேள கஜேந்திரனுக்கு ஏதாச்சும் ஆகி இருக்குமோ..?” அவள் யோசித்துக் கொண்டிருக்க அவனைப் பற்றி நினைத்ததுமே அவளிதழ்கள் அறுவறுப்பில் சுருங்கின.
அவள் அறிந்த வரையில் அவன் தான் ரணதீர வம்சத்தின் இந்த தலைமுறையின் மூத்த வாரிசு.
அவனுக்கு இரண்டு தம்பிமார் இருந்தாலும் முதல் வாரிசின் ஜனனத்துக்கும் மரணத்துக்கும் தானே கோயில் மணி அடிக்கும் என்று தந்தை கூறியது நினைவில் இருந்ததால் தான் அப்படி ஊகித்துக் கொண்டது,அவள் மனம்.
நேற்றுக் கூட கஜேந்திரனைக் கண்டிருந்தாளே,கடை வீதியில்.
யோசனையில் இருந்தவளை நிகழுக்கு திருப்பியது,தாயின் குரல்.
“காவேரி எங்கம்மா இருக்க..?”
“இங்க வெளில தான் மா..என்னாச்சு மா..? எதுக்கு இப்டி பதறிகிட்டு வர்ர..? என்னாச்சு மா..?”
“அம்மாடி நம்ம தர்மேந்திரன் ஐயாவோட மூத்த பையன் கஜேந்திரனும் கணக்கு மாஸ்டர் பொண்ணும் பொணமா கெடக்குறாங்களாம்..
மாணிக்கமும் அவன் பொண்டாட்டி பர்வதமும் தான் பாத்துருக்காங்க..”
நா போய் ஒரெட்டு என்னன்னு பாத்துட்டு வர்ரேன்..நீ பத்ரமா இருந்துக்க..”செய்தியை எத்தி வைத்து விட்டு பதிலை எதிர்பாராமல் அவள் தாய் கிளம்பிட சிலையாகி நின்றது,
காவேரியைத் தவிர வேறு யாராய் இருந்திட இயலும்..?
●●●●●●
நேரம் ஏழு நாற்பதாகி இருந்தது.
சண்டைக்கோழிகள் சிலிர்த்துக் கொண்டு போட்டுக் கொண்ட சண்டையில் நேரமானதை இருவருமே உணரவில்லை,என்பதே உண்மை.
“இங்க பாரு மித்ரா..சும்மா சும்மா வம்புக்கு நிக்காத..நா சொல்றத கேட்டு நடந்துக்க..” ரிஷியின் அதட்டலான குரலில் அவளின் தைரியம் கரைந்திருந்தது.
அந்த விழிகளில் தெரிந்த அழுத்தம் அவளை இன்னும் பயமுறுத்த ஒட்டிக் கொண்ட இதழ்கள் பிரியவில்லை.
“இங்க பாரு..தொண தொணன்னு ஏதாச்சும் பேசிகிட்டு இருக்காத..ட்ரெயின் வரும்..சத்தமில்லா ஏறி ஒக்காரு..ஊருக்கு போற வர நானும் உன் கூட தான் வரப் போறேன்..”
“எதேஏஏஏஏ அதெல்லாம் ஒன்னும் வேணாம்..நா தனியா போய்ப்பேன்..” சிலிர்த்துக் கொண்டு நின்றளுக்கு அப்படியே ஒரு அறை வைக்கத்தான் தோன்றியது.
“ப்ச்ச் மித்ரா..எரிச்சல கெளப்பாத..பேசாம என் கூட வந்து டைரெயின்ல ஏறு..இல்லன்னா நடக்குறது வேற..”அவன் எகிற அவள் கொஞ்சம் நிதானமானாள்.
“இங்க பாருங்க தலைவரே..நம்ம ரெண்டு பேருக்கும் இடையில எந்த ஒட்டும் இல்ல..ஒறவும் இல்ல..”
“…………..”
“என்ன யோசிக்கிறீங்க..நீங்க தான இதே டயலாக அன்னிக்கி சொன்னீங்க..நீங்க எனக்கு ஒரு ஸ்ட்ரேன்ஜர்..உங்க கூட நா எப்டி நம்பி வர முடியும்..?ஆள விடுங்க நா தனியா போறேன்..”
அவள் சொல்லி முடிக்க அழுத்தமாய் பார்த்தவனின் விழிகளில் செந்தணல்.
“இட்ஸ்ஸ் பைன்ன்ன்ன்..சரி தான் போடி..ட்ரெயின் என்ன உன் வீட்டு சொத்தா..நானும் வருவேன்..” அசட்டையாய் சொல்லி முடித்தவனின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.
“ஏன் இப்டி என்ன டார்ச்சர் பண்றீங்க..?நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன்..ப்ளீஸ் இப்டி டார்ச்சர் பண்றீங்க..?” கண்ணீருடன் அவள் கெஞ்ச விழி வழியே தன் கூர் விழிகளால் ஊடுருவினான்,பையன்.
“ஐயையோ..என்ன இது இப்டி பாக்கறான்..நெலத்த பாத்து தான் கண்ணீர எடுத்தோம்னு கண்டுபுடிச்சிட்டானோ..?”அவள் யோசிக்க பையனவனோ இன்னும் தன் பார்வையை அகற்றிக் கொள்ளவில்லை.
“எதுக்கு இப்டி பாத்துட்டு இருக்கீங்க..? உங்க கிட்ட தான் கேக்கறேன்..
தயவு செஞ்சு என்ன பாலோ பண்ணி டார்ச்சர் பண்ணாதீங்க..” மீண்டும் கண்களை கலங்க வைத்த படி கெஞ்சியவளை வெற்றுப் பார்வையுடன் கடந்திருக்க ” இன்னும் நல்லா நடிக்க ட்ரை பண்ணுடி பைத்தியம்..” என்ற அவனின் வார்த்தைகள் அவளின் செவியில் நுழைந்த கணம் இத்தனை நேரம் விழிகளை நிரப்பி இருந்த போலிக் கண்ணீரும் காய்ந்து போனது.
“ப்ப்ப்ச்ச்ச்..இந்த கிறுக்கு எப்டி தான் நாம நடிக்கிறோம்னு கண்டு புடிக்குதோ..”காலை தரையில் உதைத்துக் கொண்டு நிமிர்ந்தளுக்கு தன் மீதே கோபம்.
“ப்ச்..நாம என்ன பண்ணாலும் அசர மாட்டேங்குறான் கிறுக்கு..” அவனை அர்ச்சித்தவாறு நிற்க ரயிலும் வந்தது.
அவனோ பார்வையாலே அவளுக்கு கட்டளையிட்ட படி ஏறிக்கொண்டிட தன் முகத்தில் அப்பட்டமான எரிச்சலை படிய விட்டவாறு ஏறிக் கொண்டாள், அவளும்.
தூரப்பகுதிக்கு செல்லும் ரயில்.
ஆட்களே இல்லை.
இவர்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மட்டும் தான் அதில்.
விடுமுறை நாள் என்றாருந்தாலும் ஒரு ஊருக்குச் செல்வதற்கு கூட்டம் இருந்திருக்கும்.
ஏன் அவர்கள் ஏறிய ரயில் நிலையத்தில் இருந்து கூட யாருமே ஏறவில்லை.
மித்ரஸ்ரீ ஒரு யன்னலோரத்தை பிடித்தமற அதே பெட்டியில் வேறொரு இருக்கையில் யன்னலோரமாய் அமர்ந்து கொண்டான்,
ரிஷி.அவர்கள் இருவரும் மட்டும் தான் அந்தப் பெட்டியில்.
●●●●●●●●
தன் வீட்டில் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாது கொதித்துக் கொண்டிருந்தான்,வாசு.
அவன் ரயில் நிலையத்தை அடையும் போது ரயில் கிளம்பியிருக்க அடுத்த நிறுத்தத்தில் சென்று அவன் ஏறிக் கொள்வது அத்தனை சாத்தியமான விடயமாய் தோன்றிடவில்லை.
அந்த ஊர் வரை இருப்பதே மொத்தம் ஐந்து நிறுத்தங்கள்.
அதிலும் இரண்டுக்கிடைப்பட்ட தூரம் மிக அதிகம்.
யோசித்து யோசித்து பார்த்தவனுக்கு மித்ரஸ்ரீயை ரணதீர புறம் சென்று சிக்க வைப்பது தான் சரியென்று தோன்றிற்று.இருக்கும் நிலையில் அது தான் உசிதம் எனத் தோன்றிற்று.
அதற்கிடையில் அவனின் அலைபேசி ஒலிக்க திரையில் மிளிர்ந்த புகைப்படத்தை கண்டதும் தலை வலித்தது.
“ஹலோ..” என்று அவள் அழைத்து மூச்சுக் கூட விடவில்லை, பொறியத் துவங்கி இருந்தாள்,
மறுமுனையில் இருந்தவள்.
ஓரிரு நிமிடம் பொறுத்துக் கேட்டவனுக்கு அதற்கு மேலும் பொறுத்திருக்க பொறுமை வேண்டுமே.
“லுக் ரம்யா..நா உன்ன லவ் பண்ணல..ஜஸ்ட் டைம் பாஸ்கு வச்சு ஓட்டுனேன் போதுமா..? எனக்கு லவ் மேல அப்போ நம்பிக்க இல்லன்னு தெரிஞ்சும் நீ தான வழிஞ்சு வழிஞ்சு பழகுன..அப்போ பால்ட் உன்னோடது தான..”
“………….”
“மைன்ட் யுவர் வர்ட்ஸ் ரம்யா..” என்றவனுக்கு இன்னுமே தன் ஆத்திரத்தை அடக்க முடியாது போக அழைப்பை பட்டென துண்டித்து விட்டு அருகே இருந்த பூச்சாடியை எடுத்து வீசி அடிக்க அதி சுவற்றில் பட்டு சிதறியது.
அடுத்த நிமிடமே ஒரு பையை எடுத்துக் கொண்டு கடகடவென படிகளில் இறங்கி வந்து வெளியே செல்ல அவனைக் கண்ட தாயாருக்கு மனம் வலித்தது.
கணவர் தன்னை நடத்திய விதம் தான் மகனும் தன்னை மதியாததற்கு காரணம் என்று புரிய ஆழமாய் பெருமூச்சொன்றை இழுத்து விட்டவருக்கு விரக்தி.
வாசுவோ தன் வண்டியில் ஏறி கிளப்பிக் கொண்டு தன் பயணத்தை தொடங்கினான்,ரணதீர புரம் நோக்கி.
●●●●●●●
வைத்தியசாலையில் அழுது வீங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தான்,ஆகாஷ்.
அது ஆகாஷுக்கு சொந்தமான மருத்துவமனை.
அதனால் தான் அந்த தளத்தை தனிமைப்படுத்தி தோழனை பாதுகாக்க முடிந்தது.
காவல் துறையைச் சேர்ந்தவன் என்பதாலும் பெரும் புள்ளியொன்று மீதான வழக்கை விசாரித்துக் கொண்டு இருப்பவன் என்பதாலும் ஆர்யாவிற்கு நடந்திருக்கும் அசம்பாவிதம் பற்றி யாருக்கும் தெரியாது மறைக்க வேண்டிய நிலை.
அவனின் நிலை அறிந்து விட்டால் குற்றவாளிகள் தப்பித்து அவனின் இத்தனை நாள் உழைப்பை வீணாக்கி விடுவார்களே..?
உயிர்த்தோழர்களின் ஒருவனான ஆர்யாவின் இந்நிலை அவனை வேரோடு சாய்த்திருந்தது.
“பேஷண்ட் டெட்..” என்று மருத்துவர் கையை விரித்த கணம் அவனின் நிலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது தான்.
“ஆர்யாஆஆஆஆ..” என அவன் கத்திய கத்தல் அந்த இடம் முழுவதும் எதிரொலிக்க உதவிக்கு வந்திருந்த பெண் தாதிமாருக்கும் ஒரு கணம் உடல் அதிர்ந்து அடங்கியது.
தலை தாங்கி அமர்ந்து இருந்தவனை சிறு தயக்கத்துடனும் பெரும் கலக்கத்துடனும் பார்த்திருந்தாள்,மகிழினி.
அவள் அங்கிருந்த இரண்டு தாதியரில் ஒருத்தி.தான் கண்டதை அவனிடம் கூற அவளுக்குள் பரபரத்தாலும் அவள் தங்கையின் நிலை அவளை தடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறதே.
கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தவளின் தோற்றம் அவனுக்கு சிந்தனையை தந்தாலும் ஏனென்று கேட்கும் மனநிலையில் இல்லை,
அவன்.
தோழன் வருவதாக கூறியிருக்க அவனின் வரவைத் தான் மனம் தேடிக் கொண்டிருந்தது.
அதற்குள் அவன் தோள் மேல் விழுந்தது,
வலிய கரமொன்று.
ஆர்யாவுக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த மருத்துவன் தான் நின்றிருந்தான்.சமீப நாட்களாய் தான் அவர்களிடையே பழக்கம் இருந்தது.
“இந்த சிட்டுவேஷன்ல நாம பாடிய இங்க வச்சிகிட்டு இருக்குறத சேப் இல்ல..அர்ஜன்டா வேறெங்கயாச்சும் ஷிப்ட் பண்ணலாம்..”
“வாட் என்னாச்சு சகா..?”
“மீடியாக்கு நியூஸ் போனா பெரிய இஷ்யூஸ் ஆகும்..அதுக்கு தான் சொல்றேன்..இன்னும் ஹாப் அன் அவர்ல வண்டி வந்துரும்..நாம எல்லாரும் அதுல என்னோட கெஸ்ட் ஹவுஸ்கு போயிரலாம்..” அவன் சொல்ல சரியென்பதாய் தலையசைத்தான்,
ஆகாஷ்.
●●●●●●●
அதே நேரம் ரணதீரபுரத்தில,
அசராது உறங்கியிருந்த ஜீவாவை இழுத்துக் கொண்டு வந்த விஜய்க்கு அந்த மயானத்தில் இருந்து வெளியே வந்ததும் தான் மூச்சே வந்தது.
ஒரு மரத்தடியின் அருகே வந்து அமர்ந்து ஆழமாய் சுவாசித்த படி அவனிருக்க இன்னும் உடல் நடுக்கம் குறையாமல் உடன் அமர்ந்திருந்தான்,ஜீவா.
“நாம எப்டிடா விஜய் அங்க வந்து படுத்தோம்..?எனக்குன்னா எதுவுமே ஞாபகம் இல்லியே..?” குரல் நடுங்கச் சொன்னவனுக்கு உள்ளுக்குள் பயம் மீதமிருந்தது.
விஜய்க்கும் எதுவும் நினைவில் இல்லாது போக அவனும் எதைத் தான் பதில் என இயம்பிட..?
“பேசாம நாமளும் சத்யா கூடவே வந்துருக்கலாம்..அவசரப்பட்டு நேத்தே கெளம்பி வந்தது தான் தப்ப போச்சு..” ஜீவா சொல்வதை மறுக்க இயலாதே.
“ம்ம்ம்ம்..” என்றவனுக்குள்ளும் அதே எண்ணம் தான்.
அந்த மரத்தடியின் முன் ஆட்கள் நிரம்பியிருக்க ஆட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்,காவல் துறையினர்.
இறந்தது கஜேந்திரன்.
அந்த ஊர்த்தலைவர் தர்மேந்திரனின் மூத்த வாரிசு.அதனால் அனைவரும் கூடியிருக்க தன் அழுகையை வெளிப்படுத்த முடியாமல் ஒரு வித இறுக்கத்துடன் ஒரு ஓரமாய் அமர்ந்து இருந்தார்,தர்மேந்திரன்.
உறவினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
மகனின் லட்சணம் தெரிந்தவருக்கு மகனின் அந்த பழக்கம் தான் இந்த இழிநிலைக்கு காரணம் என்று தெரிந்தாலும் அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டுமே..?
அடுத்த பத்து நிமிடங்களில் அவனுடலும் அந்த பெண்ணின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட கூட்டம் மெதுவாக கலையத் தொடங்கியது.
அனைவரும் சென்ற பின்னரும் அந்த இடத்தில் இருந்து இம்மியும் அசையாது அமர்ந்திருந்த கணவரை வெற்றுப்பார்வை பார்த்திருந்தார்,தர்மேந்திரனின் மனைவி.
அவர் முகத்தில் மகன் இறந்ததற்கான வருத்தம் கொஞ்சமும் இல்லாதிருக்க அவரைக் காண காண கோபம் பீறிட்டுக் கிளம்பியது,
தர்மேந்திரனுக்கு.
●●●●●●
நேரம் மணி எட்டு.
தன் அறையில் உலாத்திக் கொண்டு இருந்தான்,ராகவ்.
அவனும் இன்று ரணதீரபுரத்துக்கு கிளம்ப வேண்டி இருந்தது.
நேற்று வரை அவனிடம் இந்த முடிவு இருக்கவில்லை.இன்று காலையில் தான் உதித்திருந்தது, அந்த யோசனை.
இத்தனை நாள் இல்லாது முதன் முதலாக தோழனின் மீது கோபம் வந்தது.எதையுமே தீர்க்கமாய் ஆராய்பவன் இந்த விடயத்தில் மட்டும் எப்படி சறுக்கிப்போனான் என்பது இன்னுமே புரியாத புதிராய்,மனதினுள்.
நினைக்கும் போதோ இரு வித எரிச்சல் கிளம்ப தாயிடம் சொல்லி விட்டு கிளம்பியிருந்தான்,
அவனும்.
தொடரும்.
🖋️அதி..!
2024.02.25
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னப்பா எல்லாரும் இரணதீரபுரம் போறீங்க … ஆர்யா செத்துட்டான் … அவன் யாரா இருக்கும் …
அப்போ கஜேந்திரன் ஆவி தான் இடம் மாறுமா ?? விஜய் ஜீவா காலேஜ் ட்ரிப் சத்யா கூட வர்றவங்க … முன்னாடி வந்துட்டாங்க போல …